அன்பான யாழ் நிர்வாகத்திற்கு, மாமியின் 31ம் நினைவுநாள், விளம்பரம் போட தேவையில்லை, உங்கள் தாயக மக்களுக்களின் உதவிகளுக்கு என் சிறு தொகை. அன்புடன் உடையார்

யாழிணையம் மூலமான உதவி. விளம்பரம் ஏதும் என்னிடம் இல்லை, மக்களின் தற்போதைய நிலைமைக்கான எனது சிறு பங்களிப்பு மாத்திரமே

மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 09 – 01 – 1946
இறைவன் அடியில்: 20 – 04 – 2020

அமரர் திருமதி. ஸ்ரீஜெகதேவி வைரமுத்து

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ஸ்ரீஜெகதேவி வைரமுத்து திங்கட்கிழமை (20.04.2020) அன்று கொழும்பு, கல்யாணி வீதியிலுள்ள முதியோர் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி புனிதவதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற வைரமுத்து (ஓய்வு பெற்ற பிரதம மருந்தாளர் – போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும், சிவப்பிரியாவின் (அவுஸ்திரேலியா) அன்புத் தாயாரும், இந்துநேசனின் (அவுஸ்திரேலியா) அன்பு மாமியாரும், ஸ்ரீசக்திவேல், ஸ்ரீமயூரன், ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மற்றும் மாதுமை, வைகுந்தன் தருண் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2020 அன்று பிற்பகல் 2 மணியளவில் கிரிலப்பனை பொது மயானத்தில் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்
தொலைபேசி : (+61) 410302123