Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரிஷி புலனாய்வு அரசியலில்...
#32
தற்பொழுது தான் அமெரிக்கா அனுதாபமாகவோ (அல்லது கொஞ்சம் பக்கச்சார்பற்ற முறையில் அறிக்கைள் விட்டு) நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளது. அதை நாங்கள் ஒரு கோணத்தில் (ஆழமாக சிந்திக்காது?) பார்த்தால் நல்லது தானே நடக்கிறது எனலாம். ஆனால் இன்னெருகோணத்தில் அவர்களின் கடந்த கால நடவடிக்கைகளோடு இணைத்து பார்ப்போம்.

யுத்தநிறுத்தம் புலிகளையும் இலங்கை அரசாங்கத்தையும் சமனான தரப்பாக வைத்தது உருவானதற்கு, படுதோல்வி கண்ட தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை மற்றும் கட்டுநாயக்கா தாக்குதலில் உணர்த்தப்பட் இராணுவச்சமநிலை. ஆரம்பக்கட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் யுத்தநிறுத்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படலும் இந்த மனோபாவத்தோடுதான் அணுகப்பட்டது. இந்த சமதரப்புப்பார்வை என்பது இனவாதிகளுக்கும் அரச தரப்பிற்கும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும் கள நிலமைகளின் யதார்த்தத்தை நிராகரிக்க முடியாதவர்களாக இருந்தனர்.

நோர்வே ஊடாக அமெரிக்கா உட்பட வேறு சில வெளிச்சக்திகளின் தூண்டுதலில் (சில இனவாதிகளால் நெருக்குதலாக பிரச்சாரிக்கப்பட்டது) ரணில் அரசாங்கம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. தமிழர் இராணுவ மேலாண்மையை நிலை நாட்டி தமிழீழத்தை முழுமையாக மீட்டு இலங்கை துண்டாடப்படுவதை தடுக்கவே இந்த யுத்த நிறுத்தத்திற்கு வெளிச்சக்திகளின் ஆதரவு இருந்தது. இதை உணர்ந்தவர்கள் ரணில், பீரிஸ் போன்ற "சமாதானப்பிரயர்கள்". உண்மையில் இனவாதிகள் மற்றும் புலிகளை யுத்தத்தால் வெல்லலாம் என எண்ணுபவர்களின் யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான எதிர்ப்புக்கள், சர்வதேச பின்னணியோடு புலிகளை ஒரு சதிவலையில் வீழ்த்த ரணிலின் எடுத்த முயற்சிகளை ஒரு சமாதான முயற்சியாக காட்ட உதவியது. எனவே சர்வதேச சமுhகத்தின் ஆர்வம் தமிழரிற்கு போச்சுவார்த்தை மூலம் நியாயமான ஒரு தீர்வை பெற்றுதருவது அல்ல என்ற கசப்பான உண்மையை நாம் உணரவேண்டும்.

சமாதானப் பேச்சுவார்தைகளின் முன்னேற்றத்தோடு புனரமைப்பிற்கான நிதியுதவி வழங்கலை இணைத்ததன் மூலம் யுத்த நிறுத்தத்திற்கு அப்பால் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவேண்டிய தேவையை இலங்கை அரசாங்கத்திற்கு உணர்த்தி நிர்பந்திப்பதாக காட்டியதன் மூலம் சர்வதேச சக்திகள் தமது சமாதான முயற்சியின் விசுவாசத்தன்மையை காட்டமுனைந்தனர். தமிழர் தரப்பிற்கும் சர்வதேசம் தம்பக்கம் இருப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. இனவாதிகளுக்கு அவர்கள் வெள்ளைப்புலிகளாக தெரிந்தார்கள்.இலங்கைக்கான உதவிவழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்று திட்டமிட்டு யப்பானில் ஒழுங்குபடுத்தப்பட்டது, புலிகளும் அரச தரப்பும் அழைக்கப்பட்டிருந்தனர். திடீர் என அக்கூட்டத்திற்கான தயார்ப்படுத்தல் கூட்டம் என ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டு அதற்கு புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பென்றரீதியில் சட்டச்சிக்கலினால் அழைப்புவிடப்படவில்லை என்ற பிரமிப்பை சாதாரண பார்வைக்கு ஏற்படுத்தியது. ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற சதியின் உண்மை முகம் அந்த நகர்வில் தெளிவானது. புலிகளை சம அந்தஸ்தில் வைத்து யுத்த நிறுத்த உடன்படிக்கை விதிகளை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பினால் திணறிக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு ஒரு உதவிக்கரம் நாசுக்காக இராஜதந்திரரீதியில் வழங்கப்பட்டது. நிதி உதிவிகள் வழங்கப்பட எந்த சமாதானப் பேச்சுவார்தையில் முன்னேற்றம் வேண்டும் என்ற நிபந்தனையை போட்டார்களோ அதற்கு அடிநாதமான சம-அந்தஸ்தை புலிகளிடம் இருந்து பறித்து புரிந்துணர்வை சிதைத்தனர். பேச்சுவார்தை மூலம் தீர்வுகாணலாம் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு உச்சியில் இருந்த சமயம் அமெரிக்காவினால் அன்று எடுக்கப்பட்டது இந்த நகர்வு. மூன்று வருடங்களிற்கும் மேலாக ஏமாற்றப்பட்டு 70க்கும் மேற்பட்ட போரளிகள் இழக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் நம்பிக்கையிளந்து மாற்றானின் கருணையிலும் பெருந்தன்மையிலும் தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படமுடியாதென்பதை உணர்ந்தவர்களாக, சதியை பெறுத்திருந்து தோலுருத்துக் காட்டியவர்களாக தமிழினம் போர் கோலம் கொள்ளும் பொழுது ஏன் கருணைகாட்ட முற்படுகிறது இன்று அமெரிக்கா?

சதியின் முதலாவது கட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என எண்ணியவர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. சமாதான தீர்வு முயற்சி என்ற நாடகத்தின் பின்னணியில் ஆரவாரங்களின்றி பல நகர்வுகள் புலிகளின் சுயாதீன-தன்நிறைவான பொருளாதார வணிக மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை சர்வதேசரீதில் தடுக்க முயற்சிகளாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இக்காலப்பகுதியில் வெளிப்பார்வைக்கு ஊடகங்கள் ஆரவாரித்ததெல்லாம் "வெளிநாடு சென்று திரும்பும் புலிகளின் பயணப் பொதிகள் சேதிக்கப்படவில்லை" "கொழும்பிலுள்ள நேர்வே தூதரகம்; VSAT தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்து வழங்கியுள்ளது" "சக்தி மிக்க ஒலிபரப்பு சாதனங்கள் புலிகளின் குரலுக்கு வழங்கப்பட்டுள்ளன" "ரணில் அரசு தீர்வையற்ற இறக்குமதி சலுகை வழங்கிறது புலிகளிற்கு". இதை உண்மையில் நன்கு திட்டமிட்டு புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உளவியல்ரீதியான யுத்;தமாக கூட பார்க்கலாம். இப்படியான ஒரு யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பறவர்களாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் அதன் மறைந்த தலைவர் அரபாத்தையும் பார்க்கலாம்.

அதாவது அங்கீகாரம் சலுகைள் மத்தியில் தன்நிறைவான நடவடிக்கைள் முயற்சிகள் அர்த்தமற்றதாக உணர்த்த புலிகளிற்கும் ஆதரவாளர்களிற்கும் உளவியல்ரீதியில் முயற்சிக்கப்பட்டது. இந்த முயற்சியில் சர்வதேசமும் ரணிலின் அரசாங்கமும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியும் கண்டனர். இதை நன்கு உணர்ந்தவர்களாக தான் புலிகளின் பதில் நடவடிக்கைகளும் இருந்தது. எதிர்பாராதவிதமாக இந்த இக்கட்டான நிலையை முடிவிற் கொண்டுவர உதவியவர்கள் வேறுயாருமல்ல சிங்கள சுயநல இனவாத அரசியல்வாதிகளும்; அயல்நாட்டு மேலாண்மைவாத வல்லாதிக்க கொள்கைவகுப்பாளர்களும் தான்.
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 08-05-2005, 06:48 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 06:49 AM
[No subject] - by Danklas - 08-05-2005, 06:56 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:24 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:32 AM
[No subject] - by Thala - 08-05-2005, 08:46 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:51 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:55 AM
[No subject] - by Thala - 08-05-2005, 09:16 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:58 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 12:23 PM
[No subject] - by narathar - 08-05-2005, 01:49 PM
[No subject] - by மின்னல் - 08-05-2005, 05:26 PM
[No subject] - by வினித் - 08-05-2005, 06:13 PM
[No subject] - by Thala - 08-05-2005, 10:06 PM
[No subject] - by narathar - 08-05-2005, 10:51 PM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:17 PM
[No subject] - by narathar - 08-06-2005, 08:59 AM
[No subject] - by Thala - 08-06-2005, 09:46 AM
[No subject] - by sinnakuddy - 08-06-2005, 04:16 PM
[No subject] - by adsharan - 08-07-2005, 12:43 PM
[No subject] - by happy - 08-07-2005, 03:30 PM
[No subject] - by narathar - 08-07-2005, 06:51 PM
[No subject] - by kurukaalapoovan - 08-08-2005, 11:05 PM
[No subject] - by narathar - 08-09-2005, 09:21 PM
[No subject] - by Thala - 08-09-2005, 09:44 PM
[No subject] - by narathar - 08-09-2005, 10:38 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:18 AM
[No subject] - by narathar - 08-10-2005, 10:01 AM
[No subject] - by Thala - 08-10-2005, 10:17 AM
[No subject] - by kurukaalapoovan - 08-11-2005, 08:46 PM
[No subject] - by விது - 08-12-2005, 03:56 AM
[No subject] - by Thala - 08-12-2005, 08:32 AM
[No subject] - by narathar - 08-20-2005, 02:58 PM
[No subject] - by Danklas - 08-21-2005, 10:05 AM
[No subject] - by Thala - 08-21-2005, 10:27 AM
[No subject] - by சிலந்தி - 08-21-2005, 06:36 PM
[No subject] - by kuruvikal - 08-22-2005, 06:59 AM
[No subject] - by விது - 08-25-2005, 05:09 AM
[No subject] - by வன்னியன் - 08-25-2005, 09:07 AM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)