Jump to content

விடைபெறக் காத்திருக்கிறேன்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஜெயதூபி

நீங்கள் உன்மையில் உங்களின் 24மணி நேர வாழ்க்கையை உண்டியலுக்காக செலவழிப்பதால் இதைப்பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்பில்லைதான்..... ஆனால் இவர் நிச்சயம் அந்த பட்டத்தை அடையும் தன்மை உடையவர்

Link to post
Share on other sites
 • Replies 173
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஉழனநஸஇவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்

வானம்பாடி உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது நாட்டுபற்றாளராக அவரை கௌரவிக்க அவர் தனது நாட்டிற்கும் அதன் மக்களிற்கும் ஏதாவது செய்திருந்தால் கட்டாயம் கௌரவிக்கபடவேண்டியவரே அப்படி ஏதாவது அவர் செய்திருந்தால் அதனை எங்களுக்கும் தெரியபடுத்துங்களேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவர் அனுபவியா துன்பம் எங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் அனுபவித்தவரோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ மயிலிட்டி புஸ்பராசாவையும் வல்வெட்டி துறை பிரபாகனையும் அவர்களது வரலாற்றையும் நன்கு அறிந்தவர்களிற்கு யார் என்ன துன்பம் அனுபவித்தவை என்று நன்றாக விழங்கும் அதை விடத்து புஸ்பராசா எழுதின பாதி புகள் பாடும் பாதி புளுகு பாடும் புத்தகத்தை படிச்சிட்டு கருத்து எழுதினால் இப்பிடித்தான் மாணவர் பேரவையில் அவரின் பங்கு அவர் தன்மக்களிறகாக என்ன செய்தார் என்று அவரை நன்கு அறிந்வர்கள் அவரது ஊர்காரர் மற்றும் இன்று இங்கிலாந்தில் இருக்கும் அந்த மாணவர் பேரவையின் தலைவர் ஆகியொருக்கு நன்றாக தெரியும் அது இருக்கட்டும் புஸ்பராசாவை பற்றி தானே கதைக்கிறம் பிறகேன் பிரபாகரன் இதுக்கை வாறார் திருவாளர் வானம்பாடி அவர்களே உமக்கு பிரபாகரனிலை தனிப்பட்ட கோபம் எண்டால் அதை தனிய ஒரு தளத்தை திறந்து பக்கம் பக்கமாய் உமக்கு தெரிந்ததை தாராளமாய் எழுதலாமே ஏன் எப்ப பாத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதக்கையும் புலியளையும் பிரபாகரனையும் இடையிலை புகுத்திறனீர் எண்டு ஒருக்கா சொல்லும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற புஸ்பராஜாவின் புத்தகத்தை நானும் வாசித்தேன். அவர் சிறையில் வேதனைகளை அனுபவித்தார் என்று அறியமுடிந்தது. அவரைவிட மிகவும் கொடுமையான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவித்த பலர் மண்ணோடு மண்ணாக மாண்டுபோனார்கள்;சிலர் தற்போதும் வாழுகின்றார்கள். அவர்களையும் நாம் நினைவுகோர வேண்டும்.

ஒருவர் தனது கொள்கையிலிருந்து எப்போது வழுவி, கொண்ட கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றாரோ, அப்போதே அவர் தனது முந்தைய சிறப்புத் தகுதிகளை இழந்து சாதாரணமானவராகின்றார், அல்லது துரோகியாகின்றார். எமது போராட்டத்தில் பல உதாரணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியத்தைப் படிக்கும்போது வந்த கேள்விகள்.

1. மக்களின் செயற்பாடுகள் புஸ்பராஜா எதிர்பார்த்ததைவிட

மிகவும் தீவிரமாக இருந்தன. மாணவர் அமைப்பினர், மக்களின் விருப்பம் என்னவென்பதை அறிந்து மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் இருந்தனர். போராட்டத்தை முன்நகர்த்த மக்கள் தயாராக இருந்தும், இவர்களால் சரியான தலைமையை, வழிநடத்தலைக் கொடுக்கமுடியவில்லை. மாறாக தங்களுக்குள் மோதிச் (கொள்கை மோதலும், பதவி ஆசையும்தான் அப்போதைய பிரச்சினைகள்) சிதந்து கொண்டிருந்தனர். இதை புஸ்பராஜா ஒப்புக்கொண்டமாதிரித் தெரியவில்லை.

2. சிறையிலிருந்து வெளிவந்த 80களின் ஆரம்பப் பகுதிகளில் போராட்டம் முனைப்புடன் வேகமாக வளர்ந்தது. ஆனால் இவரால் அந்தக் காலத்தில் காத்திரமான எந்தப் பங்களிப்பும் செய்யமுடியவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு பிரான்ஸுக்கு ஏன் புலம்பெயர் என்ற காரணத்தை சொல்லவேயில்லை. ஏதோ நாட்டைவிட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக மட்டும்தான் கூறுகின்றார்.

3. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர்கள் நாபா, பெருமாள் போன்றோர் இந்திய இராணும்வக் காலத்தில் மக்கள்விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டபோது, இவரால் அவர்களின் கொள்கைகளை செயற்பாடுகளை மாற்றமுடியவில்லை. மாறாக அசோக் ஹொட்டலில் தங்கி, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் குண்டர்கள் புடைசூழ நகர்வலம் வந்தார் என்றே எழுதுகின்றார். குறைந்தபட்சம் ஈ.பி.ஆர்.எல்.வுடனான தொடர்புகளை அந்த நேரத்தில் கைவிட்டிருக்கலாம்.

வாசித்து முடித்தபோது, இவர் போன்றவர்கள் நமது தலைவர்களாக வராமல்விட்டது நாம் செய்த புண்ணியம் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

Link to post
Share on other sites

உண்மை தான் கிருபன்

தமிழன் எதை இழந்தாலும் உறுதிப்பிடிப்புள்ள தேசியத் தலைவரையும் போராளிகளையும் பெற்றது பெறும்பேறாகவே நான் கருதுகின்றேன்!! அனைவரும் நீடித்த ஆயுளுடன் வாழ வாழ்த்துகின்றேன்!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது" என்று நீங்கள் கூறுவதன் மூலம் நாட்டுப்பற்றாளர்கள் நாட்டிற்கு ஒன்றும் செய்யாமல் சும்மா அவர்களின் பெயர்களை அலங்கரிப்பதற்காக கொடுக்கப்படுவதென்று நீங்கள் கருதுவது தெளிவாகத் தெரிகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.

.

டக்ளஸினைக் கட்டாயம் நாட்டுப்பற்றாளனாகக் கெளரவிக்கவேண்டும். (சிங்கள சிறிலங்கா நாட்டுப்பற்றாளனாக).

Link to post
Share on other sites

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

luckyluc

லக்கிலுக் ஒன்றை இங்கு நன்றாக விளங்கி கொள்ளுங்கள் இங்கு தமிழீழம் என்பது புஸ்பராசாவின் இறுதிகாலத்தில் அவரது வாயிலிரந்து வெளிவந்த வெறும் வார்த்தைகள்தான் இலட்சிமல்ல ஒருவரது இரட்சியத்திற்கும் வெறும் வார்த்தைகளிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றது.அதைவிட் நீங்கள் சொன்னது போல காந்தியின் பாதையும் நேதாஜியின் பாதைகளும் வேறானவைதான் இங்கு புஸ்பராசாவை யாருடன் ஒப்பிடுகிறிர்கள் காந்தியுடனா ?? அல்லது நேதாஜியுடனா??தமிழீழம் என்பதை அவர் இலட்சியமாக ஏன் ஒரு விருப்பமாக கொண்டிருந்தால் கூட இங்கு பிரான்சில் அவர் சபாலிங்கம் மற்றும் உமாகாந்தன் கோவை நந்தன் கலைசெல்வன் போன்றோருடன் சேர்ந்து தமிழீழ போராட்டத்திற்கும் தமிழுpழ மக்களிற்கும் எதிராக செயல்களை செய்து கொண்டு தங்கள் வயிறு வளர்த்திருக்க மாட்டார்கள். இறுதியில் தனது நாட்கள் நெருங்கிவிட்டது என்று அறிந்ததும் புலிகள் ஈழம் பெற்றுதருவார்கள் என்று அறிக்கை விட்டால் உடனே அவர்கள் செய்த எல்லா வரலாற்று துரோகங்களும் மறந்துவிட முடியுமா? சொல்லுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....

அடுத்தவர் வந்திட்டாரு கொஞ்ச காலம் அமத்தி வாசிச்சவரு இப்ப வந்திருக்கிறாரு

ஏன்பா இதுக்க இப்ப உங்க இந்தியப் பிரச்சினைய கொண்டுவாறீங்க.

உங்க பார்வைல யார்யாரு நாட்டுப்பற்றாளரா இருந்தா நமக்கென்ன உங்க பார்வை என்ன எண்டததான் நாலு சனத்துக்கும் தெரியுமே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....

லக்கிலுக்கு, பிரித்தானியா அரசுக்கு ஆதரவாக இந்தியாப்போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தினவர்களினை உதாரணங்களாக நீங்கள் காட்டியிருக்கலாம். அவர்களுக்கும் காந்திக்கும்,பகவத்சிங்குக்க

Link to post
Share on other sites

அண்ணன் அஜீவன் அவர்களின் கருத்துகளை பார்த்து தான் நான் என் கருத்தை வைத்தேன்.... என் கருத்துகளை வாசிக்க விருப்பமில்லை என்றால் கூறுங்கள்.... உங்கள் நாட்டைப் பற்றிய விவாதங்களில் நான் பங்கேற்க மாட்டேன்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விசயத்த சொல்லுறதெண்டா அதக் கொஞ்மாகிலும் தெரிஞ்சக்கணும். அப்புறம் அதப்பற்றி சொல்லாம்.இதுக்குள்ள நாம யாரும் வந்து ஏதாவது சொல்லுறமா நமக்கு தெரியல எண்டிட்டு பேசாம இருக்கல :wink: :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி உங்களை யாரும் எழுத வேண்டாம் எண்டு சொல்லவில்லையே :roll:

தெரியாத விடயம் எண்டா தெரிந்தவர்கள் சொல்வதை முதலில கேட்டுவிட்டு பிறகு எழுதலாமே இலங்கையில் பிறந்த எனக்கே புஸ்பராசா பற்றி எதுவும் தெரியேல்லை எண்டுதானே தெரிந்தவர்கள் சொல்லட்டும் என்று பாத்திருக்கிறம் உங்களுக்கு புஸ்பராசா பற்றி எதுவும் தெரியுமா :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது என்ன சில மனிதருக்கு சுடலஞானத்தின் போது தான் ஈழ ஞானம் பிறக்கிறது.

Link to post
Share on other sites

நிதி

நான் ஒன்றும் தெரியாமல் எதுவும் சொல்லவில்லையே.... அஜீவன் அவர்களின் கருத்துகளை படித்து முடித்து விட்டு எனக்கு தோன்றியதை சொன்னேன்... அது தவறாக இருந்தால் நாகரிகமாக சொல்லலாம் இல்லையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை லக்கி நீங்கள் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் விட்டிருக்கலாம் ஆனால் அவரை நாட்டுப் பற்றாளர் எண்டு எப்படி சொல்லுறீங்க அதுதான் எனக்கும் விளங்கவில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவக்கொளுந்து மலையாளத்தில் உரையாற்றுவதை விட்டு விட்டு தமிழில் உரையாற்றவும்....

சிவக்கெளுந்து ஐயா ஈழத்தமிழ் பேச்சு வழக்கில கதைக்கிறது உங்களுக்கு மலையாளத்தில பறையிற மாதிரி இருக்காக்கும் :P

Link to post
Share on other sites

1974-1980 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் சிறைக்கூடங்களான யாழ் சிறைச்சாலை, கொழும்பு வெலிக்கடை ஆகியவற்றிலும் மற்றும் பனாகொடை ராணுவத் தடுப்பு முகாமிலும் பல வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார் இடது சாரிக் கருத்துக்களில் மிக்க ஈடுபாடும் அக்கறையும்கொண்ட இவர் பிரான்ஸ் நாட்டில் அரசியல் அந்தஸ்துப்பெற்று அகதியாக வாழ்ந்த போதும் இலக்கிய செயற்பாடுகளோடு இறுதி வாழ்க்கை வரை தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார்

அஜீவன் அண்ணா அஞ்சல் செய்தது இது.... இதை படிக்கும் யாரும் திரு. புஸ்பராஜ் அவர்கள் நாட்டுப்பற்றாளராகத் தான் விளங்கினார் என்று எண்ணுவார்கள்....

அவர் நாட்டுப் பற்றற்றவர் என்பதற்கு தகுந்த ஆதாரங்களைத் தந்தால் அதையும் நான் நம்பத் தயார்.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க சொன்ன காலத்தில நிறைய தமிழ் இளைஞர்கள் சிறையில இருந்தவை ஆனால் வெளில வந்தாப்பிறகு என்ன செய்தவர்கள் என்பதுதான்முக்கியம் நீங்க சொன்ன காலத்தில டக்கிளஸ் தேவானந்தா கூட சிறையில இருந்தவர் அப்ப அவரும் நாட்டுப்பற்றாளரா லக்கி

Link to post
Share on other sites

எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....

காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் லக்கி ஆனால் அனுபவித்த எங்களுக்கு விளங்குவது கூடவாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே

ஏனென்றால் புஸ்பராசா போன்றவர்களால் எமது குடும்பம் மட்டுமல்ல ஈழத்திலுள்ளஅனைவருமே பாதிக்கப் பட்டவர்கள் தான் தங்கட சுய லாபத்துக்காக எமது தேசத்தை மாற்றானிடம் அடவு வைப்பர்கள் மீது எவருக்குமே கோபம்வருவதுஇயற்கை தானே :roll:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.