• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழரசு

படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.

Recommended Posts

tamilenthi-appa-150x150.jpg

பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் இரண்டாம் ஆண்டு 10.03.2011 இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.

மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.

பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.

இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

இன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.

tamilenthi-appa.jpg

http://www.tamilthai...newsite/?p=6188

தமிழீழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தமது இனிய உயிரை அற்பணித்த பிரிகேடியர் தமிழேந்தி அப்பா (ரஞ்சித் அப்பா) உட்பட இந்நாளில் வீர காவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

Share this post


Link to post
Share on other sites

நினைவு வீரவணக்கம்..!

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள் !!

Share this post


Link to post
Share on other sites

நினைவு நாள் வீரவணக்கங்கள்......................

Share this post


Link to post
Share on other sites

நினைவு நாள் வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

நினைவு நாள் வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

தாயகவிடுதலைக்காக தம்மை அர்பணித்த இம் மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

Share this post


Link to post
Share on other sites

பிரி...கேடியருக்கு மரியாதை இல்லாமல் போகப்போகுது. ”சேரன்” கோப்பியும், சிக்கின் றோலும் இல்லாமல் இந்தாளாலை இருக்கேலாது எண்டகதை கனபேருக்கு தெரியுமோ தெரியாது. ஆமி கிளிநொச்சி பிடிச்சபிறகும் இந்தாள் கிரிக்கெட் மச் பாக்க அன்ரனா கட்ட அலைஞ்ச கனபேர் இப்பவும் இருக்கினம்.

நல்லகாலம் மனிசன் செல்விழுந்து செத்தது. இல்லாட்டி தயாமாஸ்ரர் மாதிரி இப்ப பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பார்............................

இந்தாள் பற்றி இதிலை எழுதின கனக்க திரிவு படுத்தப்பட்ட கற்பனைகளே. முந்தி விழுதுகளிலை வாறமாதிரி கிறவுண்டுக்கையே இறங்காதவனை விளையாட்டில் வீரன் என்று எழுதுறமாதிரி............

Share this post


Link to post
Share on other sites

அவரே அங்கே இருந்து கொண்டு கிரிக்கட் பார்த்திருக்கிறார் நாங்கள் இங்கே இருந்து கொண்டு கிரிக்கட் பார்த்தால் என்ன?

Share this post


Link to post
Share on other sites

படத்துறைச் செயலர் என்றால் என்ன?

பிரி...கேடியருக்கு மரியாதை இல்லாமல் போகப்போகுது. ”சேரன்” கோப்பியும், சிக்கின் றோலும் இல்லாமல் இந்தாளாலை இருக்கேலாது எண்டகதை கனபேருக்கு தெரியுமோ தெரியாது. ஆமி கிளிநொச்சி பிடிச்சபிறகும் இந்தாள் கிரிக்கெட் மச் பாக்க அன்ரனா கட்ட அலைஞ்ச கனபேர் இப்பவும் இருக்கினம்.

இது ஓவர் ஸ்பேட்.

Share this post


Link to post
Share on other sites

அதை விடுங்கப்பா. உவருக்கு யாரப்பா பிரிகேடியர் கொடுத்தது. இயக்கமே கேணல் தானே கொடுத்தது.

Share this post


Link to post
Share on other sites

தயவு செய்து நாடுக்காக இறந்த ஒருவரை , அவரை நினைவு படுத்தி போற்றும் களத்திலே நின்று கொண்டு , தவறான விமர்சனகள் எழுதுவதை தவிருங்கள் . அவரின் சிறந்த நிதி சம்பத்தமான திடங்களால தான் இயக்கம் பாரிய வளர்ச்சி கண்டது . அவர் அந்த பொறுப்பில் இருந்த படியால்தான் திருமணத்தையே தவிர்த்திருந்தார் .

பேகரையும் , பீட்சாவையும் சாப்பிட்டு கொண்டு எழுதுவது சுலபம்.

தமிழீழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தமது இனிய உயிரை அற்பணித்த பிரிகேடியர் தமிழேந்தி அப்பா (ரஞ்சித் அப்பா) உட்பட இந்நாளில் வீர காவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்

Share this post


Link to post
Share on other sites

போராளிகளுக்கு இரு நேர உணவும், ஒரு நேர வெறும் தேநீரும் கொடுத்தால் காசு மிஞ்சும் என இவர் போட்ட திட்டம்தான் போராட்டத்தை கொண்டு நடத்தியதோ????

பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையானவர்களாக, எடுத்துக்காட்டானவர்களாக இருக்கவேண்டும். முள்ளிவாய்க்காலில் பச்சைக் குழந்தைகள் எல்லாம் சாகும்போது உணவுகளை பதுக்கிவைத்திருந்த நிதி திட்டமிடலை சொல்லவா???? 5000 விற்ற சீனி 05 மணித்தியாலத்தில் 50 ஆனது எப்படி.????

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தமிழ்தேசியக்கூட்டமைப்பு எப்போது அறுதிப்பெரும்பானமை பெற்று வென்றது வீரகேசரி இப்படிப்பீத்திக்கொள்ளுது.
  • சங்கவி ரதனுக்கு  ,பாரட்டுகளும், வாழ்த்துக்களும்👏
  • 20 ம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்ளார்; பிரசாந்தன் அறிவிப்பு August 11, 2020 கனகராசா சரவணன் ஏதிர்வரும் 20 ம்திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.   தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் மட்டக்களபு வாவிக்கரையில் அமைந்துள்ள தலைமைக் காரியாயத்தில் இன்று செவ்வாய்க்கிழம (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.   நடந்து முடிந்த தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய செய்தியை வெளிப்படுத்தியுள்ளது கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இருந்த மக்கள் 2015 நல்லாட்சி தொடக்கம் மிக தோனையான பாதிப்பை ஏற்பட்டு அபிவிருத்தியிலும் தனித்துவத்திலும் பின்னடைவை எதிர் நோக்கியுள்ளனர். ஆகவே இந்த முறை மக்கள் வழங்கியிருக்கும் செய்தியானது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியும் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும் என அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சிரமேற்று சி. சந்திரகாந்தன் தலைமையில் முன்னெடுத்துச் செல்லும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிகமான வாக்குகளை வழங்கி 4 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளனர்.   எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி கொள்கை சாந்தவர்களாக இருந்தாலும் அரசியல் என்பது மக்களுக்காகவே தவிர தாங்கள் சார்ந்த கட்சிக்காகவே அரசியல் இருப்புக்காகவே அல்ல என்பதனை வெளிப்படையக புரிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் ஒரே கூரையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக ஒரே கூரையின் கீழ் பயணிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுகின்றது.   அதே போன்று தமிழர்களின் வசமிருந்த கிழக்கு மாகாணசபை தமிழ் மக்களிடம் வரவேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் உறுதியாக இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போட்டியிடவில்லை அந்த மாவட்ட தமிழ் மக்களை நடுக்கடலில் விட என்றும் தயாராகவில்லை. எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணத்தில்; அம்பாறை திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிடும். தமிழர்கள் ஆண்ட சபையை பிள்ளையான் மீண்டும் தமிழர்கள் ஆள்வதற்காக தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயாராக இருக்கின்றது.   தடுப்பு காவலில் இருக்கின்ற படியினால் பாராளுமன்ற என்ற சிறப்புரிமையின் கீழ் எதிர்வரும் 20 ம் திகதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற அமர்வுக்கு அவர் செல்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது அந்த நாடாளுமன்றம் சென்ற பிற்பாடே ஏனைய நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் பிணைக்கு அப்பால் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது பிணையில் விடுதலை செய்யமுடியாது சட்டம் பல போரளிகள் இன்று வரைக்கும் சிறையில் இருக்கின்றனர். ஆனால் முதலமைச்சராக இருந்தவருக்கு பயங்கரவாத தடைச்சட்டம் போடப்பட்டது என்பது மிகவும் வேடிக்குரிய விடயம்.   எது எப்படியாக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் அவர் வெளிவருவதற்கான அனைத்து விடயற்களும் சட்டப்படி முடிவடைந்துள்ளது அதற்காக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். மிகவிரைவில் சட்டத்திற்கு முன் அவர் நிரபராதியாக வெளியில் வருவார். ஏன அவர் தெரிவித்தார்.   http://thinakkural.lk/article/61663
  • இரண்டு தடவை யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வென்றது சாதனைதானே.😃 எத்தனை பேர் வெட்டி வீழ்த்த முயன்றும் சும் வென்றுதானே உள்ளார்!
  • வாழ்த்துக்கள்!  Rubik’s cube ஒழுங்காக்க நிறைய ஞாபகசக்தி வேண்டும்.