Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரிஷி புலனாய்வு அரசியலில்...
#21
--------------------------------------------------------------------------------
இந்திய - அமெரிக்க உறவு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழ் புலமையாளர் மத்தியில் விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து முக்கியம் பெறுகிறதொன்றாகும். ஒருவர் பிராந்திய சக்தி மற்றவர் சர்வதேச சக்தி. இவ்விரு நாடுகளை அளந்துகொண்டே ஈழவிடுதலைப் போராட்டத்தை நகர்த்தும் சூழலுக்குள் தமிழர்களின் விடுதலைப் போராட்டமுள்ளது.
அந்த வகையில் அண்மையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிகழ்ந்த இராணுப் பாதுகாப்பு உடன்படிக்கை எத்தகைய புறச்சூழலை உருவாக்கியதென்பதும் அதன் தாக்கம் எப்படியானதென்பதையும் நோக்குவோம்.

முதலில் இரண்டு நாடுகளது கடந்த கால உறவு நிலையை மேலோட்டமாகப் பார்ப்போம். BJP அரசாங்கத்திற்குப் பின்பு ஆட்சியை அமைத்த காங்கிரஸ் கூட்டணியினர் அமெரிக்க எதிர்ப்பு வாதத்தை கொண்டவர்கள் போலவே காணப்பட்டனர். ஆனால் அமெரிக்காவின் எதிரியுமில்லை நண்பனுமில்லை என்ற நிலைக்குள் இருப்பது போலவே ஆட்சியாளரால் மட்டுமல்ல இந்திய புலமையாளர்களால் பேசப்பட்டது. அது இந்தியாவுக்குள்ளேயும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும் மேலே தயார் செய்யப்பட்டிருந்தது. உண்மையில் காங்கிரஸ் கட்சியும் அதன் பிரதமரும் அமெரிக்காவுடன் நெருக்கத்தையும் உறவையும் பலப்படுத்த பலதடவை முயன்றதோடு பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவை முறிக்க பல தடவை முயன்றதை அண்மைக்காலத்தில் காணமுடிந்தது. இதற்கான அணுகுமுறை F-16 ரக விமானத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவது பற்றிய விடயத்தில் மிக நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டது. இந்த நெருக்கடியை தீர்க்க அமெரிக்கா இலகுவான சமன்பாடொன்றை வெளியிட்டது. பாகிஸ்தானுக்கு F-16 வழங்கினால் இந்தியா F-18 ஐ வாங்கலாம் என்பதுபோல் அச்சமப்படுத்தல் காணப்பட்டது.

வாஜ்பாய் அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொண்ட பல இராணுவ ஆயுத தளபாட உற்பத்தி பற்றிய உடன்பாடுகளிலிருந்து புதிய அரசு விலகமுடியாமலும் அதே நேரத்தில் பாகிஸ்தானை முறியடிக்க முடியாதநிலையிலும் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் மன்மோன்சிங், அரசாங்கம் இடதுசாரிகளின் நெருக்கடிக்கு அஞ்சியே செயல்பட்டதுடன் தற்போது அமெரிக்காவின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமலேயே உடன்பாட்டுக்கு இணங்கியுள்ளது. இது பற்றி இடதுசாரிகள் கருத்துக் கூறுகையில் இவ்உடன்படிக்கை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு ஏற்கனவே பாதுகாப்பு உடன்படிக்கையை கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலையே அமெரிக்காவால் இந்தியாவுக்கு ஏற்படப்போகின்றது என எச்சரித்துள்ளன. மன்மோகன்சிங்குக்கு இடதுசாரிகளை சமாளிப்பதைவிட அமெரிக்காவை சமாளிப்பது கடினமாகவுள்ளது. F-16 ஐ வைத்துக்கொண்டு அமெரிக்கா இந்த உடன்பாட்டுக்கு இந்தியாவை வரவழைத்துள்ளது. பாகிஸ்தான் - இந்திய உறவு நிலையை தீர்மானிக்கும் வலு அமெரிக்காவிடமே உண்டு என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

எனவே இந்தியாவும் - அமெரிக்காவும் கூட்டாக ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் அவற்றை விநியோகிப்பதும் எட்டப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டில் உண்டு என்றாலும் அதனால் ஏற்படப் போகும் இராணுவ - அரசியல் தன்மை எந்தளவுக்கு இந்தியாவுக்கு சாதகமானது என்பது கேள்விக்குரியதாகும்.

மன்மோகன்சிங் அரசாங்கம் ராஜீவ் காந்தியின் அமெரிக்கா சார்ந்த கொள்கையைப் பின்பற்றுவது போன்றே காணப்படுகின்றது. ராஜீவின் கொள்கைகள் ராஐPவ்காந்தி காலத்திலேயே செல்லு படியற்றதொன்றாக விளங்கியது என்பது சிங் ஆட்சியில் எவ்வளவு பிற்படுத்தப்பட்டதாக அமையுமென்பது தெளிவாகும். அதனால் அமெரிக்காவை நோக்கிய இந்திய ஆட்சியாளர்களின் போக்கு யதார்த்தத்திற்கு முரணாக அமைவதோடு தெளிவற்றதாகவும் அமைந்துள்ளது.

இந்திய - அமெரிக்கப் பாதுகாப்பு உடன்பாட்டில் இந்தியாவைவிட அமெரிக்கா அதிகம் சாதித்துள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் பற்றிய கொள்கைக்கு வரையறை போடுவதில் அமெரிக்கா வெற்றிகண்டுள்ளது. இந்தியாவின் ஆயுத தளபாட உற்பத்தியின் வலுவை இனங்காண்பதில் அமெரிக்கா முன்னேறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான உபாயங்களை இராணுவ - தொழிநுட்ப அலைவரிசைக்கூடாக இனங்காண்பதிலும் அமெரிக்காவுக்கு இலாபகரமானதாகும்.

இது இவ்வாறு அமையும் போது அமெரிக்கர்கள் இன்னோர் அதிசயத்தையும் இந்தியாவுக்கு காட்டியுள்ளனர். எப்படி வீட்டோ அற்ற உறுப்புரிமையை இந்தியாவுக்கு வழங்க ஏற்பாடு செய்ததோ அதே போன்று இந்தியப் பிரதமரை ஸ்கொட்லாந்தில் நடைபெறும் G-8 மாநாட்டுக்கு அழைத்துள்ளது. இந்தியர்கள் பெரிதாகக் கருதலாம். மன்மோகன்சிங்கே முதலில் இம்மாநாட்டில் கலந்த இந்தியன் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் இவையாவும் இந்தியாவை தமது செல்வாக்குக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்துக்கொள்ள அமெரிக்கா முயலுகின்றதென்பதே அடிப்படையான விளக்கமாகும்.

ஒரு வகையில் பாதுகாப்பு உடன்பாட்டின் மகிழ்ச்சிக்கான விருந்தாகக் கூட அமையலாம். புஷ் நிர்வாகத்தில் வெளிவிவகார செயலாளராக பதவியேற்ற ரைஸின் இந்திய விஜயத்தின் பின்பு புஷ் இந்திய - அமெரிக்க உறவின் புதிய அத்தியாயம் தோன்றும் என்றார். தனது ஆட்சிக்காலத்தில் நெருக்கடிக்கான ஆரம்பமாகவே அமையுமென்பது கடந்தகால வரலாறு.

G-8 மாநாடு நடைபெறும் காலத்திலேயே ஷங்காய் மாநாடும் கஜகஸ்தான் தலைநகரத்தில் நடைபெறுகிறது. ஷங்காய் மாநாட்டிலும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் கலந்துகொள்கின்றார். நட்வர்சிங் கலந்து கொள்ளும் அமைப்பு அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான அமைப்பாகும். அதன் பிரதான குறிக்கோள் கிழக்கு ஐரோப்பாவுக்குள் மட்டுமல்ல மத்திய ஆசிய குடியரசுகளுக்குள் அமெரிக்காவினதும், நேட்டோவினதும் ஊடுருவலைத் தடுப்பதற்கான அமைப்பாகும். அதற்கு இந்தியா கொடுத்த முக்கியத்துவத்தைவிட G-8 க்கு கொடுத்த முக்கியத்துவம் அதிகமானதென்பது விருந்தினரைக் கொண்டே அளவீடு செய்யலாம். G-8 என்பது மேற்கு நாடுகளின் வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியலை பயன்படுத்துவது போன்றே தெரிகிறது. யாரும் கூறலாம் G-8 பொருளாதார மாநாடு ஷங்காய் அரசியல் மாநாடு என்று. ஆனால் அது உண்மையானதல்ல. G-8 என்பது மேற்குநாடுகளின் வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை சரிசெய்வதற்கான சந்திப்பாகும். தற்போதைய மாநாட்டில் கூட ஆபிரிக்காவின் வறுமையை அழிப்பது எப்படி என்பதும், KOYOTO உடன்பாட்டில் அமெரிக்காவை கையெழுத்திட வைப்பதும் பிரதான நிகழ்ச்சித் திட்டமாகும்.

ஆபிரிக்கக் கண்டத்தையே அழித்தவர்களிடம் எப்படி வறுமையை ஒழிப்பது என்று கேட்பது வேடிக்கையாகவல்லவா இருக்கின்றது. இந்த நாடுகள் மீண்டும் ஆபிரிக்காவை சூறையாடுவதற்கு திட்டமிடப் போகின்றன. அதற்கு இந்தியாவையும் துணைக்கு அழைத்துள்ளனர். காரணம் இந்தியர்களும், சீனர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஆபிரிக்காவை சுரண்ட ஆரம்பித்துள்ளன. இதனை வளர்ந்த நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியர்கள் விரும்புவார்கள். அதனை பயன்படுத்தி இந்தியாவையும் தமது பட்டியலில் இணைப்பதோடு பயன்படுத்த G-8 நாடுகள் முடிவெடுத்துள்ளன. உண்மையில் ஷங்காய்க்கு இந்தியர்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் காரணம் அதில் சீனா, ரஷ்யா முதன்மை வகிப்பதோடு அமெரிக்க கொள்கைக்கு எதிரான அணிபோல விளங்குகிறது. அப்படி ஒரு அமைப்பு பெரியளவில் வளரமுடியாதென கூறினாலும் அதற்குரிய வாய்ப்புக்களை இந்திய ஆட்சியாளர்கள் தவறவிடுகின்றனர்.

இந்தியர்கள் இலங்கையோடு இராணுவப் பாதுகாப்பு உடன்பாட்டுக்கு முந்திக்கொள்ள முயலும் போது அமெரிக்கா இந்தியாவுடன் உடன்பாடு எட்டியுள்ளமை இந்தியத் தரப்புக்கு ஆச்சரிய மானதாகவே அமையும். இதனால் இலங்கையுடனான உடன்பாட்டுக்கான காலம் மேலும் தாமதமாகலாம். அமெரிக்க - இலங்கை உறவு இலகுவாக கைவிடப்படக் கூடியதொன்றல்ல. இந்தியாவின் மேலாதிக்கத் தின் எல்லையை அமெரிக்கா பாகிஸ்தான் விடயத்தில் வைத்திருப்பது போல் இலங்கை விடயத்தில் இல்லாது விட்டாலும் வைத்துக் கொள்ள முயலுகின்றது. அதற்கான தெரிவையே இந்திய - அமெரிக்க உடன்பாட்டில் காணக் கூடியதாகும்.

இவ்விரு இழுபறி நிலையிலிருந்தும் ஈழ விடுதலைப் போராட்டம் நகர்த்தப்படுதல் வேண்டும். இரண்டு சக்திகளும் கூட்டாக நகர்ந் தாலும் தனித்தனியே நகர்ந்தாலும் ஈழவிடுதலைப் போராட்டம் தனித்துவமாகவே
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 08-05-2005, 06:48 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 06:49 AM
[No subject] - by Danklas - 08-05-2005, 06:56 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:24 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:32 AM
[No subject] - by Thala - 08-05-2005, 08:46 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:51 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:55 AM
[No subject] - by Thala - 08-05-2005, 09:16 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:58 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 12:23 PM
[No subject] - by narathar - 08-05-2005, 01:49 PM
[No subject] - by மின்னல் - 08-05-2005, 05:26 PM
[No subject] - by வினித் - 08-05-2005, 06:13 PM
[No subject] - by Thala - 08-05-2005, 10:06 PM
[No subject] - by narathar - 08-05-2005, 10:51 PM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:17 PM
[No subject] - by narathar - 08-06-2005, 08:59 AM
[No subject] - by Thala - 08-06-2005, 09:46 AM
[No subject] - by sinnakuddy - 08-06-2005, 04:16 PM
[No subject] - by adsharan - 08-07-2005, 12:43 PM
[No subject] - by happy - 08-07-2005, 03:30 PM
[No subject] - by narathar - 08-07-2005, 06:51 PM
[No subject] - by kurukaalapoovan - 08-08-2005, 11:05 PM
[No subject] - by narathar - 08-09-2005, 09:21 PM
[No subject] - by Thala - 08-09-2005, 09:44 PM
[No subject] - by narathar - 08-09-2005, 10:38 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:18 AM
[No subject] - by narathar - 08-10-2005, 10:01 AM
[No subject] - by Thala - 08-10-2005, 10:17 AM
[No subject] - by kurukaalapoovan - 08-11-2005, 08:46 PM
[No subject] - by விது - 08-12-2005, 03:56 AM
[No subject] - by Thala - 08-12-2005, 08:32 AM
[No subject] - by narathar - 08-20-2005, 02:58 PM
[No subject] - by Danklas - 08-21-2005, 10:05 AM
[No subject] - by Thala - 08-21-2005, 10:27 AM
[No subject] - by சிலந்தி - 08-21-2005, 06:36 PM
[No subject] - by kuruvikal - 08-22-2005, 06:59 AM
[No subject] - by விது - 08-25-2005, 05:09 AM
[No subject] - by வன்னியன் - 08-25-2005, 09:07 AM

Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)