Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரிஷி புலனாய்வு அரசியலில்...
#22
மியன்மாரில், இந்நாட்டில் தனக்கு சார்பாக ஜனநாயகத்தை தோற்றுவிக்க அமெரிக்கா முனைந்து வருகின்றது. மியான்மாரில் அமெரிக்க சார்பு அரசாங்கம் ஏற்படுமானால், இந்தியாவையும் சீனாவையும் சுற்றிவளைக்கும் திட்டங்களின் பொதுப்புள்ளியாக அது விளங்கும்.

இந்தியாவை சுற்றிவளைக்கும் அமெரிக்க மூலோபாயத்தின் முக்கிய புள்ளி இலங்கையாகும். இலங்கையைத் தனது செல்வாக்கு வட்டத்திற்குள் கொண்டு வருவதன் மூலமே சுற்றிவளைப்பு மூலோபாயத்தை அமெரிக்காவால் முழுமைப் படுத்த முடியும். அத்துடன் இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளமையும் அமெரிக்கத் திட்டத்திற்கும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

இதற்காக அமெரிக்கா பல்வேறு தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகின்றது.

கடந்த காலத்தில் அமெரிக்கா விடுதலைப்புலிகளை இலங்கை அரசு போரில் தோற்கடிக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு இலங்கை அரசிற்கு முழுமையான ஆதரவை வழங்கியது. அவ்வாறு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தனக்குச் சார்பான சிங்கள அரசாங்கத்தை பேணுவதன் மூலம் இந்தியாவிற்கு தெற்கில் தான் வலுவாகக் காலூன்றி விடலாம் என்று திட்டமிட்டது.

அமெரிக்காவின் திட்டத்தைக் களத்தில் சிங்களப்படைகளை சின்னாபின்னமாக்கிய புலியணிகள் சிதறடித்துவிட்டன. ஆயுதங்களை வழங்கி போரியல் திட்டங்கள் தீட்டிக் கொடுத்து கிறீன் பெர விசேடபடையணிகளினால் பயிற்சியளித்தும் இலங்கை இராணுவம் அடிக்கு மேல் அடி வாங்கியதால் தனது தந்திரோபாயம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதை உணர்ந்த அமெரிக்கா, மாற்றுத் தந்திரோபாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது.

இத்தந்திரோபாயம் புதிதாக வடிவமைக்கப்பட்டதல்ல ஏற்கனவே, வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். நாடுகளைப் பொறுத்தவரை அவை தம் நலன்களுக்கான குறித்த ஒரு விடயம் குறித்து பல திட்டங்களை தீட்டிவைத்திருப்பது வழமையாகும். முதலாவது திட்டம் சரிவராமல் போனால் இரண்டாவது திட்டம் அதுவும் இல்லாவிட்டால் மற்றையது என்ற ரீதியில் இத்திட்டங்கள் அணுகப்படலாம். அல்லது முதலாவது திட்டத்தை செயற்படுத்த முயற்சிக்கும் பொழுதே, இரண்டாவது திட்டத்தினையும் பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இது இரண்டாவது அணுகுமுறையை அமெரிக்கா 90 களின் மத்தியிலிருந்து கையாளத் தொடங்கியது. இலங்கை இராணுவத்திற்கு விசேட பயிற்சிகள் வழங்கியதும் அதேவேளையில் நோர்வேயை பேச்சுக்களத்திற்கு மறைமுகமாக இறக்கிவிட்டதும் இரண்டு தந்திரோபாயங்களும் ஒரே நேரத்தில் கையாளப்பட்டதைக் காட்டுகின்றன.

அமெரிக்காவின் இரண்டாவது திட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்தியாவின் மிக மோசமான இராஜதந்திர தவறொன்றாகும்.

தமிழர் பிரச்சினையில் தவறான கண்ணோட்டம், ஒப்பந்தத் திணிப்பு அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வேட்டையாடப்பட்ட இந்திய அமைதிப்படையின் வருகை என்பவற்றின் தொடர்விளைவாக ராஜீவ் கொலைச்சம்பவம் இடம் பெற்றது.

ராஜீவ் கொலை வழக்கில் புலிகளின் தலைவரின் பெயரையும் இந்திய அதிகார வர்க்கம் சேர்த்துக் கொண்டது. அவ்வேளையில் தூரநோக்குள்ள சில இந்திய இராஜதந்திரிகள் கொலையில் புலிகளின் தலைவரின் பெயரை இணைக்க வேண்டாம் என்றும் அவருடன் எதிர்காலத்தில் பேச்சுக்களில் ஈடுபட்டே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டே தீரும் என்றும் இவ்வாறு சேர்ப்பதனால் அதற்கான வாயில்கள் மூடப்படுவதுடன் நீண்டகால நோக்கில் இந்தியாவின் நலன்கள் சிக்கலுக்குள்ளாகும் என்று அந்நாட்டு அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களுக்கும் ஆலோசனை வழங்கியதாக இந்திய சஞ்சிகை ஒன்று தெரிவித்திருந்தது.

ஆனால், கவளத்திலும் இராஜதந்திரமுனையிலும் ஏற்பட்ட படுதோல்வியும் அவமானமும் , இக்கொலையைப் பரப்புரை செய்வதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் புலிகள் மீதான வெறுப்பை விதைக்க முடியும் என்ற குறுமதியும் சேர்ந்து அதிகார வர்க்கத்தை அந்த யோசனையை புறந்தள்ள வைத்தது. உண்மையில் இந்திய அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் அம் முடிவானது சாணக்கியன் பிறந்த தேசத்தை இராஜதந்திர அவலத்திற்குள் தள்ளியுள்ளது.

இந்தியா தன்னைத்தானே வலைக்குள் சிக்கவைத்துக் கொண்டமை அமெரிக்காவிற்கு அதிஷ்டம் அடித்தது போலானது. இந்தியா - புலிகளின் உறவின் விரிசல் இலகுவில் அடைக்கப்பட முடியாது என்பதை கண்டு பூரித்த அமெரிக்கா இரண்டாவது திட்டத்தை வகுத்துக் கொண்டது.

இத்திட்டமானது வட, கிழக்கில் புலிகளை அங்கீகரிக்கும் அதேவேளை தென்னிலங்கையில் அமெரிக்கா சார்பு அரசை நிறுவுவதாகும். இதற்கான நகர்வுகளே 90 களில் நோர்வே ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டன. நோர்வேக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள நெருக்கமான உறவினை அதிகம் விபரிக்க வேண்டியதில்லை. இஸ்ரேலிற்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையில் நோர்வேயின் உதவியுடன் ஒஸ்லோவில் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் விளைவான உடன்பா வாஷிங்டனில் பகிரங்க கைச்சாத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதே இதனைப் புரிந்து கொள்ளப் போதுமானதொன்றாகும்.

இரண்டாவது திட்டமானது முதலாவது திட்டத்தைவிட அமெரிக்காவிற்கு உறுதியான சாதகத்தன்மையை வழங்கக் கூடியதாக உள்ளது. முதலாவது திட்டத்தின்படி இலங்கை அரசாங்கம் புலிகளை வெற்றி கொண்டிருந்தாலும் தென்னிலங்கையில் அமையக்கூடிய அமெரிக்க சார்பு அரசாங்கத்தை, எதிர்க்கட்சிகளை தனது பிடிக்குள் கொண்டு வருவதன் மூலம் கவிழ்க்கக்கூடிய வாய்ப்பை இந்தியா கொண்டிருந்திருக்கும்.

ஆனால், புலிகளையும் தன்னுடைய ஆதரவு வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வதை உள்ளடக்கிய இரண்டாவது திட்டமானது வெற்றிபெறுமாயின் அமெரிக்க நலனில் தென்னிலங்கை பிறந்தாலும் வட, கிழக்கில் அமெரிக்க நலன்ககள் தொடர்ந்தும் உறுதியாகப் பேணப்படும். வடகிழக்கு தனி நாடாக உருவாவது கூட அமெரிக்க நலன்களுக்கோ அதன் மூலோபாயங்களுக்கோ பாதிப்பை் ஏற்படுத்தாதென்பதால் அவ்வாறான சூழல் உருவாவதை அமெரிக்கா உள்ளூர விரும்பவும் கூடும்.

அவ்வாறானால் அமெரிக்கா ஏன் புலிகளை தடை செய்ததென்ற கேள்வி இவ்வேளையில் எழலாம். புலிகள் மீதான தடை என்பது முஸ்லிம் ஆயுத சக்திகளை மட்டும் தனது பயங்காரவாத அமைப்புக்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பதைக் காட்டும் யுத்தியாக அமைகின்ற அதேவேளை அதற்கு வேறு முக்கிய காரணங்களும் உண்டு.

தென்னிலங்கையில் தனது நம்பகத்தன்மையை வலுப்படுத்தல் தனது இரண்டாவது திட்டத்தை இந்தியா இலகுவில் அறிந்து விடாமல் இருக்க அதன் கண்ணில் மண்ணைத் தூவுதல் புலிகளை தன்வழிக்குக் கொண்டுவருதல் என்பனவே அக்காரணங்களாகும்.

இந்தியா இந்த சிக்கலில் இருந்து, விடுபட வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி புலிகளுடன் பழையதை மறப்போம். புதுயுகம் படைப்போம் என்ற ரீதியில் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வது மட்டுமேயாகும். அமெரிக்க அணுகுண்டால் பேரழிவைச் சந்தித்த ஜப்பானும், அமெரிக்க படைகளால் பாரிய இழப்புகளை சந்தித்த வியட்நாமும் அவ்விரு நாடுகளாலும் தற்கால பெரும் இழப்புகளை சந்தித்த அமெரிக்காவும் தங்களின் தற்கால, எதிர்கால நலன்கருதி தங்களிடையேயான பழைய வரலாற்றுக் கசப்பை மறந்து. நல்லுறவை வலுப்படுத்தியிருப்பதை இந்தியா முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்தியா 15 வருடங்களுக்கு முற்பட்ட படு தோல்வியில் முடிவடைந்த வரதராஜப் பொருமாள் காலத்து தமிழ்த் தேசிய இராணுவத்தை உருவாக்கிய உழுத்துப் போன அச்சை வைத்து மக்கள் செல்வாக்கற்ற மோசடிக்காரர்களை எல்லாம் அதில் போட்டு எடுத்து புலிகளுக்கு எதிராக செயற்படவைக்க முடியுமென்று முயற்சி ப்பதிலேயே பொழுதைக் கழிக்கின்றது. ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தை தமிழர் தாயகத்தில் வைத்திருந்த போதே வெற்றிபெறாத அம் முயற்சி இனி எப்பொழுதும் வெற்றிபெறப் போவதில்லை என்பதை உணர்ந்து கொள்வதே எதிர்கால வரலாறு. இந்தியாவை எள்ளி நகையாடாமல் இருப்பதற்கான வழியைக் காட்டும்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான பொது நலன்களுக்குரியதாக இலங்கை அமையவில்லை. உண்மையில் தனது தென் புறத்தில் தனக்கு ஆபத்தான உலக சக்திகள் காலூன்றுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கையை தன் செல்வாக்கிற்குள் வைத்திருக்க இந்தியா கடுமையாக முயல்கின்றது. அதேவேளை, இந்து சமுத்திரக் கப்பல் பாதையில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தினாலும் மற்றும் இந்திய உலக சக்தியாக உருவெடுக்கும் சாத்தியமுள்ளதனால்லும் அதனை சுற்றிவளைக்கும் தனது மூலோபாயத்தின் முக்கிய புள்ளியாக இலங்கை அமைவதாலும் அதனை தன்செல்வாக்கு கோளத்திற்குள் கொண்டுவருவதற்கான நகர்வுகளை அமெரிக்கா செய்கிறது.

இலங்கைத் தீவு தொடர்பில் இரு நாடுகளின் நலன்களும் முற்றிலும் முரண்படுவதுடன் ஒன்றுக்கொன்று எதிரானவகையாக அமைந்துள்ளன. எனவே விரிவுரையாளராக குறிப்பிட்டது போன்று அவ்விரண்டு நாடுகளும் புலிகளுக்கு எதிரான ஒரே நிலையை எடுக்கும் சாத்தியமில்லை
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 08-05-2005, 06:48 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 06:49 AM
[No subject] - by Danklas - 08-05-2005, 06:56 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:24 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:32 AM
[No subject] - by Thala - 08-05-2005, 08:46 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:51 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:55 AM
[No subject] - by Thala - 08-05-2005, 09:16 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:58 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 12:23 PM
[No subject] - by narathar - 08-05-2005, 01:49 PM
[No subject] - by மின்னல் - 08-05-2005, 05:26 PM
[No subject] - by வினித் - 08-05-2005, 06:13 PM
[No subject] - by Thala - 08-05-2005, 10:06 PM
[No subject] - by narathar - 08-05-2005, 10:51 PM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:17 PM
[No subject] - by narathar - 08-06-2005, 08:59 AM
[No subject] - by Thala - 08-06-2005, 09:46 AM
[No subject] - by sinnakuddy - 08-06-2005, 04:16 PM
[No subject] - by adsharan - 08-07-2005, 12:43 PM
[No subject] - by happy - 08-07-2005, 03:30 PM
[No subject] - by narathar - 08-07-2005, 06:51 PM
[No subject] - by kurukaalapoovan - 08-08-2005, 11:05 PM
[No subject] - by narathar - 08-09-2005, 09:21 PM
[No subject] - by Thala - 08-09-2005, 09:44 PM
[No subject] - by narathar - 08-09-2005, 10:38 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:18 AM
[No subject] - by narathar - 08-10-2005, 10:01 AM
[No subject] - by Thala - 08-10-2005, 10:17 AM
[No subject] - by kurukaalapoovan - 08-11-2005, 08:46 PM
[No subject] - by விது - 08-12-2005, 03:56 AM
[No subject] - by Thala - 08-12-2005, 08:32 AM
[No subject] - by narathar - 08-20-2005, 02:58 PM
[No subject] - by Danklas - 08-21-2005, 10:05 AM
[No subject] - by Thala - 08-21-2005, 10:27 AM
[No subject] - by சிலந்தி - 08-21-2005, 06:36 PM
[No subject] - by kuruvikal - 08-22-2005, 06:59 AM
[No subject] - by விது - 08-25-2005, 05:09 AM
[No subject] - by வன்னியன் - 08-25-2005, 09:07 AM

Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)