• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

அதிவேக இன்டர்நெட் பயன்படுத்த வேண்டுமா...?

Recommended Posts

INTERNET%2020111108-150.jpg

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும், எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. மார்ச் 12, 2012 at 1:06 மாலை 9 பின்னூட்டங்கள்

இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

http://www.seithy.co...&language=tamil

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

வீட்டு கணனியில் செய்து பார்க்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

எனகு அவசரம் இல்லையபா ஆருதலாயே பார்கிறன் இன்டநெட்

அதிவேகமா போய் என்னபா செய்வது??????????????????????????? :D

Share this post


Link to post
Share on other sites

Windows 7 professional இலும் செய்யலாம், home பதிப்பில் முடியாது என்று நினைக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

எனது கணணி Windows 7 Home தான் இப்படிதான் செய்துள்ளேன், மிகவிரைவாகவேலை செய்கின்றது.

http://www.youtube.com/watch?v=wiB3FMve7Tg&feature=related

Share this post


Link to post
Share on other sites

எனக்கு windows 7 home இல் run இல் போய் gpedit.msc என்று அடிக்க cannot find என்று வருகிறது

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அவசரப்படாதீர்கள் ........ இன்னும் பல தனியார் நிறுவனங்களே  கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படும். 
    • யாழ்.தீவகத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு - பதுக்கலில் ஈடுபடுவோரைக் கைது செய்ய உத்தரவு “ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வதுடன், அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்துக்கிடமானோரை மன்றில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” இவ்வாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் இருவேறு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின் போதே ஊர்காவற்றுறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. தீவகம் மண்கும்பானில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பலை விரட்டிய ஊர் மக்கள், கும்பல் கைவிட்டுச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த நிலையில் மண்கும்பானைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆறு பேரை கைது செய்ய ஊர்காவற்றுறை பொலிஸார் முற்ப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் உள்பட 8 பேருக்கு எதிராக இருவேறு அறிக்கைகளை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். மேலும் 6 பேர் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக மன்றில் சரண்டைந்தனர். வழக்குகள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. “மணல் லோட்டுகளை ஏற்றியோர் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காணி உரிமையாளர்களின் அனுமதியுடனேயே மணல் அகழ்வு இடம்பெற்றது. பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. சட்டவிரோத செயற்பாடு நடந்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும். சந்தேகநபர்கள் அதனைச் செய்யாமல், சட்டத்தில் கையில் எடுத்து மணல் ஏற்றிச் சென்றோர் மீது தாக்கியதுடன் இரண்டு உழவு  இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ளனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர். “அரசு மணலை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே ரத்துச் செய்துள்ளது. ஆனால் மணல் அகழ்வுக்கு அனுமதி தேவை. எனவேதான் சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் இரண்டு நாள்களுக்கு மேலாக பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் ஊர்மக்கள் மணல் கடத்தலைத் தடுக்க கும்பலை விரட்டினர். வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு பிணை வழங்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றுரைத்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று காணிகளுக்குள் பள்ளம் காணப்பட்டால் அதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வேண்டும். அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/70945
    • ரகுவரனின் நடிப்பில், ஹாலிவூட் நடிகர் Al Pacino இன் சாயல் இருக்கும்.
    • மூன்றுமாத காலப்பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதுடன், ஒரு கிலோகிராம் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையை 98 ரூபாவாக வரையறுப்பதற்கும் தீர்மானித்திருக்கிறது. அத்தோடு இறக்குமதி செய்யப்படும் கோதுமைமாவிற்கான வரியைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வப் ஊடக பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார் https://www.virakesari.lk/article/70938     ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கை செலவு அமைச்சரவை உப குழு  வாழ்க்கைச்செலவு தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைத் துணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. ஜனாதிபதியைத் தலைவராகக் கொண்ட அந்தத் துணைக்குழுவில் பிரதமரும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவும் அங்கம் வகிப்பார்.  அவரோடு மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர், உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர், கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர், பெருந்தோட்டத் தொழிற்துறை மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ஆகியோரும் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவைத் துணைக்குழுவில் உள்ளடங்குவார்கள். இத்தகையதொரு துணைக்குழுவை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70942
    • 9 வயதுச் சிறுமியை 2 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம்  செய்த72 வயது அர்ச்சகர் ; நீதிமன்று அதிரடி உத்தரவு 9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பிணை விண்ணப்பம் செய்தபோதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்த நிலையில் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரித்து விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்தது. கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாடசாலையில் சிறுமி தொலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் கண்டறிந்தார். இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் தொலைபேசி மூலம்  பிரசாதம் தர கூப்பிடுவதாகவும் சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து  உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அர்ச்சகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார். அத்துடன், அர்ச்சகரால் வழங்கப்பட்ட பணம் ஒரு தொகையையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுமியின்  தொலைபேசி சிம் அட்டை அர்ச்சகரின் பெயரிலேயே இருந்துள்ளது. இந்த நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயது அர்ச்சகரும் சிறுமி சித்தப்பாவான 50 வயதுடைய குடும்பத்தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த 30ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்று, சந்தேகநபர்கள் இருவரையும் இன்று  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். முதலாவது சந்தேகநபரான அர்ச்சகர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன்சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷும் முன்னிலையானார்கள். முதலாவது சந்தேகநபர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்து மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா சமர்ப்பணம் செய்தார். “முதலாவது சந்தேகநபரான அர்ச்சகர் 72 வயது நிரம்பியவர். அவர் வன்புணர்வுக்குட்படுத்தியதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் சிறுமி தெரிவிக்கவில்லை. அர்ச்சகர் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மன்றுரைத்தார். “சிறுமி ஆலய அர்ச்சகரால் 2 வருடங்களாக தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் வழிபடும் ஆலயத்துக்குள் இவ்வாறான சமூகப்பிரள்வு இடம்பெற்றுள்ளமை பாரதூரமான விடயம். இதனை சமூகத்தில் அனுமதிக்கவே முடியாது. சிறுமி பராயமடையாதவர். அவருக்கு அர்ச்சகரால் தனக்கு இழைக்கப்பட்ட பாதிப்பை விவரிக்க முடியாது. அதனால்தான் சட்ட மருத்துவ அறிக்கையைக் கோருகின்றோம். பராயமடையாத சிறுவர்களின் காப்பகமாக நீதிமன்றமே உள்ளது. எனவே முதலாவது சந்தேகநபரான அர்ச்சகரும் அவருக்கு உடந்தையாகவிருந்த சிறுமியின் சித்தப்பாவையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று சட்டத்தரணி சுகாஷ் மன்றுரைத்தார். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்து அவர்களது விளக்கமறியலை வரும் 20ஆம் திகதிவரை நீடித்தார். அத்துடன், சிறுமியின் சட்ட மருத்துவ அறிக்கையையும் அவரது வாக்குமூலத்தையும் வரும் 20ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/70941