Jump to content

யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி


Recommended Posts

யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி

யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி

அக்கா...! அவ்வப்போது தொலைந்து போகிறவன் இடையிடை இப்படித்தான் அழைப்பான். கிட்டத்தட்ட 3மாதங்கள் தொடர்பறுந்து போனவன் நேற்று மீண்டும் அழைத்திருந்தான்.

எங்கைசாமீ ஒளிச்சிருந்தனீங்கள்...? ஒரு எஸ்எம்எஸ் கூடப்போட நேரம் கிடைக்கேல்லயோ ?

நாய்க்கென்ன வேலை அது ஓடிக்கொண்டுதானேயக்கா இருக்கும்....

அப்ப நாய் வாழ்க்கை இன்னும் முடியேல்லெயெண்றீங்களோ...? அதெங்கக்கா முடியுறது....?

எவ்வளவோ துயரங்களையும் வலிகளையும் மனசுமுட்டச் சுமந்து கொண்டிருந்தாலும் தொடர்பில் வருகிற நேரங்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டவன் போல கதைக்க ஆரம்பித்துவிடுவான்.

வளமையான சுகநல விசாரிப்புகள்....குடும்பம் குழந்தைகளில் ஆரம்பித்து வளமைபோல நேற்றும் தாயகத்தில் போய் நின்றது.

நேற்றைய நமது கதையில் பவி பற்றிய கதை எப்படி வந்ததென்று தெரியாமல் வந்துவிட்டது. நினைச்சா நெஞ்சு வெடிச்சிடும் மாதிரியிருக்கு....கடைசியா அந்தாள் என்னிட்டை கேட்டது ஒண்டு தான்....தன்ரை பிள்ளையள் மூண்டையும் படிப்பிச்சு விடச்சொன்னது மட்டும்தானக்கா.....

அவன் பவியின் கணவனான ஒரு தளபதியின் கடைசி ஆசையைப் பற்றி கிட்டத்தட்ட 47 நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் அவனது இயலாமை அவனைக் குற்றவாளியாய் வரைந்து அவனை வருத்திக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

என்ன செய்றது....? யார் நினைச்சம் இப்பிடியெல்லாம் வருமெண்டு....

என்னக்கா சொல்றியள்....இந்தக் கட்டமைப்புகள் செயலகங்கள் நினைச்சிருந்தா எல்லாருக்கும் எல்லாம் செய்திருக்கலாமக்கா....நாங்கெல்லாம் ஊரிலை நிக்கேக்க இங்கை அரசியல்வேலை நல்லா நடக்குது எங்களுக்குத் தான் வெற்றியெண்டு சாவுக்கை நிண்டம்....இஞ்சை வந்தப்பிறகு தான தெரியுது நாங்கெல்லாம் முட்டாளுகளா இருந்திட்டமெண்டது....இவனுகளின்ரை வெளிநாட்டரசியலின்ரை விறுத்தத்தை சத்தியமா இஞ்சை வந்தப்பிறகு தானக்கா முழுசாப்புரிஞ்சன்.....ஒருநாள் கூட களமறியாதவனெல்லாம் இப்ப கடைசீல நடந்ததென்னெண்டு கதைவிடுறாங்கள்....அது போதாதைக்கு நம்மையெல்லாம் துரோகியுமெல்லோ ஆக்கீட்டாங்கள்......22வருசம் இந்த இனத்துக்காக எல்லாத்தையும் இழந்து இண்டைக்கு சொந்தக் குடும்பத்தையே காண முடியாம கடைசியில 22வருசம் போராடின குற்றத்துக்கு துரோகிப்பட்டமும் தந்திட்டாங்கள்.....இந்த விதியை நினைச்சாத்தான் வலிக்குதக்கா....

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அவனது கதைகளுக்கு நடுவில் சின்னச் சின்னப் பகிடிகள் விட்டு அவனை அந்தச் சில நிமிடங்கள் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது.

000 000 000

16வயதில் தனது சுயவிருப்போடு விடுதலைப்புலியானவன். எத்தனையோ சமர்கள் களங்கள் அவனது கள அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு. ஜெயந்தன் படையணியின் சிறந்த சண்டைக்காரர்களில் அவனும் ஒருவன். ஜெயசிக்குறுவே அவனது கடைசிக்களமாக தொடர் காயங்கள் கால்களையும் கைவிரல்களையும் ஊனமாக்கும் வரை அவன் ஒரு சிறந்த சண்டைக்காரனாகவே திகழ்ந்தான்.

சிறந்த சண்டைக்காரனே சிறந்த அரசியல்காரனாகுவான் என்பது அவன் விடயத்தில் உண்மையாக அவன் களத்திலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட அரசியல் பொறுப்பைத் தலைமை வழங்கியது. அரசியல் பிரிவுக்காரர்கள் ஆடைமடிப்புக்கலங்காமல் பணிசெய்யும் இலகுப்பணிக்காரர்கள் என்ற களப்போராளிகள் பலரது கருத்தே இவனுக்கும் இருந்தது. தானும் அரசியல் பிரிவில் அதுவும் மாவட்டங்களை கட்டி நிர்வகிக்கும் பொறுப்பு வரும்வரை அரசியல் பிரிவில் உள்ள கடினங்களை அறிந்து கொள்ளவேயில்லை.

சண்டையில நிண்டு கொண்டு அரசியல்காறரை ஏதோ பெரிய வாழ்க்கை வாழிறாங்களெண்டு கதைச்ச கதைக்குத்தான் காலமெனக்கு இந்தத் தண்டனையைத் தந்திருக்கெண்டு நினைப்பான்.

சண்டைக்களங்களில் இருந்த முகம்போய் அரசியல் பிரிவுக்குரிய முகத்தை வரவழைத்துக் கொண்டான். மக்கள் தொடர்பு முதல் அனைத்தையும் செய்யத் தொடங்கிய போது வரியுடைக்கு ஓய்வு கொடுத்து பொது உடைக்கு மாறினான். விளையாட்டுத்தனங்கள் போய் சீரியசான அரசியல் போராளியாய் பொறுப்பு மிக்கவனாகிப் போனான். ஆயினும் பலமுறை களம்காண விரும்பும் தனது கனவைத் தலைமையைச் சந்திக்கிற போதுகளில் சொல்லி வைக்கத் தவறுவதில்லை. ஏதோ இனி அரசியல் பணியே உனது பணியென்பது போல தலைமையின் பதில் சிரிப்போடும் கண்டிப்போடும் வருகிற போது வாய்மூடிவிடுவான்.

கடைசிக்கள நிலமை மாறிப்போய் வன்னியை விட்டு விலகி நின்ற வெளிமாவட்டப் போராளிகள் நிலமை துடுப்பிழந்து போகுமென்று கனவில் கூட எண்ணாமல் தனக்குப் பணியாகத் தரப்பட்ட மாவட்டத்திலிருந்து பணிகளோடு கவனமாகினான்.

வாழ்வும் மரணமும் முள்ளிவாய்க்காலில் எழுதப்பட்டுக் கொண்டிருக்க அங்கே சென்றுவிட இவனும் இவனது மாவட்டத்திலிருந்த பலரும் முயற்சித்த முயற்சியும் தோற்றுவிட்ட போது முடிவுகள் அவரவரின் சுய விருப்பங்களாகியது.

எவ்வவோ குழப்பங்கள் விரக்தியின் மத்தியில் தான் நாட்டைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்தான். அவனது ஆயுளின் நீளமோ அல்லது அதிஸ்டமோ தெரியாது ஐரோப்பிய நாடொன்றில் வந்திறங்கச் சிலர் உதவி செய்து ஐரோப்பாவில் வந்திறங்கினான். வந்த பின்னர் தான் ஐரொப்பாவின் தாயகம் தேசியம் தன்னாட்சி குழுமோதல் முதல் புரிந்து கொண்டான்.

தன்கையால் மண்போட்டு விதைத்தவர்களை தன்கையால் வளர்ந்தவர்களை களத்தில் இழந்தவர்களை தன்னோடு ஒன்றாய் உறவாடி வாழ்ந்து ஒரே களத்தில் மடிந்தவர்களின் தியாககங்கள் ஆளாளுக்கு கூறுபோட்டு மாவீரர்களின் தியாகங்கள் துண்டாடப்படுவதனை எதிர்த்து ஒற்றுமைப்பாடொன்றை உருவாக்குமாறு எங்கும் வேண்டினான்.

ஒற்றுமையை வேண்டியதற்கான பலன் அவன் பெரிதுரோகியாக்கப்பட்டு இணையங்களில் கிழித்தெறியப்பட்டான். எத்தனையோ நாட்கள் தனக்குக் கிடைத்த துரோகிப்பட்டத்தை நினைத்து அழுதிருக்கிறான். 22வருடம் தமிழினத்துக்காக வாழ்ந்தவனை அவன் போராட்ட வாழ்க்கையின் வயதுகூட இல்லாததெல்லாம் அவனைத் துரோகியாக்கி தேசியம் பேசியது கூடப் பொறுக்க முடிந்தது. ஆனால் அவன் பிறந்த மாவட்டமே துரோகிகளின் மாவட்டமென்று பிரதேசப்பாகுபாட்டை புலத்தில் வளர்ப்பது போன்ற பெரிய கனவான்களின் பிரிவினைவாதக் கருத்துக்கள் எழுத்துக்களை மட்டும் அவனால் தாங்கவே முடியவில்லை.

வெளியில் வெளிக்கிட்டால் துரோகி மாவீர் நாளுக்குப் போனால் துரோகி....எங்கும் துரோகி எதிலும் துரோகி....இப்போது எங்கும் போவதில்லை. ஒரு அறைக்குள் வாழ்க்கையாகிப் போய்விட்டது. வாரத்தில் 3நாள் மிகவும் குறைந்த சம்பளத்திற்குச் செய்யும் வேலையைக்கூடச் செய்ய முடியாது போனது.

உணர்விழந்த வலக்கையின் 3விரல்களையும் பார்த்த மக்டோனால்ஸ் முதலாளி அவனால் வேகமாக வேலைசெய்ய முடியாதென்று வேலையை நிறுத்திவிட புதிய றெஸ்ரோரண்ட் ஒன்றில் கிடைத்த 5நாள் வேலையிலும் சம்பளம் மிகக்குறைவு. ஆனாலும் அரச வேதனத்தில் இருப்பதை விரும்பாமல் தனது சுய உழைப்பில் வாழ வேண்டுமென்ற வைராக்கியம் 12கிலோமீற்றர் தினமும் வேலைக்கு நடந்து போய்வருகிறான். கேட்டால் இதென்ன கஸ்ரமக்கா...? ஏன சிரிக்கிற அவன் மனசுக்குள் எரிகிற துயரத்தீயையும் துரோகமாக்கிவிடுகிற தியாகிகள் நடுவில் அவனுக்காக ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே சொல்ல முடிகிறது.

மற்றவர்களுக்காக வாழ்ந்தவன் இப்போதும் தன்னுடன் வாழ்ந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வை உயர்த்த ஏதாவது செய்துவிட வேண்டுமென்ற ஆவலில் தனது உழைப்பில் முடிந்ததைச் செய்கிறதோடு நின்றுவிடாமல் என்னிடமும் பல குடும்பங்களின் தொடர்புகளைத் தந்து அவர்களுக்கு உதவும்படி அடிக்கடி அன்புத் தொல்லை தந்து கொண்டிருப்பான். அந்த வரிசையில் தான் பவிபற்றி இன்று சொல்லத் தொடங்கினான்.

000 000 000

பவிக்கு ஏதும் ஒழுங்கு செய்யேலுமேயக்கா ? பாவம் சரியாக் கஸ்ரப்படுறாளாமக்கா...பிள்ளையளும் அதோடை அவளும் சண்டையில காயப்பட்டு காலொண்டும் ஏலாதவள்....எங்கினையோ வீடொண்டில வேலை செய்யிறாளாம்....பெரிசா செய்யேலாட்டிலும் அந்தப்பிள்ளையளுக்கு படிக்க மாதnமொரு ரெண்டாயிரம் குடுத்தாலும் அது பெரிய உதவியா இருக்குமக்கா....

சரி நம்பறைத் தாங்கோ....என பவியின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன். பவியைக் கண்டிருந்த காலங்களில் ஒரு தளபதியின் மனைவி ஒரு போர்க்களத்தின் போராளியென்ற மதிப்பும் சின்னப் பயமும் இருந்தது. அதனால் சந்தித்த காலங்களில் புன்னகையால் மட்டுமே பவியுடன் விடைபெற்றிருக்கிறேன். இப்போ அவளுடன் கதைக்க வேண்டி வந்தது சற்று சங்கடமாகவே இருந்தது.

08.03.2012 மதியம் அவளை அழைத்தேன்.

சொல்லுங்கக்கா...! ஏன ஆரம்பித்தவள் சொன்ன கதைகளைக் கேட்கக் கேட்க ஐயோ எனக்கத்த வேணும்போலிருந்தது.

பிள்ளையள் எப்பிடியிருக்கினம்....? இருக்கினமக்கா மூத்தவன் என்னோடை இல்லக்கா....சின்னவை ரெண்டு பேரும் தான் என்னோடை அதுவும் மகள் மட்டும் தான் இப்ப என்னோடை ரெண்டாவது அம்மா வைச்சிருக்கிறா...

மூத்தவனுக்கு இருதய வருத்தம் தெரியும் தானேயக்கா.....கடைசிநேரம் முகாமுக்கு வந்தாப்போல பிள்ளைக்கும் சரியா ஏலாமப்போட்டுது....அவனை ஒரு தெரிஞ்சாக்கள் தாங்கள் பாக்கிறமெண்டு கேட்டினம்....எனக்கும் அந்த நேரம் வேறை வழி தெரியேல்ல பிள்ளையை அவேட்டைக் குடுத்திட்டன்....இந்தச் சமூகத்தோடை எப்பிடி ஒட்டி வாழப்போறனெண்ட பயம் ஒருபக்கம்.... பிள்ளையெண்டாலும் எங்கினையும் வாழட்டுமெண்டு குடுத்திட்டனக்கா....மகனின் கதையைச் சொல்லிக் கொண்டிந்தவள் இப்போது அழ ஆரம்பித்தாள்.

ஊருக்கை வந்தா ஒருத்தரும் மதிக்கினமில்லை. அம்மா மட்டும்தான் ஆறுதல். அவற்றையாக்களிட்டையும் போய்ப்பாத்தன் ஒருதரும் என்னையோ என்ர பிள்ளையளையோ பாக்கிறமாதிரியில்லை....எங்கினையுமொரு வேலையைத் தேடுவமெண்டா எங்கை போனாலும் குறைஞ்சது ஓலெவல் தகுதி கேக்கினம்....15இயக்கத்துக்குப் போனநானெங்கை ஓலெவல் படிச்சனக்கா....அதுவும் புலியில இருந்து வந்துமெண்டா வாசலோடை வெளியில விடாத குறையா கதைக்கிறாங்களக்கா....

கடைசியா ஒரு வீட்டில வேலைக்கு ஆள் தேடினாங்கள் அதையாவது செய்து இந்த ரெண்டையும் பாப்பமெண்டு இந்த வீட்டு வேலையைச் செய்ய வந்திருக்கிறன். மகளையும் என்னோடை வைச்சிருக்கக் கேட்டன் அவை ஓமெண்டினம்....தனியவெண்டா மாதம் 5ஆயிரம் ரூபா தாறமெண்டினம்....இப்ப பிள்ளையுமெண்டதும் 4ஆயிரம்தான் தருவினமாம்.....சாப்பாடு தருகினம்....அப்ப ஓமெண்டிட்டன்....

எனக்கு யெகோவா ஆண்டவர்தான் துணையக்கா அவரைத்தான் இப்ப நம்பிறன்....ஆனால் யெகோவாக்காறரெண்டா பெரீசா ஏதோ அள்ளித்தருவினமெண்டு எங்கடையாக்கள் சொல்லுவினமக்கா....எனக்கு பணம் பொருள் ஒண்டையும் யெகோவா சபை தரேல்லயக்கா.....ஆனால் என்ரை மனதை வழிப்படுத்தி செத்துப்போற நிலமையில இருந்த என்னை வாழ வைச்சிருக்கு யொகோவா ஆண்டவர்.....வெளியில காணேக்க எங்கடையாக்கள் நக்கலடிக்கினமக்கா யெகொவாக்காறர் எனக்கு வசதியைத் தந்திருக்கினமெண்டு....சத்தியமா நான் யெகோவா திருச்சபையிட்ட ஒரு சதத்தையும் வாங்கேல்லயக்கா....

முகாமிலயிருந்து ஊருக்கை வரேக்க நான் ஒரு பிணம்மாதிரித்தானக்கா வந்தனான்....கடைசீல அவர் சொல்லிவிட்டது எங்கடை பி;ள்ளையளைக் கைவிட்டிராத எண்டதுதான்.....ஆனா என்னாலை ஒண்டுமே செய்யேலாமப் போச்சக்கா.....மனநலம் பாதிக்கிற நிலமையிலதானக்கா இருந்தனான்....அப்பதானக்கா யெகோவா ஆண்டவரிட்டைப் போனனான். நானிப்ப ஓரளவு மனத்தைரியத்தோடை வாழுறனெண்டா நான் தேடின யெகோவா ஆண்டவற்றை கிருபைதான் காரணமக்கா...

அவள் யெகோவா ஆண்டவர் பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தாள். யெகோவா ஆண்டவர் பற்றிய புத்தங்களோடு வந்து வாசலைத் தட்டுகிற எல்லாரையும் துரத்திவிடுகிற என்னால் பவியைத் தொடர்பறுக்க முடியவில்லை. அவளது தேர்வு பிழையென்று வாதாட எனக்கு எவ்வித தகுதியும் இல்லையென்பதனை மனசார ஒப்புக் கொண்டேன். வாழ வழியற்றுப்போன நேரம் அவளை ஆற்றுப்படுத்தியது யெகோவா ஆண்டவரென்று அவள் நம்பியதால் இன்று தனது பிள்ளைகளுக்காக வாழும் தைரியத்தைப் பெற்றிருக்கிறவளோடு விவாதித்து எனது பெருமையை வெளிப்படுத்தவில்லை.

எனக்கு ஆடம்பரமா வாழ வேணும்....சம்பாரிக்க வேணும்....பகட்டா திரிய வேணுமெண்டெல்லாம் ஆசையில்லையக்கா...!என்ரை பிள்ளையள் படிக்க வேணும் அது போதுமக்கா....என்றவள் உறுதியாய் சொன்னது இதுதான்:-

தன்னை வழிப்படுத்திய ஆண்டவருக்கு ஊழியம் செய்கிற பிள்ளைகளாகத் தனது பிள்ளைகளை ஆன்மீகக் குழந்தைகளாக வளர்க்க வேணுமெண்டதே தனது கனவென்றாள்.

உங்களுக்கு உங்களை ஆற்றுப்படுத்த என்ன வழி சரியெண்டு நினைக்கிறீங்களோ அதை நீங்கள் தெரிவு செய்ததில பிழையில்லை.....அது உங்கடை சுதந்திரம்.....என அவளது யெகோவா ஆண்டவரின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

அவர் கடைசியா ஆசைப்பட்டது பிள்ளையளை கவனமாப்படிப்பிக்க வேணுமெண்டதுதானக்கா....என்ரை பிள்ளையள் படிக்க ஏதாவது உதவ ஏலுமெண்டா பாருங்கோக்கா....உங்காளலை உதவேலாமல் போனாலும் பறவாயில்லை....இடைக்கிடை எடுத்துக் கதையுங்கோக்கா....அதே எனக்கு பெரிய ஆறுதலா இருக்குமக்கா....இஞ்சை எங்கடை முகத்தைப் பாக்க எங்களோடை கதைக்கவே சனம் தயாரில்லையக்கா.....நாட்டைவிட்டுத் தூரத்தில இருந்தாலும் ஞாபகம் வைச்சு எடுத்திருக்கிறீங்களக்கா....அதுக்கு நன்றியென்றாள்.

அவளோடு கதைக்கச் சொல்லி தொடர்பைத் தந்த தோழனைப் பற்றிச் சொன்னேன். அவனுக்கே இந்த நன்றிகளைச் சொல்லச் சொன்னேன். அவள் அழுதாள்....அண்ணனிட்டைச் சொல்லுங்கக்கா நாங்கள் உங்களை மறக்கேல்லயெண்டு....எங்கேயெண்டாலும் அண்ணன் நல்லாயிருக்கட்டுமென்று வாழ்த்தினாள்.

பவியின் கண்ணீர் தன்னை மேலும் துன்புறுத்தும் என்ற பயத்திலேயே அவளுடன் தொடர்பெடுக்க மறுத்திருக்கிற தோழனின் இக்கட்டை அவளுக்குச் சொல்ல முடியவில்லை. நான் சொல்றன் எடுத்துக் கதைக்கச் சொல்லி....என்றேன். சொல்லுங்கக்கா நாங்களிஞ்சை செல்லாக்காசுகளாப் போனமெண்டு....அவள் அழுது கொண்டிருந்தாள்.

சரி பவி நான் ஆறுதலா இன்னொரு நாள் கதைக்கிறனே....! என்ரை நம்பர் இதுதான் எழுதுங்கோ....என்றேன். பவி அழுதழுது எனக்கு விடை தந்தாள்.

பவியின் வாழ்வுக்கு ஏதாவதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேணும்...ஆற்றை காலைப்பிடிச்செண்டாலும் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் ஏதாவது செய்தாக வேணுமென்ற சிந்தனை மனசுக்குள் வலம்வருகிறது.

அவள் சொன்ன யாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்ற முடிவில் புவியின் தொடர்பைத் தந்த தோழனின் தொலைபேசியிலக்கங்களை அழுத்துகிறேன்....

08.03.2012

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று சனிக்கிழமை 10.03.11 சிட்னியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.புலத்தில் பிறந்தவர் ஒவ்வோரு வருடமும் கலை நிகழ்ச்சி மூலமும் பணம் சேர்த்து போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பார்.இந்த வருடம் அவரால் 40000 டொலர்கள் சேர்க்ககூடியதாக இருந்தது.புலம் பெயர் மக்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கவில்லை.பெரிதாக செய்யவில்ல என்றாலும் இயன்றளவு செய்கிறார்கள்...முள்ளிவாய்க்காளில் இருந்து வந்த ஒருவரிடம்தான் இந்த பணம் கொடுக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

அக்கா அந்த உறவின் வங்கி இலக்கம் இருந்தால் என் இணைய முகவரிக்கு அனுப்புங்கள்......

”அன்று அவர்கள் எல்லையில் துப்பாக்கிகளோடு காவல் புரிந்தபடியால்தான் இன்று நான் (ம்) பெயர் செல்லக்கூடிய வகையில் படித்து வேலைகளிலும் குடும்பம் பிள்ளைகள் என்று வாழ்கின்றோம். முடியாதது என்று எதுவுமே இல்லை என்று நிருபித்தவர்கள் அவர்கள்”

அந்த சகோதரத்திற்க்காக என் உதவி நிச்சயம் உண்டு!!

Link to comment
Share on other sites

இந்த யெகொவா காரர்கள் சந்திலை சிந்து பாடுகிறார்கள் ஊரில் முன்னைநாள் போராளிகளை விடுதலையானவர்களை மட்டுமல்ல சிறையிலும் அடிக்கடி சென்று சந்தித்து மனம்மதற்றி மதம் மாற்றல் வேலைகள் வேகமாக நடக்கின்றது இதற்கு அரசின் பூரண ஆதரவு உண்டு. மனமுடைந்து போயிருப்பவர்களை இவர்களால் இலகுவாக மனமாற்றம் செய்துவிடமுடியும். இதனை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது. அவர்களையும் சைவமதத்தின் துரோகிககள் என்றுவிட்டு அடுத்த வேலையை பாக்கவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

....இடைக்கிடை எடுத்துக் கதையுங்கோக்கா....அதே எனக்கு பெரிய ஆறுதலா இருக்குமக்கா....இஞ்சை எங்கடை முகத்தைப் பாக்க எங்களோடை கதைக்கவே சனம் தயாரில்லையக்கா.....நாட்டைவிட்டுத் தூரத்தில இருந்தாலும் ஞாபகம் வைச்சு எடுத்திருக்கிறீங்களக்கா....அதுக்கு நன்றியென்றாள்.

நிஐங்களை வீம்புக்கு உள்ளே மறைத்து வெட்டிக் கதைகளை கதைத்து சொறிந்து இன்பங் காணுபவர்கள் மத்தியில் , சாந்தி போன்றோரின் குரல்கள் பட்டைக்கிணறில் இருந்தே கேட்கின்றன . கேட்கக் கசப்பாக இருந்தாலும் , அவர்களது குரல்களே மனச்சாட்சி உள்ளவனை ஆட்டிப்படைக்கவல்லன . அடியுங்கள் சாந்தி உங்கள் ஆராய்ச்சி மணியை .

Link to comment
Share on other sites

புலம் பெயர் மக்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கவில்லை.பெரிதாக செய்யவில்ல என்றாலும் இயன்றளவு செய்கிறார்கள்...முள்ளிவாய்க்காளில் இருந்து வந்த ஒருவரிடம்தான் இந்த பணம் கொடுக்கப்பட்டது.

புத்தன் , இத்தகைய நல்லுள்ளங்களால் தான் இன்னும் அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.சிறுதுளி பெருவெள்ளமாகும்.

அந்த சகோதரத்திற்க்காக என் உதவி நிச்சயம் உண்டு!!

உங்களுக்கு அயல்மாவட்டத்தில் தான் அவள் இருக்கிறாள். சந்திக்க முடிந்தால் ஒருதரம் சந்தியுங்கள். விபரங்கள் மடலிடுகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

அவர்களையும் சைவமதத்தின் துரோகிககள் என்றுவிட்டு அடுத்த வேலையை பாக்கவேண்டியதுதான்

சாவின் நுனியில் கிடந்தவர்களை காக்க ஏன் சாத்திரி சைவம் வரவில்லை ? :wub:

அவர்களது ஆத்ம பலத்துக்கு ஆறுதலாக எது கிடைத்ததோ அதை அவர்கள் நம்புகிறார்கள். முடிந்தால் சைவப்பழங்கள் இத்தகையோரை வாழ வைக்க தமது வல்லமையை பயன்படுத்தலாமே ?

கேட்கக் கசப்பாக இருந்தாலும் , அவர்களது குரல்களே மனச்சாட்சி உள்ளவனை ஆட்டிப்படைக்கவல்லன . அடியுங்கள் சாந்தி உங்கள் ஆராய்ச்சி மணியை .

நிச்சயம் மனச்சாட்சியுள்ள மனித நேயர்களை தட்ட வேணும் என்பதற்காகவே இத்தைகய விடயங்களை எழுத்தில் கொண்டு வருகிறேன். இக்கதையை ஒருவர் பேஸ்புக்கில் படித்துவிட்டு இக்குடும்பத்துக்கான வாழ்வதார உதவியையும் அனுப்பியுள்ளார்.

தொடர் முயற்சி பயன்தருமென்ற நம்பிக்கை. கோமகன் நன்றிகள்.

Link to comment
Share on other sites

சாவின் நுனியில் கிடந்தவர்களை காக்க ஏன் சாத்திரி சைவம் வரவில்லை ? :wub:

அவர்களை கோவிலுக்கு உள்ள விடலாமா என்று சைவம் கூட்டம் போட்டு விவாதிக்கிறது. கொஞ்சம் பொறுங்கோ. :(

Link to comment
Share on other sites

சாவின் நுனியில் கிடந்தவர்களை காக்க ஏன் சாத்திரி சைவம் வரவில்லை ? :wub:

அவர்களது ஆத்ம பலத்துக்கு ஆறுதலாக எது கிடைத்ததோ அதை அவர்கள் நம்புகிறார்கள். முடிந்தால் சைவப்பழங்கள் இத்தகையோரை வாழ வைக்க தமது வல்லமையை பயன்படுத்தலாமே ?

நிச்சயம் மனச்சாட்சியுள்ள மனித நேயர்களை தட்ட வேணும் என்பதற்காகவே இத்தைகய விடயங்களை எழுத்தில் கொண்டு வருகிறேன். இக்கதையை ஒருவர் பேஸ்புக்கில் படித்துவிட்டு இக்குடும்பத்துக்கான வாழ்வதார உதவியையும் அனுப்பியுள்ளார்.

தொடர் முயற்சி பயன்தருமென்ற நம்பிக்கை. கோமகன் நன்றிகள்.

சைவத்திற்குஆயிரம் வேலை இருக்கு அம்மணி அதுக்கு இவங்களை காப்பாத்துறதா வேலை ..யெகோவாக்கு மாறிட்டாங்கள் யெகோவா இவங்களிற்கு பரலோகமா காட்டப்போறார். ^_^

Link to comment
Share on other sites

சைவத்திற்குஆயிரம் வேலை இருக்கு அம்மணி அதுக்கு இவங்களை காப்பாத்துறதா வேலை ..யெகோவாக்கு மாறிட்டாங்கள் யெகோவா இவங்களிற்கு பரலோகமா காட்டப்போறார். ^_^

சைவத்தின்ரை வேலைதான் என்ன சத்தியமாய் எனக்கு விழங்கேல . ஒரு ஆமத்துறுக்கு இருக்கிற இன உணர்வு கூட உருத்திராச்சங்கொட்டையளுக்கு வரேல . பிரச்சனை எந்தக் கடவுள் எங்கையெங்கை லீலையள் வைச்சார் எண்டு சிக்கெடுத்தது தான் மிச்சம் ^_^^_^:icon_idea: .

Link to comment
Share on other sites

அவர்களை கோவிலுக்கு உள்ள விடலாமா என்று சைவம் கூட்டம் போட்டு விவாதிக்கிறது. கொஞ்சம் பொறுங்கோ. :(

பார்ப்போம் Eas விவாதம் ஏதாவது தீர்வைத் தருமா ?

Link to comment
Share on other sites

யெகோவா இவங்களிற்கு பரலோகமா காட்டப்போறார். ^_^

பரலோகம் காட்டப்படுகிறதோ இல்லையோ மன அமைதியையேனும் அவர்கள் பெறுவதில் நன்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரலோகம் காட்டப்படுகிறதோ இல்லையோ மன அமைதியையேனும் அவர்கள் பெறுவதில் நன்மைதான்.

உண்மையிலயே மன அமைதி வேண்டியிருந்தால் அவர் பெளத்ததில் சேர்வதுதான் புத்திசாலித்தனம்....இன்றைய காலகட்டத்தில்

Link to comment
Share on other sites

பரலோகம் காட்டப்படுகிறதோ இல்லையோ மன அமைதியையேனும் அவர்கள் பெறுவதில் நன்மைதான்.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவர்கள் பதுங்குழிகளுள் கிடந்தபொழுது எங்கே போயிருந்தார்கள் இந்த யெகோவாக்கள். எங்கடை முருகனும் பிள்ளையாரும் தான் காப்பாத்தி விட்டது. அப்பிடி அவர்கள் காப்பாத்தி விட இப்ப நிலைமை மாறினதும் யெகோவா அழைக்கிறாரா?நீங்கள் யெகோவாக மாறிவிட்டிங்களா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உண்மையிலயே மன அமைதி வேண்டியிருந்தால் அவர் பெளத்ததில் சேர்வதுதான் புத்திசாலித்தனம்....இன்றைய காலகட்டத்தில்

புத்தா எனக்கு பவுத்தத்திற்கு மாறுங்கள் எனச்சொல்ல எந்த உரிமையும் இல்லையே.

Link to comment
Share on other sites

  • 1 month later...

அக்கா அவரையும் அவரது குடும்பத்தையும் நான் சென்று சந்தித்தேன்......நலமாக உள்ளனர்!

Link to comment
Share on other sites

அக்கா அவரையும் அவரது குடும்பத்தையும் நான் சென்று சந்தித்தேன்......நலமாக உள்ளனர்!

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் புலிக்குரல். வார இறுதியில் தங்களுடன் தொடர்பு கொள்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.