-
Tell a friend
-
Topics
-
5
By Kuna kaviyalahan
தொடங்கப்பட்டது
-
Posts
-
ஆஹா.... நல்ல கண்டுபிடிப்பு! இலங்கை வரலாற்றில் இராணுவத்தில் சேர்ந்த அனைவர்க்கும் இப்போதுதான் 22 வருடங்கள் சேவை பூர்த்தியாகிறது. இதற்கு முதல் எல்லோரும் 22 வருடங்கள் பூர்த்தியாகாதவர்கள். இதற்கு முதற் காலங்களில் ஏன் தமிழர் இராணுவத்தில் சேர, சேர்க்க ஆர்வம் காட்டவில்லை? இப்போ மட்டும் இருபக்கமும் ஆர்வம் வரக் காரணம் என்னவோ? அப்போ மற்றய அரசாங்க துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு இன்னும் 22 வருடங்கள் அல்லது அவர்கள் சேவை பூர்த்தியாகும் காலம் இன்னும் வரவில்லையோ? அது இருக்கட்டும். வேலையில்லாத காரணத்தினால் தமிழர் இராரணுவத்தில் சேர்வதாக வாதம் செய்வோர்: அதே பிரதேசத்தில் மற்றைய அரசாங்க இலாக்காக்களுக்கு வெற்றிடம் வரும்போது அந்த இடத்திற்கு சிங்களவரை நியமிப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்டால் தமிழர் வெளிநாட்டுக்காசில் வாழ நினைக்கிறார்கள், தகுதி பார்க்கிறார்கள், சோம்பேறிகள் என்கிறார்கள். இராணுவத்தில் சும்மா இருக்க சம்பளம் வழங்குகிறார்களோ? இதெல்லாம் வேண்டுமென்று தமிழரை திட்டமிட்டு நலிவடையச் செய்து அதில் அறுவடை செய்யும் தந்திரம். எங்கள் உறவினர், ஊரவர் பலர் இந்த இராணுவம், கடற்படை, காவற்படையில் இருந்தவர்கள், விலகியவர்கள் தாம். அவர்களின் சேவையில் அவர்கள் நடத்தப்பட்ட விதம் எனக்கும் புரியும்.
-
வேற என்ன.... கிருபன் அய்யாவை கேட்டால் சொல்லுவார். வீ டம்ளர் எண்டு எழுதி, அழிச்சுப்போட்டினம் எண்டு...😜
-
ஏதோ அழிக்கப்பட்டிருக்கு, என்னவா இருக்கும்.
-
இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் இந்த தளத்தில். மருதருடனும், இன்னுமொருவருடனும் விவாதித்துளேன். ஹொங்கோங்க்கினை இழந்து விட்ட மேற்குலகுக்கு, ஒரு பொருளாதார தளம் தேவை படுகின்றனது. ஆசியாவின் 7 பொருளாதார புலிகளும் பிரச்சனை உள்ளவர்கள். தென்கொரியாவின் பிரச்சனை வட கொரியா. தாய்லாந்தின் பிரச்சனை, அரசியல் நிலைப்பாட்டில் தளம்பல். இந்தோனேசியா, மலேசியா முஸ்லிம் நாடுகள். சிங்கப்பூரிலோ 72% சீனர்கள். தைவான், சீனாவின் கழுகுகண்களில். ஹொங்கோங் போயே போய் விட்டது. இலங்கையில் சீனா தென்பகுதியில் புகுந்து விட்டது. மிஞ்சி இருப்பது வட, கிழக்கு. அந்த பகுதிகளின், பூர்வீக குடிகள் பலர் இப்போது மேலை நாடுகளின் குடிகள். நம்பிக்கை வைக்க கூடியவர்கள். இந்த அகதிகளாக சென்று குடிகளான, 'குடியியல் நிலை' சார்ந்த நம்பிக்கையே, மத்திய கிழக்கில், இஸ்ரேல் என்னும் பலமிக்க நாடு ஒன்றினை அமைக்கவும், இன்றுவரை அமெரிக்க சார்பு நாடாக அது இருக்கவும் முடிந்தது. அந்த நம்பிக்கையே அமெரிக்கா கொண்டுள்ளது. அதனை செயல்படுத்தவே, இப்போதைய அழைப்பு மட்டுமல்ல, கோத்தபாய ஜனாதிபதி ஆகியதும் நடந்தது. ஒரு போர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரது குரல் சர்வதேசத்தில் வலுவாக இராது என்பதாலேயே, அமெரிக்க குடியுரிமையினை வேகமாக ரத்து செய்து, போட்டி இட வைத்தார்கள்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.