Jump to content

கீரை மசியல் / கீரை கடையல்

Recommended Posts

பெயரில் என்ன இருக்கு, சத்துள்ளதாக, ருசியுள்ளதாக சாப்பிடுவது தானே முக்கியம். 2012 பிறந்த பின்னர் எழுதும் முதல் செய்முறை என்பதால் சைவத்துடன் ஆரம்பிக்கலாமே என நினைத்து கீரையுடன் ஆரம்பிக்கின்றேன்.

%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg

தேவையானவை:

1 பிடி கீரை

1/2 கப் நறுக்கிய வெங்காயம்

2-3 நறுக்கிய பச்சை மிளகாய்

1 தேக்கரண்டி பெரும்சீரகம்

4-5 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால்

தேவைக்கேற்ப உப்பு

செய்முறை:

1. கீரையை நன்றாக நீரில் அலசி, மண் இல்லாது எடுத்து, சிறிதாக அரிந்து கொள்ளுங்கள். ( சோம்பல் காரணமாக சரியாக நீரில் அலசாமல் விட்டால், அன்று "மண் கீரை கடையல்" தான் கிடைக்கும். )

2. ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு, சிறிதளவு நீர் ஊற்றி வேகை வையுங்கள்.

3. அதில் பெரும்சீரகம், வெங்காயம், மிளகாய், சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்றாக வேக வையுங்கள்.

4. கீரை நன்றாக வெந்து வந்ததும், மத்தால் அல்லது ஒரு மசிக்க கூடிய அகப்பையால் நன்றாக கடையுங்கள். (அடுப்பில் இருந்து இறக்கி செய்யுங்கள்)

5. பின்னர் சட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து, தேங்காய்ப்பாலை சேர்த்து லேசான கொதி வந்ததும் இறக்குங்கள். இறக்கியதும் சிறிது தேசிக்காய்/எலுமிச்சைப் புளி சேர்த்தால் அருமையான ருசி கிடைக்கும்.எங்க வீட்ல உள்ளவங்க போல, தேசிக்காய்க்கு எதிர்ப்பு காட்டினால்..அது வேணாங்கிறேன்...வேலை குறைவு..கிகிகிகி

பி.கு: இதெல்லாம் ஒரு பெரிய செய்முறையா என கேட்பவர்களுக்கு: நான் கற்றுக்குடுத்து வெந்நீர் போல கற்றுக் கொண்டவர்களும் இங்குண்டு, என்னைய சுத்தி அம்புட்டு அப்பாவிங்க...வரட்டுமா ;)

www.thooyaskitchen.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, அரை அவியலில் எடுத்து கிரைட்டரில் போட்டு அடித்துவிட்டு அவித்த உருளைகிழங்கு or பன்னீர் கட்டிகள் போட்டு திரும்பவும் அடுப்பில் வைத்து தாளித்து சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்

பலக் பன்னீர் போலவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ தூயா பபா.. எங்க போயிருந்தீங்க. ஆளையே காணோம்..! கீரை மசியலோட திரும்பி வந்தது சந்தோசம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

வாங்கோ தூயா பபா.. எங்க போயிருந்தீங்க. ஆளையே காணோம்..! கீரை மசியலோட திரும்பி வந்தது சந்தோசம்..! :):icon_idea:

ஆகா எங்கட நெடுக்ஸ்!! :) நலமா?

தலைப்புக்கு எதிரா கதைச்சால் பிரச்சனை என்றதால... "கீரை செய்து பார்த்திட்டு சொல்லுங்க"..கிகிகி

Link to comment
Share on other sites

நன்றி தூயா,

கிரைக்குள் மைசூர் பருப்பு போட்டு கடைந்தால் அதொரு சுவை, எனக்கு முளைக்கிரை மிகவும் பிடிக்கும் :wub:

Link to comment
Share on other sites

அதே கீரை, அதே அடுப்பு, அதே சட்டி. எவ்வளவு காலத்துக்கு கீரையையே கடைஞ்சுகொண்டே இருக்கப்போறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரை மசியலுக்கு நன்றி....மீண்டும் கண்டதில் சந்தோசம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயாவை கண்டதில் உள்ள அதே அளவு சந்தோசம் கலைஞனை கண்டதிலும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

வணக்கம் தூயா. கீரை மசியலுக்கு நன்றி.

:) மறுமொழி கண்டு மிக்க மகிழ்ச்சி

நன்றி தூயா,

கிரைக்குள் மைசூர் பருப்பு போட்டு கடைந்தால் அதொரு சுவை, எனக்கு முளைக்கிரை மிகவும் பிடிக்கும்

முளைக்கீரை இங்கு எப்போதும் கிடைப்பதில்லை...அதற்கு பதில் ஸ்பினச் கீரையைத் தான் சமைப்பதுண்டு.

அதே கீரை, அதே அடுப்பு, அதே சட்டி. எவ்வளவு காலத்துக்கு கீரையையே கடைஞ்சுகொண்டே இருக்கப்போறீங்கள்?

அவ்வ்வ்வ் ஏன் இப்படி அலுத்துக்கிறிங்க? என்னமோ சமைச்சு உங்கள சாப்பிட சொன்ன போல ;) கிகிகி

கீரை மசியலுக்கு நன்றி....மீண்டும் கண்டதில் சந்தோசம் :)

மிக்க நன்றி :)

துயாவை கண்டதில் உள்ள அதே அளவு சந்தோசம் கலைஞனை கண்டதிலும் மகிழ்ச்சி.

இப்படி எல்லாம் சொல்ல முடியாது..யாரை கண்டதில அதிக சந்தோசம் என்று சொல்லித்தான் ஆகணும் ;) கிகிகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா, மாப்பிள்ளை/கலைஞன்/முரளி ஆகியோரைக் கண்டது மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2302.jpg

எனக்குப் பிடித்த உணவு வகையில் இந்த கீரை மசியலும் ஒன்று.

இதுக்கு தேசிக்காய் புளி விட்டு, சாப்பிட்டால் தான்... உண்மையான சுவையை அனுபவிக்க முடியும்.

இணைப்பிற்கு நன்றி தூயா.

Link to comment
Share on other sites

தூயா, மாப்பிள்ளை/கலைஞன்/முரளி ஆகியோரைக் கண்டது மிக்க மகிழ்ச்சி

:) நன்றி கந்தப்பு :)

எனக்குப் பிடித்த உணவு வகையில் இந்த கீரை மசியலும் ஒன்று.

இதுக்கு தேசிக்காய் புளி விட்டு, சாப்பிட்டால் தான்... உண்மையான சுவையை அனுபவிக்க முடியும்.

இணைப்பிற்கு நன்றி தூயா.

உண்மை..

சிலர் துருவிய தேங்காயையும் சேர்ப்பதுண்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ht150.jpg

சுவையான முளைக்கீரை சமைச்சு சாப்பிட்டால் அஹா ....... மிகவும் சுவையாக இருக்கும் :wub:

நன்றி சகோதரி தூயா

Link to comment
Share on other sites

துயாவை கண்டதில் உள்ள அதே அளவு சந்தோசம் கலைஞனை கண்டதிலும் மகிழ்ச்சி.

நன்றி சஜீவன்.

அவ்வ்வ்வ் ஏன் இப்படி அலுத்துக்கிறிங்க? என்னமோ சமைச்சு உங்கள சாப்பிட சொன்ன போல ;) கிகிகி

சும்மா பகிடிக்குத்தான். உங்கள் சாப்பாட்டை குறை சொன்னால் பிறகு அகப்பை காம்பால் அல்லோ வாங்கவேண்டிவரும். நான் சுமார் பதினைந்துவயதுவரை பசளிக்கீரையும், பருப்புக்கறியும் விருப்பமாக மத்தியானசாப்பாட்டில் சோற்றுடன் உண்டுவளர்ந்தேன். பள்ளிக்கூடம் முடிந்ததும் ஓடியோடிவந்து முதலாவதாக‌ பார்ப்பது சோற்றுக்கு கீரையும், பருப்புக்கறியும் உள்ளதோ என்றுதான். இல்லை என்றால் வீட்டில் அமளிதுமளிதான். அப்போது வழமையில் அக்கா சமைப்பார், சுவை சொல்லி வேலை இல்லை. பின்னர் நாட்டு பிரச்சனைகள் காரணமாக அந்த சுவை மறந்து போயிற்று. உருளைக்கிழங்கிற்கு உரமாக மனிதகழிவு பயன்படுத்துவார்கள் என்று பாடசாலையில் யாரோ சொல்லி கேள்விப்பட்டதால் உருளைக்கிழங்கு கறிக்கு கிட்டப்போவது இல்லை. ஆனால், அக்கா உருளைக்கிழங்கில் சுடுகின்றபட்டீஸ் எதுவித முறைப்பாடும் இன்றி அமுக்குவது.

தூயா, மாப்பிள்ளை/கலைஞன்/முரளி ஆகியோரைக் கண்டது மிக்க மகிழ்ச்சி

நன்றி கந்தப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி தூயாவையும், குருஜியையும் கண்டது மிகவும் மகிழ்ச்சி! :D

எனது சின்னம்மா கீரையை அரை மசியலிலும், கூனி இறாலும் போட்டுசமைப்பார்கள் , நல்ல சுவையாய் இருக்கும்! :D

Link to comment
Share on other sites

குருஜி உங்களைக்காண்பதுவும் மகிழ்ச்சி. கீரையினுள் மச்சத்தை கலந்து சமைப்பார்களா? அபச்சாரமாக உள்ளதே!

Link to comment
Share on other sites

குருஜி உங்களைக்காண்பதுவும் மகிழ்ச்சி. கீரையினுள் மச்சத்தை கலந்து சமைப்பார்களா? அபச்சாரமாக உள்ளதே!

ஆம்..கீரையில் இறால். தேங்காய்பூ போட்டு சுண்டுவார்கள்

Link to comment
Share on other sites

தோட்டத்தில் பிடுங்கிய கீரையை, தேசிப்புளியும் விட்டு கீரைக் கடையல் செய்தேன். நன்றாக இருந்தது.

இணைப்பிற்கு நன்றி தூயா.

Link to comment
Share on other sites

  • 3 months later...

தோட்டத்தில் பிடுங்கிய கீரையை, தேசிப்புளியும் விட்டு கீரைக் கடையல் செய்தேன். நன்றாக இருந்தது.

இணைப்பிற்கு நன்றி தூயா.

செய்து பார்த்து, சொன்னதுக்கு மிக்க நன்றி தப்பிலி.. :))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சாப்பாட்டு முறைகளில் ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என எனக்கு ஒரு ஆர்வம் உண்டு.

தமிழ் நாட்டின் தேசிய உணவான இட்லி, தோசை, சாம்பார் ஈழத் தமிழர்களின் தேசிய உணவு அல்ல.

மாறாக, கேரள மலையாளிகளின் பிட்டு, இடியப்பம், தேங்காய்ப் பால் சேர்க்கும் கறிகள் எமது தேசிய உணவு.

சிங்கள பகுதிகளில் கேரள மலையாள அப்பம் மிகவும் பிரசித்தி பெற்ற தேசிய உணவு.

மரக்கறி வகையில் கூட, தமிழ் நாட்டின் தமிழர்கள் எல்லாவற்றினையும் ஒன்றாகப் போட்டு சாம்பார் செய்கையில் நாம் மலையாளிகள் போல் தனித் தனி கறிகள் செய்கின்றோம்.

எவ்வாறு இந்த தொடர்பு வந்தது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.