Jump to content

ஓட்ட போட்டி

Recommended Posts

புகைகளை கக்கி கொண்டு உறுமியபடி இருந்தன அந்த உந்துருளிகள்.

ஓட்டிகள் அனைவரின் முகத்திலும் வெல்லவேண்டும் என்ற வெறி அப்பட்டமாக தெரிந்தன.

விசிலை வாயிலே வைத்தபடி அரவிந்தன் வாத்தி எந்த நேரமும் ஊதுவதற்கான ஆயத்த நிலையில் இருந்தார்.

இயக்கச்சி சந்தியில் ஆரம்பம். முடிவு கோடு பரந்தன் உப்பு உற்பத்தி நிலையம்.

எப்படியும் ரகுவை வென்றிட வேண்டும் இது மட்டும் தான் குகனின் மனதில் ஒலித்த வார்த்தைகள்.

எல்லாரிடமும் ஒரே மாதிரியான உந்துருளிகள். அன்றைய வன்னி இளைஞர்களின் கனவு உந்துருளிகள்.

குகன் மறுபடியும் வேக அழுத்தி, தடை அழுத்திகளை சரிபார்த்து கொண்டான்.

1 ... 2 ... 3 ... ஊ ஊ ..ஊ ..

வாத்தியின் விசில் சத்தம் கேட்டது தான் தாமதம்..புகை மட்டும் சூழ்ந்த அந்த இடத்தில் உந்துருளிகள் இருந்த அடையாளமே தெரியாமல் ஓடி மறைந்தன.

ஆனையிறவு வளைவு தாண்டும் போது குகன், ரகுவை விட ஒரு நூறு மீற்றர்களாவது முன்னுக்கு போய் கொண்டிருந்தான்.

அழிந்த படைத்தளத்தை தாண்டி கடல் சூழ்ந்த பாதையில் பயணிக்கும் போது இன்னும் சில தூரம் முன்னணியில் இருந்தான்.

திரும்பி திரும்பி பார்த்தபடியே வேகமாக போய் கொண்டிருந்தான்.

குகனின் முகத்தில் வெற்றி நிச்சயமாக தெரிந்த போது தான் சம்பவம் நடந்தது. எதிர்பாராது வீதியில் இருந்த குழியில் பாய்ந்த அவனது உந்துருளி அவனை தூக்கி எறிந்தது.

ச்சே... மறுபடியும் தோத்து போனேன்.

ரகுவிடம் தோற்றுபோன குகனின் வார்த்தைகள் அவை.

அண்ணே ..அண்ணே மறுபடியும் ஒருக்கா போட்டி வைச்சு பார்ப்போம் என்ற வேண்டுகைகள் எல்லாம் பயனற்று போயின அரவிந்தன் வாத்தியிடம்.

வெற்றி வெற்றி என்று கத்தி கொண்டே மற்றைய போட்டியாளர்களிடம் கைகுலுக்கி கொண்டிருந்தான் ரகு.

ஓடி வந்து அரவிந்தன் வாத்தியை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

தூக்கி எறியபட்டு காயத்துடன் வந்த நண்பன் குகனிடம், மச்சான் நீயும் ஒரு நாளைக்கு வெல்லுவாய் என்று ஆறுதல் கூறினான்.

தோல்வியால் துவண்டு இரவு சாப்பிடாமல் உறங்கிய தோழன் குகனை எழுப்பி தன் கையாலேயே உணவை ஊட்டிவிட்டான் ரகு.

வெற்றி பெற்ற ரகு தெரிவு செய்யபட்டான்.

தலைநகரில் இருந்த விமானபடை தலைமையகத்தின் மீதான உந்துருளி கரும்புலி தாக்குதலுக்கு.

அந்த தாக்குதல் எதிர்பார்த்த வெற்றியை கொடுகாததையிட்டு வாத்தியை விட குகன் தான் அதிகம் கவலைபட்டான்.

ரகு போகும்போது கொடுத்துவிட்டு போயிருந்த கடிதத்தை, அவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி அவனின் வீரச்சாவுக்கு பிறகு திறந்து படிச்சான்.

ஒரே வசனம் தான் ஆணியடிச்ச மாதிரி " மச்சான் ஒரு நாளைக்கு நான் தோற்கும்போது ... நீ நிச்சயம் வெல்லுவாய்"

அண்ணே ! என்னை விடுங்கோ அண்ணே நான் முடிக்கிறேன். ரகுவுக்காக செய்யணும் அண்ணே.

குகனின் உணர்ச்சிமயமான வார்த்தைகள்.

இதோ குகன் ! ..அதே புகையை கக்கியபடி உறுமியபடி சக்கை நிரம்பிய அதே கனவு உந்துருளி உடன் காத்திருக்கிறான் ..ஹில்டன் விடுதிக்கு அருகில் ஒரு தென் தமிழீழ துரோகிக்காக...

கட்டுப்பாட்டு தொலைபேசி மறுபடியும் அழைத்தது.

"அண்ணே ..! இலக்கு தாமதமாகுது .. என்னை சந்தேகபட்டுடாங்கள்.. என்னை நோக்கி வாறாங்கள்.. நான் இப்பவும் தோற்க விரும்பல அண்ணே .. உடனடியாக ஒரு இலக்கு தாங்கோ அண்ணே ..!

" குகன் அவசரபடாதே ..உனக்கு முன்னால என்ன இருக்கு .."

" அண்ணே அவங்கள் கிட்ட வந்திட்டாங்கள்..ஒரு பாதுகாப்பு கடமை காவல்துறையினரை ஏற்றியபடி பேருந்து நிக்குது..மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணே ..புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ".

அடுத்த நாள் தலைநகர ஊடகங்களின் தலைப்பு செய்தி.

"´கொழும்பில் போலிஸ் பேருந்து மீது குண்டு தாக்குதல் 10 இற்கும் மேற்ப்பட்ட போலீசார் கொல்லபட்டனர்"

" மச்சான் ஒரு நாளைக்கு நான் தோற்கும்போது ... நீ நிச்சயம் வெல்லுவாய்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதில் நிறைய இடை வெளி விட்டு,விட்டு எழுதி இருக்கிறீங்கள்........அதைக் குறைத்துக் கொண்டால் நல்லது என்று எனக்கு தோணுது...

Link to comment
Share on other sites

இதை வீரம்,தியாகம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் .

உலகம் பயங்கரவாதம் என்று சொல்லுகின்றது .வெளிநாடு ஒன்றில் இருக்கும் யாரவது ஒரு தமிழன் தனது பிள்ளை ஒன்றை இப்படியான ஒரு செயலுக்கு அனுப்புவாரா?

அண்ணா யார் அந்த தென் தமிழீழ துரோகி கருணாவா? பிள்ளையானா?

"அண்ணே அவங்கள் கிட்ட வந்திட்டாங்கள்..ஒரு பாதுகாப்பு கடமை காவல்துறையினரை ஏற்றியபடி பேருந்து நிக்குது..மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணே ..புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ".

இவ்விரு வரிகளுமே போதும் அபிராம் நம் மண்ணின் மைந்தர் வீரம் சொல்ல. அவர்களை நாம் அனுதினமும் நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி, . காற்றோடு கரைந்தவர் கண்ட கனவுகள் நனவாக வேணும் என்ற துடிப்பு உங்கள் எழுத்துகளில் தென்படுகிறது.

தொடரட்டும் தங்கள் வார்த்தைகளின் வேகம், அதுவே எழுச்சியாகட்டும்..... மிகவும் நன்றிகள் தங்கள் படைப்பிற்கு... தொடர்ந்து எழுதுங்கள் அவர்கள் வீரங்களை, தியாகங்களை... முகம் தெரியாத எத்தனையோ பேர் நமக்காக ஆகுதியாகியிருக்கிறார்கள்... அவர்கள் அறியப்படவேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென் தமிழீழ துரோகிக்காக...//

பரவாயில்ல.. துரோகியளுக்குள்ளயும் பிரிவுகள் வந்திட்டுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் தமிழீழ துரோகிக்காக...//

பரவாயில்ல.. துரோகியளுக்குள்ளயும் பிரிவுகள் வந்திட்டுது..

துரோகிகளுக்குள் பிரிவு இல்லை துரோகி எல்லோரும் துரோகி தான்...நான் நினைக்கிறேன் இந்த கதையில் வருபவர் யார் என்பதை காட்டுவதற்காக அப்படிக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாம்

Link to comment
Share on other sites

இதை வீரம்,தியாகம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் .

உலகம் பயங்கரவாதம் என்று சொல்லுகின்றது .வெளிநாடு ஒன்றில் இருக்கும் யாரவது ஒரு தமிழன் தனது பிள்ளை ஒன்றை இப்படியான ஒரு செயலுக்கு அனுப்புவாரா?

உண்மை தான் அர்ஜுன்.

உலகம் தனது புவியியல் பூகோள பொருளாதார நிலை சார்ந்து சூட்டும் பயங்கரவாத பட்டங்களை இன்னுமா நீங்கள் அங்கிகரிக்கிறீங்கள்.

ஆனால் உங்கள் கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை.

நன்றி உங்கள் பகிர்வுக்கு.

அண்ணா யார் அந்த தென் தமிழீழ துரோகி கருணாவா? பிள்ளையானா?

அதை தெரிந்துகொள்வதால் உங்களுக்கு பலன் ஏதும் உண்டா.?

நன்றி உங்கள் பகிர்வுக்கு ரதி !

ஒரே வசனம் தான் ஆணியடிச்ச மாதிரி " மச்சான் ஒரு நாளைக்கு நான் தோற்கும்போது ... நீ நிச்சயம் வெல்லுவாய்"

"அண்ணே அவங்கள் கிட்ட வந்திட்டாங்கள்..ஒரு பாதுகாப்பு கடமை காவல்துறையினரை ஏற்றியபடி பேருந்து நிக்குது..மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணே ..புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ".

இவ்விரு வரிகளுமே போதும் அபிராம் நம் மண்ணின் மைந்தர் வீரம் சொல்ல. அவர்களை நாம் அனுதினமும் நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி, . காற்றோடு கரைந்தவர் கண்ட கனவுகள் நனவாக வேணும் என்ற துடிப்பு உங்கள் எழுத்துகளில் தென்படுகிறது.

தொடரட்டும் தங்கள் வார்த்தைகளின் வேகம், அதுவே எழுச்சியாகட்டும்..... மிகவும் நன்றிகள் தங்கள் படைப்பிற்கு... தொடர்ந்து எழுதுங்கள் அவர்கள் வீரங்களை, தியாகங்களை... முகம் தெரியாத எத்தனையோ பேர் நமக்காக ஆகுதியாகியிருக்கிறார்கள்... அவர்கள் அறியப்படவேண்டும்...

அவர்களின் கனவுகள் நனவாகவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை கல்கி. நாளை நாங்களே இல்லாமல் போனாலும், இல்லை நினைவிழந்து போனாலும் அவர்களின் தியாகங்கள் மறக்கபடவோ மறைக்கபடவோ கூடாது என்பதற்காக தான் எழுதிவைக்க விரும்புகிறேன்.

"மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்"

மிக்க நன்றிகள் உங்கள் பகிர்வுக்கு கல்கி.

தென் தமிழீழ துரோகிக்காக...//

பரவாயில்ல.. துரோகியளுக்குள்ளயும் பிரிவுகள் வந்திட்டுது..

காவடி! துரோகிகளுக்குள் எந்த பிரிவும் இல்லை. ஆனால் அந்த குறிபிட்ட துரோகி தென் தமிழீழத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு/அடையாளபடுத்தவே காட்டவே அந்த பதத்தை பயன்படுத்தினேன். அது உங்கள் மனதை பாதித்து இருந்தால் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

நன்றி உங்கள் பகிர்வுக்கு காவடி !.

ஏன் இதில் நிறைய இடை வெளி விட்டு,விட்டு எழுதி இருக்கிறீங்கள்........அதைக் குறைத்துக் கொண்டால் நல்லது என்று எனக்கு தோணுது...

யாயினி ! தவறை உடனடியாக சுட்டி காட்டியமைக்கு என்றும் நன்றிகள்.

திருத்தியமைத்துள்ளேன். மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை தெரிந்துகொள்வதால் உங்களுக்கு பலன் ஏதும் உண்டா.?

நன்றி உங்கள் பகிர்வுக்கு ரதி !

இந்த சம்பவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்,மாவீரர் தியாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தானே கதை எழுதினீர்கள் யார் என சொல்ல சங்கடமாயிருந்தல் விடுங்கள்... நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

நல்ல கதை அபிராம். பகிர்வுக்கு நன்றி.

உலகம் பலதும் சொல்லும். பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்தால் ஒன்றும் சொல்லாத அரசாங்கங்கள் (மேற்குலகில்) சாப்பிட வழியில்லாதவன் பாணைத்திருடினால் குற்றம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.