Jump to content

India bails out Lanka on rights resolution


Recommended Posts

COLOMBO: In a move that should help Sri Lanka out at the 19th sessi­on of the United Nations Human Rights Council in Gene­va, India has said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC.

The United States was expected to move a resolution at the UNHRC session, censuring Sri Lanka over alleged war crimes against Tamils during the civil war.

An Indian statement, read out by a delegate at Thursday’s session and published on UNHRC’s website, said the strength of UNHRC lay in its adherence to principles of “objectivity, transparency, non-selectivity, non-politicisation and non-confrontation.” And to sustai­n these attributes, UNHRC would need to ensure “inclusi­veness and emphasise dialogue and cooperation,” it and must be guided by “prudence rather than strategic expediency.”

“India is concerned that the recent trend and spate of country-specific resolutions may well end up weakening the constructive dialogue and cooperative approach which has prevailed so far in the Human Rights Council,” the statement said.

In India’s view, the most appropriate forum for discussing the rights situation in any specific country will be when the UNHRC takes up that country’s case under the Universal Periodic Review (UPR) regime.

“We believe the Universal Periodic Review enjoys a broad support, since it avoids selectivity, and provides for the human rights record of all UN member states to be subject to peer review. The enthusiastic participation by member states in the UPR process in the first cycle, underscores the success of this important mechanism,” the Indian statement said.

Sri Lanka’s rights record is to come up for UPR in October. Colombo has asked for time till then to implement recommendations of the Lessons Learnt and Reconciliation Commission, which the US and the Western bloc has been demanding.

Topics:

Sri Lanka,

resolution,

UNHRC,

human rights

http://expressbuzz.com/topnews/india-bails-out-lanka-on-rights-resolution/368979.html

யாழ்க் கள இந்திய தாசர்களுக்குச் சமர்ப்பணம்.

தமிழகத்தால் இந்தியத் தேர்தல் சமன்பாடுகளாலோ அல்லது தேர்தலில் நிற்க்கும் அரசியல் மூலமாகவோ இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தின் மீது எந்த அழுத்ததையும் ஏற்படுத்த முடியாது.தமிழக மக்களின் ஆயுதம் ஏந்திய சுய நிர்ணயத்திற்கான அரசியற் போரட்டமும், இந்திய வ...ல்லாதிக்கத்துக்கு எதிரான இந்திய தேசிய இனங்களின் கூட்டுப் போராட்டமுமே தமிழ் நாட்டு மக்களுக்கான விடுதலையையும், ஈழத் தமிழத் தேசிய இனத்தினதும் , சிங்கள தேசிய இனத்தினதும் விடுதலையைத் தரும் ஒரே வழி.

Link to comment
Share on other sites

//We believe the Universal Periodic Review enjoys a broad support, since it avoids selectivity, and provides for the human rights record of all UN member states to be subject to peer review. The enthusiastic participation by member states in the UPR process in the first cycle, underscores the success of this important mechanism,” the Indian statement said.

Sri Lanka’s rights record is to come up for UPR in October. Colombo has asked for time till then to implement recommendations of the Lessons Learnt and Reconciliation Commission, which the US and the Western bloc has been demanding.

//

இன்னும் உங்களுக்கு விளங்க வில்லை என்றால் தலையங்கம் போட்ட பி கே பாலச்சந்திரன் அய்யர் அவர்களிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளுங்கள்.

இலங்கையை காப்பாற்றும் இந்தியாவின் முயற்சி அநீதியானது, கண்டனத்திற்குரியது

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதி பேசியிருப்பது இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றும் திட்டமிட்ட முயற்சியாகும். இந்திய அரசின் இப்படிப்பட்ட நியாயமற்ற நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தின் 19வது மாநாட்டில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்திற்கு நியாயம் கிடைக்க போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் கொண்டு வரவுள்ளன. அப்படி ஒரு தீர்மானம் வந்தால் அதனை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை மாமன்றத்திற்கான இந்தியப் பிரதிநிதி, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாசித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்றும், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவது பயன் தரத்தக்க பேச்சுவார்த்தைக்கும் இணக்கமான அணுகுமுறைகளுக்கும் எதிரானதாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமினறி, உலக அளவில் மனித உரிமை சூழல் குறித்து வரும் அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் நடைபெறவுள்ள பொதுவான விவாதத்தில் இலங்கையைப் பற்றியும் விவாதிக்கலாம் என்று இந்தியப் பிரதிநிதி கூறியுள்ளார். இந்திய அரசின் இந்த நிலைப்பாடு, போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்தக்கூடிய தீர்மானம் நிறைவேற்றுதலுக்கு எதிரானதாகும். இலங்கை தொடர்பான விடயம் அங்கே மனித உரிமை சூழல் எப்படியிருக்கிறது என்பதல்ல. மாறாக, அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது பற்றி விசாரிக்க வழிவகுக்கும் போர்க் குற்ற விசாரணையாகும். இதனை பொதுவான மனித உரிமை சூழலாக விவாதிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதிநிதி கூறுவது, இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பை மறைக்கும் முயற்சியாகும். 2009ஆம் ஆண்டில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை எப்படி எதிர்த்து அந்நாட்டைக் காப்பாற்றியதோ அதேபோல் இப்போதும் இந்திய அரசு இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதையே அதன் பிரதிநிதி வாசித்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இந்திய அரசின் இந்த நிலைப்பாடு, இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையில் அதன் கையும் தமிழன் இரத்தத்தால் நனைந்துள்ளது என்பதையும், தனது குற்றச்செயலை மறைக்கவே, வெளிப்படையான குற்றவாளியான இலங்கை அரசை அது காக்க முயற்சிக்கிறது என்பதையும் தெளிவாகிவிட்டது. தமிழினத்தின் அழிப்பை திட்டமிட்டு நிறைவேற்றிய இலங்கை அரசுக்கு ஆயுதம், ஆலோசனை, ராடார், பயிற்சி என்று எல்லா விதத்திலும் இந்திய அரசு உதவியுள்ளது என்கிற குற்றச்சாற்று, அதன் இந்த நிலைப்பாட்டின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.

ஆனால், 2009ஆம் ஆண்டில் நடந்ததுபோல், இலங்கை அரசு இம்முறை தப்பித்துவிட முடியாது. ஐ.நா.மனித உரிமை மாமன்றத்தின் மற்ற உறுப்பு நாடுகள் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றும் என்று தமிழர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

Link to comment
Share on other sites

இது இந்தியக் காட்டுமிராண்டிகளின் தமிழின விரோதத்தை இந்தக் கூற்று அப்பட்டமாக காட்டுகிறது. இதில் அக்டோபர் வரை இழுத்தடிக்கும் முயற்சியும் உள்ளது.

இம்முறையும் இந்திய ஓநாய்கள் இரட்டை வேடம் போட்டு தமிழரை ஏமாற்றலாம் என்ற முடிவுடன் உள்ளார்கள் என்று ஒரு தகவல் சொல்லியது. அது உண்மையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

இந்தியாவின் ஏமாற்றுத்தனத்தை மற்றவர்கள் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டா இருக்கின்றனர். அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்திற்கே செல்வாக்கில்லையெனில் இந்தியாவைத் திட்டுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இந்தியா எப்படிப்பேசினாலும் நடுநிலை வகித்தாலும் தீர்மானம் நிறைவேற்றப்படின் இந்தியாவின் மூக்கு உடைபடலாம்.

மனிதவுரிமை சம்பந்தப்பட்டதாக இவ் விடயம் இருப்பதால் இம் முறை தவறினாலும் தொடர்ந்து இந்தியாவால் இவ்வாறு செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதுவரை.... ஈழத்தமிழனுக்கும், தமிழகத் தமிழனுக்கும் செய்து கொண்டிருக்கும்....

முள்ளமாரி அரசியலை, நிறுத்துவது நல்லது. நாதாரிப்பயல்கள்.

Link to comment
Share on other sites

நன்றி நாரதர். ஆனால் இந்த மாதிரி சென்சேசனல் கெடிங் போட்டு மக்களை எங்கே அழித்துச்செல்கிறார்கள் இந்த ஊடகங்கள். மேற்காட்டிய செய்திக்கு தலைப்பு ஒன்று வேணுமானால் சீமானின் அறிக்கையில் இருக்கும் ஒரு வசனத்தை சிந்தித்துப் பார்க்கலாம்.

"இந்திய அரசு இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள(து)"தையே

20 மில்லியன் நாட்டில் நடந்த 140,000 மக்களின் கொலை சாதாரண தினசரி உரிமை மீறல் நிகழ்ச்சியாக "peer review"ல் போகலாம் என்றால், கோடிக்கணக்கில் மக்கள் வாழும் மேலைநாடுகளில் மில்லியன் கணக்கில் தினமும் கொலைகள் நடக்கிறதாகவா இந்தியா சொல்ல முயல்கிறது. இதை ஏற்று அவர்கள் இந்தியாவுடன் ஒத்துப்போக சம்மதித்துவிட்டார்களா?

இந்தியாவின் பேச்சில் இருந்து ஒரு வரியைத் தலைப்பாக போடமுடியவில்லையா இவர்களுக்கு?

மேலும் இலங்கை செய்திகளுக்காக கொழும்புவிலிருக்கும் ஐயர் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தொடரைப் பற்றி இந்தியப் பத்திரிகைகளில் ஒரு தலையங்கம் போட முயன்றால் அதற்கு ஒரு கருத்திருக்க வேண்டும்.

பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கவிருந்தாலும், 2009 மாதிரி இல்லாமல் இந்தத் தடவை இந்தியா சற்று இளகிய போக்கையே காட்டுகிறது.

Link to comment
Share on other sites

20 மில்லியன் நாட்டில் நடந்த 140,000 மக்களின் கொலை சாதாரண தினசரி உரிமை மீறல் நிகழ்ச்சியாக "peer review"ல் போகலாம் என்றால், கோடிக்கணக்கில் மக்கள் வாழும் மேலைநாடுகளில் மில்லியன் கணக்கில் தினமும் கொலைகள் நடக்கிறதாகவா இந்தியா சொல்ல முயல்கிறது. இதை ஏற்று அவர்கள் இந்தியாவுடன் ஒத்துப்போக சம்மதித்துவிட்டார்களா?

ஈழவிவகாரத்தைப் பொறுத்தமட்டில் குற்றச்சாட்டுகள் (Allegations) மட்டுமே உள்ளன..! விசாரணைக்குப்பின் நிறுவப்பட்டதாக எதுவுமில்லை..! அதை வைத்தே எல்லோரும் செயற்படுகிறார்கள்..!

இனப்படுகொலை விவகாரங்களில் நாடுகள் innocent till proven guilty..! :D

Link to comment
Share on other sites

மல்லையூரான் இன்னும் சில நாட்கள் பொறுதிருப்போம், எல்லாம் சந்திக்கு வரும் அவசரமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.