அரசியல் அலசல்

உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

1 day 3 hours ago


 உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

ஐ நாவும் அனைத்து சமாதான இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு பின் இனி வேண்டாம் யுத்தம் உலகில் என்று தானே ஆரம்பித்தார்கள். அதன் பின் எத்தனை யுத்தம் உலகில் நடந்தன, நடக்கின்றன, எத்தனை மனிதர் இது வரை இறந்தனர், எத்தனை குழந்தைகள் வாழ்வை இழந்தனர், எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டன. எத்தனை ஆக்கிரமிப்பு யுத்தங்கழும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களும் உலகில் நடந்தன. 

இன்று ருசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக இதை தீர்க்க முடியாமல் அவர் அவர் பூகோள அரசியல் நலன் சார்ந்து பெரும் ஆயத மோதலாக வெடித்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பின் ஐரோப்பாவுக்கு பெரும் சவால் மிக்கதாகவும் அவர்கள் பொருளாதாராத்தையே அசைக்க கூடியதோர் யுத்தமாக மாறி இருக்கிறது. ரோமானிய பேரரசின் தத்துஞானி சீசரோ(Cicero) கூறியதுபோல் யுத்த காலங்களில் சட்டமும் ஒழுங்கும் அமைதியாகவே இருந்து விடுகின்றன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின் இன்று ஐரோப்பா பெரும் யுத்தம் ஒன்றை எதிர் நோக்கியுள்ளது. இன்று நாம் புதிய ஒரு பனிப் போரையும் அரசியல் பொருளாதார சித்தாந்த ரீதியாகவும் அத்தோடு ஏழை பணக்கார நாடுகளாகவும் முகாம்களாக பிரிக்கப்பட்ட உலகையும் இன்னும் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி உலகம் பயணிப்பதையும் பார்க்கிறோம்.

Harvard University அரசியல் பேராசிரியர் Joseph nye என்ற சர்வதேச அரசியல் ஆய்வாளர் சொல்லுவது போல் உலகம் இன்று பல முகாம்களாக பிரிக்கப்பட்டு ஆயத அதிகார அரசியல் பொருளாதாரப் போட்டியாக மாறி இருக்கின்றது. இந்தப் போட்டி நிலைமையும் யுத்த நிலைமையையும் தணிக்க வேண்டுமானால் கடினமான ஒரு பாதையை (Hard power) தெரியாமல் ஒரு மென் வலு சக்தி (Soft power) ஊடக உலக மோதல்களை தணிக்க முடியும் என தான் எழுதிய (Soft power) என்னும் நூலில் விபரமாக முன் வைக்கிறார்.

ஏழை நாடுகளின் குழந்தைகள் இறந்தால் எவரும் கேட்பதற்கு இல்லை ஆனால் அதிகாரமும் பணமும் உள்ள நாடுகளின் குழந்தைகள் இறந்தால் அனைவரும் கேட்கிறார்கள். யுத்தற்திற்காகவும்  ஆயுதம் செய்வதும் விற்பதுமாகவும் எத்தனை கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.ஆனால் இன்று உலகில் எத்தனை வறிய நாடுகள் இருக்கின்றன. எத்தனை குழந்தைகள் இன்று உலகில் உணவு இல்லாமலும் ஒரு வேளை உணவு கிடைக்காமலும் இறந்து போகிறார்கள். எல்லோருக்கும் எல்லாமே சமத்துவமாய் கிடைப்பதில்லை இன்னும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாக அதிகார வர்க்கத்தின் நலனோடு உருளுதே உலகம். ஐ நா வாக இருந்தால் என்ன ஆயிரம் சமாதானம் பேசும் ஸ்தாபனங்களாக இருந்தால் என்ன எல்லாமே அதிகாரமுள்ள பணபலமும் ஆயுத பலமும் கொண்ட நாடுகளில் நிகழ்ச்சி நிரலிலேயே செயல்படுகின்றன. 

புவிசார் அரசியல் என்பது இன்று பெரும் போட்டி அரசியல் களமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரமும் கூட இன்று ஓர் சவால் மிகுந்ததாகவே காணப்படுகிறது. பெரும் தனி நலன் சார்ந்து அரசியல் பொருளாதர ரீதியாக உலகம் பல முகாம்களாக பிரிக்கப் பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தற்திற்காக பெரும் கோடி பணத்தை செலவு செய்கிறார்கள் இதனால் பொருளாதார ரீதியாக பணவீக்கம் கூடி உலக மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமக்கிறார்கள். ஏழை நாடுகள் மேலும் வறுமைக்கோட்டுக்குள் கீழ் தள்ளப்பட்டுள்ளன. பல கோடி ஏழை மக்கள் இன்று ஒரு வேளை உணவுக்கே திண்றாடும் நிலை தோன்றியுள்ளது. கொரோனா வருகைக்கு பின் ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவின் பின் இன்றும் நிலைமை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகார நலனும் அரசியல் பொருளாதார சுயநலனும் ஆயுத விற்பனையும் தொடரும் வரையில் உலக அமைதி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. ஐ நா கூட அவர்களின் கைப் பொம்மை ஆகிவிட்டது. எல்லாமே சும்மா பேச்சுக்கு தான் மனித உரிமையும் ஜனநாயகமும் என்றாகிப் போய் விட்டது. எங்குதான் இருக்கிறது அறமும் தர்மமும். சரித்திரங்களில் இருந்து மனிதர் பாடத்தை கற்க வேண்டும் இரண்டாம் உலகப் போரில் இருந்து பாடத்தை அனுபவத்தை உலகம் இன்னும் படிக்கவில்லையானால் இன்னும் இருண்ட யுகமாகவே உலகம் இருக்கும். உலக சமாதானம் என்பது வெறும் பேச்சாகத் தான் இருக்க முடியுமே தவிர இது சாத்தியமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. யுத்தத்தை ஆரம்பிப்பதும் கடினம் இதை முடிவுக்கு கொண்டு வருவதும் கடினம்.

In times of war, the law falls silent”
-Cicero

பா .உதயன் ✍️


 

 

 

 

 

ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி

1 day 9 hours ago
‘ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி  

 

image_20a1f57a11.jpg

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி ஓடினீர்கள்...” என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. 

அண்மையில் கூட, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கூட, அது தொடர்பிலான விவாதங்களின் போது, முன்னாள் போராளிகளை நோக்கி, “நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை; குப்பி கடிக்காத நீங்கள் எல்லாம் முன்னாள் போராளிகள் என்று சொல்லிக் கொள்ளும் அருகதை ஆற்றவர்கள்...” என்ற மாதிரியான வாதங்களை முன்வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘ஏன் குப்பி கடிக்கவில்லை’ என்ற கேள்வி கேட்கப்படும் போதெல்லாம், ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்டளவான தரப்புகளிடம் ‘குற்ற உணர்ச்சி’ என்கிற, மனிதனின் அடிப்படை பகுத்தறிவுசார் உணர்வு இல்லை என்ற உண்மை, முகத்தில் அறையும். 

அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் சமூகத்துக்குள், இவ்வாறான தரப்புகள் இருப்பது என்பது, தமிழ்ச் சமூகத்தின் பெரும் சாபக்கேடு. ஏனெனில், ‘குற்ற உணர்ச்சி’தான் மனிதனை விலங்குக் கூட்டத்திலேயே மேன்மையான இடத்தில் வைப்பதற்கான காரணங்களில் முக்கியமானது. 

காடுகளில் இருந்து நீர்நிலைகளின் கரைகளின் வழியாக, மனித நாகரிகம் வளர்ந்து வந்த போது, சமூகங்களாக வாழ்வதற்கான உந்துதல்களில் ‘குற்ற உணர்ச்சி’ என்கிற உணர்வும், முக்கிய இடத்தை வகித்தது.

‘குற்ற உணர்ச்சி’ இல்லையென்றால், மனித இனம் எப்போதோ தங்களுக்குள் அடித்துக் கொண்டு முழுவதுமாக அழிந்து போயிருக்கும். ‘குற்ற உணர்ச்சி’யே, மனிதனை இன்றைய ஓரளவான நாகரிக ஒழுங்குகளுக்குள் கொண்டு வந்து சேர்த்தது.

முள்ளிவாய்க்கால் முடிவு, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பின்னடைவு. இந்தப் பெரும் பின்னடைவில்  இருந்து மீண்டெழுவதற்கு, எவ்வளவுதான் சிரத்தை எடுத்துச் செயற்பட்டாலும், இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். இதனை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் உணர்ந்து கொண்டிருக்கின்றது. 

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவு விட்டுச் சென்ற ‘முன்னாள் போராளிகள்’ எனும் அடையாளம் கொண்ட இன விடுதலை வீரர்களை, தீண்டத்தகாதவர்களாக தமிழ்ச் சமூகம் நோக்கி வருகின்றது. 

ஆயுதப் போராட்டங்களின் வீழ்ச்சி, போர்க் கைதிகளை, முன்னாள் போராளிகளை உலகம் பூராவும் பல சந்தர்ப்பங்களில் உருவாக்கி இருக்கின்றது. போராடிய அனைவரும் போர்க்களத்தில் மாண்டு வீழ்வதில்லை; அது நிகழவும் வாய்ப்பில்லை. 

அதுபோல, போராடச் சென்றவர்கள், போராட்டம் தோல்வியடைந்தால், உயிருடன் திரும்பக் கூடாது என்று நினைப்பதெல்லாம் மிருகத்தனமான உணர்வு. அதுதான் ‘குற்ற உணர்ச்சி’ அற்ற நிலை. அதனால்தான், முன்னாள் போராளிகளை நோக்கி, அரச உளவாளிகள் என்கிற அடையாளமும் “ஏன் குப்பி கடிக்கவில்லை” என்ற கேள்வியும் முன்வைக்கப்படுவதற்கு காரணமாகும்.

அதிக தருணங்களில், முன்னாள் போராளிகளை நோக்கி, இவ்வாறான கேள்விகளை முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் எந்தவித பங்களிப்பும் செய்யாமல், பவ்வியமாக பாடசாலைக்கும் தனியார் வகுப்புகளுக்கும் சென்று, தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை இட்டவர்கள். அல்லது, யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ பெற்றோரோடு பாதுகாப்பாக இருந்து கொண்டு, புலம்பெயரும் கனவைச் சுமந்தவர்கள். பாடசாலைகளிலோ, தனியார் வகுப்புகளிலோ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பு கூட்டங்களை கேட்கக்கூட தயங்கியவர்கள். அந்தச் சந்தர்ப்பங்களில் மதில், வேலிகள் பாய்ந்து ஒழுங்கைகளுக்குள்ளால் வீடுகளுக்கு ஓடியவர்கள். 

இவர்களை ஒத்தவர்கள் போராட்டக்களத்தில் இருக்கின்ற போது, இவர்கள் பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொண்டிருந்தார்கள்; அல்லது, புலம்பெயரும் முயற்சிக்காக கொழும்பில் நின்றவர்கள். இவர்களோ, இவர்களின் பெற்றோரோ ஆயுதப் போராட்டத்தையோ, அதனை இறுதி வரை நடத்திய விடுதலைப் புலிகளையோ, மனதுக்குள் நாள்தோறும் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தவர்கள்.

ஆனால், புலிகளின் வீழ்ச்சி, போராட்டக்காலங்களில் ஒளித்து ஓடியவர்களை எல்லாம், திடீர் தமிழ்த் தேசிய போராளிகள் ஆக்கிவிட்டது. அவர்களில் அதிகமானவர்கள்தான், முன்னாள் போராளிகளை நோக்கி ‘துரோகிகள்’, ‘காட்டிக்கொடுப்பாளர்கள்’ என்கிற அடையாளங்களைச் சூட்டுகிறார்கள். 

வாழ்வை வளமாக்க வேண்டிய வயதில், இனவிடுதலைப் போராட்டத்துக்காக தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து, தெய்வாதீனமாக உயிர் மீண்டிருக்கின்ற முன்னாள் போராளிகள், இன்றைக்கு வாழ்வதற்தே வழியில்லால் இருக்கிறார்கள். 

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர், 13 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், முன்னாள் போராளிகளை தமிழ்ச் சமூகம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவர்களின் வாழ்வாதாரம், குடும்பம் பற்றியெல்லாம் எந்த உரையாடலும் தமிழ்ச் சூழலில், எந்தவொரு தரப்பாலும் முன்னெடுக்கப்படவில்லை. ‘குற்ற உணர்ச்சி’யுள்ள சமூகமாக இருந்திருந்தால், இதுவெல்லாம் நிகழ்ந்திருக்கும்; முன்னாள் போராளிகளை ஏறெடுத்துப் பார்த்திருக்கும். 

(இந்தப் பத்தியாளரும், ஆயுதப் போராட்டம் நீடித்த காலத்தில், போராடும் வயதை அண்மித்துவிட்ட ஒருவர்; ஆனால், எதிர்கால வாழ்வு பற்றிய பயத்தால், ஆயுதப் போராட்டத்தின் திசைப் பக்கமே திரும்பவில்லை.  எனினும், ‘குற்ற உணர்ச்சி’ என்கிற விடயம், முன்னாள் போராளிகள் பற்றிய எண்ணங்களின் போது, பிடரியில் தட்டுவதுண்டு. அதுதான், அவர்களை நோக்கி எந்தவொரு தருணத்திலும், தகுதியற்ற வார்த்தைகளை உதிர்ப்பதைத் தடுக்கின்றது.)
முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல், கட்சிகளிடம் முழுவதுமாகச் சென்று சேர்ந்துவிட்டது. கட்சிகளிடம் போராடும் இனமொன்றின் அரசியல் முழுவதுமாகச் சென்று சேர்ந்தால், அது ஆபத்தான கட்டங்களைத் திறந்துவிடும். 

அதுவும், அதிகார ஆசையோடும் பதவி வெறியோடும் இருக்கின்ற கட்சிகளிடம், ஓர் இனத்தின் அரசியல் சென்று சேர்ந்தால், அது அதிக தருணங்களில் அபத்தமான கட்டங்களையே கொண்டுவந்து சேர்க்கும். இன்று, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இயங்கிக் கொண்டு இருக்கின்ற கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அது புரிந்துவிடும். 

ஆயுதப் போராட்ட காலத்தில் புலிகளுக்குப் பயந்து, பணிந்து இயங்கிய கட்சிகள் எல்லாம், புலிகளின் வீழ்ச்சிக்குக் காத்திருந்தது போலவே, இப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது, புலிகள் மீதான போலி விசுவாசத்தை வெளியில் காட்டிக்கொண்டு, தங்களின் கட்சி அரசியலை வளர்ப்பதற்கான கட்டங்களை மாத்திரமே முன்னின்று நடத்தி வருகின்றன. 

அதற்காக, புலிகளின் மாவீரர் தினம், தியாகி திலீபன் நினைவு நாள்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான், ஜீரணிக்க முடியாத விடயம்.

தேர்தல் அரசியலை நோக்கி, முன்னாள் போராளிகளில் சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகையை எந்தவொரு தருணத்திலும் தமிழ்த் தேசிய கட்சிகள் இரசிக்கவில்லை. வேண்டுமென்றால், அவர்களைக் காட்டி, தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்கே தயாராக இருக்கின்றன. 

ஆனால், தேர்தல் அரசியலை நோக்கி வந்த முன்னாள் போராளிகள், அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதையோ, நினைவேந்தல்களை கட்சிகள், அமைப்புகள் கைப்பற்ற முயற்சிப்பதையோ கேள்விக்கு உள்ளாக்கினால், அவர்களை நோக்கி, ‘குப்பி கடிக்காதவர்கள்’; ‘இனத் துரோகிகள்’; ‘இவர்களுக்கு தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இடமில்லை’ போன்ற விடயங்கள் பேசப்படுகின்றன. 

தேர்தல் அரசியலை நோக்கி வந்த முன்னாள் போராளிகளும் கூட, தமிழ் மக்களின் பொது நிலைவேந்தல்களாக கொள்ளப்படக் கூடிய எதையும் தனித்து, தமக்கானது என்று உரிமை கோரத் தேவையில்லை; அது ஏற்புடையதும் இல்லை. அவ்வாறான சிந்தனையுடையவர்கள் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.

முன்னாள் போராளிகளை நோக்கி, ‘ஏன் குப்பி கடிக்கவில்லை’ என்ற கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் பெரும்  அவமானச் சின்னங்கள். 

ஏனெனில், அவர்களிடம் ‘குற்ற உணர்ச்சி’ என்ற மனிதனுக்கு அவசியமான உணர்வு இருக்க வாய்ப்பில்லை. 

‘குற்ற உணர்ச்சி’யும் அதுசார் மனித இயக்கமும் இல்லாத யாரும், போராடும் சமூகங்களில் இருக்க முடியாது. நீதிக்கான கோரிக்கைதான், போராட்டங்களில் அடிப்படை. அதனை உணர்ந்து கொள்வதற்கு ‘குற்ற உணர்ச்சி’ மிகவும் அவசியமானது.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஏன்-குப்பி-கடிக்கவில்லை-எனும்-அச்சுறுத்தும்-கேள்வி/91-305366

பாடசாலைகளில் போதைப்பொருள்: யாருடைய தவறு? - நிலாந்தன்

1 day 14 hours ago
பாடசாலைகளில் போதைப்பொருள்: யாருடைய தவறு?
பாடசாலைகளில் போதைப்பொருள்: யாருடைய தவறு?

தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் சமூகவலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.என்னவெனில், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்க முடியாதிருப்பதன் விளைவுதான் இது போன்ற சீரழிவுகள் என்ற தொனிப்பட பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள், சட்டவாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் அவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.ஆசிரியரின் கையில் இருந்த பிரம்பு பறிக்கப்பட்டதால்தான் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் பாடசாலை மட்டத்துக்கு பரவியுள்ளன என்று ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்.கல்வியதிகாரிகளுக்கும், அதிபர் ஆசிரியர்களுக்கும் வகுப்பெடுக்கும் உயரதிகாரிகள் மாணவர்களைத் தண்டிக்கக்கூடாது என்று கூறிவிட்டு இப்பொழுது போதைப்பொருள் பாவனை தொடர்பான புள்ளி விபரங்களை ஒப்புவிக்கிறார்கள் என்று வேறொரு குறிப்பு கூறுகிறது. இந்தக்கருத்துக்கள் எல்லாமே தொகுப்பாக கூறவருவது ஒரு விடயத்தைத்தான். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், பிள்ளைகளைக் கடுமையாகத் தண்டித்தால் இதுபோன்ற விடயங்களை கட்டுப்படுத்தலாம் என்பதுதான்.

பாடசாலைகளில் மாணவர்கள் மீது உடல்ரீதியாக அல்லது உளரீதியாக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் 17ஆம் இலக்க சுற்றுநிருபம் 2005ஆம் ஆண்டு கல்வியமைச்சால் வெளியிடப்பட்டது. அப்பொழுது கல்வியமைச்சின் செயலாளராக கலாநிதி.தாரா டி மெல் இருந்தார். அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 23 ஆம் இலக்கச் சட்டத்தின்படி நீதிமன்றங்களில் சரீரத் தண்டனைகள் நிறுத்தப்பட்டதன் விளைவே மேற்படி சுற்றுநிருபம் என்று கூறப்படுகிறது.மேற்படி சுற்றுநிருபமானது 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 12 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் மீளவலியுறுத்தப்படுகிறது. இந்தச்சுற்றுநிருபமானது ஆசிரியர்களின் கைகளைக் கட்டிப்போடுகிறது என்ற ஒரு விமர்சனம் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் ஏன் பெற்றோர் மத்தியிலும்கூட உண்டு.

கண்டிப்பான ஆசிரியரே நல்லாசிரியர் என்று அபிப்பிராயம் தமிழ்மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.கண்டிப்பான ஆசிரியர்களே வெற்றி பெற்ற ஆசிரியர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.நாட்டில் உள்ள கல்வி முறையானது பரீட்சையை மையமாகக் கொண்டது.பரீட்சை மையக் கல்வியைப் பொறுத்தவரை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பவரே கெட்டிக்கார ஆசிரியர். அந்த சிறந்த பெறுபேறுகளை அவர் எப்படியும் பெற்றுக் கொடுக்கலாம் என்று பெரும்பாலான பெற்றோர் கருதுகிறார்கள்.இதனால் சிறந்த கல்விப் பெறுபேறுகளுக்காக அதிகம் பலியிடப்படுவது மனித உரிமைகள் என்பதனை பெரும்பாலான பெற்றோர் பொருட்படுத்துவதில்லை. அதனால் தேசியமட்ட பரீட்சைகளை நோக்கி மாணவர்களை தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன.

இப்படிப்பட்டதோர் கல்விச்சூழலில் தண்டனை நிறுத்தப்பட்டதால் பிள்ளைகள் மத்தியில் போதைப்பொருள் அதிகரிக்கிறது என்ற கூற்று மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தோன்றும்.சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் கஞ்சா பாவிக்கும் தனது 15 வயது மகனை அவருடைய தாயார் வீட்டில் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அவருடைய கண்களுக்குள் மிளகாய்தூளைத் தூவினார்.இது ஊடகங்களில் பரவலாக வெளிவந்தது. இது போன்ற தண்டனைகள்மூலம்தான் மாணவர்களை மட்டுமல்ல பாடசாலை நீங்கிய இளையவர்களையும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்தையும் கட்டுப்படுத்தலாம் என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு.

ஆனால் தனியே தண்டனைகளால் மட்டும் இந்த விவகாரத்தை கையாள முடியாது.ஏனெனில் பிரச்சினையின் வேர்கள் மிகஆழமானவை.அந்த வேர்களைத் தேடிப்போனால் யாரைத் தண்டிப்பது என்ற கேள்வி எழும். நுகர்வோரை தண்டிப்பதா?அல்லது விற்பனையாளர்களைத் தண்டிப்பதா?அல்லது திட்டமிட்டு மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வலைப்பின்னலைக் கட்டியெழுப்பும் அரசியல் உள்நோக்கமுடைய சக்திகளைத் தண்டிப்பதா? யாரைத் தண்டிப்பது?

இந்தப்பிரச்சினையின் சமூகப்பொருளாதார,அரசியல் பின்னணி மிகஆழமானது. 2009 க்குப் பின்னரான தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, முதலாவதாக, தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று நிலவுகிறது.

இரண்டாவதாக ,உலகில் அதிகம் படைமயமாக்கப்பட்ட ஒரு அரசியல் ,இராணுவ சூழலுக்குள் தமிழ்ச்சமூகம் வாழ்கிறது. நாட்டின் படைக்கட்டமைப்பின் மொத்த தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு= கிழக்கில் காணப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் உண்டு.

மூன்றாவதாக ,மேற்சொன்ன இராணுவ மயப்பட்ட சூழல் காரணமாக படைத்துறை புலனாய்வாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ்ச்சமூகம் காணப்படுவது.

நாலாவதாக, ஆயுத மோதல்களுக்கு முன்னிருந்த ஒரு சமூகக் கட்டமைப்பு குலைந்து போய்விட்டது.ஆயுதப் போராட்டம் புதிய விழுமியங்களையும் ஒரு புதிய சமூக ஒழுங்கையும் உருவாக்க முற்பட்டது. 2009 இல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,ஏற்கனவே இருந்த சமூகக் கட்டமைப்பும் குலைந்து இடையில் ஆயுதப் போராட்டம் கொண்டு வந்த புதிய ஒழுங்கும் குலைந்து, இப்பொழுது ஏறக்குறைய எல்லாச் சமூகக் கட்டமைப்புகளும் குலைந்துபோன ஒரு நிலை காணப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் விழுமியங்களை மீளுருவாக்க வேண்டிய ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறியிருக்கிறது.

ஐந்தாவது ,உலகளாவிய தகவல் தொழில்நுட்பப் பெருக்கத்தின் விளைவாக இளைய தலைமுறை கைபேசி செயலிகளின் கைதியாக மாறியிருப்பது.

மேற்கண்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும்.தமிழ்மக்களைத் தொடர்ந்தும் அரசியல்ரீதியாக தோற்கடிக்க விரும்பும் சக்திகள் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் போதைப்பொருள் வலைப்பின்னலை அவர்களே நிர்வகிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை தமிழ் அரசியல்வாதிகள் ஏன் முன்வைத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்

எனவே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது என்பது தனியே தண்டனைகளால் மட்டும் சாத்தியமான ஒன்று அல்ல.அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமைய வேண்டும்.

முதலாவதாக,சமூகப் பிரதிநிதிகள்,மக்கள் பிரதிநிதிகள்,மருத்துவர்கள் செயற்பாட்டாளர்கள்,மதப் பெரியோர்கள்,புத்திஜீவிகள்,கலைஞர்கள், ஊடகங்கள் என்று எல்லாத் தரப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக அதை முன்னெடுக்க வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் தலைமைதாங்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் பாவனை பாடசாலைகள் வரை வந்துவிட்டது.போதைபொருள் பாவனை மட்டுமல்ல வாள் வெட்டுக் கலாசாரத்தின் பின்னால் உள்ள உளவியலைத் தீர்மானிக்கும் அம்சங்களும் மேற்கண்டவைதான்.

இளம் வயதினரின் வேகங்களுக்கு ஈடுகொடுத்து,அவர்கள் மத்தியில் இலட்சியங்களை விதைத்து, அவர்களுடைய சாகச உணர்வுகளைச் சரியான திசையில் திருப்பி,விழுமியங்களை மீளுருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் மதகுருக்களுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்தக்கூட்டுப் பொறுப்பை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?

drugp1-300x192.jpg

பாடசாலைகளில் தண்டனை நீக்கப்பட்டதை குறித்து முறையிடுகிறோம். ஆனால் ஒரு காலம் எமது பிள்ளைகள் தனியாக பள்ளிக்கூடங்களுக்கு போனார்கள்.டியூட்டரிகளுக்கு போனார்கள்.பெற்றோர் அவர்களை காவிச் செல்லும் ஒரு நிலைமை இருக்கவில்லை.ஆனால் இப்பொழுது எல்லா அம்மாக்களும் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் பிள்ளைகளை பூனை குட்டியைக் காவுவது போல இரவும் பகலும் காவுகிறார்கள்.ஏன் காவுகிறார்கள்?பிள்ளைகளை ஏன் தனியாக விட முடிவதில்லை?

ஒரு பாடத்துக்கு இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் பிள்ளை படிக்கிறது. அவ்வாறு படிப்பதற்கே நாள் போதாது.இது சுயகற்றலை பாதிக்காதா?அப்படிப் படித்து மேலெழுந்த பிள்ளை என்னவாக வருகிறது?கல்வி பற்றிய தமிழ்ச்சமூகத்தின் அளவுகோல்கள் சரியானவைகளா?இந்த கல்விமுறைக்கூடாக உருவாக்கப்பட்ட ஆளுமைகள் எப்படிப்பட்டவை? இதைக் குறித்த ஒரு சரியான மீளாய்வு தமிழ்ச் சமூகத்திடம் உண்டா? இல்லை.கல்வி தொடர்பாகவும் விழுமியங்களை மீளுருவாக்குவது தொடர்பாகவும்,சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பாகவும் கூட்டுத்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.அவற்றை வகுப்பதற்கான அதிகாரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு 13 ஆண்டுகளை கடந்துவந்து விட்டோம்.நாங்களாக சுயகவசங்களை உருவாக்கத் தவறிவிட்டோம்.அந்த வெற்றிடத்தில்தான் போதைப்பொருளும் வாள்களும் நுழைகின்றன.

எனவே பிரச்சினையின் வேர்களைத் தேடிப்போனால் முழுச்சமூகமும் அதன் கூட்டுப்பொறுப்பை இழந்து விட்டதைக் காணலாம். அண்மையில் எரிபொருள் வரிசைகளில் நின்றபோது நாங்கள் ஒரு சமூகமாகத் தோல்வியடைந்தமை தெரியவில்லையா? உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வெளியாள் போதைப்பொருளை,வாளைக் கொடுக்கிறான் என்றால் உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ ஒரு இடைவெளி இருக்கிறது என்று பொருள்.உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ தொடர்பாடல் அறுந்துவிட்டது என்று பொருள்.நீங்கள் பிள்ளையோடு மேலும் கூடுதலாக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்று பொருள்.பிள்ளைகளை இரவு பகலாக வகுப்புகளுக்கு காவி செல்கிறீர்கள்.ஆனால் பிள்ளைகளோடு மனம் விட்டு கதைக்கின்றீர்களா?

பூனை குட்டியைக் காவுவது போல பிள்ளைகளைக் காவுகிறோம். சிறந்த கல்விப் பெறுபேறுக்காக மனித உரிமைகளைப் பலிகொடுக்கத் தயாராக இருக்கிறோம்.அந்தக்கல்விப் பெறுபேறுகளின் விளைவாக நாங்கள் உருவாக்கிய ஆளுமைகள் எத்தகையவை என்ற கேள்வியை எப்பொழுதாவது எங்களை நோக்கி கேட்டிருக்கிறோமா?

இதுதான் பிரச்சினை.ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப அரசியல்வாதிகளால் முடியவில்லை.சமூகச் செயற்பாட்டாளர்களால் முடியவில்லை, சமயப் பெரியார்களால் முடியவில்லை, புத்திஜீவிகள்,படைப்பாளிகள், ஊடகங்களால் முடியவில்லை.

போதைப்பொருளிலிருந்து பிள்ளைகளை விடுவிப்பதென்றால் புனர்வாழ்வும் மட்டும் போதாது. தண்டனைகளால் பலன் இல்லை. மாறாக சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். விழுமியங்களை மீளுருவாக்க வேண்டும்.இளையோர் பிரமிப்போடு பார்க்கும் முன்னுதாரணம் மிக்க தலைவர்கள் மேலெழ வேண்டும்.திரைப்பட நாயகர்களையும் சண்டியர்களையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் வெற்றிடம் ஏன் ஏற்பட்டது?எனவே இளையோரை இலட்சியப்பற்று மிக்கவர்களாகவும்,உன்னதமான சமூகக் குறிக்கோளை நோக்கி எய்யப்பட்ட அம்புகளாகவும் மாற்றுவதற்கு தனியாக ஆசிரியர்களால் மட்டும் முடியாது.மருத்துவர்களால் மட்டும் முடியாது. உளவளத் துணையாளர்களால் மட்டும் முடியாது.புனர்வாழ்வு நிலையங்களால் மட்டும் முடியாது. அது ஒரு கூட்டுப் பொறுப்பு.

ஜெனிவாவில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் ஒரு மக்கள்கூட்டமானது,சமூகச்சீரழிவுகள் பொறுத்து தனக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் உணர வேண்டும். கீழிருந்து மேல் நோக்கிய சுய பாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.

 • நிலாந்தன்

https://newuthayan.com/பாடசாலைகளில்-போதைப்பொரு/

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை குறித்து ஒரு மீள்பார்வை

1 day 22 hours ago
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை குறித்து ஒரு மீள்பார்வை

on October 3, 2022

civil-war.jpg?resize=1200%2C550&ssl=1

Photo, AFP

எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் அதில் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய பிறகு லண்டனில் இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் நெவில் டி சில்வா அவருடன் கலந்துரையாடியபோது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி்ன் தற்போதைய கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்னரையும் விட கடுமையான தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து பிரஸ்தாபித்தாராம்.

முன்னைய இலங்கை அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்த பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமிப்பது குறித்து அவர் கேட்டபோது அதற்கு பதிலளித்த விக்கிரமசிங்க, “காலஞ்சென்ற சேர் டெஸ்மண்ட் டி சில்வா அத்தகைய ஆணைக்குழு தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்தார். நான் பிரதமராக இருந்தபோது சட்டமூலம் ஒன்றை தயாரித்து 2018 செப்டெம்பரில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தேன். ஆணைக்குழுவை அமைப்பதற்கான அடிப்படைப் பணிகள் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதற்கு அப்பால் என்னால் போக முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

தன்னை பதவி நீக்கி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்து அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு சதிமுயற்சியொன்றை முன்னெடுத்த காரணத்தினாலேயே தன்னால் ஆணைக்குழுவை அமைக்கும் செயன்முறைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததாக டி சில்வா சண்டே ரைம்ஸ் (25/9) பத்திரிகையில் தனது பத்தியில் எழுதியிருக்கிறார்.

கண்டியில் பிறந்தவரான சேர் டெஸ்மண்ட் டி சில்வா பிரிட்டிஷ் குற்றவியல் சட்ட நிபுணர். சியராலியோன் நாட்டில் ஐக்கிய நாடுகளின் பிரதான போர்க்குற்ற வழக்குத்தொடுநராக பணியாற்றியவர். ஆட்கள் கடத்தல் மற்றும் காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைசெய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் 2013 ஆகஸ்டில் நியமிக்கப்பட்ட நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு ஆலோசகர் என்ற வகையில் சேர் டெஸ்மண்டின் சேவைகளைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆணைக்குழுவின்  அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டு 2016 அக்டோபரில் பிரதமர் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு மோதலில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு பற்றிய விவகாரம் கையாளப்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட பரணகம ஆணைக்குழு வழக்கு தொடுக்கும் ஆணை இல்லாத தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவா அல்லது வழக்கு தொடுக்கும் ஆணையுடன் கூடிய சியராலியோன் பாணியிலான ஆணைக்குழுவா இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது என்பதை தீர்மானிப்பது அரசியல் அதிகாரத்தின் பொறுப்பாகும் என்று அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட வேளையில் ஜனாதிபதி சிறிசேன உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதாக உறுதியளித்தார். ஆனால், 2018 அக்டோபர் அரசியலமைப்பு சதிமுயற்சி காரணமாக தன்னால் அது தொடர்பான செயன்முறைகளை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது என்று இப்போது விக்கிரமசிங்க  கூறியிருக்கிறார்.

இத்தகைய பின்புலத்தில், உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்று கூறப்படுபவை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான நீண்டகால பிரச்சினைகளை கையாள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் முன்னைய யோசனையை அரசாங்கம் புதுப்பிக்கவிருப்பதாக கடந்த மாத ஆரம்பத்தில் வெளியான செய்திகள் நினைவுக்கு வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருந்த நிலையில் இத்தகைய செய்திகள் வெளிவரச்செய்யப்படுகின்றன என்ற சந்தேகமும் அந்தவேளையில் கிளப்பப்பட்டது.

இலங்கையில் நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்களுக்கும் அவற்றின் அறிக்கைகளுக்கும் நேர்ந்த கதி எல்லோருக்கும் தெரியும். அவற்றுக்கென்று  ஒரு வரலாறே இருக்கிறது. பரணகம ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு, மகாநாம திலகரத்ன ஆணைக்குழு என்று பட்டியல் நீண்டுகொண்டுபோகும். ஆணைக்குழுக்களை நியமித்த ஜனாதிபதிகளே அவற்றின் அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கக்கூடிய யோசனைகளை நிராகரிப்பதில் முதல் ஆளாக இருப்பார்கள். ஆணைக்குழுக்களின் யோசனைகளுக்கு கட்டுப்படவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று அவர்கள் வாதிடவும் செய்வார்கள்.

லண்டனில் நெவில் டி சில்வாவிடம் பேசிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசியலமைப்பு சதிமுயற்சியின் காரணமாக தன்னால் தொடர்ந்து முன்னெடுக்கமுடியாமல் போன உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கும் செயன்முறைகளை மீண்டும் இப்போது புதுப்பிப்பதற்கு எண்ணம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறவில்லை.

மைத்திரி – ரணில் அரசாங்க காலத்தில் 2015 செப்டெம்பர் 14 அத்தகைய ஆணைக்குழு அமைக்கும் யோசனை முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் வழங்கிய பெயர் ‘உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான ஆணைக்குழு’ என்பதாகும். அதை அமைப்பதற்கு தென்னாபிரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கும் என்று அன்றைய வெளியுறவு அமைச்சர் காலஞ்சென்ற மங்கள சமரவீர கூறினார்.

இது தொடர்பிலான ஒரு  கருத்துரு ஆவணம் 2018 செப்டெம்பர் 16 அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆவணத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவதற்கு அமைச்சரவை  தீர்மானித்தது. ஆனால், இலங்கை அரசாங்கத்தின் அந்த யோசனை தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 2020 மார்ச்சில் கூறியிருந்தது. 2019 நவம்பர் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ராஜபக்‌ஷர்கள் அதைப் பற்றி சிந்தித்திருப்பார்கள் என்று எவரும் நினைத்துப்பார்க்க முடியுமா?

ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, அவர் தனதுடைய முன்னைய நிலைப்பாடுகளின் பிரகாரம் செயற்படுகின்றவராக தற்போது இல்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதையும் அறகலய போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதையும் தவிர, மற்றும்படி அரசியல் விவகாரங்களில் அவரால் எதையும் பெரிதாக செய்யமுடியாது. ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பலத்திலேயே விக்கிரமசிங்கவின் ஆட்சி தங்கியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  தற்போதைய கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் அணுகுமுறை விக்கிரமசிங்கவின் வழமையான போக்கிற்கு முரணானதாகவே இருக்கிறது. ஒரு ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தால் எவ்வாறு ஜெனீவாவை கையாளுவாரோ அதே போன்றே விக்கிரமசிங்கவின் நிருவாகமும் நடந்துகொள்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிபெறுவதற்கு முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பியிருக்கும் ஒரு நேரத்தில் ஜெனீவாவில் ஒரு மிதவாத போக்கை கடைப்பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பதோ வேறு.

அதனால் விக்கிரமசிங்க நாட்டில் நல்லிணக்கத்தை நோக்கிய எந்த செயன்முறையையும் முன்னெடுக்கக்கூடிய நிலைமை இல்லை. அதனால்தான் லண்டனில் அவர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கும் யோசனையை ஒரு  முடிந்துபோன கதை என்ற தோரணையில் குறிப்பிட்டார் போலும்.

தென்னாபிரிக்க அனுபவம்

சுமார் கால் நூற்றாண்டு காலமாக கொழும்பில் இருந்து செயற்படும் மூத்த இந்திய பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே.பாலச்சந்திரன் சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை பற்றி எழுதிய கட்டுரையொன்றில் தென்னாபிரிக்க அனுபவத்தை விளக்கிக் கூறியிருந்தார். அந்தப் பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது பயனுடையதாக இருக்கும்.

“இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமானால் அது எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தென்னாபிரிக்காவின் அனுபவம் அறிகுறி காட்டுகிறது.

“வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு 1995ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் அந்தப் பாதிப்பைச் செய்தவர்களிடம் இருந்தும் சான்றுகளைச் சேகரிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தது. தனிப்பட்டவர்கள் மீது  வழக்கு தொடுப்பதில் அது  கவனம் செலுத்தவில்லை.

“வலதுசாரி இனவெறியர்களும் பாதுகாப்புப் படைகளும் தங்களுக்கு முற்றுமுழுதான மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அதேவேளை, விடுதலை படைகளும் பாதிக்கப்பட்ட ஆபிரிக்கர்களும் நுரம்பேர்க் பாணி விசாரணையொன்று முன்னெடுக்கப்படவேண்டும் என்று கோரினர். இரண்டாவது உலகப்போருக்கு பிறகு நாஜிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நுரம்பேர்க் விசாரணை குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனைகளை வழங்கியதில் முடிந்தது.

“புதிதாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் பொறுப்புக்கூறல், இழப்பீடு மற்றும் மன்னிப்பு வழங்குதல் தொடர்பில் சனத்தொகையின் முழுமையையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய முறையில் சகல பிரிவினரிடமும் சர்வதேச சமூகத்திடமும் அபிப்பிராயத்தை கேட்டறிந்த பின்னர் தென்னாபிரிக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஒரு வருடகாலம் நீடித்த கலந்தாலோசனை செயன்முறைகளுக்கு பிறகு (1995ஆம் ஆண்டின் 34ஆம் இல.) தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் பிரகாரமே ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 1960 – 1994 காலகட்டத்தில் இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்களை ஆணைக்குழு விசாரித்தது.

“மேற்கூறப்பட்ட சட்டத்தின் பிரகாரம் மனித உரிமை மீறல்கள் குழு, இழப்பீடு மற்றும் புனர்வாழ்வு குழு, மன்னிப்புக் குழு என்று மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டன. நாடுபூராவும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். சகல அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மத அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய சுயாதீனமான குழுவொன்றே நேர்முக பரீட்சைகளை நடத்தி ஆணையாளர்களை தெரிந்தெடுத்தது. தென்னாபிரிக்காவின் அன்றைய ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆணைக்குழுவின் தலைவராக அதிமேற்றிராணியார் டெஸ்மண்ட் டுட்டுவை நியமித்தார்.

“ஆணைக்குழு பகிரங்க விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 22,000 க்கும் அதிகமான வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டது. அரசின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களும் விடுதலை இயக்கத்தின் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை சுதந்திரமாக எடுத்தியம்பி சாட்சியமளித்தனர்.

“7000 பேர் மன்னிப்புக் கோரி விண்ணப்பித்தனர். அவர்களில் 1500 பேருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. பலரும் அறிய நடத்தப்பட்ட அந்த விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு பெருமளவுக்கு உதவியது. போதனை வழங்குவதாகவும் சீர்திருத்த செயற்பாடாகவும் அமைந்த அந்த ஆணைக்குழு விசாரணை இறுதியில் பெருமளவுக்கு நல்லிணக்கத்தைக் கொண்ட ஆரோக்கியமான தென்னாபிரிக்க சமுதாயம் ஒன்று உருவாவதற்கு வழிவகுத்தது.

“ஆனால், பாதுகாப்பு படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை. படைகளின் கீழ் மட்ட உறுப்பினர்கள் ஒத்துழைத்தனர். அவர்களில் அத்துமீறல்களைச் செய்தவர்கள் மன்னிப்புக் கோரி விண்ணப்பித்தனர். விடுதலை படைகளின் உறுப்பினர்கள் நியாயமான போர் ஒன்றையே முன்னெடுத்ததாகக் கூறி தாங்கள் தவறெதையும் செய்யவில்லை என்று வாதிட்டனர். என்றாலும் இறுதியில் அவர்களும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வைக்கப்பட்டனர்.

“மண்டேலாவுக்குப் பிறகு பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இழப்பீடு வழங்குதல் உட்பட ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காட்டின. இது துரதிர்ஷ்டவசமானது. 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் முடிவில் ஒரு சில விதப்புரைகளே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. முக்கியமான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவில்லை. என்றாலும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் உணர்ச்சிக்கொந்தளிப்புகளில் இருந்து மக்கள் விடுபடவும் உள்நோக்கி பார்த்து சுய பரிசோதனையைச் செய்யவும் வாய்ப்புக்ளை வழங்கியதால் புதிய தென்னாபிரிக்கா ஒன்றுக்கான ஆக்கபூர்வ திருப்புமுனையாக அமைந்தன.

“இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொனறு நியமிக்கப்படுமேயானால், அது ஓரளவுக்குத்தான் பயனுடையதாக இருக்கும். தென்னாபிரிக்க ஆணைக்குழுவுடன் ஒப்பிடும்போது அதுவும் குறிப்பாக மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்ட்ட கடந்த கால ஆணைக்குழுக்களுக்கு நேர்ந்த கதியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இலங்கையில் அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இலங்கையின் அரசியல் சமுதாயம் பொதுவில் பகைமையுணர்வுடனான அணுகுமுறையைக் கொண்டதாகவே இருக்கிறது.”

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்

 

https://maatram.org/?p=10383

 

தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமையின்மை

1 day 22 hours ago
தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமையின்மை

என். கே அஷோக்பரன்

twitter: @nkashokbharan

பலரும் எழுதி எழுதி சலித்துப் போனதொன்றை, மீண்டும் மீண்டும் எழுத வைப்பதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் சதி. ‘குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்; கூறியது கூறல்’ ஆகியவை குற்றம் என்கிறது நன்னூல். 

ஆனால், எப்படிச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும் புரியாதது போலவே நடிக்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு, வேதாளத்தின் கேள்விகளும் பதில் சொல்லும் விக்கிரமாதித்தனாய், சற்றும் மனந்தளராது, மீண்டும் மீண்டும் கல் செதுக்குவது போல, அது உருப்பெறும் வரை செதுக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தார்மிகக் கடமையாகிறது.

இலங்கையில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தற்காப்புத் தேசியமாகவே உருவாகியது. அது, சிங்கள- பௌத்த பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது. 

அதனால்தான், ஏ.ஜே வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். சாதிகள் சேர்க்கையாக, சாதி ரீதியாகக் கட்டமைந்திருந்த தமிழ்ச் சமூகத்திடையே, ‘தமிழர்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்ய, பேரினவாதத் தேசியம் முயன்றதன் எதிர்விளைவாக, அதே ‘தமிழர்’ என்ற தேசிய அடையாளத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒன்றிணைந்தமையை நாம் காணலாம். 

‘தமிழ்த் தேசியம்’, இலங்கைத் தீவின் அரசியலில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் என்ற இனக்கூட்டத்தின் கட்டமைப்பிலும் போக்கிலும் சிந்தையிலும் கூட, மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. சாதி ரீதியிலான அடையாளத்தை மேவி, இனத்தேசிய அடையாளம் முன்னிறுத்தப்பட்டது. 

தமிழ்த் தேசியத்துக்கான தேவை, சிங்கள-பௌத்த தேசியத்தின் எழுச்சியால், அது ‘தமிழர்’ மீது ஏற்படுத்திய அடக்குமுறையால் எழுந்ததாகும். 

1956இல் இருந்து, தமிழ்மக்கள் ஏகோபித்து, தமிழ்த் தேசியத்துக்கான தமது அங்கிகாரத்தையும் மக்களாணையையும் வழங்கி வந்திருக்கிறார்கள். இது, ஆறு தசாப்த காலத்துக்கும் மேலான, தமிழ் மக்களின் மக்கள் விருப்பத்தைப் பறைசாற்றி நிற்கிறது. கருத்தியல் வாதங்களால், இந்த யதார்த்தத்தை, மறுத்துவிட முடியாது. 

இதனால்தான், திம்பு கோட்பாடுகளின் முதல் கோட்பாடான, ‘இலங்கை தமிழர், ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்’ என்பது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் முதன்மைமிக்கதாக இருக்கிறது.

இந்த முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழ்த் தேசிய கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, கருத்தியல் ரீதியிலான முரண்பாடு என்பது, தமிழ்த் தேசிய கொள்கையின் தீவிரத்தன்மை சார்ந்ததாகவே இருக்கிறதேயன்றி, தமிழ்த் தேசிய அடிப்படைகளை, குறைந்த பட்சம், தமது உத்தியோகபூர்வ கொள்கைப் பிரகடனங்களில் ஒரே மாதிரியானதாகவே பறைசாற்றி வருகின்றன. 

அப்படியானால், ஏன் அவற்றால் ஒற்றுமையாகச் செயற்பட முடியவில்லை? இதற்கு, குறைந்த பட்சம் இரண்டு காரணங்களை அடையாளம் காணலாம். 

முதலாவது, கொள்கை தொடர்பான நேர்மையின்மை. 

இரண்டாவது, சுயநலம். 

தமிழ்த் தேசியம் என்பதையும் அதன் அடிப்படைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றையும் முன்னிறுத்தி, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றைக் குறிப்பிட்டு, அந்தத் தமிழ்த் தேசியத்தின் பாதுகாவலர்களாகத் தம்மை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியத்தை வாக்குப் பெறுவதற்கான ஒரு சாதனமாகவே பார்க்கிறார்களேயன்றி, அதன் மீதான உண்மைப் பற்றுதல் அவர்களுக்கு இல்லை. 

அடிப்படையில் தாராளவாதிகளான சிலர் கூட, இன்று தமிழ்த் தேசியத்தின் தலைமைகளாகத் தம்மை முன்னிறுத்துகிறார்கள். அவர்களுக்கு, ‘தமிழ்த் தேசியம்’ என்பது வாக்குப் பெற்று, தமக்கான பாராளுமன்ற பதவி பெறுவதற்கான ஒரு கருவி; அவ்வளவுதான்!

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சியில், அதன் விஞ்ஞாபனத்தின் கீழ், தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகளைப் பெற்றும், தமிழ்த் தேசத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவானவர்கள், தமிழ்த் தேசியத்தை விடுத்து, சிவில் தேசிய அரசியல்வாதிகளாகத் தம்மைப் பாவித்துக் கொண்டும் வருகிறார்கள். 

ஒருவர் அடிப்படையில், சிவில் தேசியத்தை விரும்பும் தாராளவாதியாக இருக்க விரும்பினால், நல்லது! அவர் அதைச் செய்யலாம். ஆனால், நேர்மை என்பது, அதை நேர்மையாக மக்களிடம் சொல்லி, அந்தக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சியில் இணைந்து, அந்தக் கொள்கையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டு, அந்தக் கொள்கைக்கு மக்களாணை கிடைத்தால், அதைப் பெற்றுக்கொண்டு, அந்தக் கொள்கைப்படி நடப்பதாகும். 

ஆனால், தேர்தல் வெற்றிக்கு தமிழ்த் தேசியம்; வென்ற பின்னர், தாரளவாத சிவில் தேசியம் என்பதெல்லாம், அடிப்படையில் நேர்மையற்ற செயல். இதுதான் இன்று, தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடாக மாறியுள்ளது. 

தமிழ்த் தேசியத்தின் நன்மைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு, தமிழ்த் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்படும் குழாமொன்று, தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்துள்ளதன் விளைவுதான், இன்று தமிழ்த் தேசிய அரசியலுக்குள் உட்கட்சி முரண்பாடுகள் வலுத்துள்ளன. 

தமது சுயநல அரசியலுக்காக, கொள்கை ரீதியான வாதப்பிரதிவாதங்களுக்குப் பதிலாக, தமிழ்த் தேசிய அரசியலைத் தனிநபர்கள் பற்றிய ‘குழாயடிச் சண்டை’க்களமாக மாற்றி இருக்கிறார்கள். இதன் விளைவுதான் இன்று தமிழ்த் தேசிய அரசியல், நடுச்சந்தியில் நாறிக்கொண்டு கிடக்கிறது.

“தேசம் என்பது, ஓர் உணர்வாகும். இறுதியாக நாம், ஒரு தேசத்தின் உறுப்பினர்களானவர்கள், உணர்ச்சிப் பெருக்குடனும் ஏகமனதாகவும் தம்மை ஒரு தேசமாக நம்புவதால், நாம் அதைத் தேசமென்று கருதமுடியும்” என்கிறார் றாம்சே மயர். இந்த உணர்வு, அடிப்படையிலேயே இல்லாதவர்கள், எப்படி அந்தத் தேசத்தின் பிரதிநிதிகளாக முடியும்? 

தாராளவாதம், இன-மதத் தேசியவாதத்துக்கு முற்றிலும் முரணானது. அது இன-மதத் தேசியவாதத்தை நிராகரிக்கின்றது. ஆகவே, ஒருவர் தாராளவாதியாகவும் இன-மதத் தேசியவாதியாகவும் இருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசிய முகம்; தெற்குக்கும் சர்வதேசத்துக்கும் தாராளவாத முகம் என்று இருப்பவர்கள், ஒருபோதும் இரண்டுக்கும் நேர்மையாக இருக்க முடியாது. 

ஆகவே, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தாராளவாதிகளின் ஆதிக்கம், தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இங்கு, கொள்கை வாதப்பிரதிவாதங்களைத் தவிர்த்து, தனிநபர்கள் பற்றிய ‘குழாயடிச் சண்டை’களுக்கும் இதுவே வழிவகுப்பதாக இருக்கின்றது. இதைத் தமிழ் மக்கள் உணர வேண்டியது அவசியம்.

மறுபுறத்தில், கொள்கை ஒன்றாக இருந்தாலும், தேர்தல், பதவி என்ற சுயநல காரணங்கள் எப்போதும் தமிழ்த் தேசிய அரசியலைத் துண்டாடி வந்திருக்கிறது. இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியவாதிகளிடையே ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் இதன்பாற்பட்டவை ஆகும்.

யார் தலைவர், யாருக்குப் பதவி என்ற அடிபாடுகளுக்காகப் பிரிந்து, ஒரு கொள்கையில் ஒன்றுபட்டிருந்த ஆதரவாளர்களை, தனிநபர்களின் சண்டைகளுக்காக, தனிநபர்களின் ஆதரவாளர்களாக மாற்றி, ஒருவரை இன்னொருவர் தூசித்துக்கொண்டும், அடிதடிப்பட்டுக் கொண்டும் தம்மைத் தாமே அசிங்கப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலின் பலம் என்பது, அதற்கு மாற்றான எல்லாத் தரப்புக்கும் மிகச்சவாலன ஒன்றாகும். ஆகவே, தமிழ்த் தேசிய அரசியலைப்  பலவீனப்படுத்துவது என்பதே, தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றான சக்திகளின் பிரதான குறிக்கோள்களில் ஒன்றாகும். 

தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமை இன்மையென்பது, தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்துவதை இலகுப்படுத்துவதாகவே அமைகிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கையை முன்னிறுத்தும் தலைவர்கள் மீது மக்கள் நம்பிக்கையிழக்கும் போது, அந்தக் கொள்கை மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்குகிறார்கள். 

தமிழ்த் தேசிய அரசியலின் உட்கட்சிச் சண்டைகளும் பூசல்களும், வேறுபட்ட குழுக்களிடையேயான ‘குழாயடிச் சண்டை’களும், தமிழ்த் தேசியம் மீது தமிழ் மக்களுக்கு சலிப்பை உண்டாக்குவதாகவும் வெறுப்பை உருவாக்குவதாகவும் அமைகிறது. 

அப்படியானால், இது தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த எண்ணும் சக்திகளுக்கே சாதகமாக அமைந்துவிடுகிறதல்லவா! ஆகவேதான், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சக்திகள், விழித்துக்கொள்ள வேண்டிய காலம் என ‘பள்ளியெழுச்சி’ பாடப்படுகின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், மீண்டும் உண்மையான தமிழ்த் தேசிய அமைப்புகளிடையே பலமானதோர் ஒற்றுமை கட்டியமைக்கப்பட வேண்டியமை, காலத்தின் தேவையாக எழுந்திருக்கிறது. இதைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் சரிவரச் செய்யாது விட்டால், தமிழ்த் தேசியத்தின் மீது தமிழ்த் தேசம் நம்பிக்கை இழந்துவிடும்.
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலில்-ஒற்றுமையின்மை/91-305181

 

திட்டமிட்டு சிங்களப் பேரினவாதம் எம்மினத்தின் மீது திணிப்புகளை மேற்கொள்கிறது – தவராசா கலையரன் எம்.பி.

3 days 9 hours ago
திட்டமிட்டு சிங்களப் பேரினவாதம் எம்மினத்தின் மீது திணிப்புகளை மேற்கொள்கிறது – தவராசா கலையரன் எம்.பி.
 

-சி.எல்.சிசில்-

திருகோணமலை மாவட்டத்தைக் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை மிக வேகமாக ஆரம்பித்துள்ளது. தொல்லியல், வனபரிபாலனம் எனத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

306213468_608152601011886_80421806999349
திருகோணமலையில் இடம்பெற்ற இந்திய உயர்ஸ்தானிகருடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை – இந்தியா என்கின்ற நட்புறவோடு நீண்ட காலமாக இலங்கைக்குப் பல உதவிகளை வழங்கிய நாடாக அண்மையில் உள்ள நாடு என்ற அடிப்படையில் இந்தியா அமைந்துள்ளது.
இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய கலை கலாசார அம்சங்களோடு வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம் ஆனால் திட்டமிட்டு எம்மினத்தின மீது சிங்களப் போனவாதம் திணிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றது.309438021_817700556021053_38833797073227

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலே திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் மூலம் எமது புனித தலத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்குரிய நடடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இந்திய உயர்ஸ்தானிகரின் திருகோணமலை மாவட்ட வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

அது மாத்திரமல்லாமல் திரியாய் என்று சொல்லப்படுகின்ற கிராமத்தை மையமாக வைத்து தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன இலாகா போன்ற திணைக்களங்களூடாகத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது. மிக வேகமாக இந்த மாவட்டத்தைக் குறி வைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. இதனை இந்த நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து இந்த நாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

309775547_3203062230023359_3401150711598
நாட்டின் புதிய ஜனாதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்ட போதும் ராஜபக்ச காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அந்த சிங்கள அரச தீவிரவாத செயற்பாடு மிகவும் மோசமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் பதவிக்கு வந்தபோது இந்த நாட்டில் சமாதானம், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பேசியிருந்தாலும் அதற்கு மாறான செயற்பாடுகளே எமது தமிழர் பிரதேசத்திலே நடந்து கொண்டிருக்கின்றன.

303199321_774556700472493_55414630786901
எனவே இந்த நாட்டில் சமாதானம் சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் தமிழர் பிரதேசங்களிலே இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புகள், மத ரீதியான அடக்குமுறை என்பன நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/212821

அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள்

4 days 12 hours ago
அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

அவசரகால நிலையை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தி, ‘இலங்கையை வழமை’க்குக் கொண்டு வந்துள்ளார். வன்முறை, அரசின் அடக்குமுறை, அரசசார்பற்ற நபர்களின் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை, அவசரகால சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் இலங்கை குறித்த அனுபவத்தில் முன்னிற்கின்றன.  

இலங்கையின் கொடூரமான நடவடிக்கைகள், வன்முறைச் சுழற்சியை மேம்படுத்தி, ஜனநாயக சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை அழிக்க வழிவகுத்தன. தீவின் வடக்கு, தெற்கில் உள்ள அரச அதிகாரிகளால், கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியதானது, ஏராளமான மரணங்கள், காணாமல்போதல்கள் போன்றவற்றுக்கும் அரசு மீதான பெருகிவரும் ஏமாற்றம், பாதிக்கப்பட்ட சமூகங்களின் தொடர்ச்சியான பின்னடைவுக்கு வழிவகுத்தது. 

அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது, அரசியலமைப்பு உரிமைகளை சீர்குலைத்துள்ளது என்பது நிதர்சனமாகது. பெரும்பாலும் பயங்கரவாத சூழலை நிலைநிறுத்துகிற போது, சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை இல்லாது போகிறது. 

இந்த அதிகாரங்கள், பாதுகாப்புதுறைசார் உறுப்பினர்களிடையே அடக்குமுறைக்கான கட்டற்ற பயன்பாட்டுக்கும், தண்டனை இன்மைக்குமான கலாசாரத்தை வளர்க்க உதவியுள்ளன. 

1958இல் இலங்கை அரசாங்கம் முதன்முதலில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய காலத்திலிருந்தே, அவசரகால அதிகாரங்கள் என்ற போர்வையின் கீழ், சர்வாதிகார அதிகாரத்தை பல ஆண்டுகளாக இலங்கை அனுபவித்தது. 

இலங்கை மிக நீண்ட காலமாக, அவசரகால ஆட்சியின் பிடியில் உள்ளது. 1983ஆம் ஆண்டு முதல், இடையில் சில குறுகிய இடைவெளிகளுடன், அண்மைய நாள் வரை அனைத்து ஆண்டுகளிலும் நீடித்தது.

இதன் வரலாற்று வளர்ச்சியை நோக்குவதாயின், இந்த அவசரகால அதிகாரங்களைத் தூண்டுவதற்கு  மூன்று காரணிகள் காரணமாக இருக்கின்றன. 

முதலாவதாக, இடதுசாரிக் கட்சிகளால் உந்தப்பட்ட தொழிற்சங்கங்கள்; 1940களின் பிற்பகுதியிலிருந்து 1960கள் வரை, உயிர்ப்புடன் இருந்தன. தொழிலாளர் உரிமைகளுக்காக இவை நடத்திய போராட்டங்களைக் கையாள்வதற்கு, இலங்கை அரசாங்கங்களால் இயலவில்லை. எனவே, அரசாங்கத்தை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றத் தூண்டியது. இது, அவசரகால விதியை சட்டபூர்வமாக்கியது. 

அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில், உணவு விநியோகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு சேவைகள் போன்ற பொதுச் சேவைகள், நாட்டில் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாதவை; மற்றும், அவற்றைப் பாதுகாப்பது அவசரகாலச்சட்டம்; இதன்மூலம், சிவில் உரிமைகளை மீறுவது நியாயமானது. 

1968ஆம் ஆண்டளவில், பல அரசாங்கத் துறைகள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை இது எளிதாக்கியது. 

இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அவசரகாலவிதி ஜூலை 1971 வரை செயற்படுத்தப்படவில்லை. காலப்போக்கில், இன - தேசியவாதம், அரசியல் செயற்பாடுகள் போன்றவை, தொழிற்சங்க நடவடிக்கையை முறியடித்து, அவசரகால அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு முக்கிய காரணங்களாகின. 

image_cd14e2b16a.jpg

இரண்டாவதாக, ஜே.வி.பியால் தூண்டப்பட்ட பொது வன்முறையைக் கட்டுப்படுத்த, ஆரம்பத்தில் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஜே.வி.பி, தனது முதல் ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கியது. நான்கு மாத அமைதியின்மையின் போது, ஐக்கிய முன்னணி அரசாங்கம் அவசரகால சட்ட ஆட்சியைப் பயன்படுத்தியதன் மூலம் பதிலளித்தது.

கிளர்ச்சியாளர்களை, விரைவாகவும் சித்திரவதை மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக காணாமல் போகச் செய்தல் போன்ற வழிமுறைகள் மூலமாக அடக்குவதற்கு இச்சட்டம் உதவியது. 

1987 முதல் 1990 வரை, ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் தொடங்கியது. இதனால், அவசரகாலச் சட்டம் தென் பிராந்தியத்திலும் பரவியது. மீண்டும், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில், தன்னிச்சையான கைதுகள், தடுப்புகள், மரணதண்டனைகள் ஆகியவற்றின் மூலம் ஜே.வி.பியை நசுக்க முடிந்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான, பாரபட்சமான அரசாங்கக் கொள்கைகள், சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நிலவிய பதற்றம் காரணமாகவும் அடிக்கடி எழும் கலவரங்கள் என்பன, அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மூன்றாவது மற்றும் பொதுவான காரணங்களாக அமைகின்றன. 

உதாரணமாக, 1956ஆம் ஆண்டின் அரச மொழிச் சட்டத்தை (சிங்களம் மட்டும் சட்டமூலம்) இயற்றுவதற்கு எதிராக, தமிழரசுக் கட்சியால் நடத்திய அமைதியான எதிர்ப்பு, சிங்களக் குண்டர்களால் வன்முறையைச் சந்தித்தது. 

    1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு, இலங்கையை ஒற்றையாட்சி நாடாக அறிவித்ததன் மூலம், சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியது. இது, தமிழ் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு ஊக்கமளித்தது. 1977 அளவில், தமிழ் பிரிவினைவாத இயக்கம் உருவான நேரம் முழுவதும், இடைவிடாத வன்முறைகள் ஏற்பட்டன. அதற்கு அரசாங்கம் அவசரகால விதியை நாடியது.

இந்தக் கொடூரமான நடவடிக்கைகள், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் கீழ், 1979ஆம் ஆண்டு, 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) (PTA) மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு தற்காலிக நடவடிக்கையாக இயற்றப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், ஐக்கிய இலங்கைக்கான அச்சுறுத்தல்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இருந்தது. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6-9 பிரிவுகள், அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கைது செய்தல், தடுத்து வைத்தல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல் போன்ற அதிகப்படியான பொலிஸாரின் அதிகாரங்களைப் பிரதிபலிக்கின்றன.

இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே, இப்போது ஜனாதிபதி மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ள அவசரகாலச் சட்டத்தை நோக்க வேண்டியுள்ளது. பெருந்தொற்றுக்குப் பின்னர், உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் பின்னடைவை நாம் கண்டிருக்கிறோம். அதன் சில முக்கிய அறிகுறிகளில், இரண்டு மிகப் பிரதானமாவை; இலங்கைக்கும் பொருந்துபவை! 

முதலாவது, அரசாங்கத்தின் நிறைவேற்றுப் பிரிவு, ஜனாதிபதி அரசியல் நிறைவேற்று அதிகாரம், நிர்வாக மற்றும் பாதுகாப்பு இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. அது, புதிய அரச அதிகார மையமாகி, பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் கூட பின்னணிக்கு தள்ளுகிறது. 

இரண்டாவதாக, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் சட்டபூர்வத்தன்மை மற்றும் நியாயத்துடன் கூடிய கண்காணிப்பு, அனைத்து குடிமக்கள் மீதும் ஒரு பரந்த அரசு கண்காணிப்பு வலையை வீசுவதன் மூலம், தொடர்புத் தடமறிதலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியது. இது குறிப்பாகத் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக என்ற போர்வையில், அரசியல் உரிமைகளைப் பறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 

இலங்கை நிறைவேற்று அதிகாரத்துவத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவால் ‘நிறைவேற்று’ ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்ட போது, அது அனைத்து அதிகாரங்களும் கொண்ட அலுவலகத்தை உருவாக்கியது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டமன்ற அதிகாரம் இரண்டையும் ஜனாதிபதி மையப்படுத்திய அதேவேளையில், பாராளுமன்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய மட்டுப்பாடுகளும் சமநிலையாக்கங்களும் அகற்றப்பட்டன. நீதித்துறையும் நிறைவேற்று அதிகாரத்தின் தலைவரான ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலும் செல்வாக்கிலும் கொண்டுவரப்பட்டது.

2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்ததன் மூலம், இந்த அரசியலமைப்பு இன்னும் இலங்கையில் இயங்குகிறது.  

இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்திலிருந்து, புதிய ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய மாற்றம் பெருந்தொற்றுக்கு 2020ஆம் ஆண்டு  செப்டெம்பரில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தினூடு உறுதியான வடிவத்தை எடுத்தது. 

இங்கு, 20ஆவது திருத்தத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன: 

(அ) மட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையாக்கங்கள்  ஏதுமின்றி, பாராளுமன்றம், நீதித்துறை அல்லது பிற பொறுப்புக்கூறல் நிறுவனங்களில் இருந்து சுயாதீனமாக குடியரசுத் தலைவர் பதவியை அரச அதிகாரத்தின் மத்திய நிறுவனமாக மாற்றுதல்; 

(ஆ) பாராளுமன்றத்தை பெயரளவு சட்டமியற்றும் அமைப்பாக மாற்றி, அதை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட வைத்தல். 

பலவீனமான ஜனநாயகத்தில் இருந்து, நிறைவேற்று தலைமையிலான சர்வாதிகார அரசியல் ஒழுங்கிற்கு விரைவான மாற்றமாக அது இருந்தது. 
நிறைவேற்று அதிகாரத்துவத்தின் இந்த அரசியல் மாதிரியானது, தற்போதுள்ள பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை அரசாங்கத்தின் கட்டமைப்போடு இணைந்திருத்தாலும் அரசியல் நிறுவனங்களின் படிநிலையில், அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரம் குறைந்துவிடும்.

இது வளர்ந்து வரும் அரச-சமூக உறவுகளின் தன்மையை நிச்சயமாக மறுவரையறை செய்யும். இதன் படிநிலை வளர்ச்சியையே, இலங்கையில் நாம் காண்கிறோம். 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அவசரகாலச்-சட்டம்-எதிர்காலத்தின்-கொடுபலன்கள்/91-305180

நினைவுத் தூபியை அவமதிப்பது? நிலாந்தன்!

5 days 13 hours ago
நினைவுத் தூபியை அவமதிப்பது? நிலாந்தன்! நினைவுத் தூபியை அவமதிப்பது? நிலாந்தன்!

ஜெனிவா கூட்டத் தொடர் காலப்பகுதியில் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன் நிகழ்ந்த இழுபறிகளுக்குள் தமிழ்மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டிருக்கிறது.

ஜெனிவா கூட்டத் தொடரானது தமிழ் மக்களுக்கு மோட்சத்தை பெற்று தராது என்பது கடந்த 13 ஆண்டு கால அனுபவம்.ஆனால் அக்கூட்டத்தொடர் காலகட்டத்தில் வந்த ஒரு நினைவு நாளை நீதிக்காக போராடும் ஒரு மக்கள்கூட்டம் எவ்வாறு வடிவமைத்திருந்திருக்க வேண்டும்?

தமிழ் மக்களைப் பொறுத்தவரை நினைவு கூர்தல் என்பது ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும் ஒரு நிகழ்வுதான். தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிகரமான புள்ளியில் நினைவு நாட்கள் இணைகின்றன. எனவே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குரிய உச்சபட்ச வாய்ப்புகளை நினைவு நாட்கள் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு நினைவு நாட்களில் தமிழ் மக்களின் கூட்டுத் துக்கத்தையும் கூட்டு இழப்பையும் கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றினால் அது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பிரதான உந்து விசையாக மாறும். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால்,நினைவு கூர்தல் எனப்படுது, நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாக கட்டமைக்கப்பட வேண்டும்.

இதில்,திலீபனின்நினைவுகள் ஒப்பீட்டளவில் வித்தியாசமானவை. அப்படித்தான் அன்னை பூபதியின் நினைவுகளும். திலீபனும்,அன்னை பூபதியும் தங்களை வருத்தி உயிர் துறந்தார்கள்.அவ்வாறு தமது லட்சியத்துக்காக,தமது கோரிக்கைகளுக்காக தங்களை வருத்திய ஒருவரை நினைவுகூரும் பொழுது அதை எப்படித் திட்டமிட வேண்டும்? குறிப்பாக திலீபன் குடல் அறுவைச் சிகிச்சை ஒன்றின்மூலம் குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்த நிலையில், அவருடைய உடல் உண்ணாவிரதத்தைத் தாங்காது என்பதை நன்கு தெரிந்திருந்தும் அவர் அந்த முடிவை எடுத்தார். அன்னை பூபதி முப்பது நாட்கள் பசியோடு இருந்தார்.அவர் நீரை அருந்தி உணவை ஓறுத்தார்.ஆனால் திலீபன் உணவையும் நீரையும் ஒறுத்தார்.அதனால் ஏற்கனவே பலவீனமாக இருந்த அவருடைய உடல் 12 நாட்களே தாக்குப்பிடித்தது.எனவே அந்த 12 நாட்களும் எப்படிப்பட்ட சித்திரவதையாக இருந்திருக்கும் என்பதனை அவரை உண்மையாக நினைவுகூர முற்படும் எவரும் அறிவர்.இந்த அடிப்படையில் அந்த நாளை எப்படித் திட்டமிட்டு நினைவு கூர்ந்து இருந்திருக்க வேண்டும்?

நீதிக்காக போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் பெயரால் உலக சமூகம் ஜெனிவாவில் ஓர் அரங்கை திறந்து,கூட்டத் தொடரை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, திலீபனின் நினைவுகளை நீதிக்கான பயணத்தின் ஒரு பகுதியாக அனுஷ்டித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அனுஷ்டிக்க முடியாதபடி ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் ஒரு நினைவுத் தூபியை அசிங்கப்படுத்தியிருக்கின்றன.

இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்றுதான் ஏற்கனவே அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் முயற்சித்தார்கள்.ஆனால் எல்லாருடைய கையையும்மீறி திலீபன் நினைவு நாட்களின் இறுதி நாளில் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் தள்ளுமுள்ளுப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

அது தமிழ் சமூகத்தில் காணப்படும் பாரதூரமான ஒரு வெற்றிடத்தை காட்டுகின்றது.அது என்னவெனில், இதுபோன்ற நிலைமைகளின்போது கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைக் கடந்த ஓர் ஐக்கியத்தை கட்டி எழுப்பவல்ல குடிமக்கள் சமூகங்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்பதைத்தான். மணிவண்ணன் உருவாக்கிய கட்டமைப்பில் ஒப்பீட்டளவில் தமிழ் பரப்பில் துரத்திக் கொண்டு தெரியும் செயற்பாட்டாளர்கள் காணப்பட்டார்கள்.ஆனால் அவர்களில் யாருமே அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் சக்தி உடையவர்கள் அல்ல என்பதைத்தான் திலீபனின் நினைவுத் தூபிக்கும் முன் நடந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அவ்வாறு பலமான குடிமக்கள் சமூகங்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்,இனிவரக்கூடிய நினைவு நாட்களைப் பொறுத்தவரை இது போன்ற மோதல்களுக்கான நிலைமைகள் மேலும் அதிகரிக்கக்கூடுமா?

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பு உண்டு.எனினும் அக்கட்டமைப்பு தொடர்பாக கேள்விகளும் உண்டு. அப்பொதுக் கட்டமைப்பு தமிழ் சமூகத்தை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. பொதுக் கட்டமைப்பில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி முடிவுகளை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. முள்ளிவாய்க்கால் நினைவு நாளை ஒரு கிராமத்துக்குள், மிகச் சில செயற்பாட்டாளர்களுக்குள் குறுக்கக் கூடாது என்ற கவலை பரவலாக உண்டு.

இவ்வாறான விமர்சனங்களின் பின்னணியில் இனிமேல் திலீபனின் நினைவு நாட்கள் பொறுத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் இயங்கப் போகின்றனவா?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணி கூறுகிறது தாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக நினைவேந்தலுக்கான ஓர் ஏற்பாட்டுக் குழுவை உருவாக்கி வைத்திருப்பதாக.அதற்கு முன்னால் இயக்கத்தவராகிய பொன் மாஸ்டர் பொறுப்பு என்றும் அத்தரப்பு கூறுகிறது. அப்படி ஒரு ஏற்பாட்டுக் குழு இருக்கத்தக்கதாக ஏன் மணிவண்ணன் ஒரு புதிய ஏற்பாட்டு குழுவை உருவாக்க வேண்டும் என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன் வைக்கிறார்கள்.

ஆனால் கஜேந்திரகுமார் அணியின் ஏற்பாட்டு குழு அவ்வாறு ஆறு ஆண்டுகள் இயங்கவில்லை என்று எதிர் தரப்பு கூறுகிறது. தவிர அது ஒரு பொது ஏற்பாட்டு குழுவல்ல என்றும்,அது ஒரு கட்சியின் ஏற்பாட்டுக் குழுவே என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மாறாக மணிவண்ணன் உருவாக்கிய பொதுக் கட்டமைப்பானது,அதை உருவாக்கியது மணிவண்ணன் என்பதற்கும் அப்பால் பொதுத்தன்மை மிக்கது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதில் இணைப்பாளராக காணப்பட்ட பார்த்திபன் ஏனைய உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதிலிருந்து விலகிவிட்டார்.எனவே அதில் கட்சி உறுப்பினர்கள் யாரும் இருக்கவில்லை என்றும் அப்பொது ஏற்பாட்டுக் குழு கூறுகிறது.

ஆனால் இந்த விளக்கத்தை கஜன் அணி ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவுதான் திலீபனின் தூபிக்கு முன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு.

அதாவது நடைமுறையில் இரண்டு ஏற்பாட்டுக் குழுக்கள் செயற்பட்டன என்பதே உண்மை நிலை.இதில் கஜன் அணியின் ஏற்பாட்டுக் குழு மணிவண்ணன் உருவாக்கிய பொது ஏற்பாட்டுக் குழுவை எதிர் நிலைக்கு தள்ளியது என்றும், கடைசி நாளன்று அந்தப் பகுதியை அவர்கள் கைப்பற்றி வைத்திருந்தார்கள் என்றும், அதற்குள் ஏனையவர்கள் உள் நுழைவதை கட்டுப்படுத்தினார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு கஜன் அணியின் ஏற்பாட்டு குழு நினைவுத்தூபியை கைப்பற்றி வைத்திருந்த காரணத்தால்தான் காவடிகள் வந்து சேர்ந்ததும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் காவடிகள் வரப்போவதையும், அவை நிலைமைகளைக் குழப்பும் உள்நோக்கம் உடையவை என்பதையும் முன்னூகித்த காரணத்தால்தான் கஜன் அணி நினைவுத்தூபியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என்று ஒரு விளக்கம் முன்வைக்கப்படுகிறது.

இதில் எது சரியான விளக்கம் என்ற விவாதங்களுக்கும் அப்பால், திலீபன் நினைவு நாள் பொறுத்து இரண்டு ஏற்பாட்டு குழுக்கள் செயல்பட்டன என்பதே நடைமுறை உண்மையாக இருந்தது.இனிவரும் காலங்களிலும் நினைவு நாட்கள் பொறுத்து அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் தோன்றக்கூடிய வாய்ப்பு உண்டா?

ஏற்கனவே பல கட்சிகளாக, பல செயற்பாட்டு அமைப்புக்களாக,பல நினைவு நாட்களாக,காணாமல் போனவர்களுக்கான அமைப்புகளாக, பிளவுண்டிருக்கும் ஒரு சமூகமானது,இப்பொழுது நினைவுகூர்தல் பொறுத்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டமைப்புகளாக பிளவுபடப்போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதா? எல்லாவற்றிற்கும் ஆளுக்கு ஒரு அமைப்பை கட்டி வைத்திருக்கும் தமிழ்ச் சமூகம், நினைவு கூர்தல் பொறுத்தும் அவ்வாறு பல ஏற்பாட்டுக் குழுக்களை கட்டியெழுப்பப் போகின்றதா?

அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரளும் வாய்ப்புகள் மேலும் பலவீனமடைகின்றன என்று பொருள்.அரசியலில் மிகவும் உணர்ச்சிகரமான நினைவு கூர்தல் பரப்பிலேயே ஒன்றாகத் திரள முடியாத மக்கள்,பிறகு எந்த விடயத்தில்தான் ஒன்றாகத் திரளப் போகிறார்கள்? ஒன்றாகத் திரண்டு தங்களுக்கான நீதியை எப்பொழுது பெறப்போகின்றார்கள்?எப்படிப் பெறப்போகின்றார்கள்?

https://athavannews.com/2022/1302290

ஜெனீவா தீர்மானங்கள் சார்ந்து இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும்

5 days 14 hours ago
ஜெனீவா தீர்மானங்கள் சார்ந்து இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும் (பகுதி I)
np_file_177637.jpeg?resize=1200%2C550&ss

Photo, Japantimes

“இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் ஜெனீவாவுக்கு வர வேண்டும்?” – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 2022 செப்டெம்பர் 16ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) தீர்மானம் குறித்த முறைசாரா கலந்துரையாடலில் பேசும்போது இவ்வாறு வினவினார்.

ஜெனீவாவில் உள்ள பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) தீர்மானத்துக்கு அமைய 2006 இல் அமைக்கப்பட்டது. இது இலங்கை உட்பட 193 ஐ.நா. உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மாற்றீடாக நிறுவப்பட்டது. 193 ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நாடுகளிலிருந்து 47 நாடுகளை தேர்ந்தெடுக்கின்றன. இலங்கை 2006 – 2008 வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை பெற்றிருந்தது. ஆனால், 2008இல் உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இலங்கையின் வேட்புமனு தோற்கடிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒரு வேட்பாளராக இலங்கை தன்னை முன்னிறுத்தவில்லை.

ஜெனீவாவில் உள்ள மற்றுமொரு முக்கியமான மனித உரிமைகள் சார்ந்த ஐ.நா. நிறுவனம் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம்  (OHCHR) ஆகும். இது HCHR தலைமையிலான பணிக்குழாம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது 1993 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக நிறுவப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் இலங்கை தொடர்பான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கைகள்

2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்து ஒன்பது நாட்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையானது அப்போதைய இலங்கை அரசாங்கம் கோரிய வரிகளுடன் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தது. அதன் ஒட்டுமொத்த தொனியானது இலங்கை அரசாங்கத்தை பாராட்டுவதாக இருந்தது.  2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில், இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த நிலைமை குறித்து மென்மையான விமர்சனத்தை வெளிப்படுத்தியதுடன், பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உள்நாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தின.  2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் இலங்கை தொடர்பில் விரிவான ஒரு விசாரணையை நடத்துமாறு கோருவதற்கு முடிவெடுத்தது. இந்தத் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது.

2015ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்துக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டது. இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனான வாக்களிப்பு அற்ற “ஒருமித்த தீர்மானத்தில்” அவை பிரதிபலித்தன.  2021ஆம் ஆண்டில் புதிய அரசாங்கமானது 2015ஆம் ஆண்டின் ஒருமித்த தீர்மானத்தை இனி மதிக்க மாட்டோம் என அறிவித்ததன் பின்னர் சாட்சியங்களை சேகரித்து பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக வாக்கெடுப்பு மூலம் புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2009 தொடக்கம் 2021 வரையிலான காலப்பகுதியில் இலங்கை மீதான ஐந்து தீர்மானங்களின் வாக்கெடுப்புகளை உற்று நோக்கும்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கான ஆதரவானது வியத்தகு அளவில் இழக்கப்பட்டதைப் பிரதிபலிக்கிறது. இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 2009, 47 இல் 29 ஆக இருந்து 2021, 47 இல் இருந்து 11 ஆக குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 34 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் பெருமளவிலான ஆதரவு இழப்பு ஏற்பட்டுள்ளது.

  2009  2012 2013 2014 2015/2017/2019 2021 இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோர் 29 15 13 12 வாக்களிப்பு இல்லை (ஒருமித்த தீர்மானம்) 11 இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்தோர் 12 23 25 23 22 வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதோர் 6 9 9 12 14

2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமும் இலங்கை மீதான ஏனைய அனைத்து தீர்மானங்களும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை கண்காணித்து அதனை மீண்டும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை செய்யுமாறு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தைக் கேட்டுக் கொண்டன. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கைகள் போருக்குப் பிந்தைய வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள், குறிப்பாக தமிழ் மக்கள், வெலிக்கடை சிறைப் படுகொலை போன்ற அடையாள வழக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் காணாமலாக்கப்படுல், இராணுவமயமாக்கல், கொவிட்-19 தொடர்பான கரிசனைகள், கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் மத சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் நிலைமை மற்றும் அண்மைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் போன்ற பல்வேறு மட்டத்தில் இலங்கையர் எதிர்நோக்கும் முக்கியமான மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை இனங்கண்டுள்ளன.

இவ் அறிக்கைகள் இலங்கையரின் மனித உரிமைகள் மீதான நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கங்களை ஆய்வு செய்து நிறுவன ரீதியான, சட்டரீதியான மற்றும் கொள்கைசார் மாற்றங்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பிலும் விசேடமாக குறித்துக்காட்டியுள்ளன. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பரிந்துரைகளில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தல், பொறுப்புக்கூறலை மேம்படுத்த உலகளாவிய அதிகார எல்லையினைப் பயன்படுத்துதல், அத்துடன் சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடை போன்ற நடவடிக்கைகளும் உள்ளடங்குகின்றன.

புதிய தீர்மானம்

கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற இலங்கை தொடர்பிலான முக்கிய நிகழ்வானது மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான மிக சமீபத்திய அறிக்கையாகும். இது எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருவதால், இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு, பின்னர் பொதுவெளியில் வெளியிடப்பட்டு திறந்த விவாதத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான வரைவுத் தீர்மானத்தின் மீது நான் கவனம் செலுத்துகிறேன்.

செப்டம்பர் 16ஆம் திகதியன்று ஜெனீவா நகரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்கு மசிடோனியா, மொண்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய குழுவைக் கொண்டமைந்த “உள்ளீட்டுக் குழு” தலைமையில் “முறைசாராதவை” எனப்படும் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வரைவு தீர்மானத்தைத் நிராகரித்து அவை நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உள்ள பெரும்பான்மையான அரசாங்கங்கள் முன்வைக்கப்பட்ட வரைவின் வாசகங்களின் வழியே ஒருவேளை தீர்மானத்தை ஆதரிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது தீர்மானத்தின் உரையை கடுமையாக நீர்த்துப்போகச் செய்யத்தக்க முன்மொழிவுகளை முன்வைத்தது. வகைக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான எந்தவொரு சர்வதேச தலையீட்டையும் அது நிராகரித்ததோடு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் அன்றைய அரசாங்கம் 2015இல் வழங்கிய உறுதிமொழிகள் பற்றிய குறிப்பையும் நிராகரித்து 2021ஆம் ஆண்டின் தீர்மானம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது எனவும் வலியுறுத்திக்கூறியது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நிறுவிய ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தீர்மானமானது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கான பேரவையின் அதிகாரத்தை வெளிப்படையாகக் குறிப்பிட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கட்டளைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறியது.

கியூபா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஈரான், மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தன. அயர்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே, பிரான்ஸ், லக்சம்பர்க், நெதர்லாந்து, லிச்சென்ஸ்டைன், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் வரைவுத் தீர்மானத்தை ஆதரித்தபோதிலும் வரைவுத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவில்லை.

மொத்தம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இரு கலந்துரையாடல்களின் போது இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அரச சார்பற்ற பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 15 நிமிடங்களில் பேசிய நால்வரில் சந்தியா எக்னெலிகொடவும் ஒருவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி தேடி ஜெனிவாவுக்குப் பயணித்ததை நினைவு கூர்ந்த அவர், இன்னும் எத்தனை வருடங்கள் தானும் தன்னைப் போன்றவர்களும் ஜெனீவா நகருக்கு வர வேண்டும் என அரசாங்கங்கள் எதிர்பார்க்கின்றன என்று வினவினார்.

தீர்மானத்தின் உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல்

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் செயன்முறையானது 2009ஆம் ஆண்டு முதல் மெதுவான முன்னேற்றத்தைக் கண்டு வந்ததோடு, 2014ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினது தலைமையிலான விசாரணை, 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகள் மற்றும் 2021ஆம் ஆண்டு சாட்சியங்களை சேகரிக்கும் செயன்முறை ஆகியன அதன் மைல்கற்களாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில், 2022ஆம் ஆண்டினது வரைவுத் தீர்மானமானது 18 மாதங்களுக்கு முன்னதாக 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து எந்தவொரு முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தற்போதைய வரைவுத் தீர்மானமானது பொருளாதார நெருக்கடி, பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடலுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரான உரிமை மீறல்கள் என்பனவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான சில புதிய வாசகங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போது 2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தை ஒத்ததாகவே உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் எதுவும் இல்லை.

இலங்கையின் நிலைமையை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் வரைவுத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் பின்வருமாறு:

 • நிகழ்ந்து வரும் உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு சுயாதீன நிபுணர் பொறிமுறையை நிறுவுதல், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, ஐ.நா. பொதுச்சபை ஆகியவற்றுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக அறிக்கை அனுப்புதல்.
 • தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தல் (அவ்வாறான அழைப்பு 2014 தீர்மானத்தில் இருந்தது. ஆயினும் 2021 தீர்மானத்திலும், தற்போதைய வரைவிலும் அது இல்லை)
 • தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐ.நாவுடன் ஒத்துழைக்கும் இலங்கையர்களைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தல்.
 • தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பழிவாங்கல்களுக்கு முகங்கொடுக்கூடியவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு அடிப்படையிலான பொறிமுறைகளை நிறுவ ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா. அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தல். தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது மிகவும் அவசியமாகும்.
 • மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான சமீபத்திய அறிக்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க புதிய சேர்க்கைகளில் ஒன்றாக “பொருளியல் குற்றங்கள்” என்ற வார்த்தையைப் பிரயோகித்தல்.
 • பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுகையில், போர்க்கால அட்டூழியங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் ஆகியவற்றை விசேடமாகக் குறிப்பிடுதல். (செயற்பாட்டுப் பந்தி [OP] 😎
 • இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றுக்கு இடையேயான பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை வரவேற்கும்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாக மனித உரிமைகள் மீது ஏற்படத்தக்க எதிர்மறை தாக்கங்களுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பான எச்சரிக்கை செய்தல் (முன்னுரை பந்தி [PP] 8).
 • அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும்போது முன்னைய அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களது உள்ளீடு மற்றும் பணிகளை கருத்திற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கவனித்தல் (முன்னுரை பந்தி 13).
 • ஐ.நா. விசேட நடைமுறைகளின் பரிந்துரைகளை (பரிசீலிப்பதோடு மட்டும் நில்லாது) நடைமுறைப்படுத்தவும், ஐ.நா. கூட்டு ஒப்பந்த அமைப்புகளால் செய்யப்பட்ட பரிந்துரைகளையும் உள்ளடக்குவதற்கும் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தல் (செயற்பாட்டுப் பந்தி 2).
 • சிவில் சமூகத்தை வேவு பார்த்தல், அச்சுறுத்துதல் மற்றும் துன்புறுத்துதல் என்பன தொடர்பில் அக்கறையை வெளிப்படுத்தும்போது மாணவர் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், மதத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஆகியோரை விசேடமாகக் குறித்துரைத்தல் மற்றும் அவர்களது பாதுகாப்புக்காக அழைப்பு விடுத்தல் (செயற்பாட்டுப் பந்தி 5 மற்றும் செயற்பாட்டுப் பந்தி 13).
 • தாமதங்கள் மற்றும் ஜனாதிபதி மன்னிப்பு (OP7) ஆகியவற்றுக்கு மேலதிகமாக அடையாள வழக்குகளில் சட்டமா அதிபரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுவதனால் நீதி குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவது பற்றி குறிப்பிடுதல் (செயற்பாட்டுப் பந்தி 7).
 • அடையாள வழக்குகள் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில் வழக்குத்தொடுத்தல் தொடர்பில் குறிப்பிடும்போது இவ் அனைத்து வழக்குகளிலும் வழக்குத்தொடுத்தல் நிகழ வேண்டுமென்பதால் பிரயோகிக்கப்பட்டிருக்கும் இடங்களில் “எனின்” என்ற வார்த்தைகளை அகற்றுதல் (செயற்பாட்டுப் பந்தி 10 மற்றும் செயற்பாட்டுப் பந்தி 11).
 • 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐந்தாவது அமர்விற்குப் பதிலாக 2023 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 52ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான அடுத்த வாய்மொழி மூலமான முன்னேற்ற அறிக்கையை முன்வைக்குமாறு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தைக் கோருதல் (செயற்பாட்டுப் பந்தி 18).

முன்னோக்கிய வழி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அணுகுமுறையானது மேலும் கால அவகாசம் கோருதல் மற்றும் புதிய வாக்குறுதிகளை வழங்குதல் என்பதாகவே தெரிகிறது. ஆனால், களத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாது வழங்கப்படும் வாக்குறுதிகள் பெரிதாக கருத்திற்கொள்ளப்பட வாய்ப்பில்லை. தனது பொதுமக்களுக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் வாக்குறுதிகளை வழங்குவதும் அவற்றை மீறுவதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களின் தனிச்சிறப்பாகக் காணப்படுவது கண்கூடு.

உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு முன் ஜூன் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி அமர்வில் அன்றைய வெளியுறவு அமைச்சர் பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால், கடந்த மாதம் மூன்று மாணவர் தலைவர்கள் PTA இன் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  2015ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கம் (பிரதமராக விக்கிரமசிங்கவும் இருந்தார்) வெளிநாட்டு நீதிபதிகள், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள், அங்கீகரிக்கப்பட்ட வழக்குத்தொடுநர்கள் மற்றும் புலனாய்வாளர்களைக் கொண்ட நீதித்துறை பொறிமுறையை அமைக்க ஒப்புக்கொண்டது. ஆனால், வரைவுச் சட்டத்தை கூட நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை ஆகியவற்றின் கண்காணிப்பு மற்றும் விமர்சனபூர்வமான கருத்துரைகளை நிறுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கான ஒரே வழி தற்போது நிகழ்ந்துவரும் உரிமைகள் தொடர்பான மீறல்களை நிறுத்துவது அல்லது குறைந்தபட்சம் குறைப்பது மற்றும் போர்க்கால அட்டூழியங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், பொருளியல் குற்றங்கள், ஊழல், ஒடுக்குமுறை உள்ளிட்ட கடந்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையையும் நீதியையும் உறுதிப்படுத்துவது மட்டுமே ஆகும்.

ruki_fernando-e1664346869525.jpg?resize=ருக்கி பெர்னாண்டோ

2022 செப்டெம்பர் 20ஆம் திகதி ‘தி மோர்னிங்’ பத்திரிகையில் Sri Lanka’s past and future with Geneva resolutions என்ற தலைப்பில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம்.

 

 

https://maatram.org/?p=10370

 

திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்

1 week ago
திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்

புருஜோத்தமன் தங்கமயில்

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். 

உலகம் பூராவும் விடுதலைக்கான கோரிக்கையுடன் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகங்களின் குரல்களை அடக்குவதற்காக, ஆக்கிரமிப்பாளர்களும் ஆட்சியாளர்களும் போராட்டங்களுக்குள் பொறுக்கிகள், ரவுடிகள், குழப்பவாதிகளை இறக்கிவிடுவது வழக்கம். அதுவும், போராடும் தரப்புக்குள் இருந்தே புல்லுருவிகளை இனங்கண்டு, கூலிப்படையாக ஆட்சியாளர்கள் மாற்றுவார்கள். அது, போராட்டங்களை இலகுவாக தோற்கடிப்பதற்கான  உத்திகள்.

விடுதலைப் புலிகளின் தோல்விக் கட்டங்களில், கருணாவின் பிளவு முக்கிய பங்கை வகித்தது. அதனை, இன்றைய ஜனாதிபதியும் அன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிகரமாக நிகழ்த்தியவர் என்ற விமர்சனம் உண்டு. 

இன்றைக்கும் அவர், தமிழ்த் தேசிய அரசியலை குண்டர்கள், கூலிப்படைகளைக் கொண்டு மெல்ல மெல்ல நீக்கம் செய்ய தொடங்கியிருக்கின்றார் என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மட்டத்தில் உண்டு. அதனை, தமிழ்த் தேசியத்தின் போர்வையில் உலவும் சில கட்சிகளினதும் குழுக்களினதும் செயற்பாடுகள் நிரூபிப்பதுபோல் உள்ளன. 

தியாகி திலீபனின் 35ஆவது நினைவு நாளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள், வேலன் சுவாமி குழு உள்ளிட்டவர்கள், நல்லூரில் நிகழ்த்திய அயோக்கியத்தனங்களைப் பார்த்தால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து மக்களை அகற்றுவதற்காக, இந்தத் தரப்புகள் எவ்வளவு மும்முரமாக இயங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

இந்தத் தரப்புகளிடம், குறுகிய சுயநல அரசியல் இலாப நோக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில், வாக்குகளை முன்னிறுத்திய அரசியல் பிரதானமானது. அதற்காக, குரங்குகள் மாதிரி குட்டிக்கரணங்களை போட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில், தியாகி திலீபன் ஒரு குறியீடு. காந்தியின் வழியாக உலகத்துக்கு அஹிம்சை போதித்த பாரத தேசத்துக்கே, திலீபன் அஹிம்சை போதித்தவர்; ஓர் ஆயுதமுனை போராட்ட இயக்கத்துக்குள் இருந்து, அஹிம்சை வழியில் போராடி உயிர்நீத்தவர் என்ற அடையாளத்தைப் பெற்றவர். அவரின் ஆகுதிப் பயணம், தமிழ்த் தேசிய போராட்டத்தினை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களை இழுத்து வந்தது. 

அப்படிப்பட்ட ஒருவரின் நினைவிடத்தில், கட்சிகளின் ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இயங்கும் பொறுக்கிகள், காவாலிகள், கூலிக் குண்டர்கள் நின்று, ஏட்டிக்குப் போட்டியாக தகாத வார்த்தைகளால் சண்டையிட்டு, நினைவு கோரலுக்கான வெளியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். 

அங்கு சாதாரண ஒரு தமிழ் மகனோ, மகளோ கட்சி, குழு அரசியலுக்கு அப்பால் நின்று அஞ்சலி செலுத்துவதற்கான கட்டங்களை முன்னணியினரும், ஜனநாயகப் போராளிகளும், வேலன் சுவாமி குழுவும் நிராகரித்தார்கள். 

நினைவுகூரலுக்கான கட்டம் எவ்வளவு ஆத்மார்த்தமாக முன்னெடுக்கப்பட வேண்டுமோ அதுவெல்லாம் தகர்த்தப்பட்டு, ஏட்டிக்குப் போட்டியாக நினைவுச்சுடர் ஏற்றி, பொதுச்சுடரை தூக்கி வைத்துக்கொண்டு இழுபறிப்பட்டு அலங்கோலமாக்கினார்கள். இவ்வளவு அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிய தரப்புகள் எல்லாமும், திலீபனை அவமானப்படுத்தி ஆனந்தப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான வெளியை, பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கி வந்திருக்கின்றது. நெருக்கடி காலங்களில் எல்லாம், பெரும் அர்ப்பணிப்போடு தமிழ் மக்கள் நினைவேந்தல்களை முன்னெடுத்திருக்கிறார்கள்; இராணுவத்தினரின் நெருக்கடிகளைத் தாண்டியிருக்கிறார்கள். 

ஆனால், இம்முறை சிங்கள மேலாதிக்கத் தரப்பு, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றது. அதுவும், பிரித்தாளும் உத்தியையும் கூலிப்படைகளையும் இறக்கிவிட்டு பார்த்துக் கொண்டது. தென் இலங்கையின் எதிர்பார்ப்பை முன்னணியும் ஜனநாயகப் போராளிகளும் வேலன் சுவாமி குழுவும், கொஞ்சமும் குறையாமல் நிறைவேற்றியிருக்கின்றன.

‘முன்னணி’ என்கிற முகப்புப் பெயரில் இயங்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் வாக்குக்கான அரசியல் என்பது, தொடர்ச்சியாக கறுப்புப் பக்கங்களால் நிரம்பியது. அமைச்சுப் பதவிக்காக ஜீ.ஜீ பொன்னம்பலம், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுக்காது, காங்கிரஸில் இருந்து தந்தை செல்வா வெளியேறி, தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். 

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், கட்சி கூட்டங்கள் எங்கு நடந்தாலும், அங்கு காங்கிரஸின் குண்டர்களும் கூலிப்படையினரும் கூட்டங்களுக்குள் புகுந்து, ரௌடித்தனங்களைப் புரிவது வழக்கம். அதுவும், கூட்டத்தில் கூடியிருக்கும் மக்களை நோக்கி, உயிருள்ள பாம்புகளை எறிவது வழக்கம். அதனை, காங்கிரஸார் கூட்டத்தை கலைக்கும் உத்தியாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

சீனியர் பொன்னம்பலம் காலத்தில் காங்கிரஸார் அரங்கேற்றிய ரௌடித்தனத்தை, ஜுனியர் பொன்னம்பலத்தின் காலத்திலும் அவர்கள் விடுவதாக இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஆதரவாளர்கள் என்கிற பெயரில், குண்டர்களையும் ரௌடிகளையுமே  தொடர்ச்சியாக வளர்த்து வந்திருக்கிறார்கள். 

ஏனெனில், ஆதரவாளர்கள் என்கிற கட்டம், கேள்வி கேட்கும் கட்டங்களைக் கொண்டது. குண்டர்களுக்கோ, ரௌடிகளுக்கோ கேள்வி கேட்கும் அதிகாரம் ஏதும் இல்லை; அவர்கள், ஏவல் அடிமைகள். பொன்னம்பலம் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்வதுதான் அவர்களின் ஒரே வேலை.   

திலீபன் நினைவிடத்தில், காங்கிரஸின் குண்டர்கள் மஞ்சள் நிற ரீ சேர்ட்டுக்களோடு நின்று அரங்கேற்றிய அடாவடிகளே அவற்றுக்குச் சாட்சி. நினைவேந்தலுக்கான உரிமை பற்றி, பாராளுமன்றத்துக்குள் மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் அதனை, நியாயமாக மக்கள் அனுஷ்டிப்பதற்கான கட்டங்களை முடக்காது இருக்க வேண்டும். 

தென் இலங்கையில் பொங்கிவிட்டு வந்து, மக்கள் அஞ்சலிப்பதற்கான கட்டங்களை கட்சியின் குண்டர்களை வைத்து குழப்பித் தடுக்கக் கூடாது.  நல்லூரில் காங்கிரஸின் குண்டர்கள் அடாவடி புரிந்து கொண்டிருக்க கஜேந்திரகுமார் அதனை பார்த்திருந்தது, அற்பத்தனமாக அரசியல்.

ஜனநாயகப் போராளிகள் என்கிற பெயரில், கட்சியை நடத்தும் முன்னாள் போராளிகள் சிலரும் அபத்தமான அரசியலை தொடர்ச்சியாக செய்ய எத்தனிக்கிறார்கள். அவர்கள் நினைவேந்தலுக்கான வெளியை காங்கிரஸ் கட்சியினர் போன்றே, மோசமான வழிகளில் குழப்பும் அணுகுமுறையோடு செயற்பட்டிருக்கிறார்கள். 

தமிழ்த் தேசிய போராட்டத்தில் முன்னாள் போராளிகளின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது. அதனை எந்தவொரு தருணத்திலும் நிராகரிக்க முடியாது. ஆனால், முன்னாள் போராளிகள் என்கிற பெயரை வைத்துக் கொண்டு, அற்பத்தனமான நடவடிக்கைகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியிலுள்ள சிலர் இயங்குகிறார்கள். அதுவும், நினைவேந்தலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்கான வேலைகளை ஆற்றியமை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

நினைவேந்தலை ஓர் ஒழுங்கில் நடத்துவதற்குப் பதிலாக, ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடுகளுடன் அணுக வேண்டும் என்பது எந்தத் தருணத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தமிழ்த் தேசிய அரசியலில் தன்னை புதிய மீட்பராக காட்டிக் கொண்டு, வேலன் சுவாமி எனும் நபர் யாழ்ப்பாணத்தில் வலம் வருகிறார். அவர், ‘பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை’க்கான மக்களின் போராட்டத்தை தன்னுடைய போராட்டமாக அபகரித்த ஒருவர். அவரின் நோக்கம் பலத்த சந்தேகங்களுக்கு உட்பட்டது. 

விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலுக்குள் முடிவை அண்மித்துக் கொண்டிருந்த காலத்தில், கொழும்பில் சின்மயா மிஷன் எனும் அமைப்பில் ‘சுவாமிஜி’ என்ற வேடத்தில் இருந்தவர். பின்னரொரு காலத்தில் யாழ்ப்பாணம் வந்த அவர், சின்மயா மிஷனோடு பிணக்கப்பட்டு ‘வேலன் சுவாமி’யாக மாறினார். அவரின் செயற்பாடுகளில், ‘தமிழர் நலன்’ என்பதைத் தாண்டி, பிறத்தியரின் நலன்களே அதிகமாக இருப்பதான சந்தேகம் உண்டு.  

இம்முறை திலீபன் நினைவேந்தலை அவரும் கையகப்படுத்த முனைந்தார். ஆனால், அவரைத் தாண்டிய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களுமாக, காங்கிரஸ் கட்சியினரும் ஜனநாயகப் போராளிகளும் போட்ட அடிதடிக்கும் வேலன் சுவாமி தூக்கி எறியப்பட்டுவிட்டார்.

தமிழ் மக்களுக்கு நினைவேந்தலுக்கான வெளி கிடைத்தாலும் அதனை வாக்குப் பொறுக்கி அரசியல்வாதிகளும், வெளித்தரப்புகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தரப்புகளும் ஒருபோதும் அனுமதிக்காது. 

அப்படியான நிலையில், தமிழ்ச் சமூகம், ஒவ்வொரு நினைவேந்தலுக்குமான பொதுக் கட்டமைப்பை நோக்கி நகர வேண்டும். அந்தக் கட்டமைப்புக்குள், தமிழ்த் தேசிய கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சமயப் பெரியார், முன்னாள் போராளிகள்,  பெற்றோர், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் உள்வாங்கப்பட வேண்டும். 

இல்லையென்றால், திலீபனின் நினைவிடத்தில் அரங்கேற்றப்பட்ட அசிங்கத்தை, முள்ளிவாய்க்காலிலும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நிகழ்த்துவதற்கு தயங்கமாட்டார்கள்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திலீபனை-அவமானப்படுத்திய-விடாக்கண்டன்களும்-கொடாக்கண்டன்களும்/91-304972

 

அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது

1 week 1 day ago
அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது

By DIGITAL DESK 5

27 SEP, 2022 | 11:20 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

 

உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது.நீண்ட வரிசைகளை இப்போது காணவில்லை.ஆட்டோ டீசலுக்கான பங்கீட்டு முறை அதற்கான கிராக்கியை பயனுடைய விதத்தில் கட்டுப்படுத்தி டொலர்களை சேமிக்க உதவுகிறது.சமையல் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது.இந்த அத்தியாவசிய பொருட்கள் சகலதினதும்  விலைகள் மூன்று மடங்கு அதிகரித்து பணவீக்கத்தை உயர்த்தியிருக்கிறது.

ஆனால், உயர்ந்த மட்ட வருமானம் பெறுபவர்களினால் இரண்டு அல்லது மூன்று மடங்கு விலைகளால் வாங்கக்கூடியதாக இருப்பதால் முன்னரைப் போன்று நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியதில்லை என்பது குறித்து அவர்கள் திருப்பதியடைகிறார்கள்.அவர்கள் இனிமேலும் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களாக இல்லை.உண்மையில் அவர்களில் பலர் அறகலய மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையின் ஆதரவாளர்களாகக் கூட மாறிவிட்டார்கள்.

போராட்ட இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் பணக்காரர்களும் வறியவர்களும் கடுமையான தட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருட்கள், மின்சாரம் இன்மை காரணமாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.மாற்றத்துக்காக நாடளாவிய ரீதியில் ஐக்கியப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.அதுவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தை வீழ்த்தியது.அந்த ஐக்கியப்பட்ட கோரிக்கை இப்போது இல்லை.ஏனென்றால் கையில் பணம் உள்ளவர்களினால் உயர்ந்த விலைகளில் பெ்ருட்களை வாங்கக்கூடியதாக இருக்கிறது.அவர்கள் தங்களின் வழமை வாழ்வுக்கு திரும்பிவிட்டார்கள்.

வாழ்க்கையை சமாளிக்க முடியுமென்பதால் அவர்கள் வீதிப்போராட்டங்கள் இல்லாத வாழ்வை விரும்புகிறார்கள்.ஆனால் பெரும்பான்மையானவர்களினால் தங்களது பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பமுடியாமல் இருக்கிறது.அவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி சந்தேகத்துக்கிடமின்றி ஒரு கிளர்ச்சித் திருப்பத்தை எடுக்கும். தொடரும் மாணவர் போராட்டங்களில் இதற்கான அறிகுறிகளைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு அதிகாரத்தை தன் கையில் எடுத்திருக்கிறார். அவரின் கீழ் அரசின் பிரதான அம்சமாக போராட்ட இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.அவர் அதிகாரத்துக்கு  வந்த பிறகு பெருமளவு மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு விலைவாசி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது.பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னதாக அந்த மக்கள் விளிம்புநிலையில்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.வழமை வாழ்வைத் தொடரக்கூடிய வருமானம் இல்லாத அந்த மக்களின் பிரதிநிதிகள்தான் தொடர்ந்தும் போராடுகின்ற பல்கலைக்கழக மாணவர்கள்.கடந்த வாரம் கொழும்பில் அந்த மாணவர்களின் போராட்டம் வன்முறை மூலமாக கலைக்கப்பட்டதுடன் 80  பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஒரு ஐந்து வருட இடர்பாடுகளுக்கு பின்னரே பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தற்போது தோன்றுகிறது.அதனால் இன்னும் ஒரு ஐந்து வருடங்களுக்கு அடக்குமுறை சாத்தியமா அல்லது விரும்பத்தக்கதா என்பதை ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் சிந்தித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகும்.

மேலும் கடன்களைப் பெற்று பழைய நடைமுறைகளையே தொடருவதன் மூலம் நெருக்கடியின் அறிகுறிகளைத் தணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணிகளை கையாளத்தவறியதைப் போன்று அறகலயவைக் கொண்டுவந்த அடிப்படைக் காரணிகளை கையாளவும் அரசாங்கம் தவறுகின்றது.

இனப்பிரச்சினையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதால் மூண்ட போர்  மூன்று தசாப்த காலம் நீடித்தது.அரசியல் தீர்வு காணப்படவில்லை.அதன் விளைவாகவே அரசாங்கம் இன்று ஜெனீவாவில் நெருக்கடியை எதிர்நோக்குகிறது.2009 ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது அமைதி சமாதானத்தின் பயன்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அது சாத்தியப்படவில்லை. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு போன இராணுவ செலவினம் பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் கண்ணியமான வாழ்க்கையை தொடர முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.நீர்ப்பீரங்கி,கண்ணீர்புகை மற்றும் குண்டாந்தடி தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் மாணவர்களைக் கைதுசெய்து நீதிமன்றங்கள் முன் நிறுத்துவதன் மூலமும் பரந்துபட்ட சமுதாயத்துக்கு அரசாங்கம் ஒரு செய்தியைச் சொல்கிறது. பொருளாதாரப் இடர்பாடுகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பதே அந்த செய்தியாகும்.

அரசாங்கத்தின் அக்கறை இரண்டு வகைப்பட்டதாக இருக்கலாம்.முதலாவது, ஆர்ப்பாட்டங்களை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால், மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் இடர்பாடுகள் காரணமாக  அவை மேலும் தீவிரமடைந்து அண்மைய மாதங்களில் காணக்கூடியதாக இருந்ததைப் போன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்விடும்.கொழும்பில்  உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் உச்சபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கிறது என்பதன் அறிகுறி.இரண்டாவது,நிதியுதவி கிடைக்கவேண்டுமானால் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை.

போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் எதிரியின் தாக்குதல்களில் இருந்து இராணுவ தளங்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கில் முன்னர் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை ஜனநாயகத்துக்கு பாதகமானது என்று கண்டனம் செய்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட உத்தரவின் ஏற்பாடுகளை மிக உன்னிப்பாக ஆராயப்போவதாகவும் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு உகந்த சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலப்பகுதியில் அறகலயவின் பலமும் மக்கள் செல்வாக்கும் ஆட்சிசெய்வதற்கான மக்கள் ஆணையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பதைக் காட்டின.இப்போதும் நிலைமை அதுவே. பெருமளவு மெய்க்காவலர்கள் சகிதம் வந்தாலன்றி மற்றும்படி அரசாங்க தலைலர்களினால் வீதிகளில் மக்கள் மத்தியில் கலந்து நிற்க முடியாது. தேசிய பாதுகாப்பு என்ற நிறப்பிரிகை ஊடாகவே அவர்கள் தங்கள் இருப்பை நோக்குகிறார்கள்.

தனது பதவியின் இறுதி நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொருளாதார நெருக்கடியின் உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதற்கு ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய -- பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தேசிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்கக்கூடிய 15 அமைச்சர்களைக் கொண்ட சிறியதொரு அரசாங்கத்தை அமைக்க முன்னவந்ததுடன் 6  மாதங்களில் புதிய தேர்தல்களை நடத்துவதாகவும் அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தபோது அத்தகைய ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வரக்கூடிய ஒரு மதிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் செயற்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதில் அவர் செலுத்திய கவனம் அதிர்ச்சியை தந்தது.ஆனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய தேவையின் அடிப்படையில் அது நியாயப்படுத்தப்பட்டது.அதே போன்றே ஊழலையும் அரசியல்வாதிகள் தங்களை வளப்படுத்துகிற நடைமுறைகளையும் அவர் ஒடுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.

யாழ்ப்பாணம் 

 உதாரணம்

முன்னைய ஜனாதிபதியின் கீழ் அதிகார பதவிகளில் இருந்த -- பொருளாதார நெருக்கடியை தடுக்கத்தவறிய  அதே அரசியல்வாதிகள் குழுவே மீண்டும் நியமிக்கட்ட்டிருக்கிறது. மீண்டும் அவர்களது நியமனம் தீர்வொன்றை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.ஒட்டுமொத்த தேசிய நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு வழிவகுககக்கூடிய திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லையென்றே தெரிகிறது.அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கே அன்றி தீர்வுகளை முன்வைப்பதற்கு பழக்கப்பட்டவர்கள் அல்ல.

இத்தகைய பின்புலத்தில், திட்டங்களுக்கே  பணம்  இல்லாமல் இருக்கும்  ஒரு நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் அமைச்சர்கள் நியமனம் நியாயமற்ற ஒன்று என்று மக்கள் நோக்குகிறார்கள்.அந்த அமைச்சர்களை வெறுப்புடன் நோக்கும் மக்கள் அவர்களை பிரச்சினையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள்.இந்த அரசியல்வாதிகள் குழு முழுமையும் போகும்வரை பிரச்சினையும் போகாது என்றே மக்கள் நம்புகிறார்கள்.

இத்தகைய இருளார்ந்த சூழ்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விச் சமூகம் ஒரு முன்னுதாரணத்தை வகுத்திருக்கிறது.மாணவர்களை தண்டிப்பதற்கு  பதிலாக அவர்களது மனங்களை வென்றெடுப்பதற்கு அரசாங்கம் அந்த உதாரணத்தை பின்பற்றலாம்.தனது மாணவர்கள் காலையில் உணவருந்தாமல் வகுப்புக்களுக்கு வருவதை ஒரு  விரிவுரையாளர் அவதானித்ததையடுத்தே இது ஆரம்பமானது.தனது வகுப்பில் மாணவர்களுக்கு பிஸ்கற் மற்றும் வாழைப்பழத்தை அவர் கொடுக்கத்தொடங்கினார்.

அடுத்து அவர் இலவச உணவு வழங்குவதற்கு பங்களிப்புச் செய்ய தனது சகாக்கள் இருவரை ஊக்கப்படுத்தினார்.இது மூன்று மாதங்களாக தொடருகிறது.இன்று அந்த சமூக நடவடிக்கை தினமும் 1200 க்கும் அதிகமான  மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கக்கூடிய ஒரு மட்டத்துக்கு வளர்ச்சியடைந்துவிட்டது.

நல்லிணக்கம் மற்றும் நீதி மீது கொண்டிருக்கும்  பற்றுறுதிக்கான சான்றை வெளிக்காட்டுமாறு ஜெனீவாவில் ஐக்கிய்நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடரில் அரசாங்கத்திடம் கேட்கப்படுகின்ற ஒரு நேரத்தில் யாழ்ப்பாண கல்வியாளர்கள் அரசாங்கம் தேசிய ரீதியில் முன்னெடுக்கவேண்டிய திட்டத்துக்கான உணர்வை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.நாட்டின் சகல பாகங்களில் இருந்து வரும்  வேறுபட்ட இனங்கள் மதங்களைச் சேர்ந்த தங்களது மாணவர்களுக்கு அந்த கல்வியாளர்கள் சமூக உணவகம் ஒன்றை நிறுவியமை நடைமுறையில் ஒரு தேசிய நல்லிணக்கச் செயற்பாடாகும்.

 சிவில் சமூக செயற்பாடுகள் என்று பார்க்கும்போது அரசாங்கம் பெரும்பாக மட்டத்தில் முன்னெடுக்கவேண்டிய ஒன்றை நுண்மட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியாளர்கள் செய்துகாட்டியிருக்கிறார்கள்.சிவில் சமூகத்தினால் சமுதாய மட்டத்தில் ஆதரவை பெருக்கமுடியும். முறைமைசார் ஆதரவை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது | Virakesari.lk

பொருளாதார குற்றங்களும் ஜெனீவா செல்கின்றன

1 week 1 day ago
பொருளாதார குற்றங்களும் ஜெனீவா செல்கின்றன

எம்.எஸ்.எம் ஐயூப்

இலங்கை மக்களின் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது, இந்நாட்டு பொருளாதாரத்தை கையாண்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இழைத்த பொருளாதாரக் குற்றங்களின் விளைவாகும் என்றே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கருதுகிறார். 

மனித உரிமைகளுக்கான ஐ.நா பதில் உயர்ஸ்தானிகர் நதா அல் நஷீப், செப்டெம்பர் 13ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த இலங்கை தொடர்பான அறிக்கை மூலம் இது தெரியவந்தது. இலங்கை அரசாங்கம், ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற அந்தச் சொற்பிரயோகத்தை ஏற்க மறுத்துள்ளது.

தற்போது, சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையில் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி, அந்தச் சொற்பிரயோகம் தெளிவற்றது என்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிட்டார். 

image_ff325b663b.jpg

பொருளாதார நெருக்கடிகள் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் முறையற்ற செயற்பாடுகளாலும் ஊழல், மோசடி போன்றவற்றாலுமே ஏற்படுகின்றன. இந்தப் பொதுவான நிலைப்பாட்டில் இருந்து, ஆட்சியாளர்களின் அவ்வாறான நடவடிக்கைகளை, ‘பொருளாதார குற்றங்கள்’ என்று குறிப்பிடுவது பிழையெனக் கூற முடியாது. ஆனால், மனித உரிமைகள் பேரவையின் தலைவர்கள், இதற்கு முன்னர் எந்தவொரு நாட்டின் தலைவர்களின் செயற்பாடுகளையும் இவ்வாறு குறிப்பிட்டதில்லை. 

1980ஆம் ஆண்டு வரை, ‘ரொடேசியா’ என்றழைக்கப்பட்ட தற்போதைய சிம்பாப்வே, கடந்த சில வருடங்களாக இலங்கையைப் பார்க்கிலும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. அதற்கும் காரணம் அந்நாட்டுத் தலைவர்களின் ஊழல்களேயாகும். ஆயினும், அந்த ஊழல் நடவடிக்கைகளை எவரும் ‘பொருளாதார குற்றங்கள்’ என்று குறிப்பிடவில்லை. ஏனெனில், அந்நாட்டு மனித உரிமைகள் மீறல்கள், உலகளவில் பெரிதாக பேசுபொருளாகவில்லை. 

இம்முறை மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில், ‘பொருளாதார குற்றங்கள்’ (Economic crimes) என்ற சொற்பிரயோகம் ஏழு இடங்களில் வந்துள்ளது. ‘மனித உரிமைகள் மீறல்களுக்கும் பொருளாதார குற்றங்களுக்கும் தண்டனை இன்மை உள்ளிட்ட, நெருக்கடியின் அடிப்படை காரணங்களுக்கு தீர்வு காண்பதற்கு, சர்வதேச சமூகம் இலங்கைக்கு உதவுவதை உயர்ஸ்தானிகர் ஊக்குவிக்கிறார்’ என்று ஓர் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனையின்மையை விவரிக்கும்போது, ‘2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஊழல், ‘பொருளாதார குற்றங்கள்’ தொடர்பான பல வழக்குகள், பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி, குற்றங்களையோ அல்லது குற்றப்பத்திரங்களையோ வாபஸ் பெறுவதன் மூலம் கைவிடப்பட்டுள்ளன’  என்று மற்றோர் இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தில், ஊழல்களும் பொருளாதார குற்றங்களும் வெவ்வேறான விடயங்கள் என்ற கருத்து தரப்படுகிறது. ஆனால், அந்த அறிக்கையில் மற்றோர் இடத்தில், ‘ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோம் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைக்கு, புதிய நிர்வாகம் சாதகமான பதிலை வழங்கும் என உயர்ஸ்தானிகர் எதிர்ப்பார்க்கிறார்’ என்று கூறப்படுகிறது. இந்த வசனமானது, ஊழல் என்பது பொருளாதார குற்றங்களில் ஓர் அம்சம் என்ற கருத்தை தருகிறது. எனவே, உயர்ஸ்தானிகரின் ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகம் தெளிவற்றது என்ற அமைச்சர் சப்ரியின் வாதத்தை நிராகரிக்க முடியாது. 

எனினும், ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகம், உயர்ஸ்தானிகரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற அமைச்சர் சப்ரியின் வாதம் சரியானதாகத் தெரியவில்லை. ‘மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் திருடப்பட்ட சொத்துகளை கண்டுபிடிக்கவும் இலங்கைக்கு உதவுமாறு’ உயர்ஸ்தானிகரின் அறிக்கை, மனித உரிமைகள் பேரவைக்கு பரிந்துரை செய்கிறது. 

மனித உரிமைகள் மீது, பொருளாதார குறறங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருப்பின், நிச்சயமாக அந்தக் குற்றங்கள், மனித உரிமைகள் பேரவையினதும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரினதும் அதிகார எல்லைக்குள் வருவதை நிராகரிக்க முடியாது. 

மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், திருடப்பட்ட சொத்துகளை கண்டுபிடிக்கவும், இலங்கைக்கு உதவுமாறு உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்த போதிலும், இலங்கை அரசாங்கம் பொருளாதார குற்றங்கள் இடம்பெற்றதாகவோ பொதுச் சொத்து திருடப்பட்டதாகவோ இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை; ஏற்றுக் கொள்ளும் என்று கருதவும் முடியாது. 

இவ்வாறிருக்க, இலங்கை அரசாங்கம், பொருளாதார குற்றங்கள் தொர்பாக விசாரணை செய்யும் என்றோ திருடப்பட்ட பொதுச் சொத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும் என்றோ கருத, எந்தவோர் அடிப்படையும் இல்லை. எனவே, நடைபெறாத நடவடிக்கைகளுக்கு எப்படி உதவ முடியும்?

மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள், உண்மையிலேயே இலங்கையில் இடம்பெற்று இருக்கின்றனவா? இலங்கை இன்று பாரியதொரு பொருளாதார அழிவையே சந்தித்துள்ளது. 50 பில்லியன் டொலருக்கு மேல், திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் உள்ளது. அதற்கு வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் இல்லை. அதன் காரணமாகவே வெளிநாட்டு செலாவணியைத் தரும் கைத்தொழில்கள், சேவைகளை நடத்திச் செல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. 

நாட்டில் பெரும்பான்மையாக வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மத்தியில் வறுமை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. உலக உணவுத் திட்டத்தால், மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம், அந்த ஆய்வில் கலந்து கொண்ட குடும்பங்களில் 73 சதவீத குடும்பங்கள், அன்றாட உணவு உட்கொள்ளலை குறைத்துக் கொண்டுள்ளன. போஷாக்கின்மையால், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளதாக ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ‘யுனிசெப்’ நிறுவனம் கூறியது. 

2016ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே, ‘யுனிசெப்’ அந்த முடிவுக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார். இலங்கையில், ஏழைகளை போஷாக்கின்மை அவ்வளவு பாதிக்கவில்லை என்று கூறுவதற்காகவே அமைச்சர் அவ்வாறு கூறுகிறார். 

ஆனால், 2016ஆம் ஆண்டைப் பார்க்கிலும், மிக மோசமான பொருளாதார நிலைமையையே கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏழைகள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். 

மருத்துவமனைகளில் பல உயிர்காப்பு மருந்துகளுக்கும் கருவிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்துக் கடைகளில் அவற்றை வாங்குமாறு மருத்துவர்கள், நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையால், மருந்துக் கடைகளிலும் பெரும்பாலான மருந்துகள் இல்லை. இருக்கும் மருந்துகளின் விலையும் கடந்த வருடத்தைப் பார்க்கிலும் குறைந்தது மும்மடங்காக அதிகரித்துள்ளன. 

பல மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களில் சுமார் 500 மருத்துவர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்தும் அறிவிக்காமலும் சேவையைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். 

வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையால், பல கைத்தொழில்கள் முடங்கிவிட்டன; அல்லது, மந்த நிலையில் இயங்குகின்றன. அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் வருமானமின்றி அவதியுறுகின்றனர். பல நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம், கடந்த இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு மக்களின் வருமானம் வேகமாகக் குறையும் நிலையில், விலைவாசி வானளாவ உயர்கிறது. இதனால், நாட்டில் பட்டினி பரவுகிறது. மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உரிமை இழப்பாகும். 

இவை எதுவும் இயற்கை அனர்த்தங்களாலோ, உலக சந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களாலோ வெளிநாட்டு ஆக்கிரமிப்பொன்றாலோ ஏற்பட்டவையல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, தவறான முகாமைத்துவத்தின் விளைவாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கடந்த மே மாதத்தில் கூறியிருந்தார். 

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதாயின், நாட்டில் இடம்பெறும் ஊழல்களைத் தடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறுகிறது.

இலங்கையில் தற்போதைய நிலைமையைப் பற்றி, அமெரிக்க செனட் சபையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையொன்றில், நேரடியாகவே ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஊழல்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இலங்கை, 2022 ஏப்ரல் மாதம், தனது வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து, இலங்கையின் பிணைமுறி கொள்வனவு செய்த ‘சென் கீட்’ தீவைச் சேர்ந்த ஒரு வங்கி, “இலங்கை தம்மிடம் பெற்ற கடனை திருப்பித் தரவில்லை” என்று நியூயோர்க் நகர நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்தது. அந்நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவிலும் ‘ராஜபக்‌ஷர்களின் ஊழல்’களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, பல தசாப்தங்களாக ஆட்சியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளினதும் ஊழல்களினதும் விளைவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும், கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், பொருளாதாரத்தை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளன. அவை மக்களின் உரிமை மீறலாகும். 

எனவே, ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகத்தில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், அவற்றைப் பற்றி இலங்கை அரசாங்கமே விசாரணை செய்ய வேண்டும் என்று, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிடுவது விந்தையான விடயமாகும். 

போர்க் கால உரிமைகள் மீறல் சம்பவங்களைப் பற்றி, 13 ஆண்டுகளாக வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்பதையும் இங்கு நினைவுபடுத்துவது உகந்தது.  
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொருளாதார-குற்றங்களும்-ஜெனீவா-செல்கின்றன/91-304911

 

மார்கோஸ்களும் ராஜபக்‌ஷர்களும்

1 week 2 days ago
மார்கோஸ்களும் ராஜபக்‌ஷர்களும்

on September 27, 2022

pjimage_57.jpg?resize=1200%2C550&ssl=1

Photo, HINDISIP

மேலும் பல அமைச்சர்களை நியமிக்குமாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 20 அமைச்சரவை உறுப்பினர்களுடன் இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட 38 இராஜாங்க அமைச்சர்களையும் சேர்த்தால் தற்போது பதவியில் இருக்கும் அமைச்சர்களின் தொகை 58 ஆகும். அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு மேலும் 10 பேரையும் இராஜாங்க அமைச்சர்களாக இருவரையும் ஜனாதிபதியால் நியமிக்கமுடியும். அதற்காக அமைச்சரவையில் நிச்சயம் நிரப்பப்படவேண்டிய வெற்றிடங்கள் இருப்பதாக அர்த்தப்படுத்தமுடியாது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிபெறுவதற்கு நாடு பெரும் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் சாத்தியமானளவுக்கு குறைந்தபட்ச எண்ணிக்கை அமைச்சர்களுடன் அரசாங்க நிருவாகத்தை நடத்தவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருககும் நிலையில் மேலும் அமைச்சர்களை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை அரசியல்வாதிகளிடம்  இருந்து வந்துகொண்டிருக்கிறது.

அடுத்த அணி அமைச்சர்கள் நியமனத்தின்போது பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் மற்றும் முன்னைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்க பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியிடம் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார். எதிரணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அமைச்சரவையில் இணைவார்கள் என்று கூறிய ரணதுங்க அரசியலமைப்பின் பிரகாரம் மேலும் பத்துப் பேரை அமைச்சரவைக்கு நியமிக்கமுடியும் என்று குறிப்பிட்டார். அமைச்சரவையில் பத்து வெற்றிடங்கள் இருப்பதாக ஏதோ அவை உடனடியாக நிரப்பப்படவேண்டியவை என்ற தோரணையில் அவர் பத்திரிகையொன்றுக்கு கூறியதை காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான இன்றைய அரசாங்கத்துக்கும் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவியில் இருந்து இறங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்கும் இடையில் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. சிலரை தவிர, ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் இருந்தவர்களே இன்றும் முக்கிய அமைச்சர்களாக பதவி வகிக்கிறார்கள். இராஜாங்க அமைச்சர்களைப் பொறுத்தவரையிலும் நிலைமை அதுவே. நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்குகிற அரசியல்வாதிகளை நியமிப்பதை கூட ஜனாதிபதியால் தவிர்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் பொதுஜன பெரமுனவின் ‘பணயக்கைதி’யாக இருக்கிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தபோது கடந்த ஏப்ரல் முற்பகுதியில் கோட்டபாய கேட்டுக்கொண்டதற்கு இணங்க பதவிகளை துறந்தவர்களும் பிறகு மே மாதம் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து இறங்கியபோது கலைந்த அமைச்சரவையில் இருந்தவர்களும் இன்றைய அமைச்சரவையை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நாட்டு மக்களை அவமதிப்பதாகும்.

அது போக, குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், படுமோசமான ஊழல், சட்டத்தின் ஆட்சி சீர்குலைவு மற்றும் இனவாதம் என்று ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகப்படுத்தி நி்ற்பவர்களான ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தில் இருந்து கூண்டோடு வெளியேற வேண்டும் என்பதே மக்கள் கிளர்ச்சியின் பிரதான முழக்கங்களில் ஒன்று. அரசாங்கப் பதவிகளில் இருந்து சில மாதங்கள் விலகியிருந்த ராஜபக்‌ஷர்கள் மீண்டும் தலைகாட்டத் தொடங்குகிறார்கள். ராஜபக்‌ஷர்களை பதவிகளில் மீண்டும் அமர்த்துவதை ஜனாதிபதி விக்கிரமசிங்க விரும்பவில்லை என்று கூறப்பட்ட போதிலும், அவர்களை அமைச்சர்களாக நியமிக்கவேண்டும் என்ற நெருக்குதலை அவர் எதிர்நோக்குகிறார் என்பதில் சந்தேகமில்லை.

இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் ராஜபக்‌ஷ குடும்பத்தின் மூத்தவர் முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான சமல் ராஜபக்‌ஷவின் புதல்வன் சசீந்திர சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். அமைச்சர் பதவிகளுக்கு ராஜபக்‌ஷர்களின் மீள்வருகையின் ஒரு தொடக்கமாகவும் இதை நோக்கமுடியும். அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது மஹிந்தவின் மூத்த புதல்வன் நாமலை நியமிப்பதை தவிர்க்க விக்கிரமசிங்கவினால் இயலும் என்று நம்பமுடியவில்லை. தனக்கு அமைச்சர் பதவி தரப்பட்டால் அதை மனமுவந்து ஏற்று நாட்டுக்காக ‘உழைக்க’ தான் தயாராக இருப்பதாக நாமல் ஏற்கெனவே கூறியிருந்தார்.

ராஜபக்‌ஷர்களில் எவராவது ஏதோ ஒரு அமைச்சர் பதவியில் மீண்டும் அமர்த்தப்படுவதை உறுதிசெய்துவிட்டுத்தான் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ‘பொம்மலாட்டக்காரன்’ என்று வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்‌ஷ தனது இரண்டாவது சொந்தநாடான அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

இத்தகைய பின்புலத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ‘சிற்றிசன் சில்வா’ அரசியல் பத்தியில் ராஜபக்‌ஷ குடும்பத்தையும் பிலிப்பைன்ஸின் மார்கோஸ் குடும்பத்தையும் ஒப்பீடு செய்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கவனத்தைத் தூண்டுபவையாக அமைந்தன.

36 வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டு தப்பியோடிய பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பேர்டினண்ட் மார்கோஸின் மகன் பொங்பொங் மார்கோஸ் கடந்த மே மாதம் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தார். இலங்கையில் ராஜபக்‌ஷ ஆட்சிக்கு எதிரான ‘அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி உக்கிரமடையத் தொடங்கிய நேரம் அது. ஜூனியர் மார்கோஸின் வெற்றியைக் கண்டு இலங்கையில் மாத்திரமல்ல, எமது பிராந்தியத்திலேயே மஹிந்த ராஜபக்‌ஷவையும் நாமலையும் தவிர கூடுதலாக மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடியவர்கள் வேறு எவரும் இருக்கமுடியாது என்று ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தோம்.

பிலிப்பைன்ஸ் நிகழ்வுகள் தங்களால் காலப்போக்கில் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையை ராஜபக்‌ஷர்களுக்கு கொடுத்திருக்கும் என்பது நிச்சயம். ஆனால், அவர்களால் பொங்பொங் போன்று 36 வருடங்கள் காத்திருக்க முடியுமா என்பதுதான் சந்தேகம்.

சில தினங்களுக்கு முன்னர் கூட மஹிந்த ராஜபக்‌ஷ தங்கள் குடும்பத்தைப் பற்றி கீழ்த்தரமாக பேசவேண்டாம் என்றும் ராஜபக்‌ஷர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்களின் அருமையும் பெருமையும் புரியும்; மீண்டும் தேர்தல்களில் மக்களின் ஆதரவுடன் பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.

அவர்களைப் பொறுத்தவரை, இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் காணாத இன்றைய படுமோசமான பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவான மக்கள் கிளர்ச்சியும் ஏதோ தற்செயல் நிகழ்வுகள் என்பது போன்றும் அதில் தங்களுக்கு பெரும் பொறுப்பு இல்லை என்பதாகவும் ஒரு மெத்தன உணர்வில் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். தங்களது தவறான ஆட்சியின் விளைவாகவே நாடு வங்குரோத்து அடைந்தது என்பதை ஒத்துக்கொள்ளத் தயாராயில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்காக மைல் கணக்காக வரிசைகளில் இரவு பகலாக காத்திருந்த மக்கள் தங்களை சபித்து வசைமாரி பொழிந்ததை ராஜபக்‌ஷர்கள் சுலபமாக மறந்துவிட்டார்கள் போலும்.

மக்கள் ஆணையை இழந்துவிட்டதாக நோக்கப்படுகின்ற நாடாளுமன்றத்தில் தங்களது கட்சிக்கு இருக்கின்ற பெரும்பான்மை ஆசனங்களைப் பயன்படுத்தி புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ததையும் அவர் மீது நெருக்குதலைப் பிரயோகித்து சில காரியங்களை சாதிக்கக்கூடியதாக இருப்பதையும் வைத்துக்கொண்டு ஏதோ தாங்களே இன்னமும் ஆட்சியில் இருப்பது போன்ற ஒருவித மருட்சியில் ராஜபக்‌ஷர்கள் வாழ்கிறார்கள்.

அதேவேளை, இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்துகொண்டிருந்த ஒரு  கட்டத்தில் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ராஜபக்‌ஷர்களின் மீள்வருகை எதிர்காலத்தில்  சாத்தியமாகுமா என்று கேட்கப்பட்டபோது, “அறகலய கிளர்ச்சி ஒடுக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் தீவிர அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்” என்று அளித்த பதில் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சில வாரங்களுக்கு முன்னர் ‘த இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் ராஜபக்‌ஷர்களின் மீள்வருகைக்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து அமைத்திருக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கு பதிலாக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து நேர்மையான ஒரு அரசாங்கத்தை அமைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டால்,  வரலாறு ராஜபக்‌ஷர்களுக்கு உரிய பாதையைக் காட்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்த இடத்தில் மார்கோஸ் குடும்பத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பிறகு அண்மைய மீள் எழுச்சியும் இன்றைய இலங்கை நிலைவரத்துடன் ஆழ்ந்து நோக்கவேண்டியவை. அதில் பல சமாந்தரங்களை அடையாளம் காணமுடியும்.

ஒரு காலத்தில் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக இருந்த பேர்டினண்ட் மார்கோஸ் மூன்று தடவைகள் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர். முதலில் இராணுவத்தில் பணியாற்றிய அவர் இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு வழக்கறிஞரானார். பிலிப்பைன்ஸில் மிகவும் கூடுதலான இராணுவ பதக்கங்களைப் பெற்ற போர்வீரன் என்று உரிமைகோரிக்கொண்டு அரசியலுக்கு வந்த அவர் 1949ஆம் ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராக தெரிவானார். படிப்படியாக அரசியலில் முன்னுக்கு வந்த அவர் காங்கிரஸ் உறுப்பினர் என்ற நிலையில் இருந்து செனட்டராக, அமைச்சராக பதவிகளை வகித்து இறுதியில் 1965 நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவானார்.

அவரது 20 வருடகால ஆட்சி குடும்ப ஆதிக்கமும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் அடக்குமுறையும் நிறைந்ததாக இருந்தது. அவரது காலத்தில் வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்ட கடனை 36 வருடங்களாக பிலிப்பைனஸ் இன்னமும் திருப்பிச்  செலுத்திக்கொண்டிருக்கிறது. கடுமையான வறுமை, பணவீக்கம் மறறும் கடன் நெருக்கடியில் நாடு உழன்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் மார்கோஸ் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள்.

மக்கள் ஆதரவு இல்லாத நிலையிலும் முறைகேடுகளைச் செய்து 1986 ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக மார்கோஸ் பிரகடனம் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கொராசொன் அக்கியூனோவின் தலைமையில் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இராணுவமும் கூட கிளர்ச்சிக்கு ஆதரவளித்தது. அந்த கத்தோலிக்க நாட்டில் திருச்சபையும் முழுமையாக  மக்களுக்கு ஆதரவாகவே நின்றது.

‘மஞ்சள் புரட்சி’ என்றழைக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சியை அடுத்து 1986 பெப்ரவரி 27 குடும்பத்துடன் மார்கோஸ் விமானப்படை விமானத்தில் அமெரிக்க உதவியுடன் நாட்டை விட்டு தப்பியோடினார். அவரது 20 வருடகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து அக்கியூனோ ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

மார்கோஸ் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியில் அவரது குடும்பமும் நெருங்கிய பரிவாரங்களும் நாட்டின் செல்வத்தை சூறையாடி வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பெறுமதியான சொத்துக்களை வாங்கிக் குவித்தார்கள். அமெரிக்கா அவரது குடும்பத்துக்கு ஹவாய் தீவில் அரசியல் தஞ்சம் வழங்கியது. அமெரிக்காவில் இறங்கியபோது 3 இலட்சம் டொலர்கள் பெறுமதியான தங்கத்தை அவர்கள் கொண்டுவந்ததாக அந்த நேரத்தில் கூறப்பட்டது. அஞ்ஞாதவாசத்தின்போது தனது 72 வயதில் மார்கோஸ் மரணமடைந்தார்.

ஆடம்பர வாழ்க்கைக்குப் பெயர்போன முன்னாள் அழகுராணியான மனைவி இமெல்டா பிறகு  பல வருடங்கள் கழித்து கணவரின் உடலை பிலிப்பைன்ஸுக்கு கொண்டுவந்து அடக்கம் செய்தார்.

நாட்டை விட்டு தப்பியோடிய நேரத்தில் மார்கோஸினதும் இமெல்டாவினதும் தனிப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 500 – 1000 கோடி டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டது. ஊழல்தனமான அந்த குடும்பம் பிலிப்பைன்ஸ் மக்களிடம் களவாடிய பேரளவிலான பணத்தைப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் ஒருபோதும் மீட்கக்கூடியதாக இருக்கவில்லை. விளங்கிக்கொள்ள முடியாத காரணங்களுக்காக இமெல்டாவும் பிள்ளைகளும் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இன்று அவர்கள் மார்கோஸ் செய்த பாவங்களுக்கு எந்த பிராயச்சித்தமும் செய்யவேண்டிய அவசியமோ நெருக்குதலோ இல்லாமல் வசதியாக வாழ்கிறார்கள்.

2010 நாடாளுமன்றத்துக்குத் தெரிவான இமெல்டா மார்கோஸ் 2019 வரை அதன் உறுப்பினராக இருந்தார். அவரது மகள் இமி மார்கோஸும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். பிறகு அவர் தங்களது மாகாணத்தின் ஆளுநராக பதவிவகித்து இப்போது செனட்டராக இருக்கிறார். அவை எல்லாவற்றுக்கும் மேலான விசித்திரம் என்னவென்றால் மார்கோஸின் இரண்டாவது பிள்ளையும் ஒரே மகனுமான பொங்பொங் அந்த நாட்டு  மக்களினால் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமையேயாகும் (அதற்கு முதல் 2010 –2016 அவர் செனட்டராகவும் இருந்தார்).

000-32dh86f-1-1656573234.jpg?resize=665%{நடுவில், இமெல்டா மார்கோஸ் (இடது), பொங்பொங் மார்கோஸ் (வலது), Photo, AFP}

தங்களிடம் சூறையாடிய செல்வத்துடன் நாட்டை விட்டு தப்பியோடிய குடும்பத்தின் ஒரு வாரிசை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வதில் பெரும்பான்மையான பிலிப்பைன்ஸ் மக்கள் எந்த அசௌகரியத்தையும் நோக்கவில்லை?

மார்கோஸ் நாட்டைவிட்டு தப்பியோடிய பின்னரான கடந்த மூன்றரை தசாப்தங்களில் பிலிப்பைன்ஸில் பதவியில் இருந்த அரசாங்கங்களின் ஊழலும் முறைகேடுகளுமே பொங்பொங்கின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

சண்டே ரைம்ஸ் சிற்றிசன் சில்வாவின் பத்தியின் முடிவு வாசகங்கள் தான் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை;

“எனக்கு வயதாகிக்கொண்டு போகிறது. இன்னும் ஓரிரு தசாப்தங்களுக்கு நான் உயிருடன் இருக்கமாட்டேன் என்பது நிச்சயம். ஆனால், எனது வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

“பொங்பொங் மார்கோஸைப் போன்று ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் காலப்போக்கில் தனது குடும்பத்தின் உரிமை என்று கூறிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிட வருவார். தேர்தல் பிரசாரத்துக்கு நிதியை தேடுவதிலோ மக்களின் வாக்குகளை பணம்கொடுத்து வாங்குவதிலோ அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பது எனக்கு நிச்சயம்.”

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10363

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு ஐநாவில் ஒரு குரல் | லீலாதேவி ஆனந்த நடராஜா!

1 week 2 days ago

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு ஐநாவில் ஒரு குரல் | லீலாதேவி ஆனந்த நடராஜா!
"இந்த அரசாங்கங்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பி சர்வதேசம் மீண்டும் மீண்டும் காலத்தை கொடுத்துகொண்டும் உள்ளக விசாரணைக்கு வலுச் சேர்த்துக்கொண்டும் இருக்கிறது." - CMR வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் லீலாதேவி ஆனந்த நடராஜா
Sept 12 ஆரம்பமாகி October 7வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சென்றிருக்கும் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் திருமதி.லீலாதேவி ஆனந்த நடராஜா அவர்களுடனான நேர்காணல்.

 

 

ராஜபக்‌ஷர்களின் ஆதரவுத்தளமும் அரசியல் எதிர்காலமும்

1 week 3 days ago
ராஜபக்‌ஷர்களின் ஆதரவுத்தளமும் அரசியல் எதிர்காலமும்  

image_cf2dd7185a.jpg

 

என். கே அஷோக்பரன்

twitter: @nkashokbharan

 

 

 

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகலோடு, ராஜபக்‌ஷர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று எவரேனும் எண்ணினால், அது தவறு. ராஜபக்‌ஷர்கள் என்போர், அடுத்த ‘பண்டாரநாயக்காக்கள்’. அவர்களை, குடும்ப அரசியல் என்ற அடையாளத்துக்குள் சுருங்கிப்பார்ப்பது தவறாகும்.

ராஜபக்‌ஷர்கள் முன்னிறுத்தும் அரசியலுக்கான ஆதரவுதான், ராஜபக்‌ஷர்களுக்கான ஆதரவு என்பதைப் புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியம். இலங்கை அரசியல் இன்றும் இனத்தேசிய அடிப்படைகளில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. பெருந்தேசியவாதத்தின் சமகால முகம் ராஜபக்‌ஷர்களே! அந்த அடிப்படைகளில் கட்டமைந்ததுதான், அவர்களின் ஆதரவுத்தளம்.

ராஜபக்‌ஷர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மோசடிக் குற்றச்சாட்டுகள், மோசமான ஆட்சி என இத்தியாதிகள் எல்லாம், அவர்களின் ஆதரவுத்தளத்தின் ஒரு பகுதியைத் தற்காலிகமாகக் குறைக்குமேயன்றி, இவை அவர்களது அடிப்படை ஆதரவுத்தளத்தைத் தகர்க்கப்போவதில்லை என்பது துரதிர்ஷ்டவசமான யதார்த்தம்.

மஹிந்த ராஜபக்‌ஷ, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நான்கரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டார். ஆனாலும் மேல்மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகள், வடக்கு-கிழக்கு தவிர்ந்த பெரும்பான்மையான ஏனைய பகுதிகளில் மஹிந்த ராஜபக்‌ஷதான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இலங்கையின் வாக்குவங்கியின் இனவாரியாகவும் பிரதேசவாரியாகவும் அமைந்த இந்தத் தன்மையை நாம் மறந்துவிடக்கூடாது.பெரும்பான்மையின வாக்குவங்கியினுள், கணிசமான வாக்குகள் பெருந்தேசியவாத ஆதரவு வாக்குகள்தான். அந்த வாக்குகள்தான், தற்போது ராஜபக்‌ஷர்களின் நிரந்தர வாக்குகள்.

அதற்கடுத்தபடியாக, கட்சி ரீதியாக ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கணிசமான வாக்குகள் இருக்கின்றன. இவை ஒருபோதும் ராஜபக்‌ஷர்களுக்கு விழாத வாக்குகள். ஜே.வி.பி போன்ற இடதுசாரிகளுக்கான வாக்குகள் இதற்குள் அடங்கும். இவர்களுக்கு ராஜபக்‌ஷர்களுக்கு மாற்றானவர்கள் மீது பிடிப்பு இல்லாவிட்டால், வாக்களிக்காமல் தவிர்ப்பார்களேயன்றி, ராஜபக்‌ஷர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

அடுத்தபடியாக பொருளாதாரம், ஆதரவு அலை, சமகால அரசியல் அலை என்பவற்றால் எல்லாம் செல்வாக்குக்கு உட்படும் ஒரு வகையான ‘ஊசலாடும்’ வாக்குவங்கியாகும். கிட்டத்தட்ட இந்த வாக்குவங்கிதான், பெரும்பான்மையின வாக்குவங்கியின் தீர்மானம் மிகு வாக்குகள் எனலாம்.

இந்த வாக்குவங்கி ராஜபக்‌ஷர்களுக்கு ஆதரவாக அமையும் போதுதான், ராஜபக்‌ஷர்களுக்கு பெருவெற்றி கிடைக்கிறது. ஆனால், இந்த வாக்குவங்கி பெரும்பாலும் நகர்ப்புற வாக்குவங்கியாகவே அமைகிறது.

இந்த இடத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்குவங்கிகளுக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது. நகர்ப்புற வாக்குவங்கியின் தேவைகள், முன்னுரிமைகள் ஆகியன, கிராமப்புற வாக்குவங்கியின் தேவைகள், முன்னுரிமைகள் என்பவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டவையாகும்.

இந்த இரண்டு வாக்குவங்கிகளினதும் வாழ்கை முறைகள்,  வாழ்வியல் விழுமியங்களில் கூட நிறைய வேறுபாடுகள் உள்ளன. ராஜபக்‌ஷர்களின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு, இந்த நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

ஏனென்றால், ராஜபக்‌ஷர்களின் அரசியல் என்பது, அவர்களது ஆதரவுத்தளமாக அவர்கள் வரையறுத்துக் கொண்டவர்களுக்கான அரசியல். அது பெருமளவுக்கு இலங்கையின் பெருநகர் அல்லாத  ‘சிங்கள- பௌத்த’ வாக்குவங்கியை மையப்படுத்தியது. அதனால்தான், 2015 ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த, 2015 ஓகஸ்ட் 17ஆம் திகதி நடந்த பாராளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில், 423,529 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

ஐக்கிய தேசிய கட்சியில், குருநாகல் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அகில விராஜ் காரியவாசம், பெற்றுக்கொண்ட வாக்குகள் 286,755. மஹிந்தவின் கட்சியில் இரண்டாமிடம் பிடித்த தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்ட வாக்குகள், 133,532.
2015ஆம் ஆண்டு, பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால் கூட, மேல் மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் வடக்கு-கிழக்கு தவிர்ந்த பெரும்பான்மையான ஏனைய பகுதிகளில் எல்லாம், ராஜபக்‌ஷ மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டுத்தான் வெற்றிபெற்றிருந்தது.

image_64598d9927.jpg

ராஜபக்‌ஷர்களுக்கு பொருளாதார அறிவு இல்லாமல் இருக்கலாம்; நாட்டை முறையாக ஆட்சி செய்யத் தெரியாதிருக்கலாம்; மிக முட்டாள்தனமாக முடிவுகளால், இலங்கையின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்கலாம். ஆனால், அவர்களுக்கு வாக்குவங்கி அரசியல் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அந்த ஆட்டத்தை அவர்கள் மிகச் சிறப்பாகவே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ராஜபக்‌ஷர்கள் முடிந்தார்கள் என்று நினைக்கும் போதெல்லாம், ராஜபக்‌ஷர்கள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறார்கள்.

கோட்டாவின் பதவி விலகலைக் கூட, ராஜபக்‌ஷர்கள் ஒரு பின்னடைவாகவே கருதுவார்கள். அவர்களுக்குத் தெரியும் இது முற்றுப்புள்ளியல்ல; வெறும் காற்புள்ளிதான் என்று! இதற்குக் காரணம் இலங்கையின் இனவாரி வாக்குவங்கி மீது, அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை.

இன்று கொழும்பு உள்ளிட்ட பெருநகரங்களில், ஆங்கிலம் பேசும் பெரும்பான்மையின மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பேரினவாத அரசியலுக்கு எதிரான பிரக்ஞையை, இலங்கையின் அனைத்து பெரும்பான்மையின மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பிரக்ஞை என்று பொருள் கொள்வது அறிவீனமானது. இந்தப் பொருளாதார நெருக்கடியும் அரசியலில் ஊழல் பற்றிய விழிப்புணர்வும், இலங்கையின் இனவாத அரசியல் கலாசாரத்தை மாற்றிவிடும் என்பதெல்லாம் வெறும் கனவுதான்.

அடுத்த தேர்தலில், தாம் பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை என்று ராஜபக்‌ஷர்களுக்குத் தெரியும். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெருந்தோல்வி கண்டதுபோல, ராஜபக்‌ஷர்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள். காரணம், அவர்களுக்கு பேரினவாதம் மீதும், இலங்கையின் பேரினவாத வாக்குவங்கியின் மீதும் அளவற்ற நம்பிக்கை இருக்கிறது.

இதனால்தான், “ராஜபக்‌ஷர்கள் கைது செய்யப்பட வேண்டும்; அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று சில தாராளவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்வோர் சொல்லக்கூடும். நாட்டினுடைய சாதாரண மக்கள் வாக்குவங்கியின் தன்மை, யதார்த்தம் பற்றியெல்லாம் புரியாத கருத்து இது.

இன்றைய சூழலில், ராஜபக்‌ஷர்களின் அரசியலுக்குச் செய்யக் கூடிய ‘மெத்தப் பெரிய உபகாரம்’ அவர்களை சிறையில் அடைப்பதுதான். சிறையில் அடைத்தல் என்பது, அரசியலைப் பொறுத்தவரையில் பல மோசனமானவர்களைப் புனிதமாக்குகிற செயலாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இனத்தேசிய அரசியலை, அரசியல் கலாசாரமாகக் கொண்ட ஒரு நாட்டில், அதுவேதான் நடக்கும். அப்படியானால் இதற்கு என்ன வழி?

ராஜபக்‌ஷர்கள் இழைத்த அநீதிகளுக்கு என்ன நியாயம் என்று கேட்கலாம். மாற்றம் மக்களிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். பௌத்த - சிங்கள மக்களுக்கு, பேரினவாதத்தைத் தாண்டிய அரசியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

ஒரு குழுநிலை அடையாளத்துக்குள் ஈர்க்கப்பட்டுள்ள, அதையே தம்முடைய அரசியலாகக் கொண்டுள்ள சமூகமொன்று காலப்போக்கில், அதன் தலைவர்களைப் புனிதமாக்கத் தொடங்கும். களங்கங்கள் வெற்றுக் கண்ணுக்குத் தென்பட்டாலும், பகுத்தறிவுக்குப் புலப்பட்டாலும், அந்தத் தலைமைகளை புனிதத்துவப்படுத்திய மனநிலையானது, அந்தத் தலைமைகளை விமர்சனத்துக்கும், விசனத்துக்கும் அப்பால் ஒரு வழிபாட்டு நிலையிலேயே கொண்டு சென்று வைத்துவிடும்.

இது, அந்த மக்களுக்கும் தலைமைகளுக்கும் ஆபத்தானது. மக்கள் தமது தலைமைகளின் தவறைக் காண்பதில்லை; அல்லது, கண்டும் காண்பதில்லை என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமமானதொன்று! புனிதப்படுத்தப்படும் தலைமைகள், தன்னிலையை மறந்துவிடுகிறார்கள். அவர்களிடம் ‘god complex’ உருவாகிவிடுகிறது.

இந்த நிலையில்தான், இன்று இலங்கையின் பேரினவாத அரசியல் வாக்கு வங்கியும் ராஜபக்‌ஷர்களும் இருக்கிறார்கள். இங்கு, ராஜபக்‌ஷர்களை தொடர்ந்தும் காப்பாற்றிக் கொண்டிருப்பது, அவர்களைப் புனிதப்படுத்தி வைத்திருக்கும், இலங்கையின் பேரினவாத வாக்குவங்கிதான்.

‘அறகலய’வின் போது சத்தமாகக் கேட்ட ஒரு பத்து இலட்சம் ஆர்ப்பாட்டக்காரர்களின் குரல், ராஜபக்‌ஷர்களை எதிர்த்தது என்றால், ராஜபக்‌ஷர்களுக்கு ஆதரவளித்த ஐம்பது இலட்சம் குரல்கள் அமைதியாகவே இருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அமைதியை ‘அறகலய’வுக்கான ஆதரவு என்று கருதுவது, அரசியல் அறியாமை.

இலங்கையின் அரசியல் வரலாற்றில், பேரினவாத அரசியல் இருக்கும் வரை, ராஜபக்‌ஷர்கள் என்ற பேரினவாத அரசியல்வாதிகள் இருந்துகொண்டே இருப்பார்கள். அன்று ‘பண்டாரநாயக்காக்கள்’; இன்று ‘ராஜபக்‌ஷர்கள்’; நாளை இந்தப் பதவி வேறொருவருக்குப் போகலாம். ஆனால், பேரினவாத நோய் வாழ்ந்துகொண்டிருக்கும். அதுதான் இலங்கையின் சாபக்கேடு!

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களின்-ஆதரவுத்தளமும்-அரசியல்-எதிர்காலமும்/91-304779

Checked
Fri, 10/07/2022 - 19:52
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed