Archived

This topic is now archived and is closed to further replies.

poet

முல்லைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

முல்லைப் பாட்டு

- வ.ஐ.ச.ஜெயபாலன்

ஆயிரம் காலங்களைக் கடந்த கடல்

ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல

இன்றும் புது அலைகளை எழுப்புகிறது.

அந்த அலைகளின் எல்லைக்குமேலே

யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த

இடைச்சிகளின் மேச்சல் நிலம்.

அந்தக் கானல் பொட்டலின்

கந்தல் குடையான சிறு மரம் நோக்கி

கத்திக் கம்போடும்

செல்பேசியோடும் பெயர்கிறாள்

ஒரு புல்வெளியின் இளவரசி.

நூல் பாவையாய்

அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம்

ஆடித் தொடர்கிறது நாய்.

அந்த நான்கு கண்களின் பார்வையில்

கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள்

செம்புழுதி போர்த்த பற்றைகளிடை

காடைகள் மிரளாமல் ஊரும்.

ஆயிரம் காலத்து வளமையாய்

நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு

பழமும் வைத்திருக்கிறது இலந்தை மரம்.

போகிற போக்கில் களவாய் உருவி வந்த

முற்றாத நெற்கதிர்களின் பால்

இன்னும் அவளது கடைவாயில் வழிகிறது.

அந்தியிலும் சூரியன் விழுந்து கிடந்து

எரிகிற புல்வெளிமேல்

கறுத்து, ஈழவரின் கவிதைகள்போல

சூல்கொண்டு அலைகிற முகில்கள்

ஈரலித்த நம்பிக்கையை பாடுகிறது.

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.

பூம்புகாரன்ன பெருநகர்களே தொலைந்த

வங்கக் கரைப் புல்வெளியெங்கும் நிலைத்த

சங்கக் கவிஞர்களின்

மோர் கமழும் காதல் பாடல்கள்

இன்றும் நெய்தலும் முல்லையுமாய்ப் பூக்கிறது

கோணாத்திகளின் கூந்தலுக்காக.

கோணாத்தி - இடைச்சி

Share this post


Link to post
Share on other sites

ஆயிரம் காலத்து வளமையாய்

நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு

பழமும் வைத்திருக்கிறது இலந்தை மரம்.

போகிற போக்கில் களவாய் உருவி வந்த

முற்றாத நெற்கதிர்களின் பால்

இன்னும் அவளது கடைவாயில் வழிகிறது.

ஆறே வரிகளில், இடையர்களின் காய்ந்த தரவை நிலத்தையும், இடையர்களின் கள்ளமில்லாத உள்ளத்தையும் கவிதையில் வடிக்க, உங்களால் மட்டுமே முடியும்!

அருமையான கவிதைக்கு நன்றிகள், பொயட்!

Share this post


Link to post
Share on other sites

அருமையாக படைத்துள்ளீர்கள் வாழ்த்துகள், இழந்தை பழமும் முற்றாத நெற் கதிரும் சாப்பிட்டவர்களுக்குதான் அதன் சுவை தெரியும்.

Quote "அந்த நான்கு கண்களின் பார்வையில்

கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள்

செம்புழுதி போர்த்த பற்றைகளிடை

காடைகள் மிரளாமல் ஊரும்"

கண் முன்னால் காட்சிகளை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள், நன்றி

Share this post


Link to post
Share on other sites

முல்லைப் பாட்டு

- வ.ஐ.ச.ஜெயபாலன்

ஆயிரம் காலங்களைக் கடந்த கடல்

ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல

இன்றும் புது அலைகளை எழுப்புகிறது.

அந்த அலைகளின் எல்லைக்குமேலே

யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த

இடைச்சிகளின் மேச்சல் நிலம்.

அந்தக் கானல் பொட்டலின்

கந்தல் குடையான சிறு மரம் நோக்கி

கத்திக் கம்போடும்

செல்பேசியோடும் பெயர்கிறாள்

ஒரு புல்வெளியின் இளவரசி.

நூல் பாவையாய்

அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம்

ஆடித் தொடர்கிறது நாய்.

அந்த நான்கு கண்களின் பார்வையில்

கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள்

செம்புழுதி போர்த்த பற்றைகளிடை

காடைகள் மிரளாமல் ஊரும்.

ஆயிரம் காலத்து வளமையாய்

நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு

பழமும் வைத்திருக்கிறது இலந்தை மரம்.

போகிற போக்கில் களவாய் உருவி வந்த

முற்றாத நெற்கதிர்களின் பால்

இன்னும் அவளது கடைவாயில் வழிகிறது.

அந்தியிலும் சூரியன் விழுந்து கிடந்து

எரிகிற புல்வெளிமேல்

கறுத்து, ஈழவரின் கவிதைகள்போல

சூல்கொண்டு அலைகிற முகில்கள்

ஈரலித்த நம்பிக்கையை பாடுகிறது.

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.

பூம்புகாரன்ன பெருநகர்களே தொலைந்த

வங்கக் கரைப் புல்வெளியெங்கும் நிலைத்த

சங்கக் கவிஞர்களின்

மோர் கமழும் காதல் பாடல்கள்

இன்றும் நெய்தலும் முல்லையுமாய்ப் பூக்கிறது

கோணாத்திகளின் கூந்தலுக்காக.

கோணாத்தி - இடைச்சி

நண்பரே! உங்கள் கவிதை என்னை ஒருமுறை சங்ககாலத்திற்கு அழைத்து சென்றுவிட்டது !! அத்தனை வரிகளும் அருமை!!

Share this post


Link to post
Share on other sites

நன்றி யாழ்கள தோழ தோழியர்களே,

இதுவரை என்கவிதைகள் வாசித்த 218 பேருக்கும் என் அன்பும் நல் வாழ்த்துக்களும்.

.

கருத்து எழுதிய புங்கையூரான் உடையார், மற்றும் விஜயகுமாருக்கு அன்பு வணக்கங்க்கள்;

உங்கள் கருத்துக்கள் கவிதை எழுதுவதற்க்கு அர்த்தம் சேர்க்கிறது

Share this post


Link to post
Share on other sites

முல்லைப்பாட்டு கவிதையை வாசித்த298 பேருக்கும் கருதெழுதிய மூவருக்கும் என் நன்றிகள். யாழ்கள நண்பர்களிடம் கவிதை வாசிக்கும் ஆர்வம் முன்னைப்போல இல்லை. ஒருவேழை கவிதை பொறுப்பாக இருக்கலாம். தொடர்ந்து கவிதைகளை இணைக்கும் ஆர்வம் எழவில்லை என்பதுதவிர வேறொன்றுமில்லை. .

முல்லைப்பாட்டு கவிதையை வாசித்த298 பேருக்கும் கருதெழுதிய மூவருக்கும் என் நன்றிகள். யாழ்கள நண்பர்களிடம் கவிதை வாசிக்கும் ஆர்வம் முன்னைப்போல இல்லை. ஒருவேழை கவிதை பொறுப்பாக இருக்கலாம். தொடர்ந்து கவிதைகளை இணைக்கும் ஆர்வம் எழவில்லை என்பதுதவிர வேறொன்றுமில்லை. .

Share this post


Link to post
Share on other sites

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.

பூம்புகாரன்ன பெருநகர்களே தொலைந்த

வங்கக் கரைப் புல்வெளியெங்கும் நிலைத்த

சங்கக் கவிஞர்களின்

மோர் கமழும் காதல் பாடல்கள்

இன்றும் நெய்தலும் முல்லையுமாய்ப் பூக்கிறது

கோணாத்திகளின் கூந்தலுக்காக.

இலக்கியத்தை உங்கள் கவிதையில் ரசித்தேன்...

நெய்தலையும் முல்லையையும் உருவகித்திருப்பது நன்று.. பாராட்டுக்கள்.....

Share this post


Link to post
Share on other sites

நன்றி கல்வி.

தமிழில் பாரதியாரின் காலத்துடன் நவீன காவிதைகள் எழுச்சி பெறுகிறது. நான் நவீன கவிதைகட்க்குப் பின்னாடி சங்கக் கவிதைகலில் இருந்து ஆரம்பிக்க முயல்கிறேன். தங்கலிக்கும் என் கவிதையை வாசித்த 395 பேருக்கும் என் நண்றி.

Share this post


Link to post
Share on other sites

அருமையான கவிதை

Share this post


Link to post
Share on other sites

நன்றி பாக்கி

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் இன்று என்னை உசிப்பிவிட்ட தோழருக்கு

ஆசைக்குமுண்டோ......????

நன்றி கவிஞரே

நீர் எதை எழுதினாலும் அது அதுதான்

Share this post


Link to post
Share on other sites

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.

ஆனாலும் உங்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கின்றதே அசத்தி விட்டீர்கள் தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

நன்றி விசுக்கு, நன்றி சாத்திரி, உங்கள் இலக்கிய ஆர்வம் எப்பவும் எனக்கு மகிழ்ச்சி தருவது. என்மீசை இப்பவே 2 படத்ஹுக்கும் 2 மாதிரி ஆகிவிட்டது.

Share this post


Link to post
Share on other sites

முல்லைப் பாட்டு

- வ.ஐ.ச.ஜெயபாலன்

யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த

இடைச்சிகளின் மேச்சல் நிலம்.

அந்தக் கானல் பொட்டலின்

கந்தல் குடையான சிறு மரம் நோக்கி

கத்திக் கம்போடும்

செல்பேசியோடும் பெயர்கிறாள்

ஒரு புல்வெளியின் இளவரசி.

நூல் பாவையாய்

அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம்

ஆடித் தொடர்கிறது நாய்.

அந்த நான்கு கண்களின் பார்வையில்

ஆயிரம் காலத்து வளமையாய்

நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு

பழமும் வைத்திருக்கிறது இலந்தை மரம்.

அந்தியிலும் சூரியன் விழுந்து கிடந்து

எரிகிற புல்வெளிமேல்

கறுத்து, ஈழவரின் கவிதைகள்போல

சூல்கொண்டு அலைகிற முகில்கள்

ஈரலித்த நம்பிக்கையை பாடுகிறது.

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.............! :)

கவிஞரே சொல்வித்தையால் செயல்வித்திட்டிருக்கின்றீர்கள்!

ஒவ்வொரு வரியிலும் நிகழ்காலமும் புரிகின்றது.

நீங்கள் எழுதிய இக்கவி சங்ககாலத்துக்குரியதல்ல. இக்காலத்துக்கும் பொருந்தும் விதமாய் தமிழ்த்தாயின் எச்சங்களால் இட்டிருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்களோடு நன்றிகளும் ...! :)

நல்ல கவிதான் கவி. எத்தனை பேருக்கு 'இப்போது' புரியும் தமிழ்???

வாசிக்கும் எண்ணிக்கை என்பதும்... இயல்பாய் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்களுக்காக மட்டுந்தான்! அதிலும் பாதிக்குத்தான் கவிதைகள் முழுதாய்ப் புரியும்!

இயல்பு என்பது எம்மையும் மாற்றுகின்றதா....???

இயல்பான வரிகளுடன் கவி எழுதும் முறைமை பற்றி கவிகளில் தேர்ந்த தங்களிடம் கேட்கின்றேன் கவிஞரே! இதைப்பற்றி தங்களின் விளக்கம், கருத்து என்னவிதமாக இருக்கின்றது என்று தயவுசெய்து கொஞ்சம் விளக்குங்களேன்!

கவிதைகள் என்பதின்மேல் அவ்வளவு ஈடுபாடில்லாத ஒரு நடைமுறையை இப்போதைய தமிழ் சமுதாயத்தில் காண்பதனால்தான் இந்தக் கேள்வி தங்களிடம்.

தவறிருந்தால் மன்னிக்கவும் கவிஞரே! :(

Share this post


Link to post
Share on other sites

நன்றி கவிதை. உங்கள் கருத்துக்கு மட்டுமல்ல உங்கள் தமிழுக்கும்.

கவிதை எப்பவும் கவிதையாகவும் பாடலின்கூறுகளாகவும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் வடிவம் மேலோங்கி இருக்கிறது. இன்று போற்றப்படும் உரைநடை இலக்கியங்களுக்குள்ளும் கவிதை செல்வாக்குச் செலுத்துதல்லவா.

கவிதை சாகாது ஆனால் நம்ம தெரு பெண்ணைக் காதலிக்கிற ஒரு அயலூர் அயல்சமூகக் காதலனைப்போல வெவ்வேறு வடிவங்களோடு காரணங்களோடு நம்ம தெருவில் நம்மைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites