Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரிஷி புலனாய்வு அரசியலில்...
#41
என்னதான் நீங்கள் சொல்கிறபடி அமெரிக்காவும் இந்தியாவும் ஒப்பந்தங்கள் போட்டாலும் அவையள் ஒருத்தரை ஒருத்தர் நமபவில்லை உதாரணமாக சுனாமி என்ற துயர நிகழ்வு நடந்தபோது இலங்கையை தன் கையில் வைத்திருப்பதற்காக இந்தியா தன்னடைய அவலத்தை மூடி மறைத்துக்கொண்டு இலங்கைக்கு உதவிசெய்ய (அப்புூதி அடிகளார் மகன் இறந்தது தெரிந்தும் சிவனடியாருக்கு விருந்து படைக்க விரும்பியது போல்) அதிவிரைவாக வந்தது.
இரண்டு மூன்று நாட்கள் பேசாமல் இருந்த வல்லரசு பார்த்தது இனியும் பேசாமல் இருந்தால் இந்து சமுத்திரத்தில் தான் காலுன்ற முடியாது என்று நினைத்துக்கொண்டு தானும் ஓடி உதவிசெய்ய வந்தது. சந்திரிகாவும் இதை வைத்து வியாபாரம் செய்யலாம் தனக்கு சுனாமி ஒரு காமதேனுவை தந்திருக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கும்போதுதான்
பிராந்திய வல்லரசு அவவினுடைய தலையிலை ஒரு கல்லை போட்டது. அமெரிக்காவை உடனடியாக வெளியேற்றும்படி அம்மாவும் வேறு வழியில்லாமல் பிராந்திய வல்லரசுக்கு பணிந்து அமெரிக்காவை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டா.
அமெரிக்காவும் வெளியேறியது உள்ளுக்குள் கருவியவாறு.
அதனால்தான் கதிர்காமர் விடுதலைப்புலிகள் விமானம் வைத்திருக்கிறார்கள் இதனால் உலகநாடுகளுக்கு அச்சம் என்றும்
அதனால் அமெரிக்கா ஏதாவது செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டபோது வல்லரசு விடுதலைப்புலிகள்பால் ஒரு நெகிழ்வுத்தன்மையை காண்பித்து அமைதியாக இருந்தது .
இப்போது கதிர்காமர் கொல்லப்பட்டபோதும் அது அமைதியாக இருக்கிறது. எந்தவிதமான காட்டமான அறிக்கையும் இல்லாமல் வெறும் இரங்கல் செய்தியைதான் தெரிவித்தது . இந்த முரண்பாட்டை நாம் சரியாக பயன்படுத்தினால் எமது வழி சுலபமாக இருக்கும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)