புதிய பதிவுகள்2

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
சூசை அவர்கள் எல்லாம் முடியப் போகும் நேரத்தில் சொன்னது பொதுவான ஒரு கருத்து என்பது என் அபிப்பிராயம். அதை ஒலிப்பதிவு செய்து வைத்தது சீமானுக்கு வாய்ப்பாகப் போய் விட்டது. எனவே "கப்பில் கிடா வெட்டிய கில்லாடியாக" சீமான் வெளிப்படுகிறார். அவர் பின்னால் மண்டை கழுவிய செம்மறி ஆடுகளாக பலர் தொடர்கிறார்கள்!

விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன்

3 months 2 weeks ago
கண்ணீர் அஞ்சலி!

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

3 months 2 weeks ago
18 பேர் இந்திய அணி வெல்லும் எனவும் 05 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இந்தியா ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி நிலாமதி குமாரசாமி தமிழ் சிறி P.S.பிரபா பிரபா USA வாதவூரான் கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு வாத்தியார் எப்போதும் தமிழன் நீர்வேலியான் கல்யாணி கோஷான் சே பாகிஸ்தான் தியா புலவர் நுணாவிலான் ஏராளன் நந்தன் பாகிஸ்தான் என்று போட்ட போட்டியாளர்கள் தான் நாளைக்கு வெல்வார்கள் என எண்ணுகிறேன்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

3 months 2 weeks ago
கொஞ்சம் பிசியாயிட்டேன் மக்காள் (முதல்வர்னா சும்மாவா, கொஞ்சம் பந்தா காட்ட வேணாமா🤣). எல்லாருக்கும் பதில் போடமுடியவில்லை மன்னிக்கவும்.

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
யார் எதை சொன்னாலும் இந்தியாவலே. தமிழ்நாட்டாலே அல்லது இந்தியாவையே தமிழ்நாட்டை யே. ஆளும் ஆளப்போகும் எந்தவொரு தலைவர்களும் இலங்கை தம்ழருக்கு சுயாட்சி அல்லது தனிநாடு பெற்றுதர முடியாது தமிழ்நாடு இந்தியாவை மீறி எதுவும் செய்ய முடியாது இது நேரடி அனுபவம் சொந்த அனுபவம் கண்ணாலே பாரத்தோம். தனியாக கருணாநிதியை தூற்றக்கூடாது மற்றவர்கள் என்ன செய்தார்கள் இந்த 15 ஆண்டுகள் செய்தது என்ன?? இந்தியாவுக்குள். இருக்கும் தமிழ்நாடு .. இந்தியாவாக இருக்கும் தமிழ்நாடு நம்பலாமா ?? கூடாது ஒருபோதும் கூடாது அங்கே நடக்கும் தேர்தல் திருவிழாவில் யாரும் வெல்லாலம். எவரும் தோற்க்கலாம். இது தமிழ்நாட்டு மக்களின் தீர்மானங்கள் அதை மனப்பூர்வமாய்ப் ஏற்ப்போம். இலங்கை தமிழர்கள் தங்களின் சொந்த காலில் நிற்க வேண்டும்

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!

3 months 2 weeks ago
இதில் யார் மூடர்கள்? சகலரும் சகல உரிமையுடனும் பிரிந்து சென்று வாழட்டும் என உடைக்கப்பட்டதுதான் சோவியத் ஒன்றியம். அதன் பின் அந்தந்த நாடுகளில் மேற்குலக தொடர்புகள் அதிகரித்து வியாபார நிலைகளும் உருவாகின. இது ரஷ்யாவிற்கும் மிக மிக பொருந்தும். அந்த நிலையில் மேற்குலகிற்கு எதிராக இராணுவ நகர்வுகளை ரஷ்யா மேற்கொண்டதாக மேற்குலக செய்திகளிலும் இல்லை. ஆனால் அதே நேரம் ரஷ்ய எல்லைகளில் தமது படை குவிப்புகளை செய்த வண்ணமே இருந்தது மேற்குலக நாடுகள். உதாரணத்திற்கு ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்க இராணுவ படைகளை போலந்து நாடுகளுக்கு நகர்த்தியது. அது சரி.... உலக அமைதிக்காக போராடும் மேற்கத்தியர்களுக்கு ஏன் இவ்வளவு இராணுவ மூர்க்கங்கள்?

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
முள்ளிவாய்க்கால் அழிவு. கடைசி யுத்தம். அந்த உண்ணாவிரதம் நாடகம். அது வரை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளை தூற்றியதும் இல்லை.திட்டியதும் இல்லை.மாறாக எல்லா அரசியல்வாதிகளையும் கடவுள் போலவே மதித்தார்கள். கடற்தளபதி சூசை அவர்களின் கடைசி உரையாடல் எதை சொன்னது? ஏன் அப்படி சொன்னார்? யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
சுகபோக வாழ்கை வாழ்வதற்காக காசு கொள்ளை அடிப்பதற்காக அரசியல் செய்கின்ற மகா கொள்ளையர்களுக்கு ஒரு போதும் சந்தர்பம் கொடுக்க கூடாது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

3 months 2 weeks ago
பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (09 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 18) முதல் சுற்று குழு C : ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA அனைவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா? 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 18 பேர் இந்திய அணி வெல்லும் எனவும் 05 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இந்தியா ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி நிலாமதி குமாரசாமி தமிழ் சிறி P.S.பிரபா பிரபா USA வாதவூரான் கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு வாத்தியார் எப்போதும் தமிழன் நீர்வேலியான் கல்யாணி கோஷான் சே பாகிஸ்தான் தியா புலவர் நுணாவிலான் ஏராளன் நந்தன் இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்? 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

3 months 2 weeks ago
கோஷான்சே முதல்வரா?கடைசியாய் போட்டியில்குதித:து முதலாவதாய் நிற்கிறார். வாழத்துகள். அது சரி ஐரொப்பிய கிண்ணத்திற்பான உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவுpர்களா கிருபன்ஜீ

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
நீங்களும் நானும் மட்டுமே இங்கே கருத்தாடுகின்றோம். விசுகுவின் கருத்தையும் இங்கே திணிப்பது உங்களால் என் கருத்திற்கு பதில் இல்லை என்பதே நிரூபணம்.
Checked
Fri, 09/27/2024 - 17:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed