-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, ஐப்பசி, 2011 குறிப்பு : விக்கிலீக்ஸில் வந்த செய்தி. முன்னர் இணைக்கமுடியாமல்ப் போய்விட்டது. அதனால் தொடரின் நடுவே இதன் முக்கியத்துவம் கருதி இணைக்கிறேன். அமெரிக்கத் தூதுவர் பட்ரிஷியா அவர்களால் வோஷிங்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கேபிள் செய்தி அம்பாறைத் தேர்தல்கள் : பயமுருத்தலும், முறைகேடல்களும் "அமெரிக்க தூதரும் (நானும்), யு எஸ் எயிட் மிஷன் நிர்வாகியும் அம்பாறை மாவட்டத்திலிருந்து பத்து வர்த்தகப் பிரமுகர்களையும் அம்பாறை மாவட்ட அரச அதிபர் கன்னங்கரவையும் சந்தித்தோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழர்களின் எண்ணிக்கை அம்பாறையில் மிகவும் குறைவானது. 2005 கணக்கெடுப்பின் பிரகாரம் 40 வீதம் சிங்களவர்களும், 40 வீதம் முஸ்லீம்களும் 18 வீதம் தமிழர்களும் அம்பாறையில் வாழ்கிறார்கள்". மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் சூழ்நிலை ஆயுததாரி "தேசமான்ய" இனியபாரதி "அம்பாறை மாவட்ட வர்த்தகப் பிரமுகர்கள் எம்மிடம் கூறிய தகவல்களின்படி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளரான கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி சுமார் 700 ஆயுததாரிகளை வைத்துக்கொண்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்கிறார் என்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பதனை அச்சுருத்தித் தடுத்துவருகிறார் என்றும் தெரியவருகிறது". "ஆனாலும், மகிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு மிகவும் பலவீனமாகவே இங்கு காணப்படுகிறது. கடந்த தை மாதம் அவரது ஒருங்கிணைப்பாளர்களால் இங்கு கூட்டப்பட்ட தேர்தல் கூட்டமொன்றிற்கு வந்த பொதுமக்கள் 500 பேரில், ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய்கள் வழங்கப்பட்டதுடன் உலர் உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன. தமிழ் வக்காளர்களைப் பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்ஷவைக் காட்டிலும் சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிப்பதையே விரும்புவதாகத் தெரிகிறது. அம்பாறை மாவட்ட வர்த்தகப் பிரமுகர்களின் கருத்துப்படி குறைந்தது 85 வீதமான தமிழர்களும், 60 இலிருந்து 80 வீதமான முஸ்லீம்களும், 50 வீதமான சிங்களவர்களும் சரத் பொன்சேக்காவுக்கே வக்களிப்பார்கள் என்று கருதுகிறார்கள். ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் ராஜபக்ஷ 67 வீதமான வாக்குகளையும் பொன்சேக்கா 30 வீதமான வாக்குளையுமே பெற்றதாக இறுதியில் அரசால் அறிவிக்கப்பட்டது". ------------------------------------------------------------------------------------------------------------ "அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. இம்மாவட்டத்தில் அரச அதிபர் இதுதொடர்பாக தன்னாலான முயற்சிகளை எடுத்துவருவதாகக் கூறுகிறார். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி எதிரணியினரின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த பேரூந்துகள் மீது உந்துரிகளில் வந்த சுமார் 40 ஆயுததாரிகள் ராணுவச் சாவடியொன்றில் வைத்து வாட்களாலும் தடிகளாலும் தாக்கியிருக்கின்றனர். இப்பேரூந்துகளின் அமைவிடம் மற்றும் பாதை பற்றிய தகவல்களை தாக்குதல் நடத்தியவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்கிறது. அதே நாள் வேறொரு சம்பவத்தில் குறைந்தது 25 எதிரணி ஆதரவாளர்கள் இதே அணியினரால் தாக்கப்பட்டுக் காயப்பட்டிருக்கிறார்கள். பொலீஸாரைப் பாவித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட அரச அதிபர் முயல்கிறார். சுமார் 70 - 8- பொலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோதும் குறைந்தது 25 - 30 வரையான பொலீஸார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று தெரியவருகிறது. இதனால் பொதுக்கூட்டங்களை தேர்தல் முடியும்வரை ஒத்திவைப்பதாக மாவட்ட அரச அதிபர் கூறுகிறார். -------------------------------------------------------------------------------------------------------------------- "சுமார் 420,000 இலிருந்து 627,000 வரையான வாக்களர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், அரச ராணுவத் துணைக்குழுக்களின் வன்முறையினால் பலர் வாக்களிப்பில் கல்ந்துகொள்ளத் தயங்குவதுபோலத் தெரிகிறது. சுமார் 59,000 சிங்கள ஊர்காவல்ப் படையினைக் கொண்ட அணியொன்றினை உள்ளூர் அரசியல்வாதியான சரத் வீரசேகரா எனப்படுபவர் தலைமைதாங்கி நடத்துவதாகத் தெரிகிறது. இம்மாவட்டத்தில் இருக்கும் சிங்களவர்களுக்கான பாதுகாப்பிற்கே இப்படை அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது". ---------------------------------------------------------------------------------------------------------------------- தேர்தல் செயன்முறைகள் "அம்பாறை மாவட்டத்தின் அதிகாரம் வாய்ந்த தேர்தல் அதிகாரியாக அம்மாவட்டத்தின் அரச அதிபரே இருக்கிறார். சுமார் 20 ஒருங்கிணைப்பு நிலையங்களை இம்மாவட்டத்தில் நிறுவியுள்ள அவர், தேர்தல் கால முறைகேடுகளைக் கண்காணிக்க அதிகாரிகளையும் நிறுத்தியிருக்கிறார். இம்மாவட்டத்தில் முறையிடப்படும் தேர்தல் கால முறைகேடுகளை மக்களிடமிருந்தும், அதிகாரிகளிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் பெற்றுக்கொண்டு தேர்தல் ஆணையாளருக்கு அதுபற்றி அறிவிப்பது அவரது கடமையாகும். தேர்தல்களின் நிறைவில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், இம்முறை தேர்தல்களில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரின் தகவலின்படி மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களுட்பட 8 மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்த உத்தியோகபூர்வ பணிப்பின் பேரில் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு அறியத்தருமாறு கட்டளையிடப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்". "இதற்கு மேலதிகமாக போலி வாக்காளர் அட்டைகளைப் பாவித்து வாக்களித்தமை, வாக்குப் பெட்டிகளை போலியான வாக்குகளைக் கொண்டு நிரப்பியமை, கைகளில் இடப்பட்ட மையினைக் கழுவியபின்னர் பலதடவைகள் வாக்களர்கள் வாக்களித்தமை உட்பட பெருமளவு தேர்தல் மோசடிகளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மகிந்தவின் ஒருங்கிணைப்பாளர்கள் நடத்தியிருக்கிறார்கள்".
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு! வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல வினாக்கான நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கின் மூன்று தீவுகள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தவறான கருத்தாகும். அதேபோல் இந்த மூன்று தீவுகளுக்குமான மின்சாரம் இன்றும் டீசல் மற்றும் ஜெனரேட்டர் மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். எனவே மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது தேசிய தேவையாகும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இது குறித்து சர்வதேச விலைமனுக்கோரலுக்கு விடப்பட்டது. இது இலங்கையின் முதலாவது கலப்பு விலைமனுக்கோரலாகும். காற்று மற்றும் சூரிய சக்தியினால் மின்சாரத்தை உருவாக்கும் முதலாவது வேலைதிட்டமாகவே இது அமைந்தது. எனவே, இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சர்வதேச விலைமனுக்கோரல் விடப்பட்ட வேளையில், அதற்காக முன்வந்த தரப்பினர் பலவீனமானவர்களாக இருந்தனர். எனவே 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது விலைமனுக்கோரலை அறிவித்தனர். இதற்கு நான்கு நிறுவனங்கள் முன்வந்தனர். இந்த நான்கு நிறுவனங்களில் ஒன்று சீனாவினதும் மற்றயது இந்திய நிறுவனமாகவும் இருந்தது. இந்த விலைமனுக்கோரலில் இந்திய நிறுவனம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தை பெற்றுக்கொண்டது. எனவே இந்த விலைமனுக்கோரலில் எந்த தவறும் இல்லை. ஆனால் அமைச்சரவையில் இந்த திட்டம் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. ஏனென்றால் திறைசேரி ஏற்கனவே இந்த திட்டத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்ற தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை முன்வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா இந்த திட்டத்திற்காக நிதி உதவியொன்றை செய்யவும் ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் எமக்கு அறிவித்தார். இந்த விடயத்தில் இப்போது வரையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை. எவருக்கும் அங்கீகாரம் கொடுக்கவும் இல்லை. எனவே இதில் எந்தவொரு நாட்டின் தலையீடுகளோ அல்லது, இராஜதந்திர நகர்வுகளோ இல்லை. இலங்கையின் தேசிய வளங்களை வேறு எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்கும் நோக்கமும் எமக்கு இல்லை. எமது நாட்டின் தேசிய கொள்கையை உலகின் எந்தவொரு பலமான நாட்டின் கொள்கைத்திட்டத்திற்கும் அடிபணிந்து தீர்மானம் எடுக்க மாட்டோம் என்பது தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார். http://athavannews.com/வடக்கின்-தீவுகளை-வெளிநாட/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஜெயலலிதாவின் சிலையுடன் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் ஆறு அடி உயர மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவியொருவர் மடிக்கணினி பெறுவது போன்று சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைவிட, அருங்காட்சியகத்தில் எட்டு அடி உயர மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்காவும் மற்றொரு புறம் டிஜிற்றல் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், காணொளி மற்றும் ஒலி வடிவப் பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் என்பன அமைக்கப்பட்டு வந்தன. இந்த பணிக்காக ஜெயலலிதா நினைவிடம் கடந்த 27ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று திறக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-சிலையுடன்-அ/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.