Jump to content

விடைபெறக் காத்திருக்கிறேன்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

விடைபெறக் காத்திருக்கிறேன்! - புஷ்பராஜா

pusparaja3rw.jpg

நன்றி: ஆனந்த விகடன்

எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும் இளம்பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புஷ்பராஜா. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தைத் துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவர். இப்போது அரசியல் தஞ்சமடைந்து பிரான்ஸில் வசிக்கிறார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டிதான் என் சொந்த ஊர். எழுபதுகளின் துவக்கத் தில் சிங்களப் பேரினவாதத்தின் அடக்கு முறைகளை எதிர்கொள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை நோக்கித் திரும்பிய காலம். சிங்கள ஆதிக்கத்தை எதிர்க்க அஹிம்சை உதவாது ஆயுதம் தான் உதவும் என்று முடிவெடுத்து அதுவரை நான் இருந்த தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகி தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன் சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.

ஈழ விடுதலையில் ஆயுதப் போராட் டத்தை முதன்முதலாகத் துவக்கி வைத்தது மாணவர் பேரவைதான். பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினராகவும் போராளியாகவும் இருந்தேன். அதே காலகட்டத்தில் ஈரோஸ் டெலோ .என்.டி.எல்.எஃப் தமிழ் புதிய புலிகள் என ஏழெட்டு அமைப்புகள் ஈழத்தில் முளைத்தன.

காக்கைகளுக்கு முன்பே நாங்கள் விழித்தெழுவோம். எமது மக்களின் உண்மையான விடுதலைக்கு எதிரியாக இருந்த சிங்களவர்களைத் தேடி அலை வோம். போர்ப் பயிற்சிக்காக பல்வேறு குழுக்களும் பாலஸ்தீனத்துக்கும் இந்தியாவுக்கும் போயின. எல்லோருக்கும் ஆயுதம் கிடைத்தது. தமிழகத்திலும் வட இந்தியாவிலும் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. வேதாரண்யத்தில் எங்களைக் கொண்டுவிடவும் அழைத்துப்போகவும் படகுப் போக்கு வரத்து குறிப்பிட்ட நாட்களில் இருந்தது. எல்லோரும் ஈழ விடுதலைக்காகப் போராடினோம். எனினும் நாங்களும் மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது.எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. வேறு வேறு குழுக்கள் வேறு வேறு தத்துவங்களைக் கொண்டு இருந்தன. ஆனால் அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்... அது தமிழ் ஈழம் அடைவது!

எண்பதுகளில் தொடங்கி இன்று வரை ஈழத்தில் சகோதர யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 6000 பேர். சுடப்பட்டும் மின்சாரக் கம்பங்களில் தொங்கவிடப் பட்டும் கொலை செய்யப்பட்ட இந்தப் போராளிகளெல்லாம் யார்? சிங்களர்களா? இலங்கை ராணுவத்தினரா? இல்லை சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகத் தங்களின் வீட்டைஇ சொந்தங் களைத் துறந்து ஆயுதம் தரித்தவர்கள்!

ஈழத்துக் கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று...

துரோகி எனத் தீர்த்து

முன்னொரு நாள் சுட்ட வெடி

சுட்டவனைச் சுட்டது

சுடுமாறு ஆணை

இட்டவனைச் சுட்டது

குற்றஞ் சாட்டியவனை

சாட்சி சொன்னவனை

தீர்ப்பு வழங்கியவனைச்

சுட்டது

தீர்ப்பை ஏற்றவனைச்

சுட்டது

சும்மா இருந்தவனையுஞ்

சுட்டது.....

இப்படி ஒரு சூழலில்தான் நானும் கொலை செய்யப்படுவேன் என்று பயந்தேன். ஒன்று என் எதிரிகளால். இன்னொன்று ஆயுதம் தரித்த என் நண்பர்களால். இது கொலைகாரங்க பூமி ஆயிடுச்சு. நாம இனிமே இங்கே இருக்க வேண்டாம். வேற எங்காவது போயிடலாம் என்று என் காதலி சொன்னாங்க. அதற்கு அடுத்த நாள் அதாவது 82ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டோம். என் உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர். அழகான கூடு மாதிரி இருந்தது வீடு. அந்தக் கூட்டை நானேதான் கலைத்துவிட்டு என் மனைவியோடு பிரான்ஸக்கு வந்தேன். இதோ 24 ஆண்டுகளாகிவிட்டன.

உலகத்தின் எந்த மூலையில் சுற்றி அலைந் தாலும் தாயகக் கனவு என்னை அலைக் கழித்துக்கொண்டேதான் இருந்தது. தேவைக்கு அதிகமாகக் காசிருந்தால் குடிப்பேன். போதை நிறைய விஷயங்களை மனந்திறந்து பேசவும் கூடிக் கதைக்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. கிடைக்கிற வேலையெல்லாம் செய்தோம். ஈழத்தின் சாதீய சமூகம் எந்தெந்தத் தொழிலை எல்லாம் செய்யக் கூடாத தொழிலாக விலக்கி வைத்ததோ அதையெல்லாம் செய்தோம்.

தாய் மண்ணைத் தொலைத்து புதிய சூழலில் புதிய உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டோம். என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை இப்படித்தான் அந்நிய மண்ணில் கழிக்க நேர்ந்தது என்று உலர்ந்த உதட்டை ஈரப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசுகிறார் புஷ்பராஜா.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று எனக்குக் கடுமையான வயிற்று வலி. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு நாள் கழித்து மீண்டும் மிகக் கடுமை யான வலி வயிற்றைப் பிடுங்கி எடுக்க பிரான்ஸில் உள்ள மருத்துவமனைக்குப் போனேன். டாக்டர் என்னைச் சோதித்துவிட்டு உங்களுக்கு வேண்டியவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்று கேட்டார். எனக்கு என் நிலைமை புரிந்துவிட்டது. பின்பு உங்கள் கல்லீரல் புற்றுநோயால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார். என் மனைவியும் குழந்தைகளும் கதறி அழுதார்கள். என் முப்பத்தைந்து வயதில் என் அம்மாவும் அப்பாவும் இறந்தபோதுகூட நான் என் தாய் நாட்டுக்குப் போனது கிடையாது. போக வேண்டும் என்ற எண்ணம்கூட வந்தது கிடையாது. மயிலிட்டி இப்போது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் எண்ணம் முழுக்க வேறொன்றில் இருந்தது.

ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்று நூலை எழுதும் முயற்சி அது. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற நூலை எழுதியிருக் கிறேன். அடுத்ததாக இன்னும் இரண்டு நூல்களை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஒன்று ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. இன்னொன்று சிங்கள ஆட்சியாளர்கள் காலங்காலமாகத் தமிழர்களின் உரிமை களை எப்படியெல்லாம் காலில் போட்டு மிதித்தார்கள்... தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் எப்படி சிங்கள ஆட்சிக்குத் துணை போனார்கள் என்பதை எழுத ஆசைப்பட்டேன். அதற்குக் குறைந்த பட்சம் இன்னும் எட்டு மாதங்களாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்.

இங்கேஇ சென்னையில் ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் போல் கேன்சர் நோயாளிகள் நிறைய பேரைப் பார்த்தேன். சின்ன குழந்தைகள் இளம்பெண்கள் என ஏராளமானோர் வெளியில் தங்களுக்கான தீர்ப்பைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்தார்கள். அங்கிருந்த சிலரிடம் பேசியபோது நான் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.

நான் மருத்துவரீதியாக இப்போது சில முயற்சிகளை எடுத்திருக்கிறேன். அது வெற்றி பெறுமாஇ தோல்வியுறுமா... தெரியவில்லை. நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. என் வீட்டார் கடவுளை நம்புகிறார்கள். இதுதான் உலகம் இப்படித்தான் வாழ்க்கை என்று விவரம் தெரியத் துவங்கிய காலத்தி லிருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பெரியாரிஸ்ட்!

தேதியை நிச்சயித்தபடி வரும் மரணத்தில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு துரிதமாக முடிக்கலாம். எழுத விரும்புவதை எழுதலாம். சந்திக்க விரும்பும் நண்பர்களைச் சந்தித்து அளவளாவி மகிழலாம். ஆனால் என்ன ஒன்று... இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கப் போகிறோம் என்பதால் ஆசை கட்டுக்கடங்காமல் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை ஆசைகளும் இவ்வளவு நாள் எங்கே இருந்தன என்று தெரியவில்லை. இறுதித் தேர்வை எழுதும் மாணவன் போல் என்னை உணர்கிறேன்.

எழுதலாம் என்று அமர்ந்தால் சோர்வாக இருக்கிறது. ஆனாலும் நான் விடாப்பிடியாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கை ஊக்கம் தருகிறதென்றால் மருந்துகள் வாட்டி வதைக்கின்றன. நோயாளியாக இருக்கிறோம் என்கிற உணர்வே ஒரு படபடப்பை ஏற்படுத்துகிறது. எனக்கு ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி நடந்திருக்கிறது. இப்போது மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதற்கு என் உடம்பு ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை.

ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரைஇ இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு ஆக்ரமிக்க முயலும். எப்போதும் அந்நிய சக்திகளைவிட ஈழப் பிரச்னையில் இந்தியா நேர்மையுடனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தலையிடுவதைத்தான் போராளிகள் விரும்புவார்கள். என் விருப்பமும் அதுதான்! என்கிறார் புஷ்பராஜா.

கடைசியாக புஷ்பராஜாவுக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முயற்சியையும் அவர் உடம்பு தாங்காது என்பதால் மருத்துவர்கள் கைவிட்டு அவரது கடைசி நாட்களை சொந்த மண்ணிலேயே சென்று கழிக்கும்படி சொல்லிவிட்டார்கள்.

எனக்கேது சொந்த மண்? நான் எங்கே செல்ல முடியும்? நாளை அமையவிருக்கும் தமிழ் ஈழத்தைக் காண நான் உயிரோடிருக்க மாட்டேன். நான் பிறந்த மண்ணே... நான் வாழ முடியாத மண்ணே... ஒரே ஒரு கேள்வி உன்னிடம்... வெடி மருந்து வீச்சமில்லாத உன் தெருக்களில் எம் பிள்ளைகள் நடக்கின்ற நாள் என்று வரும் எம் மண்ணே?

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • Replies 173
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

திரு.புஸ்பராஜா அவர்கள் மார்ச் மாதம் 10ம் நாள் பிரான்ஸ் நாட்டில் காலமானார்......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவர் மறைவு குறித்து எனக்கு கிடைத்த செய்திகளை இங்கே காணவும்:-

http://ajeevan.blogspot.com/2006/03/blog-post_11.html

http://ajeevan.blogspot.com/2006/03/blog-post_02.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் மனுசன் செ கடைசி நெரத்திலை போகேக்கை தான் இவரக்கும் புத்தி வந்திருக்கு தமிழீழத்தை காண ஏலாது எண்டு கவலை பட்டிருக்கிறார் இதுக்கு மதல் புலியளையும் அவையின்ரை போராட்டத்தையும் கொச்சை படுத்தியவையளிலை இவரும் ஒருதர் இவருக்கு பிறகாவது இவரின்ரை சகாக்களிற்கு புத்தி வருமா? எண்டா வரவே வராது அது சரி வாணம்பொடி அவர் இந்தியாவிலை இறந்ததா கேள்வி பட்டன் நிர் பிரான்சிலை எண்டு எழுதியிருக்கிறீர் வழைமைபோல ஒண்டும் விழங்கேல்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

காலஞ் சென்ற புஸ்பராஜா

தனது புத்தகத்தை மறு பிரசுரம் செய்யவும்

அதில் சில மாற்றங்களை செய்யவும் இறுதி காலத்தில்

சென்னை வருவதாக நான் சென்னையில் இருந்த போது

என் இந்திய நண்பர் சொன்னார்.

அதன் பின்னர் அவரை பேட்டி கண்டு எழுதியவர்

நண்பர் டி.அருள்எழிலன்.

http://ajeevan.blogspot.com/2006/03/blog-post_02.html

காலஞ் சென்ற புஸ்பராஜா தனது பணியை முடித்தாரோ இல்லையோ

சென்னையை விட்டு பிரான்ஸ் வந்த பின்னரே காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு பிரான்ஸில் 2006.03.14 திகதி நடைபெற்றது.

அது பற்றி எனக்கு கிடைத்த மின் அஞ்சல் இதோ:-

Dear friends

With deep sorrow, I inform you that Mr. Sithampari Pushparajah, one of the founders of Eelam Struggle, the author of "My witness on Eelam fight", a Tamil writer in Exil and an active member of "Literary meeting " suffered liver cancer for months and passed away on the morning of 10 March at 9:30

a.m in a hospital near to his home in Paris. He was fifty-four years of age, and had lived in Paris with his wife Meera and his Children, Geethanjaly, Vithuran,Thuronan, and Veeshman. His writings in exile were always against the tyranny of cast system in Tamil community, social unjustice and all forms of violence. After the assasination of Mr. Sabalingam, Pushparajah formed the circle of Sabalingam's friends and published a compilation "Thottuththaan povomaa". We express our sincere sympathies to his family members and friends. The Departure of Mr. Si.Pushparajah is a great lost for us and his contributions must be remained.

The funeral will be held on Tuesday, 14 March 2006 in between 12:30 - 14:45.

Cimetiere Intercommunal Les Joncherolles

95 rue Marcel Sembat

93430 VILLETANEUSE.

Link to post
Share on other sites

அன்னாருக்கு அஞ்சலி சொல்லும் அளவிற்கு மனது வரவில்லை. வெறுமனே போராட்டத்தில் இத்தனை வீரர்களை இழந்த போதும் தற்புகழ்ச்சிக்காக தன் பெயரைப் பெருமை தேடுவதிலும், ஈபிஆர்எல்எவ்வில் தனது பங்கை புலப்படுத்டுத்துவதிலேயும் தான் காலத்தை செலவழித்தார் என்பதை மறுக்க முடியாது.

இவர் இதற்கு முதலும் இந்திய ஏடு ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதிலே தமிழீழம் அடைவது சாத்தியமே இல்லை என்றும், அது இந்தியாவுடன் முரண்பட்டமையால் முடியாது என்றும் முள்ளந்தண்டில்லாத வாத்தை வைத்ததைப் படித்திருந்தேன். அதை விட ஈழப்போராட்டத்தில் 24 வருடம் ஒதுங்கியிருந்து விட்டு, இடையிடையே ஈபிஆர்எவ்காரர்களுடன் முகத்தை காட்டி தானும் ஒரு விடுதலைப் போராளி என்று அவர்களின் அமைப்பு பாணியில் அறிக்கை விடும் இலாவம் சிறப்பானது.

எது என்னவோ கடைசியில் விடுதலைப்புலிகளால் மட்டும் தான் சுதந்திர தமிழீழத்தை காணமுடியும் என்று மறைந்தது சுயநலமற்ற கடைசி அறிக்கை எனலாம்!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் சொன்ன கருத்துக்கு நான் உடன்படுகிறேன். என்னாலும் அஞ்சலி செய்யமுடியவில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மறைந்த ஒரு மனிதனை விமர்சனம் செய்வது அநாகரிகம்- என்றாலும் - அவர் வாழ்ந்த காலத்தில் - ஒரு இனத்தையே குழிதோண்டி புதைக்கும் - நடவடிக்கைகளுக்கு -பங்களித்தார் அல்லது துணைபோனார் - என்று இருந்து இருந்தால்- என்ன சொல்ல?

இருந்தாலும் அன்னாரின் கருத்துக்களில் இருந்து:

எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும் இளம்பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை.

இன்றும் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது-அன்னாரே !

நாங்களும் மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது.எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. வேறு வேறு குழுக்கள் வேறு வேறு தத்துவங்களைக் கொண்டு இருந்தன. ஆனால் அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்... அது தமிழ் ஈழம் அடைவது!

இந்த அடிப்படை கொள்கையை - கூறுபோட்டு -நாசமாக்கி---

ஆரம்ப காலத்திலயே ஆயுதம் ஏந்தி தெளிவான சிந்தனை கொண்ட உங்களை - கோமாளி ஆக்கினது யார்?

அன்னாரின் பேட்டி வெளியான அதே - இந்தியமண்ணின் அரசு- என்று நான் நினைக்கிறேன் - சரியோ - தெரியல!

வீட்டை கொழுத்தியவன்கிட்டயே- நெருப்பை அணைக்க வழி கேட்கிறீங்க - இது - மறைந்தவர் பற்றிய கருத்தல்ல- அவர் கருத்தை இன்னும் கொண்டிருப்பவர்களிடம்!

"ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரைஇ இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள்.""

இதை எப்போது எழுதினீர்கள்?& சொன்னீர்கள்?

வேதனையாய் இருக்கிறது - உங்க முடிவு தெரிந்த ஒரு பொழுதில்தானே?

முடிவு சரியா தெரியாத நாளிலெல்லாம்- புலியெதிர்ப்பு செய்து- எத்தனை ஆயிரம் தமிழர்களை - சுடுகாட்டுக்கு அனுப்ப துணை போயிருப்பீர்கள் - நீங்களூம் உங்கள் சகாக்களும் என்று நினைத்தால்............

விடுவோம்- முகத்தில் கோடாரி இறக்கிட்டு போனாலும்- மன்னிக்கிறோம் - மௌன அஞ்சலி! 8)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி வாணம்பொடி அவர் இந்தியாவிலை இறந்ததா கேள்வி பட்டன்

அ"றோ"கரா....

அய்யோ பாவம் மீண்டும் ஒருதர் இந்தியாவில் இறப்பா???? சாக வேறை இடமில்லாமல் .... :wink:

அது கிடக்க உவர், "வீரமக்களிலா, தியாகிகளிலா" சேர்க்கப்படுவார்????? :roll:

உவருக்கு நான் அஞ்சலி செய்ய வெளிக்கிட்டால் .... நாளைக்கு "உண்டியலான், தூள்கிங், ...." போன்ற எல்லோருக்குமெல்லா கட்டிப் பிடித்து அழுது கொண்டு திரிய வேணும்???? :x

ஆனால், உலக ஜனநாயகவாதிகளில் ஒருவனாக .. ஒரு நிமிடம்!!! :cry: .... உலக ஜனத்தொகையில் ஒன்று குறைந்ததற்காக .. :idea:

Link to post
Share on other sites

01.05.2005இல் குமுதம் இதழுக்காக புஸ்பராஜாவின் நேர்காணல்

ஜஉழடழசசிறீடிசழறஸெஜளணைநசிறீ18

Link to post
Share on other sites

தீராநதி: இலங்கைக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அது முடியுமா?

சி.புஷ்பராஜா: நான் பிறந்து வளர்ந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே இருக்கிறது. ஆனால் எங்கள் கிராமம் சிங்கள ராணுவத்தினரால் அதிபாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை இப்போதைக்குப் பார்க்க முடியாது. இலங்கையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் நான் கள்ளு குடித்ததில்லை. உலகத்திலேயே மிகச் சுவையான கள்ளுஇ யாழ்ப்பாணத்துக் கள்ளுதான். அதை நான் இழந்துவிட்டேன். அது பெரிய இழப்புதான். பனைமரத்தின் கீழே உட்கார்ந்து கள்ளைக் குடிக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவாவது ஒருமுறை யாழ்ப்பாணம் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் இலங்கையில் என்னுடைய பாதுகாப்பு தொடர்பாக எனக்கு அச்சங்கள் இருக்கிறது. அந்த அச்சம் தவறானதாகக் கூட இருக்கலாம். என்றாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் இலங்கைக்கு நான் போவதென்பது முட்டாள்தனமான முடிவாகத்தான் இருக்கும். ஏனெனில் போராளிகளின் கோபத்தை நான் சம்பாதித்துவிட்டேன். இலங்கை அரசின் எதிர்ப்பும் ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கிறது. இரண்டு தரப்பினரிடமும் மண்டியிட்டு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்கவும் நான் தயாராக இல்ல. நான் தவறு செய்துவிட்டதாகவும் நான் கருதவில்லை.

ஆனால்இ அப்படியே சென்றாலும் அங்கே சென்று தங்கி வாழ்வதென்பது சாத்தியமில்லை. எனக்கு மட்டுமல்லஇ புகலிடத்தில் இருக்கும் அனேகம் பேருக்கு மீண்டும் போய் இலங்கையில் வாழ்வது என்பது சாத்தியமற்றது என்பதுதான் என் முடிவு. போராட்டம் முடிவுக்கு வந்தாலும் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் திரும்பி இலங்கைக்கு போகமாட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இலங்கைக்குத் திரும்பிப்போய் அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையைவிடஇ வெளிநாடுகளில் அவர்கள் சௌகர்யமாக வாழ்கிறார்கள். நான் சொல்வதை யாராவது மறுப்பார்கள் எனில் அதனை வறட்டுவாதம் என்றுதான் நான் சொல்வேன். இங்கே சம்பாதிக்கும் பணத்தைச் போராட்டத்துக்காகஇ செலவழிப்பார்கள். அங்கேயிருந்து பொருள்களை வரவழைத்துச் சாப்பிடுவார்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கை போய் இங்கே சம்பாதித்த பணத்தை செலவழித்து பந்தா காண்பித்துவிட்டுத் திரும்புவார்கள். ஆனால் அங்கே நிரந்தரமாகத் தங்கி வாழ நிச்சயம் விரும்பமாட்டார்கள்.

தீராநதி: நீங்கள் ஆயுதம் தாங்கிய ஒரு போராளியாகத் தொடங்கிஇ ஒரு அகதியாக இன்று வாழ்ந்து வருகிறீர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

சி. புஷ்பராஜா: உரிமைப் போராட்டமாக இருந்த எமது போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக மாற்றிஇ தலைமையை இளைஞர்களின் கைகளில் எடுத்த முன்னோடிகளில் நானும் ஒருவன். இரண்டு இளைஞர்கள் இயக்கத்துக்குத் தலைமை தாங்கியுள்ளேன். இலங்கையின் ஒருமுனையில் இருந்து மறுமுனைவரை குறுக்கவும் நெடுக்கவும் அலைந்து இளைஞர்களை ஒன்று திரட்டி பின்னால் வந்த இயக்கங்களுக்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளேன். இதுகுறித்த நிறைவு எனக்கு உண்டு. ஆனால் எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் போகிறோம் எனப் புறப்பட்டோமோ அந்த மக்களை இழப்பதுக்கு எதுவுமற்றும்இ தப்புவதுக்கு வழியுமற்றும்இ தவம்புரியும் ஊமை மக்களாகப் பரிதவிக்க விட்டுவிட்டு தப்பியோடி வந்துவிட்டேன் என்ற குற்றவுணர்வினால் தினமும் நான் வேதனைப்படுகிறேன். ஆனால் என்னால் என்னதான் செய்யமுடியும்? எனது நிலைஇ கைகளைப் பிசைந்து கொண்டிருக்கும் நிலையே.

சந்திப்பு : தளவாய் சுந்தரம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு எனது அஞ்சலிகள்......

அவரது ஈழப்போராட்டத்திpல் எனது சாட்சியம் என்ற புத்தகத்தை ஒரு தரம் புரட்ட வாய்ப்பு ஏற்பட்டது. புலிகளுக்கு முன் என்ன நடந்தது என அறிய அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் அது.

யாராக இருந்தாலும் இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது எமது மரபு. ஆகவே அவரைக்கேவலப்படுத்தி கருத்து எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.

Link to post
Share on other sites

யாராக இருந்தாலும் இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது எமது மரபு. ஆகவே அவரைக்கேவலப்படுத்தி கருத்து எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.

அமரர் ஆகிவிட்டால் அத்தனையும் மறைந்து போகும் என்று அர்த்தமில்லை. செய்த அத்தனையும் அழிவதில்லை.

உங்கள் கருத்துப்படி மரியாதை கொடுப்பது என்றால் பேச்சுக்கு ஹட்லருக்கும் இடிஅமீனுக்கும் எல்லோரும் வருடாவருடம் விழா எடுக்கினம் தானே!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என் உறவுகளோடு மனம் விட்டுப் பேசலாமா?

எனக்குள்ளேயே எழும் கேள்விகள் ஆயிரம் ஆயிரம்.............

வந்த பாதைகள் மறந்திருக்கும்

தாய் கொடுத்த பால் கூட சுவை மாறியிருக்கும்

மனதில் நினைவுகளாய் கூட இருக்காது

காரணம் நாம் குழந்தைகளாய் இருந்தோம்.

மனதில் நினைவுகளாய் நின்றவை

நாம் வளர்ந்த பின்னர் பார்த்தவை - கேட்டவை - அனுபவித்தவை......................

இறந்து போன ஒருவரைப் பற்றி

விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்படிச் சொல்வதால் என்னை வெறுக்கலாம்..............

இருந்தாலும் உண்மையை ஒரு நாள் நேசித்தே ஆக வேண்டும்.

அது மானிட நியதி................

புஸ்பராஜனின் புத்தகம் உண்மையில் பலர் படிக்க வேண்டிய ஒன்று...........

அதில் எத்தனையோ குறைகள் இருந்தாலும்

பலர் எண்ணத் துணியாத ஒன்றை செய்திருக்கிறார்.

அவர் தனது நேர்காணலில்:

"பிரபாகரனைப் பொறுத்தவரை எத்தனையோ சோதனைகளை, மனிதர்களை, களங்களைச் சந்தித்தவர். அவர் எழுத நிறைய இருக்கிறது." என்றும் குறிப்பிடுகிறார்.

இது முற்று முழுதான உண்மை.

அவர் தன்னைப் பற்றி சொல்கிறார்.

தன் வாழ் நாளில் சந்தித்த கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்கிறார்.

இதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

ஆரம்ப கால போராளிகளின் கனவு தமிழீழம் ஒன்றை அடைவது .

சிங்கள அரசுக்கு எதிராகப் போராடுவது

இவையே குறிக் கோளாக இருந்தது.

அது காலப்போக்கில் குழுவிசமாகி திசை மாறியது.

ஒரு துணியை வாங்க நாம் எத்தனையோ

கடைகளுக்கு ஏறி இறங்கி

விலை - தரம் இப்படி எத்தனையோ விடயங்களை அறிந்தே வாங்குகிறோம்.

ஆனால்

அன்று இயக்களில் இணைந்த எவருமே

யாரோடு போகிறோம்

என்ன செய்யப் போகிறோம் என்ற

எந்த ஒரு தேடலும் இல்லாமல்

சிங்கள போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு எதிராக போராட

சென்றார்களே ஒழிய

இவர்களது தலைவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? தொடர்ந்து நிற்பார்களா? என்ற எதுவித

கேள்வியோ பார்வையோ இல்லாமல்

உணர்ச்சி மேலீட்டால் இணைந்தவர்கள்தான்............அதிகம்.

யாருக்கும் எந்த இயக்கத்துக்கு போகிறோம் என்பது கூட

போய் சேரும் வரை தெரியாமல் இருந்ததை விபரம் தெரிந்தவர்கள் கதை கதையாய் சொல்வார்கள்.

ஒன்றாய் வெளியேறிய நண்பர்களும் சரி கூடவே பிறந்த சகோதரர்களும் சரி

ஆள் மாறி இடம் மாறி

வேறு வேறு இயக்கங்களுக்குப் போய்

இறுதியில் கூடப் பிறந்த சகோதரனையே கொன்ற நிகழ்வுகளும் இங்கே நடைபெறாமல் இல்லை.

நாம் கூட வெளிநாடு போவதென்ற முடிவோடு மட்டும்தான்

நாட்டை விட்டு வெளியேறினோம்.

நாம் வந்த நாடுகள் நாம் நினைத்த விதத்திலான நாடுகள் இல்லை.

வந்து விழுந்த பின்னர் இங்கே வீழ்ந்து கிடக்கிறோம்.

இப்படித்தான் அன்றைய போராட்டத்துக்காக சென்ற அனைவரும்..................

இதில் மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

இன்றைய நிலை வேறு.............

இன்று யார் பலமானவர்கள்

தொடர்ந்து போராடப் போறவர்கள் என்று

சிறு குழந்தையைக் கேட்டால் கூட சொல்லும்.

எதிரிகள் கூட என்ன

உலகமே விடுதலைப் புலிகளோடுதான்

பேசவேண்டும் என்ற நிலை.................

நமது போராட்டம் யாருக்காக?

நமது இனத்துக்காக என்றால்

நமது இனத்தின் ஒருவன் நமக்கு எதிரியானாலும்

அவனது இறப்பில் அவனை மதிப்பது நமது கடமை...........

இது ஒரு பாரம்பரிய முறை.........

எதிர் கருத்து கொண்ட ஒருவர் கூட

நம்மை ஏற்றுக் கொள்வதற்கு அது நிச்சயம் வழி வகுக்கும்.

நாமே நமது இனத்தின் நம்பிக்கையை பெறுவதை விட்டு விட்டு

நம் மேல் அச்சம் ஏற்பட வழி வகுக்க வைப்பது பொது எதிரிக்குத்தான் பலத்தை கொடுக்கும்.

இன்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்பவர்கள்

மனம் மாறியிருந்தாலும்

மேல் கூறும் அச்சங்களே

விலகி நிற்பதற்கு வித்திட்டுள்ளது.

இவை அகன்று நமது இனம் ஒன்று பட வேண்டும்.

அன்று உலகத் தமிழினத்தின் முரசம் உலகெங்கும் பறையாய் முழங்கும்.

அன்புடன்

அஜீவன்

அவர் பற்றிய குறிப்பொன்று:-

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான திரு புஸ்பராசா அவர்கள் பிரான்ஸ் நாட்டில் காலமானார்

Pushparajah1.jpg

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான திரு புஸ்பராசா அவர்கள் (54) இலங்கை வடமாகாணத்தின் கடலோரக் கிராமமான மயிலிட்டியில் பிறந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியில் 1969 ம் ஆண்டு இணைந்து ஈழமக்களின் அரசியலில் பிரவேசித்த அவர், பின்னர் தமிழ் மாணவர் பேரவையின் தீவிர செயற்பாட்டாளராகவும் இயங்கினார். தமிழ் பேசும் மக்களின் அரசியல் விடுதலை முன்னெடுப்புக்களில் தீவிர அக்கறையும் பெரும் தாக்கத்தையும் உருவாக்கி ஆயதம் தாங்கிய போராட்டத்திற்கு வழிவகுத்து தமிழ் இளைஞர் பேரவையை ஆரம்பித்த இவர் அதன் முதலாவது தலைவராகவும் செயலாற்றினார். ஈழத்து மிதவாத அரசியல் தலைமையை நிராகரித்து தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினையில் தீவிரவாதத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபர்களில் ஒருவரும் அதன் செயலாளராகவும் விளங்கினார்;

1974-1980 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் சிறைக்கூடங்களான யாழ் சிறைச்சாலை, கொழும்பு வெலிக்கடை ஆகியவற்றிலும் மற்றும் பனாகொடை ராணுவத் தடுப்பு முகாமிலும் பல வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார் இடது சாரிக் கருத்துக்களில் மிக்க ஈடுபாடும் அக்கறையும்கொண்ட இவர் பிரான்ஸ் நாட்டில் அரசியல் அந்தஸ்துப்பெற்று அகதியாக வாழ்ந்த போதும் இலக்கிய செயற்பாடுகளோடு இறுதி வாழ்க்கை வரை தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறந்து போன ஒருவரைப் பற்றி

விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் உங்கள் கருத்துகள் ஏற்று கொள்ளகூடியதுதான் அது ஒரு பொது வான பெருந்தன்மையுடைய கருத்துகள் ஆனால் எல்லாருமே இறந்து ஒரு நாள் இறந்து போகிறவர்தான. ஒருவர இறந்த பின்னர் மற்றையவர்கள் அட பாவம் நல்ல மனிசன் இறந்து விட்டார் எண்று சொல்ல கூடிய செயல்களை அவரது வாழ் காலத்தில் செய்திருந்தால் அவர் இறப்பிலும் ஒர் அர்த்தம் இருக்கும் அதை விட்டு அட பாவி மனிசன் ஒரு மாதிரி போட்டான் என்று கூறு மளவிற்கு அவர் வாழ் நாளில் நடந்திருந்தால் அது அவர் இறப்பு பலருக்கு நிம்மதியை தருகின்றது என்பதே. இறந்து போவோம் என்று தெரியாமலா இவர்கள் இருக்கிற காலத்தில் இத்தனை கூத்துகள் அடித்தனர். அதை விட இந்த புஸ்பராசாவை நான் நன்குஅறிந்தவன் என்கிற முறையில்தான் எனது கருத்துகளை சொன்னேன். அதே போல இறப்பு என்பது எல்லா மனிதனையும் புனிதனாக்கி விடாது.மற்றையது அஜீவன் நீங்கள் கூறியது போல ஆயுத போராட்ட ஆரம்பத்தில்: பல இளைஞர்களும் ஒரு வேகத்தில் தாங்கள் எந்த இயக்கத்திற்கு போகிறோம் யார் அதன் தலைவர் எப்படியானவர்அவர்கள் கொள்கைகள் என்ன என்று அதிகம் தெரியாமல் தான் போனார்கள் அது உண்மை ஆனால் காலப்போக்கில் உண்மையாக போராடுகிற இயக்கம் எது யார் உண்மையான தலைவன் எண்று அதை உணர்ந்து பலரும் சரியான தலைமையின் கீழ் அணி சேர்ந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் காரணம் ஒரு வேற்று நாட்டு காரனுக்கு கட்டாயம் விழங்க படுத்த வேண்டும் ஆனால் போராட்டகாலத்துடன் வாழ்ந்தஒரு தமிழனுக்கு இதையெல்லாம் இனி தனி தனியாக விழங்க படுத்த வேண்டிய அவசியம் இல்லையெண்று நினைக்கிறேன் அப்படி பலரும் சரியான பாதையில் இணைந்த போதும் இவர் போன்ற சிலர் தங்கள் வீம்பிற்கு வெளியே நின்று எம்மை நோக்கி சேறு வீசியவர்கள். அவற்றையெல்லாம் பாத்தும் அனுபவித்தர்களுள் நானும் ஒருவன். மற்றது தனிப்பட பிரபாகரனை பற்றி ஒரு சில வரிகள் தனது புத்தகத்தில் நல்லபடியாக எழுதியுள்ளார் உண்மைதான். அதே போல இந்திய படை காலத்தில் முதல் யாழ் படைத்தளபதியாக இருந்த ஹரிகீத் சிங்கும் ஏன் டிக்சித்தும் தான் தாங்கள் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீரத்தையும் கொள்கையையும் பாராட்டி எழுதியிருக்கின்றனர் அதற் காக அவர்கள் செய்தது எல்லாம் சரியெனறாகி விடுமா???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நீ சரியாய்த்தான் சொன்னாய். மாமனிதர் தராகி கூட ஆரம்பத்தில் புளட் இயக்கத்தில் இருந்தவர்தானே. பிறகு உண்மையான தலைவன் யார் என்று அறிந்து, அப்போராட்டத்திற்கு ஆதரவினை அளித்தார் என்று எல்லோருக்கும் தெரியும்.

புஸ்பராஜா வேணுமென்றே எமது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தினவர். அதனால் தான் என்னாலும் மனதாலும் அனுதாபங்கள் செலுத்த முடியவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறந்த ஒருவரைப்பற்றி விமர்சனம் செய்வது என்பது உடன்பாடில்லாத விடம் ஒன்று. ஆயினும் மேலே தரப்பட்ட நேர்காணலின் மூலம் தமிழீழ போராட்டம் சிதைக்கப்பட்டதாகவும் அது விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டதாகவும் இன்றைய போராட்டம் தேவையில்லாத ஒன்றாகவும் இந்தியா செய்ததை சரியென ஆமோதிப்பது போன்றும் கருத்துக்கள் வந்துள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை அறிய வைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. அதுபற்றிய கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்ளலாமே. ஏனெனில் இவை பதியப்பட்டவை. அவை உண்மை இல்லையாயின் அதை மறுக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. இன்றும் டென்சில் கொப்பே கடவா, ஜே. ஆர். ஜெயவர்த்தனா போன்ற சிங்களத் தலைமைகளைப் பற்றி நாம் விமர்சிக்கிறோம். காரணம் ஒன்றே ஒன்றிற்காக :idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியானவர்கள் பற்றி தெரிந்தவர்கள் எழுதலாமே இதனால் எமது இளைய தலைமுறையில் பழைய போராட்ட வரலாறு தெரியாதவை அறிந்து கொள்ளுவினம் தானே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் புஷ்பராஜாவின் இறுதிக் கிரியை புலம்பெயர்ந்த தமிழர்கள் அஞ்சலி!

pus.jpg

பாரிஸிலிருந்து ஜி.நல்லரெத்தினம்

பிரான்ஸில் கடந்த 10.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று புற்றுநோய் காரணமாக மரணமான சி.புஸ்பராஜாவினுடைய இறுதிக் கிரியைகள் கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸின் புறநகர்ப் பகுதியான வில்தனஸ் மயானத்தில் நடைபெற்றது. இவ்விறுதி வழியனுப்பும் நிகழ்வில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருந்திரளான அரசியல், கலை, இலக்கியம், சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

இறுதி அஞ்சலி நிகழ்வு கோவை நந்தன் தலைமை தாங்கி நடத்தினார். அவரது உரையில், எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்துள்ள சி.புஸ்பராஜாவை ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்றும் தனது நெருங்கிய நண்பனாகவும் இருந்தார் என்றும் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் சிறை, சித்திரவதை எனப் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவன் சி.புஸ்பராஜா என அவரது உரை அமைந்திருந்தது.

அடுத்து இடது சாரி சிந்தனையாளரான தேவதாஸ் தனதுரையில் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின்பாலும் பின்னர் தேசிய மாணவர் பேரவையின் பாலும் இருந்த புஷ்பராஜா பிற்பட்ட இறுதிக்காலங்களில் இடது சாரிக் கொள்கையுள்ள ஒரு சிந்தனையாளராகவே தன்னைப் பல இடங்களிலும் அறிமுகப்படுத்திக் கொண்டார் என்றும் கூறினார்.

அதன் பின்னர் அரியநாயகம் மாஸ்ரர் தனதும் புஸ்பராஜாவினுடைய அரசியல் பின்னணி அவர்களுடைய தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் பட்ட வேதனைகளை விபரமாக எடுத்துரைத்தார். பின்னர் ஜேர்மனியிலே இருந்து வந்த இலக்கிய விமர்சகர் யசீந்திரன் நீண்ட நேரம் உரையாற்றினார். சிங்கள தேசத்திலிருந்து விடுபடுவதற்காக அகிம்சைப் போராட்டம் பயனளிக்காது. இனி ஆயுதம் ஏந்தியே போராட வேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் புஸ்பராஜா சிவகுமாரன், சத்தியசீலன் போன்றவர்களாலேயே ஆயுதப் போராட்டம் பரிநாம வளர்ச்சி பெற்றதாகக் கூறியதோடு அவரது ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற சர்ச்சைக்குரிய நூல் சம்பந்தமாகவும் இலக்கிய சந்திப்புகளில் சி.புஸ்பராஜாவின் பங்கு எவ்வாறு இருந்தது என்பது பறறியும் எடுத்து கூறினார்.

போராட்டத்தில் புஸ்பராஜாவின் குடும்பமே பெண்களையும் போராட்டத்தின் பால் முதல் முதல் ஈடுபடுத்தியது என்ற வகையில் பெண்கள் அமைப்பு சார்பாக ஜெயா பத்தநாதன் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார்.

உயிர் நிழல் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான லக்ஷ்மி அவர்களும் இலக்கிய நண்பராக அறிமுகமாகிய புஸ்பராஜா பற்றிப் பேசினார். பின்னர், அவர் வகித்த அமைப்பின் சார்பில் (EPRLF)இன் இருவர் தமது கருத்துகளை முன்வைத்தார்கள். பின்னர், சுவிற்சர்லாந்திலிருந்து கலந்து கொண்ட மூர்த்தி மாஸ்டர் தமதுரையில் ஆளுமை மிக்க துணிச்சலான நண்பனை இழந்திருப்பதாக கூறினார். இறுதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் துணைவியார் திருமதி மங்கையர்க்கரசி கண்ணீர் மல்கியபடி தனது பேச்சை தொடர்ந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.புஸ்பராஜா மரணம் தமக்கு நெருங்கி விட்டது என்பதை அறிந்து தமிழர்கள் இனியாவது ஒற்றுமையாகி ஈழம் என்ற கனவை நனவாக்குங்கள் என இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் எழுதிய வாசகம் அவர் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ப எப்படி பற்றுறுதி கொண்டுள்ளார் என்பதை எடுத்துகாட்டியது. அத்துடன், நின்றுவிடாது தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழீழத்தை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளிடமே உள்ளது என்றும் என்றோ ஓர் நாள் தமிழ் ஈழம் மலரும் என்றும் நான் விடைபெறுகின்றேன் என கடந்த வாரத்திற்கு முதல் வாரம் இந்திய சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.thinakural.com/New%20web%20site.../Article-11.htm

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ண சொன்ன பலவற்றில் எனக்கு உடன் பாடு இருந்தாலும், புஸ்பராசா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நான் நினைக்கவில்லை.ஏனெனில் அவர் வரலாறு என தனது விருப்பு ,வெறுப்புக்களை சேர்த்து எழுதிய புத்தகம்,சில இந்தியப் பதிரிககளால் அரசியல் நோக்கங்க்களுக்காக வரலாறு ஆக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டு.குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படையுடன்,இபிர்லேf இயங்கிய காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள்,படுகொலைகள் முற்று முழுதாக இவரது புத்தகத்தில் மறைக்கப் பட்டுள்ளன.ஆகவே இவரை விமர்சிக்காமல் விடுவது வரலாறு என்று இவர் எழுதிய புத்தகத்தை விமர்சனம் இன்றி வருங்காலச் சந்ததி ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலமையை உண்டு பண்ணும்.ஆகவே இவரின் பின் புலம்,இவரின் செயற்பாடுகள் ஈழ விடுதலைபோரின் வரலாற்றின் அடிப்படியில் விமர்சிக்கப் பட வேண்டிய அவசியம் இருக்கிறது.இவர் ஆடிய ஆட்டம் என்ன என்பது பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்,ஆனால் இறுதியில் தனது பாவங்களைக் கழுவ முயற்சித்தார் என்பது உண்மையே.

மறப்போம்,மன்னிப்போம் ஆனால் வரலாற்றைத் திரியோம்.

Link to post
Share on other sites

¿¡Ã¾÷ ¸ÕòÐ ¬¸îºÃ¢ ! þíÌûÇ (¾Á¢ú¿¡Î) ¬¾¢ì¸ °¼¸í¸û «Å÷ ±Ø¾¢ÔûÇ Òò¾¸õ ¾¡ý ²§¾¡ ®Æ ÅÃÄ¡ü¨È §¿÷¨Á¡¸ ÜÈ¢ÔûÇÐ §À¡ø ¾¨Ä¢ø à츢 ¨ÅòÐ ±Øи¢ýÈÉ. þ¨¾ ¸Åɢ측Áø Ţ𼡧ġ «øÄРŢÁ÷º¢ì¸¡Áø þÕ󾡧ġ «¨¾ ÅÃġȡ츢 Å¢ÎÅ¡÷¸û.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்

என்னாது???? .... அப்படியானால் நாளைக்கு உண்டியலான், முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும், .... வரிசையில் நிற்குங்களல்லோ????? ... உவர் போயிட்டார் .... அதே போதும்!!!!!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரான் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டாரான சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் 132 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடி வந்தபோது, ஆறாவது ஓவருக்காக அகில தனஞ்சய பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். அந்த ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளி இந்த சாதனையை நிகழ்த்தினார். இதனால் டி-20 கிரிக்கெட் அரங்கில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேனாக திகழந்த முன்னாள் இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங்குடன் பொல்லார்ட் இணைந்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், தென்னாபிரிக்காவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் தான் இந்த சாதனையை முதலில் பெற்றார். அதன்படி 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை கிப்ஸ் நிகழ்த்திக் காட்டினார். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச டி-20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் பதிப்பில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சை எதிர்கொண்டு, ஒரு ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளி டி-20 கிரிக்கெட் அரங்கில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். https://www.virakesari.lk/article/101536    
  • மூன்று பிள்ளைகளை அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய் ! கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   https://www.meenagam.com/மூன்று-பிள்ளைகளை-அணைத்து/  
  • வணக்கம் வாத்தியார்.....! வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்   உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும்   தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா --- வேறெதுவும் தேவையில்லை---
  • ஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா? - யதீந்திரா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலின் போது, அங்கு பேசியிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தங்களின் அதிருப்திகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? – என்னும் கேள்வியிருந்த நிலையில், தற்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் நீதி, சமத்துவம் கௌரவம், சமாதானம் ஆகியவற்றின் மீது, இந்தியா அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மூலம், தமிழ் மக்களின் உரிமைகளை மதிப்பது, இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உகந்தது என்னும் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரிவித்திருக்கின்றார். அதே வேளை இவ்வாறான அபிலாஸைகளை நிறைவேற்றுவதற்கு, நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது அவசியமென்றும் இந்தியா வலியுறுத்தியிருக்கின்றது. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதன் ஊடாக, 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்னும் குரல்கள் தெற்கில் மேலோங்கியிருக்கின்ற சூழலில், மீண்டும் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் தொடர்பில் வலியுறுத்தியிருப்பது முக்கியமானது. ஆனால் தமிழ்ச் சூழலில் ஒரு சோர்வு காணப்படுகின்றது. இதற்கு காரணம், ஏற்கனவே வெளிவந்திருக்கும் பூச்சிய வரைபு. கடந்த வாரம் பூச்சிய வரைபொன்றை இணைத்தலைமை நாடுகள் வெளியிட்டிருந்தன. அதனடிப்படையிலேயே இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரவுள்ளது. அந்த வரைபில் சில விடயங்கள் இணைத்துக்கொள்ளப்படுமா அல்லது அது மேலும் பலவீனப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டால் கூட, அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பூச்சிய வரைபு தமிழ் கட்சிகளினதும் புலம்பெயர் அமைப்புக்களினதும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாகவே இருக்கின்றது. களத்திலிருந்து, பிரதான மூன்று தமிழ் கட்சிகளும் கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தன. அதே போன்று, புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தன. அதே வேளை தனியாகவும் சில அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. இவை அனைத்திலும் சில விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. அதாவது, இலங்கையின் பொறுப்பு கூறல் விடயம் எதிர்பார்த்தளவிற்கு முன்னோக்கி பயணிக்கவில்லை. எனவே இனியும் இலங்கையின் பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்குள் விவாதிப்பதில் பயனில்லை. இலங்கை விவகாரத்தை பேரவைக்கு வெளியில் கொண்டுசெல்ல வேண்டும் – என்பதே தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்த அடிப்படையிலேயே இலங்கை விவகாரத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதே வேளை, சிரிய விவகாரத்தில் பின்பற்றப்பட்ட ரிபிள் ஐ.எம் பொறிமுறையை இலங்கை விவகாரத்திலும் கைக்கொள்ள வேண்டுமென்னும் கோரிக்கையும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஒரு பாதிக்கப்பட்ட தரப்பு தங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பதில் தவறில்லை. ஆனால் அதனை நாடுகள் தங்களின் தராசில் நிறுத்துப்பார்த்துத்தான் கையிலெடுக்கும். நிறுத்துப்பார்க்கும் போது அதன் நிறையை தங்களால் சுமப்பது கடினமென்று கருதினால், அதனை கைவிட்டுவிடும். இதனை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். பூச்சிய வரைபை கண்டதும் தமிழர் தரப்பில் பலரும் உணர்சிவசப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு பலரும் உணர்ச்சிவசப்படுவதற்கு ஒரு தெளிவான காரணமுண்டு. அதாவது, ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையின் உள்ளடக்கம் சற்று காட்டமாக இருந்தது. தமிழர் தரப்புக்களின் எதிர்பார்ப்புக்ளை பூர்திசெய்வதாக இருந்தது. இதனால் சிலர் அதற்கு அவசரப்பட்டு உரிமை கோரவும் முற்பட்டனர். தாங்கள் கூறிய விடயங்கள் ஆணையாளரின் அறிக்கையிலும் வெளிவந்திருப்பதாகவும் சிலர் கூறிக்கொள்வதை காணமுடிந்தது. ஆனால் இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் பூச்சிய வரைபிற்கும் ஆணையாளரின் அறிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுண்டு. ஆணையாரின் அறிக்கையால் புளகாங்கிதமடைந்திருந்தவர்களுக்கு, பூச்சிய வரைபு ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. உண்மையில் இதில் புளகாங்கிதமடைவதற்கும் ஏமாற்றமடைவதற்கும் எதுவுமில்லை. ஆணையாளர் எவ்வாறான பரிந்துரைகளையும் முன்வைக்கலாம் ஆனால், அவற்றை உறுப்புநாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உறுப்புநாடுகளை பொறுத்தவரையில் மனித உரிமை என்பது இரண்டாவது விடயம். மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்குத்தான் மனித உரிமைகள் முதலாவது விடயம். ஆணையாளரின் அறிக்கையை, ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன்களிலிருந்துதான் உற்றுநோக்கும். ஆணையாளரின் அறிக்கையில் எதனை ஆதரிக்கலாம் – எதனை ஆதிரிக்கக் கூடாதென்னும் முடிவுகளை மேற்கொள்ளும். இந்த இடத்திலிருந்துதான் இணைத்தலைமை நாடுகளின் பூச்சிய வரைபை நோக்க வேண்டும். இணைத்தலைமை நாடுகள் ஒரு வரைபை முன்வைத்தால் அதில் வெற்றிபெற வேண்டும். வெற்றிபெற வேண்டுமாயின் பேரவையின் பெரும்பாண்மையான உறுப்பு நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருக்கும் 47 உறுப்பு நாடுகளும் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பிராந்தியம், அதில் தங்களுக்குள்ள கடப்பாடுகள், தங்களின் அரசியல் கொள்கை நிலைப்பாடுகள் – இவற்றிலிருந்தான் முடிவுகளை மேற்கொள்ளும். இவற்றை கருத்தில் கொண்டுதான், இணைத்தலைமை நாடுகள் செயற்பட முடியும். இவற்றை கருத்தில்கொள்ளாது விட்டால், இணைத்தலைமை நாடுகள் முன்வைக்கும் பிரேரணை தோல்வியடைந்துவிடும். பாதிக்கப்பட்டவர்கள் என்னுமடிப்படையில், தமிழர் தரப்பின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், இந்த விடயங்கள் எவையுமே நியாயத் தராசில் நிறுத்துப்பார்ப்பதில்லை. ஒவ்வொரு நாடுகளினதும் சொந்த நலன்களுக்கான தராசுகளில்தான் நிறுத்துப் பார்க்கப்படும். இதனை துல்லியமாக மதப்பிடாமல் அல்லது மதிப்பிடத் தெரியாமல், இணைத்தலைமை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டுமென்றவாறு ஆவேசப்படுவதால் எந்தவொரு பயனுமில்லை. இவ்வாறு ஆவேசப்படுவது தமிழர் தரப்பிலுள்ள சர்வதேச அரசியல் தொடர்பான வறுமையே இனம்காட்டும். 2012இல் இலங்கை மீது முதலாவது பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, பேரவையில் அமெரிக்கா உறுப்பு நாடாக இருந்தது. அமெரிக்கா இல்லாதிருந்திருந்தால் அப்படியொரு பிரேரணையை வெற்றிகொண்டிருக்க முடியாது. இப்போதும் அமெரிக்காவின் ஆதரவு நிச்சயம் இணைத்தலைமை நாடுகளுக்கு தேவை. ஏனெனில் இணைத்தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளால் ஒரு எல்லைக்கு மேல் பல்வேறு நாடுகளை வளைக்க முடியாது. அமெரிக்காவின் புதிய ராஜாங்கச் செயலர் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் உரையாற்றும் போது, இலங்கையின் பொறுப்பு கூறல் விடயத்தில் அமெரிக்கா அக்கறை செலுத்துமென்று தெரிவித்திருக்கின்றார். அமெரிக்கா இந்த விடயத்தில் மீளவும் தலையீடு செய்யுமென்னும் செய்தி தெளிவாக வெளிவந்திருக்கின்றது. அமெரிக்கா அதன் உலகளாவிய கரிசனைகள் என்னுமடிப்படையில்தான் இலங்கை விவகாரத்திலும் தலையீடு செய்யும். பைடன் நிர்வாகம் மீளவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு திட்டமிட்டிருக்கின்றது. அமெரிக்கா நிச்சயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதிரிக்காது. ஏனெனில் அமெரிக்கா அதனை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்காவின் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. தமிழர் தரப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவையெனின் அமெரிக்க நிகழ்சிநிரலை முதலில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். உலகமே யாழ்ப்பாணத்தை திரும்பிப்பார்த்துக் கொண்டிருப்பதான கற்பனைகளை விடுத்து, யதார்த்தத்தை புரிந்துகொள்ளவும், அந்த யதார்த்தத்திற்குள்ளால் பயணிப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாது கற்பனைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தால் மற்றவர்களை நோக்கி குற்றச்சாட்டுக்களை மட்டுமே தமிழர்கள் முன்வைத்துக் கொண்டிருக்க நேரிடும். அதனால் எந்தவொரு பயனுமில்லை. ஏனெனில் சர்வதேச சமூகத்தை, பலம்பொருந்திய நாடுகளை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு எந்த நஸ்டமும் இல்லை. தமிழருக்குத்தான் நஸ்டம். தமிழர்கள் மீதிருக்கும் கொஞ்சமளவு கரிசனையையும் தமிழர்கள் இழக்க நேரிடும். இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் எந்தவொரு பிரேரணைiயும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலில்லை. இலங்கையை முற்றிலுமாக மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலிலிருந்து முற்றிலுமாக வெளியில் எடுக்க வேண்டுமென்றே ராஜபக்சக்களின் அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாடுகளை இலக்கு வைக்கும் பிரேரணைகளை எதிர்க்கும் நாடுகளும் அரசாங்கத்தையே ஆதரிக்கின்றன. அதே போன்று அமெரிக்க எதிர்ப்பை தங்களின் அரசியலாக கொண்டிருக்கும் நாடுகள், சீன சார்பு நாடுகள் என பலரும் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, பேரவையிலுள்ள நாடுகள் தங்களுக்குள் பிளவடைந்திருக்கின்றன. உண்மையில் அவர்கள் மனித உரிமையை முதலாவது விடயமாக் கொண்டிருந்தால் அவர்கள் பிளவடைய மாட்டார்கள் ஆனால் மனித உரிமைகள் விவகாரம் என்பது அவர்களை பொறுத்தவரையில் இரண்டாவது விடயமே! இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை கவரும் நோக்கில் திடிரென்று அரசாங்கம் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்திருக்கின்றது. இவ்வாறான தீடீர் நகர்வுகளால் நாடுகளை கவரமுடியுமா என்பது வேறு விடயம். ஆனால் தனது நேசசக்திகளை அணிதிரட்டி, இணைத்தலைமை நாடுகளின் முயற்சியை தோற்கடிக்கவே முயற்சிக்கும். இவ்வாறானதொரு பின்புலத்தில் இணைத்தலைமை நாடுகளின் பிரேரணை வெற்றிபெற வேண்டுமாயின், அதனை பெரும்பாலான உறுப்பு நாடுகளை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கு பிரேரணையில் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். அந்த விட்டுக்கொடுப்புக்கள் தமிழர்களுக்கு மகிழ்சியை கொடுக்காமல் இருக்கலாம் ஆனால் உலகத்தின் பார்வை தங்களின் மீது, தொடர்ந்தும் விழுந்துகொண்டிருக்க வேண்டுமென்று தமிழர்கள் விரும்பினால் உலகத்தோடு ஒத்தோட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் விரும்புவது போன்று மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயத்தை விவாதிக்க வேண்டாமென்று கூறிவிட்டு, தமிழர்கள் தங்களின் வழியில் செல்ல வேண்டும். ஆனால் தமிழர்களுக்கென்று வேறு வழிகள் ஏதாவது, இருக்கின்றதா என்னும் கேள்விக்கு முதலில் பதிலை கண்டடைய வேண்டும்.     http://www.samakalam.com/ஜெனிவா-அரசியல்-குற்றம்சா/  
  • அருமையான பாடல் சித் ஸ்ரீராம் பாடியது சூப்பர்......இணைப்புக்கு நன்றி சகோதரி.....!   👍
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.