Jump to content

வாடிய வெத்திலை


Recommended Posts

ஆனந்த குமாரசாமி முகாமின் K வலயத்தின் அந்த வீடுக்கு முன்னால் வரிசையாக சனம்.

அதில் ஒருவராக நானும் அக்காவும்.

ஏதோ நிவாரணத்துக்கான வரிசையோ, அல்லது இராணுவம் பதிவு செய்யும் வரிசையோ இல்லை.

எல்லோருடைய கையிலும் ஒரு வெத்திலை.

அந்த வெத்திலை கூட அந்த வீட்டுக்கு முன்னால் இருக்கும் கடையில் தான் வாங்கபட்டது.

கொளுத்தும் வெய்யிலை பொருட்படுத்தாது சனம் வரிசையில் ஊர்ந்தபடி இருந்தார்கள்.

இது என்ன எங்களுக்கு புதுசே கிளிநொச்சியிலே இருந்து எதுகெடுத்தாலும் வரிசை தானே.

"அக்கா எனக்கெண்டால் இதிலை கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை வா போவோம்."

"கொஞ்சம் பொறுடா எல்லாரும் இந்த சாத்திரி உண்மை சொல்லுறான் என்று தானே இவ்வளவு கூட்டமா நிக்கிறாங்கள். கொஞ்சம் பொறு வந்தது தான் வந்தோம் ஒருக்கா கேட்டிட்டு போவோம்."

"என்ன எப்ப தமிழீழம் கிடைக்கும் என்றோ"

"உனக்கு எப்ப பார்த்தாலும் முசுப்பாத்தி தான். பின்ன என்னடா இரண்டு முறை முயற்சி செய்தும் இந்த முகாமை விட்டு வெளியிலே போகமுடியவில்லை. இனி எண்டாலும் சரி வருமோ எண்டு கேட்க தான்"

முந்தி எண்டால் சனம் வெளிநாடு போக, கலியாணம் கட்ட தான் சாத்திரியை நாடும். இது என்னடா என்றால் இந்த முகாமை விட்டு போறதுக்கும் சாத்திரியிட்ட போக வேண்டி இருக்கு.

எல்லாம் என்னால தான் வந்தது. முகாமுக்குள்ளே வந்த உடனையே தப்பி போயிருக்க வேண்டும், வெளியிலே ஒழுங்கு படுத்தும் வரைக்கும் பொறுமையாக இருந்தது. இப்போ நல்லா இறுக்கி போட்டான்.

பக்கத்திலேஓடுற ஆத்துகாலே போவமெண்டு உள் நீச்சல் போட்டு பார்த்தோம், உள்ளே நல்ல வலை மாதிரி முள்ளு கம்பி அடிசிருகிறான்.

உடம்பெல்லாம் சந்தனகுச்சியால சுட்டு போட்டு அம்மை வருத்தம் என்று பூவரசங்குளம் ஆசுபத்திரிக்கு போய் தப்பலாம் எண்டு பார்த்தால், மதிலுக்கு மேலே கம்பியடிச்சு, மேலதிக காவல் வேற. பதினைச்சு நாள் உள்ளுக்குள்ளே கிடந்தது தான் மிச்சம்.

முந்தநாள் இந்தியன் கொஸ்பிட்டலுக்கு பின் பக்கத்தாலே மன்னர் ரோடிலே ஏறுவமேண்டால், நாங்கள் ஏறுற நேரம் பார்த்து போக்கசை அடிச்சு போட்டான். தப்பினதே அருந்தப்பு.

அதுக்கு பிறகு தான் இந்த திருவிளையாடல்.

சாத்திரியிண்ட அந்த கொட்டில் வீடுக்குள்ளே நுழையவே 2 மணித்தியாலம் ஆச்சு. அதுக்குள்ளே அக்கா கையில வைச்சிருந்த வெத்திலையும் வாடி போச்சு. இதை வச்சு இந்த மனுஷன் என்ன சொல்ல போகுது.

கழுத்திலே ஒரு உருச்சிராட்ட மாலை, காவியை உடம்பு முழுக்க போத்தி கொண்டு, சனம் கொண்டு வந்த வெத்திலைகளை போட்டு போல வாய் முழுக்க சிவப்பு.

"தம்பி வாருங்கோ. இருங்கோ. எங்கட அக்காவை பார்த்து வாயெல்லாம் பல்லாக.

என்ன விஷயம் தம்பி."

நான் சொல்ல எடுக்க. அக்கா தான் சொன்னா..

சாமி இவனுக்கு எடுத்த காரியம் எல்லாம் தடைபடுகுது, நீங்க தான் பாத்து சொல்லணும் எண்டு வெத்திலையை நீட்டினா.

அந்த காஞ்ச வெத்திலையிலே என்னத்தை பார்த்தானோ தெரியாது.

ஒரு இரண்டு மூன்று முறை முயற்சி எடுத்திருபாரே. ( எனக்குள் என்னடா இவன் எங்களை வேவெடுத்திருபானோ..ச்சே ச்சே இவனாவது வேவு எடுகிறதாவது)

அக்காவோ இளிச்சு கொண்டு ஓம் ஓம் .எப்படி கண்டு பிடிச்சனீங்க.

(வேற என்ன ..இந்த காஞ்ச வெத்திலையை வைச்சு இவன் என்னத்தை கண்டு பிடிகிறது. அவனிட்ட வாற எல்லாம் இளம் பெடியளுக்கும் உது தானே பிரச்சனை..)

அதுக்கு அவனும் வெத்திலையிலே அப்படியே தெரியுது. நான் குனிச்சு வெத்திலையை பார்த்தேன் ஏதும் முள்ளு கம்பி தெரியுதோ என்று.

"தம்பி தலையை அங்காலே எடும்"

அக்கா என் தொடையிலே கிள்ளினாள். வலிச்சுது எண்டாலும் அந்த சாமியாருக்கு முன்னால கத்த கூடாது என்று பேசாமல் இருந்திட்டன்.

சாமி எப்போ அப்ப சரி வரும்.

இன்னும் ஒரு ஆறு மாசத்திலே தம்பி வெளியிலே தான் நிப்பார்.

(ஐநா எப்ப மக்களை வெளியிலே விடுவீங்கள் என்று இலங்கையிடம் கேட்ட போதே இலங்கை சொல்லவில்லை )

சாமி... அப்போ ஆமி எல்லாரையும் விட்டுவிடுவான்கள் இதை சொல்ல ஒரு வெத்திலை, இரண்டு மணித்தியாலம் வெயிலுக்க வேற நிக்க வேணுமே..

அக்கா ஊச்ச்..என்று அதட்டினாள். அப்பாடா ஒரு ஆறு மாசம் தாக்காடினால், இவங்கள் காட்டி கொடுக்கிறவங்கள் கண்ணிலே படாமல் என்னை தப்ப வைச்சிடலாம் என்ற எண்ணம் அவளுக்கு.

ஒரு நூறு ரூபாய் தாளை தட்டிலே வைச்சு சாத்திரியிடம் நீட்டினாள் அக்கா.

காலமை முகாமுக்குள்ளே வித்த வீரகேசரி வார பேப்பர் வேண்ட காசு தா எண்ட போது தராமல் ஒளிச்சு வைச்சு இப்போ இந்த கண்டறியாத சாமிக்கு கொடுக்கேக்க எனக்கு எப்படி இருக்கும்.

சரி வா போவம் எண்டு கையை இழுத்தேன்.

அக்கா விடாமல் சாத்திரியிடம், இவன் இப்படி தான் குறை நினைகாதேங்கோ. வெளி நாட்டிலே படிச்சவன் உதுகளிலே நம்பிக்கை இல்லை என்றாள்.

சாத்திரியின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

புறப்பட்டு வாசலுக்கு வந்திருப்பம்.

தம்பீ.. ஒரு விஷயம் எண்டு இழுத்தார்..

இரு அக்கா வாறன் எண்டு சாத்திரிக்கு கிட்டே போனேன்.

உள்ள வாரும் என்று, இன்னும் உள்ளே கூட்டி கொண்டு போனார்.

தம்பீ.. இந்தா பிடியும் உங்கட அக்கா தந்த நூறு ரூபாய். எனக்கு ஒரு உதவி செய்ய வேணும்.

என்னடா ஊருக்கே இந்த முகாமை விட்டு எப்ப போகலாம் எண்டு சொல்லுறவர் என்னிடம் உதவி கேட்கிறார் எண்டு உள்மனம் அங்கயும் இங்கயும் பாஞ்சுது.

அது ஒண்டுமில்ல தம்பி,... கொஞ்சம் இழுத்தார்

வவுனியாவிலை போய் கொஞ்சம் வெத்திலை வாங்கி கொண்டு வரவேணும்.

அதுக்கு ...

ஆமிகாரனுக்கு இங்கிலிசிலே ஒரு கடிதம் எழுதி தருவியளே.

Link to comment
Share on other sites

அபிராம் மீண்டும் இந்தப் பகுதியில் சந்திப்பதில் சந்தோசம்... கதை நகைச்சுவையாகவும் இலகுவாகப் படிக்கக் கூடியதாகவும் உள்ளது... வாழ்த்துக்களும் நன்றிகளும்! :)

ஒரு குட்டிப் பச்சை... ^_^

Link to comment
Share on other sites

இன்றும் இந்த மூட நம்பிக்கைகள் உள்ளன. இதை நகைசுவையாக தந்த உங்கள் படைப்பிற்கு நன்றிகள் பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான சிந்தனைகளுடன், உண்மையான வாழ்வை, நீங்கள் தொட்டுச்செல்லும் விதமும், அதில் அடங்கியிருக்கும் படிப்பினையும் அருமை, அபிராம்!>>

Link to comment
Share on other sites

தொடர்ச்சியாக கருத்துகளையும் ஊக்கத்தினையும் தந்து வரும் குட்டி, கல்கி, புங்கையூரான், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

குட்டி உங்களையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அன்றைய மக்களின் வேதனைகளுக்கு மத்தியிலும், மூடநம்பிக்கை மூலம் காசு பார்க்க துடித்த சாத்திரிமாரும், எங்கள் மத்தியில் தான் வாழ்ந்தார்கள். இதை கொஞ்சம் நகைச்சுவையுடன் சுட்டிகாட்ட விரும்பினேன்.

நகைச்சுவை சார்ந்து எழுதும் முதலாவது கதை இது தான்.

Link to comment
Share on other sites

அழகான சிந்தனை அபிராம்

கூடவே வார்த்தைகளும் அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வாழ்க்கையில் தோற்கும் போதும்,விர‌க்தி நிலையை அடையும் போதும் சாஸ்திர‌த்தை நம்புவார்கள்.சில பேருக்கு சாஸ்திரிமார் சொல்வது பலிக்கிறது...உதிலை வாற சாஸ்திரியும் ஒரு சாதர‌ண மனிதர் தானே! அவர் என்ன கட‌வுளா?...ஆங்கிலம் தெரியாத அவருக்கு உதவி தேவைப்பட்டு இருக்கலாம்.

அபிராம் நகைச்சுவை கதையில் சந்தித்தது மகிழ்ச்சி...தொட‌ர்ந்து கதைகளை தாருங்கள்

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அபிராம். நகைச்சுவையுடன் கருத்தை எழுதியிருக்கிறீர்கள். ரதி சொன்னது போல, எல்லா வழிகளும் தடைப்படும் போது, மனம் ஒரு சலிப்பு நிலையை அடையும். அந்த நேரத்தில் தான் சாமியார் அது இது என்ற கூட்டங்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.