-
Tell a friend
-
Topics
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
ஜனாஸாக்கள் நல்லடக்கம் – பாதுப்பு ஏதும் வந்தால் பொறுப்பேற்கத் தயார் -கல்முனை மாநகர முதல்வர் 17 Views கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும் தயாராக உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் ஜனாசா விடயம் தொடர்பாக புதன்கிழமை இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, “20ஆவது அரசியல் சீர்திருத்த வாக்கெடுப்பில் ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் முன்வைக்கப்பட்டுவரும் விடயங்களானது குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் கொண்ட கசப்புணர்வும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் சொந்த ஏனைய விடயங்களுடன் போலியான வதந்திகளை பரப்புகின்றனர். நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு ஆதரவு இருப்பதனால் அரசாங்கத்தில் ஜனநாயகமாக எதுவும் நடைபெறாமல் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இப்போது முஸ்லிம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை சிலர் பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு இந்த அரசாங்கம் கொடுத்த பரிசு போல பேசுகிறார்கள். இந்த விடயம் அவரின் வருகைக்கு முன்னரே நடந்துமுடிந்து வர்த்தமானி அறிவிப்புக்கான இறுதித் தருவாயில் இருந்தது.ஆளும் தரப்பு எதிர்தரப்பு எம்.பிக்களின் அழுத்தம், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் வேண்டுகோள்கள், சர்வதேச அழுத்தங்கள், 20க்கு ஆதரவளித்த எம்.பிக்களின் உடன்பாடுகள்,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 18 முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறவேண்டிய தேவை, என்பன பலதும் சேர்ந்து அவ்விடயங்களில் ஒன்றாகவே பாகிஸ்தான் பிரதமரின் வருகையும் அமைந்திருந்தது. இப்படி பலவிடயங்களும் ஒன்றிணைந்தே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக சாதகமாக அமைந்தது. 20க்கு ஆதரளவிக்கும் விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை பாராளுமன்ற குழுவுக்கே கட்சி உயர்பீடம் வழங்கியது. அதனடிப்படையிலையே அவர்கள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இருந்தாலும் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிராகவே வாக்களித்தார். நாங்கள் அரசாங்கங்களை எதிர்த்து எதையும் பெறவும் இல்லை, பெறவும் முடியாது. எங்களின் சமூகத்திற்கு உரிமைகள், தொழில்வாய்ப்பு, அபிவிருத்திகள் என பல தேவைகள் இருக்கிறது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கோஷம் எழுப்பினர். இந்த பிரச்சினை பல வருடங்களாக இருக்கிறது. இது தொடர்பில் தீர்க்கமான முடிவை பெற அமைச்சர் சமல் ராஜபக்ச ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அந்த குழு சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.ஜனாஸாவை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை. இலங்கையில் அதிக முஸ்லிங்களின் அபிமானத்தை பெற்ற நாங்கள் முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் எப்போதும் கரிசனை செலுத்துவோம். அப்போது இணங்கிச்சென்றும், அல்லது எதிர்த்தும் போராடி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சிப்போம். அதற்காக எங்களின் எம்.பிக்கள் பணம் பெற்றார்கள் என்பது நம்பமுடியாத கட்டுக்கதைகள். ஆதாரமில்லாமல் பேசுகிறார்கள். அரசிடம் நாங்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை எங்களின் கொரோனா தொற்று ஜனாஸாக்களை இரணைமடு தீவில் அடக்காமல் எங்களின் பிரதேசங்களில் நல்லடக்கம் செய்ய முன்வாருங்கள் என்பதே. அதன் மூலம் ஏதாவது பக்கவிளைவுகள் வந்தால் அதை நாங்களே பொறுப்பெடுப்போம் என்றார். இந்த ஊடகசந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இம்ரான்கானின் வருகைக்கு முன்னரே பல அழுத்தங்களினால் வர்த்தமானி தயாராகி விட்டது இருந்த போதிலும் கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=43697 -
By உடையார் · பதியப்பட்டது
உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் காணியை வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்க கோரிக்கை 18 Views வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள உயர்தொழில்நுட்பவியல் நிறுவகம் அமைந்துள்ள காணியை வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்படாமல் உள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி குற்றம் சாட்டினார். வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த உயர்தொழில் நுட்ப கல்விநிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் பெ. இளங்குமரன், தமது நிறுவனம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றது. இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது கல்லூரி அமைந்துள்ள காணி 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனினும் வனவளத்திணைக்களத்தின் கீழ் இருந்து இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் உரிமைபத்திரம் பெற்றுகொள்ள முடியவில்லை. இது தொடர்பாக உரிய திணைக்களத்திற்கு பிரதேச செயலாளரூடாக 2016ஆம் ஆண்டில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாக சென்று தெரிவித்தும் எந்த விதபலனும் கிடைக்கவில்லை. காணிக்கான உரிமைபத்திரம் இன்மையால் மேலதிகமான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்றார். இது தொடர்பாக பிரதேச செயலாளரால் அனுப்பபட்ட கடிதத்தின் பிரதியினை வனவளத்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்ததுடன், எதிர்வரும் பத்து நாட்களிற்குள் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிக்கையிடுமாறு வனவளதிணைக்களத்திற்கு பணித்தார். https://www.ilakku.org/?p=43690 -
By உடையார் · பதியப்பட்டது
விதை நெல் சுத்திகரிப்பு விவகாரம் – தொடர்ந்து தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை 17 Views வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை நெல் சுத்திகரிக்க முடியாத நிலையில் விவசாயிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் விதை தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டும் வழங்கப்படுவது வழக்கம். தற்போது சிறுபோக செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களிடமுள்ள விதை நெல்லை சுத்திகரிப்பு செய்ய பண்ணைக்கு சென்றால் அங்கு பணிபுரிபவர்கள் பொறுப்பற்ற பதிலை சொல்லி திருப்பி அனுப்புகின்றனர். ஒரே இன நெல்லையே தம்மால் தொடர்சியாக சுத்திகரிப்பு செய்ய முடியும். வெவ்வேறு இனங்கள் ஆயின் அந்தந்த இனங்கள் பல ஆயிரம் கிலோ வரை சேர்ந்தால் மட்டுமே சுத்திகரிப்பு செய்ய முடியும். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என விவசாயிகள் திருப்பி அனுப்ப படுகின்றனர். வவுனியாவில் உளுந்து செய்கையாளர் ஒருவர் இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்தார், ‘நான் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன். இம்முறை உளுந்து பயிரிட்டேன். மழை காரணமாக அவை சரியான விளைச்சலை தரவில்லை. 150 கிலோ வரை அறுவடை செய்ய முடிந்தது. அதுவும் தரமான உளுந்தாக வரவில்லை. அந்த உழுந்தை சுத்தம் செய்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இப்படி பல தடவைகள் பண்ணையில் சுத்தம் செய்து விற்பனை செய்திருக்கிறேன். இம்முறை உழுந்தை சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றபோது வாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. முகாமையாளரிடம் அனுமதி பெற்று அவரால் குறிப்பிடப்படும் தினத்தில் கொண்டு வந்துதான் சுத்தம் செய்யலாம் என்றனர். உழுந்தை உள்ளே கொண்டு செல்ல அவர் அனுமதிக்கவில்லை. குறித்த உழுந்தை வாடகை வாகனத்தில் ஏற்றிவந்து மீள வீட்டுக்கு கொண்டு செல்ல 3000 ரூபா செலவானது” என்றார். விதை நெல் சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்ற பலரும் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தம்மிடம் பல ஆயிரம் கிலோ தானியங்கள் இல்லை. விதை தேவைக்காக சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றால் பல ஆயிரம் கிலோ சேர்ந்தால் தான் சுத்தம் செய்ய முடியும் என்றால் சிறுபோக விதைப்பை பெரும்போகத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் https://www.ilakku.org/?p=43686 -
By தமிழ் சிறி · Posted
குடும்ப அரசியலுக்கு, முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் - சரத்குமார். ஏன் தல... தலைவர் வீட்டுக்கு போகும் போது மொத்த நகையையும் காணவில்லை. யார் பயம் யாரை விட்டது. இதுக்கு... பிளைட் ஏறி வீட்டுக்கு வந்திருக்கலாம். -
By புங்கையூரன் · Posted
இந்தியாவில்....கொம்யூனிசம் வளரக்கூடாது என்பதற்காகவே...கொம்யூனிஸ்ட் ஆகியவர்..!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.