Jump to content

விடைபெறக் காத்திருக்கிறேன்!


Recommended Posts

கடைசிக்காலத்தில எல்லாரும் நல்லவராகலாம் மரணத்தின் நிழலில தான் சுடலை ஞானம் வரும் என்று அப்பம்மா சொல்லுவா அது சரி ஆனால் இதே புஸ்பராசா தான் வாழும் காலத்தில தான் செய்தஇ காரணமாயிருந்த கொலைகளுக்காக ஏன் ஒரு இடத்திலும் மன்னிப்பு வேண்டவில்லை :roll: :?: :?:

வாழும்போது செய்யறது சரியாக தெரிந்ததா என்ன :?:

பாவ மன்னிப்பு வழங்க நாங்க மறு கன்னம் காட்டச் சொன்ன யேசு பிரான் இல்லையே சாதாரண மக்கள் எனது மாமா இந்த கூலிகும்பலால் தான் எப்படி சித்திரவதைப் படுத்தப்பட்டார் என்று இப்பவும் சொல்லுவாரே இதேபோல பாதிக்கப்பட்ட எத்தனை மக்கள் இருப்பினம் அவை இவரை மன்னிக்க தயாரில்லையே :evil:

Link to comment
Share on other sites

  • Replies 173
  • Created
  • Last Reply

ஒரு வேளை கடைசிக் காலத்தில் தவறுகளை உணர்ந்திருப்பாரோ?

ரஷ்சியப்படைகள் சூழ்ந்து வந்தபோது, நிலவறைக்குள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்யத்துணிந்த போது ஹிட்லரும் தன் தவறை உணர்ந்துதானே இருப்பான்.

Link to comment
Share on other sites

எனது சாட்சியம் புத்தகத்தில் 14ஆம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாக மேலே வானம்பாடி போஸ்ட் செய்திருக்கிறார்.... அதை படித்துப் பாருங்கள்....

அவருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை.... நான் ஒரு மூன்றாம் மனிதன்.... அந்த அடிப்படையிலேயே இங்கு சில கருத்துகளை சொன்னேன்.... யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக் வெறும் அறிக்கைகளை மட்டும் வைத்து ஒரு மனிதனின் செயற்பாட்டை கருதுபவரா நீர்? உம்மை நினைத்து வருந்துகின்றேன்.

ஈபிஆர்எல்வின் சரித்திரமே பல கொலைகளையும், கொள்ளைகளையும் செய்தது தான். மண்டையன் குழு, ஈன்டிஎல்எவ் என்று பல பிரிவுகளை ஆரம்பித்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொலை செய்ய ஒரு அமைப்பு! மூத்தவயதுள்ளவர்களை கேட்டால் தெரியும். இவர்கள் வருகின்றார்கள் என்றால் மக்கள் பயந்து ஒளித்த காலமும் உண்டு.

மாற்று இயக்கங்கள் என்று சொல்லப்பட்ட இயக்கங்கள் ஏன் மக்கள் மத்தியில் எடுபடாமல் அழிந்து போயின என்று உங்களுக்கு கேள்வி எழலாம்?. அதற்கு காரணம் மக்களுடன் அவர்கள் நடந்து கொண்ட விதம் தான்.

இப்படிப்பட்ட அமைப்பில் இருந்து வந்த புஸ்பராஜா ஜனநாயம் கதைக்கின்றார் என்றால் வேடிக்கையாக இல்லை?

Link to comment
Share on other sites

தூயவன்,

இனியும் நான் இங்கு பதிலளிக்க தயாரில்லை.... எனக்கு தேவையில்லாத இந்த பிரச்சினையில் ஏன் தான் மூக்கு நுழைத்தேனோ?

Link to comment
Share on other sites

லகி நீங்கள் ஒருவரின் எழுத்துத் திறனில் இலகுவாக எடுபடுபவர் போல் உள்ளது.ஒருவர் ஒன்றைக் கூறுகிறார் ஆகின் ,அதன் நேர்மையை, நாங்கள் அவர் கூறும் கூற்றில் இருந்து மட்டும் கிரகித்துக்கொள்ள முடியாது.அவ்வாறெனில் நன்றாக கதையளக்க முடிந்தவர்கள் மட்டுமே நல்லவர்கள் ஆகி விடுவார்கள்.

ஈழத் தமிழர்கள் இவர்களின் வன்முறையை நேரடியாக அனுபவித்தவர்கள்.இவர்களின் கொலை வெறியை நேரடியாக சந்தித்தவர்கள்.ஆகவே இவர்கள் தங்களை தூயவர்களாகக் காட்டிக் கொள்ள ,தங்களை சுத்தம் செய்துகொள்ள பாவிக்கும் எழுத்தின் வீச்சில் மயங்கி விடமாட்டார்கள்.

கொலை என்பது வெறுக்கத் தக்கதே,ஆனால் ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது கொலை வெறியுடன் இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் போது, அதற்கு எதிராக போரிடும் இனம் மேற் கொள்ளும் வன்முறைப் போராட்டாமானது தனது இருப்புக்காக, தனது சுய பாதுகாப்பிற்காக மேற் கொள்ளும் வன்முறையானது ,அந்த இனம் வாழ்வதற்கான மனித நேயத்தின் அடிப்படயில் ஆன வன்முறை ஆகும்.இங்கே ஆக்கிரமிப்பாளனின் கொலை வெறியை, ஆக்கிரமிக்கப் பட்டவனின் எதிர் வன்முறையுடன்,கொலையுடன் ஒப்பிடுவது , நேர்மையான ஒரு மனித உரிமைப் போராளியின் நிலைப்பாடு ஆகாது.

கொலை நீதி அற்றது எனின் கார்கிலில் பாகிஸ்தானிய படைகளை ஏன் கொன்றீர்கள்?ஈழத்தில் ஏன் எமது உடன் பிறப்புக்களைக் கொன்றீர்கள்? நீங்கள் பூக்களை அல்லவா செறிந்திருக்க இருக்க வேண்டும். நேர்மையான படைப்பாளியின் எழுத்துக்கும், செயற்பாட்டுக்கும் எப்போதுமே சம்பந்தம் இருக்க வேண்டும் .அத்தோடு அவன் உண்மை பேச வேண்டும்.ஆகவே எனது பார்வயில் இவர் ஒரு எழுத்து வியாபாரியே, மனித உரிமைப் போராளி அல்ல.

Link to comment
Share on other sites

இவரது இந்த சாட்சி புத்தகத்தில் இவரது சகாக்களிற்கே உடனபாடு இல்லை அதைபடித்துவிட்டு அவரது நண்பர்களான கோவைநந்தன் மற்றும் உமாகாந்தன் போன்றவர்களே எதிர்ப்பு அறிக்கை விட்டனர் அதைவிட அவரது புத்தகத்தில் முதல் தற்கொலைபோராளி சிவகுமாரன் தனது மடியில்தான் உயிரை விட்டார் என்று ஒரு புளுகைவேறு அள்ளி விட்டிருக்கிறார் இவரது புளுகை பக்கம் பக்கமாக விபரிக்கலாம் ஆனால் அது இப்ப தேவையில்லாதது அதைவிட்டு என்றை இங்கு விளங்கபடுத்த விரும்புகிறேன் மாணவர் பேரவை என்பது தமிழீழ விடுதலையை நோக்காக கொண்டோ அல்லது ஈழவிடுதலைக்கான ஆயதபோராட்டத்திற்கான ஆரம்ப அமைப்போ அல்ல அது அன்று இலங்கை அரசின் தரபடுத்துதல் மற்றும் மாணவரது உரிமைகளிற்காக மட்டுமே சாத்வீக போராட்டங்கள் நடத்துவதற்காய் தொடங்கபட்டது அது தொடங்கி சில காலங்களிலேயே சிலர் கூட்டணி பின்னால் சிலர் தனியாக சிலர் ஆயுதபோராட்ட அமைப்புகள் என்று பிரிந்து போய் விட்டனர் அதில் இந்த புஸ்பராசா ஈபிஆர் எல் எவ் அமைப்பின் முழுஆதரவாளராய் செயற்பட்டாரே தவிர இவர் அந்த அமைப்பின் ஆயுதபயிற்சிபெற்ற  ஒருவர்அல்ல பிரானன்சில் வந்து பின்னர்அந்த அமைப்பிறகாக வேலைகள் செய்தார் அதேநேரம் கூட்டணிக்கு கொடி பிடித்ததும் கோசம் போட்டதும் இவரது போராட்ட வடிவங்களில் ஒண்று

மன்னிக்க வேண்டும். உண்மைக்கு புறம்பான ஒன்றை கண்டும் காணாதமாதிரி விட மனம் வராததனால் எழுதுகிறேன். புஸ்பராஜாவை நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால் அவரது இளைய சகோதரியான ஜெயராணியை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்திருக்கிறேன். தமிழீழ விடுதலைப்புலிகள் மாவீரர் குடும்பத்தை சேர்ந்த மன்னார் பிரதேசத்து மாணவியுடன் அகதிகளுக்கான புனர்வாழ்வு பணிகளில் ஜெயராணி அப்போது ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். பிரபலமான மண்சுமந்த மேனியர் நாடகத்திலும் நடித்திருந்தார்.

அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போது, அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்று, பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும், இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும், அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

பின்னர் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை மன்னார் காட்டில் புஸ்பராஜா மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அழைத்துவரப்பட்டு, கடத்திச்செல்லப்படடு, சித்திரவதை செய்யபப்பட்டு, ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார்.

விடுதலைப்புலிகள் என்றால் போற்றுவதையும் விடுதலைப்புலிகள் அல்ல என்றால் தூற்றுவதையும் வழக்காக கொண்டிருப்பவர்கள், எத்தனை அறியப்படாத "மாத்தையாக்களுக்கும்", "கருணாக்களுக்கும்" மாவீரர் அஞ்சலிகள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும்..

Link to comment
Share on other sites

மகன் செத்தாலும் விதவையாக வேணும் எண்ணம் கொண்ட லக்கி லுக்கு யூடே போன்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு விடுதலைப்புலிகளை எதிர்க்கின்றீர்கள். ஆனால் ஒரு கருணா (துரோகி) மாத்தயா போன்ற ஒரு சில குற்றச்சாட்டுகளை சாட்டுகின்றீர்கள் சந்ததியார் தாஸ் போன்ற மரணங்களை நியாயப்படுத்துவீர்கள்.

நீங்கள் எல்லாம் சோறுதான்.......................... :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

ஜூட் அண்ணா சொல்வதை தெளிவா சொல்லுங்க மாத்தயாவும் கருணாவும் இருந்ததால எங்களை அண்ணாக்களுக்கு (மன்னிக்கவும் அப்படியே எழுதி பழகிட்டு விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவு கொடுக்க வேண்டாம் முழுமையான துரோகிகளாக சுய நலத்துக்காக தமிழீழ விடுதலையை விலைபேசியவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லுறீங்களா :evil: :roll: :roll:

Link to comment
Share on other sites

மகன் செத்தாலும் விதவையாக வேணும் எண்ணம் கொண்ட லக்கி லுக்கு யூடே போன்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு விடுதலைப்புலிகளை எதிர்க்கின்றீர்கள். ஆனால் ஒரு கருணா (துரோகி) மாத்தயா போன்ற ஒரு சில குற்றச்சாட்டுகளை சாட்டுகின்றீர்கள் சந்ததியார் தாஸ் போன்ற மரணங்களை நியாயப்படுத்துவீர்கள்.

  நீங்கள் எல்லாம் சோறுதான்.......................... :oops:  :oops:  :oops:

யோவ் லூசு... என்னை என்ன ஈழத்தமிழன் என்று நினைத்தாயா? நான் இந்தியன்....

****

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

பின்னர் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை மன்னார் காட்டில் புஸ்பராஜா மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுஇ அழைத்துவரப்பட்டுஇ கடத்திச்செல்லப்படடுஇ சித்திரவதை செய்யபப்பட்டுஇ ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் jude

அடடா புஸ்பராசா தான் தன்ரை கதையிலை கதை விட்டார் எண்டு பாத்தா இங்கை யுூட்கூட கதைவிட தொடங்கிட்டார் யுூட் அவர்களே பஸ்தியாம் பிள்ளையும் அவரது சகாக்களும் எப்படி கொல்லபட்டார்கள் என்று தெரியாவிட்டால் புஸ்பராசாவே தனது புத்தகத்தில் விபரமா எழுதியிருக்கிறார் வாங்கி படியும் பிறகு இங்கை வந்து எழுதும் இது ஒண்டும் பல நுற்றாண்டிற்கு முன்னர் நடந்த சம்பவம் அல்ல மாற்pவிருப்படி எழுத அல்லது நீர் யாழ்பல்கலை கழகத்தில் படித்த அதிபுத்திசாலி ஒத்து கொள்கிறோம் அதை பல தடைவை இங்கு எழுதியும் விட்டீர அதற்காக நடந்ததை மாற்றி எழுத முடியாது; நாங்கள் பள்ளிகூட பக்கம் போகவில்லை தான் ஆனால் போராட்டவரலாறு தெரிந்தவர்கள்

Link to comment
Share on other sites

விடுதலை புலிகள் மீதிருக்கும் கோபம் யூட்டின் கண்களை மறைகக்கிறது, நாம் வாழும் காலத்தில் நடந்ததையே இப்படிமாற்றுபவர்கள், வரலாறுகள்,இதிகாசங்கள்,புராணங

Link to comment
Share on other sites

மேற்கோள்:

பின்னர் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை மன்னார் காட்டில் புஸ்பராஜா மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுஇ அழைத்துவரப்பட்டுஇ கடத்திச்செல்லப்படடுஇ சித்திரவதை செய்யபப்பட்டுஇ ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் தரனந

என் முழு புசானிக்காய சொத்திலா புதைக்கிறிஙாள் இப்பவே இப்பிடியேட்டா இன்னும் 100 வருசாம் கழிச்சு என்ன சொல்லு வியால் உண்மையா ஒரு நாளும் மத்ததையுங்கோ புஸ்பராசா துரோகம் செய்தாது செய்தாதுதான் அவரைப்பற்றி எனக்கு நிறையாத் தெரியும் என் என்டால் அவர்ற்ற வீட்டில் இருந்து 300 மிற்றர்தான் வாரும் எனது வீடு அவரை பற்றி நிறையாத் தெரியும் அவரை நான் விமார்சிக்கா விரும்பவில்லை ஒரு துரோகியை நியாப்படுத்து வதற்கு உண்மையை மறைக்கதையுங்கோ

Link to comment
Share on other sites

அப்படியே Harvard Press, Oxford Press, Cambridge Press எண்டு ஒரு பிரசுரிப்பாளர்களினூடாக ஆங்கிலத்திலையும் அழந்தா அது தான் வரலாறு என்று வந்துடும்.

Link to comment
Share on other sites

ஜூட் அண்ணா சொல்வதை தெளிவா சொல்லுங்க மாத்தயாவும் கருணாவும் இருந்ததால எங்களை அண்ணாக்களுக்கு (மன்னிக்கவும் அப்படியே எழுதி பழகிட்டு விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவு கொடுக்க வேண்டாம் முழுமையான துரோகிகளாக சுய நலத்துக்காக தமிழீழ விடுதலையை விலைபேசியவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லுறீங்களா :evil: :roll: :roll:

நித்திலா

நான் எங்கே அப்படி சொன்னேன்?

தெளிவாக சொல்லும்படி கேட்கிறீர்கள். இதோ தெளிவாக...

யாரையும் நம்பாதீர்கள். ஆனால் யாரையும் அவமதிக்காதீர்கள்.

இறந்து போன புஸ்பராஜாவை பற்றி விடுதலைப்புலிகளுக்கு எதிரான இணையத்தளத்தில் இவர் இறப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்பு இவரை மோசமாக தாக்கி எழுதியிருந்தார்கள். ஏன்? வுpடுதலைப்புலிகளை ஆதரியுங்கள் என்று சொல்லிவிட்டாராம். அது தான் அந்த கேவலமான தாக்குதலுக்கு காரணம். புஸ்பராஜா குடும்பம் இராணுவத்தாலும் பொலிசாராலும் சித்திரவதைப்படுத்தப்பட்ட குடும்பம். இவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகள். எப்படி மாத்தையாவையும் கருணாவையும் யாரென்று தெரியாமல் பலரும் ஆதரித்தார்களோ அப்படியே இந்த இறந்து போன மனிதரை யாரென்று தெரியாமல் தூற்றாதீர்கள்.

இங்கே எழுதுபவர்கள் பலரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து எழுதுகிறார்கள். பக்கத்திலிருந்த மாத்தையாவையும் கருணாவையும் தலைவருக்கே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் அவரிலும் சிறந்தவர்களா, இல்லையே? ஆகவே இந்த இறந்து போன மனிதரை தூற்றாதீர்கள்.

தெளிவான விளக்கம் போதுமா நித்திலா?

Link to comment
Share on other sites

விடுதலை புலிகள் மீதிருக்கும் கோபம் யூட்டின் கண்களை மறைகக்கிறது, நாம் வாழும் காலத்தில் நடந்ததையே இப்படிமாற்றுபவர்கள், வரலாறுகள்,இதிகாசங்கள்,புராணங

Link to comment
Share on other sites

அப்படியே Harvard Press, Oxford Press, Cambridge Press எண்டு ஒரு பிரசுரிப்பாளர்களினூடாக ஆங்கிலத்திலையும் அழந்தா அது தான் வரலாறு என்று வந்துடும்.

அது பற்றி தாங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?

உண்மையில் நான் ஆங்கில ஊடகங்களுக்கும் எழுதுவது வழக்கம். எனக்கு சரியென்று தெரிந்ததை எழுதத்தான் போகிறேன். நான் அறிந்த வரலாறு சரியென்று நான் நம்புமளவும் நான் அதை எழுதுவேன். அது தவறான வரலாறு என்று உங்களுக்கு தெரிந்து, அதை திருத்தவேண்டும் என்ற நோக்கமும் இருந்தால், பண்பாடான முறையில் (விடுதலைப்புலிகளை போல, அவர்கள் பண்பாடானவர்கள் பேச்சிலும் நடத்தையிலும்) சரியான வரலாறு என்று நீங்கள் நம்புவதை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

நாங்கள் பள்ளிகூட பக்கம் போகவில்லை தான் ஆனால் போராட்டவரலாறு தெரிந்தவர்கள்

பள்ளிக்கூடம் போகாதது பண்பாடற்ற எழுத்திலேயே தெரிகிறது. உங்களுக்கு தெரிந்த போராட்ட வரலாற்றின் உண்மைத்தன்மையை ஆராயும் திறன் பள்ளிக்கூடம் போகாததனால் உங்களுக்கு இல்லை என்பதும் தெரிகிறது. ஆகவே நீங்கள் சொல்லித்தான் தங்கள் அறிவின் தரம் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

அது பற்றி தாங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?

உண்மையில் நான் ஆங்கில ஊடகங்களுக்கும் எழுதுவது வழக்கம்.

எனக்கு சரியென்று தெரிந்ததை எழுதத்தான் போகிறேன். நான் அறிந்த வரலாறு சரியென்று நான் நம்புமளவும் நான் அதை எழுதுவேன். அது தவறான வரலாறு என்று உங்களுக்கு தெரிந்து, அதை திருத்தவேண்டும் என்ற நோக்கமும் இருந்தால், பண்பாடான முறையில் (விடுதலைப்புலிகளை போல, அவர்கள் பண்பாடானவர்கள் பேச்சிலும் நடத்தையிலும்) ¨

சரியான வரலாறு என்று நீங்கள் நம்புவதை எழுதுங்கள்.

உண்மையில் நான் ஆங்கில ஊடகங்களுக்கும் எழுதுவது வழக்கம்[/b :):):lol::lol:

Link to comment
Share on other sites

இதைதானே - இந்த களத்தில ரொம்பகாலமா சொல்லிட்டு இருக்கிங்க ஜூட்-

ஆமா-------------- நீங்க தமிழீழத்தில இருந்து புலம்- பெயர்ந்த ஒரு கூலியா இல்லையா?

ஓம்................ இல்லை?

சொல்லுங்க.. ! 8)

Link to comment
Share on other sites

இதைதானே - இந்த களத்தில ரொம்பகாலமா சொல்லிட்டு இருக்கிங்க ஜூட்-

ஆமா-------------- நீங்க தமிழீழத்தில இருந்து புலம்- பெயர்ந்த ஒரு கூலியா இல்லையா?

ஓம்................ இல்லை?

சொல்லுங்க.. ! 8)

வர்ணன்

இன்னமும் விரல் சூப்புவதை விடவில்லையா? என்ன இது? :):)

Link to comment
Share on other sites

யுூட்டிற்கு நான் எழுதிய விழக்கங்கள் எதுவுமே விழங்கவில்லை ஆனால் நான் பள்ளி கூடம் போகவில்லையெண்டது மட்டும் சரியா விழங்கியிருக்கு நான் எழுதியது பஸ்தியாம்பிள்ளை புஸ்பராசாவை தேடிபோனபோது கொலைசெய்யபடவில்லை என்பதும் மற்றது இங்கு அவரது குடும்பத்தை யாரும் இழுக்கவில்லை ஆகவே அவரது குடும்பத்தை பற்றிய கதையை விடுங்கள் காரணம் நான் முன்பே கூறியிருக்கிறேன் புஸ்பராசா என்கிற மனிதரை எனக்கு நீண்டகாலமாக தெரியும் அதனால் தான் எழுதுகிறென் என்று அடுத்ததாய் இதுக்குமேல் உங்களிற்கு புரியாட்டி என்னால் எதுவும் செய்ய முடியாது காரணம் எனக்கு தமிழில் மட்டும்தான் எழுத தெரியும் எனக்கு ஆங்கிலம் எழுத தெரியாது இதற்காகவும் என்னை மட்டம் தட்டாதீர்கள்; என்னையோ மற்றவர்களையோ மட்டம்தட்டுவதை விட்டு விட்டு முடிந்தால் தலைப்புடன் கூடியமாதிரி புஸ்பராசா பற்றிய உங்களிற்கு தெரிந்தவற்றை இங்கு எழுதுங்கள் அவர் அக்கா தங்கை கதை வேண்டாம் அவர்கள் சிறை சென்றது எல்லாம் எனக்கு தெரியும் நன்றி

Link to comment
Share on other sites

சாத்திரி நீர் உமக்குத் தெரின்சத எழுதும்,அப்போது தான் அவர் யார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.இங்கே நாம் புஸ்பராசாவின் குடும்பத்தைப் பற்றி கதைக்கவில்லை.விடுதலைப் போரில் எதிரியுடன் சேர்ந்து நின்ற சொந்த சகோதரத்தையே சுட்டவர்கள் உண்டு.

இன்று அவர் எழுதியதை ,இந்தியப்பதிரிகைகள் தூக்கி வைதாடுவதற்குக் காரணம் இந்திய ஆக்கிரமிபின் போது நிகழ்ந்த அத்தனை மனித உரிமை மீறல்களும் மறைக்கப்படுவதே. நீதியாக வரலாறை எழுதுபுவனோ உண்மையாக நடப்பவனோ அவ்வாறு ஒரு பக்கச் சார்பாக நடக்க மாட்டான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.