Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' யெனீவாவில் முதன் முறையாகத் திரையிடப்பட்டது


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' யெனீவாவில் முதன் முறையாகத் திரையிடப்பட்டது

நேற்று மாலை சனல் 4 தொலைக்காட்சியின் 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகத் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற ஆவணத் திரைப்படம் மண்டபம் நிறைந்த பார்வையாளரோடு சர்வதேச மனித உரிமைகள் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது.

'சிறிலங்காவின் கொலைக்களம்' திரைப்படத்தின் பயங்கரத்தை இவ்வுலகு கண்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வி மட்டுமே மனதைக் குடைந்தது. 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' இந்தப் பயங்கரங்களுக்குக் காரணமானவர்களை அடையாளங் காணவும் ஏன் சிறிலங்காவில் போர்க் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடர்கிறது என்பதற்கான விடைகாணவும் முயன்றுள்ளது. நான்கு கற்கைகளை அராய்வதன் மூலம் இவ் ஆவணத் திரைப்படமானது சிறி லங்காவின் அதிபர் மகிந்த இராசபக்ச மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய இராசபக்ச ஆகியோர் உட்பட பல முக்கிய அதிகாரிகள் போர்குற்றங்களை இழைத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்கா சிறி லங்காவிற்கு எதிராக முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் இத் திரைப்படம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற நிலைப்பாட்டையும் ஐ.நா. சபையின் சிறி லங்காவிற்கு ஆதரவான கண்மூடித்தனமான நிலைப்பாட்டையும் அலசியுள்ளது.

முன்னைய விவரணத்திலிருந்து தொடரும் இத் திரைப்படம் பாதுகாப்புப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், பெண் போராளிகள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கைதானவர்கள் திட்டமிட்ட முறையிற் கொல்லப்பட்டமை போன்றவற்றோடு போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக அதிர்ச்சியான பல புதிய ஆராங்களை வெளியிட்டுள்ளது. கண்ணாற் கண்ட சாட்சியங்களின் படி மக்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் இறக்கக் காரணமாகப் பொய்யான தகவல்களை வெளியிட்ட சிறி லங்காவின் அதிகாரிகள் தொடர்பான தகவல்களும் அடங்கியுள்ளன.

மீண்டும் ஒரு கவலைக்குரிய கேள்வியுடன் திரைப்படம் முடிக்கு வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களின் கதறல் செவிடன் காதில் ஊதிய சங்காகிடுமா? காட்சியின் முடிவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இக் கேள்வியானது பார்வையாளரிடையே மீண்டும் மீண்டும் எழுந்தது. சர்வதேச விசாரணை ஒன்றுக்கான குரல் அங்கே ஓங்கி ஒலித்தது.

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' - 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சி எதிர்வரும் 14ஆம் நாள் மார்ச் மாதம் 2012ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் காணத் தவற வேண்டாமெனக் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது. கனடியப் பாராளுமற்ற உறுப்பினர், அதிகாரிகள், ஐ.நா. சபை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இவ் ஆவணத் திரைப்படத்தை எடுத்துச் செல்லக் கனடியத் தமிழர் பேரவை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது.. இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔  காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.    
  • 1) திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.  காதல் கரிநாள் ஆனது  ..... 2) உறவுகள் பறிபோனது.  காதல் வந்தது.  .... 3) நொடி மூச்சு நிலையில்லை.  காதல் நிலையானது.  ... 4) கண்ணால் காதல் வந்தது.  இதயம் நொறுங்கிப்போனது.  ... 5) நித்திரையில் சிரித்தேன்.  திட்டி எழுப்பினார் அம்மா  @ கவிப்புயல் இனியவன் 
  • பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது! . ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது ! பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன ! மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன ! ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன ! சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன ! தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன ! ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன ! இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ? அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் ! அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் ! வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. . சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் ! இது உன் வாழ்க்கை... அதை ஆனந்தமாக வாழ். . . https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1752318084984541 திருவாசகத்தில் ஒரு வாசகம் -39    
  • பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது.  இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 
  • 04) குறட்கூ கவிதைகள் ............ புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது.   குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது.  கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார்.  ....  கவிப்புயல் இனியவன் 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.