எங்கள் மண்

குருந்தூர் மலையை குடைந்து... புத்தரை தேடிய, இலங்கையின் தொல்லியல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி. புறப்பட்டது எட்டுமுக தாரா லிங்கம் .

3 days 9 hours ago
May be an image of 4 people, people standing, tree and outdoors
 
No photo description available.
 
குருந்தூர் மலையை குடைந்து... புத்தரை தேடிய,
இலங்கையின் தொல்லியல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி.
பூமிக்கடியிலிருந்து வெளிப் புறப்பட்டது எட்டுமுக தாரா லிங்கம் .
ஈழவளநாடு எங்கள் சிவபூமி என
மீண்டும் ஒருமுறை நிரூபித்த
-தொல்லியல் துறைக்கு நன்றி,🙏
 

யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரி... எப்போது உருவானது? அதன் வரலாறு என்ன?

1 month ago

May be an image of text that says 'Sir Percival Akland Dyke 1$t Government Agent Jaffna District 01.10.1829 09.10.1867'

யாழ் போதனா வைத்தியசாலை (பெரியாஸ்பத்திரி) Jaffna Teaching Hospital எப்போது உருவானது? அதன் வரலாறு என்ன?

முதலாவது யாழ் அரசாங்க அதிபர்

(1829 –1867).
அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில்
அக்லண்ட் டைக்... முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர்,
ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே.
 
டைக்.. இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும்,
பழமரங்களின் கனிகளை... சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும்
பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர்.
 
தற்போது போதனா வைத்தியசாலையாக உருவாகியுள்ள யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தாபித்தவர் இவரே.
1850 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital)
என்ற பெயரில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது.
 
யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த... பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke)
உதவி அரசாங்க அதிபராக இருந்த வில்லியம் துவைனம் (William Tywnam) ஆகியோரிடம்
வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
 
அரசாங்க அதிபர் டைக் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மூலமும்
தனது நண்பர்களிடமும், நிதி சேகரித்து.. ரூபா பத்தாயிரம் வழங்கினார்.
 
அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் தனது வருமானத்தின் பெரும் பகுதியை
யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் (F.N.S. Hospital) கட்டடிப் பணிகளுக்காகச் செலவிட்டார்.
 
கோப்பாயில் வசித்து வந்த.. அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக்கின் பூதவுடல்..
அவர் காலமான 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதியன்றே
யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக...
யாழ்ப்பாணத்திலிருந்த அரச அலுவலகங்கள் 4 – 5 தினங்கள் மூடப்பட்டன.
 
நன்றி: ஆதவன் வசந்த்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் அணியப்பட்ட உடற்கவசங்கள் - ஆவணம்

1 month 2 weeks ago

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

 

 • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!
 • This documentary is solely made for an educational purpose only.

 

எல்லா(hello)...

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது ஈழப் போர்க்களங்களில் புலிகள் அணிந்த உடற்கவசங்கள் பற்றியே. புலிகள் தங்களின் சமர்க்களங்களில் உடற்கவசங்கள் அணிந்ததில்லை. ஆனால் விலக்காக நான்காம் ஈழப்போரின் ஒரு சில களங்களில் மாத்திரம் சிலர் அணிந்திருந்தனர். அப்படி புலிகளால் அணியப்பட்ட கவசங்களான

 • தலைச்சீரா - Helmet
 • சன்ன எதிர்ப்புக் கஞ்சுகம் - Bullet resistant vest 

ஆகியவற்றைப் பற்றி இன்று நாம் விரிவாகக் காணப்போகிறோம்.

வாருங்கள் கட்டுரைக்குள் தாவுவோம்…

 

 • தலைச்சீரா - Helmet

இவர்களின் தலைச்சீராப் பயன்பாடானது, சிங்களத்தின் வெற்றியுறுதி(ஜெயசிக்குறு) என்ற தோல்வியில் முடிந்த நடவடிக்கைக் காலத்திலே தொடங்கப்பட்டு விட்டாலும் நான்காம் ஈழப்போர்க்காலத்தில்தான் பரவலாக பயன்படுத்தப்பட்டது (எல்லோராலும் அல்ல). இவர்களின் தலைச்சீரா சிங்களத்தின் தலைச்சீரா போன்றே இருந்தாலும், உருமறைப்பு மூலம் அவர்களிடம் இருந்து வேறுபடுத்தப்பட்டிருந்தது. அந்த உருமறைப்பு வழக்கமான புலிகளின் வரியே ஆகும்.

2009 ஆண்டுவரை சிங்களத்திடம் இருந்த தலைச்சீராவின் வலிமை எவ்வளவோ, அவ்வளவே இதனுடைய வலிமை ஆகும்.

main-qimg-6cc60ba34f6c1ee121766f97798e74e7.png

'புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒருதொகை தலைச்சீராக்கள்'

main-qimg-bf53ff06bee6001ba6fbd875c8429fa1.png

'தலைச் சீராவின் வெளிப்புறம் | பக்க மண்டை'

main-qimg-0204368ce8ec8c172f8d8c9b3f229e3d.png

'தலைச்சீராவின் உட்பகுதி'

main-qimg-e26927b8fbf55c0710afc28be3d0153f.png

'தலைச்சீராவின் ஒருபக்க மண்டைக்கான உட்பகுதி '

main-qimg-ea7a1dcd24d01b7ccf6b340464d610ca.png

'ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணியின் கணையெக்கி(mortar) பிரிவு படையினர் | இவர்கள் தலையில் தலைச்சீரா அணிந்துள்ளதைக் காண்க.'

main-qimg-bb66262594271b77a0c5c98e32a0f2f5.png

'நான்காம் ஈழப்போரில் புதுக்குடியிருப்புச் சமரில் ஈடுபட்டுள்ள புலிவீரன் | தலையில் வரிப்புலி உருமறைப்புக் கொண்ட தலைச்சீரா அணிந்துள்ளதை நோக்குக'

 

 • சன்ன எதிர்ப்புக் கஞ்சுகம் - Bullet resistant vest

புலிகள் 3 வகையான சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களை அணிந்திருந்தனர். 

 1. கவசக் கத்தனம் - Armour jacket (Flack jacket)
 2. கவசத்தட்டுக் காவி - Armour plate carrier
 3. மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி - Armour plate carrier - Concealable armour plate carrier

 

1) கவசக் கத்தனம் - Flak jacket:

90களின் இறுதியிலிருந்து 2005-இற்கு முன் வரை சாதாரண புலிவீரர்கள் சிறிலங்கா படைத்துறையிடமிருந்து இருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனங்களையே சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். (அதற்குப் பின்னரான காலப் பகுதியிலும் ஒருசிலர் அணிந்தனர் என்பது வேறு விடையம்) 

90களின் தொடக்கத்தில் தவிபு இயக்கத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவினர் இவர்களிடம் இருந்து வேறுபட்டு முற்றிலும் உள்நாட்டிலே உண்டாக்கப்பட்ட கவசக் கத்தன அணிந்திருந்தனர். அதற்கு மேல் தாக்குதல் கஞ்சுகங்களை(assualt vest) அணிந்தனர்.

main-qimg-7eb156b474c9b562a3e46da6acfae55d.jpg

'90களின் தொடக்கத்தில் தலைவரின் மெய்யக்காவலர் பிரிவினர்'

main-qimg-cad58e1c6311c1e1d467e5fa6895e2ae.jpg

'தலைவரின் விளிம்புக்கவியினை வைத்துப் பார்க்கும் இப்படத்தின்(திரைப்பிடிப்புத்தான்) காலம் போது 93க்குக் கிட்டவாக இருக்கும் என்று நினைக்கிறேன். '

இதில் முன்னால் நிற்கும் அந்த ஜக்கட் மெய்க்காவலன் கப்டன் 'மயூரன்' ஐ நோக்கவும். அவர் அணிந்திருக்கும் கவசக் கத்தனமானது மேலே இருக்கும் கவசக் கத்தனத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். ஏனெனில் இதில் சோளியல்கள் ஏற்கனவே தைக்கப்பட்டுள்ளனன. அது மட்டுமல்லாமல் இதில் மற்றொன்றும் தெரிகிறது. அதாவது மேலே உள்ள படத்தில் இருக்கும் மெய்க்காவலர் யாரும் மரும உறுப்பிற்கான சன்ன எதிர்ப்பு உறுப்பினை மெய்க்கவசத்துடன் சேர்த்து பிணைக்கவில்லை. ஆனால் இவர் அதைப் பிணைத்துள்ளார்.

main-qimg-4e7dc6e3f11f4857251d90b1978a8c2d.png

'எசு.பி.யீ-9 (SPG-9) என்ற பின்னுதைப்பற்ற சுடுகலனை தாணிக்கும்(load) தவிபு-இன் விக்டர் கவச எதிர்ப்புப் படையணிப் போராளிகள். | இவர்கள் தலையில் தலைச்சீராவும் உடலில் சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனமும் அணிந்துள்ளதைக் காண்க. | படம் - 3ம் ஈழப்போரின் ஆனையிறவுச் சமர்க்களம். '

fvu.png

'106மிமீ எம்40ஏ1 என்ற பின்னுதைப்பற்ற சுடுகலனை தாணிக்கும் தவிபு-இன் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் போராளிகள். | இவர்கள் தலையில் தலைச்சீராவும் உடலில் சிறீலங்கா படைத்துறையிடமிருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனமும் அணிந்துள்ளதைக் காண்க. | படம் - 3ம் ஈழப்போர் காலம். '

ஆனால் இக்கால கட்டத்தில் தலைவரின் மெய்க்காவல் பிரிவினர் உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட ஒரு விதமான சோளியல்கள் கொண்ட கவசக் கத்தனங்களை அணிந்திருந்தனர். அவை வழக்கமான வரியில் இல்லாமல் சிறீலங்காத் தரைப்படையின் உருமறைப்பில் இருந்தன.

main-qimg-8be29fe81f78a4987ccb9a7d45549a59.jpg

'முன்பக்கம் இங்கு தெரிகிறது. வீரனின் வயிற்றுப் பகுதியைக் காணவும். சன்னக்கூட்டுச் சோளியல்(magazine pouch) தெரிகிறது.'

main-qimg-aa8b3aa47b724e3891b7933014333d6c.png

'இஃது அக்கவசக் கத்தனத்தின் பின்பக்கம் ஆகும்'

இதே காலகட்டத்தில் சில வேளைகளில் புலிகளின் மெய்க்காவலரும் சிங்களத்தின் கவசக் கத்தனத்தினை அணிந்திருந்தனர்.

main-qimg-691fc53d3bb26d0e36fcb777c9f8aff5.jpg

'தலைவர் ஏந்தியிருப்பது மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.- 103'

கவசக் கத்தனங்களை ஆண் & பெண் என இரு பாலரும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

main-qimg-5190b2ff2d344290b4e13270df02b2a7.png

'கிட்டு பீரங்கிப் படையணியின் மகளீர் பிரிவுப் போராளிகள் தெறோச்சியை(Howitzer) இயக்கும் காட்சி | வலது ஓரத்தில் நிற்கும் போராளி கவசக் கத்தனத்தினை அணிந்திருப்பதை நோக்கவும்.'

இவற்றைப் போலவே போல புலிகள் 2001-ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்திலிருந்து 2005 வரை மற்றொரு விதமான சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவர்களின் உருமறைப்பினை (சிறீலங்கா படைத்துறை படைப்பிரிவுகளில் ஒன்றான 'சிறப்பு பணிக்கடப் பிரிவு' (STF) இன் உருமறைப்பு) கொண்டதோர் கவசக் கத்தனத்தினை அணிந்திருந்தனர். அதனைக் கீழ்க்கண்ட படத்தில் காணவும் .

main-qimg-3ec82eab3e54c82bc9aa80835c0ed8a9.png

'ஜக்கெற் மெய்க்காவலர்களான இ: கவியுகன்; வ: லெப் கேணல் வள்ளுவன் | இவ்விரு மெய்க்காவலரும் கையில் ஏந்தியிருப்பது மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.74u துமுக்கி . இவர்கள் இருவரும் அந்த விதமான கவசக் கத்தனத்தினைத் தான் அணிந்துள்ளனர்.'

இதேபோலல்லாமல் சிங்களத்தின் உருமறைப்பைக் கொண்ட இன்னொரு விதமான கவசக் கத்தனமானது, தலைவரின் மெய்க்காவலர் பிரிவினரால் மட்டும் நான்காம் ஈழப்போரில் அணியப்பட்டது. இதுவும் உள்நாட்டு மானுறுத்தமே!

main-qimg-c22e2246fdda20314a3d55087cd7d9e0.jpg

'தலைவர் குறிவைக்கப் பயன்படுத்தும் துமுக்கி-திராகுனோவு குறிசூட்டு துமுக்கி(dragunov sniper rifle)'

-5769562378151770156_121.jpg

'தலைவர் குறிவைக்கப் பயன்படுத்தும் துமுக்கி-மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.103'

மேற்கண்ட இரு படங்களிலுமுள்ள மெய்க்காவலரை நோக்கவும். இக்கவசக் கத்தனத்தின் முன் தட்டுக்காவி எப்படி இருக்கும் என்று அறியேன். ஆனால் பின்பகுதியின் தோட் பகுதியில் இருதோள்களிலும்(வலது,இடது) தலா இரண்டு சோளியல்கள் என மொத்தம் நான்கு சோளியல்கள் உள்ளன. அவை துமுக்கிக்கான சன்னக்கூடு வைக்கும் சோளியல்கள் ஆகும். இவை அவசரகால சோளியல்கள்(emergency pouch) எனப்படும். இவையே புலிகளால் உண்டாக்கப்பட்ட முகனையான(modern) சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களாகும். அவற்றையே தலைவரின் மெய்க்காவல் பிரிவினர் தொடர்ந்து இறுதிவரை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2) கவசத்தட்டுக் காவி - Armour plate carrier

நான்காம் ஈழப்போரில் புலிகளின் உள்நாட்டு மானுறுத்த(manufacture) கவசத்தட்டுக் காவி மூன்று தட்டுகளைக் கொண்டதாக உண்டாக்கப்பட்டது. இவை பன்னாட்டு கவசத்தட்டுக் காவிகளின் வடிவிற்றான் இருந்தன. ஆனால் இவற்றின் உருமறைப்பானது(camouflage) முந்தையவற்றைப் போலல்லாமல் புலிகளின் வரியில் ஆக்கப்பட்டிருந்தது. புலிகளின் இந்த சன்ன எதிர்ப்புக் கஞ்சுகத்தினுட் இருந்த "கவசத்தட்டுகள்" (armour plates) ஆனவை வெங்களியால்(ceramic) செய்யப்பட்டவை ஆகும். ஆனால் இதனோடு சேர்த்துக் கலக்கப்பட்ட கலவை யாதென்று தெரியவில்லை. தவிபு-ஆல் உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட இது பார்ப்பதற்கு மெச்சத்தக்கதாக இருக்கிறது.

இந்த சன்ன எதிர்ப்புக் கஞ்சுகத்தினுட் மொத்தம் 3 கவசத்தட்டுகள் இருந்தன.

 • முன் உறையினுட் இரு தட்டுகள் - பெரிய மெல்லியது ஒன்றும் சிறிய தடிமனானது ஒன்றும்
 • பின் உறையினுட் ஒரு தட்டு - பெரிய மெல்லியது ஒன்றும்

இருந்தன. ஆனால் இதற்குள் பக்கத் தட்டுகள் எதுவுமே இல்லை. அதற்குப் பகரமாக பெரியதான முன்றட்டும் பின்றட்டும் 'கான்னிலவு' (quater moon) வடிவில் வளைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வளைக்கப்பட்டிருந்தமையால் பக்கத் தட்டுகளிற்கான தேவை குறைக்கப்பட்டது. தட்டுகளின் விளிம்புகள் தடித்த மின்நாடாக்கள்(electric tape) கொண்டு ஒட்டப்பட்டிருந்தன.

→ முன் பக்க மெல்லிய பெரிய தகடு:-

இதை தட்டிய போது ஒரு வித வேறுபாடான ஓசை எழும்பியது

உட்புறம்:

main-qimg-25bae1e96eb7706170daf5de6f8460c3.png

 

வெளிப்புறம்:

main-qimg-434ffbd5b2ffe7e0bceda9405992eac6.png

 

→ முன் பக்க தடித்த சிறிய தகடு:-

இதை தட்டிய போது பெரிய தட்டினை விட வேறுபட்ட ஒரு வித ஓசை எழும்பியது.

main-qimg-c3214ca20394577e0dc32fc7f61fa5fe.png

 

→ பின்பக்க மெல்லிய பெரிய தட்டின் படம் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை!

 

ஈ கவசத்தட்டுக் காவியானது முன் தட்டுக்காவி, பின் தட்டுக்காவி(back plate carrier) என இரு துண்டுகளக இருக்கும். இவற்றின் முன் தட்டுக்காவியினுள்(front plate carrier) உள்ள இரு தட்டுகளின் பெரிய மெல்லிய தட்டு வெளியில் இருந்து முதலாவதாகவும் சிறிய தடித்த தட்டு இரண்டாவதாகவும் இருக்கும். இந்தச் சிறிய தடித்த தட்டும், பெரிதுக்குள் தன்னை அகப்படுத்திக்கொள்ள ஏதுவாக சற்று வளைந்தே இருக்கும். இந்த தட்டுக் காவியின் அடிப்பகுதியில் இருக்கும் வாயின் மூலமாகவே தட்டினை உள்ளுடுத்த வேண்டும்.

main-qimg-2ccba69cc4ec8c900b814be096273c2f.png

'விதம் ஒன்றினைச் சேர்ந்த கவசத்தட்டுக் காவியின் அடிப்பகுதி. அதன் வாயில் திறந்துள்ளதையும் அதனுள் தட்டுகள் தென்படுவதை நோக்கவும்'

main-qimg-726e656d96a0094fcffa1112112eb59a.png

'இதுதான் புலிகள் நான்காம் ஈழப்போரில் மானுறுத்திய மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி | இது காவியின் முன்பக்கமாகும். இதே போல் தான் அனைத்து வரிக் காவிகளின் பின்பகுதியும் இருக்கும்'

main-qimg-ea80cb68c2d69848b70fca41484e6d26.png

இந்த முன் தட்டுக்காவியின் அடிப்பகுதியில் முதுகுப்பக்கத்திலிருந்து சுற்றிக் கட்டுவதற்கு ஏதுவாக யாத்துணி(ஒன்றோடொன்று பொருந்தி சேர்த்துக் கட்டும் துணி) எனப்படும் ஒரு துணியானது பளுப் (கமக்கட்டில் இருந்து நேர்கீழாக வரும் பக்கவாட்டுப் பகுதி) பகுதியில் தைக்கப்பட்டிருக்கிறது. அவ்விரண்டு துணியிலும் ஒரு பிணையொட்டி(velcro) இருக்கும். அந்த யாத்துணியின் உயரமானது சள்ளையில் (இடுப்பின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதி) இருந்து பளுவின் தொடக்கத்திற்கு சற்றுக் கீழே வரை எவ்வளவு உயரமோ, அவ்வளவே. இவ்வளவு உயரம் கொண்ட யாத்துணியானது முதுகின் தண்டுவடத்தை நோக்கிப் போகப்போக முக்கோண வடிவில் குறுகிச் சென்று சதுர வடிவ முடிவை அடையும். இதில் இடது பக்கத்தில் இருந்து வரும் யாத்துணி கீழ்ப்போக வலப்பக்க யாத்துணி மேற்போகும். (படத்தில் காண்க) அதே போலதான் தோளிலும். அத்தோட்டுணியிலும் (வலது,இடது) பிணையொட்டி உண்டு. அங்கு, முன் தட்டுக்காவியின் தோட்டுணி மேற்போக பின் தட்டுக்காவியின் தோட்டுணி கீழ்ப்போகும். மொத்தத்தில் பின் தடுக்காவியானது முன் தட்டுக்காவியினுட் அடங்கிக்கொள்ளுகிறது.

இந்த வகை கவசத்தட்டுக் காவியில் 4 விதம் இருந்தது.

 1. ஒன்றினது பின் தட்டுக்காவியில் சதுரவடிவிலான ஒரு பெரிய பையொன்று இருந்தது. அதற்கு அதன் அரைவாசி உயரமுள்ள மூடி இருந்தது. இதன் முன்பக்கம் வெறுமனே இருந்தது.
 2. மற்றொன்றில் வெளிப்புறத்தில் 4 சன்னக்கூடு வைப்பதற்கு ஏதுவாக 4 சோளியல்கள் இருந்தன. அந்த சோளியலின் வெளிப்புறத்தில் மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு பிணையொட்டி குதைகள்(loops) இருந்தன. ஆனால் அதற்கான மூடியில் ஒரே ஒரு பிணையொட்டி கொளுவி(hook) மட்டுமே இருந்தது. இதன்மூலம் கீழே இருந்த பிணையொட்டிக் குதையில் மேலும் ஒரு சோளியல் தேவைப்படின் மாட்டப்பட்டிருக்கலாம். அதாவது பன்னாட்டு சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களில் உள்ள 8 சோளியல்கள் போன்று.
 3. பிறிதொன்றில் மேற்கண்ட இரண்டுமே கலந்த கலவை உள்ளது. அதாவது முன் தட்டுக்காவியில் பெரிய பையொன்றும் அதன் மேலே மூன்று சன்னக்கூட்டுச் சோளியல்களும் உள்ளன. ஆனால் அதில் மேலும் மூன்று சேர்ப்பதற்கான பிணையொட்டி காணப்படவில்லை.
 4. நான்காவதில் நான்கு சன்னக்கூடு வைப்பதற்கு ஏதுவாக நான்கு சோளியல்கள் மட்டும் இருந்தன. அதில் கூடுதலாக சோளியல்கள் சேர்ப்பதற்கு ஏற்ற கட்டமைப்புகள் இல்லை. இதற்கு கழுத்து காப்பு உள்ளது.

main-qimg-fe2d6a6f932768e88f36b796aacae9ea.png

main-qimg-066f682ce70887ab0429690cd14b523a.jpg

'விதம் ஒன்று கவசத்தட்டுக் காவி அணிந்து வகை-85 12.5 மி.மீ இயந்திரச் சுடுகலனால் எதிரி மீது சுடும் புலி வீரன்'

main-qimg-f7d7cb25d6ec715c6696bc022ecd8818.png

main-qimg-8abeadd4a863207b71bbee2235959c7d.png

'வட போர்முனை முன்னரங்க நிலைகளில் ஒன்றில் வைத்து எடுக்கப்பட்ட படம். | நான்கு புலிவீரர்களும் சீருடையில் உள்ளனர்.'

மேற்கண்ட படத்தில் அம்புக்குறியிட்டுள்ள வீரரைக் பார்க்கவும். அவர் தலையில் தலைச்சீராவும்(helmet), உடலில் மேற்குறிப்பிட்டுள்ள விதம் மூன்றினைச் சேர்ந்த கவசத்தட்டுக் காவியினையும் அணிந்துள்ளார்.

விதம் நான்கின் படம் என்னிடம் இல்லை!

 

 

3) மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி - Concealable armour plate carrier

main-qimg-8f688be2a4485dabcdc885e6ae1164a6.jpg

'இவர்தான் மேஜர் மிகுதன். அன்னார் தமிழீழ அரசியற்றுறைப் பொறுப்பாளர் மாவீரராகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மெய்க்காவலர் ஆவார். அற்றை நாளில் இவரும் தமிழ்ச்செல்வனுடன் மாவீரரானார்.'

மிகுதன் அணிந்திருக்கும் கவசத்தட்டுக் காவியினை நோக்கவும். அதுதான் மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவியாகும். அதாவது மேற்சட்டையினுள் அணியும் வெளித்தெரியா சன்ன எதிர்ப்புக் கஞ்சுகம். இதனை அனைத்து மெய்க்காவலரும், ஒரு சில கட்டளையாளர்களும் அணிந்திருப்பர். அவர் கையில் வைத்திருப்பது தலைச்சீராவாகும்.

 

 • கடற்சமர்க் களத்தில்

புலிகள் கடற்படையான கடற்புலிகளும் தலைச்சீரா, கவசக் கத்தனம் & கவசத்தட்டுக் காவி ஆகியவற்றினை கடற்சமர்களில் அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த கவசக் கத்தனங்கள், சிங்களவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையும், புலிகளால் உள்நாட்டில் மானுறுத்தப்பட்டவையும் ஆகும்.

main-qimg-269c1ff8d5c63e43c84b1f3d904285d3.png

'சிங்களத்திடம் இருந்து கைப்பற்றிய கவசக் கத்தனம் & தலைச்சீரா அணிந்து கடற்சமரில் ஈடுபட்டுள்ள கடற்புலிகள் | இவர்கள் நிற்பது டோறா மாதிரி குமுதன் வகுப்புக் கலத்தில்'

main-qimg-61a7a02b05d927bddfaca969420bef48.png

'உள்நாட்டில் மானுறுத்திய வரி கவசத்தட்டுக் காவி & தலைச்சீரா அணிந்து பீகே இயந்திரச் சுடுகலனால் சுடும் ஒரு கடற்புலி வீரன்'

 

 • தலைவரின் மெய்க்கவசம்:

தலைவரிற்காக இறுதிநேரத்தில் காதிலிருந்து முழு மெய்யையும் கவர் செய்து எத்தகைய சிறு சன்னக்களையும் தகைக்கும் வகையில் பித்தளைகளை உருக்கி செய்யப்பட்ட ஓர் முற்றிலும் வேறுபட்ட உடற்கவசம் உண்டாக்கப்பட்டிருந்ததாக அவரது மெய்க்காப்பாளர் ரகு என்பவர் கூறியிருந்தார். இது தொடர்பான படங்கள் ஏதும் எனக்குக் கிடைக்கப் பெறவில்லை.

—> தலைவரின் தலைமை மெய்க்காவலர் 'ரகு' என்பவர் கொடுத்த செவ்வியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்.

 

 

இவைதான் ஒட்டுமொத்தமாக தவிபுவால் அணியப்பட்ட மெய்க்கவசங்களாகும். கட்டுரையினை இறுதிவரை வாசித்தமைக்கு மிக்க நன்றி. _/\_

 

உசாத்துணை:

 • செ.சொ.பே.மு.
 • சொந்தமாக எழுதியது

படிமப்புரவு

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

பல கிராமங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் சுழிபுரம் மேற்கு கிராமம் பற்றிய தொகுப்பு

1 month 2 weeks ago
பல கிராமங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் சுழிபுரம் மேற்கு கிராமம் பற்றிய தொகுப்பு Vasantham FM

 

கிழக்கில் சிந்திய இரத்தங்கள் | சோனகர்/ முஸ்லீம்களினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்

2 months ago
ஆலயத்திற்குள் வைத்து முஸ்லீம்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்கள்.

 

-இரா.துரைரெத்தினம்-

 

1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் செப்டம்பர் ஒக்டோபர் மாதங்கள் என்பது கிழக்கில் இரத்த ஆறு ஓடிய காலப்பகுதியாகும். இந்த படுகொலைகளை சிறிலங்கா படைகளின் துணையுடன் முஸ்லீம் ஊர்காவல் படையினரே செய்திருந்தனர்.

1984 ஆம் ஆண்டுக்கு பின்னர் கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படைகள் அமைக்கப்பட்டன. முஸ்லீம் ஊர்காவல் படை என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த ஆயுதக்குழுக்களின் முக்கிய நோக்கம் தமிழர்களை படுகொலை செய்து கிழக்கில் தமிழினத்தை முற்றாக இல்லாமல் செய்வதாகும்.

முஸ்லீம் ஊர்காவல் படை தவிர கிழக்கில் ஜிகாத் குழு, ஒசாமா குழு உட்பட 18க்கும் மேற்பட்ட முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முஸ்லீம் ஆயுதக்குழுக்களுக்கு தானே ஆயுதங்களை வழங்கி வைத்ததாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வீடியோ மூலமான உரை ஒன்றில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முதல் கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்களே வாழ்ந்தனர். இந்த நிலையை மாற்றி தாம் பெரும்பான்மை இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கிழக்கில் தமிழர்கள் மீது காலத்திற்கு காலம் முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினர். தமிழர்களை அழித்து வந்ததுடன் கிழக்கில் 43க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றி விட்டு அக்கிராமங்களை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து கொண்டனர் என அழிந்த தமிழ் கிராமங்கள் என்ற நூலில் எஸ்.ஜெயானந்தமூர்த்தி விபரித்துள்ளார்.

1990ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1945ஆம் ஆண்டிலும் வீரமுனை கிராமத்தில் இருந்த தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தி அந்த அழகிய கிராமத்தை இரத்த களறியாக்கினார்கள் என கிழக்கில் நடந்த படுகொலைகள் பற்றி எழுதிய மணலாறு விஜயன் தனது நூலில் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லீம்களின் வாள் வெட்டுக்கும் கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டிய மல்லிகைத்தீவு மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழ்ந்து வந்தனர்.

1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் முஸ்லீம்களின் தாக்குதல்களால் தமிழர்கள் துன்பத்தையே அனுபவித்தனர் என மணலாறு விஜயன் தனது நூலில் தெரிவித்திருக்கிறார்.
கொண்டவெட்டுவான் இராணுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம்களும் வீரமுனை போன்ற தமிழ் கிராமங்களிலிருந்து தமிழர்களை அகற்ற வேண்டும் என்றே செயற்பட்டனர்.

தமிழர்கள் மீதான உச்சக்கட்ட தாக்குதல் 1990ல் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, வீரமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, காரைதீவு படுகொலை, சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்திருந்த அப்பாவி தமிழர்களை சிறிலங்கா படையினரின் துணையுடன் முஸ்லீம்கள் படுகொலை செய்தனர். இந்த படுகொலை சம்பவங்களில் ஒன்றுதான் அம்பாறை வீரமுனை சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 54 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் வீரமுனை பகுதியில் மொத்தம் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை யும்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் இருந்து வாள்கள் கத்திகள் துப்பாக்கிகள் சகிதம் புறப்பட்ட முஸ்லீம்கள் வீரமுனை பிள்ளையார் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்த அப்பாவி தமிழ் மக்களை வெட்டியும் குத்தியும் சுட்டும் கொன்றனர். முஸ்லீம் காடையர்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி ஆலய மூலஸ்தானத்திற்குள் ஓடிய பொதுமக்களையும் முஸ்லீம்கள் வெட்டிக்கொன்றனர்.
ஆலயம் வெள்ளக்காடாக மாறியது.

1990ஆண்டு ஏற்பட்ட விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின்போது வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.

வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.

 1. 20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவிலில் அதிரடிப்படையினரின் துணையுடன் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 2. 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 3. 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 4. 16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் சேர்ந்து 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
 5. 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
 6. 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
 7. 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
 8. 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
 9. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது.
 10. 20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை . 16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
 11. 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
 12. 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
 13. 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
 14. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.
 15. வீரமுனை ஆலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட 1990 ஓகஸ்ட் 12ஆம் திகதி அம்பாறை மட்டக்களப்பு எல்லைக்கிராமமான துறைநீலாவணையிலும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 60பேர் கொல்லப்பட்டனர்.
 16. 12.08.1990 அன்று காலை நீலாவணை கல்லாறு இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்திருந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் துறைநீலாவணை கிராமத்தை சுற்றி வளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் வயது வேறுபாடு இன்றி வீடுகளில் இருந்தவர்களும் வீதிகளில் சென்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் 47பேரின் பெயர் விபரங்கள் மட்டக்களப்பு சமாதான குழுவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 12பேர் பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குவர். அக்காலத்தில் இருந்த பதற்ற சூழலாம் இவர்களுக்கு உரிய இறுதி சடங்குகள் கூட செய்யப்படவில்லை. அனைவரும் ஒரே குழியில் போட்டு புதைக்கப்பட்டனர்.

வீரமுனை துறைநீலாவணை கிராமங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட அதேதினமான 1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12ஆம் திகதி மட்டக்களப்பு ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11ஆம் திகதி அன்று இராணுவத்தினரும் முஸ்லீம் ஆயுதக்குழுவும் இணைந்து செங்கலடி கிரான் போன்ற கிராமங்களை சுற்றிவளைத்து தமிழ் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் சுமார் 15பேர் கொல்லப்பட்டனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் 12பேர் காயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மறுநாள் 12.08.1990 அன்று இரவு 11மணிக்கும் 12மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பொதுமக்கள் 12பேரையும் வைத்தியசாலைக்குள் வைத்தே முஸ்லீம்கள் வெட்டிக்கொன்றனர். இராணுவத்தினருடன் சென்ற முஸ்லீம்களே அப்பொதுமக்களை வெட்டி கொன்றனர் என இப்படுகொலையிலிருந்து தப்பி வந்த பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து 1990 ஒகஸ்ட் 14ஆம் திகதி மட்டக்களப்பு கோரவெளி, ஈச்சையடித்தீவு கிராமங்களில் இராணுவத்தினருடன் புகுந்த முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இத்துப்பாக்கி பிரயோகங்களில் வீடுகளில் இருந்தவர்கள் வீதிகளில் சென்றவர்கள், வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என 18பேர் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கல்லடி செங்கலடி ஆகிய இராணுவ முகாம்களிலிருந்து சென்ற இராணுவத்தினரும் ஏறாவூரில் இருந்த முஸ்லீம் ஆயுதக்குழுவுமே இத்தாக்குதலை நடத்தினர்.

இதேபோன்று 1990 ஓகஸ்ட் 11ஆம் திகதி கல்முனையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் புரியப்பட்டது. பாண்டிருப்பு கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் வீடுகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்தனர். ஆண்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் கையை உயர்த்திவாறு வெளியில் வந்தனர். பெண்கள் தமது குழந்தைகளை இறுகப்பற்றிய படி வெளியில் வந்தனர். 25ஆண்களை இராணுவத்தினர் காரைதீவு முகாமுக்கு கொண்டு சென்றனர். தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மாரை விடுமாறு பின்னால் சென்ற பெண்கள் தாக்கப்பட்டனர்.

அடுத்த நாள் இராணுவம் கொண்டு சென்ற பொதுமக்களின் உறவினர்கள் கல்முனை நகரிலிருந்து காரைதீவு இராணுவ முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு பெண்கள் வயோதிபர்கள் சிறுவர்கள் என பெருந்தொகையானோர் கூடியிருந்தனர். அங்கிருந்த இளம் பெண்களை தெரிவு செய்து அருகில் இருந்த கட்டிடத்திற்குள் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆண்களை இராணுவத்தினர் சித்திரவதை செய்தனர். பின்னர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அங்கு இரு மணித்தியாலங்களில் 37பொதுமக்கள் கொல்லப்பட்டனர். முதல் நாள் காரைதீவு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 25 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை கூட கொடுக்காது எரித்து விட்டனர். 11ஆம் திகதி 12ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மட்டும் கல்முனையில் 62 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று கிழக்கில் ஒவ்வொரு தமிழ் கிராமங்களிலும் வகை தொகையின்றி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இப்படுகொலைகள் பற்றி அடுத்து வரும் வாரங்களில் தொடராக பார்ப்போம்.

(தொடரும்.)

 

 

😃https://www.kalmunainet.com/archives/26965

இந்திய அரசு ஏன் துணை போனது?

2 months 1 week ago

களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். 

ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை 
ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன? 

 

இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர்

2 months 2 weeks ago

இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர்.

A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp.

 

சைக்கிளில் யாழ் மாணவனின் கண்டுபிடிப்பு! குவியும் பாராட்டுக்கள்!!

3 months ago

 

 

ஹாட்லிக் கல்லூரி மாணவன் தனது கண்டுபிடிப்பை தெளிவாக விளங்கப்படுத்துவதை பார்க்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது!😀

இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள்👍🏾👏👏👏

Checked
Fri, 10/07/2022 - 19:52
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed