Jump to content

யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள்.

Recommended Posts

யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள்.

யாழ் இணையத்தில் எனக்கு வழங்கப்பட்ட இரண்டுவாரகாலத் தடைக்கு எதிராக என்சார்பாக கருத்துக்களை வைத்தவர்களிற்கும். தடையை ஆதரித்தவர்களிற்கும். என்னை முற்றாகவே தடைசெய்யவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களிற்கும். எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு எனது தரப்பு நியாயத்தினை இங்கு வைக்கிறேன்.

யாழ்களம் என்பது எனது எழுத்துக்களை நானே புடம்போட்டுக்கொண்டதொரு தீக்குண்டம். யாழ் வாசககர்களிற்கென்றே நான் பல படைப்புக்களை எழுதியிருக்கிறேன்.நான் யாழில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே யாழின் மட்டிறுத்தினரகளாகவிருந்த இராவணன். வலைஞன் தொடக்கம். இன்று இணையவன் நிழலி வரை அனைத்து மட்டிறுத்தினர்களும் எனது படைப்புக்களில் ஏதாவது மாற்றமோ அல்லது திருத்தமோ செய்யவேண்டுமானால் அதனை எனக்கு தனிமடல் மூலம் அறிவிப்பார்கள்.

நானும் யாழ்கள நிருவாகத்திற்கு சங்கடங்கள் ஏற்படக்கூடாத வகையில் அவற்றை நீக்கியோ திருத்தமோ செய்திருக்கிறேன். அது மட்டுமல்ல என்னால் மோகனிற்கு இரண்டு தடைவைகள் பிரச்சனை ஏற்பட்டபோது கூட நான் மோகனுடன் தொடர்புகொண்டு பிரச்சனைகளை நானே நேரடியாக சந்திக்கிறேன் என்று கூறியதோடு அதற்குரிய நகர்வுகளையும் மேற்கொண்டிருந்தேன். ஆனால் இரண்டு தடைவையும் பிரச்சனையை கிழப்பியவர்கள் வெறும் வாய்சவாடலுடன் மட்டுமே நிறுத்திவிட்டிருந்ததால் பிரச்சனைகள் அத்துடன் முடிந்து விட்டிருந்தது.அண்மையில் எனது பா வா ம் பிறபாகரன் என்கிற தொடரை தொடங்கியபொழுது கூட நான் என்ன எழுதவருகிறேன் என்று புரிந்கொள்ளாமல் பலர் அதன் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு நிருவாகத்திற்கும் புகார் கொடுத்திருந்தனர். நிழலியும் அதன் தலைப்பை மாற்றி விடும்படி எனக்கு தனிமடல் போட்டிருந்ததையடுத்து நானும் அதன் தலைப்பை நீக்கிவிட்டு தலைப்பு இல்லாமலேயே கதையை எழுதி முடித்தபின்னர்தான்.

நான் போட்ட தலைப்பின் அர்த்தம் பலரிற்கும் புரிந்தது அதன் பின்னர் மீண்டும் நான் அதன் தலைப்பை இணைத்துவிட்டிருந்தேன். யாழிற்கும் எனக்குமான உணர்வு இப்படியான புரிந்துர்வுடனேயே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் கடைசியாக என்னால் தொடங்கப்பட்ட கவர்ச்சி காதல் காமம் களங்கமற்ற நட்பு என்கிற தொடரில். காமம் என்கிறதொரு கதையை எனக்கு எவ்வித அறிவித்ததேலா எச்சரிக்கையே இன்றி நீக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் உறவோசை பகுதியில் பலரும் தனக்கு தனிமடலிலும் மற்றும் றிப்போட்(தமிழில் முறைப்பாடு நிழலி கவனிக்கவும்.)செய்ததனால் அந்தத்திரியை நீக்கியிருப்பதாக நிழலி தெரிவித்திருந்தார்.அதிகாரம் தன் ஆணவத்தை காட்டுகின்றது என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது. அதிகாரம் ஆணவத்தை காட்டும்பொழுது படைப்பாளி தன் செருக்கை காட்டியே ஆகவேண்டும் எனதீர்மானித்து எனது படைப்புக்கள் சிலவற்றை நீக்கியிருந்தேன். அதிகாரம் மீண்டும் தன் ஆணவத்தை காட்டியது.

எனக்கு எவ்வித எச்சரிக்கையும் தராமல் என்னை இரண்டு வாரங்கள் தடை செய்தது. நான் தடை செய்யப்பட்டதை அறிந்ததும். எனது பக்கசிறு விளக்கத்தை சகஉறவு கோமகன் மூலம் யாழில் வெளியிட்டிருந்தேன்.அதற்காக அவரிற்கும் ஒரு சவுக்கடி விழுந்தது.ஆனால் எனது படைப்புக்களை நீக்கியதற்காக யாழ்கள வாசகர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.(யாழ்கள நிருவாகத்திடம் அல்ல) எது எப்படியோ அதிகாரங்கள் எப்பொழுதுமே ஆணவத்தை கைவிட்டதில்லை தம்மை நியாயப்படுத்தவே செய்யும். அது ஜ.நா சபை. ஜரோப்பிய யூனியன். அமெரிக்கா என்றில்லை யாழ்களமும் அதற்கு விதிவிலக்கு ஆகாது. அதே போல படைப்பாளியும் தன்செருக்கை விட்டுக்கொடுக்கமாட்டான். வழைந்து நெளிந்து எழுதுபவன் படைப்பாளியல்ல துதிபாடி.அவனது படைப்புக்களும் படைப்பாகாது.அவை வெறும் துடைப்பு. இது வந்து நிழலி என்கிறவரிற்கும் சாத்திரிக்குமான தனிப்பட்ட பிரச்சனையல்ல. நான் அவருடன் சம்பவம் நடந்தபின்னர் தோ.பே சியிலும் முகப்புத்தகத்திலும் கதைத்திருக்கிறேன் ஆனால் யாழ்களம் பற்றியோ தடை பற்றியோ நாங்கள் கதைத்தில்லை. இனிவரும் காலங்களிலும் எங்கள் தனிப்பட்ட நட்பு தொடரும். இது அதிகாரத்திற்கும் படைப்பாளிக்குமான பிரச்சனை எனவே அதிகாரம் அதிகாரமாகவே இருக்கட்டும். இறங்கவேண்டாம். நானும் படைப்பாளியாகவே இருந்துவிட்டு போகிறேன்.

இறுதியாக அதிகாரத்திடம் ஒரு சின்ன விண்ணப்பம். யாழ்களம் என்பது செய்தித்தளம் அல்ல செய்திகளை எங்கு வேண்டுமானாலும் படித்துவிட்டு போகலாம். ஏனெனில் பல இடங்களில் வந்த செய்திகள்தான் இங்கு இணைக்கப்படுகின்றதுயாழ் இணையத்திற்கென வருகின்ற வாசகர்கள் அங்கு இருக்கும் படைப்புக்களிற்காகவே அதிகம் வருகிறார்கள். கருத்துக்களை பகிர்கின்றார்கள். எனவே நிருவாகம் ஒரு கருத்தாளனின் கருத்தையும் ஒரு படைப்பாளியின் படைப்பினையும் ஒரே தராசில் நிறுத்து தீர்ப்பு வழங்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும். கருத்தாளனின் கருத்துக்கள் என்பது மாற்றமடையும் மாற்றிக்கொண்டேயிருப்பார்கள் ஆனால் படைப்புக்கள் என்றும் மாறாதவை காலங்கள் கடந்தும் நிற்பவை.படைப்பாளிகளும் கருத்தாளர்களும் இருக்கும்வரைதான் யாழ்களமும் இருக்கும். இது எனது சிறிய விண்ணப்பம்தான் அதனை ஏற்பதும் விடுவதும் நிருவாகத்தின் விருப்பம்.யாழின் அதிகாரத்தை விட வாசகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது அதனால் யாழின் வாசகனாக தொடர்ந்தும் இருப்பேன் என்று கூறி யாழ்களத்தில் இதுவரைகாலமும் இணைந்திருந்த நினைவுகளோடு விடைபெற்றுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரியார்.எம்முடன் தொடர்ந்திருங்கள் அத்துடன் உங்கள் ஆக்கங்களும் தொடர வேண்டும்.நல்லது கெட்டது பற்றி பேசுவதற்கும் மனிதர் வேண்டும்.யாழ் உறவு சாத்திரி மீண்டும் வந்ததில் சந்தோசம்.நாம் தமிழர்.

நன்றிகள் கு;சா யாழின் மாற்றங்களை தொடர்ந்து எனது முடிவுகளிலும் மாற்றங்கள் வரலாம் மாற்றம் ஒன்றே மாறாதது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வந்தமைக்கு நன்றிகள் சாத்திரியார்..தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்(காமத்தை அடக்கட்டாம் என்று சொல்லுகிறாங்கள் ...)கிகிகிகி

Link to comment
Share on other sites

மீள்வருகைக்கு நன்றி.அத்தோடு உங்கள் நிலைப்பாட்டை அறியத்தந்தமைக்கும் நன்றி.உங்களின் தடையை பாவித்து யாழ்களத்துக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் ஆசாமிகளை அறிய ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

மீண்டும் வந்ததில் சந்தோசம் சாத்திரியார்.

எம்முடன் தொடர்ந்திருங்கள் நன்றி.....

Link to comment
Share on other sites

யாழ்களத்தில் இதுவரைகாலமும் இணைந்திருந்த நினைவுகளோடு விடைபெற்றுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

இது உண்மையாக சொல்லப்பட்டு இருந்தால் சாத்திரியாரிட்டை இருந்து இதை நான் எதிர்பார்க்க இல்லை... !

நான் யாழுக்கு வந்த கடந்த 7 வருசமாய் எண்டு நினைக்கிறன்... சாத்திரியாரை ஐரோப்பிய அவலங்கள் காலங்கள் முதல் எனக்கு தெரியும்... அந்த காலம் முதல் யாழ்களத்தோடை வெட்டுப்பாடுகளும் புடுங்குப்பாடும் சாத்திரியாருக்கு புதுசில்லை... ! அப்ப எல்லாம் தனியாய் நிண்டு எல்லாத்தையும் சமாளிச்சவருக்கு யாரின் மிண்டு குடுத்தல்கள் எதுவும் தேவைப்பட்டு இருந்ததாக நான் அறிய இல்லை... அப்ப எல்லாம் ஓடிப்போக முயலாத சாத்திரியாரா இது.... ??

இண்டைக்கு வந்து பாத்தால் எனக்கு எல்லாம் புதுசா இருக்கு... கனபேர் சத்திரிக்கு மிண்டு குடுக்கினம்.. அப்பவும் சாத்திரி நான் போறன் எண்டுறார்... என்ன சாத்திரியார் நக்கலா...??

சாத்திரியாரை பற்றி இங்கை கன பேர் வைச்சு இருக்கிறது வெறும் பிம்பம் மட்டும் தான் எண்று ஆகிவிடக்கூடாது எண்டது தான் எனது ஆசை... !

சாத்திரியாருக்காக தான் ஒரு பழமொழி சொல்லி இருக்கினம்...

கடினமான மழை வேண்டாம் எண்று பிராத்திர்க்காதீர். பலமான குடையை பெற்று கொள்ளுங்கள்... !

Link to comment
Share on other sites

சாத்திரி , நானும் தங்களது நீண்ட நாள் வாசகன் . மீண்டும் உங்களின் ஆக்கங்களையும் , ஆதங்கங்களையும் காண வேண்டுமென்பது அதுவும் உங்களுக்கே உரிய ஜனரஞ்சக மொழியிலே அதை நான் வாசிக்க வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை . ஆகவே தொடர்து இணைந்து இருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி, சாத்திரியார்!

உங்கள் படைப்புக்கள், அதன் சிருஷ்டி கர்த்தாவையும் தாண்டி வாழும் வல்லமை படித்தவை!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Link to comment
Share on other sites

நானும் உங்கள் ஆக்கங்களை விரும்பிப் படிப்பேன். தொடர்ந்தும் யாழுடன் இணைந்திருந்து உங்கள் ஆக்கங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

கஜன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி நீங்கள் ஒரு போராளியாக இருந்தனீங்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள் [அதன் உண்மை/பொய் தெரியாது] ஆனால் போராட்டத்தை,தேசியத்தை,தலைவரை நேசிக்கும் ஒருவரால் நாடு தற்போது இருக்கும் சூழ் நிலையில் எப்படி அப்படியான பாலியல் கதைகளை அதுவும் புலிகளில் நடந்தது என எழுத முடிந்தது? அது உண்மையாக இருந்தாலும்[ஒரு,சிலர் அப்படிப் பட்டவராக இருந்தாலும் கூட‌] இந்த நேர‌த்தில் அந்தக் கதைகள் தேவையா? இதன் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

எதை எழுதுவது,எழுதாமல் விடுவது என்பது ஒரு படைப்பாளியின் சுதந்திர‌ம் ஆனால் இதே கதையை ஏன் உங்களால் 3,4 வருட‌த்திற்கு முன்னால் எழுத முடியாமல் போய் விட்டது?...எப்பவாவது இலங்கை அர‌சு செய்த அட்டூழியங்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்களா?...எப்ப பார்த்தாலும் தேசியத்தையும்,தமிழ் மக்களையும் அவமதிக்கும் விதமாகத் தான் கதைகள் எழுதுகிறீர்கள்...உங்களைப் போன்றோருக்கு ஆணவமும்,உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்ட‌ திமிரும்,நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்ட‌ எண்ணமும் கொன்ட‌னீர்கள்...அகூதா போன்ற கொஞ்ச‌ பேர் தேசிய செயற்பாடுகளில் விடாது செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் நீங்கள்,உங்கள் எழுத்தின் மூலம் அவர்களின் செயற்பாட்டை முட‌க்கி மக்களது போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கத்தையை அடிப்படையாக கொண்டு எழுதுகிறீர்கள்...உங்களைப் போன்றோர் யாழில் எழுதுவதை விட‌ எழுதாமல் இருப்பதே எமது தேசியத்திற்கு நீங்கள் செய்யும் மரியாதை ஆகும்...உங்களுக்கு காமக் கதைகள் எழுத வேண்டும் போல இருந்தால் ஒரு பேப்பரில் போய் எழுதலாம்,புத்தகம் அடிக்கலாம் ஆனால் தயவு செய்து யாழை விட்டு விலகி விட‌வும்...நன்றி

இந்த கருத்தை கட்டாயம் சாஸ்திரி பார்க்கவும்,தனது பதிலை கூறவும் அனுமதிக்கவும்

எனது மனதில் இருந்த நான் சாத்திரியிடம் கேட்க்க என்று எண்ணிய எல்லாவற்றையும் நீங்கள் எழுதிவிட்டீர்கள்.

நன்றி ரதி.

Link to comment
Share on other sites

விளக்கத்திற்கு நன்றிகள் சாத்திரி அண்ணா..! ஆனால் இறுதியில் விடைபெற்றுச் செல்கிறேன் என்று முடித்தமையால் நீங்கள் யாழ்களத்தை விட்டு ஒதுங்குவதாகவே கருத முடிகிறது..! இது மனவருத்ததைத் தரும் முடிவென்றாலும் சில கேள்விகள் இருக்கின்றன..! ஆனால் அவற்றை இனிமேலும் கேட்பதில் அர்த்தமில்லை..!

நன்றி. வாழ்க வமுடன்..!

Reason for Edit: எழுத்துப்பிழை :D

ரதியின் கேள்வியுடன் ஒத்துப்போக முடிகிறது..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஐயரின் "ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்" புத்தக வெளியீட்டில் சொல்லப்பட்ட கருத்து ஒன்று நினைவுக்கு வருகின்றது.. ஐயரின் புத்தகத்தை வைத்து புலிகளின் அரசியலைப் பிழையென்று நிறுவி தமிழரின் தேசியப் போராட்டத்தையும் பிழையென்ற ரீதியில் தயான் ஜெயதிலக்கா ஒரு கட்டுரை எழுதியிருந்தாராம். எங்களைச் சுயவிமர்சனம் செய்ய வெளிக்கிட்டு அது எதிரிகளின் பரப்புரைக்கு அனுகூலமாக மாறக்கூடிய ஆபத்து உள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எனவே எமது தவறுகளை நாங்கள் சொல்லும்போது, அதனைத் திருத்திய வழிமுறைகளையும் சொல்லி எதிரிகள் விஷமப் பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் தடுக்கவேண்டும்.

திருத்தாத பிழைகள் தொடர்ந்தால் ஒருவராலும் தமிழ்த்தேசியத்தை உய்விக்கமுடியாது!

சாத்திரியார் எழுதும் ஆக்கங்கள் உன்னதங்களை கட்டிக்காக்கும் பலரின் மனதைப் புண்படுத்தும்தான். எனினும் உன்னதங்களை தலைகீழாகப் புரட்டிப் பார்த்தால்தான் உள்ள அழுக்குகளைச் சலவை செய்யமுடியும்!

எதிரியான தயானுக்கே இவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை இந்தக்காலகட்டத்தில் ஐயர் தான் வழங்கியுள்ளார் எனவும் பார்க்கலாம் தானே.

அழுக்குகளை சலவை செய்வது என்பது நல்ல விடயம். ஆனால், எது அழுக்கு என்று யாருக்கு நூறுவீதம் தெரியும்?, என்பதே சர்ச்சை பொருளாகி எம்மை பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனமாக்கிவிடுகின்றது.

Link to comment
Share on other sites

இறுதியாக அதிகாரத்திடம் ஒரு சின்ன விண்ணப்பம். யாழ்களம் என்பது செய்தித்தளம் அல்ல செய்திகளை எங்கு வேண்டுமானாலும் படித்துவிட்டு போகலாம். ஏனெனில் பல இடங்களில் வந்த செய்திகள்தான் இங்கு இணைக்கப்படுகின்றதுயாழ் இணையத்திற்கென வருகின்ற வாசகர்கள் அங்கு இருக்கும் படைப்புக்களிற்காகவே அதிகம் வருகிறார்கள். கருத்துக்களை பகிர்கின்றார்கள். எனவே நிருவாகம் ஒரு கருத்தாளனின் கருத்தையும் ஒரு படைப்பாளியின் படைப்பினையும் ஒரே தராசில் நிறுத்து தீர்ப்பு வழங்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும். கருத்தாளனின் கருத்துக்கள் என்பது மாற்றமடையும் மாற்றிக்கொண்டேயிருப்பார்கள் ஆனால் படைப்புக்கள் என்றும் மாறாதவை காலங்கள் கடந்தும் நிற்பவை.படைப்பாளிகளும் கருத்தாளர்களும் இருக்கும்வரைதான் யாழ்களமும் இருக்கும். இது எனது சிறிய விண்ணப்பம்தான் அதனை ஏற்பதும் விடுவதும் நிருவாகத்தின் விருப்பம்.யாழின் அதிகாரத்தை விட வாசகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது அதனால் யாழின் வாசகனாக தொடர்ந்தும் இருப்பேன் என்று கூறி யாழ்களத்தில் இதுவரைகாலமும் இணைந்திருந்த நினைவுகளோடு விடைபெற்றுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

முதலில் மீண்டும் சங்கத்திமைக்கு நன்றிகள், தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

அடுத்து, இங்கே வருவது மூலம் செய்திகளை குறுகிய நேரத்துக்குள் அறியவும் அவைபற்றிய உண்மைகள் கருத்துக்கள் பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது. ஊர்ப்புதினம் பகுதிதான் அதிகூடிய வாசகர் மையமாக யாழில் உள்ளது என எண்ணுகிறேன்.

நிர்வாகத்தை பொறுத்தவரையில் வெவ்வேறு தராசுகளை வைத்து அளவிடவேண்டும் என்பது இந்த களத்தின் தற்கொலையை வேண்டி நிற்பதாகும். ஒரு படைப்பாளியும் முதலில் தான் ஒரு கருத்தாளன் என்பதையும் கருத்தாளளின் கருத்துக்களை இந்தக்களத்தில் ஏற்கும் பண்பும் உடையவனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் ஒரு நல்ல படைப்பாளியாக இருக்கமுடியாது. படைப்பாளியின் கருத்தும் மாறவேண்டும், கருத்தாளியின் கருத்தும் மாறவேண்டும், அதுதான் ஆரோக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியான தயானுக்கே இவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை இந்தக்காலகட்டத்தில் ஐயர் தான் வழங்கியுள்ளார் எனவும் பார்க்கலாம் தானே.

அழுக்குகளை சலவை செய்வது என்பது நல்ல விடயம். ஆனால், எது அழுக்கு என்று யாருக்கு நூறுவீதம் தெரியும்?, என்பதே சர்ச்சை பொருளாகி எம்மை பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனமாக்கிவிடுகின்றது.

அகூதாவின் கூற்றை நான் முழுமையாக வரவேற்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியான தயானுக்கே இவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை இந்தக்காலகட்டத்தில் ஐயர் தான் வழங்கியுள்ளார் எனவும் பார்க்கலாம் தானே.

அப்படியும் பார்க்கலாம் என்பது உண்மைதான். எனினும் ஐயர் தனது பதிவுகளில் நேர்மையாகத்தான் இருந்திருக்கின்றார் என்பதை அதனைப் படித்தவர்கள் புரிவார்கள்..

தயான் போன்றவர்களுக்கு அஞ்சி எமது வரலாறுகளை வெறும் "கதை"களாக சொல்லித்திரிவதைவிட சுயவிமர்சனம் செய்து தவறுகளைத் திருத்தி முன்னேறுவதுதான் சிறந்தது எனது அபிப்பிராயம்.

அழுக்குகளை சலவை செய்வது என்பது நல்ல விடயம். ஆனால், எது அழுக்கு என்று யாருக்கு நூறுவீதம் தெரியும்?, என்பதே சர்ச்சை பொருளாகி எம்மை பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனமாக்கிவிடுகின்றது.

எது அழுக்கு எது இல்லை என்பது இருட்டுக்குள் பொத்திவைத்தால் தெரியாது. வெளிச்சத்தில் வந்தால் தெரியும்தானே.. இருட்டுக்குள் எல்லாவற்றையும் ஒளித்து வைப்பதும் ஒரு வகையில் பலவீனமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வந்ததற்கு நன்றி சாத்திரி

நல்லதோ கெட்டதோ பேசிக்கொள்வோம்.

நாம் கதைக்க கனக்க இருக்கு.

ஆனால் அதற்கு ஒரு எல்லையும் தார்மீகப்பொறுப்பும் உண்டு.

அந்த வகையில் உங்களது அந்த திரிக்கு நான் எதிர்ப்பு சொன்னேன் என்பதை எப்போதும் நான் மறுக்கமாட்டேன். அதேநேரம் நல்லதை எழுதினால் அதை வரவேற்கும் முதல் ஆளும் நான் தான்.

இழப்புக்கள் வரும்போது ஒரு கணம் தலை குனிந்து மரியாதை செலுத்திவிட்டு மீண்டும் தலைநிமிர்த்தி புறப்படுகின்றோம் இலக்கை நோக்கி.............

Link to comment
Share on other sites

அப்படியும் பார்க்கலாம் என்பது உண்மைதான். எனினும் ஐயர் தனது பதிவுகளில் நேர்மையாகத்தான் இருந்திருக்கின்றார் என்பதை அதனைப் படித்தவர்கள் புரிவார்கள்..

தயான் போன்றவர்களுக்கு அஞ்சி எமது வரலாறுகளை வெறும் "கதை"களாக சொல்லித்திரிவதைவிட சுயவிமர்சனம் செய்து தவறுகளைத் திருத்தி முன்னேறுவதுதான் சிறந்தது எனது அபிப்பிராயம்.

நான் அந்தப்புத்தகத்தை படிக்கவில்லை.

ஒரு விடுதலை இராணுவத்தில் இருந்தவர் என்ற ரீதியில் அவருக்கு என்று சில கடமைப்பாடுகள் அந்த அமைப்பில் இருக்கும் பொழுதும் அதில் இருந்து வெளியேறிய போதும் உள்ளது. அது உலக இராணுவ நடப்பு. அந்த இராணுவ அமைப்பே எதையும் வெளியிடலாம், அதை மீறி தன்னிச்சையாக ஒருவர் வெளிவிடுவது எனது தண்டனைக்குரிய குற்றம்.

அந்தவகையில் ஐயருக்கோ இல்லை எவருக்குமோ உத்தியோகபூர்வமாக அன்றி தாம் பிரநிநிதிப்படுத்திய இல்லை பிரதிநிதிப்படுத்தும் அமைப்பு சார்ந்த கருத்தை வெளியிடுவது பிழை.

தயான் போன்ற பழுத்த சிங்களப்பிரதிநிதிகளின் முழுநேர வேலையே எம்மை பிரிப்பது, எமக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது, எம்மைப்பற்றி அவதூறான பிரச்சாரம் செய்வது. அவர்களுக்கு இரை போடுவது இந்தக்காலகட்டத்தில் தவறு. ஏனெனில் இப்பொழுதும் 'மீண்டும் ஆயுதப்போராட்டத்திற்கு தயாராகுகின்றார்கள் புலிகள்' என்ற ஆதாரம் இல்லாத பிரச்சாரத்திற்கு உதவி அரசியல் / இராஜதந்திர போராடத்தை பலவீனம் அடையவே செய்யும்.

Link to comment
Share on other sites

எது அழுக்கு எது இல்லை என்பது இருட்டுக்குள் பொத்திவைத்தால் தெரியாது. வெளிச்சத்தில் வந்தால் தெரியும்தானே.. இருட்டுக்குள் எல்லாவற்றையும் ஒளித்து வைப்பதும் ஒரு வகையில் பலவீனமே!

நீங்கள் கடந்த வாரம் நடந்த ஜெனீவா தீர்மானத்தில் இந்தியா சிங்கள நாட்டிற்கு எதிராக ஒருகாலமும் வாக்களிக்காது எனவும் வாதாடியவர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்தும் இணைந்திருங்கள்.தொடர்ந்தும் உங்கள் படைப்புகளை தாருங்கள்.ஆனால் மற்றவர்களின் உணர்வை புண் படுத்தாமல் சுய தணிக்கை செய்யலாம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடந்த வாரம் நடந்த ஜெனீவா தீர்மானத்தில் இந்தியா சிங்கள நாட்டிற்கு எதிராக ஒருகாலமும் வாக்களிக்காது எனவும் வாதாடியவர் தான்.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் இந்தியா ஆட்டும்போது தொட்டில் ஆட்டுவதை வைத்து நன்றாகப் பிள்ளையைப் பார்க்கின்றார் என்று சொல்லுவதுபோல் உள்ளது!

இந்தியாவின் வாக்களிப்பு காங்கிரஸின் அரசியலுக்குத் தேவையானது. வடக்கில் தோற்கும் காங்கிரஸ் எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டுச் சேருவதற்கான அடிக்கல்லாகவும் இதனைப் பார்க்கலாம். இதைவிடுத்து இந்தியாவில் வாக்களிப்பு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வந்துவிட்டதற்கான அறிகுறி என்று நம்புவது மடமை..

தமிழ்நெற்றில் இருந்து...

Soon after the successful adoption of the pro-LLRC US resolution, the Indian Prime Minister Manmohan Singh sent a letter to the Sri Lankan President Rajapaksa claiming that the Indians “spared no effort and were successful in introducing an element of balance in the language of the resolution”. Openly admitting how India had gone out of the way to water down the resolution to make it “non-intrusive” so as to defend Sri Lanka’s sovereignty, he emphasised on a political solution based on the 13th amendment model. ........

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போலுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.