Jump to content

(நி)சப்த உணர்வு .....

Recommended Posts

முன்பெல்லாம்

இருள்பூத்த நிசப்தத்தில் _அவை

இயங்குதல் வழக்காதலால்

ஆங்காங்கே எச்சங்களாய் ................!

வேரோடுதல் போல

ஓடிக்கொண்டிருக்கும்_ அப்பப்ப

தன்னிலை மறந்து சிலகணம் வாய்கால்

நீரோடுதல் போல வெளிவரும் ...

பூசாப்பொருள் இதுவென்று

பேசாதநாளில்லை உற்றவர்

காசா பணமா தருமிதுவென்று

௬சாமல் முன்னின்று குறிவைத்தனர் .

வளைதல் நெளிதல் வசப்படல் கொண்டதில்லை .

உயர்ந்தவனை கொண்டாடியதுமில்லை

கீழிருந்தவனை துண்டாடியதுமில்லை _ஆதலால்

மாவிலை தோரணங்கண்டதுமில்லை.

முகவரியில்லாத முகத்திற்கு

சுகவரிகளை பரிசளித்த போதிலும்

தகவிலா நிலைகளை

வகைப்படுத்திய போதிலும்

மிகைப்பட்டுக்கொண்டதுமில்லை

இதமான இறந்தகால நினைவுடன்

சூனியவாதமொன்றை கடக்க முனைகையில் ,

சூழ்கின்றன எல்லாம் சூனியமாய் ..............

விளிம்பு நிலையென்பது

உயிர்களுக்கு மட்டுமல்ல

உயிர்மெய் வார்த்தைகளுக்கும் உண்டு.

ஆதலால் ..................

இபோதெல்லாம் ,

ஒலித்தலை மறுத்து

மௌனம் காக்கின்றன

காலவெளிகடக்குமென் வார்த்தைகள் ........

post-8109-0-68048400-1330766814_thumb.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் ,

ஒலித்தலை மறுத்து

மௌனம் காக்கின்றன

காலவெளிகடக்குமென் வார்த்தைகள் ........

ஆழமான வரிகள்

காலவெளிகள் எவ்வளவு கடப்பினும் வாழும் வார்த்தைகள் இவை

"விளிம்பு நிலை என்பது உயிர்களுக்கு மட்டுமல்ல உயிர்மெய் வார்த்தைகளுக்கும் உண்டு" சிந்திக்கவைக்கின்றன வரிகள்

இரவின் சூனியத்தைக் கிழித்து ஓலமிடும் கரிக்குருவிபோல் கவிதையிலும் சூனியத்தைக் கிழிக்கும் ஓலம் தென்படுகிறது. ஒலித்தலை மறுத்து மௌனம் நிலைத்தால் காலவெளிகளை கடக்க முடியாத யதார்த்தம் தொக்கி நிற்கும்.

நெற்கொழுதாசன் அருமையான கவிதைகளை நெய்கிறீர்கள். அதிகபடியான வார்த்தைகளைத் திணித்து அலுத்துகொள்ள வைக்காத கவிப்பின்னல். ஒவ்வொரு வரிகளும் இரும்பு போன்று இருப்புக்கு உரியதாய்.... காலவெளிகள் கடந்தும் உங்கள் கவிதைகள் வாழும். பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

நன்றி அக்கா இதுபோன்ற விமர்சனங்கள் என்னை இன்னும் வளப்படுத்தும்

கவிதைக்கு நன்றிகள், நேற்கொழுதாசன்!>>

தவறாது என் கவிதைகளுக்கு வதிவிடும் உங்களுக்கு நன்றிகள் .

உங்களின் ஊக்கங்களே இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறது

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெற்கொழுந்து :D அண்ணா. உங்கள் கவிதைகள் தொடரட்டும்....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெற்கொழுந்து :D அண்ணா. உங்கள் கவிதைகள் தொடரட்டும்....

கொழுந்து விட்டு எரிகிறது இனி

அழுதிடுவன் காணும் ..........

நன்றி தங்காய் வாசிப்புக்கு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நான் விரும்பி வாசிக்கும் கவிதைகளில் நேற்கொழுதாசனின் கவிதைகளும் அடங்கும்...உணர்ந்து அனுபவித்து வார்த்தைகளை நெய்கிறீர்கள் என்பதை உங்கள் கவிதகளைப் படிக்கும்போது புரிகிறது..பாராட்டுக்கள் நெற்கொழுதாசன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.