தமிழகச் செய்திகள்

அதிமுகவுக்கு தினகரன்.. திமுகவுக்கு கமல்ஹாசன்.. என்னென்ன நடக்குமோ.. கிலியில் தலைவர்கள்

2 hours 11 minutes ago

தலà¯à®µà®°à¯à®à®³à¯ à®à®¿à®²à®¿

அதிமுகவுக்கு தினகரன்.. திமுகவுக்கு கமல்ஹாசன்.. என்னென்ன நடக்குமோ.. கிலியில் தலைவர்கள்

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு தமிழகம் முழுக்க பரவலாக உள்ள ஆதரவு, பிற கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

வரும் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நான்குமுனைப்போட்டி உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அடங்கியது ஒரு கூட்டணி என்றால், திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கியது மற்றொரு கூட்டணி. தேமுதிகவை இவ்விரு கூட்டணிகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கப்போகிறது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், தேர்தலில் சிறப்பாக செயல்படும் டிராக் ரெக்கார்ட் வைத்துள்ள, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. இதனால் அந்த கட்சி தனித்துப் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ளது.

இதேபோல இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது மக்கள் நீதி மையம் கட்சி. அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார் கமல்ஹாசன். அதிமுக, திமுக, பாமக என கமல்ஹாசனின் விமர்சன சாட்டையடிக்கு, எந்த கட்சியும் தப்பவில்லை. எனவே அவரது கட்சியும் தனித்துதான் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் நான்கு முனைப் போட்டி என்பது உறுதியான விஷயமாகிவிட்டது.

தினகரனை பொறுத்தளவில், அதிமுகவில் கணிசமான வாக்குகளை அவர் ஈர்ப்பார் என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்தால் தான் தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமை, இதனால்தான், தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 10% அளவிற்கு அதிமுக வாக்குகளை தினகரன் ஈர்ப்பார். இது எதிர் முகாமில் உள்ள திமுக கூட்டணிக்கு சாதகமாக செல்லும் என்று கணிக்கப்படுகிறது.

ஆனால் அங்குதான் ஒரு திருப்பமாக, கமல்ஹாசன் கட்சி களமாட உள்ளது. கமல்ஹாசனின், கடவுள் மறுப்புக் கொள்கை, திராவிடக் கொள்கை போன்ற பலவும் திமுகவுடன் பொருந்திப் போவதாக உள்ளது. ஆனால் திமுகவில் உள்ள வாரிசு அரசியல் உள்ளிட்ட சில விஷயங்களைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். எனவே தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தியை விரும்புவோர் கமல்ஹாசன் கட்சிக்கு வாக்களிக்கக்கூடும். திமுகவிடம் உள்ள பல அடிப்படை கொள்கைகள் கமல்ஹாசன் கட்சியில் உள்ளது. ஆனால் அதே கொள்கைகளுடன் ஒரு மாறுபட்ட தலைவர், மாறுபட்ட கட்சி தேவை என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய வாக்காளர்களின் ஓட்டுகள் கமல்ஹாசன் கட்சிக்கு செல்லும். இது திமுகவின் வாக்குகளை தமிழகம் முழுக்க கணிசமாக பிரித்துவிடும்.

தினகரனை பார்த்து அதிமுக தரப்பும், கமல்ஹாசன் கட்சியின் வளர்ச்சியை பார்த்து திமுக தரப்பும் அச்சமடைந்துள்ளனர். எனவேதான் கமல்ஹாசனுக்கு எதிராக முரசொலியில் சமீபகாலமாக தொடர் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும் திமுகவினர் கமல்ஹாசனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வதை பார்க்க முடிகிறது. தனித்தனியாக போட்டியிட்டாலும் கூட, அதிமுக மற்றும் திமுக தலைவர்களுக்கு, தினகரன் மற்றும் கமல்ஹாசன் பெரும் கிலியை உண்டு செய்து உள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kamal-hassan-ttv-dhinakaran-will-play-crucial-role-the-lok-sabha-election-342042.html

திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவானது: 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி

1 day 14 hours ago
 
ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின்படத்தின் காப்புரிமை DMK

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே முடிவாகியுள்ளதாகவும், அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது இனிமேல்தான் முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஆகியோருடன் இன்று மாலை நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி

கடந்த இரு ஆண்டுகளாக போராட்டங்களிலில் எங்களுடன் தோழமையாக இருந்த அனைத்துக் கட்சிகளுடனும் பேசி, அக்கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடும் என செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறினார்.

எந்தெந்த தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது குறித்து ஆராய திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது என்று தெரிவித்த அவர், பிற கட்சிகள் அவ்வாறே அமைத்துள்ள குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் திமுக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகதான் போட்டியிடும் என அதன் கூட்டணி கட்சிகளுடன் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மட்டுமே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

அந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின்பே இது குறித்து முடிவாகும் என ஸ்டாலின் கூறினார்.

கருணாநிதி மற்றும் சோனியா காந்திபடத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

திமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்து வந்த பாதை

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இதற்கு முன் நடந்த 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியே நிலவியது. 2014இல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.

அந்த சமயத்தில் எத்தனை தொகுதிகள் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டன என்று பார்ப்போம்.

நாற்பதுக்கு நாற்பது

2004ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இரண்டு இடதுசாரி கட்சிகள் இருந்தன. மகா கூட்டணியாக இது அப்போது பார்க்கப்பட்டது.

திமுக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 5 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், இரு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி பா.மகவுக்கு ஒதுக்கப்பட்டது.

தயாநிதி மாறன், கருணாநிதி மற்றும் சோனியா காந்திபடத்தின் காப்புரிமை RAVEENDRAN

அந்த தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அந்தக் கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. திமுக மற்றும் பா.ம.க ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தன.

ஆட்சி முடிவுக்கு வரும் சமயத்தில் இலங்கையில் வெடித்த உள்நாட்டு போர், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் இலங்கை பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வார்கள் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கூறி இருந்தார். ஆனால், அவ்வாறெல்லாம் ராஜிநாமா செய்யவில்லை.

தமிழகம் தழுவிய அளவில் அந்த கூட்டணி மீது அதிருப்தி நிலவியது. பா.ம.க, மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது.

தொடந்த கூட்டணி

சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் கருணாநிதிபடத்தின் காப்புரிமை Getty Images

2009 தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலே திமுக அங்கம் வகித்தது.

காங்கிரஸுக்கு 15 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் திமுகவால் ஒதுக்கப்பட்டன. திமுக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் , விடுதலை சிறுத்தைகள் 1 தொகுதியிலும் வென்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது.

இந்த சமயத்தில்தான் அப்போது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆ.ராசா மற்றும் கனிமொழி கைது செய்யப்பட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது. புதுச்சேரி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

திமுக vs காங்கிரஸ்

2014இல் காங்கிரஸும், அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனி தனியே களம் கண்டன. காங்கிரஸ் அனைத்து தொகுதியையும் இழந்தது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் ஆகியவை இருந்தன. திமுக கூட்டணியும் அனைத்து தொகுதிகளையும் இழந்தது

https://www.bbc.com/tamil/india-47306246

பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும் ரஜினிகாந்தின் தீர்மானம்

2 days 18 hours ago

"நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்.1995 ஆம் ஆண்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் பேசிய பிரபல்யமான வசனம் இது.

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அவரின் அரசியல் வருகைக்காக  மேலும் காத்திருக்கவேண்டியிருக்கிறது போலத்தெரிகிறது.இன்னும் இரு மாதங்களில் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருக்க ரஜினிகாந்த் இப்போது தீர்மானித்திருக்கிறார்.சரியான நேரம் இன்னமும் வரவில்லை எனாறு அவர் நம்புதகிறார் போலும்.லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரை  நீண்டகாலமாக அவதானித்துவருபவர்களுக்கு அவரது அறிவிப்பு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை. கொலிவூட்டில் தனது சகநடிகரான கமல்ஹாசனைப் போலன்றி ரஜினிகாந்த் எப்போதுமே  மதில்மேல் இருந்தவந்திருக்கிறார்.அரசியலுக்கு வருகை குறித்து திட்டவட்டமான -தெளிவான அறிவிப்பை ஒருபோதும் செய்வதில்லை. எதிர்வரும் லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலுமாக 40 தொகுதிகளிலும் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் இதுவரை காலத்தில் தனது அரசியல் அபிப்பிராயத்தை வெளிப்படையாகக் கூறினார் என்றால் அது  1996 ஆம் ஆண்டில்தான். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவாரேயானால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று அவர் அப்போது கூறினார்.அடுத்து வந்த தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்ட படுதோல்விகளுக்கெல்லாம் ரஜினிகாந்தின் அந்தக் கூற்றும் முக்கியமான ஒரு காரணம் என்றும் பெருமை பேசப்பட்டது.

அதற்குப் பிறகு, தேர்தல்களுக்கு முன்னதாக அவர் எப்போதும் மறைபுதிரான அறிக்கைகளை மாத்திரம் விடுத்துவந்தார்.தற்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு திராவிட மண்ணில் தன்னை நிலைநிறுத்துவதற்குப் பெரும்பாடுபடும் பாரதிய ஜனதாவுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.  

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் செல்வாக்குமிக்க தலைவர் ஒருவர் இல்லாதிருக்கும் அண்ணா தி.மு.க. ஜனரஞ்சகமான தலைவர் ஒருவரை அரவணைப்பதைச் சாத்தியமாக்குவதற்கு பாரதிய ஜனதா திரைக்குப் பான்னால் இருந்து முயற்சிகளை மேற்கொண்டுவந்தது என்பது ஒன்றும் இரகசியமல்ல.பாரதிய ஜனதா இன்னமும் முறைப்படியாக அண்ணா தி.ம.க.வுடன் கூட்டணியொன்றை அமைத்துக்கொள்ளவில்லை என்கிற அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகம் -- காங்கிரஸ் கட்சி -- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடதுசாரிக்கட்சிகளுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவுக்கு பெரும் சவாலைத் தோற்றுவிக்கும் சாத்தியம் இருக்கிறது.

இந்திமொழி பேசும் மாநிலங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தேர்தல் இழப்புக்களை தென்மாநிலங்களில் செல்வாக்கை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்வதற்கு பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்கிறது.2014 லோக்சபா தேர்தல்களில் தென்மாநிலங்களில் உள்ள 132 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மாத்திரமே பாரதிய ஜனதா வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. இப்போது ரஜினிகாந்தின் அறிவிப்பு எற்படுத்தியிருக்கும் தடுமாற்றத்தையடுத்து காப்டன் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும்  வலுவான வன்னியர் ஆதரவுத்தளத்தைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியையும் சேர்த்துக்கொண்டு கூட்டணியொன்றை அமைப்பதில் பாரதிய ஜனதா இறங்கியிருக்கிறது. விஜயகாந்தின் கட்சி கூட்டணியை அமைக்க அக்கறையாக இருக்கின்ற அதேவேளை, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான பேரம் பேசலில் ஈடுபட்டிருக்கிறது.

தனக்கேயுரித்தான பாணியில் ரஜினிகாந்த் லோக்சபா தேர்தல்களில் இருந்து விலகியிருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஆனால், தமிழ்நாடு மாநிலத்தின் ஆற்றுநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைக்கக்கூடிய ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டிருக்கிறார். பாரதிய ஜனதாவின் அனுதாபிகளுக்கு அது போதுமானதாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம்தான் கோதாவரி ஆற்றையும் காவிரி ஆற்றையும் இணைப்பது குறித்த யோசனையை முன்வைத்தது என்று சுட்டிக்காட்டுகின்ற அளவுக்கு அவர்கள் கீழிறங்கியிருக்கிறார்கள்.

 ரஜனிகாந்தின் இன்னொரு திரைப்படமான கோச்சடையானில் அவரின் பாத்திரம் பேசுகின்ற இன்னொரு பிரபல்யமான வசனத்தை பாரதிய ஜனதாவுக்கு நினைவூட்டலாம் ; " வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்."

http://www.virakesari.lk/article/50300

தமிழக அதிகாரிகளுக்கு 20 கோடி லஞ்சம் கொடுத்ததாக காக்னிசன்ட் நிறுவனத்துக்கு 180 கோடி அபராதம்

2 days 18 hours ago
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்
  •  
காக்னிசன்ட் முறைகேடு: 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற தமிழக அரசு அதிகாரிகள்படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்ட தங்களது நிறுவனத்தின் கட்டடங்களுக்கு பல்வேறு அனுமதிகளை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புனே நகரங்களில் 2012 முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான காலத்தில் தங்களது நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்த லஞ்ச பணப்பரிமாற்றம் குறித்து அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 178 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது..

பிரபல மென்பொருள் நிறுவனம்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்டின் மிகப்பெரிய அலுவலகங்கள் இந்தியாவின் சென்னை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

1994-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து பார்ச்சுன் இதழின் உலகின் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த 2011ஆம் ஆண்டு இணைந்தது. அதுமட்டுமின்றி, இந்நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தையான நாஷ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதால் அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

காக்னிசன்ட் முறைகேடு: 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற தமிழக அரசு அதிகாரிகள்படத்தின் காப்புரிமை Getty Images

அந்த வகையில் 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் சென்னை, மகாராஷ்டிராவின் புனே ஆகிய நகரங்களில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கட்டடங்களை கட்டுவதற்கு தேவையான கட்டட வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்புதல்களை மாநில அரசிடமிருந்து பெறுவதற்கு மொத்தமாக 26 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் அந்நிறுவனத்தின் தரப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

சென்னையில் மட்டும் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு சிறுசேரி, சோழிங்கநல்லூர், சானடோரியம் உள்ளிட்ட பல இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.

குறிப்பாக, சோழிங்கநல்லூரில் காக்னிசன்ட் நிறுவனத்துக்கு 2.7 மில்லியன் சதுர அடி பரப்பில், சுமார் 17,500 பணியாளர்கள் வேலை செய்யக்கூடிய வகையிலான கட்டடத்தை கட்டும் பணி உரிய அனுமதியின்றி கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பொறுப்பு இந்தியாவின் பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தேவையான அனுமதிகள் எதுவுமின்றி மூன்றாண்டுகள் கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில், உரிய அனுமதியை பெறுவதற்கு சுமார் 14 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தரப்பில் அந்தக் கட்டுமான நிறுவனத்திடம் கேட்கப்பட்டதாக காக்னிசன்ட் நிறுவனம், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, 2014ஆம் ஆண்டு காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிலுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"காக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த சட்ட ஆலோசகர், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை சிக்கல் ஏதுமின்றி செயல்படுத்துவது என்பதை விளக்கினார். அதைத்தொடர்ந்து லஞ்சத்தை காக்னிசன்ட் நிறுவனம் நேரடியாக அளிக்காமல், கட்டுமான நிறுவனத்தின் மூலம் அளிக்க செய்து, அவர்களுக்கு அந்த பணத்தை வேறு வகையில் திரும்ப அளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு, அந்த பணி ரியல் எஸ்டேட் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று அந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

முதலில் லஞ்சத்தை அளிப்பதற்கு மறுத்த கட்டுமான நிறுவனம், பிறகு காக்னிசன்ட் நிறுவனத்தின் அழுத்தத்தின் காரணமாக 14 கோடி பணத்தை 2014ஆம் ஆண்டு மே-ஜூனுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியது. அதற்கு ஈடாக கூடுதல் 4 கோடி ரூபாய் கமிஷன் உள்பட 18 கோடி ரூபாயை 2015 மார்ச், 2016 ஜனவரியில் காக்னிசன்ட் நிறுவனம் திரும்ப வழங்கியது.

அதாவது, கட்டுமான நிறுவனத்தை நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வழங்க வைத்ததன் மூலம் பிரச்சனையிலிருந்து தப்பிப்பதாக நினைத்த காக்னிசன்ட் நிறுவனம், முறைகேடாக கணக்குக்காட்டி 18 கோடி ரூபாயை கட்டுமான நிறுவனத்துக்கு அளித்துள்ளது.

இரண்டாவது முறையாக லஞ்சம்

காக்னிசன்ட் நிறுவனத்தின் சிறுசேரி கிளை அலுவலக கட்டுமான பணிகளுக்கு தேவையான கட்டட வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்புதல்களை தமிழ்நாடு அரசிடமிருந்து பெறுவதற்காக 2012ஆம் ஆண்டு, அதே கட்டுமான நிறுவனத்தின் தரப்பில், காக்னிசன்ட் நிறுவனத்தின் சார்பாக சுமார் $840,000 அதாவது, ஆறு கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே அனைத்து ஒப்புதல்களையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிசன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காக்னிசன்ட் முறைகேடு: 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற தமிழக அரசு அதிகாரிகள்படத்தின் காப்புரிமை Getty Images

அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சத்தை திரும்ப பெறுவதற்காக கட்டுமான நிறுவனம் விடுத்த சில கோரிக்கைளை பல்வேறு காரணங்களை கூறி காக்னிசன்ட் நிராகரித்தது. பிறகு, கட்டுமான நிறுவனம் பணத்தை கேட்பதற்கான காரணத்தை மாற்றியவுடன், 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் பல தவணைகளில் காக்னிசன்ட் நிறுவனம் பணத்தை திரும்ப அளித்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

லஞ்சம் வாங்கிய மகாராஷ்டிர அரசு அதிகாரிகள்

சென்னையை போன்றே மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை அமைக்கும் பணிகள் உரிய அனுமதியின்றி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அந்த கட்டடத்தை திறப்பதற்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதியை அளிப்பதற்கு அம்மாநில அரசு அதிகாரிகள் 5.50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டனர். எனவே, அதே கட்டுமான நிறுவனத்தை கொண்டு 5.50 கோடி ரூபாய் லஞ்சம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகளுக்கு 2013ஆம் ஆண்டு தொடக்க பகுதியில் வழக்கப்பட்டது. அதையடுத்து விரைவிலேயே சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டது.

பின்பு, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முறைகேடான காரணத்தை காட்டி, அந்த கட்டுமான நிறுவனத்துக்கு 5.50 கோடி ரூபாயை காக்னிசன்ட் நிறுவனம் திரும்ப செலுத்தியதாக அமெரிக்காவில் இதுகுறித்த நடந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, இந்தியா முழுவதுமுள்ள காக்னிசன்ட் அலுவலகங்களில் சமையலறை இயக்க வசதிகள், காற்று மற்றும் தண்ணீருக்கான ஒப்புதல், பாதுகாப்பு மற்றும் கட்டடத்தின் பிற செயல்பாட்டு தொடர்பான அனுமதிகளை பெறுவதற்கு பல்வேறு தரப்பினருக்கு சுமார் 19 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானே முன்வந்து விளக்கமளித்த காக்னிசன்ட் காக்னிசன்ட் முறைகேடு: 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற தமிழக அரசு அதிகாரிகள்படத்தின் காப்புரிமை Getty Images

தனது நிறுவனத்தில் நடைபெற்ற உயர்மட்ட அளவில் நடந்த முறைகேடான பணப்பரிமாற்றங்கள் குறித்து காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தகவல்களை தெரிவித்ததோடு, வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் தக்க நேரத்தில், தெளிவாக வழங்கியதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தனது பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அமெரிக்காவின் சட்டவிதிகளை மீறி வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்தது முற்றிலும் தவறான செயல்பாடு என்பதால், பல்வேறு சட்டவிதிகளின்படி காக்னிசன்ட் நிறுவனத்துக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 180 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொகையை வரும் 25ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும் என்றும், இந்த விவகாரத்தோடு தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காக்னிசன்ட் நிறுவனத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படாவண்ணம் நிர்வாக அமைப்புமுறை தொடங்கி, நிதி மேலாண்மை, முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளிட்ட பல நிலைகளிலும் தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் கருத்துக்கள் உடனடியாகக் கிடைக்கப் பெறவில்லை.

https://www.bbc.com/tamil/india-47288328

அதிமுக - பாஜக கூட்டணி உதயம் - பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு

2 days 18 hours ago
  •  
     
எடப்பாடி - மோதிபடத்தின் காப்புரிமை AFP Contributor

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிகள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாமகவுடன் பாஜகவும் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற சந்திப்பில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இந்த சந்திப்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பாஜக தரப்பில் முரளிதர்ராவ், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.

''அதிமுக - பாஜக இடையே மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது''

21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கும் பாஜக ஆதரவை தெரிவிக்கும்'' என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

''இந்த சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறோம். நாற்பதும் நமக்கே'' என பியூஷ் கோயல் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

''ஜெயலலிதாவுடன் ஜூலை 2016-ல் சந்தித்தபோது அது எனக்கு மிகவும் இனிமையானதாக இருந்தது. அந்த நினைவுகள் தற்போது மீண்டும் வந்துபோனது. பாஜக, அதிமுக, பாமக மற்றும் இக்கூட்டணியில் இணையும் அனைத்து கட்சிகளும் வெற்றிக்காக பாடுபடுவோம். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளில் வெல்வோம்'' என்றார் பியூஷ் கோயல்.

முன்னதாக இன்று காலை அதிமுக - பாமக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. ''வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. மேலும் ஒரு மாநிலங்களவை இடமும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது'' என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

''தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும்போது அங்கு அதிமுகவுக்கு பாமக தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து கொள்கிறோம்'' என்று ஓ.பன்னீர்செல்வம் மேலும் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-47291078

அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாட்டுள்ளன.

3 days ago
அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாட்டுள்ளன.

February 19, 2019

 

image1-21.png?zoom=3&resize=335%2C191

இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையில் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாட்டுள்ளன.

இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக முதலிய கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டிருந்தன.

முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்களும் பங்கு பற்றியிருந்தனர். பேச்சுவார்த்தையின் நிறைவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதேவேளை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று மதியம் சென்னை வருகின்றார். அவர் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பில் பேச்சு வார்த்தை நடாத்தவுள்ளார்.

 image-31.png?zoom=3&resize=335%2C191

 

http://globaltamilnews.net/2019/113762/

 

ஆளுநர் மாளிகையில்... காகம்கூட யோகாசனம் செய்கிறது – கிரண்பேடி

3 days 2 hours ago
crow-720x450.jpg ஆளுநர் மாளிகையில்... காகம்கூட யோகாசனம் செய்கிறது – கிரண்பேடி

காக்கை யோகா என்ற தலைப்பில் ஆளுநர் மாளிகையில் காகம், பூனைகூட யோகாசனம் செய்கிறது என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று 6ஆவது நாளாகவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கிரண் பேடி இன்று (திங்கட்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் தர்ணா போராட்டம் தொடர்பாக ‘காக்கை தர்ணா’ என்ற பெயரில் ஒளிப்படங்களுடன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஆளுநர் மாளிகை வளாகத்திலுள்ள தரை விரிப்பில் பூனை ஒன்று உருண்டு புரள்கின்றது. இதேபோன்று மரக்கிளையில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. இந்த ஒளிப்படங்களுடன் தனது கருத்தை கிரண் பேடி பதிவு செய்துள்ளார்.

அதில், “ஆளுநர் மாளிகையில் காகம், பூனைகூட யோகாசனம் செய்கிறது. மாளிகையில் தினமும் யாரோ ஒருவர் யோகாசனத்தில் ஈடுபடுவார்கள். யோகா அனைவருக்கும் பொதுவானது. தர்ணா செய்வதும் யோகாதான். எந்த நோக்கத்திற்காக தர்ணா செய்கின்றோம் என்பதைப் பொருத்து  அது என்ன ஆசனம் என்பதை கூறமுடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 11ஆம் திகதி முதல் புதுச்சேரியில் ஹெட்மெட், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அன்றைய தினம் காலை முதலே துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேரடியாக களத்தில் இறங்கி உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா என கண்காணித்தார். கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமுல்படுத்த முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், துணைநிலை ஆளுநரின் தலையீட்டால் அரசை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி புதுவை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரைக் கண்டித்து கடந்த 13ஆம் திகதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/காக்கை-யோகா-ஆளுநர்-கிரண்/

ஸ்டெர்லைட் தீர்ப்பு: ’மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி’ - வைகோ

3 days 16 hours ago
 
ஸ்டெர்லைட்படத்தின் காப்புரிமை Getty Images

"ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது." என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துவக்கம் முதலே போராடி வந்தவரும் வழக்கில் வாதிட்டவருமான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நீதி வென்றது, அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது. ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

ஆனால், தாங்கள் உச்ச நீதிமன்றம் கூறியபடி உயர்நீதிமன்றத்தை விரைவில் அணுக உள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ ராம்நாத் தெரிவித்திருக்கிறார். தீர்ப்பு வெளிவந்த பிறகு, உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரித்து முடிவெடுக்குமாறு கூறியுள்ளதால், நாங்கள் மீண்டும், உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். இந்த உத்தரவின் கோப்புகளை முழுவதுமாகப் படித்து, அதில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை பார்த்து முடிவுசெய்வோம்.

எங்களின் ஆலையிலிருந்து எந்த கழிவும் வெளியேறுவதில்லை என பசுமைத் தீர்ப்பாயமே தெரிவித்துவிட்டது. 2013லேயே இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆலையின் மேலாண்மை குறித்தே உச்சநீதிமன்றத்தில் பேசியுள்ளனர். ஆலையின் சிறப்பம்சங்கள் (Merits) குறித்து பேசவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில், சிறப்பம்சங்கள் குறித்து நாங்கள் முன்வைப்போம். அவை எங்களுக்கு சாதகமாக இருப்பதாக் கருதுகிறோம்" என ராம்நாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

’தொழிற்சாலைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது’

இன்று வெளிவந்த தீர்ப்பை தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்தத் தீர்ப்புத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி. தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்குவதை வரவேற்கிறோம். ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டார். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "இந்தத் தீர்ப்பு தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்ட ஒன்று என்பதையும், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கத்திலிருந்து மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடரும்போது ஆலை மூடப்பட்டதற்கான காரணங்களை ஆதாரங்களுடன் பட்டியலிடவும் வலிமையான வாதங்களை முன்வைக்கவும் தமிழக அரசு தயாராக வேண்டும்" என அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆலை மூடப்பட்டே இருக்கும்: தூத்துக்குடி ஆட்சியர்

இந்தத் தீர்ப்பு வெளிவந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படிதான் இந்த ஆலை மூடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டால், அது குறித்து விசாரிக்கும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லையென வாதிடப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த ஆலை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும். தேவைப்பட்டால் தொடர்ந்து இது தொடர்பான வழக்குகளைச் சந்திப்போம்" என்று தெரிவித்தார்.

வேதாந்தாபடத்தின் காப்புரிமை VEDANTA

ஸ்டெர்லைட் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாவதை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. "காவல்துறை பாதுகாப்பு, அந்தந்தச் சூழலைப் பொறுத்து அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்" எனவும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தமிழக அரசின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம்

ஸ்டெர்லைட் வழக்கில் எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது என மூத்த பத்திரிகையாளர் ஜெ. வெங்கடேசனிடம் கேட்டபோது, "இந்த மேல்முறையீட்டில், தமிழக அரசு வைத்த முக்கிய வாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்பதுதான். இதில் சுற்றுசூழல் பாதிப்பு மட்டுமல்லாமல் பல்வேறு சட்ட பிரச்னைகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டு இருந்தனர். மேலும், ஆலையை சேர்ந்தவர்கள் எவ்வாறு மாசுகளையும், கழிவுகளையும் வெளியிடுகிறார்கள் என்பது குறித்து பசுமை தீர்ப்பாயம் முழுமையாக விசாரிக்கவில்லை என்ற வாதத்தையும் அவர்கள் தங்களின் குறிப்புகளில் தெரிவித்து இருந்தனர். அதனடிப்படையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.இந்த மேல்முறையீட்டின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்ற அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதில், தமிழக அரசு மேல் முறையீட்டில் கூறியிருந்ததை முழுமையாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இதை விசாரிக்க முகாந்திரம் இல்லை. ஸ்டெர்லைட் புதிய ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளன.

ஸ்டெர்லைட்

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூடுவதற்காக அளித்த உத்தரவிற்கு தடை வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை கேட்பதால், அதை சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது" என்று விளக்கினார்.

https://www.bbc.com/tamil/india-47278282

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை…

4 days ago
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை…

February 18, 2019

 

Sterlite.jpg?resize=800%2C405

ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதனையடுத்து ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை தேசிய பசுமை தீர்ப்பாயம்திறக்க அனுமதி அளித்தது.  இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்த அதேவேளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமுல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனு ஆகியவற்றை சேர்த்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நீதிபதிகள் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன் ஆலையை திறப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

 

http://globaltamilnews.net/2019/113685/

 

சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் – கமல்ஹாசன் சாடல்

4 days 2 hours ago
kamma-720x450.jpg சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் – கமல்ஹாசன் சாடல்

சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தி.மு.க.வை  விமர்சனம் செய்துள்ளார்.

தி.மு.க.வை நான் கடுமையாக விமர்சிக்க தி.மு.க.வே காரணம் என்று நடிகரும் கட்சியும் தலைவருமான கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழன் என்பது தகுதியல்ல. அது விலாசம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம்.

முழுநேர அரசியல்வாதியாக எவரும் இருக்க முடியாது. அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருந்துகிறேன்.

நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன். தி.மு.க.வை நான் கடுமையாக விமர்சிக்க தி.மு.க.வே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே தி.மு.க.வை விமர்சிக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.

http://athavannews.com/தி-மு-கவை-நான்-கடுமையாக-வி/

இன்று ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு

4 days 2 hours ago
dc-Cover-ssn7u0rpcvirpgdgg2ska3tc63-20180607055256.Medi_-720x450.jpeg ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,600 மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகருக்குள் வரக்கூடிய அனைத்து வீதிகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்துவதற்கான பணியிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதன்மூலம் தூத்துக்குடி நகர் முழுமையாக பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்தது. எனினும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7ஆம் திகதியன்று திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://athavannews.com/ஸ்டெர்லைட்-வழக்கின்-தீர்/

வலையில் சிக்கிய சிலைகள்..!

4 days 7 hours ago
வலையில் சிக்கிய சிலைகள்..!  

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், சுவாமி சிலைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

silai.jpg

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகேயுள்ள காவிரி ஆற்றில், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு மீனவரின் வலையில் பெரிதாக ஏதோ ஒன்று சிக்கியதுபோல இருந்ததால் அவர் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று வலையை பார்த்த போது வலையில், 2 சிலைகள் சிக்கியிருந்தமை தெரிய வந்தது.

இதையடுத்து, மற்ற மீனவர்களின் உதவியுடன் அந்த சிலைகளை கரைக்கு எடுத்துவந்து பார்த்தபோது, அவை, விநாயகர் மற்றும் நடராஜர் சிலைகள் என தெரிய வந்தது. இது குறித்து வாத்தலை பொலிஸாருக்கும், கரியமாணிக்கம் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், அந்த சிலைகளை மீட்டனர்.

இதுகுறித்து பொலிஸார் தெரிவிக்கையில் “ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 2 சிலைகளும் 2 அடி உயரம் உள்ளது. அவை, ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சிலைகளை, கோயிலில் இருந்து யாரேனும் கடத்திச் செல்லும் வழியில் பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் வீசிவிட்டு சென்றிருக்கலாம். இந்த சிலைகள் எந்த கோயிலைச் சேர்ந்தது என்று விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிலைகள் இரண்டும், திருச்சியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. காவிரி ஆற்றில் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், திருச்சியில் பரபரப்பாக பேசப்பட்டது.

 

http://www.virakesari.lk/article/50173

ஸ்டர்லைட் வழக்கின் தீர்ப்பு நாளை – உச்ச நீதிமன்றம்

5 days ago
ஸ்டர்லைட் வழக்கின் தீர்ப்பு நாளை – உச்ச நீதிமன்றம்
Sterlite.jpg

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாளை (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்தது. எனினும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7 ஆம் திகதியன்று திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நாளை இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/தூத்துக்குடி-வழக்கின்-தீ/

 

‘யாருக்கும் ஆதரவு இல்லை; தேர்தலிலும் நிற்கவில்லை!’ - ரஜினி அறிவிப்பு

5 days ago

வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை. எனது பெயரை, கட்சிக் கொடியை, புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரசிகர்களின் முன்னிலையில், ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று அறிவித்தார் ரஜினி. மேலும் ‘பாராளுமன்றத் தேர்தலில் நிற்கப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் நிற்கப் போகிறேன்’ என்றும் அப்போது அறிவித்தார். நடுநடுவே, சில விஷயங்கள் குறித்து, அறிக்கைகள் வெளியிட்டார்.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார் ரஜினி. இதையடுத்து இன்று 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி.

அந்த அறிக்கையில் ரஜினி தெரிவித்திருப்பதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலே எங்களின் இலக்கு. அப்போது தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை. தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான திட்டங்களை யார் வகுத்துச் செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். மேலும் இந்தத் தேர்தலில், என்னுடைய பெயரையோ, என்னுடைய புகைப்படத்தையோ, எங்களின் கொடியையோ யாரும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு ரஜினி, தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26295806.ece

போதும்! காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவு கட்டுவோம்: புல்வாமா தாக்குதலுக்கு ரஜினிகாந்த் கண்டனம்

6 days 15 hours ago
 
 
rajinijpg
Published : 15 Feb 2019 18:48 IST
Updated : 15 Feb 2019 18:49 IST
 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 45 பேர் பலியானதையடுத்து உலகம் முழுதும் கண்டனங்களும் இரங்கல்களும் குவிந்து வருகின்றன.

தவறவிடாதீர்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  போதும்.. நடந்தவரை போதும்..! இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

பலியான ஜவான்களின் குடும்பத்தினருகாக  என் இருதயம் கலங்குகிறது.  உலகைவிட்டுப் பிரிந்த தைரியமான அந்த இருதயங்கள்.. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு கூறினார் ரஜினிகாந்த்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26282029.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பாணை

1 week ago
ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பாணை
February 15, 2019

panneer-selvam.jpg?resize=800%2C448

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் மீண்டும் நேற்றையதினம் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையகம் அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வஜசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணை இறுதிக்கட்டத்தினை எட்டியியுள்ளது.

இந்தநிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் மட்டும்தான் விசாரிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பாரைண அனுப்பப்பட்டும் அரசுப் பணிகள் இருப்பதாகக் கூறி அவர் இதுவரை முன்னிலையாகவில்லை.

மேலும் ஆணையகத்தை மேலும் 10 வாரங்களுக்கு நீட்டிக்கக் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருந்தநிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெப்ரவரி 19ஆம் திகதி ஆணையத்தில் முன்னிலையாக வேண்டும் என நேற்று மீண்டும் அழைப்பாணை ; அனுப்பப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/113318/

 

"உச்சா" போகக் கூட அமைச்சரை, அனுமதிக்காத மத்திய படை.

1 week ago

para milatary fight minister para milatary fight minister

அடக் கொடுமையே.. "உச்சா" போகக் கூட அமைச்சரை, அனுமதிக்காத மத்திய படை.. புதுவை கலாட்டா

புதுச்சேரியில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, சிறுநீர் கழிக்கச் சென்றபோது அவரை துணை ராணுவப்படையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மூன்றாவது நாளாக ஆளுநர் மாளிகை வெளியே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகையை சுற்றியும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், ஆளுநர் மாளிகையை சுற்றியும் 200 க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தவிர மற்றவர்களை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் கட்சி தொண்டர்களுக்கும் துணை ராணுவப் படையினருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி சிறுநீர் கழிப்பதற்காக அருகில் உள்ள கழிவரைக்கு சென்றபோது, அவரை தடுத்து நிறுத்திய துணை ராணுவப்படை வீரர்கள் வெளியே செல்ல அணுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பின்னர் அமைச்சர் கந்தசாமியை சிறுநீர் கழிக்க பாதுகாப்புப் படையினர் அனுமதித்தனர். அமைச்சருக்கே இந்த நிலைமையா என்று அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/para-milatary-fight-minister-341374.html

உண்ணாவிரதமிருந்து வந்த முருகன் – நளினி மருத்துவமனையில்

1 week ago
 
February 14, 2019

Murugan-Nalini.png?zoom=1.21000002622604

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள முருகன்-நளினி ஆகியோர் தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுனர் முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் பல மாதங்களாகியும் ஆளுனர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உணவை தவிர்த்து 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9ம்; திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்ற நிலையில் இருவரின்  உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் அனுப்பியுள்ள கடிதத்திலதான் சிறையிலேயே இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/2019/113174/

Checked
Fri, 02/22/2019 - 06:27
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed