Jump to content

அறிவித்தல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

களவிதிகளை மீறி பிரச்சனைகளை உருவாக்கிய உறவுக்கும், அதனை ஆதரித்து தலைப்புகளை ஆரம்பித்த சக உறவுகளுக்கும், பொறுப்பாளர் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் மோகன் அண்ணாவின் மனம் நோகும் படி நடந்து கொண்ட உறவுக்கும் நன்றிகள்... <_< <_< <_<

பகலவனின் கருத்தை வழிமொழிகிறேன்..! 2014 வரையிலாவது இக்களத்தை இழுத்து நடத்தினீர்களென்றால் நல்லது..! அதற்கான உதவிகளை நான் உட்பட பலர் செய்யக் காத்திருக்கிறார்கள்..! குழப்பம் விளைவிப்பவர்களை நீக்கிவிடுங்கள்..!

இசையின் கருத்தை நானும் வழிமொழிகிறேன் மோகன் அண்ணா...

Link to post
Share on other sites
 • Replies 79
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

எனக்குதான் ஏழரை சனி எண்டால் யாழுக்குமா ?எனக்கு தான் அடிமேல் அடி போல கிடக்கு.எப்பிடிஎன்டாலும் ஏதாவது மனத்தாக்கம் வரும் போது யாழ்தான் ஒரு வடிகாலாக இருந்தது.அந்தவகையில் யாழுக்கும் மோகன் அண்ணாக்கும் மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

Link to post
Share on other sites

மோகன் அண்ணா 13 வருடம் பூர்த்தி ஆகி 14 ஆவது வருடம் ஆரம்பிக்கும் மார்ச் 30 அன்று தளத்தை மாற்றி அமைத்து புதிய வடிவில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு அதற்காக நேரத்தினையும் பணத்தினையும் செலவழித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு இணையவன் தன்னாலான அனைத்து உதவிகளையும் தனக்கு கிடைக்கும் சொற்ப நேரங்களில் செய்து கொண்டு இருந்தார். இருவருக்கும் சொந்த வாழ்க்கை, தொழில் என்பன இருந்தும் அவற்றுக்கான நேரம் போக கிடைக்கும் சில மணித்துளிகளில் தான் யாழை மாற்றி அமைத்து வேறு வடிவில் கொண்டு வர முயன்று கொண்டு இருந்தனர்.

இவ்வாறு யாழ் அடுத்த கட்டத்தினை நோக்கி அடி எடுக்கும் போதுதான், யாழை நிர்மூலமாக்கியே தீருவோம் என்று புறப்பட்டு சாத்திரியின் தடையை தமக்கு சாதகமாக்கி எல்லா வழிகளிலும் நிர்வாகத்தையும் மோகன் அண்ணாவையும் அவமானப் படுத்தி யாழை மூடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். இதில் ஈடுபட்டவர்களின் பெயர்களை முதல் வரிகளில் எழுதி விட்டு மோகன் அண்ணா அவர்களின் பெயரை வெளிவிடுவதை விரும்பமாட்டார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அழித்து விட்டு தொடர்கின்றேன்.

எம் இனத்தின் சாபம் இங்கும் தொடர்கின்றது. எதிரிகளால் நிறுத்தப்படாத யாழ் எம் இனத்தின் கோடாரிக் காம்புகளால் நிறுத்தப்படுகின்றது.

மோகன் அண்ணாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஒரு இழி இனமான எமக்கு மோகன் அண்ணா போன்றோரும் தனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்திலும் யாழை மெருகூட்ட எந்த வித பிரதிபலனும் இல்லாமல் மினக்கெட்ட இணையவன் போன்றோரும் தேவையில்லை. இவர்கள் இருவரும் சிங்கள இனத்தில் பிறக்காத தவறைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 'அம்மா' என்று முதல் மொழி சொல்வதற்கு பதிலாக 'அம்மே' என்று சொல்லி இருந்தால் இன்று இவர்களை சிங்கள இனம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்.

இதுக்கு மேலும் எழுத முற்படும் போது தூசனம் தான் வருகின்றது....

நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காலையில் திண்ணையில் எழுத முயன்று முடியாமல் ஏமாந்து போய்விட்டேன்.

30ம் திகதியை வெகு விமர்சையாக கொண்டாடி மோகன் அண்ணாவை மகிழ்வித்து விடுங்கள். யாழ் 100 ஆண்டு காலம் வாழட்டும். இந்த திரியை அதற்கான வழிகளை ஆராயும் திரியாக மாற்றிவிடுங்கள் .

யாழ் போனால் நம் எல்லோராலும் தான் போனதாக வைத்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் கைகொடுத்தால் நிச்சயமாக மோகன் அண்ணாவுக்கு சாத்திரியாரின் விடையத்தை கையாள முடியும் என்று நம்புங்கள். எனவே யாழை கையில் எடுக்க முயலாமல் கருத்துகளை மட்டும் எழுதி பிரச்சனைகளைத் தீர்க்க முயலுங்கள்.

நாம் எல்லோரும் பிழைகள் விட்டிருக்கிறோம். நமது வீக்கத்திகேற்ப எதையாவது சாதித்துமிருக்கிறோம். ஆனால் யாழை எங்கள் எல்லோரையும் இணைத்து மோகன் அண்ணா இதுவரையும் நடத்தி வந்தது சாதனையே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகலவனின் கருத்துக்களை ஆமோதித்து, இன்று என்றுமில்லாத ஒரு கால கட்டத்தில் எமது தாயக மக்கள் போராட்டம் நுழைந்துள்ள நிலையில் யாழ்கள தேவைகள் தொடரவேண்டும்.

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

முற்றுமுழுதாக உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன் அகூதா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா, தயவு செய்து யாழை மூடாதீர்கள். நான் யாழில் எழுதுவது குறைவுதான். ஆனால், யாழின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்திருக்கிறேன். உங்கள் களவிதிகளைக் கடுமையாகக் கடைப்பிடியுங்கள் அண்ணா. களவிதிகளை மதிக்காதவர்களைக் களைந்து விட்டு மேற்கொண்டு யாழை நடத்துங்கள். களவிதிகளை மதிப்பவர்களை மட்டும் கொண்டு யாழை நடத்துங்கள்.

இந்தப் புல்லுருவிகளுக்காகவெல்லாம் யாழை மூடாதீர்கள். வேறு காரணத்திற்காக மூடுவதாக இருந்தாலும் தயவு செய்து இந்த சந்தர்ப்பத்தில் மூடாதீர்கள். அப்படி மூடுவீர்களானால், அந்தப் புல்லுருவிகளுக்குப் பயந்து மூடுவதாக அவர்கள் வெற்றிக் களிப்பில் இருப்பார்கள். உங்களுக்கு அப்படியான ஒரு பெயர் வரக்கூடாது அண்ணா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மோகண்ணா இது அதிர்ச்சியான செய்தி, ஒரு பருவ வயதை எட்டும் யாழை இழுத்து மூடுவது, எமக்கு மட்டுமல்ல, யாழின் வாசகர்களுக்கும்தான் அதிர்ச்சி,

ஈழ மக்களுக்கான எஞ்சிருக்கும் ஒரு உறவு பாலத்தை தயவு செய்து மூடிவீடாதீர்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா இணையத்தை மூடுவது பற்றி மீள் பரிசிலனை செய்யமுடியாதா ? என்னைப்போன்றோருக்கு பெரிய இழப்பு மூடாதேங்கோ மோகன் அண்ணா அன்பாக கேட்டு கொள்கின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

அகூதா அவர்களின் கருத்தே என்னுடையதும்.

நேற்றுத்தான் யாழில் இணைந்தேன். ஆனாலும் பலகாலமாய் யாழின் வாசகன்.

மோகன் அவர்கள் தனது முடிவை மாற்றுவார் என நம்புகிறேன்.

Link to post
Share on other sites

கோடாரிக் காம்புகளுக்காக யாழை மூடுவது வெட்கக்கேடானது. இவர்களை கட்டாயம் யாழ் கள உறுப்பினர்கள் எல்லாருக்கும் வெளிப்படுத்த வேண்டும்.யாழ் கழத்தில் வாதிட முடியாமல் மோகன் அண்ணாவுக்கு மிரட்டல் விடுபவர்கள் தமிழராக இருக்க லாயக்கற்றவர்கள்.

யாழ்க்களத்தை இவ்வளவு காலமும் கொண்டு நடாத்திய மோகன் அண்ணாவுக்கும் ஏனையவர்களுக்கும் நன்றி.

Link to post
Share on other sites

மோகன் யாழை மூடப்போகின்றேன் என்பதும், எல்லோரும் வந்து மூடாதீர்கள் என்று கெஞ்சுவதும் வழமையாகிவிட்டது. மூடுவதென்றால் மூடுங்கள், திறந்து வைத்திருப்பதென்றால் திறந்துவைத்திருங்கள். எப்படியான தெரிவிற்கும் எனது ஆதரவு உண்டு. சென்றதடவைபோல் உணர்ச்சிவசப்பட்டு யாராவது உங்கள் இரகசியங்களை இங்கே அவிழ்த்துவிடுவீர்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். புத்தன், கவலை வேண்டாம் மார்ச் 30 இற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. 200 மேலதிக கருத்துக்களை எழுதி 50 சதங்கள் அடிப்பது சாத்தியமே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதைவிட எத்தனையோ சோதனைகள் வந்த போதெல்லாம் கலங்காக மோகன்

இப்போது இப்படியான முடிவை எடுத்திருப்பது வேதனையழிக்கிறது.

எதிரிகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டிற்கான ஆயதங்களை தொடங்கிவிட்டு பின்னர் மூடதீர்மனித்திருப்பதேன்பது மனதை கொஞ்சம் நெருடுகின்றது .

கருத்துகளத்தில் எழுதுவதுடன் எனது அலுவல் முடிந்துவிடும் ,உள்ளே அப்படி என்ன பாரதூரமாக நடந்ததோ எனக்கு தெரியாது .

தனிநபர் தாக்குதல் என்று ஒன்றை (அது யார் மீதாகவும் இருக்கலாம் ) அனுமதித்தால் அது என்றோ ஒரு நாள் பிரச்சனைக்கு அடிகோலிவிடும் என்று மட்டும் உணர்ந்திருந்தேன் ,

முடிவை மீள்பரிசீலனை செய்து, விதிகளை சற்று இறுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மோகன் யாழை மூடப்போகின்றேன் என்பதும், எல்லோரும் வந்து மூடாதீர்கள் என்று கெஞ்சுவதும் வழமையாகிவிட்டது. மூடுவதென்றால் மூடுங்கள், திறந்து வைத்திருப்பதென்றால் திறந்துவைத்திருங்கள். எப்படியான தெரிவிற்கும் எனது ஆதரவு உண்டு. சென்றதடவைபோல் உணர்ச்சிவசப்பட்டு யாராவது உங்கள் இரகசியங்களை இங்கே அவிழ்த்துவிடுவீர்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். புத்தன், கவலை வேண்டாம் மார்ச் 30 இற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. 200 மேலதிக கருத்துக்களை எழுதி 50 சதங்கள் அடிப்பது சாத்தியமே.

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களத்திற்குரிய விதிகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படுதல்

கருத்துக்களம் சின்னாபின்னமாகி அதற்குரிய தனித்துவத்தை இழந்துவிடுதல்.

பத்தோடு பதினொன்றாக சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ப யாழ் மாறுதல்

போன்ற நிலைமைகள் ஏற்படின் இதுவரை காலமும் யாழ் நடைபோட்ட பாதை களங்கமுறும்.

சிலரின் நிதானம் இழந்த செயல்கள் ஒரு கருத்துக்களத்தை முடக்கும் சக்தி வாய்ந்ததா?

இருந்தகாலம் வரையும் நிமிர்ந்து நின்றோம் என்ற பெருமையோடு நிறுத்தப்படுவதே சிறப்பிற்குரியது.

ஒரு பொதுத்தளத்தில் ஒரு சின்ன விடயத்தை செய்ய முற்பட்டாலே எவ்வளவு சவால்களையும் சங்கடங்களையும் தாண்ட வேண்டி இருக்கிறது. மோகனண்ணா நீங்கள் உங்கள் அமைதியைத் தொலைத்து இந்த சமூக வலைத்தளத்தால் மன உளைச்சல்களையே அதிகம் பெற்றிருப்பீர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே....

சில கருத்துக்களை வாசிக்கும் எமக்கே நிம்மதி தொலையும்போது அதனை அகற்றும் அல்லது மாற்றம் செய்யச் சொல்லி பதிவிட்டவரை அணுகும் மட்டுறுத்தினர்களுக்கு எவ்வகையான மனோநிலை ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது.

நிர்வாகத்தினரை கருத்தாளர்கள் உதாசீனப்படுத்துவதும், விதிமுறைகளை உதாசீனம் செய்வதும் கருத்துக்களத்திற்கு வெளியே நிர்வாகத்தினர் கொடுக்கும் எச்சரிக்கை மடலை பலருக்கு அனுப்பி உண்மையான நிலையை அறியாத அவர்களை, நிர்வாகத்திற்கு எதிராக எழுத உந்துவதும் இந்தக்கருத்துக்களத்தில் உலவும் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு விடயமாக இருக்கிறது. சமீப காலமாக இது ஒருவகைச் சுயவிளம்பரமாகவும் பயணிப்பதை அவதானிக்கமுடிகிறது. அந்தச் சுயவிளம்பிகளை இங்கு வெளிச்சம் போட்டுக்காட்டத்தேவையில்லை அநேகமாக பலருக்குத் தெரியும்.

இத்தகையோரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாம் அடையாளம் கண்டு கொண்டால் போதும்.

இந்தக்கருத்துக்களம் நிறுத்தப்பட்டால்..... அண்மைக்காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்ற தடையின் நிமித்தம் இந்தக்கருத்துக்களம் சறுக்குண்டு அதன் நிமித்தம் நிறுத்தப்பட்டதாய் நிறையச் செய்திகள் தந்தியடிக்கும். புதிய உறுப்பினராக இருந்தாலும் பழைய உறுப்பினராக இருந்தாலும் விதிமுறைகளுக்குக் கட்டுப்படவேண்டும். இன்று இணைய உலகில் யாழ் கருத்துக்களம் ஒரு நேர் கோட்டில் வாளின் கூர் முனையில் நிற்பதை உணர முடிகிறது. ஒரு பெரும் படைப்பாளி என்பதற்காக விதிமுறைகளைத் தளர்த்தினால் தொடர்ந்தும் மற்றவர்களுக்காகவும் மீண்டும் மீண்டும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் யாழ் கருத்துக்களம் அந்நிலைக்குத் தள்ளப்படும்.

யாழ் இணையம் இயங்கவேண்டும்

அதற்கு எவ்வகையில் என்னால் உதவ முடியும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன்

யாழ் இணையத்தை மூடாதீர்கள் என்று மோகனண்ணாவிடம் கேட்க முடியாது.....

யாழ் கருத்துக்களம் தொடர்ந்து இயங்கினால் மகிழ்வடைவேன் .. நிறுத்தப்பட்டால் தாங்கிக் கொள்வேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

செயல்படும் ஈழ இணையங்களில் மிகச் சிறப்பாக, சுயாதீனமாக செயற்பட்ட தளம். மோகனிற்கும் நிர்வாகத்திற்கும் நன்றி.

திண்ணையில் பிரச்சனைகள் ஆரம்பித்து, கருத்துக்களத்தில் பரவுவதை பகிடியாக 'யாழ் ஆளுமன்றத்தில்' பகிடியாகச் சொல்லி இருந்தேன்.

தங்கள் படைப்புக்களை பிரபலப்படுத்த பலர் இந்தக் களத்தை பயன்படுத்துகின்றனர் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நிழலி

யார் அந்தக் கோடாரிக்காம்புகள்.

கோடரிக்காம்புகளின் பெயர்களை, யாராகினும் துணிந்து கூறலாமே?

Link to post
Share on other sites

இணையவெளியில், தமிழில், யாழ் களத்தில் மட்டுமே எழுதியுள்ளேன் என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளை மோகனிற்குத் தெரிவித்துக் கொள்வதோடு யாழின் முடிவு சார்ந்து கவலையினiயும் பதிவுசெய்து கொள்கிறேன்.

விவாதங்கள் வழியாக எவரையேனும் சங்கடப்படுததியிருந்தாலோ காயப்படுத்தியிருந்தாலோ மன்னித்துக்கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள்.

Link to post
Share on other sites

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

இது உங்கள் கண்டுபிடிப்பு? அதை மோகன் சொல்லட்டும் நான் விலகிக்கொள்கின்றேன். அடுத்தவனை நோக்கி விரலைக்காட்டாமல் யாழ் நிலைப்பதற்கு நீங்கள் எதை உருப்படியாய் செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

நன்றி!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன்!

யாழை தொடர்ந்து நடத்துவதும் நடத்தாமல் உங்கள் தனிப்பட்டபிரச்சனை.ஓடுற வண்டியில் என்னைப்போன்றவர்கள் சேர்ந்து ஓடினமே தவிர....அதன் அனைத்து வலிகளும் சுமைகளும் தெரிந்திருக்கவுமில்லை.நீங்களும் அப்படித்தான் எங்களை நடத்தினீர்கள்!பல இடங்களில் கேள்விகளை கேட்டுவிட்டு அல்லது ஒரு விடயத்தை ஆரம்பித்துவிட்டு அதன் பதில்களுக்கு எந்தவொரு கருத்துக்களோ பதில்களோ நீங்கள் கொடுக்கவில்லை.சில இடங்களில் உங்கள் பதில்களுக்கு மூக்குச்சாத்திரம் பார்கவேண்டிய நிலையும் இருந்தது.

களம்,குடும்பம் என்றால் பலதும்பத்தும் இருக்கத்தான் செய்யும்.எடுத்ததிற்க்கெல்லாம் நல்லதே நடக்குமெனநினைத்தால் அது தவறு.எல்லோரும் நல்லதையே செய்வார்கள் எனநினைத்தால் அதுவும் தவறு.கூடப்பிறந்த சகோதரங்களுகிடையே ஆயிரம் வெட்டுப்பகை குத்துப்பகைகளை நேரடியாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.பெற்றதாய் தகப்பனையையே கவனிக்காத பிள்ளைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது இந்த உலகம்.

உதாரணத்திற்கு எமது விடுதலைப்போராட்டத்தினை அன்று தொடக்கம் கவனித்துப்பாருங்கள் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் அழிவுகள்.

யாராக இருந்தாலும் யாழில் இடையூறு செய்பவர்களை (நானும் அடக்கம்)வெளியேற்றி விட்டு சிறந்தபடியாக யாழை முன்னெடுத்து செல்வதுதான் அழகு.இல்லை யாழ்களம் மூடப்படும் எடுத்தமுடிவு எடுத்ததுதான் என்றால் யாரால் என்ன செய்ய முடியும்?

இதுவரை காலமும் இங்கே நல்ல ஆக்கங்களை தந்தவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?.......பதிவெடுத்துக்கொள்ளுங்கள்???????

Link to post
Share on other sites

நிச்சயமாக மோகன் அண்ணாவின் உழைப்பினை புரியாது விட்ட வேதனையைப் புரிந்து கொள்கின்றேன். இதுவரை காலமும் யாழிற்காக செலவளித்த நேரம் மட்டுமல்லாமல், நேர்மை, சகிப்புத்தன்மை, இரகசியம் பேணல் தொடர்பான அனைத்து உயர் பண்புகளுக்குமாக மரியாதை செய்கின்றேன்.

புதினம் இணையத்தின் சகோதர இணையம் போலச் செயற்பட்ட இத்தளம், புதினம் முள்ளிவாய்க்கால்  துயரத்தோடு தன்னை நிறைவுசெய்த காலம் முதல், யாழும் விருப்பத்தோடு, விரும்பமின்றி இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விடயம். நிச்சயமாக கடந்த 6 வருடங்களாகப் பழகித் தொடர்பில் இல்லாது போன பல உறவுகளை நினைவில் கொள்கின்றேன்.

எல்லாக் காலத்திலும் சண்டை, சச்சரவு, இருந்தது தான். ஆனால், அன்று நமக்கென்று எல்லோருமே இருந்தார்கள். நம் சொந்தங்கள், தலைவர், போராளிகள், உறவுகள்.... ஆனால் அதை இழந்து நிர்கதியாக ஆறுதல் தேடுகின்ற சூழலில், எரிச்சல்படுத்தும் விதமாக களத்தில் நடந்து கொள்ளும் விதம் சரியானதாகத் தெரியவில்லை என்பது தான் தனிஎன்றோ

என்றோ ஒருநாள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு.. அது சாத்தியமாக வேண்டும் என இறைவனை இறைஞ்சுகின்றேன்!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

தங்கள் சித்தமே எங்கள் பாக்கியம். உங்களின் மனநிலையில் வேறு சிலரும் இங்குளர் என்பதையும் நாங்களும் அறிவோம்..!

இதன் மூலம் யாழ் தொடர்ந்து இயங்கும் என்பதை மோகன் அண்ணா உறுதி செய்தால்.. நாம் நிச்சயமாக எமது ஐபி தடை செய்யப்பட கேட்டு.. இதில் இருந்து மிக மகிழ்ச்சியாக வெளியேறிக் கொள்வோம். எம்மால் எமது இனத்துக்கு நிகழப் போகின்ற ஒரு இணைய இழப்பை இவ்வழியில் தடுக்க முடியும் என்றால் நிச்சயம் அதை நாங்கள் செய்யத் தயாராகவே உள்ளோம்..!

யாழில் கற்றுக் கொண்ட இணையத் தமிழால் யாழில் எழுதப்பட்ட ஆக்கங்கள் யாழோடு சங்கமமாவதையே நாங்கள் விரும்புகின்றோம்..! எங்களுக்கும் எழுத இடமளித்த யாழிற்கு நன்றி..!

எங்களுக்கு யாழில் உள்ளவர்கள் எவரோடும் தனிப்பட்ட தொடர்புகள்.. தொடர்பாடல்கள் கிடையாது..! நாம் தொடர்ந்தும் அந்த நிலையைப் பேணுவதோடு.. யாழ் நிர்வாகத்திற்கு வெளியில் இருந்தோ உள்ளிருந்தோ.. இடர்கள் குறைகள் செய்ததும் இல்லை..! செய்யப் போவதும் இல்லை..! அந்த வகையில் எமது வெளியேற்றம் யாழை தொடந்து இயங்கச் செய்யும் என்ற வினீத் என்பவரின் அதி உச்ச கண்டுபிடிப்பை மதித்து.. மோகன் அண்ணா யாழை தொடர்ந்து இயங்க வைக்க எங்களை வெளியேற்றுவது குறித்து எந்த வித சங்கடங்களும் இன்றி முழுச் சுதந்திரத்தோடு முடிவெடுக்க இதயபூர்வமாக சம்மதிக்கிறோம்..!

நிச்சயம் ஒரு நாள் நியாயமும் உண்மையும் சத்தியமும் வெல்லும்..!

நன்றி.

என்றும்

நட்புடன் நெடுக்ஸ்..! :):icon_idea:

Link to post
Share on other sites

மிக கவலையளிக்கும் முடிவு.

மோகன் தயவு செய்து உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள்.

தமிழினம் தன்னை நிலைநிறுத்தும் வரை தொடர்ந்து யாழை இயக்குங்கள்.

Link to post
Share on other sites

இது குழந்தைத்தனமான கருத்து நெடுக்ஸ். உங்களின் இருப்பு, செயற்பாட்டினை 3ம் மனிதனால் கட்டுப்படுத்த செயற்படுத்த முயலுமெனில், நீங்கள் உலகத்தில் இருந்து என்ன பயன். ( நான் இப்படிச் சொன்னதற்காக, உயிர்த் தியாகம் எல்லாம் வேண்டாம்))

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தைத்தனமான கருத்து நெடுக்ஸ். உங்களின் இருப்பு, செயற்பாட்டினை 3ம் மனிதனால் கட்டுப்படுத்த செயற்படுத்த முயலுமெனில், நீங்கள் உலகத்தில் இருந்து என்ன பயன். ( நான் இப்படிச் சொன்னதற்காக, உயிர்த் தியாகம் எல்லாம் வேண்டாம்))

என்னுடைய சொந்த விடயம் என்றால்.. இந்த மூன்றாம் மனிதர்களை நான் மனிதர்களாகவே இனங்காண மாட்டேன். இவர்களின் வார்த்தைகள் கூச்சலை விட கேவலமாக கணிக்கப்பட்டிருக்கும்..! ஆனால்..

யாழ் என்பது ஒரு இனத்தின் இருப்புக்கான சமூக வலையமைப்பைப் பேணும் தளம். அந்த வகையில் அதன் இயக்கம் நின்று போவதற்கு நாங்கள் காரணமாக இருக்கக் கூடாது. அது மறைமுகமாக எமது எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உதவி நிற்பது போன்றது. எக்காரணம் கொண்டும் எம் இனத்துரோகிகளும்.. எதிரிகளும் எம்மால் நன்மையடையக் கூடாது.

தமிழ்நாதம்.. புதினம்.. தமிழ்நேசன் என்று பல பெறுமதிமிக்க இனத்தொண்டாற்றி வந்த இணையங்கள் இழுத்து மூடப்பட்ட போதும் வேறு சில இணையங்கள் வழித்தடம் மாறிய போதும்.. நான் அடைந்த வேதனை சொல்லில் அடங்காது.

அந்த நிலை சிலரின் அடாத்தான தூண்டலின் பெயரால் எங்களின் பெயரால் யாழிற்கும்.. நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அந்த வகையில் மோகன் அண்ணா எங்களை எல்லாம் வெளியேற்றுவதன் மூலமாகத்தான்.. இந்த களத்தை.. இணையத்தை இயக்க வேண்டி இருப்பதாக எண்ணினால்.. அதற்கான முடிவை.. அவர் தயங்காமல் எடுக்க ஊக்குவிக்க வேண்டியது எமது இனத்தின் மேலான எமது கடமையும் கூட..!

அதையே தான் இங்கு சொல்லி இருக்கிறோம்.. தூயவன்..!

இவ்வளவு விளக்கமும் இத்தலைப்பில் போதும் என்று நினைக்கிறேன். எனி இதில் பதில் இடும் வகையில் எம்மை நோக்கி.. கேள்வி கேட்பதை கள உறவுகள் தயவுசெய்து தவிர்த்தீர்கள் என்றால் நல்லம்..!

நன்றி.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறீர்கள், எழுதி இருக்கிறீர்கள். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அங்கு சென்றிருக்கிறீர்களா…? அவர்களுடன் நேரில் பேசி இருகிறீர்களா? ஓம். அதனை நினைவு கூர்கிறேன். லண்டனிலிருந்து டெல்லிக்கு சென்று அங்கிருந்து புறப்பட்டு சாமம் 2 மணிக்கு சென்னையில் இறங்கிய போது விடுதலைப்புலிகள்தான் என்னை வரவேற்றார்கள். கஸ்ரோ தான் என்னை வரவேற்று “வாங்கோ அக்கா” என்று கூட்டிக்கொண்டு போனார். வீதியில், நான் நடுவில், முன்னுக்கு ஒரு ஓட்டோ, பின்னுக்கு ஒரு கார் என்று போகும் போது ஒரு பொலிஸ் கேட்டார் “என்னப்பா இந்த நடுச் சாமத்தில் ஊர்வலமாக போறீர்கள்?” என்று. “எங்களுடைய அக்கா லண்டனிலிருந்து வந்து இருக்கிறார். அவர் பெரிய எழுத்தாளர்.  அவர் ஆராய்ச்சிக்காக வந்திருக்கின்றார்” என்று காஸ்ரோ சொல்ல, “சரிப்பா போங்க” என்று பெரிய ஆரவாரம். அடுத்த நாள் பாலா அண்ணாவைப் பார்க்க அடையார் போனேன். அங்கே போனால் வெளியே இந்தியன் ஆர்மி நிற்கின்றார்கள். பொலிஸ்காரர்கள் நிற்கின்றார்கள். உள்ளுக்குள் விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளோடு நிற்கின்றார்கள். எனக்குத் தலை சுத்தத் தொடங்கி விட்டது. நான் லண்டனில் பார்த்த பாலா அண்ணா வேறு. லண்டனில் ஒரு கவுன்ஸில் வீட்டில் சாதாரணமாக இருந்தவர். சென்னையில் பார்த்தால் அவருக்கு இவ்வளவு பாதுகாப்பு. உள்ளுக்கு போவதற்கு நிறைய கேள்வி. அவர் ஒரு பெரிய கூட்டத்தோடு இருந்தார். இலங்கைக்கு போவதாகக் சொன்னேன். “கவனமாக இருங்க தங்கச்சி” என்று சொல்லி அனுப்பினார். அப்போதுதான் இந்தியன் ஆர்மி இலங்கைக்கு வந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்தபோது ஆய்வுகளுக்காக நிறைய இடங்களுக்கு போக வேண்டி இருந்தது. அப்போதுதான் அகதி முகாம்களுக்கு எல்லாம் போனேன். நிறைய அகதி முகாம்கள். கோவளத்திலிருந்து மதுரை வரை சுற்றினேன். அகதி முகாம்களில் நிலைமை மிகுந்த துயரை அளித்தது. இனி இல்லை என்ற ஏழ்மை. அகதி முகாம்கள் எல்லாம் பார்த்துவிட்டு வந்து பாலசிங்கம் அண்ணாவை கேட்டேன், ‘இவர்கள் எல்லோரையும் என்ன செய்வது? இலங்கையில் சமாதானம் வந்து விட்டதுதானே, இலங்கையில் resettlement செய்கின்ற வேலைகளை நீங்கள் செய்கின்றீர்களா’ என்று கேட்டேன். அவர் மறுமொழி பேசவில்லை. ‘இலங்கைக்கு போய்விட்டு வாருங்கள், இதைப்பற்றி கதைப்போம்’ என்று சொன்னார். கொழும்புக்கு போனால் அங்கே ஆர்மி ஒன்றும் இல்லை. ஊருக்குப் போனால் எங்கும் இராணுவம். காலையில் எழுந்து பார்த்தால் இந்தியன் ஆர்மி ரோந்து போய்க்கொண்டிருந்தார்கள். அது நான் எதிர்பாராத ஒரு விஷயம். ஏனென்றால் எனக்கு இராணுவ முகாம்கள் எங்கே இருக்கின்றன என்று தெரியாது. ஆர்மி அன்று ரோந்து போனபோதுதான் அவர்களுடைய பிரமாண்டம் எனக்கு தெரிய வந்தது. இலங்கை ஆர்மி முகாமில் இருக்கின்றது என்று தெரியும். அவர்களை நான் கண்டதில்லை. இந்தியன் ஆமியோ ரோட்டால் ரோந்து போகிறார்கள். நான் யாழ்ப்பாணம் போக வேண்டியிருந்தது. என்னுடைய கடைசி மகனை மாமி பார்க்கவில்லை. மாமிக்கும் பிள்ளையைக் காட்டுகின்றேன் என்று சொல்லி விட்டுத் தான் வந்தேன். இந்தியன் ஆர்மியின் அனுமதி இல்லாமல் நீங்கள் போக முடியாது என்று உறவினர்கள் சொன்னார்கள். ‘இது இலங்கை, நான் இந்தியன் ஆர்மியின் அனுமதியுடன் தான் போகனுமா என்னுடைய சொந்தக்காரர் விட்டுக்கு’ என்று கேட்டேன். உங்களுக்கு ஒன்றும் புரியாது. எல்லாமே இந்தியன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றது என்றார்கள். ‘இலங்கையிலிருந்து இலங்கையின் இன்னொரு பகுதிக்கு போவதற்கு ஏன் இந்தியன் ஆர்மியின் அனுமதி’ என்று கேட்டேன். ‘அப்படித்தான், இந்த இயக்கங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிக்கின்றார்கள். ஆளுக்கு ஆள் அடிபடுறாங்கள். அதில் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். நீங்களும் அதுக்குள் அகப்படக்கூடாது’ என்றார்கள். எனக்கு இது எல்லாம் புதிய விடயங்கள். சமாதான காலம் என்றுதான் நான் போனேன். நான் இந்தியன் ஆமியை பார்க்க முகாமுக்குச் சென்றேன். வாயில் காவலரிடம், I want to see your commander in chief என்று சொன்னேன். Boss என்று ஏதோ சொன்னார். “I want to see your boss” என்று சொன்னேன். உள்ளுக்குள் விட்டார்.  உள்ளே போவதற்கே ஒரு மைல் நடக்க வேண்டும். அவ்வளவு தூரம். நடந்து போனால் பிரமாண்டமான ஒரு மண்டபத்தில் பட்டைகள் போட்ட சீருடையுடன் நிறைய பேர் இருக்கின்றார்கள். மட்டக்களப்பு commander in chief ஆக இருந்தவர் அருமையான ஒரு புன்னகையுடன் கேட்டார் ‘What can I do for you, medam?’ என்று. I want to go to Jaffna to see my mother-in-law என்று சொன்னேன். அவர் சொன்னார் ‘I am so sorry, medam. Only the condition can take you. If you belong to an organization. What organization’ என்று கேட்டார். Any liberation groups? ‘I am not member of any liberation group. I am a British. I cannot belong to these liberation groups. I am not. I am a Sri Lankan origin. I want to see my mother-in-law. Is that crime?’ ‘No medam, you don’t understand the situation” என்று சொன்னார். பிறகு அவரைக் கேட்டேன் ‘You supposed to be peace keeping force. Why are you keeping so many stuffs? I am not understanding. I have not ever seen military force in my whole life. Why these many people? why these armories? why, why என்று நிறைய கேட்டேன். எங்களுடைய அரசாங்கம் சொன்னது அமைதியைக் காக்க என்று, அதனாலேயே நாங்கள் வந்து விட்டோம் என்றார். நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனேன். ‘ஐயோ! இவ்வளவு துணிவா, உனக்கு நீ ஆர்மிகாரன்களின் camp க்குள் போய் வந்திருக்கின்றாய்’ என்று ஆச்சரியப்பட்டார்கள், நான் சொன்னேன் ‘ஆர்மிகாரன்களும் மனிதர்கள், என்னை பிடித்து சாப்பிடப்போகின்றார்களா?’ என்று. ஆர்மிக்காரர்கள் என்பதன் அர்த்தம் எனக்கு அதன் அப்ப விளங்கவில்லை. இப்பவும் விளங்கவில்லை. சண்டை தொடங்கியதன் பிறகுதான் புரிந்தது,  அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று. யாழ்ப்பாணத்தில் என்ன கொடுமை செய்தார்கள் என்பதெல்லாம், Amnesty International report வரும் போது தான் தெரிந்தது. அன்று பார்த்த Army commanderக்கு பின்னால் இருந்தவர்கள்தான் இந்தக் கொடுமையெல்லாவற்றையும் செய்திருக்க முடியாமா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. ஏன் என்றால் இலங்கை இராணும் செய்யாத atrocity எல்லாம் இந்தியன் ஆர்மி செய்தது. ‘கோவை ஞானி’ உங்கள் மீது தனிப்பிரியம் கொண்டிருந்தார். உங்களுக்கு அவர் ஓர் ஆசான் என்றும் சொல்லலாம். அவருடனான நினைவுகளை எவ்வாறு தொகுத்துக் கொள்கிறீர்கள்? கோவை ஞானி ஐயா 1980களில் ‘சிறந்த நாவலாசிரியர்கள்’ என்ற ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் என்னுடைய பெயரும் வந்திருந்தது. அதை எனக்கு பத்மநாப ஐயர் அனுப்பியிருந்தார். நன்றி சொல்லி கோவை ஞானி ஐயாவுக்கு நான் கடிதம் போட்டேன். அதற்குப் பின்னரான காலத்தில் என் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இலங்கை அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன, இவையெல்லாம் 1980-ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் நடக்கின்றது என்று நினைக்கின்றேன். அந்த கால கட்டத்தில் நான் மிகமிகத் தீவிரமாக, நேரமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தேன். மனித உரிமை விஷயங்கள், தமிழருக்கான உரிமைப் போராட்டம், தமிழருக்காக பேரினவாத கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்று பலவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். இது ஒரு பக்கம், அடுத்த பக்கம் லண்டன் அரசியலில் தலைகீழாக பிரமாண்டமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. அதாவது 1980 ஆம் ஆண்டுகளில் Mrs Margaret Thatcher,  Nelson Mandela ஐ ஒரு பயங்கரவாதி என அறிவிக்கின்றார். ஆபிரிக்க  தலைவரை இங்கே கூப்பிடுகின்றார். நாங்கள் அதற்கு எதிராக போராடுகின்றோம். குறிப்பாக பெண்கள். இங்கிலாந்திலேயே பிரமாண்டமான எதிர் ஊர்வலமாக அது அமைந்தது. இப்படியான அரசியல் வேலைகளினால் என்னுடைய தமிழ் வாசிப்பு குறைந்துவிட்டது. அப்போது தமிழ் அகதிகள் சார்ந்த வேலைகளுக்காக முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். பகுதிநேரமாக வாழ்க்கைச் செலவுக்காக வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னால் ஒன்றும் தமிழில் எழுத முடியவில்லை. எதுவும் எழுதுகின்றீர்களா என்று ஐயாவின் கடிதம் அடிக்கடி வரும். நான் ஒரு பெரிய பட்டியல் போடுவேன். என்னென்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று. Minors strike நடக்கின்றது, அரசியல் போராட்டங்கள் நடக்கின்றது, அமெரிக்கன் ஏவுகனை வந்திருக்கின்றது, பெண்ணிய போராட்டங்கள் நடக்கின்றது. ஐயாவுக்கு பெரிய சந்தோஷம், இதெல்லாம் கேட்கிறதுக்கு. மிகவும் சந்தோஷம், இதெல்லாம் நடக்கின்றது. இந்த அம்மா இதிலெல்லாம் ஈடுபடுகின்றார்கள் என்று எழுதுவார். 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு போயிருந்த நேரம் சென்னையிலிருந்து தொலைபேசியில் அழைத்தேன். ‘இந்தியாவில் நிற்கின்றேன் ஐயா. நான் வாஹினி ஸ்ரூடியோவில் நேர்காணல் செய்து கொண்டிருக்கின்றேன்..’ என்று சொன்னேன். அப்போது அவர் நீங்கள் ஏன் ஒரு எழுத்தாளரை நேர்காணல் செய்யக்கூடாது என்று கேட்டார்.  நான் அவருடன் கதைக்கும் போது சொல்லியிருக்கின்றேன். எனக்கு ராஜம் கிருஷ்ணனை பிடிக்கும் என்று. ராஜம் கிருஷ்ணனை நேர்காணல் செய்யக் கூடாதா, ஜெயகாந்தனை நேர்காணல் செய்யக் கூடாதா, இந்திரபார்த்தசாரதியை நேர்காணல் செய்யக்கூடாதா என்று ஒரு பட்டியலைத் தந்தார். ஐயா எனக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை என்று சொன்னேன். எனக்கு  ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன் இருவரையும்  ரொம்ப பிடிக்கும். ஐயாவிடம் போன பிறகு லண்டனில் என்ன செய்கிறீர்கள் என்று நேரடியாகக் கேட்டார். இந்தியப் பெண்களை விட வித்தியாசமான எழுத்தாளர் என்றும் சொன்னார். ஏன் என்று கேட்டேன். இந்தியப் பெண்களுக்கு தயக்கம் இருக்கின்றது எழுதுவதற்கு. அது உங்களிடம் இல்லை என்றார். நான் சொன்னேன் இலங்கையில் இருந்து கொண்டே தயக்கமில்லாமல் எழுதினேன். சாதிய கொடுமைகள் பற்றி எல்லாம் எழுதியிருக்கிறேன், லண்டனுக்கு வந்த பிறகு சுதந்திரமான பேச்சு இருக்கின்றதால் இன்னும் கூட எழுதுகின்றேன். ஆனால் எனக்கு தமிழில் எழுத இப்போதைக்கு நேரமில்லை என்று சொன்னேன். உங்களைப் போல் இருக்கின்ற பெண் எழுத்தாளர்கள் குறைவு, முடியுமானவரை எழுதுங்கள் என்று ஐயா சொன்னார். அது 1987 ஆம் ஆண்டு. அந்த ஆண்டில் நிறைய போராளிகளை லண்டனில் சந்தித்திருக்கின்றேன். ஓடி வந்த போராளிகள். ரெலோ உடைந்து பலர் அகதிகளாக வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஐயா சொன்னது ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. நிகழ்காலத்தில் தைரியமாக எழுதக்கூடியவர்களில் நீங்கள் ஒருவர். நேற்று நடந்ததைக் கற்பனையாக எழுதி அதை Mythology  ஆக்கத் தேவையில்லை. இன்று நடப்பதை எழுதி சரித்திரமாக்குவது தான் ஒரு எழுத்தாளனுக்கு தேவையானது என்ற மாதிரியான கருத்தை அவர் சொல்லுவார். புலம்பெயர்ந்தவர்கள் நிறையப் பிரிவுகள் தொடங்கினார்கள். அப்போது எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் படிப்பு, என்னுடைய தலையை அமத்திக்கொண்டிருந்து. சினிமா துறையில் வேலை தேடிக்கொண்டிருந்த அசதி ஒரு பக்கம் இருந்தது. ஆனாலும், தமிழ் மக்களின் உணர்வுகளைச் சார்ந்து தாங்கிக் கொண்டு வருகின்ற எழுத்துக்கள் நிறைய வரவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அவ்வளவுக்கு இலங்கையில் மாற்றங்கள். அது என்னுடைய எழுத்துக்களில் வரத் தொடங்கி விட்டது. ஐயாவுக்கும் அதைச் சொன்னேன். ஐயாவுக்கும் மகிழ்ச்சி. ஒவ்வொரு கதைகளையும் அனுப்பி வைப்பேன். சிலவேளைகளில். அவர் தேடிப் படிப்பார். அப்படித்தான் ஐயாவின் உறவு வந்தது. ஐயா இல்லை என்றால் 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் எழுதியிருக்க மாட்டேன். ஐயா என்னை எழுதச் சொல்லி தூண்டிக்கொண்டிருந்தார். அதன் நீட்சியாக நான் சொன்னேன், நான் ஒரு சிறுகதைப் போட்டி தொடங்கப் போகிறேன், உதவி செய்வீர்களா என்று கேட்டேன். என்ன உதவி என்று கேட்டார். நான் பெண்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பதற்கு பொருளாதார உதவி செய்வேன். ஆனால் இந்தியா வந்து கதைகளை வாங்கி, அதைத் தெரிவு செய்து, தேர்ந்து எடுக்க எல்லாம் என்னால் செய்ய முடியாது. அதற்கு ஒரு கூட்டம் வேண்டும், ஒரு குழு வேண்டும் என்று சொன்னேன். அவர் அதெல்லாம் ஏற்பாடு செய்தார். நான் செய்த வேலை அதை ஆரம்பித்தது. பெரும்பாலான வருடங்கள், முதலாவது வருடம், இரண்டாவது வருடம் எல்லாம் விழாவுக்கு போயிருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வருடங்களும் போயிருக்கின்றேன். போய் அந்தப் பெண்களுக்கு பரிசு கொடுப்பது, ஊக்குவிப்பது, கூட்டங்களில் பேசுவது  எல்லாம் செய்திருக்கின்றேன். அதனால் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை  நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு ஐயாவுடன் கொள்வேன். என்ன செய்கின்றீர்கள் ஐயா? ஐயாவுக்கு உடல் நலமில்லை. கண் தெரியாது. அம்மாவும் இறந்து விட்டார்கள். தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தால் நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள் என்று தான் கேட்பார். எழுதுவதைப் பற்றித் தான் சொல்லுவார். சில விஷயங்கள் சிலரால் தான் எழுத முடியும் என்று சொல்லுவார். அப்போது அவர் தமிழ் இணையம் ஆரம்பித்திருந்தார். ஐயா எனக்கு ஓர் ஆசானாக இருந்ததற்கு காரணம் என்ன என்றால், அவர் ஒரு இடது சாரி. சாதி, மதத்துக்கு எதிரானவர். சமத்துவத்துக்குச் சார்பாக நின்று போராடுபவர். ஆனாலும் எனக்கு அவருக்கும் கருத்து வேறுபாடுகளும் வரத் தொடங்கின. ஏன் என்றால் அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர். விடுதலைப் புலிகள் என்பவர்களின் ஒரு பக்க கதையைத் தான் நீங்கள் கேட்கின்றீர்கள் என்று சொல்லிவிட்டு, அவர்கள் இயக்கங்கள் என்ற பெயரில் மற்ற இயக்கங்களை அழித்து ஒழித்தது மனித உரிமைக்கு அப்பாற் பட்டு செய்த விஷயங்களை அவருக்கு சொன்னேன். ஆனால், நாங்கள் அதைப்பற்றி நிறைய கதைக்கவில்லை. அவர் இறக்கும் வரைக்கும் தமிழ் தேசிய வாதத்தை நம்பியவர் என்று நினைக்கின்றேன். அதற்காக எதிர்க் கருத்துக்களை அவர் தீர்க்க நினைப்பவர் அல்ல. ஒருமுறை ஒரு வாசகர் என்னிடம் கோவை ஞானி ஐயாவை ஜெயமோகன் தன் ஆசானாக கருதுவதாகச் சொன்னார். அப்படியா என்று வியந்தேன். அது உண்மையா என்று கேட்க விரும்பி ஐயா வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினேன். ஐயா தனியாகத் தான் இருந்தார். கேட்டேன். ஐயா சொன்னார், அபிப்பிராய பேதம் இருக்கலாம், ஆனால் அறிவாற்றலை மதிக்க வேண்டும் என்று. நான் சொன்னேன் அது என்னுடைய கோட்பாடு கூட என்று. எனக்கு என்னை விட வித்தியாசமாக எழுதுபவர்களிடம் திணிக்க நினைக்கின்ற மனம் இல்லை. Even I read the many voice. Everyone has the right to write ✍️ . அதை ஏற்றுக்கொள்ளுவதும், ஏற்றுக்கொள்ளாததும் வாசகர்களின் பொறுப்பு. அப்படி ஐயா பல விதமான மனிதர்களையும் ஈர்க்கக்கூடிய ஒரு பெருந்தன்மையான மனிதர். பெரும்பாலான மனிதர்களால் மதிக்கப்பட்ட ஒரு மனிதர். அசோகமித்திரன், சுஜாதா, வாஸந்தி ஆகியோர் உங்களுடைய எழுத்துச் செயற்பாட்டால் உங்களுடன் நட்பானவர்கள். அவர்களுடனான சிநேகிதம் உங்களில் என்ன வகையான செல்வாக்கைச் செலுத்தியது? இவர்கள் அத்தனைபேரும் சென்னை இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலர். சென்னையிலிருந்த  இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கம் அவர்கள் எனது சில புத்தகங்களை வெளியிட்டார். எனது புத்தக வெளியீடுகளுக்கு வந்து எனது புத்தகங்களை விமர்சனம் செய்யச் சொல்லி மேற்கண்டவர்களுக்கு எழுதினேன. அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எனது புத்தக விழாக்களுக்கு மேற்குறிப்பட்ட எழுத்தாளர்களை செ.கணேசலிங்கம் அவர்களிடம் சொல்லி அழைக்கச் சொன்னபோது அவர் அதைச் செய்தார். அதைத் தொடர்ந்து அவர்களுடனான எனது தொடர்பு எழுத்தாளர்களிடையே வரும் நட்பாக மாறியது. வாஸந்தி அவர்கள் அக்கால கட்டத்தில் இந்தியா டுடே கெளரவ ஆசிரியராக இருந்தார். என்னிடம் படைப்பகள் கேட்டார். அவரின் பத்திரிகைக்கு ‘மிஸ்ட்டர் டெய்லர் அன்ட் மிஸிஸ் குமார்’ என்ற கதை ,‘இன்னும் ஒரு கிளி’, ‘மிஸ் ஜேன் நாதன்’, ‘அப்பாவின் சினேகிதி’ போன்ற சிறுகதைகளை எழுதினேன். அதைத் தொடர்ந்து இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு பக்க எழுத்து விருந்தினராக (கொலமிஸ்ட்) சிலவருடங்கள் எழுதினேன். வாஸந்தி இன்றும் எனது சினேகிதி. 2019ம் ஆண்டு லண்டனுக்கு வந்தபோது அவருக்குப் ஒரு கூட்டமும் ஒழுங்கு செய்தோம். இந்தியா போயிருக்கும் காலத்தில் அவருடன் செலவழித்த சில நாட்கள் மிகவும் இனிமையானவை. அவரின் வீட்டருகே மியுசிக் அக்கடமி இருந்தது. இனிமையான இசை மனதைக் கொள்ளை கொள்ளும். அவரின் மொட்டை மாடியில் உலகத்திலுள்ள பலவிதமான பூச்செடிகளும் பூத்துக் குலுங்கும். ஓரு நாள் இரவு நீண்ட நேரமாக இருவரும் அவரது மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். அன்று முழநிலவு. அந்த நேரம் முழு நிலவில் கடல் பொங்கிக் குதூகலிப்பதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்றேன். அப்போது அவருடைய கணவர், ‘என்ன இவ்வளவு நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற தோரணையில் எங்களை எட்டிப் பார்த்தார். வாஸந்தி என்னுடைய விருப்பத்தை அவரிடம் சொன்னார். அவர் எங்களை மெரினா பீச்சக்கு அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட நடுநிசியான அந்த நேரத்தில் கடற்கரையில் அமைதி. நிலவைக்கண்ட சந்தோசத்தில கடல் பொங்கிப் பூரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் உலகத்தில் எந்தத் துன்மமுற்ற குழந்தைகள் மாதிரி, எங்கள் ஆசைதீர அலைகளுடன் ஓடிப்பிடித்துச் சந்தோசப்பட்டோம். அவரின் கணவர் காரில் இருந்தபடி எங்கள் நள்ளிரவு கேளிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனது அருமையான நினைவுகள் அவை. இன்னொரு தரம் திரும்பி வராதவை. எழுத்தும், நல்லெண்ணமும் சிலரைக் குழந்தைகளாக்குவதற்கு அந்தச் சந்தர்ப்பம் ஒரு சாட்சியாகும். என்றும் என் மனதில் மறையாது குடியிருக்கும் பல நல்ல நண்பர்களில் அவர்களும் அடங்குவர். திரு.அசோகமித்திரனைச் சிலதடவைகள் சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு மிகவும் அன்பான, பண்பான, கௌரவமான மனிதர் அவர். ஓருநாள் அவரை அழைத்துக் கொண்டு தி.நகருக்குச் சென்றேன். அவரின் கதைகளில் ‘பிரளயம்’ என்ற வார்த்தை அவ்வப்போது வரும். அன்று தி.நகரின் சன நெருக்கம் அவர் சொல்லும் ‘பிரளயமாக’ என்னைத் திடுக்கிடப் பண்ணியது. எப்படித் தெருவைக்கடப்பது என்ற பயம் என்னைப் படாதபாடு படுத்தியது. சட்டென்று வந்த லாறிக்குப் பயந்து அவரின் கையைப் பிடித்துக்கொண்டேன். பகிரங்கமான இடத்தில் அன்னிய பெண் ஒருத்தி தனது கையை இறுக்கப் பிடித்த அதிர்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது. மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். லண்டனிலிருந்து வந்திருக்கிறீர்கள், அங்கு இப்படிக் கண்டபாட்டுக்கு வண்டிகள் ஓட்டமாட்டார்கள் என்று நினைக்கிறேன்’ என்று சமாளித்தார். அவருடைய எழுத்துக்கள் மட்டுமல்ல அவரின் பண்பான, அன்பான சினேகிதமும் என்னால் மறக்கமுடியாதவை. திரு. சுஜாதா அவர்கள் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருத்தர். எனது புத்தகங்களை விரிவாக விமர்சனம் செய்த ஆளுமைகளில் ஒருத்தர். ஓரு எழுத்தாளன் என்ற உறவோடு ஆரம்பித்த அவரின் உறவு அவரின் மகன் லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த மகனின் குடும்பம் எனது வீட்டுக்கு வந்து போகுமளவுக்கு வளர்ந்திருந்தது. எனது திரைப்படத் துறையில் நான் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற துக்கம் அவருக்கு இருந்தது. எனது தனிப்பட்ட வாழ்க்கைச் சுமையால் ஒரு படத்தயாரிப்பாளராக என்னால் வரமுடியவில்லை என்ற எனது துன்பத்தை அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவர், டைரக்டர் ராஜீவ் மேனனனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆனாலும், எனது வாழ்க்கை நெருக்கடிகளால் என்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இலங்கை வைத்தியர்களின் வேண்டுகோளின்படி ‘சுகாதாரக்கல்வி’ பற்றிய இருபுத்தகங்களை எழுதும்போது சுஜாதாவும் எழுத்தாளர், மாலனும் மிகவும் காத்திரமான பல அறிவுரைகளை வழங்கினார்கள். இவர்களுக்கு நான் எப்போதும் நன்றியாயிருப்பேன். பாலு மகேந்திரா எனது அன்பான ‘சகோதரராக’ நான் கணிப்பிடும் ஒரு ஆளுமை. என்னைப்போல் அவரும் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர். என்னைப்போல் அவரும் ஒரு திரைப்படப் பட்டதாரி. அத்துடன் இலக்கியத்தில் மிகவும் பற்றுள்ளவர். லண்டன் திரைப்படக் கல்லூரியையை மையமாக வைத்து நான் எழுதிய அரசியல், இலங்கையில் இந்திய இராணுவத்தினரின் கொடுமை, லண்டனில் திரைப்படத்துறை, லண்டனில் ஆங்கில-இலங்கை சார்ந்த மாணவர்களுக்கிடையே வந்த காதல் வாழ்க்கை, போன்ற விடயங்களை வைத்து அவனும் சில மனிதர்களும் என்ற நாவலை நான் எழுத மிகவும் தூண்டுதலாகவிருந்தவர். அந்த புத்தக அறிமுகத்திற்குப் பல ஆளுமைகளான, அசோகமித்திரன், வாஸந்தி, கணேசலிங்கம் போன்றவர்கள் வந்து அந்த நாவல், திரைப்படத்துறையை ஆழமாகப் பார்க்கும் ஒரு ‘முத்திரை’ நாவலாகப் பார்க்கப்படவேண்டும் என்று பேசியபோது பெருமைப்பட்டவர். அவரும் திரைப்படத் துறை மாணவராகவிருந்தபடியால் அந்த நாவல் என்ன மாதிரியான யதார்த்தங்களைக் கொண்டுவருகின்றது என்ற தெரிந்துகொண்டவர். திருமதி. ராஜம் கிருஷ்ணன் எனது மதிப்புக்குரிய எழுத்தாளப் பெண்மணி. எனது சிறுவயதில் தமிழ் இலக்கிய உலகில், அவரின் பிராமண வர்க்கம் சாராத மக்களின் ‘யதார்த்த’ விடயங்களை எழுதியவர். அவரை 1987ல் சந்தித்தேன். அவரின் வீட்டில் ஆடும் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு அவர் தந்த இனிப்புகளைச் சாப்பிட்டுக் கொண்டு இருவரின் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மறக்கமுடியாத இனிய ஞாபகங்களில் ஒன்று. 1994ம் ஆண்டு ‘எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’ என்ற இலக்கிய ஆய்வுப் புத்தகத்தை கோவை ஞானி அய்யா அவர்கள் எழுதும்போது அவர் குறிப்பிட்ட முற்போக்குப் பெண் எழுத்தாளர்களாக, ராஜம் கிருஷ்ணன், காவேரி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சிவகாமி, போன்றவர்களை அடையாளம் காட்டி எழுதியிருந்தார். ஆனால் ராஜம் கிருஷ்ணன் பற்றிப் பெரிதாகப் பெண்ணியவாதிகள் பேசாதது துக்கமான விடயமே. திரு.மாலன் அவர்கள், எனது நல்ல நண்பர்ளில் ஒருத்தர். 1981ம் ஆண்டு யாழ்ப்பாணம் நூலகம் எரிந்தபோது முதல்முதல் குரல் எழுப்பிய இந்திய எழுத்தாளர் இவர். அதுத்துடன் இவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைகளில் இலங்கை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுத்தார். சன் டிவியிலிருக்கும்போது என்னைப் போன்ற எழுத்தாளர்களைப் பேட்டி கண்டார். தினமணி ஆசிரியராகவிருந்தபோது ஒரு இதழை இலங்கை எழுத்தாளர் படைப்புக்களுக்கு அர்ப்பணித்தார். அத்துடன் புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ‘கண்களுக்கப்பால் இதயத்திறகு அருகில்’ என்ற தொகுதியில் கொண்டுவந்தார். அண்மையில் புலம் பெயர் கவிஞர்களின் படைப்பை வெளியிட்டிருக்கிறார். அதற்கு நன்றிக்கடனாக, கொங்கு நாடு அறிவியல் விஞ்ஞானக் கல்லூரியைச்சேர்ந்த த. பிரியா அவர்கள் எனது எட்டு நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டத்திற்கு எழுதிய ஆய்வு நூலை லண்டனில் வெளியிட அவரை அழைத்திருந்தேன். ‘I’m not a post man’ என்பார் காஃப்கா. உங்களது கதைகளில் இருக்கும் முற்போக்கு கூறுகள் சிலசமயம் பலவந்தமாகக் கருத்துகளை சொல்வது போல் அமைந்துவிடுகின்றன, என்பதை ஒரு விமர்சனமாக முன்வைத்தால் உங்களுடைய பதில் எவ்வாறு இருக்கும்? இருக்கலாம், ஆனால் நான் எந்த விடயத்தையும் பலவந்தமாகப் ‘புகுத்துவது’ கிடையாது. அதாவது எனக்குத் தெரியாத விடயங்களை நான் எழுதுவது மிகவும் அருமை. என்னுடைய எழுத்தைப் படிப்பவர்கள், நான் ஏதோ ‘கருத்தை’ புகுத்துவதாகக் கருதினால் நான் என்ன சொல்ல முடியும்? நான் லண்டனுக்கு வந்த காலத்திலிருந்து எனது பெரும்பான்மையான காலம் தமிழர்கள் அல்லாதவர்களுடன், படித்த, வேலை செய்த, போராடிய, சினேகிதமாக இருந்தகால கட்டமாகும். அந்த மாதிரியான வாழ்க்கைச் சூழலில் தெரிந்து கொண்ட, புரிந்து கொண்ட, ஏற்றுக் கொண்ட, கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிற பல விடயங்களுள்ளன. அவற்றை எழுதுகிறேன். அவை எல்லாம் தமிழ் வாசகர்களுக்குத் ‘திணிப்பதாக’ இருக்கவேண்டும் என்று எழுதுப்படவில்லை. ஏனென்றால் நான், அரசியல், சமய, தேசியப் பிரசாரம் செய்பவரல்ல. எனது தாரக மந்திரம், அன்பும் அறமும் சாந்த ‘மனித உரிமை’, சமத்துவம் என்பதுதான். இவைக்கு அப்பாற்பட்ட உலகத்தில்தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருத்தரும் தாங்கள் வாழும் சூழ்நிலையிலிருந்துதான் மற்றவர்களையும் உலகையும் கணிப்பிடுகிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள், முக்கியமான விடயங்களைப் பட்டும் படாமலும் எழுதுகிறார்கள். நான் சிலவேளைகளில் அந்தத் ‘தந்திரம்’ தெரியாமல் அப்பட்டமாக எழுதிவிடுகிறேன். நீங்கள் தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறீர்கள். அந்தப் பின்னணியில் கேட்கிறேன். இலங்கையில் சமஸ்கிரத மயமாதல் நடந்துகொண்டிருக்கிறதா… ஏனெனில் சிறு தெய்வ வழிபாடுகள் அங்கு அருகி வருகின்றன.. சமயம் என்பது பணம் சேர்க்கும் மிகவும் பிரமாண்டமான ஓர் ஒழுங்கு முறையாகும். Religion is a vast corporation. It has many of money-making ideologies as well as brain washing techniques. பெருந்தெய்வங்களைக் கொண்டாடும் சமூக அமைப்புக்களால் இன்றைய உலகக் கட்டுமானங்கள் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கினறன. சிறு தெய்வ வழிபாடு பற்றி நான் அண்மையில் தென்னாட்டுப் பல்கலைக்கழகமொன்றுக்குக் கொடுத்த சொற்பொழிவின் ஒருபகுதியை இங்கு குறிப்பிடுவதால் ஒன்றிரண்டு விடயங்களைச் சொல்லலாம் என்று கருதுகிறேன். ஆரிய உள்ளீடு தமிழகத்தில் வந்ததால் சிறு தெய்வங்கள் ‘தீண்டத்தகாத’ கடவுளர்கள் ஆனார்கள். அத்துடன், சில சிறு தெய்வ வழிபாட்டுத் தெய்வங்கள் பெரு தெய்வங்களாக உருமாற்றம் செய்யப் பட்டார்கள். பல்லாயிர ஆண்டுகள் பெயரும் புகமும் பெற்று வாழ்ந்த நாகரிகத்தையுடைய தமிழ் இனம், ஆரியரின் வருகையால் பெருமாற்றங்களைக் கண்டது. தமிழர்கள், அவர்கள் செய்யும் தொழில் முறையில் சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டார்கள். பெரிய சாதிக் கடவுளர்கள் புதிதாக உருவாக்கப்பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவிருந்தார்கள். வழிபாட்டு முறைகள் பிராமணத்தின் முறையில் நகர்த்தப்பட்டன. அர்ச்சனை, விசேட பூஜைகள் என்று புதிய ‘வழிபாட்டு’ முறைகள் உருவெடுத்தன. சங்க காலத்தில் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘இயற்கை வழிபாடுகள்’ அதாவது, குறிஞ்சிக் கடவுள் முருகன், முல்லைக் கடவுள் திருமால் அல்லது மாயோன், பாலைக் கடவுள் கொற்றவை அல்லது காளி, மருத நிலக்கடவுளாக வேந்தன் அல்லது இந்திரன் அல்லது வாயு, நெய்தல் நிலக் கடவுளாக வருணன் அல்லது கடலோன் என்ற பெயர்களில் திராவிடத் தமிழர் இயற்கையைப் போற்றி வணங்கினார்கள். இந்தக் கடவுள்களும் ஆரிய மயமடுத்தப் பட்டார்கள் சிறு தெய்வ வழிபாட்டின் வரலாற்றுப் பின்னணி ஒரு நோக்கு என்ற கட்டுரையை எழுதிய திரு மா. நாகராஜா அவர்களின் கூற்றின்படி, ‘மனித குல வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே அமைந்துள்ளது. சமுதாயத்தில் இரு வர்க்கங்கள் எப்போதும் பிளவுண்டு ஒன்றையொன்று எதிர்த்தும், சார்ந்தும், வரலாற்றை நகர்த்திச் சென்றுள்ளன. ஆன்மீகம் சார்ந்த சமயங்களும், இந்த இரு பிரிவினர்களுக்கு உரிய முறையில் வளர்ச்சியடைந்துள்ளன’ என்று கூறுகிறார். அவர் கூற்றிலிருந்து, ‘மக்கள் மயப் படுத்தப்பட்ட சிறு வழிபாடுகளும் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தபின்னரும் அந்த வழிபாட்டில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் இன்னும் நீடித்துக்கொண்டு செல்கிறது என்பது தெரியும். அத்துடன், ‘வடமராட்சியில் சிறு தெய்வழிபாடு, சில அறிமுகக்குறிபபுகள்’ என்ற கட்டுரையை எழுதிய திரு.பா.இரகுவரன் தனது கட்டுரையில் காட்டிய , ‘அலெக்ஷணெடர் கோத்திரோவ்’ என்பவரின் மேற்கோளையும் சொல்லலாம். ‘மனித சமூகங்களில், காணப்படும் வழிபாட்டு முறைகள் இதனுடன் தொடர்புடைய சடங்குககள், புராண ஐதீகக் கதைகள், கிராமியக் கதைகள், மற்றும் கற்பனைக் கதைகள் என்பவற்றில் இருந்து பொய்களை நீக்கி வடித்தெடுப்போமானால், காலத்தை மறைத்து நிற்கும் திரையூடே உண்மையான சமூக வரலாற்றைப் புரிந்து கொள்ளலாம்’. இலங்கையில் இன்று சிறுதெய்வங்களும் பெருதெய்வங்களாக்கடுகிறார்கள். இந்துத்துவா கருத்தோட்டம் பல இடங்களில் பரவுகிறது. இவை எல்லாம் பணம் சேர்க்கும் அடிப்படையிலானவை. துரதிர்ஸ்டவசமாக இலங்கையில், பெருங்கடவுளர்களுக்குத் தேர் இழுக்க இராணுவத்தை அழைக்கும் நிலையில் தமிழர் சாதி ரீதியான வாழ்க்கைமுறையைத் தொடர்கிறார்கள். ‘Escape from genocide’ என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறீர்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்ற கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? 1971ம் ஆண்டு ஜே.வி.பி ஆயதப்போராட்டம் தொடங்கியதும் இலங்கை அரசு இந்திய அரசுடன் சேர்ந்துகொண்டு மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 10,000 இளம் ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்தார்கள். 1972ல் ஆத்திரத்தில் இருந்த சிங்கள் மக்களைத் திருப்திப்படுத்த ‘சிலோன்’ என்ற காலனித்துவப் பெயர் ஸ்ரீலங்காவாக மாறியது. பேரினவாதம் தமிழரை ஒழிப்பதை எதிர்த்துப் போராட, 1974ம் ஆண்டிலிருந்து, லண்டனிலிருந்த தமிழ்மாணவர்கள் ஆயதப்போராட்டத்தை முன்னெடுக்கச் சிந்தித்தார்கள். லண்டனில் படித்துக்கொண்டிருந்த முற்போக்கு மாணவர்கள், பாலஸ்தீனத்திற்குப் போய்ப் பயிற்சி பெறமுயன்றார்கள். 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவார்த்தனா, முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளின் பொம்மையாக அரசு நடத்தினார். முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலை, மத்திய தரைக் கடற்பிரதேசத்தில் எப்படியும் வல்லமையுள்ள நாடாக உருவாக்க அமெரிக்கா உதவிக்கொண்டிருந்தது. அதே நேரம் அவர்களின் கைப் பொம்மையான ஜே.ஆர் ஜெயவார்த்தனாவுக்குத் தமிழ்ப் போராளிகளால் பிரச்சினை வருவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. இலங்கைகக்கு அவர்கள் தாராளமான விதத்தில் பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்தார்கள். அதை அறிந்த இந்தியா, இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கப் பயிற்சி கொடுத்தது. இலங்கைத் தமிழரின் வரலாற்றையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் வேலையை யு.என்பி அரசு தொடங்கியது. ஓரு இனத்தை அழிப்பதற்கு முதற் கண்ணாக அவர்களின் மொழியை அழிப்பது எதிரியின் நோக்கத்தின் பிரதானமாகவிருக்கும். அதன் எதிரொலியாக 1981ம் ஆண்டு யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப் பட்டது. அதையுணர்ந்துகொண்ட மனித உரிமைவாதிகள் இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினோம். 1983ம் ஆண்டு கலவரம் இலங்கையரசின் இன ஒழிப்புத் திட்டத்தை அப்பட்டமாக உலகுக்குக் காட்டியது. அதையொட்டியே நான் 1986ம் ஆண்டு ‘எஸ்கேப் புறம் ஜெனசைட்’ என்ற டாக்யுமென்டரியை எடுத்து மேற்கு ஐரொப்பிய மனித உரிமை நிறுவனங்களுக்குக் காட்டினேன். இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் நீங்களும் சில எழுத்தாளர்களும் மகிந்த அரசின் அழைப்பில் அல்லது அவர்களுடைய அனுசணையில் இலங்கைக்குச் சென்றிருந்தீர்கள். தடுப்பு முகாம்களுக்கும் போனீர்கள். யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு புலிகளிடம் கோரிக்கை வைத்தீர்கள். யுத்த முனையில் செத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு – கூட்டுப்பொறுப்பை ஏற்றே ஆக வேண்டிய மகிந்த அரசின் அனுசரணையில் அந்த விஜயத்தை மேற்கொண்டதைப்பற்றி என்றைக்காவது குற்ற உணர்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா? இலங்கையில் போராளிகள் மாவிலாற்றை அடைத்ததால் அதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டின் ஆரம்பத்தில் போர் தொடங்கியிருந்தது. இந்தியாவால் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்த சட்டத்தை தமிழர்கள் ஏற்றுக் கொண்டால் போர் தொடராமல் தடுக்கலாம் என்ற எண்ணத்தில், 13ம் அமென்டமென்ட் பற்றித் தமிழத் தலைமைகளுடன் பேச எங்களை, ‘ஒரு நல்லுணர்வு தூதுக்குழுவாக’ அழைத்தார்கள். ஓரு நாட்டில் பிரச்சினை வந்தால் அந்நாட்டைச் சேர்ந்த ‘நல்லுணர்வாளர்கள்’ தங்கள் நாட்டின் அழைப்பின் நிமித்தம் செல்வது பல இடங்களில் நடக்கும் விடயமாகும். அப்படியே லண்டன், நோர்வே போன்ற நாடுகளிலிருந்தும் இலங்கை செல்வதற்கு லண்டனிலுள்ள ஆர்.ஜெயதேவன் தலைமையில் தூதுக் குழுவாகச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. 12.2.2008ல் பிரித்தானிய வெளியுறவு அமைச்சிடம் நாங்கள் சென்று இலங்கை அரசாங்கம் எங்களை அழைத்த விடயம் பற்றிய விளக்கத்தைக் கொடுத்தோம். அவர்களின் அனுமதியுடன், 16.2.2008ல் நாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர்கள், யாழ்ப்பாண பிஷப் போன்ற மதகுருமார் அத்தனைபேரையும் சந்தித்து 13வது அமென்ட்மென்ட் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய அவசியத்தை உணர்த்தினோம். அரச தரப்பில் திஸா விதாரண, தமிழ்த் தலைவர்களில் ஆனந்தசங்கரி போன்றவர்களையும், எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் திரு கரு ஜெயசூரியா, ஜேவிபி தலைவர் திரு அமரசிங்க போன்றோரையும் சந்தித்து எங்களின் இலங்கை விடயம் பற்றிச் சொன்னோம். நாங்கள் சந்தித்த அத்தனைபேரும் எங்கள் நல்லெண்ண விஜயத்தைப் பாராட்டினார்கள். 21.2.2008 அன்று தமிழ்த்தேசியக் கூட்டணித் தலைவர் திரு சம்பந்தரைச் சந்திக்கப் பாராளுமன்றம் சென்று மணித்தியாலங்கள் காத்திருந்தோம். அவர் எங்களைச் சந்திக்கவில்லை. 13ம் ‘அமென்ட்மென்ட்’ முன்னெடுக்கப் படவில்லை. போர் தொடர்ந்தது. பலர் அழிந்தார்கள். தமிழ்த் தலைமைக்குத் தூரநோக்குக் கிடையாது என்பது புரிந்தது. இந்த ‘நல்லெண்ண விடயம்’ பிரித்தானிய பிரஜை என்ற முறையில் பிரித்தானிய அரசின் அனுமதியுடன் நாங்கள் சென்ற பிரயாணம். ஓரு நாட்டிலிருந்து ‘நல்லெண்ணத் தூதுவர்களை’ இன்னொரு நாடு அழைத்தால் அந்தப் பிரயாணச் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். இது அகில உலக சம்பிரதாயம். நான் தமிழ் அகதிகளின் தலைவியாயிருக்கும்போது, எனது முழுநேர நேர வேலையை (ஜி.எல்.சி.ஒபிஸர்) இராஜிநாமா செய்து விட்டு தமிழ் மக்களுக்காகப் பணி புரிந்தவள். என்னுடன் வேலை செய்தவர்களுக்கு எனது நேர்மை தெரியும். தமிழர் பெயரில் பணம் சேர்த்து கோடிகளைத் தேடிய கேடிகளுக்கு எங்களைப் போன்றவர்களின் நேர்மையோ மனித நேயமோ புரியாது. நான் வாழும் எனது பிரித்தானிய நாட்டு அனுமதியுடன், நான் பிறந்த நாட்டின் ‘நல்லெண்ண தூதுவராகச் சென்று’ போர் தொடராமல் ஒரு நல்வழி கிடைக்குமா என்ற பேச்சுவார்த்தைக்குச் சென்றோம். இலங்கையில் உள்ள தமிழர் தரப்பில் அதுபற்றிய அக்கறையோ பொதுமக்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற இரக்க உணர்வோ இருந்ததாகத் தெரியவில்லை என்பது அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்ததிலிருந்து புரிந்தது. புலிகளை மிகக் கடுமையாக எதிர்த்தவர் நீங்கள். அதற்கு நீங்கள் முன் வைக்கின்ற காரணங்கள் அத்தனையும், எல்லா இலங்கை அரசுகளுக்கும் பொருந்தக் கூடியவையே. ஆனால் அதேயளவு மூர்க்கமான எதிர்ப்பை நீங்கள் இலங்கை அரசுக்குக் காட்டியதில்லை. இன்றைக்கும் லண்டன் இலங்கை தூதரகத்தில் கொண்டாடப்படும் இலங்கைச் சுதந்திர தின விழாக்களில் பங்கு பற்றுகிறீர்கள் அல்லவா? இலங்கை அரசை எப்படி எதிர்த்தேன் என்பதை பிரித்தானிய ஆங்கிலப் பத்திரிகைகள், பிபிசி நேர்காணல்கள் பதிந்திருக்கின்றன. பிரித்தானியா ஆதரிக்கும் இலங்கை அரசைச் சாடும் என்னை ‘பிரித்தானிய விசேட படை’ விசாரணை செய்தது பற்றிய விடயங்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன. ‘நியு ஸ்ரேட்ஸ்மன்’ என்ற பத்திரிகை மட்டுமல்லாது பல பத்திரிகைகளில் 1982-83ம் ஆண்டுகளில் இச்செய்திகள் வந்து கொண்டிருந்தன. நேரமிருந்தால் ஆய்வு செய்துபாருங்கள். புலிகளைக் கடுமையாக எதிர்த்ததற்குக் காரணம், அவர்கள் இயக்க முரண்பாடுகள் என்ற பெயரில் தமிழர்களுக்குச் செய்த கொடுமைகள் மன்னிக்க முடியாதவை என்பதாலேயே. ஈ.பி.டி.ஆர்.எல்.எவ்வுக்கு எதிரான கந்தன் கருணைக் கொலைகள், ஆரிய குளம் சந்தியில் டெலோ போராளிகளை டயர்போட்டு உயிருடன் எரித்த (6.4 1986) கொடுமை, துணுக்காயில் ஹிட்லரும் நினைக்காத அளவு டோச்சர் காம்புகளை அமைத்துச் செய்த கொடுமைகள், மகேஸ்வரி, ராஜனி திரணகம, ஊடகவியலாளர் ரேலங்கி, செல்வி போன்ற பெண்களைக் கொலை செய்தது போன்ற செயல்களை எப்படி அங்கீகரிப்பது? குறிப்பாக கருணா தலைமையில் மட்டக்களப்பு போராளிகள் பிரிந்தபோது 10.௦4.2004ல் வாகரைக் காட்டில் புலிகள் செய்த படுகொலைகள், கிழக்குப் பெண் போராளிகளைப் பாலியல் வன்முறை செய்து கொலை செய்து, உடல்களைக் கண்டதுண்டமாக்கிக் காட்டு மிருகங்களுக்க எறிந்தார்கள் என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லும்போது தாங்கமுடியாதிருக்கிறது. அத்துடன் பிரிந்த கிழக்கிலங்கை ஆண் போராளிகளை உயிருடன் பெட்ரோல் டாங்கில் போட்டு வெடிக்க வைத்தார்கள் என்று கேள்விப்படும்போது ஆத்திரம் வராமல் இருக்குமா? எதிரி செய்யம்போது அவன் எதிரி என்றே செய்கிறான். ஆனால் ஒரே மொழி பேசும் மக்கள் இப்படி மிருகமாக நடந்து கொள்ளும்போது என்னவென்று நாங்கள் மனித உரிமைவாதிகள் முன் தலையுயர்த்தி நிற்கலாம்? இலங்கை அரசுடன் எனக்கு எந்தவிதமான சொந்த நலம் பற்றிய உறவும் கிடையாது. நான் நெல்சன் மன்டேலாவின் அரசியல் போராட்டத்தில் நீண்டகாலம் ஈடுபட்டவள். தென் ஆபிரிக்கப்போர் முடிந்து சமாதானம் வந்ததும் ‘மறக்கவும் மன்னிக்கவும் பழகினாற்தான் நாங்கள் எங்கள் நாட்டில் முன்னேற்றத்தைக் காணலாம்’ என்றார் அவர். நான் மனித உரிமைவாதி. மூர்க்கமும் வக்கிரமும் அழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்லும். இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழர்கள் ஒற்றுமையாய் வாழ முயற்சிக்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் தமிழ்த் தேசியவாதிகள், இலங்கைத் தமிழரைத் தங்கள் பணம் சேர்க்கும் முயற்சியின் மூலதனமாக்கி அவர்களின் ‘பிரச்சினையைக்’ காட்டி இங்கு நன்றாக வாழ்கிறார்கள். பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் வருகிறார்கள். ஆடல்கள் பாடல்கள் செய்கிறார்கள். இலங்கைத் தூதுவராலயத்திற்குப் பினவழியால் போகும் பிரமுகர்கள் பலர் இருக்கிறார்கள். நான் சுதந்திர தினத்திற்குப் போவதுபற்றி வெட்கப் படவில்லை. அந்நியரிடமிருந்து எங்கள் நாடு சுதந்திரமடைந்தது பற்றி நாங்கள் சந்தோசப் படவேண்டும். இப்படி என்னை மட்டம் தட்டுவதற்கு, என்னிலுள்ள பொறாமையே காரணமே. இலங்கைக்கு நான் ‘நல்லெண்ணத் தூதுவராக’ 2008ம் ஆண்டு மாசிமாதம் சென்றேன். ஆனால் எனக்கு எதிராக 1995ம் ஆண்டுகளுக்கப் பின்னரே ஒரு கூட்டம் சேறடிக்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் எனது எழுத்துக்குள்ள மதிப்பு அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. அத்தடன் இலங்கையில் சமாதானம் பற்றிய கருத்தரங்குகளுக்கு ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி 2011ல் என்னை அழைத்ததை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் சமாதானம் பற்றி கருத்தாடலுக்குச் சென்று, 2012ம் ஆண்டு 4 கிழமைகள் பல கருத்தாடல்களில் பங்குகொண்டேன். 1980குளில் எனது தமிழ் மக்களுக்காக எப்படிப் பாடு பட்டேனோ அதே மாதிரி இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அமைதிக்கும் நனமைக்குமாக என்னால் முடிந்ததைச் செய்கிறேன். எனது பொது வேலையையும் எழுத்தையும் முடிச்சுப் போட்டுப் பொறாமையில் குதிக்கிறார்கள். இலங்கையிலும், இந்தியாவிலும் பல மாணவர்கள் எனது படைப்புக்களை ஆய்வு செய்வது அவர்களால் தாங்கமுடியாதிருக்கிறது. இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் உரையாற்றியிருக்கிறேன். பிறிஸ்டல், அபர்டின், சிட்டி யூனிவர்சிட்டி,சசக்ஸ் யூனிவர்சிட்டி மட்டுமல்லாது சுவிட்சர்லாந்து போர்ன் யூனிவர்சிட்டி, இந்தியாவில், சென்னை, மதுரை, பாரதி, அழகப்பா, கொங்குநாடு, சிவகாசி, திண்டுக்கல், தஞ்சாவூர் ,எத்திராஜ், அத்துடன் இன்னும் பல பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறேன். இன்னும் செய்து கொண்டிருக்கிறேன். என்னடைய சிறுகதைகள், இதுவரை உலகம் பரந்த விதத்தில், இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வேய, ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா,சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலிய போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட முப்பது பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எட்டு நாவல்களும், ஏழு சிறுகதைத் தொகுதிகளும், இரண்டு மருத்துவ நூல்களும், முருகக் கடவுள் பற்றிய ஆய்வுப் புத்தகமுமாக இதுவரை பதினெட்டு படைப்புக்கள் எழுதியிருக்கிறேன். இரண்டு சாகித்திய அக்கடெமி அவார்ட்ஸ் தொடக்கம் இந்தியாவிலும் இலங்கையிலும் பலவிமான பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஆனால் 2000ம் ஆண்டு சென்னையில் நடாத்தப்பட்ட ‘தமிழ் இனி’ என்ற விழாவில் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டேன். வேண்டுமென்றே பிராந்திய வெறிபடித்த ஒருசிறு கூட்டம் இப்படியான இழிவு வேலைகளைச் செய்கிறது. அதற்கு என்னை இலங்கை அரசுடன் சேர்த்துச் சேறடிக்கிறார்கள். 2000ம் ஆண்டு தமிழ் இனி நடக்கும்போது நான் எனது வேலையில் முழுமூச்சாக இருந்தேன். இலங்கை அரசுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் இலங்கையில் யு.என்.பி அரசுவந்தால் ஒன்றாய்ச்சோர்ந்து மகிழும்போது இவர்கள் கண்களைக் குருடாகக்கிக் கொள்கிறார்களா எனக்குத் தெரியாது.   அனோஜன் பாலகிருஷ்ணன்    தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.   https://akazhonline.com/?p=3076
  • அண்ணா , பிள்ளையான் கொஞ்சம் கொஞ்சமாய்  செய்து கொண்டு தான் இருக்கிறார் ...கருணா இப்ப பதவியில் இல்லை ... நான் அறிந்த வரைக்கும் அந்த காணிகளில் சிங்கள மக்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாய்  சீசனுக்கு வந்து சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு அறுவடை முடிந்ததும் போய் விடுவார்கள். அதே நேரத்தில் கால் நடை பண்ணையாளர்களும் இருந்தார்கள் ...அப்போது இல்லாத பிரச்சனை இப்போது உருவாகிறதிற்கு என்ன காரணம்?...சிங்களவன் காணி பிடிக்க முயற்சிப்பதால் தான் பிரச்சனை என்றால் அவர்களை தூண்டி விடுவது யார் ?...இந்த பக்கத்தால் தமிழ் அரசியல்வாதிகளும் வேண்டுமென்றே எரிகின்ற திரியில் எண்ணெய் ஊற்ற பார்க்கின்றனர் ...பிரச்சனையை சுமுகமாய் தீர்க்க ஒருத்தருக்கும் விருப்பம்  இல்லை   
  • ஓ அப்படியா சொன்னீங்கள்? நானொரு டியூப்லைட்🤣. பிழையாக விளங்கியதற்கு மன்னிக்கவும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.