Jump to content

இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு.....!


Recommended Posts

இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு.....!

(குறிப்பு :- இவ்வாக்கம் சுயசரிதமில்லை. விடுதலைக்காக வாழ்ந்த ஒருவரின் நிலமையைப் புரிந்து கொள்ளாமல் கிடைக்கவிருந்த உதவியைத் தடுத்தாட்கொண்ட ஒரு குழுவின் போக்கினைப் பதியவும் , தனித்தே இயங்குகிற நேசக்கரம் அமைப்பினை எவரோ இயக்குவதாக பொய்யுரைக்கும் பொய்யர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கவுமே எழுதியுள்ளேன். ஸ்கைப்பிலும் தொலைபேசியிலும் சிலருக்குள் நடைபெறுகிற உரையாடல் பக்கசார்பற்ற உதவிகளையும் கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பொய்யான நம்பிக்கைகளையும் விதைத்துவிடுகிறது. ஆயிரம் வார்த்தைகள் பேசி பெரிய தலைகளின் விமர்சனத்தை வாங்குவதிலும் பார்க்க பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களின் வாழ்வுக்கு உதவிபுரிகிற மனிதநேயர்களும் உண்மையைப் புரிந்து கொள்ளவே இதனை எழுதியுள்ளேன்)

**** அண்ணையை தெரியுமா ? கேட்டான் லீமா. அவனது நிறம் உயரம் முதல் அவன் பற்றிய அடையாளங்களை லீமா ஞாபகப்படுத்தினான். அந்தப் பெயரை நினைவுகள் எட்டும் வரையும் தேடியும் பிடிபடவில்லை.

உங்களுக்குத் தெரியுமக்கா....இதுதான் நம்பர் எழுதுங்கோ....ஒருக்கா எடுத்துக் கதையுங்கோ.....

லீமாவிடமிருந்து பெற்ற இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தினேன். எதிர்முனையில் கதைத்த நபருக்கு நான் கதைக்க வேண்டிய ஆளைக் கேட்டேன். பொறுங்கோக்கா.....சொல்லிவிட்டு அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டான்.

கலோ....அண்ணை நான் யேர்மனியில இருந்து***.

ஓம் நான்**** சொல்லுங்கோ....குரல் திக்கித்திக்கி வந்தது. சுகமாயிருக்கிறியளே ? ஒவ்வொரு சொல்லை உச்சரிக்கும் முன்னம் சில வினாடிகள் திக்கித்திக்கியே கதை வந்தது. தன்னை அடையாளம் சொல்லவே சில நிமிடங்கள் எடுத்தது.

லீமா சொல்லியிருப்பான் தான என்னைப்பற்றி....? வடிவாக் கதைக்கேல்ல....உங்களோரைட கதைக்கச் சொன்னவர். என்னை மறந்து போனீங்கள் போல....எனச் சிரித்தான். இல்ல....என்ற எனது இழுவையைப் புரிந்தானோ என்னவோ.....தன்னைப்பற்றி சொல்லத் தொடங்கினான்.

நம்பவே முடியாதிருந்தது....கடைசிச்சண்டை நேரம் காயம்பட்டிருந்து அவன் இறந்துவிட்டதாகவே தகவல் இருந்தது. இப்போது உயிருடன்....!

2009 தைமாதம் காயம்பட்டனான். 2மாதத்துக்குக்கிட்ட கோமாவில இருந்தனான்....பிறகு ஏப்றல் மாதம் பிள்ளையளும் மனிசியும் கொஸ்பிற்றலுக்கு பாக்க வந்ததுகள்.....என்னைப்பாக்க வந்து அதுகளும் காயம்பட்டிட்டுதுகள்....அதோடை பிள்ளையளை றெட்குறோஸ் கப்பலில ஏத்தினவை....அந்த நேரம் நானும் திரும்பியும் காயம்பட்டிட்டன்....எனக்கொண்டும் தெரியாது திரும்பியும் கோமாவுக்குப் போட்டன்....பிறகு நான் கண் முளிச்ச நேரம் புல்மோட்டையில இருந்தன்.....அப்ப ஒருநாள் ரீஐடிக்காறர் வந்து விசாரணையெண்டு 4ம்மாடியில இருந்து எல்லா இடமும் ஏத்தியிறக்கி.....இந்தா நான் பரலைசா இருக்கிறன்.....முள்ளந்தண்டு வடம் பாதிச்சு இடுப்புக்கு கீழ உணர்வில்ல....நடக்கவும் மாட்டன்....ஆரேன் எழுப்பிவிட்டுக் கையில தடியைத் தந்தாத்தான் தெண்டித் தெண்டி ஒரு பத்து மீற்றர் நடப்பன்.....அதுக்குப் பிறகு கால் விறைப்புமாதிரியாகீடும்....உணர்வொண்டும் தெரியாமல் அப்பிடியே விழுத்தீடும்.....அழுகையின் ஒலியை உணர்த்தியது அவனது குரல்.

துலைக்காயத்தால தான் உடனும் சொல்லுகள் சொல்ல வராது....அதுதான் திக்குவாயாப் போச்சு....யோசிப்பீங்கள் இவனென்னடா இப்பிடிக் ககைத்கிறானெண்டு....அப்பிடியொண்டும் நான் நினைக்கேல்லண்ணை.....

எனக்கென்ன கவலையெண்டா.....என்ர மகள் அம்மாதான வச்சுப்பாத்தவ....நவம்பர்மாதம் அம்மாவும் கான்சரில செத்துப்போட்டா அப்ப பிள்ளையை சொந்தக்காறாக்கள் ஒரு அனாதையில்லத்தில விட்டிட்டினம்....புள்ளை பாவம் தனிச்சுப்போனாள்....ரெண்டுதரம் ரெலிபோனில கதைச்சனான்.....அது சின்னன் தான எப்பவப்பா வருவீங்களெண்டு அழுகுது....

ஏத்தின வயசு மகளுக்கு...? 8வயது. அக்கா எங்கையிருக்கிறா ? அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லைப் போல.... அவளும் என்னை வந்து பாக்கிறேல்ல....என்னால அவளுக்கும் ரீஐடி சரியா கஸ்ரப்படுத்தீட்டாங்கள்.....மூத்தவன் காயம்பட்டு கப்பல்ல ஏத்தினவங்கள் அவனைக்காணேல்லயாம்....பிள்ளையையும் இழந்த கவலை அவளும் என்னேயிறது....என்னை வேண்டாமெண்டிட்டாள்....மகளைத்தான் நினைக்க கவலையா இருக்கு....குரல் மாறி அழுகிறான் என்பதனை உணர்ந்தேன்.

ஏன்ன செய்யிறது....? ஆர் நினைச்சம் இப்பிடியெல்லாம் வருமெண்டு....? யோசிக்காதையுங்கோ....ஏதாவது செய்வம்....!

அம்மா கடைசியா வந்து பாக்கேக்க சொல்லீட்டுப் போனவ...தான் சாக முன்னம் என்னை வந்து பாப்பனெண்டு...அவாவும் கடைசீல என்னப்பாக்காமல் செத்துப்போட்டா....அம்மா இருந்தா என்ர புள்ள அனாதையாகீருக்கமாட்டுது.....

தாயைச்சாகும் நேரம் காணாத துயரம் தன் 8வயது மகள் அனாதையான துயரம் ஒரு தாயின் மகனாகவும் ஒரு மகளின் அப்பாவாகவும் அவன் மனசை அரித்துக் கொல்கிற துயரங்கள் கண்ணீராகிக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு கதையையும் சொல்லச் சொல்ல அழுகைதான் வந்தது. தனது துயரைச் சொல்லியழுகிறவனுடன் சேர்ந்து அழ முடியவில்லை.

என்னெண்டா எனக்கு அடுத்தமாதம் வழக்கு வந்திருக்கு....! லோயருக்கு காசுகட்ட வேணும்....ஒருதரும் எனக்கில்ல... அதான்.... நான் வெளிய வந்திட்டா உழைச்சுத்தருவன்.... என்ரை பிள்ளையையும் பாப்பன்..... திக்கித் திக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

நீங்க யோசிக்காதையுங்கோ.....! ஏதுமெண்டா கேளுங்கோ.....பாப்பம்.....!

000 000 000

தொடர்பு அறுபட்டு நெடுநேரமாகியும் மனம் சஞ்சலமாகவே இருந்தது. எப்படி வாழ்ந்த மனிதன்...இன்று தனக்கு உதவுமாறு கெஞ்ச வைத்தது எது.....?

2002 தான் முதல் முதலில் அவனைச் சந்தித்தேன். பெரும் பொறுப்புக்கு உரிய கடமையுணர்வோடும் அதேயளவு மக்களுடனான தொடர்பாடலும் கொண்ட ஒரு கடமை வீரனையே அந்தப் பிரமனாலங்குளத்தில் பார்த்தேன். அவனைப்பற்றிப் பின்னர் பல கதைகள் சொன்னார்கள். அவன் நிற்கிறானென்றால் எதிரி எவ்வளவு பீதியடைவான் என்றெல்லாம்; அந்தக் கறுத்த நெடிய முறுக்கேறிய உடலும் நிமிர்வும் சொன்ன கதைகள் பல்லாயிரம். அவை ஒவ்வொன்றும் ஒருகாலம் பதிய வேணுமென ஒருநாள் இரவு தோழியொருத்தி கதையோடு கதையாய்ச் சொன்னாள்.

பின்னர் புதுக்குடியிருப்பில் கிளிநொச்சியில் பரந்தனில் மன்னாரில் என அந்த மனிதனின் ஆழுமை ஆற்றல் என அவனது பன்முகத்திறமைகளையெல்லாம் பலரது வாயிலிருந்து கேட்டிருக்கிறேன். அவனது பிரிவின் பொறுப்பாளர் ஒரு சந்திப்பில் மற்றவர்களுக்கு அவன் பற்றி ஒரு உதாரணம் சொன்னார். அத்தகையளவு எல்லாராலும் நேசிக்கப்பட்ட ஒருவன் இன்று...??? நினைக்கவே முடியவில்லை.

இது விதியா ? இல்லை தமிழன் செய்த ஊழ்வினையா ? எதுவென்று பிரித்தறிய முடியவில்லை.

அன்றைய தொலைபேசியழைப்பும் அவனது கண்ணீர் முட்டிய கதைகளும் தான் நெஞ்சு முட்டிக்கனத்துக் கொண்டிருந்தது. நினைக்க நினைக்க அழுகைதான் வந்தது. கத்தியழுதால் தான் மனம் ஆறும்போல அந்தரமாயிருந்தது.

தாங்க முடியாத வேதனைகளை கொட்டித்தீர்க்கும் இடமாக நிலக்கீழ் அறையொன்றுதான் இருக்கிறது. உடுப்புகள் தோய்க்கப்போட்டு வருவதாக பிள்ளைகளுக்குச் சொல்லிவிட்டு உடுப்புக் கூடையைத் தூக்கிக்கொண்டு நிலக்கீழ் அறைக்குப் போனேன். உடுப்புத்தோய்க்கும் மெசினில் உடுப்புக்களைப் போட்டு சவர்க்காரப்பவுடரைப் போட்டு மெசினை இயக்கிவிட்டேன். மெசின் சுழல ஆரம்பித்தது. கதவைச் சாத்தினேன். நெஞ்சுக்குள் குவிந்திருந்த துயர் கண்ணீராய் வழிந்தது. வெளியில் சத்தம் போகாத நிலக்கீழ் அறையின் ஒவ்வொரு அணுவும் எனது கண்ணீரைத் தாங்கிக் கொண்டது. எப்படியோ எல்லாம் வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று....ஏதிலிகளாகவும் ஊனமாகவும் முடமாகிக்கிடக்க எங்கள் புலத்து அரசியல் புடுங்குப்பாடுகளும் இடுங்குப்பாடுகளுமாகியிருப்பதன் மர்மம் புரியவேயில்லை.

அந்தநாள் மட்டுமல்ல அடுத்து வந்த சில நாட்கள் வரை அண்ணையின் ஞாபமும் அவரது நிலமையும் தான் நிம்மதியைப் பறித்திருந்தது.

இரண்டாவது நாள்.....

அம்மா...அம்மா......மகள் கூப்பிட்டாள். என்னம்மாச்சி...? உங்களுக்கு ரெலிபோன்....மகள் ரெலிபோனைக் கையில் தந்தாள். லீமாதான் அழைத்திருந்தான். ஒருக்கா எடுங்கோ....சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான்.

அக்கா அண்ணைக்கு லோயருக்கு ஒரு ஒழுங்கு செய்ய வேணும்....காசு கட்டாட்டி எங்கடை லோயர்மார் கோட்டுக்கு போகமாட்டினம்.....அண்ணேன்ரை நிலமை ஆள் சொன்னவர்தான....ஒரு லச்சம் தயார்பண்ண வேணும்....ஏற்கனவே அவனுக்கு வழக்குக்கு உதவுவதாக வாய்மொழி நம்பிக்கை கொடுத்தவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது பற்றி தயக்கத்துடன் சொன்னான்.

2கிழமையில காசு றெடிபண்ணினாத்தானக்கா....

ஏற்கனவே அவனுக்கு உதவுவதாக வாக்குறுதியளித்த லண்டனில் இருந்து இயங்கும் நிறுவனத்தின் பங்காளி போன தவணைக்கு காசு கொடுட்பதாகச் சொல்லிவிட்டு தொடர்பில்லாமல் போனது போல இம்முறையும் பிசகினால் சட்டத்தரணியைச் சமாளிக்கேலாதென்ற உண்மையையும் லீமா சொன்னான்.

ஏன்னெண்டாலும் ஒரு ஒழுங்கு செய்வம்...சொல்லிவிட்டு லீமாவின் தொடர்பைத் துண்டிக்கிறேன். அவசரத்துக்கு ஆதரவு வழங்குகிற லண்டனில் வாழும் ஒரு அன்பரைத் தொடர்பு கொண்டு நிலமையைச் சொன்னேன். பெயரை வெளியில் சொல்லி உதவி கோரமுடியாத நிலமையையும் விளக்கினேன்.

பிள்ளை...நான் ஒருலட்சம் அனுப்பிவிடுறன் விபரத்தை தாங்கோ....அந்த அன்பர் பணம் அனுப்புவதற்கான விபரத்தை என்னிடம் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே உதவுவதாக கடைசியில் தொடர்பையறுத்தவரும் இவரும் தத்தமது தொழில் சார்ந்து உறவு இருப்பதால் ஏற்கனவே வாக்குறுதியழித்து ஏமாற்றப்பட்ட விபரத்தையும் சொன்னேன். அவரிடம் இதுபற்றி விளக்கம் கேட்பதாகவும் அந்த அன்பர் சொன்னார்.

ஒருவழியாய் உதவி ஒழுங்கானதில் நிம்மதியாகியது மனசு. அடுத்த 20நிமிடம் கழித்து உதவுவதாக விபரம் பெற்றவர் அழைத்தார். பணம் அனுப்பிய விபரம் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விழுந்தது இடி.

பிள்ளை என்னெண்டா நான் அவரிட்டைக் கதைச்சனான்....அவர் சொல்றார் தான் குறைஞ்ச காசிலை இந்த வழக்கைச் செய்ய தன்னிட்டை ஆளிருக்கெண்டு....தான் இவற்றை வழக்குக்கு காசு குடுப்பராமெண்டு.....ஒரு கிழமை பாருங்கோ அவர் செய்யாட்டி சொல்லுங்கோ...நான் தாறன்....

உதவ முன்வந்த மனிதனையும் குழப்பிய அந்த மொட்டந்தலை உபகாரியை ஸ்கைப்பில் அழைத்தேன்.

என்னெண்டா ழூழூழூ நான் ஒரு லோயரை வைச்சிருக்கிறன் அவருக்கொரு ஐயாயிரம் ரூபா குடுத்தா ஒரு தவணைக்கு கோட்டுக்குப் போவார்.....நீங்களேன் ஒரு லட்சத்தை வீணாக்கிறியள்...மிச்சத்தை வைச்சிருந்து நாங்கள் அவர் வெளீல வர ஒரு கடைபோட்டுக் குடுத்தமெண்டா அவருக்கொரு வேலையுமாகீடுடெல்லோ....?

அவற்றை குற்றப்பத்திரிகை என்னமாதிரியெண்டது தெரியுமோ ? கேட்ட எனக்குச் சொன்னார் அது கஸ்ரமானது தான் ஆனால் என்ரை லோயர் முடிச்சுத் தருவார். அவர் விளக்கங்களை நீட்டிக்கொண்டு போனார். அவரது விளக்கங்களிலிருந்து அண்ணைக்கு அவர் பெரிதாய் எதையும் செய்யப்போவதில்லையென்றதை உணர முடிந்தது. அதற்கு மேல் அவருடன் கதைப்பதில் எவ்வித பலனுமில்லையென்பது புரிந்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.

லீமாவை அழைத்தேன்.....ஐயாயிரத்தோடு அவனை வெளியில் எடுக்கலாம் என்ற லண்டன் உபகாரியின்; கதையில் அவனுக்கும் நம்பிக்கையில்லை என்பதை அவன் ஏற்கவே ஊகித்திருந்ததை அப்போது சொன்னான். அப்போதுதான் லீமா அண்ணை மீதான வழக்குகள் பற்றிச் சொன்னான்.

லண்டன் உபகாரி நினைப்பது போல அந்த வழக்கு இலகுவாக முடிகிற வழக்கில்லையென்பது புரிந்தது. அவைக்கு இப்போதைக்கு ஒண்டையும் வெளிப்படுத்தாதையுங்கோ லீமா எங்கடை பக்கத்தாலை லோயருக்கான காசை ஒழுங்கு பண்ணுவம்.... ஆளையனுப்பி முதல் அட்வான்சை குடுப்பிப்பம்.... ஓமக்கா அதான் சரியெண்டுபடுது...

நம்பிக்கையானவர்கள் பலரைத் தொடர்பு கொண்டு எல்லாம் இழந்து இன்று ஊனமாகி திக்குவாயாகிப் போன அண்ணனுக்கு உதவி கோரத்தொடங்கினேன். கடைசியில் கனடாவிலுள்ள நண்பர் ஒருவர்தான் மிச்சமாக இருந்தார்.

இரவு கனடா நேரம் 9.40இற்கு அந்த நண்பரை அழைத்து விடயத்தைச் சொன்னதும் கொடுத்த விபரத்துக்கு மறுநாள் ஒரு லட்சத்தை போட்டுவிட்டு வெஸ்ரேன் யூனியன் பணம் பெறும் 10 இலக்கங்களை குறுஞ்செய்தியிட்டிருந்தார். முகம் காட்டாமல் அவ்வப்போது அவசரங்களுக்கு உதவுகிற அந்த உறவு ஒருகாலம் நாட்டுக்காக இயங்கிய இதயம். சிறைகளில் எல்லாம் இருந்த அனுபவம் நிறைந்த அந்த மனிதர் தன்போன்ற இன்னொரு போராளியின் சிறையின் வதையைப் புரிந்து உதவியது.

கோடி நன்றிகள் அண்ணா...! என்ற மின்னஞ்சல் மட்டுமே அப்போதைய எனது பதில் நன்றியானது.

000 000 000

குறித்த திகதிக்கு முன்னர் 25ஆயிரம் சட்டத்தரணிக்கு கட்டி அந்த நாள் விடிந்தது. வழக்கிறஞரின் தொலைபேசி அன்று உறங்க முடியாது தொடர்ந்து எனக்காக ஒலித்துக் கொண்டிருந்தது. எதிர்பார்த்தைவிடவும் ஒரு விடிவுக்கான பாதையை 25ஆயிரம் செய்திருந்தது. அடுத்த 50ஆயிரத்துக்கு அலுவல்கள் நிறைய வழக்கறிஞர் தரப்பிலிரந்து தரப்பட்டது. இன்னும் ஒரு லட்சம் கேட்டாலும் அதையும் செலுத்தி அந்த வீரனை வெளியில் எடுக்க வேண்டுமென்ற வைராக்கியம் மனசுக்குள் இறுக்கமாகியது.

ஐயாயிரத்தோடு ஏதோ அல்வா விற்கலாம் போல ஆலோசனை சொல்லி ஏமாற்றிய மொட்டந்தலைக்கு அந்த அண்ணனின் விடுதலையைச் சொல்ல வேண்டுமென்ற ஆவல். தவணைகள் குறிக்கப்பட்டு எங்களுக்காக தனக்கான குடும்பம் வாழ்வு சந்தோசம் எல்லாவற்றையும் இழந்த அண்ணனுக்கு ஒளி கிடைக்கும் வாய்ப்பொன்று கிட்டவுள்ள செய்தியை அண்மையில் லீமா தந்திருந்தான்.

ஐயாயிரத்தோடு ஆளை வெளியில எடுத்து கடைபோட்டுக் குடுப்பம்....என்றவர் இன்று வரையும் அந்த அண்ணனின் வழக்குப்பற்றியோ அவனது விடுதலைக்கான முயற்சி பற்றியோ எதையுமே கதைக்கவுமில்லை. அதற்காக ஒரு சதத்தையும் கொடுக்கவுமில்லை.

அண்மையில் ஒருவர் லண்டனிலிருந்து பேசியபோது....லண்டன் உபகாரி பற்றிக் கதைத்தார். அவங்கள் கனபேரை வெளியில எடுத்து விட்டிருக்கிறாங்களாம்....உங்களையும் அவங்கள் தானாம் காசைத் தந்து இயக்கிறாங்கள்....நீங்கள் றேடியோவுக்கு வந்துதானாம் அவேடை சனத்தை உங்கடை பக்கம் எடுத்திட்டியளாம்....என்றார்.

வாயில் கெட்டவார்த்தைகள் தான் வந்து குவிந்தது. யாரோ வலிப்பட்டு துயரப்பட்டு யாரிடமோ எல்லாம் கெஞ்சி பிச்சையெடுத்துக் கொடுக்கிறதையும் தங்கள் சுய அரசியல் வியாபாரத்துக்கு விளம்பரப்படுத்துகிற இந்த வியாபாரிகளை இன்னும் நம்புகிற மனிதர்களும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

அண்ணை நான் ஒரு தனிமனிசி றேடியோவில போய் நிண்டு உதவுங்கொ உதவுங்கோண்டு கத்தியும் இன்ரநெட்டில ஆளாளுக்கு திட்டிற திட்டெல்லாத்தையும் வாங்கிக் கொண்டு தான் இந்தளவு உதவியளையும் ஒழுங்கு செய்திருக்கிறன்....இதைச் சொன்னாலும் விலாசமெடுக்கிறனெண்டு சொல்லுவினமண்ணை....ஆனா உந்தக் நாட்டைக் கடந்தவையும் புதுச்செயலகத்தைத் திறந்தவையும் இல்லாமத்தானண்ணை இவ்வளவு உதவியும் போகுது....

அட அப்பிடியே....? ஈலிங் அம்மனுக்குப் போன கிழமை போனனான்....அங்கை அவங்கடை அவங்கடை ஆக்களைக் கண்டனான்....அவை அப்பிடித்தான் கதைக்கினம்....எனக்கும் உங்களில சந்தேகம்தான்....அதெப்பிடி உங்களுக்கு உவ்வளவு தொடர்புகளும் வந்தது...? சந்தேகம் சந்தேகமெனப் பல கேள்விகள் கேட்டவர் கடைசியில் சொன்னார். கோவிக்காதையுங்கோ கனபேர் உப்பிடித்தான் கதைக்கினம் அதத்தான் கேட்டனான்... கோவிக்காதையுங்கோ என்ன....சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். இப்படித்தான் சந்தேகங்களும் கேள்விகளும் நம்பிக்கைகளை உடைத்து நொருக்கிவிடுகிறது.

கடந்த 5மாதங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப நலனுக்காகவும் சட்ட உதவிகளுக்காகவும் நேசக்கரம் ஒருங்கமைத்துக் கொடுத்த உதவிகளின் தொகையை 4நாட்கள் தேடித்தொகுத்து 15.03.2012 கணக்கெடுத்த போது நம்ப முடியாதிருந்தது. ஐந்து மில்லியன் ரூபாவுக்கு மேலாக (5328517,50 ரூபா) உதவிகள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வருகிற விமர்சனங்கள் வரட்டுமென்ற முடிவோடு கைதிகள் நலன் கணக்கறிக்கையை தயார் செய்தேன்.

அன்று லீமாவுடன் பேசுவதற்கு தொடர்பெடுத்து லீமாவுக்கு விடயத்தைச் சொல்ல லீமா மிகவும் வேதனைப்பட்டான். நாங்க இஞ்சைபடுற துயரம் ஒருதருக்கும் விளங்காதக்கா....இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு ஏதாவது செய்வமெண்ட சிந்தனை உங்கை வராது போல....

16.03.2012

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய 5மில்லியன் ரூபா உதவி கணக்கறிக்கை விபரத்தினை பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்:-

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99559

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அழிவுக்குப் பிறகும் வராத ஒற்றுமை, இனியா வரப் போகின்றது, சாந்தி?

அழுக்கு நிறைந்த வாய்க்காலில் நடப்பது போல, அம்பிடுகிற நல்ல இடங்களில கால வச்சுக் கவனமாக, நம் வழியே போய்க கொண்டிருக்க வேண்டியது தான்!

Link to comment
Share on other sites

நாடு கடத்துபவர்களும் புதிய செயலக காரரும் அடுத்தவன் செய்யும் வேலைதிட்டங்களுக்கும் உதவிகளுக்கும் உரிமை கோரி அறிக்கை விடுவதால் வாற வினை தான் இதெல்லாம்

Link to comment
Share on other sites

கே.பி யோடை தொடர்பு மகிந்தாவோடை தொடர்பு ..கோத்தாவோடை தொடர்பு. கருணாவோடை தொடர்பு டக்லஸ்சோடை இன்னும் வேறை யாரும் இருந்தால் அவர்களுடனும் தொடர்புகளை எடுத்தாவது பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் போய் சேர்ந்தாலே போதுமானது. அடைக்கோழிகளின் கொக்கரிப்புக்கள் காற்றில் கரைந்து விடும்.

Link to comment
Share on other sites

இவ்வளவு அழிவுக்குப் பிறகும் வராத ஒற்றுமை, இனியா வரப் போகின்றது, சாந்தி?

அழுக்கு நிறைந்த வாய்க்காலில் நடப்பது போல, அம்பிடுகிற நல்ல இடங்களில கால வச்சுக் கவனமாக, நம் வழியே போய்க கொண்டிருக்க வேண்டியது தான்!

உங்கள் முடிவே சரியானது புங்கையூரான். ஆயினும் இந்த நிலை தொடர்தல் எமது முன்னேற்றங்களுக்கு நாங்களே சவக்குழி தோண்டுவது போலிருக்கிறது.

Link to comment
Share on other sites

சாந்தி,

கீழுள்ள கருத்துப்பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன என அறியத்தாருங்கள். நன்றி.

கே.பி யோடை தொடர்பு மகிந்தாவோடை தொடர்பு ..கோத்தாவோடை தொடர்பு. கருணாவோடை தொடர்பு டக்லஸ்சோடை இன்னும் வேறை யாரும் இருந்தால் அவர்களுடனும் தொடர்புகளை எடுத்தாவது பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் போய் சேர்ந்தாலே போதுமானது. அடைக்கோழிகளின் கொக்கரிப்புக்கள் காற்றில் கரைந்து விடும்.

Link to comment
Share on other sites

சாந்தி,

கீழுள்ள கருத்துப்பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன என அறியத்தாருங்கள். நன்றி.

அகூதா,

மேற்சொன்னவர்களிடம் போய்த்தான் அந்த மக்களுக்கு உதவ வேண்டுமென்றால் அதனை மேற்சொன்னவர்களே செய்யலாமே ஏன் நாங்கள் அதைச் செய்ய வேணும் ? உதவிகள் போக வேணுமென்பதற்காக எனது தங்கையை சிதைத்தவனையும் எனது தோழனை அழித்தவனையும் நல்லவனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இறுதியாக :- இந்தக் கொலைஞர்கள் யாரையும் என்னால் ஏற்றுக்கொள்ளவோ விட்டுக்கொடுத்துப் போகவோ முடியாது.

கே.பி யோடை தொடர்பு மகிந்தாவோடை தொடர்பு ..கோத்தாவோடை தொடர்பு. கருணாவோடை தொடர்பு டக்லஸ்சோடை இன்னும் வேறை யாரும் இருந்தால் அவர்களுடனும் தொடர்புகளை எடுத்தாவது பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் போய் சேர்ந்தாலே போதுமானது.

சாத்திரி உங்களிடம் ஒரு கேள்வி !

முன்னாள் போராளிகள் மக்கள் என்று உருகிவழிகிற இரக்க சீலர்கள் ஏன் சிறைகளில் வதைபடுகிற கைதிகளின் விடுதலைக்கு எந்தவித ஆதரவையும் கொடுக்கிறார்களில்லை ? யாராவது ஒரு கைதியின் குடும்பம் உதவி கேட்டால் அதற்கு இன்னொரு உபகாரத்தையே கேட்கிறார்கள் ? ஏன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”

- ரொட்ஸ்கி -

Link to comment
Share on other sites

சாந்தி, பகிர்வுக்கு நன்றி.

உங்கள் சேவைக்கு தமிழன் என்ற முறையில் மிகவும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

உங்கள் சேவை தொடரவேண்டும்.

Link to comment
Share on other sites

சாந்தி இன்னும் மண்ணின் மனம் மாறாமல் நீங்கள் சேவை தொடரட்டும் .... இதிலும் ஓர் சாந்தி உண்டல்லவா? அதன் தன்மையே மற்றோர் வீண் பேச்சை தூசு போல துடைத்து எறியும்....

Link to comment
Share on other sites

அகூதா,

மேற்சொன்னவர்களிடம் போய்த்தான் அந்த மக்களுக்கு உதவ வேண்டுமென்றால் அதனை மேற்சொன்னவர்களே செய்யலாமே ஏன் நாங்கள் அதைச் செய்ய வேணும் ? உதவிகள் போக வேணுமென்பதற்காக எனது தங்கையை சிதைத்தவனையும் எனது தோழனை அழித்தவனையும் நல்லவனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இறுதியாக :- இந்தக் கொலைஞர்கள் யாரையும் என்னால் ஏற்றுக்கொள்ளவோ விட்டுக்கொடுத்துப் போகவோ முடியாது.

சாத்திரி உங்களிடம் ஒரு கேள்வி !

முன்னாள் போராளிகள் மக்கள் என்று உருகிவழிகிற இரக்க சீலர்கள் ஏன் சிறைகளில் வதைபடுகிற கைதிகளின் விடுதலைக்கு எந்தவித ஆதரவையும் கொடுக்கிறார்களில்லை ? யாராவது ஒரு கைதியின் குடும்பம் உதவி கேட்டால் அதற்கு இன்னொரு உபகாரத்தையே கேட்கிறார்கள் ? ஏன் ?

அவர்கள் பாவம் தங்களை கவனிக்கவே நேரம் இல்லை இதுக்குள்ளை சிறையில் இருப்பவர்களை எப்படி கவனிக்கிறதாம். :wub:

Link to comment
Share on other sites

ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”

- ரொட்ஸ்கி -

புத்தா இதன் அர்த்தம் புரியவில்லை ? :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தா இதன் அர்த்தம் புரியவில்லை ? :mellow:

"அறுத்தும் கொல்லலாம்,விதைச்சும் கொல்லலாம்".. இது ஒரு படத்தில் இடம்பெற்ற வசனம் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் சாந்தி அக்கா. :unsure:

Link to comment
Share on other sites

"அறுத்தும் கொல்லலாம்,விதைச்சும் கொல்லலாம்"..

அப்படியானால் ? :blink::rolleyes:

Link to comment
Share on other sites

அக்கா மனங்கள் வதைக்கின்ற கொடுமைகளை நாம் சந்தித்து விட்டோம் எவ்வழியேனும் நாம் மீண்டேயாக வேண்டும்.... விடிவு வரும்!

Link to comment
Share on other sites

சாந்தி, பகிர்வுக்கு நன்றி.

உங்கள் சேவைக்கு தமிழன் என்ற முறையில் மிகவும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

உங்கள் சேவை தொடரவேண்டும்.

எப்போதும் ஊக்கம் தருகிற உறவுகளில்Eas நீங்களும் ஒருவர். எல்லோர் கைகளும் இணைவதே எனது கனவு.

இதிலும் ஓர் சாந்தி உண்டல்லவா? அதன் தன்மையே மற்றோர் வீண் பேச்சை தூசு போல துடைத்து எறியும்....

உண்மைதான் கல்கி. ஆனாலும் சிலவேளைகளில் வீண்பேச்சகளும் வில்லங்க அறிமுகங்களும் நம்பிக்கைகளை சிதைத்துவிடுகிறது. பகிர்வுக்கு நன்றிகள் கல்கி.

Link to comment
Share on other sites

// கே.பி யோடை தொடர்பு மகிந்தாவோடை தொடர்பு ..கோத்தாவோடை தொடர்பு. கருணாவோடை தொடர்பு டக்லஸ்சோடை இன்னும் வேறை யாரும் இருந்தால் அவர்களுடனும் தொடர்புகளை எடுத்தாவது பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் போய் சேர்ந்தாலே போதுமானது. அடைக்கோழிகளின் கொக்கரிப்புக்கள் காற்றில் கரைந்து விடும். // உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்...

பாதிக்கப்பட்டது எங்கட உறவுகள் அவர்களுக்கு உதவ இவ்வாறெல்லாம் நடக்கவேண்டுமெண்டால் அவ்வாறு போய்த் தான் உதவவேண்டும்.... வேற முறைகள் ஏதேனும் இருக்கிறதா ?......

எங்களில் தற்போது சூப்பர்மான்கள் யாரும் இல்லை.... பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சென்று காப்பாற்ற......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.