Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து யாழ் தளத்தை நானும் (நிழலி), இணையவனும், வலைஞனும் பொறுப்பெடுத்து தொடர்ந்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளோம். மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார்.

எதிர்வரும் நாட்களில் யாழ் தொடர்பாக ஒரு சில மாற்றங்களை கொண்டு வரவும், யாழ் களத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் சில மாறுதல்களை, கள விதிகளிலும், ஏனைய விடயங்களிலும் செய்ய விரும்புகின்றோம். இது தொடர்பாக உங்களின் அனைத்து ஆதரவினையும் வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி..எப்படிப் பட்ட உதவிகள் யாழுக்கு தேவை என்று தெரியப்படுத்தினால் கண்டிப்பாக நானும் பார்வையாளராக இருக்காமல் இணைந்து கொள்வேன் நிழலி அண்ணா.நன்றி உங்கள் எல்லாராது முயற்சிக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மூடும் எண்ணம் கைவிடப்பட்டதற்கு நன்றி

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நிழலி, நிச்சயமாக நான் தொடர்ந்து ஏன் ஒத்துழைப்பை வழங்குவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.உங்கள் புதிய நிர்வாக மாற்றமும்,செயற்பாடுகளும், வெற்றிநடை போடவும். வெகு சிறப்பாகவும் அமையவும் வாழ்த்துகிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பயணிக்க எவ்வுதவியாக இருந்தாலும் நானும் செய்கிறேன் தொடர்ந்துவரும் நாட்களில் மேலதிக தகவல்களை எதிர்பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நிழலி!

பிரபாகரனுடன் எமது போராட்டம் முடிந்தது போல, யாழ் முடியக்கூடாது!

உங்கள் முகாமைத்துவத் திறமைக்குத் தலை வணங்குகிறேன்,நிழலி!

இணையவன், வலைஞன் உங்களுக்கும், இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஊற்றெடுக்கும், நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி நிழலி.கலோ வலைஞன்!நான் கட்டாயம் தமிழ்தான் கதைப்பன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தளம் மற்றும் களம் தொடர்ந்து இயங்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நிர்வாக மாற்றம் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அது உள்வீட்டு விவகாரம். கருத்துக்களைப் பதிவிடும் நாம்.. எம்மை நாமே நிர்வகித்துக் கொண்டு பதிவிடுவது.. எம்மை நாமும் களத்தையும் சிறப்பிக்க உதவும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

அந்த பயம் மனதில் இருக்கட்டும்...

எனது ஒரே ஒரு கருத்தை மட்டும் பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.

மோகன் அண்ணாவின் கையில் யாழிருந்த போது மோகன் அண்ணா கள உறுப்பினர்கள் இடையே வேற்றுமை காட்டியதான நான் உணரவில்லை. அதை நீங்களும் தொடர்ந்து பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன்....... :) :) ...

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா. யாழிற்கான உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தின் மீள் பரிசீலனைக்கு நன்றிகள் அதே நேரம் யாழ் இணையத்தை வியாபார நோக்கோடு இயக்கக முயற்சிகள் எடுப்பதோடு கருத்துக்களத்தில் சில பிரச்சனைகளை தவிர்ப்பாதற்கு சில ஆலோசனைகளை முன் வைக்கலாமென நினைக்கிறேன்.

1) ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட புனைபெயர்களில் வந்தால் அவரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டதும் அவரிற்கு எச்சரிக்கை கொடுத்து தடை செய்தல்.(யாராக இருந்தாலும்)

2)யாழ் இணையத்திற்கென வருகின்ற வாசகர்கள் அங்கு இருக்கும் படைப்புக்களிற்காகவே அதிகம் வருகிறார்கள். கருத்துக்களை பகிர்கின்றார்கள். எனவே நிருவாகம் ஒரு கருத்தாளனின் கருத்தையும் ஒரு படைப்பாளியின் படைப்பினையும் ஒரே தராசில் நிறுத்து தீர்ப்பு வழங்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

3)ஒருவர் தடை செய்யப்படும் பொழுது அவர் மற்றையை பகுதிகள் அனைத்திலும் கருத்து எழுதும் உரிமத்தை தடை செய்து அதே நேரம் அவர் தன் பக்கத்து நியாயத்தினையும் எடுத்துரைக்க வசதியாக உறவோசை பகுதியில் அவரை அனுமதித்தல்.

4)ஒருவரின் கருத்துக்களிற்கு அல்லது தனிமனித தாக்குதல் சம்பவங்களிற்கு வேண்டுமானால் நிருவாகம். முறைப்பாட்டு முறையை (றிப்போட்)ஏற்று நடவடிக்கையை எடுக்கலாம் அனால் படைப்புகளிற்கு கருத்தாளர்கள் நிருவாகத்திடம் முறையிடாமல் தங்கள் விமர்சனங்களையோ எதிர்வினைகளையோ பகிரங்கமாக வைத்த பின்னர் அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம்.

இவை என்னுடைய ஆலோசனைகள்தான் பரிசீலிப்பது நிருவாகத்தை பொறுத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய நிர்வாகத்தவர்களின் போக்கு நடைமுறைகளில் மாறுபாடு வரினும்.... மோகன் அண்ணாவின் பால் உள்ள நம்பிக்கையோடு (loyalty) உள்ள உறவுகளின் யாழுடனான இருப்பை தக்க வைக்க முயலவில்லை என்றால் அது யாழினை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்லலாம். அது பாதகமாகவும் அமையலாம். நன்மையாகவும் அமையலாம். :icon_idea::)

Link to comment
Share on other sites

யாழ் தொடர்வதில் மகிழ்ச்சி. மோகன் அண்ணாவுக்கு என் நன்றிகள்! :)

புதிய நிர்வாகத்துக்கு என் வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

1) ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட புனைபெயர்களில் வந்தால் அவரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டதும் அவரிற்கு எச்சரிக்கை கொடுத்து தடை செய்தல்.(யாராக இருந்தாலும்)

ஏன் இந்த லெலைவெறிடீ :D ? இப்ப தான் கட்டிஅயில் இருந்து கட்டு அவுத்து விட்டது அதுகிடையில முட்டனுமா? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை இழுத்து மூடாமல் வைக்க நிழலி, இணையவனுடன் ஒதுங்கியிருந்த வலைஞனும் முன்வந்தது மகிழ்ச்சியான விடயம்! மோகன் அண்ணா எப்போதும் யாழைச் சிறப்பாகச் செய்ய உதவி செய்வார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சதா மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கேற்ப யாழும் இயைபாக்கம் அடைவதுதான் யாழின் தனித்துவமான வளர்ச்சிக்கு உதவும்.. அதற்கு எப்போதும் என் ஆதரவு (எந்த வடிவிலும்) இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியுங்கோ...மோகனுக்கும் நன்றி...புதிய நிர்வாக குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் அங்கத்துவ பணம் செலுத்தும் யோசனைகள் இருந்தால் சொல்லவும்...

5000 கருத்துக்களை தொடலாம் போல கிடக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அன்றாட விடையங்களுடன் ஒன்றிப்போனவைகளில் யாழ் வலைக்களமும் ஒன்று, அது தொடர்ந்தும் இயங்குவதுபற்றிய செய்தி அறிந்தவுடன் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அனைவர்க்கும் எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சி,

நிழலி இணையவன் மற்றும் வலைஞன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .......

மோகன் அண்ணாவுக்கு நன்றிகள் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் திருப்பியும் வாறது உங்கை கனபேருக்கு வயித்தைகலக்குது :lol: ...நான் வந்து எதுக்கும் எவரெடி :mellow:

Link to comment
Share on other sites

நன்றிகள், நிழலி!

பிரபாகரனுடன் எமது போராட்டம் முடிந்தது போல, யாழ் முடியக்கூடாது!

உங்கள் முகாமைத்துவத் திறமைக்குத் தலை வணங்குகிறேன்,நிழலி!

இணையவன், வலைஞன் உங்களுக்கும், இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஊற்றெடுக்கும், நன்றிகள்!

______

யாழ் தொடர்ந்து இயங்கும் என்ற செய்திக்கு நன்றி, வாழ்த்துக்கள்! ....

சிவப்பு கலரினால் அடையாளப்படுத்திய அந்த(உதாரனம்) வசனம் தேவையா???

Link to comment
Share on other sites

முன்பு கூறியபடி 2012 வருட இறுதி வரை எமது நிறுவனத்தின் அனுசரணையும், ஆதரவும் உண்டு.

நன்றி

Link to comment
Share on other sites

நன்றி நன்றி

பயந்து விட்டோம். புதினம், தமிழ்நாதம், தமிழ்நேசன் வரிசையில் யாழும் முடங்கிவிடுமோ என

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.