Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும (படித்து சிரித்தவை)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும

அன்று

ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்று பெண்ணை நமஸ்காரம் செய்ய வைத்தனர்.

ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா?

பெண்ணின் தகப்பனார்(கூச்சத்துடன்): தெரியாதுங்களே

ராமசாமி: நான் உங்களை கேட்கவில்லை உங்க பெண்ணுக்குப் பாடத் தெரியுமா?

பெண்ணின் தகப்பனார்: மன்னிச்சுங்க அவளுக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது ஆனால் சினிமாப் பாட்டுக்கள் அவளுக்கு தெரியும்

ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும்

பெண்: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை.........சிட்டுக்குருவி

பெண்ணின் தகப்பனார்: தலையில் அடித்துக் கொண்டு " இவளுக்கு வேர பாட்டு கிடைக்கலையா?"

பெண்ணின் தகப்பனார்: பையனுக்கு பாடத் தெரியும்னு சொன்னாங்களே

ராமசாமி: அவனுக்கும் சினிமா பாட்டுத் தான் தெரியும்

பெண்ணின் தகப்பனார்: சரி ஏதோ ஒன்னு பாடட்டும்

பையன்: புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன கேளு முன்னே.......புருசன் வீட்டில்

ராமசாமி: விடிஞ்சது போ பொண்ணு என்னடானா "என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை" னு பாடறா பையன் என்னடானா "புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே" னு பாடறான் இந்த கல்யாணம் நடந்த மாதிரி தான்

பெண்ணின் தகப்பனார்: அதெல்லாம் ஒண்ணும் இல்லை எங்க பொண்ணுக்கு காது கொஞ்சம் மந்தம் பையனுக்கும் அதே மாதிரி தான் அங்கே பாருங்க இரண்டு பேரும் பார்த்து சிரிச்சுக்கறாங்க

இன்று

ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்றனர் பெண்ணும் அவர்களுக்கு நடுவில் வந்து அமர்ந்து கொண்டாள் மாப்பிள்ளை கூச்சத்தில் நெளிகிறார்

ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா?

பெண்ணின் தகப்பனார்: ஓ பாத்ரூமில் நல்லா பாடுவாளே

ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும்

பெண் : கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா இல்லை ஓடிப் போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா

பெண்ணின் தகப்பனார்: பையனுக்கு பாடத் தெரியும்னு சொன்னாங்களே

ராமசாமி: அவனுக்கும் சினிமா பாட்டுத் தான் தெரியும்

பெண்ணின் தகப்பனார்: சரி ஏதோ ஒன்னு பாடட்டும்

பையன்: தாலியே தேவை இல்லை நீ தான் என் பெஞ்சாதி..............

ராமசாமி: ரெண்டு பேரும் ரொம்ப அட்வான்சா போறாங்க

பையன்: நாங்க ஒரே ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறோம் ஏற்கனவே நாங்க பழகி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். அப்பா அம்மா வோட திருப்திக்கு தான் இந்த பெண் பார்க்கும் படலம்

அன்று

கணபதி தன் பையனிடம்: இன்னிக்கு சாயங்காலம் பெண் பார்க்கப் போறோம் நீ ஆபீஸிலிருந்து சீக்கிரம் வந்து சரிகை வேட்டி சட்டை போட்டுக்கிட்டு நெத்தில பட்டையா வீபூதி பூசிக்கிட்டு எங்களோட வரணும்

இன்று

கணபதி தன் பையனிடம்: இன்னிக்கு சாயங்காலம் பெண் பார்க்கப் போறோம் நீ ஆபீஸிலிருந்து சீக்கிரம் வா

பையன்: ஓ டாடி இதை நேத்திக்கே சொல்லியிருந்தா நான் பியுட்டி பார்லருக்கு போய் வந்திருப்பேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு, நன்றி சகோதரி!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பூட்டும் பதிவு. :D

பகிர்வுக்கு நன்றி அக்கா :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவையான பதிவு. நிலா அக்கா.

ஈழத்தில் பெண்பார்க்கும் போது... பாடச் சொல்லி கேட்பதில்லையாதாலால்... நாம் தப்பித்தோம்.

சம்தந்தம் இல்லாமல் பாடி, நமது கலியாணத்தை தள்ளி வைத்திருப்பார்கள். :D:lol:

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

அருமையான நகைச்சுவை பதிவு !! நன்றி அக்கா

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பிள்ளையானின் புதிய நியமனத்துக்கு ஏறாவூர் நகர சபையில் பாராட்டு By BATTINEWS MAIN   சிறையிலிருந்தும் மக்கள் மனதை வென்ற மக்களின் தலைவனுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமானதே என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வின் அடிப்படையில் செப்டெம்பர் மாதத்திற்கான அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நகர சபையின் கேட்போர் கூடத்தில் அந்நகர சபையின் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது, நகர சபையின் நானாவித நிகழ்ச்சி நிரலுடன் உறுப்பினர்களுக்கான சிறப்புரை இடம்பெற்றபோது, நகர சபைத் தலைவர் உட்பட அச்சபையின் முஸ்லிம் தமிழ் உறுப்பினர்கள் கட்சிபேதமின்றி பிள்ளையான், (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதை வரவேற்று உரையாற்றினர்.மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய சுபைர், கடந்த பொதுத் தேர்தலின்போது பிள்ளையான் எந்தவிதமான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் அதிகப்படியான வாக்குளால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் தலைவனாக திகழ்கின்றார்.அத்தகைய ஒருவர், கிழக்கு மாகாண சபையை முதலமைச்சராக அலங்கரித்தபோது, அவர் இந்த மாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் இனவாதம் கடந்து செயற்பட்டார்.முதலமைச்சர் காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்கள் உள்ளங்களிலே அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது.இனவாதத்தை மதவாதத்தைத் தூண்டி அரசியல் செய்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே, இனவாதமற்ற ஒருவர் அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது.பிள்ளையான் யுத்தத்தின் கொடூரங்களை நன்கு அறிந்தவர். ஆகையினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்திப் பணிகளிலும் இனவாதம் கடந்து அவர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குச் சேவையாற்றுவார் என்று நம்புகின்றேன்” என்றார்.   http://www.battinews.com/2020/09/blog-post_798.html
  • ஈழத்து நாட்டார் பாடல்கள் காவற்பரணில் நானும்.., கொண்டுவாடா ஏலய்யா (மீனவப்பாடல்) ஆழக்கடல் தண்ணி மேலே (கடலுக்கு சென்ற துணைவனை நினைந்துருகும் காதல் படல்) ஆகிய மூன்று பாடல்களின் தொகுப்பாக இந்த காணொளி அமைந்துள்ளது. பாடல்: காவற்பரணில் நானும் கண்ணுறங்கும் வேளையிலே.. பாடியவர்: ரி. கிருஷ்ணன் இசை: மோகன்ராஜ் பாடல்வரிகள்: மட்டக்களப்பு நாட்டார் பாடல்  
  • சம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்? (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது. அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவை கூட்டடுவதற்கு எதிர்பார்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கள் இரா.சம்பந்தனிடத்திலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுகின்றது. இதேவேளை, இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அண்மைய நாட்களில் வைத்திய ஆலோசனைகளின் பிரகாரம் இரா.சம்பந்தன் போதிய ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் பல்வேறு சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் தொடர்ச்சியாக இரத்துச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/90506
  • மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு! மன்னார் – நானாட்டான், வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1900 மேற்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும்   ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை காணியின் உரிமையாளரால் புதிய வீடு அமைப்பதற்கு அத்திவாரம் அமைக்க குழி தோண்ட முற்பட்ட போதே குறித்த பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டன. குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உப தவிசாளர் குறித்த விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனை தொடர்ந்து குறித்த நாணயக் குற்றிகள் முருங்கன் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நாணயக் குற்றிகள் யாவும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல் பொருள் தினைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். http://athavannews.com/மன்னாரில்-மீன்-மற்றும்-வ/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.