Jump to content

அட... நீங்ககூட இப்படித்தானா?


Recommended Posts

வழக்கமாக

எழும் நேரத்திலேயே

இன்றும்

எழுந்து விட்டேன்...!

post-9133-0-70475200-1331007732.jpg

விழிக்கும் போதே கடவுளிடம்

பிராத்தனை செய்து கொண்டேன்

நேற்று நடந்த

நிகழ்வுகள்

மீண்டும் நிகழாதிருக்க...

இன்னும் கொஞ்சம்நேரம்

தூங்கி இருக்கலாம்

என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்...

நேற்றைய தினங்களின்

பிடிக்காமல் போன

முன் அனுபவங்களால்

மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்

இன்றாவது ஒழுங்காக இரு என்று...

இருந்தும்.,

தேவதை ஒருத்தியின்

உதாசீனப் பார்வையிலும்,

கசக்கி, பிழிந்து

வெளியேத் தள்ளி

பின்பு வழக்கம் போல

புறப்பட்ட பேருந்து பயணத்திலும் ..

டேய்.. வீட்ல,

சொல்லிட்டு வந்துட்டியா

என சபித்துவிட்டுப் போன

ஆட்டோக்காரனிடமும்...

அலுவலகம் சென்று

மறதியால் செய்த

பிழைக்காக

மேலாளரிடமும்...

வெளிப்பட்டுக் கொண்டே

இருந்தன...

அந்த பிரியமற்ற தினத்தின்

கோரமான நிகழ்வுகள்...

இன்று படுப்பதற்கு முன்

மறுபடியும்,

வேண்டிக்கொண்டேன்..

இன்று போல நாளையும்

இருக்கக் கூடாதென்று....!

-வேடந்தாங்கல்

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி.

தேவதை ஒருத்தியின்

உதாசீனப் பார்வையிலும்

இதை நினைத்துக்கொண்டிருந்ததால் தான் road இல் பிழையாக சென்றதும், அலுவலகத்தில் வேலையை மறந்ததும்.

டேய்.. வீட்ல,

சொல்லிட்டு வந்துட்டியா

இதை தான் எல்லா ஆட்டோக்காரனும் பாடமாக்கி வைத்திருக்கிறார்கள்.

இன்று படுப்பதற்கு முன்

மறுபடியும்,

வேண்டிக்கொண்டேன்..

இன்று போல நாளையும்

இருக்கக் கூடாதென்று....!

நேற்று வேண்டி இன்று நடக்கவில்லை, நாளையாவது நல்லபடி அமைய உங்களுக்கும், இதனை எழுதிய வேடந்தாங்கலுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.