ஊர்ப்புதினம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?

2 hours 3 minutes ago
mahinda-ranil-maithri-720x450.jpg நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பான கருத்துக்களை கூறுமாறு அவர் தெரிவித்திருந்ததோடு, அதற்கு சிலர் ஆதரவளித்திருந்தனர்.

அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதற்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளார்.

அவ்வாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி ஒழிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://athavannews.com/நிறைவேற்று-அதிகார-ஜனாதிப/

இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி

2 hours 5 minutes ago
Maithiri.jpg இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி

இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியிடம் கொழும்பிலுள்ள ஊடகமொன்று கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்தவர்கள். ஆகையால் அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு.

ஆனாலும், இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று யாரும் கூறினாலும் அவர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். சிலர் இராணுவத்தினர் மீது வீண்பழி சுமத்தி அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு வரலாறு பாடம் புகட்டும்.

நான் ஆட்சியிலிருக்கும் வரை இராணுவத்தை நிச்சயம் பாதுகாப்பேன்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இராணுவ-வீரர்களை-ஒருபோதும/

தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

2 hours 7 minutes ago
kili2-1-720x450.jpg தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடுப்பஸ்த்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் மேற்கு 6 யூனிட்டைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியனந்தம் (28 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளமையினால், இந்த சம்பவம் கொலையாகவிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://athavannews.com/தர்மபுரத்தில்-வெட்டுக்க/

250 மில்லியன் ரூபா செலவில் யாழில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!

3 hours 48 minutes ago

250 மில்லியன் ரூபா செலவில்  யாழில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!

250 மில்லியன் ரூபா செலவில் யாழில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!

யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்வுள்ளது. 

இதுதொடர்பிவல் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தம் அலரிமாளிகையில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் கையெழுத்திட்டனர். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களும் கலந்து இதில் கலந்து கொண்டனர். 

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில் இத்திட்டமும் ஒன்றாகும். 

இந்த பூங்கா வடமாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை மேம்படுத்த உதவும். 

இவை தவிரஇ இந்திய அரசினால் அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத்தினை மேம்படுத்தும் முகமாக வடமாகாணத்தில் 46,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மானிய உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்திய அரசின் நிதியுதவியினால் இம் மாகாணத்தில் 1990 இலக்க அவசர நோயாளர் அம்புலன்ஸ் சேவைறும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களான யாழ். கலாச்சார மையம் 27 பாடசாலைகளுக்கான கட்டிடங்கள், 3000 மழை நீர் சேகரிப்பு தொகுதிகள் 600 வீடுகளைக் கொண்ட 25 மாதிரிக் கிராமங்கள் ஆகியன அமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நாடு முழுவதும் 70 ற்கும் மேற்பட்ட மக்கள நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம்

4 hours 2 minutes ago
நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம்

Maithri-Mahinda-Ranil-300x200.jpgநிறைவேற்று அதிகார அதிபர்  ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, நிறைவேற்று  அதிகார அதிபர்  ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பான கருத்துக்களை கூறுமாறும் அவர் தெரிவித்திருந்தார். அதற்கு சிலர் ஆதரவளித்தனர். சிலர் கருத்துக்களை வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், நிறைவேற்று  அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதற்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், தமது 2015 தேர்தல் அறிக்கைக்கு அமைய, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி ஒழிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சிறிலங்கா அதிபர் சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதன்போது, நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2019/02/22/news/36526

குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு?- சிறிசேன பாய்ச்சல்

4 hours 4 minutes ago
குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு?- சிறிசேன பாய்ச்சல்

parliament-300x166.jpgசிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றவாளிகளைப் பாதுகாக்கப் போகிறதா அல்லது பொதுமக்களைப் பாதுகாக்கப் போகிறதா என்று நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையை நிறுத்துவதற்கு, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாகவும், ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்தும் விவகாரம் தொடர்பாகவும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது, மைத்திரிபால சிறிசேன இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

நேற்று மீண்டும் நாடாளுமன்றத்தில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

http://www.puthinappalakai.net/2019/02/22/news/36529

வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு

4 hours 5 minutes ago
வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு

tna-300x198.jpgஎதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகிறது.

ஜெனிவாவில் வரும் திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

வரும் திங்கட்கிழமை இந்தப் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்புகள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் அமைப்புகள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை ஆதரவு அளிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை சிவில் சமூக அமைப்புகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2019/02/22/news/36531

மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்?

4 hours 7 minutes ago
மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்?

sampanthan-r-300x200.jpgஅரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான  இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார் என்றும், இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசியலமைப்பு சபையில் இரா.சம்பந்தன் இடம்பெற்றிருந்தார். மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரான பின்னர், அவர் அரசியலமைப்புச் சபை உறுப்பினரானார்.

இதனால் சம்பந்தன் அரசியலமைப்பு சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

அதேவேளை, இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசியலமைப்புச் சபை உறுப்பினராக அவரால் நியமிக்கப்பட்ட சமல் ராஜபக்ச, அரசியலமைப்பு சபையில் இருந்து விலகியுள்ளார்.

இவரது இடத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணைந்தே, புதிய உறுப்பினரை நியமிக்க வேண்டும்.

இந்த நிலையில், இந்த வெற்றிடத்துக்கு டக்ளஸ் தேவானந்தாவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, சபாநாயகரிடம் பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் பிரதமருடன் இணைந்தே பரிந்துரையை முன்வைக்க வேண்டும் என்று கூறி அதனை சபாநாயகர் கரு ஜெயசூரிய நிராகரித்து விட்டார்.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் கலந்துரையாடி, இரா.சம்பந்தனின் பெயரை முன்மொழிவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2019/02/22/news/36533

தூய்மையான அரசநிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது - மைத்திரி

8 hours ago
தூய்மையான அரசநிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது - மைத்திரி
February 21, 2019

maithri.jpg?resize=800%2C532

தூய்மையான அரச நிர்வாகத்திற்காக தன்னால் உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார்.

2015 ஜனவரி 08ஆம் திகதி தனது தேர்தல் பிரகடனத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மிகவும் தூய்மையான எண்ணத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 215 பேரின் ஆதரவுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி  நினைவுகூர்ந்தார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி   இதனைத் தெரிவித்தார்.

19வது திருத்தத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் பொறுப்புக்கள், கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் பற்றி 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அவற்றில் எந்தவொரு விடயமும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை .

சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி தான் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மிகவும் பிழையாக வியாக்கியானங்கள் செய்யப்பட்டு விமர்சிக்கப்படுவதை முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி   குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர்கள் தொடர்பில் தனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் தனக்குள்ள பிரச்சினை தன்னால் அரசியலமைப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட நீதியரசர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதே ஆகும் என்றும் ஜனாதிபதி   குறிப்பிட்டார்.

நீதியரசர் ஒருவரின் பெயர் அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்படுமானால் அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்கு அந்த நீதியரசர்களுக்கு உரிமையுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி  , தனது பதவி உயர்வை இழக்கின்ற சந்தர்ப்பத்தில் தொழிலாளி ஒருவருக்கு கூட அது பற்றி கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அந்த நீதியரசர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனத்தை கருத்திற் கொண்டும் பதவி உயர்வை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு நியாயமானதும் பக்கசார்பற்றதுமான முறைமையொன்றை ஏற்படுத்தும் நோக்குடனேயே தான் அந்த தலையீட்டை செய்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி  , பிரச்சினையை தனக்கு எதிராகவே திருப்பி தன்னைப் பற்றிய பிழையானதொரு விம்பத்தை தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்திற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிப்பது நீதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடம்பெறுமானால் அதற்காக பெயர்களை முன்வைக்கும் ஜனாதிபதிக்கு அது பற்றி அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது என்றபோதும் இதுவரையில் அந்த பெயர்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அரசியலமைப்பு சபையிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது பற்றி எந்தவொரு விடயமும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் இன்று அரசியலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி  , அரசியலமைப்புச் சபையை நடைமுறைப்படுத்தும் போது ஒரு போதும் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்படுத்தப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.

19வது திருத்தத்தின் ஊடாக உருவானவையே சுயாதீன ஆணைக் குழுக்களாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி  , அது பிழையான வழியில் செல்லுமானால் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கும் சமூகம் விரும்பும் நோக்கங்களை அடைந்துகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

உலகின் எந்தவொரு தலைவரும் மேற்கொள்ளாத வகையில் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் தனது அதிகாரத்தை தானம் செய்த இந்த யுகத்தின் ஒரே தலைவர் நானாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி  , தான் அவ்வாறு செய்தது சிறந்ததோர் அரச நிருவாகத்தை உருவாக்கும் தூய்மையான நோக்கத்திற்காகவேயாகும் என்றும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்வது பற்றிய பாராளுமன்றத்தின் தீர்மானம் எதுவானாலும் அன்று போல் இன்றும் தான் அதற்கு உடன்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2019/114023/

 

கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு பிரச்சினை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்வோம்

8 hours 2 minutes ago
கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு பிரச்சினை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்வோம்
February 21, 2019

swiss2.png?zoom=3&resize=335%2C202

723 ஆவது நாளாக தொடர்ந்து நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இன்றைதினம் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது நிலமீட்பு தொடர்பில் அரசாங்கத்தினால் ஏதாவது வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் போராட்ட காரர்களின் தற்போதைய நிலைகுறித்தும் தூதரக அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து கேப்பாபுலவு மக்களிடம் கருத்து தெரிவித்து இலங்கைக்கான சுவீஸ்தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி தான் கடந்த முறை கேப்பாபுலவு மக்களின் போராட்ட இடங்களுக்கு வந்தவேளை இந்த மக்கள் சொந்த நிலங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றதாகவும் ஒரு ஆண்டுக்கு பின்னர் தற்போது வந்துள்ள போதும் குறித்த மக்கள் தொடர்ந்து தமது சொந்த நிலத்தை கேட்டு போராடிக்கொண்டிருப்பதை நினைத்து கவலலையடைவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மக்களின் பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொண்டுள்ளதாகவும் ஏற்கனவே இந்த மக்கள் எல்லா தரப்பிடமும் தமது பிரச்சனைகளை கொண்டு சென்றும் அவர்களது நிலங்கள் விடுவிக்கப்படாமையானது துரதிஸ்டவசமானது எனவும் தெரிவித்தார்.

சுவிஸ் தூதரக அதிகாரிகள் கேப்பாபுலவுக்கு சென்றிருந்த வேளையில் அரச புலனாய்வாளர்கள் போராட்ட இடத்தின் சுற்றிலும் நின்று அவதானிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

swiss.png?resize=652%2C431

 

http://globaltamilnews.net/2019/114019/

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

8 hours 3 minutes ago
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

February 21, 2019

 

TNPF-LOGO.png?zoom=3&resize=335%2C209

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி நடாத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு மற்றும் கவனீயர்ப்பு பேரணிக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக தமது உறுவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவரும் உறவுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசானது அவ்வப்போது சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்களை விசாரிப்பதற்காகவென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ராஜபக்ச அரசு மட்டுமல்ல ரணில் மைத்திரி அரசும் கூட நடைமுறைப்படுத்த தயாரில்லை என்பதனை கடந்த நான்கு ஆண்டுகளில் தெளிவாக நிரூபித்துக்காட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2017 மார்ச் மாத்தில் சர்வதேச கண்காணிப்பை நீடித்தில் என்ற போர்வையில் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு வரும் மார்ச் மாதம் முடிவடைகின்றது. இந் நிலையில் தமிழ் தலைமைகளின் சம்மதத்துடன் எதிர்வரும் பங்குனி மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை நீடித்தல் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானமானது ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே வழிவகுக்கும் என்பதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் குடும்பங்களுக்கும், போரில் பாதிக்கப்பட்ட ஏனைவர்களுக்கும் நீதி கிடைக்கவிடாது தடுப்பதாகவுமே அமையும்.

எனவே இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகளை ஐ.நா பாகாப்புச் சபை ஊடாக சர்வதே குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படல்  வேண்டுமென வலியுத்தி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக பொது நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடியும், பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியும் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

திகதி: 25.02.2019 (திங்கட்கிழமை)
நேரம்: காலை 8.30 மணி
இடம்: கிளி-கந்தசுவாமி ஆலய முன்றல்
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்

 

http://globaltamilnews.net/2019/114017/

 

‘மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்’

15 hours 53 minutes ago

செ.கீதாஞ்சன்

மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம் என கேப்பாபுலவு மக்களை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கேப்பாபுலவு மக்கள் இன்று (21) தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நந்திகடல் ஏரிக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுள்ள படையினர் அக்காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றார்கள். போர் இறுதியாக நடைபெற்ற கரையோர பகுதிகளில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.

அத்துடன் மக்கள் வாழ் இடங்களில் உள்ள பல கிணறுகளை படையினர் மூடியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணறுகள் இருந்த இடங்கள் தெரியாதவாறும் மூடியுள்ளார்கள். தற்போது போராட்டம் இடம்பெறும் கொட்டிலுக்கு அருகிலும் கிணறு ஒன்று இருந்தது. ஆனால் இப்போது அதுகூட இல்லை. விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த 25ற்கும் மேற்பட்ட கிணறுகளை படையினர் இடம் தெரியாதவாறு மூடியுள்ளார்கள்.

இது எங்களுக்கு சந்கேத்தினை ஏற்படுத்தியுள்ளது இறுதிப்போரின்போது மன்னார் மனித புதை குழிபோன்று ஏதாவது புதைகுழிகளை அல்லது தடயங்களை கிணறுகளில் இட்டு மூடியுள்ளனரா என சந்தேகம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

http://www.tamilmirror.lk/வன்னி/மன்னார்-புதைகுழி-போன்று-கேப்பாபுலவிலும்-புதைகுழிகள்-இருக்கலாம்/72-229895

ராணுவத்தினர் சில சந்தர்ப்பங்களில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் - சரத் பொன்­சேகா

15 hours 55 minutes ago

இரா­ணு­வத்­தி­னர் அனை­வ­ரும் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை. அவர்­க­ளில் சிலர் மட்­டும் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­னர். இரா­ணு­வத்­தி­னர் எந்­தச் சந்­தர்ப்­பங்­க­ளி­லும் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை என்று கூற முடி­யாது.

போர்க்­குற்­றம் புரிந்த இரா­ணு­வத்­தி­ன­ரைப் பாது­காப்­ப­தற்கு ராஜ­பக்ச அணி­யி­னர் அன்­றும் முயற்சி செய்­தார்­கள் இன்­றும் முயற்சி செய்கிறார்கள். இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ரின் நற்­பெ­யரை பன்­னாட்டு மட்­டத்­தில் நாம் பாதுகாக்க வேண்­டும். குற்­றம் செய்­த­வர்­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும்.

இவ்­வாறு தெரி­வித்­தார் முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ‘பீல்ட் மார்­சல்’ சரத் பொன்­சேகா.
இரா­ணு­வத்­தி­னர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும், முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும், இறு­திப் போரின்­போது கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் நிகழ்ச்­சின் நிர­லின் பிர­கா­ரம் செயற்­பட்டு போர் நிறை­வ­டைந்த பின்­னர் இரா­ணு­வத் தள­ப­தி­யா­கப் பொறுப்­பேற்ற ஜகத் ஜய­சூ­ரி­ய­வும் முழுப் பொறுப்பு.

இறு­திப்­போ­ரின்­போது இரா­ணு­வத்­தின் பிர­தான தள­ப­தி­யாக நானே இருந்­தேன். பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ராக கோத்­த­பாய ராஜ­பக்ச இருந்­தார். அரச தலை­வ­ராக மகிந்த ராஜ­பக்ச இருந்­தார். போரை விரை­வில் முடி­வுக்­குக் கொண்­டு­வர கோத்­த­பாய ராஜ­பக்ச ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்­தி­ருந்­தார். அந்த நிகழ்ச்சி நிர­லுக்கு மகிந்த ராஜ­பக்ச அனு­மதி வழங்­கி­யி­ருந்­தார். ஆனால், நான் எனது சுய­புத்­தி­யில் செயற்­பட்­டேன். போரில் பெரும் வெற்­றியை நாட்­டுக்­குப் பெற்­றுக்­கொ­டுத்­தேன்.

எனி­னும், கோத்­த­பாய ராஜ­பக்ச தான் தயா­ரித்த நிகழ்ச்சி நிரலை இறு­திப் போரின்­போ­தும் போர் நிறை­வ­டைந்த பின்­ன­ரும் மறை­மு­க­மாக நடை­மு­றைப்­ப­டுத்தி இருந்­தார். இதற்கு இரா­ணு­வத் தள­ப­தி­க­ளில் ஒரு­வ­ராக இருந்த ஜகத் ஜய­சூ­ரிய முழுப் பங்­க­ளிப்பு வழங்­கி­னார்.

இவர்­கள் இரு­வ­ரி­ன­தும் இந்­தச் செயற்­பா­டு­க­ளி­னால் போரின் இறு­தி­யின்­போ­தும் அதன் பின்­ன­ரும் சில குற்­றங்­கள் இடம்­பெற்­ற­தாக எனக்­குத் தக­வல் கிடைத்­தது. இரா­ணு­வத்­தி­னர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மகிந்த ராஜ­பக்­ச­வும், கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும், ஜகத் ஜய­சூ­ரி­ய­வும் பொறுப்­புக்­கூற வேண்­டும்.

அதை­வி­டுத்து கிளி­நொச்­சி­யில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க போர்க்­குற்­றம் தொடர்­பில் தெரி­வித்த கருத்தை இவர்­கள் விமர்­ச­னம் செய்­கின்­றார்­கள். தலைமை அமைச்­ச­ரின் கருத்தை விமர்­சிப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு எந்த அரு­க­தை­யும் இல்லை – என்­றார்

https://newuthayan.com/story/10/ராணுவத்தினர்-சில-சந்தர்ப்பங்களில்-போர்க்-குற்றங்களில்-ஈடுபட்டார்கள்.html

இராணுவத்தினருடன் போரிட்ட புலிகளை மன்னித்துவிட்டோம், தமிழர்கள்தான் இனி இறங்கிவரவேண்டும்

15 hours 56 minutes ago

படையினருக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிக்கப்பட்டனர். நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். தமிழர் தரப்பிலிருந்துதான் கூடுதல் பங்களிப்பு அவசியமாகவுள்ளது. இவ்வாறு முன்னாள் வான்படைத் தளபதி எயார் சீப் மார்சல் ரொசான் குணதிலக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

போர் முடிவடைந்தப் பின்னர், புலி உறுப்பினர்கள் மறுவாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு புலி உறுப்பினர்கள் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ள, இத்தகைய செயற்பாடுகளை தமிழர் தரப்பு வரவேற்கவேண்டும்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரிவரசெய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடைய வேண்டுமென்றால், தமிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.

போர்காலத்தில் எனது தம்பி, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அதற்காக நான் தமிழ் மக்களுடன் முரண்படவில்லை. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர் – என்றார்.

https://newuthayan.com/story/10/இராணுவத்தினருடன்-போரிட்ட-புலிகளை-மன்னித்துவிட்டோம்.html

கடற்­ப­டை­யி­ன­ரின் ஏட்­டிக்கு போட்­டி­யான கைது­க­ளால் இந்­திய -– இலங்கை கடலில் நேற்றுமுன்தினம் பதற்றம்

15 hours 57 minutes ago

இலங்கை – இந்­தி­யக் கடல் எல்­லை­யில் இரு நாட்­டுக் கடற்­ப­டை­யி­ன­ரும் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இரு நாட்டு மீன­வர்­க­ ளை­யும் நடுக் கட­லில் கைது செய்­த­மை­யால் கடற்­ப­ரப்­பில் நேற்­றுமுன்தினம் பதற்­றம் ஏற்­பட்­டது.

இலங்கை– இந்­தி­யக் கடற்­ப­டை­யி­னரால் நேற்றுமுன்தினமிரவு இரு நாடு­க­ளுக்­குள்­ளும் அத்­து­மீறி நுழைந்து மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் மீன­வர்­க­ள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலை­யில் இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட 13 இந்­திய மீன­வர்­கள் காங்­கே­சன்துறை கடற்­படை முகா­முக்கு நேற்­றுக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர். அவர்­கள் யாழ்ப்­பா­ணம் நீரி­யல்­வ­ளத் துறைத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

அதே­நே­ரம் இந்­திய மீன­வர்­க­ளால் 16 இலங்கை மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இந்த ஏட்­டிக்­குப் போட்­டி­யான கைது­க­ளால் இரு­நா­டு­க­ளின் கடற்­ப­ரப்­பில் நேற்­றுப் பதற்­றம் இருந்­தது.

https://newuthayan.com/story/10/கடற்­ப­டை­யி­ன­ரின்-ஏட்­டிக்கு-போட்­டி­யான-கைது­க­ளால்-இந்­திய-இலங்கை-கடலில்-நேற்றுமுன்தினம்-பதற்றம்.html

ஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி

15 hours 59 minutes ago

(ஆர்.விதுஷா)

அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோர் வெலிகடை சிறைச்சாலை வைத்திய சாலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்தனர்.

welikada.jpg

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கோரி பொது பலசேனா அமைப்பினால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

vealikada.jpg

அத்துடன் இதன்போது ஜனாதிபதி கொலை சதி விகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் துமிந்த சில்வா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/50429

"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்"

16 hours ago

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அரசியலமைப்பு பேரவையில் குறைபாடுகள் இருந்தால் அதனை திருத்திக்கொண்டு நீதிமன்ற சுயாதீனத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

rajitha_0ct2.jpg

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பேரவை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

http://www.virakesari.lk/article/50432

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்

16 hours 12 minutes ago

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
petrol-bomb.jpg?zoom=1.3224999725818633&
யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹயஸ் ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன. குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை நால்வர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அண்மைக்காலமாக வீடுகளின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலைமை ஏற்பட்டு உள்ளது.

அதேவேளை , கொக்குவில் சம்பவத்தின் பின்னர் காவல்துறை விசேட குழுக்கள் தீவிர விசாரணைகளிலும் வீதி சோதனை நடவடிக்கைகைகளிலும் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/113983/

கிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா

16 hours 14 minutes ago

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

GP1.jpg?zoom=1.3224999725818633&resize=7

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா நாளையதினம்(22) இரண்டாவது தடவையாக மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் 40 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த பசுமை பூங்கா கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அதே பசுமை பூங்காவினை நாளைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் பாட்டளி  சம்பிக்க ரணவக்கவும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டபோதும் கரைச்சி பிரதேச சபை நிதி பல ஆயிரம் ரூபாக்கள் நிகழ்வுக்கு செலவு செய்யப்பட்டது. அவ்வாறே நாளைய தினமும் நகர அ பிவிருத்தி அதிகார சபையின் நிதி பல ஆயிரம் செலவு செய்யப்பட்டு விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

 IMG_1187.jpg?zoom=1.3224999725818633&res

 

இந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம் - ஜனாதிபதி

16 hours 15 minutes ago
 
February 21, 2019

maithri-1.jpg?zoom=1.3224999725818633&re
போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் சாதகமான பெறுபேறுகளை இந்த வருட நடுப்பகுதியளவில் மக்களும் அரசாங்கமும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விரிவான செயற்திட்டங்களே அதற்கு காரணம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (21) முற்பகல் ஹம்பாந்தோட்டை மாவட்ட நிர்வாக கட்டிடத் தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற கிராமசக்தி இயக்கத்தின் தென் மாகாண செயற்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ;, வறுமையால் துயரப்படும் மக்களை அதிலிருந்து விடுவித்து, அவர்களது உற்பத்திகளை பொருளாதார ரீதியில் அதிகரிப்பதே கிராமசகதி மக்கள் இயக்கத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் உள்ளிட்ட மக்களை வறுமை நிலைக்கு இட்டுச் செல்லும் அனைத்து சூழ்நிலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி பலமான பொருளாதாரத்துடன் தன்னிச்சையாக, முன்னேற்றமடைந்த ஒரு தேசத்தை உருவாக்குவதற்காக கிராமசக்தி மக்கள் இயக்கத்தினூடாக பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ; தெரிவித்தார்.

கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நுண்கடன் தொடர்பிலும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

Checked
Fri, 02/22/2019 - 06:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr