Jump to content

யாழ் இணையம், யாழ் கருத்துக்களம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் சம்மந்தமான பிரேரணை!


Recommended Posts

 

அனைவருக்கும் வணக்கம்,

 

இன்று யாழின் எதிர்காலம் சம்மந்தமாக நிழலி அவர்களுடன் சில விடயங்களை உரையாட சந்ந்தர்பம் கிடைத்தது. முன்பும் பல தடவைகள் மோகன், வலைஞனுடன் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி கருத்துப்பரிமாறியுள்ளேன். அத்துடன், யாழின் சிறந்ததொரு சிந்தனையாளர் இன்னுமொருவனின் கருத்துக்களம் பற்றிய அருமையானதொரு பதிவையும் இன்று பார்வையிட்டேன். மேலும், சர்ச்சைக்குரிய தடையின்பின் மீண்டும் கருத்தாடலில்இணைந்துள்ள சாத்திரிஅவர்களின் ஆலோசனைகளையும் யாழ் உறவோசையில் அறியமுடிந்தது. தவிர, அண்மைக்காலங்களின் யாழ் கருத்துக்களம் சம்மந்தமாக கருத்துக்கள உறவுகள் பலரும் முன்வைத்த ஆலோசனைகளையும் பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவற்றின் அடிப்படையில் யாழ் இணையம், யாழ் கருத்துக்களம் இவற்றில் ஏற்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் சம்மந்தமான சில பிரேரணைகளை இங்கு உங்கள் பார்வைக்கு கொண்டுவருகின்றேன். இது எனது கண்ணோட்டம் மட்டுமே. இதை பரிசீலிப்பதும், ஆலோசனைகளை கருத்திற்கொண்டு மாற்றங்களை செய்வதும் யாழ் நிர்வாகத்தை பொறுத்தது.

 

இந்தப்பிரேரணை கீழ்வரும் அடிப்படை அம்சங்களிற்கு ஈடுகொடுக்கக்கூடியதான வகையில் வரையப்படுகின்றது.

 

அ) தமிழ் (தாயகமும், அதற்கு வெளியேயும்) மக்களிற்கான நீதியான, நிம்மதியான, பாதுகாப்பான வாழ்வு, அவர்களது வாழ்வியல் முன்னேற்றம்.

ஆ) யாழ் இணையத்தின் பங்காளர்களான யாழ் உரிமையாளர், நிர்வாகிகள், யாழ் உறவுகள், வர்த்தக நிறுவனங்கள், யாழ் வாசகர்கள், நலன்விரும்பிகள், இதரபொது அமைப்புக்கள், சங்கங்கள் இவர்களிடையே சிறந்த உறவுப்பாலத்தை கட்டியெழுப்பி பேணிக்காத்தல்

இ) யாழ் இணையத்தின் வர்த்தகரீதியான முன்னேற்றம்

ஈ) யாழ் இணையத்திற்கு வரக்கூடிய சட்டரீதியான சவால்களை வெற்றிகொள்ளுதல்

 

யாழ் இணையத்தில், கருத்துக்களத்தில் எப்படியான பிரச்சனைகள் வருகின்றது/வரக்கூடும் என்பதை கண்டறிந்தால் அதற்கான தீர்வை எட்டக்கூடியதாக தேவையான மாற்றங்களை, திருத்தங்களை அமைப்பு முறையிலும் களவிதிகளிலும் செய்வது இலகுவாக அமையும். எனவே, எனது அவதானிப்பில் (நான் செய்யும் தவறுகள் உட்பட) கீழ்வரும் பிரச்சனைகளை சுருக்கமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

 

* புதியவர்கள் யாழ்களஓட்டத்தில் இணைவதில் ஏற்படும் சிரமங்கள். (உ+ம்: இலகுவில் மனக்கசப்படைதல்)

* கருத்தை பார்க்காமல் கருத்தாளரின் பின்னணியை பார்த்து/ஊகித்து பதிற்கருத்து இடுதல். (உ+ம்: சோற்றுப்பாசல்)

* எது நகைச்சுவை, எது நகைச்சுவை இல்லை என பதில்கருத்துக்களை வாசிக்கும்போது புரிந்துகொள்ளமுடியாதபடி மயக்கம் ஏற்படுதல். (உ+ம்: முகக்குறிகள்)

* படைப்பாளிகள் தமது படைப்புக்களிற்கு கிடைக்கும் பின்னூட்டல்களை கட்டுப்படுத்தமுடியாத தன்மை. (உ+ம்: படைப்பாளியின் கதைஒன்றை வாசித்துவிட்டு கதையை எழுதியவரை மெண்டல் என்று எழுதுதல்)

* பதில் கருத்துக்களின்போது தலைப்பு ஒன்றின்போக்கு மாறுதல். (உ+ம்: யாழ் உறவோசை)

* தனிமடல் தவறான பாவனை (உ+ம்: ஒருவரின் தனிப்பட்ட மடலை இன்னொருவருக்கு காட்டுதல்)

* திண்ணையில் உணர்ச்சிகள், உரையாடல் தவறாக புரிந்துகொள்ளப்படுதல் (உ+ம்: நகைச்சுவையை புரிந்துகொள்ளமுடியாததன்மை)

* திண்ணை கத்திபோன்றது (உ+ம்: தவறான பாவனை காயங்களை ஏற்படுத்தும்)

* சட்டரீதியாக சிக்கல்களை கொண்டுவரும்வகையில் கருத்துக்களை இடுதல் (உ+ம்: முகமூடியுடன் ஒருவர் இடும் சட்டவிரோதமான பதிவு நிஜமான முகத்துடன் நடமாடி இங்கு கருத்தாடலில் ஈடுபடும் ஒருவருக்கு சட்டரீதியான பிரச்சனையை கொண்டுவரலாம்)

* அனுபவம் அற்ற/குறைந்த அல்லது சர்ச்சைக்குரிய இணையத்தளங்களின் செய்திகள் இணைக்கப்படுதல் (உ+ம்: வெட்டி ஒட்டும் இணையத்தளங்களின் செய்திகளை மீண்டும் இங்குகொண்டுவந்து வெட்டி ஒட்டுதல்)

* வர்த்தக நிறுவனங்கள் யாழுடன் இலகுவில் இணைந்துகொள்ளமுடியாத நிலமை

 

கீழ்வரும் மாற்றங்களை/திருத்தங்களை செய்வது மேலுள்ள மற்றும் யாழ் இணையம், யாழ் கருத்துக்களத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையலாம்.

 

* வழிகாட்டிகள் குழு (mentors):

 

தொண்டின் அடிப்படையில் ஆர்வம் உள்ள யாழ் உறவுகளினை இணைத்து ஒரு குழுவாக செயற்படும் வகையில் புதிதாக இணைபவர்களுக்கு உதவுமுகமாக வழிகாட்டிகள் குழுவை (mentors) உருவாக்குதல். உதாரணமாக 'தமிழன்' எனும் பெயரில் ஒருவர் யாழ் கருத்துக்களத்தில் புதிதாக இணைகின்றார் என வைப்போம்.  அவருக்கு வழிகாட்டியாக வழிகாட்டிகள் குழுவில் உள்ள 'தமிழ்சிறி' ஆறுமாதங்கள் உதவி செய்வார். கருத்துக்களத்தில் யாழ் அரிச்சுவடியில் தமிழில் எழுதுதல் தொடக்கம் கருத்தாடலில் பங்குபெறுதல், பதில்கருத்து எழுதுதல், உறவுகளிடையே நன்மதிப்பை பெறுதல் இப்படி பல்வேறு விடயங்களில் அந்தப்புதிய உறவான 'தமிழனுக்கு' தமிழ்சிறி அறிவுரையாளராக (mentor) செயற்படுவார். ஆறுமாதத்தின் பின் தமிழ்சிறியின் சிபாரிசின் பின்னர் 'தமிழன்' 'கருத்துக்கள உறவு' நிலையை அடைவார். அதுவரை தமிழனுக்கு மட்டுப்படுப்படுத்தப்பட்ட செயற்பாடுகளிற்கே கருத்துக்களத்தில் இடம்கொடுக்கப்படவேண்டும்.

 

யாழ் கருத்துக்களத்தில் ஒருவர் புதிதாக இணைந்ததும் யாழ் வழிகாட்டிகள் குழுவிற்கு புதியவர் விபரத்தை யாழ் நிர்வாகம் அனுப்பிவைக்கவேண்டும். வழிகாட்டிகள் குழுவில் உள்ள ஒரு தொண்டர் குறிப்பிட்ட உறுப்பினரை பொறுப்பேற்று அவரை ஆறுமாதங்கள் வழிநடத்துவார். ஒரு தொண்டர் ஐந்துபேரை பொறுப்பேற்றால் பத்து தொண்டர்கள் ஐம்பது புதிய உறுப்பினர்களிற்கு ஆறுமாதங்களிற்கு ஏககாலத்தில் வழிகாட்டிகளாக அமையமுடியும்.

 

இந்த யோசனையை முக்கியமாக இங்கு பிரேரணை செய்வதற்கான காரணம் யாழ் கருத்துக்களத்தின் போக்கினை, தன்மையினை உணர்ந்து அதற்கேற்ப தம்மை இங்கு நிலைப்படுத்திக்கொள்வதற்கு வெறும் தமிழ் அறிவோ, அல்லது தொழிநுட்ப அறிவோ அல்லது வேறு அனுபவங்களோ போதாது. அதற்கு ஒரேயொரு வழி யாழ் கருத்துக்களத்தில் இணைந்து சக உறவுகளுடன் கருத்தாடல் செய்து அனுபவத்தை பெற்றுக்கொள்வதே. இந்தவழிமுறைமூலம் தேவையற்ற பல பிரச்சனைகளை எதிர்காலத்தில் தவிர்க்கலாம் என்பதோடு, யாழில் அதிகளவு கருத்தாளர்களையும், வாசகர்களையும் உள்வாங்குவதற்கும், அத்துடன் யாழின் நன்மதிப்பை உயர்த்துவதற்கும் இது உதவும்.

 

இந்தக்குழுவின் செயற்பாட்டினை இலகுபடுத்துவதற்காக 'யாழ் உறவுகள்' பகுதியில் 'யாழ் வழிகாட்டிகள்' என ஓர் குழுமம் உருவாக்கப்படலாம். அதில் தொண்டர்களுக்கும் யாழ் நிர்வாகத்திற்கும் மட்டுமே கருத்துக்களை பகிர்வதற்கும், பார்வையிடுவதற்கும் அனுமதிகொடுக்கப்படவேண்டும். இந்தப்பகுதி புதியவர்கள் விபரங்கள், இதரவிடயங்களை, சிபாரிசுகளை பரிமாற்றம் செய்வதற்கு தளமாக அமையும்.

 

* முகக்குறிகளை நீக்கிவிடுதல்:

 

இதன்மூலம் கருத்தாளர்களிடையே மனஸ்தாபங்களை இலகுவில் தூண்டிவிடக்கூடிய தன்மை குறையும்.

 

* திண்ணை:

 

திண்ணையை கருத்துக்களத்தின் மேற்பகுதியில் அல்லது கீழ்ப்பகுதியில் காட்டாமல் புதியதொரு பகுதியாக காட்டுதல் (உ+ம்: யாழ்வலைப்பூ, யாழ்முற்றம் போல்): இதனால் தேவையற்ற பல பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.

 

* யாழ் வலைப்பூவை யாழ் கருத்துக்களத்திற்கு நிகராக யாழ் முகப்பில் பிரபலப்படுத்துதல்:

 

யாழ் முகப்பில் யாழ் கருத்துக்களத்திற்கு கொடுக்கும் அதேயளவு இடத்தை/முக்கியத்துவத்தை யாழ் வலைப்பூவிற்கும் கொடுத்தல் (உ+ம்: அரைப்பகுதி கருத்துக்களத்திற்கு ஒதுக்கப்பட்டால் அரைப்பகுதியை வலைப்பூவிற்கு ஒதுக்குதல்) இதனால் படைப்பாளிக்கு தனது படைப்பிற்கான பின்னூட்டல்களை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. யாழில் படைப்பாளிகளை இது பெருமளவில் ஊக்குவிக்கும். யாழில் வர்த்தக அனுசரணையாளர்களையும் இது பெருமளவில் ஊக்குவிக்கும். கருத்தாளர்களை கருத்துக்களத்துடனேயே எப்போதும் நேரத்தை செலவளித்து பிரச்சனைகளையும் ஏற்படுத்தாமல் புதிய ஆக்கங்களை படைக்கவும், புதிய சிந்தனைகளை நோக்கி பயணிக்கவும், நல்ல படைப்பாளிகளாக உருவாகவும் இது நிச்சயம் ஊக்குவிக்கும். வலைப்பூவினை தவறாக எவராது பயன்படுத்தினால் அவர்கள் வலைப்பூவினை பயன்படுத்தமுடியாதவாறு தடைசெய்யலாம்.

 

* கருத்துக்கள அனுசரணையாளர்கள்:

 

கருத்துக்கள உறவுகளுடன் கருத்துக்கள அனுசரணையாளர்கள் என இன்னோர் புதிய குழுமத்தை உருவாக்குதல். கருத்துக்கள அனுசரணையாளர்களிற்கு அவர்களின் விளம்பரங்கள், தகவல்களை வழங்குவதற்கு கருத்துக்களத்திலும், யாழ் முகப்பிலும் தனியான இடம் ஒதுக்குதல் (உ+ம்: பொருட்பாலை - விற்பனைக்களம்): இது யாழ் இணையம் வர்த்தகரீதியாக முன்னேறுவதற்கு பேருதவியாக அமையும். கருத்துக்கள அனுசரணையாளர்களிடம் வருடத்திற்கு சுமார் $250 (உ+ம்) கட்டணம் அறவிடலாம். கருத்துக்கள அனுசரணையாளர்கள் இலகுவாக யாழ் இணையத்தில் இணையவும், அத்துடன் அவர்களுடனான நிர்வாகத்தொடர்புகளை இலகுபடுத்தவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இது உதவும். (நிர்வாகத்திற்கு விருப்பம் என்றால் இந்தப்பகுதியை கையாள்வதற்கான பொறுப்பை நான் ஏற்கின்றேன்)

 

* சட்டவியல் ஆலோசனைக்குழு:

 

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள், பாவனைகள், நுகர்வு முறைகள், புதிய சட்ட அமுலாக்கங்கள், இலத்திரனியல்/இணையவெளிச் சட்டங்கள், ஊடகவியல் சட்டங்கள், உள்ளூர் சட்ட அமுலாக்கங்கள், அறிவுசார் சொத்து, காப்புரிமைச் சட்டங்கள் இவைபற்றிய விடயங்களில் ஓரளவாயினும் அறிவு, அனுபவம் படைத்த யாழ் உறவுகளை இணைத்து சட்டவியல் ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்தல். தேவையானால் பதிவுசெய்யப்பட்ட சட்டத்தரணி ஓரிருவரையும் (கனடா/யூகே/அவுஸ்திரேலியா) நிரந்தரமாக வைத்துக்கொள்ளுதல். இதற்காகும் செலவை யாழ் உறவுகளிடம், வாசகர்களிடம், அனுசரணையாளர்களிடம் நன்கொடை மூலம் பெறலாம் (உ+ம்: பேபல்)

 

இதுவரை சட்டரீதியாக ஏதும் தொல்லைகள் யாழ் இணையத்திற்கு குறிப்பிடத்தக்கவகையில் ஏதும் வராவிடினும் எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை சமாளிப்பதற்கும், அத்துடன் எதிர்காலத்தில் வரக்கூடிய சட்டச்சிக்கல்களை தவிர்ப்பதற்கும் இந்த சட்டவியல் ஆலோசனைக்குழுமம் பேருதவியாக அமையும். 'யாழ் உறவுகள்' பகுதியில் இவர்களிற்கும் ஓர் இடத்தை ஒதுக்கலாம்.

 

இந்த சட்டவியல் குழுமம் சட்டரீதியாக யாழ் இணையத்திற்கு வரகூடிய சவால்களை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும். கருத்துக்களவிதிமுறைகள் இறுதிவடிவம் பெறுதல், கருத்துக்களவிதிமுறைகள் காலத்திற்கு காலம் மாற்றம் பெறுதல் ஆகியவை இந்த சட்டவியல் குழுமத்தின் கண்காணிப்பில் நடைபெறும். யாழ் உறவுகளிற்கு பொறுப்புணர்வுடன் சட்டசிக்கல்களை ஏற்படுத்தாதவகையில் கருத்தாடல்களில் பங்குபெறுவதற்கு அறிவூட்டும் ஓர் வழிகாட்டியாகவும் இந்த சட்ட ஆலோசனைக்குழு விளங்கும்.

 

* செய்திக்குழு:

 

யாழ் கருத்துக்கள உறவுகள் எவரும் செய்திகளை இணைக்கமுடியும். ஆனால் செய்திக்குழுவும், சட்டக்குழுவும் சிபாரிசு செய்யும் பட்டியலில் உள்ள இணையத்தளங்களின் இணைப்புக்களை, செய்திகளை மட்டுமே யாழில் பதிக்கமுடியும். எந்தெந்த இணையத்த்தளங்களின் செய்திகளை, செய்தி இணைப்புக்களை யாழில் இணைக்கமுடியும் என்பதை இந்த செய்திக்குழுவும், சட்டக்குழுவும் சேர்ந்து தீர்மானிக்கும்.

 

கடந்தகாலத்தில் யாழ் இணையத்தில் தமது செய்தி இணைப்புக்களை இணைத்து பின்னர் பிரபலம் அடைந்த பல இணையத்தளங்கள் தற்போது பல சர்ச்சைகளிற்கு காரணமாக அமைவதாகவும், சமூகசீர்கேட்டில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே, எதிர்காலத்தில் வரக்கூடிய கேடுகளுக்கு யாழ் இணையம் ஓர் வடிகாலாக அமையக்கூடாது. எந்தெந்த இணையத்தளங்களின் செய்திகளை/இணைப்புக்களை மட்டுமே ஊர்ப்புதினத்தில் இணைக்கவேண்டும் என்பதற்கான பட்டியலை செய்திக்குழுவும், சட்டக்குழுவும் சேர்ந்து உருவாக்கும்.

 

யாழ் செய்திக்குழுவில் உள்ளவர்கள் யாழ் கருத்துக்கள உறவுகள் பிரேரணை செய்யும் இணையத்தளங்களிற்கு சென்று சுயாதீனம், நம்பகத்தன்மை, தரம், இவற்றின் அடிப்படையில் அந்த இணையத்தளத்தை எடைபோடுவார்கள். யாழ் செய்திக்குழு குறிப்பிட்ட அந்தத்தளத்தின் இணைப்புக்கள் யாழில் இணைக்கப்படமுடியும் என்று அனுமதி வழங்கினால், யாழ் சட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் குறிப்பிட்ட இணையத்தள உரிமையாளருடன் தொடர்புகொண்டு அவர்களது செய்தியை/இணைப்பை யாழ் இணையத்தில் முழுமையான மீள்பிரசுரம் செய்வதற்கான அனுமதியை பெறுவார். அனுமதி கிடைப்பின் செய்திக்குழு, சட்டக்குழு ஆகியவை இரண்டும் சிபாரிசு செய்தபின்னர் உருவாகும் பட்டியலில் உள்ள இணையத்தளங்களின் செய்திகளை மட்டுமே யாழில் யாழ் கருத்துக்கள உறவுகள் இணைக்கமுடியும். இதன்மூலம் யாழ் இணையத்திற்கு எதிர்காலத்தில் வரக்கூடிய அறிவுசார் சொத்து, காப்புரிமை சார்ந்த சட்டரீதியான பிரச்சனைகளை தவிர்க்கமுடியும். அடுத்ததாக, சமூகசீர்கேட்டிற்கு வழிவகுக்கக்கூடிய தளங்கள் யாழின் உதவியுடன் எதிர்காலத்தில் உருவாகுவது தடுக்கப்படமுடியும்.

 

'யாழ் உறவுகள்' பகுதியில் செய்திக்குழுவிற்கும் ஓர் பகுதி ஒதுக்கப்படலாம். ஊர்ப்புதினத்தில் சிபாரிசு பட்டியலில் இல்லாத தளங்களின் செய்திகளை அல்லது இணைப்புக்களை எவராவது இணைத்தால் அவருக்கு எச்சரிக்கை கொடுக்கப்படுவதோடு நிர்வாகம் உடனடியாக குறிப்பிட்ட தலைப்பையும் நீக்கம் செய்யவேண்டும். செய்திக்குழுவில் இசைக்கலைஞன், அகூதா, நெடுக்காலபோவான், மல்லையூரான், புங்கையூரான், ரகுநாதன், கந்தப்பு, நுணாவிலான், தும்பளையான், கிருபன், ஈசன், போன்றோர் இணைந்து செயலாற்றுவது நல்லதென்று நினைக்கின்றேன். வர்த்தகரீதியாக யாழ் இணையம் முன்னேற்றம் பெறுவதற்கும் இந்தக்கட்டுப்பாடு பேருதவியாக அமையும்.

 

பிரச்சனைகளிற்கான தீர்வுகளும் வழிமுறைகளும் புதிது, புதிதாக கண்டுபிடிக்கப்படலாம். மேலுள்ள விடயங்களை மட்டுமே இப்போதைக்கு நான் இங்கு பிரதானமான ஆலோசனைகளாக கூறவிரும்புகின்றேன்.

 

நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பல பரிந்துரைகள் கலைஞன்.

அத்தோடு கீழ் வரும் யாழ் கருத்துக்களத்துக்கான சில பரிந்துரைகளையும் முன் வைக்கிறோம்..! யாழ் இணையம் தொடர்பான எமது பரிந்துரைகள் ஏலவே இங்கு இடப்பட்டுள்ளன.. நோக்கவும்...

http://www.yarl.com/...showtopic=98195

மறைமுகமாக தங்களின் கற்பனையோடு கள உறவுகளைச் சீண்டுவது:

உதாரணமாக: இஞ்ச ஒருத்தருக்கு வாந்தி வருகுது.. வயிற்றால போகுது.. காய்ச்சல் அடிக்குது.. சில ஆக்களுக்கு சரியான பயம் .. நிர்வாகம் இவரை வெளியேற்ற விரும்புது.. நிர்வாகம் இவரை விரட்ட விரும்புது.. நிர்வாகத்திற்கும் இவரைப் பிடிக்கிறதில்ல.. இவர் ஒரு தலைவர்.. இவரின் தலைவரும் அப்படி இவரும் அப்படி.. தில்லிருந்தா போ.. ஏன் நிற்கிறா.. மானரோசம் இருந்தா நிற்காது.. திரும்ப வந்து எழுதாதுகள்.. மான ரோசம் இருக்கா.. எல்லாம் தெரிஞ்சவர்.. மேதாவி.. தனியன்.. தரித்திரம்.. கெட்ட சாமான்.. கோடரிக்காம்பு.. துரோகி.. கேணையன்.. நன்றி கெட்ட சாமான்.. நாய்..

இப்படியான பல சொற் தொடர்கள் மூலம் இதர கள உறவுகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் சீண்டுதலும் உறவுச் சீர்கேடுகளுக்கு வித்திடுதலும். இவை எதுவும்.. கள உறவுகளை மறைமுகமாகச் சீண்டுதல் என்ற அடிப்படை களவிதிக்கு உட்பட்டு நீக்கப்படுவதில்லை. எனவே தானாகவே இவ்வாறன சொற்கள் எழுதப்படும் போது இவற்றை எழுத தடை என்று எச்சரிக்கை "பொப் பப்" வர ஏதாவது தொழில்நுட்ப ஏற்பாடு செய்தால்.. சம்பந்தப்படவர்கள் இவற்றை எழுதுவதை நிறுத்துவார்கள்... அல்லது தீவிர கள விதி அமுலாக்கல் மூலம் இவற்றை எழுதும் நிலையை அறவே இல்லாது ஒழிக்க வேண்டும்..!

குழுச் செயற்பாடுகள்

வெளியில் பேசிப் பறைந்துவிட்டு இங்கே வந்து ஒரு கூட்டமாக நின்று.. களத்தில் பிரச்சனையை உண்டு பண்ணுவது. இது ஒரு கலாசாரமாகவே இங்கு வளர்ந்துள்ளது. எங்கும் வியாபித்து நிற்கிறது..! சில சந்தர்ப்பங்களில் இது அடங்கி இருந்தாலும் சூடான விவாதங்கள் நிகழுகின்ற வேளையில் இது விஸ்வரூபம் எடுத்து களச் செயற்பாடுகளை ஸ்தப்பிக்க செய்கிறது. இந்த தேவையற்ற கள ஒற்றுமையை செயற்பாட்டை சீர்குலைக்கும் கலாசாரத்தை தடுத்து நிறுத்த சரியான விதிமுறைகள் அமுலுக்கு வர வேண்டும்.

பக்கச் சார்பற்ற நிர்வாக நடைமுறைகள்.

மோகன் அண்ணா.. சுரதா அண்ணா போன்றவர்கள்.. அதிகம் கள உறவுகளால் விரும்பப்படக் காரணம் அதிகம் அவர்கள் பக்கச் சார்பற்று இருந்தமை தான். இதனை புதிய நிர்வாக நடைமுறையிலும் கொண்டு வர வேண்டின் கூட்டு ஆலோசனையோடு பிரதான முடிவுகளை எட்டுதல் என்ற நிலையை நிர்வாக மட்டத்திலும் ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம். உண்மையாகவே அதற்கு கட்டுப்பட்டுச் செயற்படுவதும் வேண்டும்.

தலைப்புக்கள் மற்றும் படைப்புக்கள் மூலம் காண்பிக்கப்படும் காழ்புணர்வும்.. துதிபாடலும்..!

களச் சீர்கேட்டிற்கு இன்னொரு காரணம் தலைப்புக்களும் சுய படைப்புக்களினூடு நிகழும் காழ்புணர்ச்சி வெளிப்பாடுகளும்.. துதிபாடல்களும். மக்களால் கள உறவுகளால் நேசிக்கப்படும் போற்றப்படும் விடயங்கள் தொடர்பில் வரும் மாறுபட்ட தலைப்புக்கள் படைப்புக்கள் கள உறவுகளை வெகு சீக்கிரமாகவே சீண்டி விடுகின்றன. களத்தை சீர்குலைக்கின்றன. அந்த வகையில் கலைஞன் குறிப்பிட்டது மென்ரேர்ஸ் வழிகாட்டுதலை இந்த இடத்தில் நிர்வாகம் பரிந்துரைப்பது நன்று. மென்ரேர்ஸ் பரிந்துரைகள் தனிமடல் மூலமோ.. நிர்வாகத்தின் ஊடாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு படைப்பு மற்றும் தலைப்புத் தொடர்பில் 24 மணி நேரங்கள் கால அவகாசத்தோடு வழங்கப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்பட பரிந்துரைக்கப்படின் அது பல பிரச்சனைகளை தீர்க்கும்..! களத்தின் சீரான இயக்கத்திற்கும் உதவும்..!

படைப்பு ஆதாரங்கள்.

செய்திகளுக்கு ஆதார இணைப்புக்கள் உள்ளன. அதேபோல்.. வரலாற்று ரீதியான.. அரசியல் ரீதியான.. முக்கிய சமூக நிகழ்வுகள் தொடர்பான.. மக்கள் செல்வாக்குள்ள.. உணர்வுகளைத் தூண்டக் கூடிய..நிகழ்வுகள் ஆட்கள் தொடர்பான சுய ஆக்கங்களுக்கு அடிப்படை ஆதாரங்களை முன் வைத்து மக்களின் எண்ணங்கள் தவறு என்பதை சரியான ஆதாரங்களோடு மாற்றங்களை வேண்டி முன் வைக்க அனுமதிக்க வேண்டும். மாறாக புனைவிலக்கியங்களான கவிதை.. சீர்திருத்தக் கதைகள்..நீதிக்கதைகள்.. தவிர ஏனையவற்றில்.. கற்பனைகளை.. புனைவுகள்.. திரிபுகள்.. இட்டுக்கட்டுகைகள் கொண்டு அமைக்க அனுமதிப்பது தவறு. இவையே இங்கு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகின்றன.

நிர்வாகம்.. கள உறவுகள் சார்ந்த தலைப்புக்கள்:

நிர்வாகம்.. கள உறவுகளின் நடவடிக்கைகள்.. செயற்பாடுகள் தொடர்பில் அவற்றை மேற்கோள் காட்டியும் காட்டாமலும்.. தொடரப்படும்.. எல்லா தலைப்புக்களும் கள நாற்சந்தி தவிர வேறு இடத்தில் திறக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிக்க வேண்டின் குறிப்பிட்ட நிர்வாக உறுப்பினரின்.. கள உறவின் தனிமடல் மூல அனுமதி பெற்றிருக்க வலியுறுத்துவது அவசியம். குறிப்பிட்ட தலைப்புக்கான அவசியத்தை விளக்குவதும் அவசியம்..!

கள விதி அமுலாக்கம்:

கள விதிகள் பக்கச்சார்பின்றி எல்லோருக்கும் சமனாக அமுலாக்கப்பட வேண்டும். ஒருவர் நிர்வாகத்தோடு உறவாடுபவர்.. மற்றவர் கள உறவுகளின் உற்ற தோழர் அல்லது தோழி.. நீண்ட கால உறுப்பினர்.. சுய ஆக்கம் படைப்பவர்.. என்ற பாகுபாடுகள்.. தீர்மானங்கள் இன்றி களவிதிக்கு நிர்வாகம் உட்பட எல்லோரும் கட்டுப்படவும் எல்லோர் மீதும் களவிதி சம அமுலாக்கம் பெறச் செய்யப்பட வேண்டும்.

களவிதி மீறல்களை கள உறவுகள் சுட்டிக்காட்ட ஒரு பக்கம் அமைக்கப்படுவதும் அவசியம்.

களவிதிகள் மீறப்படும் சொற்கள்.. அல்லது சொற்றொடர்கள் வரையப்படும் போது இதனை இடமுன் சிந்தியுங்கள்.. என்ற எச்சரிக்கை பொப் பப் வெளிவர ஏதாவது தொழில்நுட்ப ரீதியான முன்னேற்பாடு செய்வது நன்று.

சுய தணிக்கைகளும்.. தம்மை தாமே நிர்வகிப்பதும்.

சூழ்நிலைக்கு அமைய ஆக்கங்களில் சுயதணிக்கை.. மற்றும் ஒவ்வொரு கருத்தெழுதும் போதும்.. நிதானித்து நின்று அந்தக் கருத்தை பதிவிட முன் அவரவர் அதனை தானே நிர்வகித்து பிரசுரிப்பது நன்று. குறிப்பாக சர்ச்சைகளை எழுப்பக் கூடும் என்ற கருத்துக்களில் இது தொடர்பில் கூடுதல் கவனம் எடுக்கலாம். இன்றேல் மென்ரேர்ஸ் அல்லது கள நிர்வாகத்தோடு.. தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று பின் தலைப்பை.. கருத்தை வெளியிடும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வது நல்லம்.

மேற்படி விடயங்களையும் புதிய நிர்வாகம் கவனத்தில் கொள்ள முன் வைக்கிறோம். ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றை புதிய கள நிர்வாக நடைமுறைகளோடு அமுலுக்கு கொண்டு வருதல் சிறப்பு.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், நெடுக்ஸ் ஆகியோரின் ஆலோசனைகளை, புதிய நிர்வகம் பரிசீலிக்க வேண்டும்.

சின்ன வேண்டுகோள். முகக் குறிகளை(சிமைலி) மட்டும் நீக்கிவிடாதீர்கள். :o

சில கருத்துக்களுக்கு, பதில் சொல்ல வார்த்தைகள் வராமல் தடுமாறும் போது... முகக்குறிகள் தான், கை கொடுக்கின்றன. :):D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் எழுதியதை எனக்கு இதை வடிவாக வாசிக்க நேர‌மில்லை ஆனால் புதிய உறுப்பினரைப் பற்றி எழுதியிருந்தீர்கள்.புதிதாய் யாழுக்கு வருபவர்கள் ஒழுங்காய் தான் வருகிறார்கள்,எழுதுகிறார்கள் அவர்களால் ஒரு பிர‌ச்சனையும் யாழில் இல்லை ஆனால் பழைய உறுப்பினர்களால் தான் பிர‌ச்சனை அதிகம் முதலில் அவர்கள் தங்களுக்கு தான் எல்லாம் தெரியும்,தாங்கள் சொல்வதை மற்றவர் கேட்க வேண்டும் என்ட‌ குணத்தை எல்லாம் விட்டு எதற்காக யாழ் தொட‌ங்கப் பட்டதோ அதற்காக எழுதினார்கள் என்டால் ஒரு பிர‌ச்சனையும் இல்லை

Link to comment
Share on other sites

உதாரணமாக: இஞ்ச ஒருத்தருக்கு வாந்தி வருகுது.. வயிற்றால போகுது.. காய்ச்சல் அடிக்குது.. சில ஆக்களுக்கு சரியான பயம் .. நிர்வாகம் இவரை வெளியேற்ற விரும்புது.. நிர்வாகம் இவரை விரட்ட விரும்புது.. நிர்வாகத்திற்கும் இவரைப் பிடிக்கிறதில்ல.. இவர் ஒரு தலைவர்.. இவரின் தலைவரும் அப்படி இவரும் அப்படி.. தில்லிருந்தா போ.. ஏன் நிற்கிறா.. மானரோசம் இருந்தா நிற்காது.. திரும்ப வந்து எழுதாதுகள்.. மான ரோசம் இருக்கா.. எல்லாம் தெரிஞ்சவர்.. மேதாவி.. தனியன்.. தரித்திரம்.. கெட்ட சாமான்.. கோடரிக்காம்பு.. துரோகி.. கேணையன்.. நன்றி கெட்ட சாமான்.. நாய்

மானம் ரோசம் என்ற நரம்பு எனக்கும் மரத்துப்போச்சு அது வேலைசெய்யாது. :D

Link to comment
Share on other sites

தொடர்ச்சி...

 

எழுத்தில் எதையும் இலகுவில் எழுதிவிடமுடியும், பார்ப்பதற்கும் அது அழகாய் தோன்றும். ஆனால், யதார்த்தத்தில் பிரயோகம் செய்யப்படும்போதே எமக்கான எல்லைகளும், இயலாமைகளும் தெரிகின்றன. ஆனாலும் எழுத்தில் வரைவாக உள்ள விடயங்கள் நாம் பயணிக்கின்ற இலக்கைநோக்கி செல்வதற்கு ஆகக்குறைந்தது ஒரு திசைகாட்டியாகவாவது அமையும்.

 

யாழ் இணையத்தை பொறுத்தவரையில் வழமையில் எழுத்தில் மட்டுமே செயற்படுவதும் சிறிதுகாலத்தில் நோக்கங்கள், திட்டங்கள் காணாமல் போவதும் மீண்டும் பெரியதோர் பிரச்சனைவந்ததும் மீண்டும் எழுத்தில் எல்லோரும் உறுதி எடுத்துக்கொள்வதும் பின்னர் படிப்படியாக ஆர்வம்குன்றி உறுதியெடுத்தவர்கள் காணாமல் போவதுமாக ஓர் சக்கர ஒழுங்கில் திட்டங்களும், உண்மையான செயற்பாடுகளும் ஒன்றுக்கு ஒன்று முரணான பாதையில் பயணித்து செல்கின்றன. பலருக்கு நேரப்பிரச்சனைகள், குடும்ப பொறுப்புக்கள், இதர தடைகள் (உ+ம்: சுய பொருளாதார, கல்வி விருத்திக்கான தேடல்கள்) திட்டங்களை செயற்படுத்துவதில் தடையாக உள்ளன.  ஆயினும், 100% உள்ள எழுத்தியல் வரைபுகளில் குறைந்தபட்சம் 10% குறிப்பிட்ட கால இடைவெளியினுள் செயற்படுத்தப்பட்டாலே பல பயனுள்ளமாற்றங்களை காணலாம்.

 

ரதி மேலே சொல்லும் கருத்திற்கான எனது பதில்: யாழ் கருத்துக்களத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் பல தேவைகளிற்காக மூப்புரிமை/seniority அவசியமாகின்றது. அதிலும் குறிப்பாக ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்த யாழ் உறவுகளின் உறவுநிலைகளிற்கு பங்கம் ஏற்படாதவகையில் உறவுப்பாலம் விருத்தி செய்யப்படுவதற்கு புதியவர்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு கட்டுப்பாடு தேவை என கருதுகின்றேன். யாழ் களத்தில் அவர்களிற்கான மட்டுப்படுத்தல்கள் எதுவரை அமையவேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்கவேண்டும். தேவைப்படுமானால் தற்போதுள்ள ‘புதிய உறுப்பினர்’ நிலைக்கும் ‘கருத்துக்கள உறவுகள்’ இடைக்கும் இடையிலான இன்னோர் நிலையை (உ+ம்: ‘புதிய கருத்தாளர்’) யாழ் நிர்வாகம் உருவாக்கலாம்.

 

கருத்தாளர்களிற்கு சுய அடையாளம்/இனங்காணல்கள் தேவையில்லை. ஆனால் கருத்துக்களம் ஓர் இயந்திரம் அல்ல. யதார்த்த மனிதர்கள் சங்கமிக்கும் இடம். எனவே, யதார்த்த உலகுடன் யாழ் இணையம் இணைந்திருப்பதற்கு இந்த உறவுகளின் சந்திப்புக்கள் இன்றியமையாதது. யதார்த்த உலகை எதிர்கொள்ளமுடியாத நிலையில் கருத்தாளர் இருப்பாரானால் இங்கு அவர்மீதான நம்பிக்கை பற்றி கேள்வி/சந்தேகம் எழுகின்றது. எவ்வளவுதூரம் அவரை நம்பி யாழில் தகவல்களை பரிமாறிக்கொள்ளமுடியும் என்பதுபற்றி குழப்பம் ஏற்படுகின்றது. தற்போது இணைய உலகில் உள்ள பெரும்பாலான கருத்துக்களங்களில் (Almost all)  மூப்புரிமைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. யாழில் மூப்புரிமைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டாலும் சிறிதளவாவது அடிப்படை அமைப்பு மட்டத்திலாவது முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என கருதுகின்றேன்.  

 

தமிழ்சிறி, முன்பும் நிர்வாகம் முகக்குறி பயன்பாட்டில் சில மாற்றங்களை செய்தபோது முகக்குறி பற்றியதான‌ இவ்வாறான அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. முகக்குறி அறிவுக்கு பதிலாக உணர்வை இலகுவில் தூண்டிவிடுவதாக எனக்கு தோன்றுகின்றது. கருத்துக்களத்தில் முகக்குறிபற்றிய‌ உளவியலை பார்த்தால் நன்மைகளைவிட தீங்குகளையே அதிகளவில் அது ஏற்படுத்தும் என நினைக்கின்றேன். திண்ணைப்பகுதியில் வேண்டுமானால் முகக்குறி பயன்பாட்டை அனுமதிக்கலாம். முகக்குறிகள் இணையவுலகில் அரட்டை, குறுஞ்செய்திகளிலேயே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. தரமான, கனமான கருத்தாடல் செய்யும் தளங்களில் முகக்குறிகளை அனுமதிப்பது இல்லை. உயர்ந்த தரத்தில் கருத்தாடல் செல்வதற்கு முகக்குறிகளின் நீக்கம் உதவும் என நினைக்கின்றேன். நேரடியாக இணைக்கமுடியாவிட்டாலும் படமாக முகக்குறிகளை இணைக்கக்கூடியவசதி தொடர்ந்தும் காணப்படும்தானே. எனவே நீங்கள் தொடர்ந்தும் படமாக இணைக்கலாம், ஆனால் பதில்கருத்து பகுதியிலிருந்து முகக்குறியை நீக்குவது அதன்பாவனை கருத்துக்களத்தில் குறைக்கப்படுவதற்கு உதவும்.

 

நெடுக்காலபோவான் நீங்கள் சொன்னமாதிரி அமைப்புமட்டத்திலேயே பல மட்டறுத்தல்களை செய்யமுடியும். தற்போது பாவனையில் உள்ள மென்பொருளினை பாவித்து தன்னிச்சையாகவே மட்டறுத்தல் செய்யப்படக்கூடிய பல்வேறு வழிவகைகளை நிர்வாகம் கண்டறிந்து அவற்றின் அதியுச்ச பயன்பாட்டை பெறுவதற்கு முயற்சிக்கலாம். இதன்மூலம் நிர்வாகத்தினர் அதிகளவு நேரத்தை சேமிக்கமுடியும். மேலும், நீங்கள் சொல்லும்படியே நேர்த்தியான, தரமான சிறந்த கருத்துக்களம் என்பது கருத்தாளர்களின் ஒத்துழைப்பு மூலமே உருவாக்கப்படமுடியும். கருத்தாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெறும் விதிமுறைகளும், தண்டனைகளும் சிறந்ததொரு தரமான கருத்துக்களத்தை கட்டியெழுப்புவதற்கு உதவமாட்டாது. அப்படி கட்டியெழுப்பினாலும் அதன்மூலம் அதிகளவு வாசகர்களை கவரமுடியாமலே செல்லும்.

 

சட்டக்குழுவின் செயற்பாட்டின் பகுதியாக கீழ்வரும் ஓர் விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஊர்ப்புதினம் உட்பட படைப்புக்களங்களிலும், இதரப‌குதிகளிலும் இணைக்கப்படும் ஆக்கங்களிற்கு தவறான மூலம் காண்பிக்கப்படுகின்றது. இது ஒருவகையான மோசடியே. உதாரணமாக யாரோ ஒருவர் படைக்கின்ற ஆக்கம் அல்லது செய்தி ஒன்றை வலையில் சுட்டெடுத்து இன்னோர் தளத்தில் இணைத்து பின்னர் குறிப்பிட்ட அத்தளத்தின் இணைப்பை இங்கு மூலமாக காட்டுதல். இப்படியான செய்கைகளினால் உண்மையில் குறிப்பிட்ட படைப்பை/ஆக்கத்தை உருவாக்கியவருக்கு கிடைக்கவேண்டிய பாராட்டும், பயன்களும் வெட்டி ஒட்டும் யாரோ ஒருவருக்கு/அல்லது தளத்திற்கு செல்கின்றது. யாழ் இணையம் இப்படியான மோசடிகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதைசட்டக்குழு கண்டுபிடித்து யார் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறான பதிவுகளை யாழ் நிர்வாகம் உடனடியாக நீக்கம் செய்யவேண்டும். இப்படியான மோசடிகளை கண்டுபிடிப்பதற்கு கூகிழ் போன்ற தேடல் இயந்திரங்கள் உதவுகின்றன. இந்த மோசடிகளை கண்டறிவதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். ஏதாவது படைப்பு அல்லது செய்தியின் தோற்றுவாயிலும், மூலத்திலும் சந்தேகம் தோன்றினால் கூகிள் தேடல்செய்து பிரதானமூலம் எது என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், தவறு காணப்பட்டால் நிர்வாகத்திற்கு அறிவியுங்கள். அடுத்தவன் உழைப்பை சுரண்டுவதற்கு யாழ் இணையம் துணைபோக நாம் அனுமதிக்கக்கூடாது. ஆக்கங்கள்/செய்திகள் paraphrase/பொழிப்புரை செய்யப்பட்டு இணைக்கப்பட்டாலும் பிரதான மூலம் குறிப்பிடப்படப்படுகின்றதா என்பது கவனிக்கப்ப‌டவேண்டும். யாழ் படைப்பாளிகளின் தரமும், யாழ் இணையத்தின் தரமும் உயர்வதற்கு இவ்வாறான செயற்பாடுகள் அவசியம் ஆகும்.

 

இறுதியாக யாழ் இணையத்தில் பல்வேறு உதவிகளை சினேகபூர்வமாக/தொண்டுரீதியாக செய்வதற்கு உதவும் உறவுகளை அவர்களின் விருப்பம்/ஆர்வத்தினதும், /கல்விப்பின்னணி/தொழிற்பின்னணி/அனுபவத்தினதும் வகையில் இனம்கண்டு வெவ்வேறு உதவிக்குழுக்களில் இணைத்து செயற்படுவதற்கு யாழ்நாற்சந்தியில் ஓர் தகவல்பெட்டகம் ஒன்றை திறக்கலாம். யாராவது ஒருவர் அந்த பெட்டகத்தை கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் புதுப்பித்துக்கொண்டு இருக்கலாம். இது யாழ் நிர்வாகத்தின் வேலைகளை இலகுபடுத்தும். அத்துடன் எழுத்துவரைவுகள் வெறும் எழுத்தில் அல்லாது செயற்பாட்டை நோக்கி செல்வதற்கும் உதவும்.

 

நன்றி!

Link to comment
Share on other sites

வலைஞன் மீண்டும் வருகை தந்துள்ளதால் ஓர் கேள்வி:

கீழ்வரும் விடயம் சம்மந்தமாக ஆளாளுக்கு வெவ்வேறு அர்த்தத்தை உருட்டுகின்றார்கள். 'பண்பான', 'கண்ணியமான' ஆகிய பதங்கள் மூலம் குறிப்பிடப்படும் அம்சங்கள் எவை?

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

சொற்பதம் விளக்கம் இல்லையென்றால் விதிமுறைகளை மாற்றம் செய்யும்போது விரிவாக, வசனமாக உதாரணத்துடன் விதிமுறைகளில் அதை விபரித்து இடுங்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites

கலைஞன்,

இந்தக்கருத்தைப்பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? இது ஏதாவது வரைமுறைகளை மீறியுள்ளதா??

பாவம் அக்காவை நினைச்சு தம்பி ----
Link to comment
Share on other sites

நல்ல ஆலோசனைகள் பல சொல்லியுள்ளீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

அகூதா, அந்தக்கருத்துபபற்றி முதலில் உங்கள் நிலைப்பாட்டைக்கூறுங்கள், அதன்பின்னர் எந்தன் நிலைப்பாட்டைக்கூறுகின்றேன்.

நிழலி, இந்தப்பகுதியில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளிற்கு உதவுமாயின் மகிழ்ச்சி.

நன்றி!

Link to comment
Share on other sites

அகூதா, அந்தக்கருத்துபபற்றி முதலில் உங்கள் நிலைப்பாட்டைக்கூறுங்கள், அதன்பின்னர் எந்தன் நிலைப்பாட்டைக்கூறுகின்றேன்.

நிச்சயம் விதிமுறைகளை மீறி உள்ளது, அத்துடன் மிகவும் அநாகரிகமானது.

ஆனால், புதிய மேம்பாட்டு விதிமுறைகளை கதைக்கும் நாமும் நிர்வாகமும் அதைக்கண்டும் காணாத மாதிரி இருப்பது நம்முள் இரட்டை அணுகுமுறை உள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை.. சிவப்பு புள்ளிகள்.

பச்சை சிவப்பு புள்ளிகளை இடுபவர்களின் விபரம் வெளியிடப்படுவது சாதகங்களை விட பல பாதகங்களையே உருவாக்கும்..!

எனவே இதன் நன்மை தீமைகளை பட்டியலிட்டு.. நிர்வாகம்.. ஒரு காத்திரமான முடிவுக்கு இது விடயத்திலும் வருதல் நன்று.

Link to comment
Share on other sites

பச்சை.. சிவப்பு புள்ளிகள்.

பச்சை சிவப்பு புள்ளிகளை இடுபவர்களின் விபரம் வெளியிடப்படுவது சாதகங்களை விட பல பாதகங்களையே உருவாக்கும்..!

எனவே இதன் நன்மை தீமைகளை பட்டியலிட்டு.. நிர்வாகம்.. ஒரு காத்திரமான முடிவுக்கு இது விடயத்திலும் வருதல் நன்று.

Objection Your Honour!! :D

புள்ளிகுத்தப் பயந்தவர்கள் புள்ளிகளைக் குத்தவேண்டாம் என்பதே இதன் தார்ப்பரியம்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Objection overruled..! :):lol:

எந்தக் கட்சிக்கு ஏன் வாக்குப் போட்டீங்கள் என்று ஒவ்வொரு வாக்காளரையும் இனங்கண்டு.. கருத்துக் கேட்டுக் கொண்டிருந்தால்.. ஆட்சி அமையாது.. களோபரம் தான் அமையும்..! அதேபோல் தான்.. இங்கு வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க.. வாய்ப்பில்லை. அது மட்டுமன்றி வாக்காளர்கள்.. நேரடியாக.. மறைமுகமாக.. கருத்துக்களால் சீண்டப்பட.. தாக்கப்பட.. குதர்க்கிக்கப்பட வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதோடு.. யார் யார் கூட்டணி அமைச்சு செயற்படுகினம் என்பதையும் இனங்காட்டும்..! அதில் பல பாதகங்கள் இருப்பதோடு.. கருத்துக்களை வாசிக்காமலே.. கருத்து எழுதுபவர் உள்ள கூட்டணி சார்ந்து பச்சைகளும் சிவப்புகளும் விழவே அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி இப்போ.. ஒன்றிரண்டாக உள்ள கூட்டணிகள்.. நாளை 10 15 ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது.. எப்படி.. களத்துக்கு.. கருத்துக்கு.. கருத்தாளருக்கு reputation ஆகும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

Objection overruled..! :):lol:

எந்தக் கட்சிக்கு ஏன் வாக்குப் போட்டீங்கள் என்று ஒவ்வொரு வாக்காளரையும் இனங்கண்டு.. கருத்துக் கேட்டுக் கொண்டிருந்தால்.. ஆட்சி அமையாது.. களோபரம் தான் அமையும்..! அதேபோல் தான்.. இங்கு வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க.. வாய்ப்பில்லை. அது மட்டுமன்றி வாக்காளர்கள்.. நேரடியாக.. மறைமுகமாக.. கருத்துக்களால் சீண்டப்பட.. தாக்கப்பட.. குதர்க்கிக்கப்பட வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதோடு.. யார் யார் கூட்டணி அமைச்சு செயற்படுகினம் என்பதையும் இனங்காட்டும்..! அதில் பல பாதங்கள் இருப்பதோடு.. கருத்துக்களை வாசிக்காமலே.. கருத்து எழுதுபவர் உள்ள கூட்டணி சார்ந்து பச்சைகளும் சிவப்புகளும் விழவே அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி இப்போ.. ஒன்றிரண்டாக உள்ள கூட்டணிகள்.. நாளை 10 15 ஆகவும் வாய்ப்புள்ளது. இது.. எப்படி.. களத்துக்கு.. கருத்துக்கு.. கருத்தாளருக்கு reputation ஆகும்..! :icon_idea:

மறுபடியும் objection your honour..! :lol: நீங்கள் சொல்லவேண்டியதை (overruled) வாதியின் சட்டத்தரணி பாவித்துவிட்டார்..! :lol:

நேர்தல் பற்றிய ஒப்பீடு சரியாகத்தான் இருக்கு..! ஆனால் பச்சை குத்துவது தேர்தலா? அதற்கு என்று இக்களத்தில் தனி அலகு உள்ளதல்லவா? அதில்கூட யார் யார் வாக்களித்தார்கள் என்பது பார்வைக்குத்தானே உள்ளது? :rolleyes:

அதுமட்டுமல்லாமல் தற்போது புகழில் இருக்கும் முகநூலில்கூட யார் விரும்புகிறார்கள் என்பதைப் பார்க்கக்கூடியமாதிரித்தானே இருக்கு? :rolleyes: யாழ்மட்டும் ஏன் மூடி மறைக்க வேணும்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Once again Objection overruled..! :):lol:

பச்சை குத்துவது.. கருத்து ஒன்றில் சொல்லும் விடயம்.. தனக்கும் பிறர்கும் பயன்படும்..(அது மன மகிழ்ச்சிக்காக இருக்கலாம்.. திட்டமிடலுக்காக இருக்கலாம்.. இப்படி ஏதாவது ஓர் வகையில்) ஏதோ ஒருவகையில் அது சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது.. என்று காணும் நிலையில் அதற்கு உள்ள reputation ஐ சொல்லவே என்று நினைக்கிறேன். சிவப்பு குத்திறது குறித்த.. கருத்து அதற்கு எதிர்மாறாக உள்ளதாக இனங்காட்ட என்று நினைக்கிறேன்.

ஆனால் இங்கு..பலரால் அவை அப்படி பாவிக்கப்படுவதில்லை. இங்கு எவர் கருத்தை முன்வைக்கிறார் என்று பார்த்துவிட்டு.. பச்சை சிவப்பு குத்துகிறார்கள். கருத்தைப் பற்றிய கவலை இல்லை. அது சம்பந்தப்பட்டவர்களை.. உற்சாகப்படுத்துவது மட்டுமன்றி.. சில சந்தர்ப்பங்களில்.. தவறாக வழிநடத்தி மேலும் மேலும் தவறுகள் பெருகச் செய்ய வாய்ப்பளிக்கிறது.

முகநூலில் உள்ளது இங்கிருக்க வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதல்ல. ராய்லெட்டில் உள்ள தண்ணீரை குடிக்கப் பயன்படுத்த முடியாது. அதுபோலவே தான் முகநூலும் அங்குள்ள நடைமுறைகளும். பலரும்.. வந்து.. கழித்துவிட்டுப் போகும்.. ஒரு பொது.. ராய்லெட் தான் அது. அதை இங்கு உதாரணமாக கொள்வதை இந்த கோட் ஏற்றுக் கொள்ளாது. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் objection your honour..! :lol: நீங்கள் சொல்லவேண்டியதை (overruled) வாதியின் சட்டத்தரணி பாவித்துவிட்டார்..! :lol:

நேர்தல் பற்றிய ஒப்பீடு சரியாகத்தான் இருக்கு..! ஆனால் பச்சை குத்துவது தேர்தலா? அதற்கு என்று இக்களத்தில் தனி அலகு உள்ளதல்லவா? அதில்கூட யார் யார் வாக்களித்தார்கள் என்பது பார்வைக்குத்தானே உள்ளது? :rolleyes:

அதுமட்டுமல்லாமல் தற்போது புகழில் இருக்கும் முகநூலில்கூட யார் விரும்புகிறார்கள் என்பதைப் பார்க்கக்கூடியமாதிரித்தானே இருக்கு? :rolleyes: யாழ்மட்டும் ஏன் மூடி மறைக்க வேணும்? :lol:

இசை அண்ணா..! நீங்களும் என்னைமாதிரி நல்லா விடுப்புப் பார்ப்பியல் போல.. :lol:

Link to comment
Share on other sites

இசை அண்ணா..! நீங்களும் என்னைமாதிரி நல்லா விடுப்புப் பார்ப்பியல் போல.. :lol:

ஓம்.. நல்லா விடுப்பு பார்ப்பன்..! :D ஆனால் எல்லாத்துக்கும் சைபர் எண்டு காட்டுறதால ஒவ்வொண்டா கிளிக் பண்ணிப் பார்க்கிறது கஷ்டமா இருக்கு..! :lol: எத்தினை சிவப்பு எத்தினை பச்சை எண்டு தெரிஞ்சால் கிளிக் பண்ணத் தேவையில்லைதானே?? :D

Link to comment
Share on other sites

ஓம்.. நல்லா விடுப்பு பார்ப்பன்..! :D ஆனால் எல்லாத்துக்கும் சைபர் எண்டு காட்டுறதால ஒவ்வொண்டா கிளிக் பண்ணிப் பார்க்கிறது கஷ்டமா இருக்கு..! :lol: எத்தினை சிவப்பு எத்தினை பச்சை எண்டு தெரிஞ்சால் கிளிக் பண்ணத் தேவையில்லைதானே?? :D

நான் யாருக்கும் புள்ளி குத்துவது வழமையல்ல. இப்படித்தான், சைபரைப் பார்க்கப் போய் புள்ளியை குத்தியதுண்டு! :D

Link to comment
Share on other sites

நிச்சயம் விதிமுறைகளை மீறி உள்ளது, அத்துடன் மிகவும் அநாகரிகமானது.

ஆனால், புதிய மேம்பாட்டு விதிமுறைகளை கதைக்கும் நாமும் நிர்வாகமும் அதைக்கண்டும் காணாத மாதிரி இருப்பது நம்முள் இரட்டை அணுகுமுறை உள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது.

வழமையில் விவாதங்களின்போது பதில் கருத்துக்கள் தலைப்பிற்கு பொருத்தமில்லாமலும் அல்லது ஒருவருடன் ஒருவர் எல்லைமீறி தகராற்றில் ஈடுபடும்போதும் நிர்வாகம் அவற்றுடன் சம்மந்தப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அகற்றுவார்கள். இங்கு அவ்வாறு நடைபெறவில்லை என்றால் நிர்வாகத்திடமே விளக்கம் கேட்கவேண்டும்.

ஒருவருக்கு ஒற்றை அர்த்தம் உள்ள கருத்து இன்னொருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளவையாகத்தோன்றலாம். இவ்வாறே ஒற்றை அர்த்தத்துடன் எழுதப்படும் கருத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களுடன் புரிந்துகொள்ளப்படலாம். இது அவரவர் பார்வை, தமிழறிவு, கலாச்சாரம், வாழ்க்கைமுறைகள் எனப்பல்வேறு விடயங்களினால் மாறுபடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையில் விவாதங்களின்போது பதில் கருத்துக்கள் தலைப்பிற்கு பொருத்தமில்லாமலும் அல்லது ஒருவருடன் ஒருவர் எல்லைமீறி தகராற்றில் ஈடுபடும்போதும் நிர்வாகம் அவற்றுடன் சம்மந்தப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அகற்றுவார்கள். இங்கு அவ்வாறு நடைபெறவில்லை என்றால் நிர்வாகத்திடமே விளக்கம் கேட்கவேண்டும்.

ஒருவருக்கு ஒற்றை அர்த்தம் உள்ள கருத்து இன்னொருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளவையாகத்தோன்றலாம். இவ்வாறே ஒற்றை அர்த்தத்துடன் எழுதப்படும் கருத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களுடன் புரிந்துகொள்ளப்படலாம். இது அவரவர் பார்வை, தமிழறிவு, கலாச்சாரம், வாழ்க்கைமுறைகள் எனப்பல்வேறு விடயங்களினால் மாறுபடலாம்.

கலைஞன், அகூதா குறிப்பிட்ட கருத்து வெறுமனே "தலைப்புக்குப் பொருத்தமில்லாத" ஒன்று மட்டுமல்ல. ஆபாசமானது. இதில் ஒருவருக்கு கலாச்சார, தமிழறிவு இன்ன பிற பற்றிய பார்வைகள் சார்ந்து சரி பிழை தெரியலாம் என்று கூற வருகிறீர்களா? நேரடியாகப் பிழையான ஒன்றைப் ப்பிழை என்று சுட்டிக் காட்டாமல் ஏன் சடைகிறீர்கள் என்று புரியவில்லை! விளக்குவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

வழமையில் விவாதங்களின்போது பதில் கருத்துக்கள் தலைப்பிற்கு பொருத்தமில்லாமலும் அல்லது ஒருவருடன் ஒருவர் எல்லைமீறி தகராற்றில் ஈடுபடும்போதும் நிர்வாகம் அவற்றுடன் சம்மந்தப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அகற்றுவார்கள். இங்கு அவ்வாறு நடைபெறவில்லை என்றால் நிர்வாகத்திடமே விளக்கம் கேட்கவேண்டும்.

ஒருவருக்கு ஒற்றை அர்த்தம் உள்ள கருத்து இன்னொருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளவையாகத்தோன்றலாம். இவ்வாறே ஒற்றை அர்த்தத்துடன் எழுதப்படும் கருத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களுடன் புரிந்துகொள்ளப்படலாம். இது அவரவர் பார்வை, தமிழறிவு, கலாச்சாரம், வாழ்க்கைமுறைகள் எனப்பல்வேறு விடயங்களினால்  மாறுபடலாம்.

கலைஞன் இப்படியான ஒரு பதிலை நான் உங்களிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை...மேலே அகூதா இணைத்த கருத்தில் அப்பட்டமான தனி மனித தாக்குதலும்,கேவலமான வசனமும் இடம் பெற்றுள்ளதை இப்ப தமிழ் எழுதிப் பழகும் குழந்தை கூடப் புரிந்து கொள்ளும்.இந்த மேற் குறிப்பிட்ட பதிலை ஏன் நீக்கவில்லை என நிர்வாகத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறீர்கள்?...இதற்கு நிர்வாகம் பொறுப்பு என்டால் எல்லாவற்றுக்கும் நிர்வாகம் பொறுப்பு என்று போட்டு பேசாமல்,நிர்வாக விசயங்களில் தலையிடாமல் இருந்திருக்கலாம் தானே! எதற்காக ஒரு சிலரின் தடையை நீக்க சொல்லி கேட்டனீங்கள்?...எது சரி/பிழை அத்தோடு என்ன செய்ய வேண்டும் என்பதும் நிர்வாகத்திற்கு தெரியும் தானே. கருத்துக்களம் எப்படி சிறப்பாக நடக்க வேண்டும் எனத் திரி தொடங்கிப் போட்டு அதில் வந்து அகூதா கேள்வி கேட்டதும் ஏதேதோ சொல்லி மழுப்புகிறீர்கள் இதையே உங்களுக்கு பிடிக்காத ஒருவர்,இன்னுமொருவருக்கு எழுதியிருந்தால்ல் உடனே குய்யொ,மொய்யொ தனி மனித தாக்குதல் நடக்கிறது எனத் தனி திரி தொடங்கி எழுதியிருப்பீர்கள்...முதலில் பக்க சார்பாக நிற்கிறதை நீங்கள் விடுங்கள் பிறகு மற்றவரை குறை சொல்லலாம்...மேலே அகூதா இணைத்த தனி மனித தாக்குதலை மேற் கொண்டவர் பல் வேறு இடங்களில் தனி மனித தாக்குதலை மேற் கொண்டுள்ளார் அது எல்லாம் ஏன் உங்கள் கண்ணுக்குப் படவில்லையா?...அதை நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்டால் பிறகு ஏன் நிர்வாகத்தின் மற்ற விசயங்களில் ஏன் தலையிடுகிறீர்கள் அவர்களை சுதந்திரமாக இயங்க விடுங்களேன்?...இப்படியான கேவலம் கெட்ட,தனி மனித தாக்குதலை தொடர்ச்சியாக மேற் கொள்பவர்களை வைத்து யாழுக்கு புதிதாக வருபவர்களுக்கு பாடம் எடுக்க வெளிக்கிட்டால் யாழ் விளங்கும்.நான் மதிக்கும்,சந்திக்க விரும்பும் கருத்தாளர்களில் முக்கியமானவர் நீங்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு யாழுக்கு வந்த உங்களது கருத்துக்களில் நிறைய வித்தியாசம் இருப்பதாக நான் உணர்கிறேன்...இதுவும் உங்கள் மீதான தனி மனித தாக்குதல் தான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்...நன்றி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குத்தான் உபதேசம்

உனக்கில்லையடி பாப்பா.... :( :( :(

Link to comment
Share on other sites

அகூதாவிற்கு வழங்கப்பட்ட பதிற்கருத்தில் திருப்தி இல்லாதவர்கள் உங்கள் வினாவை அகூதா மேற்கோட்காட்டிய‌கருத்து எழுதப்பட்ட பகுதியிலேயே கேளுங்கள். உங்களிற்கு சடையாமல் (?) மழுப்பாமல் (?) விளக்கம் தருகின்றேன்.

நன்றி!

Link to comment
Share on other sites

அகூதாவிற்கு வழங்கப்பட்ட பதிற்கருத்தில் திருப்தி இல்லாதவர்கள் உங்கள் வினாவை அகூதா மேற்கோட்காட்டிய‌கருத்து எழுதப்பட்ட பகுதியிலேயே கேளுங்கள். உங்களிற்கு சடையாமல் (?) மழுப்பாமல் (?) விளக்கம் தருகின்றேன்.

நன்றி!

உங்களின் நம்பகத்தன்மை கேள்விக்கிடமாகின்றது.

ஒரு பக்கம் எவ்வாறு புதிய முறைகள் மூலம் இந்தக்களத்தை சிறப்படைய வைக்கலாம் என ஆலோசனைகளை முன்வைக்கின்றீர்கள் மறுபக்கம் இருக்கும் விதிகளை மீறுவது பற்றி கேட்டால்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.