• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

மனித வாழ்க்கை.

Recommended Posts

இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட

வேண்டும் உணவை;உணவே மருந்து

இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட

வேண்டும் கலவியை; நிறைந்த இல்லற வாழ்வினை அனுபவித்த

பின்னர் ஆன்மீக நாட்டம் கொண்டு இல்லற

சுகத்தை விட வேண்டும்

இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட

வேண்டும் பணத்தை. பணத்துக்கு நீ அடிமையாகி விடுவாய்

இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட

வேண்டும் மூச்சை. கிடந்து அழுந்தாமல்

இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்

இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது

பாவப்பட்ட மனித வாழ்க்கை.

படித்து சுவைத்தவை .

_________________

Edited by நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

நன்றாகவுள்ளது,

இணைப்புக்கு நன்றி நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

அருமையான கவிதை அக்கா

Share this post


Link to post
Share on other sites

அத்தனையும் உண்மைகள் நிலாமதி..... இதை மனிதர் கடைப்பிடித்தால் நிம்மதி தானே வந்து சேரும்.

இணைப்பிற்கு நன்றிகள்...

Share this post


Link to post
Share on other sites

இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட

வேண்டும் உணவை;உணவே மருந்து

இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட

வேண்டும் கலவியை; நிறைந்த இல்லற வாழ்வினை அனுபவித்த

பின்னர் ஆன்மீக நாட்டம் கொண்டு இல்லற

சுகத்தை விட வேண்டும்

இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட

வேண்டும் பணத்தை. பணத்துக்கு நீ அடிமையாகி விடுவாய்

இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட

வேண்டும் மூச்சை. கிடந்து அழுந்தாமல்

இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்

இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது

பாவப்பட்ட மனித வாழ்க்கை.

படித்து சுவைத்தவை .

_________________

படித்து சுவைத்தவையை பகிர்ந்து கொண்டாமைக்கு நன்றி அக்கா!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ’பிரிவினையை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் கடமையென, மன்னார் நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் தெரிவித்தார். மன்னார் நகர சபையின் 24ஆவது அமர்வு, சபை மண்டபத்த்லி,  நேற்று (20) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் அரசியல் ரீதியாக எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லையெனவும் இனியும் அவ்வாறான பிரச்சினைகள் நடக்க கூடாதெனவும் கூறினார். ஆன்மீகம் என்ற ரீதியில் அரசியல் செய்கின்றபோது, பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர், அந்த வகையில், ஆன்மீகத் தலைவர்கள் சரியான முறையில் உணர்ந்து, மக்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார். எனவே, ஆன்மீகத்தையும் அரசியலையும் வைத்து மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்காமல் செயற்பட வேண்டுமெனவும், செல்வக்குமரன் டிலான் கேட்டுக்கொண்டார். http://www.tamilmirror.lk/வன்னி/பிரிவினையை-ஏற்படுத்துவதை-தடுக்க-வேண்டும்/72-245819
  • பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத தலைப்பு "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள்". அதில் இவர் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். ஒருவேளை கனவு கண்டு பேசினாரோ தெரியவில்லை 🙂 
  • ’கல்முனை உள்ளூராட்சி நிர்வாகம்’ : நூல் வெளியீடு எம்.என்.எம்.அப்ராஸ், அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய “கல்முனை உள்ளூராட்சி நிர்வாகம்” எனும் நூல் வெளியீட்டு விழா, நாளை மறுதினம் (22) பிற்பகல் 4.15 மணியளவில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில், முன்னாள் பட்டின சபைத் தலைவர் ஏ.எம். முகைதீன் பாவா முன்னிலையில், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருக்கிறார். கல்முனையின் 250 வருடகால உள்ளூராட்சி நிர்வாக வரலாறுகள், அவற்றுக்கான சான்றாதாரங்கள், புள்ளிவிவரங்கள், புகைப்படங்களை உள்ளடக்கிய 250 பக்கங்களைக் கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகிறது. இது நூலாசிரியர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் மூன்றாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/அம்பாறை/கல்முனை-உள்ளூராட்சி-நிர்வாகம்-நூல்-வெளியீடு/74-245834
  • அமேரிக்கா : தனக்கு இன்று சிங்களம் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளது.  என்ன அழுத்தம் : சோபா மற்றும் எம்.சி.சி. போன்ற உடன்படிக்கைகளை முன்னெடுத்தல்  சிங்களம் : இறுதியில் இந்தியாவின் ஊடாக ஒரு விட்டுக்கொடுப்பை எடுக்கும்  சீனா: இன்றும் சிங்களத்திற்கும் உதவ எண்ணுகின்றது, ஆனால், கொரோனா வைரஸால் பலவீனமாக்கப்பட்டுள்ளது.  தமிழர் தரப்பு : போர்க்குற்றம் என்பதை இன்று ஏற்றுக்கொண்ட நிலையில் இருந்து இனப்படுகொலை என்பதை ஏற்க வைத்தல் 
  • மேலே நிழல் தெரிந்தது.. வெளியே ஓடினேன்.. சப்பையான இருக்கை.. இந்தியன் 2 விபத்தை விளக்கிய கமல்! இந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார். நேற்று முதல் நாள் இரவு யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார். அதன்படி, சரியாக இந்த விபத்து நடந்த போது கமல் விபத்து நடந்த பகுதியில்தான் இருந்திருக்கிறார். அப்போது சரியாக கிரேன் ஆடும் சத்தம் கேட்டு இருக்கிறார். வெளியே இருந்த பலரும் கத்தி இருக்கிறார்கள். இதையடுத்து கமல் இருந்த கூடத்தின் மேல் பெரிய நிழல் தெரிந்துள்ளது. அவர் இருந்த கூடாரத்தை நோக்கித்தான் வேகமாக கிரேன் சரிந்துள்ளது. இந்த கூடாரத்தை பார்த்ததும் அங்கிருந்து கமல் வேகமாக வெளியே வந்து இருக்கிறார். கமலுடன் அப்போது அங்கே காஜல் அகர்வால் இருந்துள்ளார். அவரும் கூட அங்கிருந்து அப்படியே எகிறி குதித்து வெளியே வந்துள்ளார்.வெளியே வந்த பின்தான தெரிந்து உள்ளது, மிகப்பெரிய கிரேன் ஒன்று கீழே விழுந்தது.மொத்தமாக வேகமாக கிரேன் சரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்துக்கு பின் கிரேன் விழுந்த பகுதிக்கு சென்று கமல்ஹாசன் பார்த்து இருக்கிறார். அந்த பகுதியில் அவர் இருந்த இருக்கை மொத்தமாக உடைந்து நொறுங்கி இருக்கிறது. அவர் இருக்கையே மொத்தமாக சப்பையாகி உள்ளது.இந்த கூடாரத்தில்தான் பலியான மூன்று பேரும் உள்ளே இருந்திருக்கிறார்கள். அவர்கள் அடுத்த காட்சிக்காக உள்ளே இருந்து சீன் எழுதிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் மீது கிரேன் மொத்தமாக விழுந்து நொறுங்கி இருக்கிறது. இந்த விபத்து தனக்கு பெரிய மனஉளைச்சலை தந்ததாக அவர் படக்குழுவிடம் பேசி இருக்கிறார்.Read more at: https://tamil.filmibeat.com/news/indian-2-accident-kamal-haasan-explained-the-nightmare-068178.html