• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
sOliyAn

பாரதியும் சோழியானும்!!

Recommended Posts

பாhரதி அந்த ஓட்டம் ஓடும்போதே நினைத்தேன் எங்கேயோ சோழியன் அண்ணாவிடம் அகப்பட்டுவிட்டார் என்று

ம் அருமையான கற்பனை அண்ணா

வாழ்த்துக்கள்

ஆகா கவிஞரே! இங்கேதான் இருக்கிறீங்களா? அத்திபூத்தாற்போல் உங்கள் கருத்துகளை பார்க்கக் கிடைத்தாலும், புதிய கவிதைகளை எப்போது பார்ப்பதாம்?! :D

மற்றும், சோழியானுடன் லொள்ளுவிடுற உறவுகள் யாபேருக்கும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

நல்லா இருக்கிறது உங்கள் புது பாரதிப் பாடல் சோழியன்.

நன்றி

இப்படி புது புதுப் பாடல்கள் கண்டு பிடித்து எழுதுங்கள்.

:P :D

Share this post


Link to post
Share on other sites

நித்தியாக்கா பரணி அண்ணா எப்ப உங்கட கவிதைகள் வரும் எதிர் பார்க்கிறம் ஏமாத்த மாட்டீங்க தானே

Share this post


Link to post
Share on other sites

நன்றி

விரைவில்

Share this post


Link to post
Share on other sites

பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?!

(முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.)

சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை..

பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா?

சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா?

பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்..

சோழியான்: சரி.. பாடும்..

பாரதியார்:

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

(தீராத)

தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்னையான் என்றால் - அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(தீராத)

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை

அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்

குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்

குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்

(தீராத)

பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை

பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்

வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி

வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்

(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது

பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்

கள்ளால் மயங்குவது போலே - அதனைக்

கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்

(தீராத)

பாரதியார்: என்ன.. எங்கே.. எழுதிய உன் பாட்டை பாடு பார்ப்போம்..

சோழியான்:

ஹா.. ஹா.. கேளும் கேளும்..

அம்மாநான் சற்பண்ண போறேன் அங்கு

தினந்தினம் புதுப்புது உறவுகள் காண..

(அம்மாநான்...)

மெல்லவே ஓன்லைன் வருவார் - அவர்

சொல்லியும் சொல்லாமல் ஓவ்லைன் செல்வார்

என்னப்பா என்னபேர் என்றால் - அதனை

மறைத்துச் சிதைத்துப் புதுப்பெயர் சொல்வார்.

(அம்மாநான்...)

அசைகின்ற படம் போட்டுக் கொண்டே - அவர்கள்

கதையோடும் உணர்வோடும் மனதிலே நின்று

நாளைக்கு வாவென்று சொல்வார் - சிலர்

வாராமல் விட்டாலும் வேறொருவர் வருவார்.

(அம்மாநான்...)

சிலர்வந்து கதையாலே அறுப்பார் - தலை

வெடித்துச் சினக்குமுன் 'புளொக்'பண்ணி விடுவேன்

ஆங்கில எழுத்துக்கள் தனிலே - சிலர்

அழகாகத் தமிழை நுழைத்தே கதைப்பார்.

(அம்மாநான்...)

அண்ணான்று சிலபேரும் அழைப்பார் - அறிவு

பொங்கித் ததும்பும் பலவிசயம் தருவார்

'சற்'றால் மயங்குவது போலே - அதனைக்

கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்பேன்.

(அம்மாநான்...)

பாரதியார்: பாவி.. மகாபாவி.. என் புனிதமான பாடலை இப்படி கெடுத்திட்டாயே.. இனி உன் கண் முன்னாலேயே நிற்கமாட்டேன்..

(பாரதி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார்.)

யாழ் உறவுகளே! நீங்க எப்படி?! :P :)

(நன்றி: பாரதியார் பாடல் உதவிய சிநேகிதி அவர்களுக்கு.)

அடடா.. பாவமப்பா பாரதியார் சோழியண்ணாவின் கனவிலை வந்து இப்படி மாட்டுப் படணும் என்று விதி, ஒராளை எத்தினை விதிதானப்பா தாக்கும்.. இறந்தாலாவது நிம்மதியா இருக்கலாம் என்று எல்லோ நான் நினைத்தன்.. சோழியண்ணாட்டை பாரதி மாட்டினதை பார்த்தால் அது இன்னும் கஸ்டம் போல... ம்ம் பாடல் சூப்பர் அண்ணா... ஆனால் எனக்கொன்று உதைக்குது உந்த கதையால அறுக்கிறாக்களின்ரை பட்டியலை ஒருக்கா தரமுடியுமோ..

:(

Share this post


Link to post
Share on other sites

ஆ........உங்கள மட்டும்தான் மகாபாவி என்று சொன்னவர் பாரதியார் சரியோ சோழியண்ணா?? வீணா எனக்கும் கொஞ்சம் பாவத்தில பங்கு தருவம் என்று கனவு காணவேண்டாம்:-)

உங்களுக்கு அவர் பாவத்தை தரேல்லை அதிலை ஒரு வரி உங்களை பற்றி தான் சொல்லுறார் :wink: :) (எனக்கு அடிக்க வாறேல்லை டண்னின் புலநாய் தகவலை ஒட்டுக் கேட்டதில் கிடைத்தது ) :wink: :(

Share this post


Link to post
Share on other sites

«Ð ¡÷ §º¡Æ¢Âý????????????? þÅ÷¾¡ý ¿Å£É ¸¡ÄòÐ À¡Ã¾¢Â¡§Ã¡

Share this post


Link to post
Share on other sites

உல்டா பாடல் நன்றாக இருக்கு சோழியான் அண்ணா, வாழ்த்துக்கள்... :)

Share this post


Link to post
Share on other sites

நகைச்சுவை உணர்வும் கற்பனை வளமும் எழுத்தாற்றலும் கொண்ட ஒரு அன்பான கள உறவு சோழியான் அண்ணாவின்; மற்றுமொரு அழகிய படைப்பு.

 

சோழியான் அண்ணா களத்திலிருந்து ஒதுங்கியிருப்பது கவலை தருகிறது.....

 

 

 

Share this post


Link to post
Share on other sites

புதிய பாரதியின் வருகை யாழ்களத்திற்கு பெருமை. பாவம் பாரதியார் இவங்கள் இப்படியெல்லாம் போட்டுத்தள்ளுவாங்கள் எண்டுதான் யானை முந்திவிட்டது. நல்ல கற்பனை பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

நான் இணைந்த ஆரம்ப காலம்.பழைய உறவுகளின் பெயரைப்பாக்கும் போது ஏக்கம் தான் மிஞ்சுது.நன்றி மீழ் இணைப்பிற்க்கு. :rolleyes:  :)

Share this post


Link to post
Share on other sites

நகைச்சுவை உணர்வும் கற்பனை வளமும் எழுத்தாற்றலும் கொண்ட ஒரு அன்பான கள உறவு சோழியான் அண்ணாவின்; மற்றுமொரு அழகிய படைப்பு.

 

சோழியான் அண்ணா களத்திலிருந்து ஒதுங்கியிருப்பது கவலை தருகிறது.....

 

நன்றி உறவுகளே! என்னை நினைவில் நிறுத்தி உற்சாகம் தந்திருக்கிறீர்கள்.. நான்தான் எனக்கேற்பட்ட மனக்குழப்பங்களாலும் உடற்குழப்பங்களாலும் கவனிக்கத் தவறிவிட்டேன்.. மீண்டும் ஒரு சுற்று தொடங்கலாம்போல உற்சாகம் ஏற்படுகிறது.. தொடங்கீட்டாப் போச்சு!! :)

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ம்  தொடங்குங்கள் உங்கள் கச்சேரியை ,(மல்லை வந்தால் னாம் பார்த்துக் கொள்கின்றேன்  :D )

Share this post


Link to post
Share on other sites

ம்  தொடங்குங்கள் உங்கள் கச்சேரியை ,(மல்லை வந்தால் னாம் பார்த்துக் கொள்கின்றேன்  :D )

 

ஒருவர் காரை 'பார்க்' செய்யும்போது 'பின் காரில முட்டுதான்னு இறங்கிப் பார்' என்று நண்பரிடம் கூற.. அவரும் பின் காரில முட்டின பிறகு 'முட்டீட்டுது' என்றாராம். அப்படி அவர் வந்த பிறகு 'வந்தீட்டார்' என்று சொல்லமாட்டீங்கள்தானே?! :o

 

Edited by sOliyAn
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சோழியானிடம் ஈழத்து பாடல்களை கேட்டு வாங்கியது ஞாபகத்தில் உள்ளது. மீள்வரவுக்கு நன்றி.தொடருங்கள். அதெப்படி ஜேர்மனிய உறவுகள் என்றாலே நகைச்சுவையாளர்களாக இருக்கிறார்கள்??

Share this post


Link to post
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி.தொடருங்கள்

 

அதெப்படி ஜேர்மனிய உறவுகள் என்றாலே நகைச்சுவையாளர்களாக இருக்கிறார்கள்??

 

அவர்கள் பிறந்து வளர்ந்த ஜெர்மனி அப்படியானது :D

Share this post


Link to post
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி.தொடருங்கள்

 

 

அவர்கள் பிறந்து வளர்ந்த ஜெர்மனி அப்படியானது :D

 

 

அப்பிடி இல்லை.. 80களில கும்பல் கும்பலா தனிய வந்தபோது இவங்களும் கும்பல் கும்பலா பிடிச்சு.. 2 வருடம் வேலை செய்யாம.. குறிப்பிட்ட இடங்களுக்கு வெளிய போகாம அகதி முகாமில இருந்து சாப்பிடு என்று விட்டாங்களா.. குடும்பம் என்றும் எதுவும் இல்லைத்தானே.. கும்பலா இருந்து பம்பலா பேசிப் பேசியே பழகிடுச்சு.. :)

இப்ப ஆசைக்கு அப்பிடி பேசலாமெண்டாலும்.. 'இவளவு நேரம் எங்கை போட்டு வாறியள்.. நேரவழிக்கு வீட்டை வராம அப்பிடியென்ன அலுவல்..?' :(

 

Edited by sOliyAn

Share this post


Link to post
Share on other sites

வணக்கம், சோழியன்!

 

உங்கள் பல பதிவுகளை வாசித்திருக்கின்றேன்! அருமையான பதிவுகள்!

 

அப்ப, எப்ப பாத்தாலும் நிக்காமல் ஓடிக்கொண்டிருந்த 'ஞாபகம்'!

 

திரும்பவும் விட்ட இடத்திலிருந்து ஓடத் தொடங்குங்கள்!  :D

 

மீள்வருகைக்கு நன்றிகள்!

Share this post


Link to post
Share on other sites

...இப்ப ஆசைக்கு அப்பிடி பேசலாமெண்டாலும்.. 'இவளவு நேரம் எங்கை போட்டு வாறியள்.. நேரவழிக்கு வீட்டை வராம அப்பிடியென்ன அலுவல்..?'

 

வீட்டுக்கு வீடு வாசற் படி! ciao.gif

 

Share this post


Link to post
Share on other sites

இப்பதிவைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். வந்த உற் சாகத்துடன் உடன வேலையைத்  தொடங்குங்கோ. சும்மா நின்று திண்ணையை மினக்கெடுத்தாமல்.

Share this post


Link to post
Share on other sites

இப்பதிவைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். வந்த உற் சாகத்துடன் உடன வேலையைத்  தொடங்குங்கோ. சும்மா நின்று திண்ணையை மினக்கெடுத்தாமல்.

 

கொஞ்சநேரத்துக்கு முதல்தான் எழும்பி வந்தனான்.. அதுக்கிடைல 'You have reached your quota of positive votes for the day' இப்பிடி வருது.. என்ன கொடுமை சரவணா இது?! :(

 

Edited by sOliyAn

Share this post


Link to post
Share on other sites

நன்றி உறவுகளே! என்னை நினைவில் நிறுத்தி உற்சாகம் தந்திருக்கிறீர்கள்.. நான்தான் எனக்கேற்பட்ட மனக்குழப்பங்களாலும் உடற்குழப்பங்களாலும் கவனிக்கத் தவறிவிட்டேன்.. மீண்டும் ஒரு சுற்று தொடங்கலாம்போல உற்சாகம் ஏற்படுகிறது.. தொடங்கீட்டாப் போச்சு!! :)

 

 

அதுக்குத்தானே உங்களை இழுத்துக் கொண்டு வந்தனாங்கள். :rolleyes::icon_idea:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சர்­வ­தே­சமே எமக்­கான நீதியை பெற்­றுத்­த­ரவேண்டும்: காணாமல் போனோரின் உற­வுகள் ஜெனி­வாவில் கோரிக்கை பொறுப்புக்கூறலிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேச சமூகம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் ஜெனிவாவில் தெரிவித்தனர். ஜெனிவா பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்ற நிலையில் ஜெனிவா வந்துள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று நடைபெற்ற உப குழுக் கூட்டம் ஒன்றில் தெரிவித்தனர். சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா சங்கத்தின் மட்டு மாவட்ட தலைவியும் வடக்கு கிழக்கு உப தலைவியுமான அமலராஜ் அமலநாயகி ஆகியோரே இம்முறை ஜெனிவா வந்துள்ளதுடன் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். அவர்கள் நேற்று மேலும் கருத்து வெ ளியிடுகையில், ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் நீதியை பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். சர்வதேசம் இனியாவது எமக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும். இலங்கை தொடர்பான பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது அவசியமாகும். காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நாங்கள் நம்பவில்லை. கடந்த அரசாங்கமும் எம்மை ஏமாற்றியது. தற்போதைய அரசாங்கம் நேரடியாகவே கூறிவிட்டது. எனவே குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசெல்லவேண்டும். காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்று கூற முடியாது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களை மீட்டுத்தரவேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புரியவேண்டும் என்றனர். https://www.virakesari.lk/article/76601
  • மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை அமைக்கும் இலங்கையின் அறிவிப்பை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார். இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கருத்து தெரிவித்துள்ள மிச்லே பச்செலெட் இலங்கையின் உள்ளுர் பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளன என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பது இந்த நடவடிக்கைகளை முன்னகர்த்தும் என தான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்,மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் என்பதற்கான உத்தரவாதம் இலங்கையின் அனைத்து சமூகத்தினரிற்கும் இல்லாதநிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/76668  
  • அங்கே  செல்வதே  இங்கு  புனிதராகத்தான்  என்கிறார்கள் ஏனிந்த பின்வாங்கல்???
  • புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!     by : Dhackshala யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மயானப் பகுதியில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். புத்தூரில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இது தொடர்பாக தெரியவருவதாவது, புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். எனினும் அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மயானத்தைச் சூழவுள்ள மக்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் எதிர் மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர். அந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மனு மீதான இறுதிக் கட்டளை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது. மல்லாகம் நீதவான் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கிய கட்டளையை இரத்துச் செய்து கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி கோரும் தரப்பு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தை கடந்த நவம்பர் மாதம் முன்வைத்தனர். இதன்போது, ‘மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எரியூட்ட முடியும். அதனை எதிர்த் தரப்பு தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்தத் தரப்புக்கு எதிராக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   http://athavannews.com/புத்தூரில்-சடலத்தை-எரிக்/
  • Alfred Schnurreக்கு 92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப்  பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு  முரணான சட்டம்தான் அமுலில் இருக்கிறது. ஆனால் அயல்நாடான சுவிற்சலாந்தில் அது சாத்தியமாகிறது.  2015இல் “கருணைக் கொலையை அனுமதியுங்கள்” என்று மக்கள் மத்தியில் எழுந்த அலையை யேர்மனிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தி அரசியல்வாதிகள்  தோற்கடித்து விட்டார்கள். “இன்னும் எவ்வளவு காலம் நான் சாவதற்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் விரைவில் அது நடக்கும். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கான முடிவை எடுக்க உரிமை இருக்கிறது. அது அவர்களது சாவுக்கும் பொருந்த வேண்டும். சட்டங்களும், அரசியல்வாதிகளும் மற்றவர்கள் வாழ்க்கைக்குள் உள் நுளைவது சரியானதல்ல” என்று தனது வாழ்வை நிறைவு செய்யும் நிலையில் Alfred தெரிவிக்கிறார் யேர்மனிய மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு அதிரடியான தீர்ப்பை  இன்று (26.02.2020) அறிவித்திருக்கிறது.  கருணைக்கொலைக்கு ஆதரவாக பலர் தாக்குதல் செய்த கோரிக்கைகளை ஆராய்ந்த மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம், “இந்த பொதுத் தடையிலிருந்து நாம் விலகிச் செல்வது நல்லது. ஒருவர் வாழும் போது எடுக்கும் தீர்மானங்களுக்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ அதுபோல் இறப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும் உரிமையும் இருக்க வேண்டும்” என்று  அது அறிவித்திருக்கிறது. அதாவது யேர்மனிய மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம், கருணைக்கொலையை ஏற்று தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த முடிவு மிகவும் எளிதானது அல்ல. “யாருக்கும் சுமையாக இருக்க விரும்பாத வயதானவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் இந்த முடிவு ஒரு அபாயகரமான வழியைக் காட்டிவிடும்” “வாழ்க்கையில் சாதாரண விரக்தியில் உள்ளவர்களும் இந்த கருணைக் கொலை வட்டத்துக்குள் வந்து விடுவார்கள்” “மருத்துவர்களும், சில உதவி அமைப்பினரும் இதை ஒரு வர்த்தகமாகவே ஆக்கிவிடுவார்கள்”  “மரணத்துக்கான முடிவை மனிதன் எடுக்க முடியாது” என்று பல காரணங்களை  அரசியல் கட்சிகள், கிருஸ்தவ தேவாலயங்கள்,மதகுருக்கள் முன்வைத்து எதிர்மறையான விமர்சனங்களையும் அறிக்கைகளையும் வெளியிடுகிறார்கள்.