Jump to content

ஈழத்தில் முன்பெல்லாம் கையில் பிரம்போடு தான் குழந்தைகள் வாத்தியார் விளையாட்டு விளையாடினார்கள்...

Recommended Posts

சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு.

முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன்.

சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழைய நினைவாக இருக்கிறது. தனக்கு மற்றையவர்கள் இழைத்த துன்பங்கள் பற்றிப் பேசத்தொடங்குவதற்குப் பல வருடங்கள் முன்னர் தொட்டு தான் செய்த குழப்படிகளை ஒழிவு மறைவின்றிப் பேசிவருகிறார். நானறிந்தவரை, தன்னைப் பற்றி இத்தனை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடியவர்கள் வேறு எவரையும் எனக்குத் தெரியாது.

சாத்திரியின் எழுத்தில் தன்னை எவ்வளவு தூரம் தான் வெளிப்படையாகப் பேசுகிறாரோ, அதே அளவிற்கு தன்னைக் கடுப்பேற்றிய அல்லது தனது ஆர்வத்தைக் கிளறிய மற்றையவர்கள் பற்pறியும் பல வரும். சாத்திரி மற்றறையவர்கள் பற்றி எழுதும் எழுத்துக்கள் வாசிப்பவர்களிற்குள் ஒரு வித அசௌகரியத்தைப் பொதுவாக உருவாக்கும்;. முன்னொரு தருணத்தில் சாத்திரியின் இந்தப் பாங்குபற்றி நானும் அவருடன் விவாததித்தது ஞாபகத்தில் உண்டு. எனினும் சற்று யோசித்துப் பார்க்கையில், சாத்திரியின் மற்றையவர்கள் மீதான எழுத்துக்கள் சார்ந்து வாசகராக எமக்குள் ஏற்படும் அசௌகரியம் பயத்தில் இருந்தே எழுகின்றது என்றே இப்போது எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

அதாவது, இளம் பெண்பிள்ளைகள் உள்ள ஒரு சாலையோரத்து வீட்டு மதிலில், அம்மதில் வெள்ளையடிக்கப்பட்ட அன்றிரவோ மறுநாளோ சாத்த்திரியும் இருழழகனும் கரியால் எழுதினார்கள் என்று வாசிக்கையில் தோன்றுகின்ற அசௌகரியம் என்பது, எமது சொத்துக்கள் சார்ந்து எமது பாதுகாப்புச் சார்ந்து எமது பிரத்தியேகம் மற்றும் உத்தரவாதங்கள் சார்ந்து எமக்குள் எம்மையும் அறியாது வாசிக்கப்படுவதிலேயே அந்த அசௌகரியத்தின் அடிப்படை இருக்கின்றது என்றே தோன்றுகின்றது. பெண்பிள்ளைகள், தந்தை, சாலையோரத்து வீடு, அதன் மதில், மதிலில் அடிக்கப்பட்ட வெள்ளை என்பன அனைத்துமே எங்களையும் அறியாது எங்களிற்குள் குறியீடுகள் ஆகிப் பயப்படுத்துpகன்றன. சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பொதுவெளியில் எழுதும் அளவில் எங்களால் எங்களைப் பற்றி பேச முடியாது. நாங்கள் எங்களைப் பற்றி மற்றையவர்களுடன் பேசுவதை விடுவோம், நாங்கள் எங்களிற்குள் எங்களோடு கூட சாத்திரியின் வெளிப்படையில் சொற்ப வீதமளவிற்கேனும் வெளிப்படையாக இருக்க முனைவதில்லை. கோட்டை கட்டியே வாழ்ந்து பழகிவிட்டோம். உலகின் அனைத்துச் சட்டங்களும் இத்தகைய பயங்களிற்கான பரிகாரங்களாகவும் அதிகார பேரம்பேசல்களாகவுமே எழுந்தன என்ற நிலையில், வாசகர் எமக்குள் அத்தகைய அசௌகரியங்கள் பயம் சார்ந்து எழுவதில் எந்த விந்தையும் இல்லை. ஆனால், ஒரு ஆயுத போராட்டத்தை ஆதரித்து, அந்தப் போராட்டத்தை எங்கள் பேரில் முன்னெடுக்கும் பொறுப்பை ஒரு சிலரின் தலையில் பொறித்துப் பார்த்திருந்த நாங்கள் மேற்படி முனையில் சற்று ஆழமாகப் பேசவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

பெண்பிள்ளைகள் உள்ள சாலையோரத்து வீட்டின் வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் சாத்திரி கரி பூசும் போது கூசிய எங்கள் முளங்கால்களிற்குப் பதிலாக, றிசியும் அவரது சகாவும் ஆபிரிக்க தாதாக்களோடு போதைப் பொருள் உள்ளடங்கலாகப் பேரம்பேசி வென்று கப்பலை கட்டமைப்புக்களின் வலைகளிற்குள்ளால் நகர்த்தியபோது பெருமையில் எமது மார்புகள் மட்டுமே பொருமின. நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கவேண்டிய பெரியவர்கள் பாலகன் சிறீகௌரிபாலனிற்குள் அவனிற்குப் புரியாத உணர்வுகளை விதைத்துப் பயப்படுத்தியது சார்ந்து சாத்திரி எழுதியபோது, அந்தப் பெரியவர்கள் பற்றி இப்போது எழுதத்தானா வேணும் என்றே மிகப்பாரிய எண்ணிக்கையான கருத்துக்கள் வந்தன. ஆனால், அந்தப் பாலகன் இன்றுவரை அச்சம்பவம் சார்ந்து அழுதுகொண்டிருப்பதை உணர எமக்கு நேரமில்லை. ஒன்றாய் வளர்ந்த நண்பன் வேறொரு இயக்கத்தில் சேர்ந்து துரோகியாக ஊரிற்குள் வந்தபோது, அவனது அக்காவின் கையால் சோறு உருண்டை வாங்கி உண்டு விட்டுச் சென்ற ஒரு இரவில் தவிர்க்கமுடியாத நிலையில் அந்நண்பனைச் சுட்டுக்கொன்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்டமைக்கான மூலகாரணம், இறந்த நண்பனின் அக்கா வசை பாடி அழுத ஒலி இன்னமும் அந்தப் போராளிக்குள் ரணமாய் சீழ் வடிந்து கொண்டிருப்பதே என்பது போதிய அளவிற்குப் வாசகரால் உள்வாங்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது, எங்களிற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை களத்தில் தனியே விட்டது மட்டுமன்றி தப்பியிருப்வர்கள் சுமக்கின்ற உளவியல் சுமைகளையும் அவர்கள் பேசாதிருப்பதே எங்களிற்கு அனுகூலமென்று எம்மால் கூசாமல் கூற முடிகிறது.

கொழும்பில் ராணி சார்ந்து வந்த கதையிலும் காமம் வருகிறது. தாக்குதல் வெற்றி அதனை அர்த்தப்படுத்துகிறது. அது மட்டுமன்றி கதையில் ராணியும் தீயிடப்பட்டு சுத்திகரிக்கப்படுவதால் பொறுத்துக் கொள்ள முடிகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம். பள்ளிக்கூட விடுதியில் மாணவர்களிற்குள் நடக்கும் விடயங்கள் மித்திரனில் வருவதுபோல பாசறைக் கதைகள் பேசமுடியாது என்பது முடிந்த முடிபாகக் கூறப்படுகின்றது. ஆனால் இங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. சிறீ கௌரிபாலன் பச்சிளம் பாலகனாக இருக்கும் போது 'பத்தரும்' 'அன்ரியும்' அவனிற்குள் ஆரம்பித்து வைத்த அழுகுரலிக்குச் செவிகொடுக்க நாம் தயாரில்லை. யாருமே கேட்க மறுத்த, கேட்கப்படாத அழுகை வயதோடு சேர்ந்து ரணமாக வளர்ந்து பாசறையில் சீழ் வடியும் ரணம் மீளக் கீறப்பட்டபோது வலி எப்படி இருந்தது என்று சாத்திரி சொன்னால் அதை இப்பவும் நாங்கள் கேட்கத் தயாராகவில்லை. இது எல்லாம் மறைவாய் பேசி மறைந்து போகவேண்டிய விடயங்கள், சமூகங்களிற்குள் நடவாத கதைகளா, அடக்கி வாசிக்காது இப்படி அடித்துப் பேசும் உரிமை யாரிவரிற்குக் கொடுத்தது என்ற ரீதியிலேயே எமது கோபம் குவியப்படுகிறது. ஆனால், எப்போதும் போல எமது கோபத்தை நாம் புனிதங்களின் பெயரில் மட்டுமே வெளிப்படுத்துகிறோம். ஏனெனில் சாத்திரிபோன்று எங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச நாங்கள் என்ன வெள்ளந்திகளா என்ன. வழமைபோல், இறந்து போனவர்கள் பேச முடியாது என்பதால் அவர்கள் சார்பில் நாங்கள் ஆஜராவதாகக் கூறிக்கொள்கிறோம். இறந்து போனவர்கள் எங்களிற்காக மரித்தவர்கள் என்று விசும்பல் மத்தியில் கூறுகிறோம். ஆனால், ஆண்கள் அழுவதில்லை என்று நம்பியே வளாந்த நாங்கள், எங்கள் முன் எங்களிற்காகப் போராடிய ஒரு வளாந்;த ஆணின் அழுகுரலை அழுகுரல் என்று இனம் பிரிக்கமுடியாதவர்களாக புனிதத்தின் பெயரில் பதிவிற்குத் தடைபோட்டு நிம்மதியாய் நாங்கள் தூங்கப் போய்விடுகிறோம்.

இவ்விடத்தில் இன்னுமொரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதாவது சாத்;திரி பொய் சொல்கிறார் எந்தப் பாசறையிலும் இவ்வாறு நடக்கவில்லை என்பது அவ்வாதம். உண்மையில் சாத்திரியின் பதிவைப் படிக்கும்வரை இப்படியான பிரச்சினை பாசறையில் இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நான் எந்தப் பாசறையிலும் வாழ்ந்ததில்லை. சாத்திரி பாசறையில் வாழ்ந்தவர். வேறு இயக்கங்களிலும் இந்தப் பிரச்சினை இருந்ததாக அர்யுனும் எழுதியுள்ளார். பாசறையில் நடந்ததா இல்லையா என்பது தெரியாதபோதும் பாடசாலை விடுதிகளில் இவ்வாறான சம்வங்கள் நடந்ததை பொதுவாகப் பலரும் கேள்விப்பட்டிருப்பர். மிகக் கடுமையான ஆசிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் கூட பள்ளிக்கூட விடுதிகளில் வியப்பேற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்த செய்திகள் சமூகத்தில் பரிட்சயமாய் இருந்தன. மேலும், பாலியல் சார்ந்து ஏகப்பட்ட அறியாமைகள் பேசாப்பொருட்கள் என்றிருந்த நிலையில் ஆண்பெண் தொடர்புகள் சார்ந்தே தண்டனைகள் முதலியன வகுக்கப்பட்டிருந்தன. குழந்தை உருவானால் மறைக்கமுடியாதே என்ற எச்சரிக்கை பல மட்டங்களில் அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. திருமணம் குழந்தை பராமரிப்பு முதலிய நடைமுறைப் பிரச்சினைகளும் எச்சரிக்கை உணர்விற்குக் காரணமாயிருந்தன. மறைக்கப்படக்கூடிய பிரச்சினைகள் சார்ந்து மனிதரின் மன அழுத்தங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்துள்ளன. எச்சரிக்கை உணர்வின் கனதி சார்ந்து தான் சட்டங்களும் விதிகளும் இயற்றப்படும் என்ற ரீதியில் இப்பிரச்சினை ஆண் பெண் உறவளவிற்கு சட்டத்திற்குட்படுத்தப்படாதிருந்திருக்கக் கூடிய சாத்தியம் மறுப்பதற்கில்லை. மேலும் சாத்திரி போராட்டத்தில் இணைந்திருந்த காலத்தில் இருந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள் என்று கூறிவிடமுடியாது. தலைவரின் ஆரம்ப நாட்களில் அவரோடு இருந்தவர்களே இன்றும் வாழ்கிறார்கள் எனும் போது சாத்திரி காலத்தவர்கள் இருப்பது வியப்பில்லை. இது எம்மைக் காட்டிலும் சாத்திரிக்கு அதிகம் தெரியும். எனனே நடக்காத ஒன்றைக் கற்பிதம் செய்து இத்தகைய ஒரு அவதூறைக் கிளப்பவேண்டிய தேவை சாத்திரிக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இனி எழுதிய பதிவை அழி;த்தமை பற்றிப் பார்க்கின், சாத்திரி எழுதிய ஒரு பதிவை நிர்வாகம் தூக்க, கொதிச்சுப் போய் சாத்திரி தான் எழுதிய சிலதைத் தானே தூக்க சாத்திரிக்குத் தடை வந்து விடுகிறது. தடைக்கான காரணமாக, சாத்திரி பதிவு போட்டாரே என்று நம்பி 120 பேர் பின்னூட்டம் போட்ட நிலையில் சாத்திரி பதிவைத் தூக்கினால் 120 பின்னூட்டர்களும் கேணயர்களாக ஆகிப்போகிறார்கள் என்கிறது கோபம். இநதக் கோபம் சார்ந்து எழுகின்ற ஒவ்வாமைகளை எந்தக் கோணத்தில் இருந்து எழுத ஆரம்பிப்பது என்று புரியாது மனம் திணறுகிறது. இயன்ற வரை முயலுகிறேன்.

ஒரு தலைப்பில் முதற்பதிவு அழிக்கப்படால் நேரம் மினக்கெட்டு மற்றவர்;கள் அத்தபை;பில் எழுதிய அத்தனை பின்னூட்டங்களும் கேணைத்தனமாகத் தெரியும் என்ற விவாதத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதாவது, 'ஆமால்ல', 'கிளம்பீட்டாய்யாகிளம்பீட்டான்', 'எத்தினைய செய்தனாங்க இதைச் செய்யமாட்டமா' என்பதுபோன்ற பின்னூட்டங்கள் ஏதாவது ஒரு தலைப்பைச் சார்ந்து தியட்டிரில் படம்பார்க்கும் ரசிகனின் வர்ணனை போன்று எழுதப்பட்டிருப்பின் தலைப்பின் முதற்கருத்து நீக்கப்படுகையில் அவை ஒருவேளை அர்த்தமற்றுத் தெரியலாம். ஆனால் அத்தகைய கருத்துக்களிற்கு 'நேரம் மினக்கெட்டு எழுதிய' பின்னூட்;டங்கள் என்ற அடைமொழி சரிவராது. நேரம் மினக்கெட்டு எழுதிய ஒரு பின்னூட்டம் எனின், ஏறத்தாள அப்பின்னூட்டம் என்னத்தைப் பேசுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு அப்பின்னூட்டம் மட்டுமே போதுமானது, தலைப்பின் முதற்பதிவு அவசியமற்றது. பின்னூட்டம் ஒரு குறும் பதிவை ஒத்தது என்ற வகையில் அது தனித்து வாழக்கூடியது. எனவே தலைப்பின் முதற் பதிவு நீக்கப்பட்டால் கீழுள்ள அனைத்தும் கேணைத்தனமாகத் தெரியும் என்பதை முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை.

அடுத்து, கருத்து யாரிற்குச் சொந்தமானது என்பது சார்ந்து எழும் கேள்வி. இணையவெளி உரிமைகள் பற்றிப் பரந்த, இன்னமும் மருவிக்கொண்டிருக்கும் விவாதவெளி விரிந்து கொண்டே இருக்கின்றது என்றபோதும், பொதுவாக ஒரு கருத்தை முன்வைப்பவரே சட்டத்தின் முன் அக்கருத்திற்கான பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கிறது. ஒருவர் மீது பிறிதொருவர் ஒரு கருத்துச் சார்ந்து வழக்குத் தொடர்கிறார் என்று வைத்துக்கொள்ளின், பிரச்சினையினை முளையிலே முடித்துவிட கருத்தாளர் விரும்பின் வக்கீல் நோட்டீஸ் கண்ட மாத்திரத்தில் தனது பதிவை அழிக்க நினைக்கலாம். பின்னூட்டங்கள் வந்துவிட்டனவே, பின்னூட்டர்களைக் கேணையர்கள் ஆக்கக் கூடாதே என்பதற்காகக் கருத்தாளரைப் பொதி சுமக்கக் கூற முடியாது. அதற்காகத்தானே எடுத்தேன் கவிழ்;த்தேன் என்று எழுதாது ஆற அமர ஒன்றிற்குப் பலதடவை யோசித்து எழுதும்படி கோருகிறோம் என்பது இந்த இடத்தில் எதிர்பார்க்கக்கூடிய ஒரு எதிர்வினை. ஆனால், ஒரு பதிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என அனைத்துக் கோணங்களையும் அதைப் பதிய முன்னர் கணக்கிட்டுவிடுவது எப்போதும் சாத்தியமானதல்ல. சில சமயங்களில் பதிந்ததன் பின்னர் எதிர்பாராத பிரச்சினைகள் தலைதூக்கலாம், இது சட்ட ரீதியாக மட்டுமன்றி தெரிந்தவர் உறவினர் என்ற முனைகளிலும் வரலாம். எனவே, கருத்தாளர்களின் கருத்துக்களிற்கு யாழ்களம் பொறுப்பேற்க முடியாது என்ற நிலையில், கருத்தாளரிற்குத் தான் பதிந்ததை அழிக்கும் உரிமை இருக்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

இறுதியாக, எந்த ஒரு சட்டத்திற்கும் 'லெற்றர் ஒவ் த லோ' மற்றும் 'ஸ்பிறிற் ஒப் த லோ' என்று இரு விடயங்கள் உண்டு. முதலாவது எழுத்தில் எவ்வாறு சட்டம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பது. இரண்டாவது அவ்வாறு ஒரு சட்டம் வருவதற்கான அடிப்படை என்ன, எத்தகைய விளைவுகளைத் தடுப்பதற்காக அச்சட்டம் இருக்கின்றது என்ற அடிப்படையில் அச்சட்டத்தின் ஆன்மா என்ன என்று பார்;ப்பது.

சட்டங்கள் விதிகள் என்பனவற்றை எழுத்து மட்டத்தில் மட்டும் பார்ப்பது ஆரோக்கியமற்றது. சப்பாத்திற்கு ஏற்ற கால்களைத் தேடுவது நடக்கத்தான் செய்யும் என்ற போதும், கால்களிற்கேற்ற சப்பாத்துக்கள் நோக்கிய தேடல்களும் இருக்கவே வேண்டும். மேற்கில் உள்ள சட்டங்களின் படி உள்ளே தள்ளுவது மட்டுமன்றி, புதிய வழக்குகள் சார்ந்து உள்ள சட்டங்களை மாற்றியமைப்பதும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சமூகம் முதிர்ச்சி அடைவதற்கு விதிகள் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஆழ்ந்த பார்வையும் இன்றியமையாதன. மூன்றாம் உலகநாடுகளின் முன்னைநாள் அரச உத்தியோகத்தர்கள் போன்று ஒரு கோப்பில் எழுதப்பட்ட விதிகளைச் சேகரித்து வைத்தபடி, காதிற்குள் ஒரு பென்சிலைச் சொருகிக்கொண்டு, எல்லோரும் எழுதப்பட்ட விதிகளிற்கமைய நடக்கிறார்களா என்று அலைவது அனைத்துச் சமூகத்திலும் நடக்கத்தான் செய்யும். பல குழந்தைகள் தாம் காணும் முதல் அதிகாரமான ஆசிரியரைப் போல வீட்டில் விளையாடுவது சகஜம் தான். அதுவும் ஈழத்தில்; குழந்தைகள் கையில் பிரம்பையும் வைத்துக்கொண்டு தான் ஆசிரியர் விளையாட்டை முன்பெல்லாம் விளையாடினார்கள். ஆசிரியரின் வகுப்பறை விதிகள் சரியா என்று குழந்தையால் விசாரிக்க முடியாது. ஆனால் வளர்ந்தவர்கள்;, இயன்றவரை, எழுதப்பட்ட விதிகளை அவற்றின் ஆன்மா சார்ந்து ஆழமாக நோக்குவதும், புதிய வழக்குகள் சார்ந்து விதிகளை ஆராய்வதும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள், இன்னுமொருவன்!

சில உண்மைகள் வெளியே சொல்லப் படுவது, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் என்பது உண்மையே!

ஆனாலும் ஒருவர், தனது கருத்தை வெளிப்படுத்தும் போது அது மற்றவர்களால் எவ்வாறு உள்வாங்கப் படுகின்றது என்பதைப் பொறுத்தே அவர்களது கருத்துக்கள், அமைகின்றன!

மற்றும் எழுதுபவரின் நோக்கமும், இங்கு அவதானிக்கப் படுகின்றது!

காந்தி தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதும்போது, அது 'சத்திய சோதனை' ஆகியது!

அதையே நானும் நீங்களும் எழுதப் போனால், அது மஞ்சள் பத்திரிகையாகின்றது!

ஏனெனில் காந்தி மீது மக்களுக்கு மதிப்பிருந்தது!

அதற்கு முக்கிய காரணம், காந்தி இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியமையே!

அந்தக் காலத்தில், சத்திய சோதனையை விமர்சித்தவன் 'துரோகி'யாகி இருப்பான்!

இதே போலத்தான், பல தியாகங்களாலும், அர்ப்பணிப்புக்களாலும், வளர்க்கப் பட்ட அமைப்பை விமர்சிப்பதும்!

அதற்குக் காரணம் அந்த அமைப்பின் 'நோக்கம்'

அதற்காக ஆயிரமாயிரம் போராளிகள், தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளார்கள்!

அவர்களது நோக்கம் ஓரளவாவது நிறைவேறிய பின்பு, அவர்களை விமரிசிப்பது தான் பொருத்தமாக இருக்கும்!

அவர்களது தியாகங்களும், உன்னதமான இலட்சியங்களும், மதிக்கப் பட வேண்டியவை என்பதே எனது தாழ்மையான கருத்து!

அவர்களுக்குள் இருந்த, 'குருவிச்சைகளை' சாத்திரியின் எழுத்துக்கள் இனங்காட்டுகின்றன!

அதற்காகவே சாத்திரியின் எழுத்துக்களைத் தேடித்தேடிப் படிப்பேன்!

தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்!>

Link to comment
Share on other sites

சட்டவியற்பகுதியில் உங்கள் பார்வையும், அணுகுமுறையும் இங்கு சிந்தனையைத் தூண்டுபவையாக உள்ளன. இணையவெளியையும், கருத்துக்களத்தையும் பரிசோதனை மட்டத்திலேயே பார்க்கவேண்டியுள்ளதால் பல வினாக்களின் முடிச்சுக்களை காலமே அவிழ்த்துவைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

பலர் தொடாத பக்கங்களை உங்கள் பார்வையாக்கியிருக்கிறீர்கள் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு.

முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன்.

சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழைய நினைவாக இருக்கிறது. தனக்கு மற்றையவர்கள் இழைத்த துன்பங்கள் பற்றிப் பேசத்தொடங்குவதற்குப் பல வருடங்கள் முன்னர் தொட்டு தான் செய்த குழப்படிகளை ஒழிவு மறைவின்றிப் பேசிவருகிறார். நானறிந்தவரை, தன்னைப் பற்றி இத்தனை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடியவர்கள் வேறு எவரையும் எனக்குத் தெரியாது.

சாத்திரியின் எழுத்தில் தன்னை எவ்வளவு தூரம் தான் வெளிப்படையாகப் பேசுகிறாரோ, அதே அளவிற்கு தன்னைக் கடுப்பேற்றிய அல்லது தனது ஆர்வத்தைக் கிளறிய மற்றையவர்கள் பற்pறியும் பல வரும். சாத்திரி மற்றறையவர்கள் பற்றி எழுதும் எழுத்துக்கள் வாசிப்பவர்களிற்குள் ஒரு வித அசௌகரியத்தைப் பொதுவாக உருவாக்கும்;. முன்னொரு தருணத்தில் சாத்திரியின் இந்தப் பாங்குபற்றி நானும் அவருடன் விவாததித்தது ஞாபகத்தில் உண்டு. எனினும் சற்று யோசித்துப் பார்க்கையில், சாத்திரியின் மற்றையவர்கள் மீதான எழுத்துக்கள் சார்ந்து வாசகராக எமக்குள் ஏற்படும் அசௌகரியம் பயத்தில் இருந்தே எழுகின்றது என்றே இப்போது எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

அதாவது, இளம் பெண்பிள்ளைகள் உள்ள ஒரு சாலையோரத்து வீட்டு மதிலில், அம்மதில் வெள்ளையடிக்கப்பட்ட அன்றிரவோ மறுநாளோ சாத்த்திரியும் இருழழகனும் கரியால் எழுதினார்கள் என்று வாசிக்கையில் தோன்றுகின்ற அசௌகரியம் என்பது, எமது சொத்துக்கள் சார்ந்து எமது பாதுகாப்புச் சார்ந்து எமது பிரத்தியேகம் மற்றும் உத்தரவாதங்கள் சார்ந்து எமக்குள் எம்மையும் அறியாது வாசிக்கப்படுவதிலேயே அந்த அசௌகரியத்தின் அடிப்படை இருக்கின்றது என்றே தோன்றுகின்றது. பெண்பிள்ளைகள், தந்தை, சாலையோரத்து வீடு, அதன் மதில், மதிலில் அடிக்கப்பட்ட வெள்ளை என்பன அனைத்துமே எங்களையும் அறியாது எங்களிற்குள் குறியீடுகள் ஆகிப் பயப்படுத்துpகன்றன. சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பொதுவெளியில் எழுதும் அளவில் எங்களால் எங்களைப் பற்றி பேச முடியாது. நாங்கள் எங்களைப் பற்றி மற்றையவர்களுடன் பேசுவதை விடுவோம், நாங்கள் எங்களிற்குள் எங்களோடு கூட சாத்திரியின் வெளிப்படையில் சொற்ப வீதமளவிற்கேனும் வெளிப்படையாக இருக்க முனைவதில்லை. கோட்டை கட்டியே வாழ்ந்து பழகிவிட்டோம். உலகின் அனைத்துச் சட்டங்களும் இத்தகைய பயங்களிற்கான பரிகாரங்களாகவும் அதிகார பேரம்பேசல்களாகவுமே எழுந்தன என்ற நிலையில், வாசகர் எமக்குள் அத்தகைய அசௌகரியங்கள் பயம் சார்ந்து எழுவதில் எந்த விந்தையும் இல்லை. ஆனால், ஒரு ஆயுத போராட்டத்தை ஆதரித்து, அந்தப் போராட்டத்தை எங்கள் பேரில் முன்னெடுக்கும் பொறுப்பை ஒரு சிலரின் தலையில் பொறித்துப் பார்த்திருந்த நாங்கள் மேற்படி முனையில் சற்று ஆழமாகப் பேசவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

பெண்பிள்ளைகள் உள்ள சாலையோரத்து வீட்டின் வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் சாத்திரி கரி பூசும் போது கூசிய எங்கள் முளங்கால்களிற்குப் பதிலாக, றிசியும் அவரது சகாவும் ஆபிரிக்க தாதாக்களோடு போதைப் பொருள் உள்ளடங்கலாகப் பேரம்பேசி வென்று கப்பலை கட்டமைப்புக்களின் வலைகளிற்குள்ளால் நகர்த்தியபோது பெருமையில் எமது மார்புகள் மட்டுமே பொருமின. நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கவேண்டிய பெரியவர்கள் பாலகன் சிறீகௌரிபாலனிற்குள் அவனிற்குப் புரியாத உணர்வுகளை விதைத்துப் பயப்படுத்தியது சார்ந்து சாத்திரி எழுதியபோது, அந்தப் பெரியவர்கள் பற்றி இப்போது எழுதத்தானா வேணும் என்றே மிகப்பாரிய எண்ணிக்கையான கருத்துக்கள் வந்தன. ஆனால், அந்தப் பாலகன் இன்றுவரை அச்சம்பவம் சார்ந்து அழுதுகொண்டிருப்பதை உணர எமக்கு நேரமில்லை. ஒன்றாய் வளர்ந்த நண்பன் வேறொரு இயக்கத்தில் சேர்ந்து துரோகியாக ஊரிற்குள் வந்தபோது, அவனது அக்காவின் கையால் சோறு உருண்டை வாங்கி உண்டு விட்டுச் சென்ற ஒரு இரவில் தவிர்க்கமுடியாத நிலையில் அந்நண்பனைச் சுட்டுக்கொன்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்டமைக்கான மூலகாரணம், இறந்த நண்பனின் அக்கா வசை பாடி அழுத ஒலி இன்னமும் அந்தப் போராளிக்குள் ரணமாய் சீழ் வடிந்து கொண்டிருப்பதே என்பது போதிய அளவிற்குப் வாசகரால் உள்வாங்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது, எங்களிற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை களத்தில் தனியே விட்டது மட்டுமன்றி தப்பியிருப்வர்கள் சுமக்கின்ற உளவியல் சுமைகளையும் அவர்கள் பேசாதிருப்பதே எங்களிற்கு அனுகூலமென்று எம்மால் கூசாமல் கூற முடிகிறது.

கொழும்பில் ராணி சார்ந்து வந்த கதையிலும் காமம் வருகிறது. தாக்குதல் வெற்றி அதனை அர்த்தப்படுத்துகிறது. அது மட்டுமன்றி கதையில் ராணியும் தீயிடப்பட்டு சுத்திகரிக்கப்படுவதால் பொறுத்துக் கொள்ள முடிகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம். பள்ளிக்கூட விடுதியில் மாணவர்களிற்குள் நடக்கும் விடயங்கள் மித்திரனில் வருவதுபோல பாசறைக் கதைகள் பேசமுடியாது என்பது முடிந்த முடிபாகக் கூறப்படுகின்றது. ஆனால் இங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. சிறீ கௌரிபாலன் பச்சிளம் பாலகனாக இருக்கும் போது 'பத்தரும்' 'அன்ரியும்' அவனிற்குள் ஆரம்பித்து வைத்த அழுகுரலிக்குச் செவிகொடுக்க நாம் தயாரில்லை. யாருமே கேட்க மறுத்த, கேட்கப்படாத அழுகை வயதோடு சேர்ந்து ரணமாக வளர்ந்து பாசறையில் சீழ் வடியும் ரணம் மீளக் கீறப்பட்டபோது வலி எப்படி இருந்தது என்று சாத்திரி சொன்னால் அதை இப்பவும் நாங்கள் கேட்கத் தயாராகவில்லை. இது எல்லாம் மறைவாய் பேசி மறைந்து போகவேண்டிய விடயங்கள், சமூகங்களிற்குள் நடவாத கதைகளா, அடக்கி வாசிக்காது இப்படி அடித்துப் பேசும் உரிமை யாரிவரிற்குக் கொடுத்தது என்ற ரீதியிலேயே எமது கோபம் குவியப்படுகிறது. ஆனால், எப்போதும் போல எமது கோபத்தை நாம் புனிதங்களின் பெயரில் மட்டுமே வெளிப்படுத்துகிறோம். ஏனெனில் சாத்திரிபோன்று எங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச நாங்கள் என்ன வெள்ளந்திகளா என்ன. வழமைபோல், இறந்து போனவர்கள் பேச முடியாது என்பதால் அவர்கள் சார்பில் நாங்கள் ஆஜராவதாகக் கூறிக்கொள்கிறோம். இறந்து போனவர்கள் எங்களிற்காக மரித்தவர்கள் என்று விசும்பல் மத்தியில் கூறுகிறோம். ஆனால், ஆண்கள் அழுவதில்லை என்று நம்பியே வளாந்த நாங்கள், எங்கள் முன் எங்களிற்காகப் போராடிய ஒரு வளாந்;த ஆணின் அழுகுரலை அழுகுரல் என்று இனம் பிரிக்கமுடியாதவர்களாக புனிதத்தின் பெயரில் பதிவிற்குத் தடைபோட்டு நிம்மதியாய் நாங்கள் தூங்கப் போய்விடுகிறோம்.

இவ்விடத்தில் இன்னுமொரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதாவது சாத்;திரி பொய் சொல்கிறார் எந்தப் பாசறையிலும் இவ்வாறு நடக்கவில்லை என்பது அவ்வாதம். உண்மையில் சாத்திரியின் பதிவைப் படிக்கும்வரை இப்படியான பிரச்சினை பாசறையில் இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நான் எந்தப் பாசறையிலும் வாழ்ந்ததில்லை. சாத்திரி பாசறையில் வாழ்ந்தவர். வேறு இயக்கங்களிலும் இந்தப் பிரச்சினை இருந்ததாக அர்யுனும் எழுதியுள்ளார். பாசறையில் நடந்ததா இல்லையா என்பது தெரியாதபோதும் பாடசாலை விடுதிகளில் இவ்வாறான சம்வங்கள் நடந்ததை பொதுவாகப் பலரும் கேள்விப்பட்டிருப்பர். மிகக் கடுமையான ஆசிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் கூட பள்ளிக்கூட விடுதிகளில் வியப்பேற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்த செய்திகள் சமூகத்தில் பரிட்சயமாய் இருந்தன. மேலும், பாலியல் சார்ந்து ஏகப்பட்ட அறியாமைகள் பேசாப்பொருட்கள் என்றிருந்த நிலையில் ஆண்பெண் தொடர்புகள் சார்ந்தே தண்டனைகள் முதலியன வகுக்கப்பட்டிருந்தன. குழந்தை உருவானால் மறைக்கமுடியாதே என்ற எச்சரிக்கை பல மட்டங்களில் அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. திருமணம் குழந்தை பராமரிப்பு முதலிய நடைமுறைப் பிரச்சினைகளும் எச்சரிக்கை உணர்விற்குக் காரணமாயிருந்தன. மறைக்கப்படக்கூடிய பிரச்சினைகள் சார்ந்து மனிதரின் மன அழுத்தங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்துள்ளன. எச்சரிக்கை உணர்வின் கனதி சார்ந்து தான் சட்டங்களும் விதிகளும் இயற்றப்படும் என்ற ரீதியில் இப்பிரச்சினை ஆண் பெண் உறவளவிற்கு சட்டத்திற்குட்படுத்தப்படாதிருந்திருக்கக் கூடிய சாத்தியம் மறுப்பதற்கில்லை. மேலும் சாத்திரி போராட்டத்தில் இணைந்திருந்த காலத்தில் இருந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள் என்று கூறிவிடமுடியாது. தலைவரின் ஆரம்ப நாட்களில் அவரோடு இருந்தவர்களே இன்றும் வாழ்கிறார்கள் எனும் போது சாத்திரி காலத்தவர்கள் இருப்பது வியப்பில்லை. இது எம்மைக் காட்டிலும் சாத்திரிக்கு அதிகம் தெரியும். எனனே நடக்காத ஒன்றைக் கற்பிதம் செய்து இத்தகைய ஒரு அவதூறைக் கிளப்பவேண்டிய தேவை சாத்திரிக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இனி எழுதிய பதிவை அழி;த்தமை பற்றிப் பார்க்கின், சாத்திரி எழுதிய ஒரு பதிவை நிர்வாகம் தூக்க, கொதிச்சுப் போய் சாத்திரி தான் எழுதிய சிலதைத் தானே தூக்க சாத்திரிக்குத் தடை வந்து விடுகிறது. தடைக்கான காரணமாக, சாத்திரி பதிவு போட்டாரே என்று நம்பி 120 பேர் பின்னூட்டம் போட்ட நிலையில் சாத்திரி பதிவைத் தூக்கினால் 120 பின்னூட்டர்களும் கேணயர்களாக ஆகிப்போகிறார்கள் என்கிறது கோபம். இநதக் கோபம் சார்ந்து எழுகின்ற ஒவ்வாமைகளை எந்தக் கோணத்தில் இருந்து எழுத ஆரம்பிப்பது என்று புரியாது மனம் திணறுகிறது. இயன்ற வரை முயலுகிறேன்.

ஒரு தலைப்பில் முதற்பதிவு அழிக்கப்படால் நேரம் மினக்கெட்டு மற்றவர்;கள் அத்தபை;பில் எழுதிய அத்தனை பின்னூட்டங்களும் கேணைத்தனமாகத் தெரியும் என்ற விவாதத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதாவது, 'ஆமால்ல', 'கிளம்பீட்டாய்யாகிளம்பீட்டான்', 'எத்தினைய செய்தனாங்க இதைச் செய்யமாட்டமா' என்பதுபோன்ற பின்னூட்டங்கள் ஏதாவது ஒரு தலைப்பைச் சார்ந்து தியட்டிரில் படம்பார்க்கும் ரசிகனின் வர்ணனை போன்று எழுதப்பட்டிருப்பின் தலைப்பின் முதற்கருத்து நீக்கப்படுகையில் அவை ஒருவேளை அர்த்தமற்றுத் தெரியலாம். ஆனால் அத்தகைய கருத்துக்களிற்கு 'நேரம் மினக்கெட்டு எழுதிய' பின்னூட்;டங்கள் என்ற அடைமொழி சரிவராது. நேரம் மினக்கெட்டு எழுதிய ஒரு பின்னூட்டம் எனின், ஏறத்தாள அப்பின்னூட்டம் என்னத்தைப் பேசுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு அப்பின்னூட்டம் மட்டுமே போதுமானது, தலைப்பின் முதற்பதிவு அவசியமற்றது. பின்னூட்டம் ஒரு குறும் பதிவை ஒத்தது என்ற வகையில் அது தனித்து வாழக்கூடியது. எனவே தலைப்பின் முதற் பதிவு நீக்கப்பட்டால் கீழுள்ள அனைத்தும் கேணைத்தனமாகத் தெரியும் என்பதை முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை.

அடுத்து, கருத்து யாரிற்குச் சொந்தமானது என்பது சார்ந்து எழும் கேள்வி. இணையவெளி உரிமைகள் பற்றிப் பரந்த, இன்னமும் மருவிக்கொண்டிருக்கும் விவாதவெளி விரிந்து கொண்டே இருக்கின்றது என்றபோதும், பொதுவாக ஒரு கருத்தை முன்வைப்பவரே சட்டத்தின் முன் அக்கருத்திற்கான பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கிறது. ஒருவர் மீது பிறிதொருவர் ஒரு கருத்துச் சார்ந்து வழக்குத் தொடர்கிறார் என்று வைத்துக்கொள்ளின், பிரச்சினையினை முளையிலே முடித்துவிட கருத்தாளர் விரும்பின் வக்கீல் நோட்டீஸ் கண்ட மாத்திரத்தில் தனது பதிவை அழிக்க நினைக்கலாம். பின்னூட்டங்கள் வந்துவிட்டனவே, பின்னூட்டர்களைக் கேணையர்கள் ஆக்கக் கூடாதே என்பதற்காகக் கருத்தாளரைப் பொதி சுமக்கக் கூற முடியாது. அதற்காகத்தானே எடுத்தேன் கவிழ்;த்தேன் என்று எழுதாது ஆற அமர ஒன்றிற்குப் பலதடவை யோசித்து எழுதும்படி கோருகிறோம் என்பது இந்த இடத்தில் எதிர்பார்க்கக்கூடிய ஒரு எதிர்வினை. ஆனால், ஒரு பதிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என அனைத்துக் கோணங்களையும் அதைப் பதிய முன்னர் கணக்கிட்டுவிடுவது எப்போதும் சாத்தியமானதல்ல. சில சமயங்களில் பதிந்ததன் பின்னர் எதிர்பாராத பிரச்சினைகள் தலைதூக்கலாம், இது சட்ட ரீதியாக மட்டுமன்றி தெரிந்தவர் உறவினர் என்ற முனைகளிலும் வரலாம். எனவே, கருத்தாளர்களின் கருத்துக்களிற்கு யாழ்களம் பொறுப்பேற்க முடியாது என்ற நிலையில், கருத்தாளரிற்குத் தான் பதிந்ததை அழிக்கும் உரிமை இருக்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

இறுதியாக, எந்த ஒரு சட்டத்திற்கும் 'லெற்றர் ஒவ் த லோ' மற்றும் 'ஸ்பிறிற் ஒப் த லோ' என்று இரு விடயங்கள் உண்டு. முதலாவது எழுத்தில் எவ்வாறு சட்டம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பது. இரண்டாவது அவ்வாறு ஒரு சட்டம் வருவதற்கான அடிப்படை என்ன, எத்தகைய விளைவுகளைத் தடுப்பதற்காக அச்சட்டம் இருக்கின்றது என்ற அடிப்படையில் அச்சட்டத்தின் ஆன்மா என்ன என்று பார்;ப்பது.

சட்டங்கள் விதிகள் என்பனவற்றை எழுத்து மட்டத்தில் மட்டும் பார்ப்பது ஆரோக்கியமற்றது. சப்பாத்திற்கு ஏற்ற கால்களைத் தேடுவது நடக்கத்தான் செய்யும் என்ற போதும், கால்களிற்கேற்ற சப்பாத்துக்கள் நோக்கிய தேடல்களும் இருக்கவே வேண்டும். மேற்கில் உள்ள சட்டங்களின் படி உள்ளே தள்ளுவது மட்டுமன்றி, புதிய வழக்குகள் சார்ந்து உள்ள சட்டங்களை மாற்றியமைப்பதும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சமூகம் முதிர்ச்சி அடைவதற்கு விதிகள் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஆழ்ந்த பார்வையும் இன்றியமையாதன. மூன்றாம் உலகநாடுகளின் முன்னைநாள் அரச உத்தியோகத்தர்கள் போன்று ஒரு கோப்பில் எழுதப்பட்ட விதிகளைச் சேகரித்து வைத்தபடி, காதிற்குள் ஒரு பென்சிலைச் சொருகிக்கொண்டு, எல்லோரும் எழுதப்பட்ட விதிகளிற்கமைய நடக்கிறார்களா என்று அலைவது அனைத்துச் சமூகத்திலும் நடக்கத்தான் செய்யும். பல குழந்தைகள் தாம் காணும் முதல் அதிகாரமான ஆசிரியரைப் போல வீட்டில் விளையாடுவது சகஜம் தான். அதுவும் ஈழத்தில்; குழந்தைகள் கையில் பிரம்பையும் வைத்துக்கொண்டு தான் ஆசிரியர் விளையாட்டை முன்பெல்லாம் விளையாடினார்கள். ஆசிரியரின் வகுப்பறை விதிகள் சரியா என்று குழந்தையால் விசாரிக்க முடியாது. ஆனால் வளர்ந்தவர்கள்;, இயன்றவரை, எழுதப்பட்ட விதிகளை அவற்றின் ஆன்மா சார்ந்து ஆழமாக நோக்குவதும், புதிய வழக்குகள் சார்ந்து விதிகளை ஆராய்வதும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

சிவப்பு எழுத்துத் தொடங்கும் இந்த இடத்தில் இருந்து உங்களின் விவாதத்தின் நேர்மை கேள்விக்குரியதாகிறது அண்ணா..! எப்படியாவது சாத்திரி அண்ணாவைப் பிழையின்றிக் காட்டி ஆகவேண்டும் என்ற பதற்றம் தெரிகிறது...ஒருவர் மேல் வைத்திருக்கும் மதிப்பு உங்கள் கருத்து நேர்மையை பொய் சொல்ல வைத்திருக்கிறது என்பது இந்த இடத்தில் தொடங்கும் உங்கள் எழுத்துப் பதற்றத்தில் இருந்து தெரிகிறது..உங்கள் சிந்தனைகள் மேல் அளவற்ற மதிப்பு வைத்திருந்தவன் நான்...சார்பு நிலை என்பது உங்களையும் பாதித்து விட்டது என்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது..உண்மையில் உங்க்ளைப் போலவே இன்னும் அதிகமாக சாத்திரி அண்ணையை நான் காப்பாற்றி இருக்கவேண்டும்..ஏனேனில் நானும் அவரின் எழுத்து ரசிகன்...ஆனால் நான் அதைப் பொய்யுக்குச் செய்வதை அவர் ஒரு போதும் விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்...தன்னைச் சுத்தி எதையும் பொய்யாகப் புனையாமல் வெளிச்சத்துக்குள் வாழும் மனிதர் அவர்...அவருக்குத் தெரியும் தான் செய்தது தவறு என்று..அதற்க்காக அவர் வாசகரிடம் மன்னிப்பும் கேட்டு விட்டார்..அவரின் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.