Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரிஷி புலனாய்வு அரசியலில்...
#35
http://www.thinakural.com/New%20web%20site...0/Article-1.htm

இந்து, பசுபிக் சமுத்திரங்களில் கெடுபிடி யுத்தத்திற்கான சாத்தியம்

அண்டை நாடுகளுக்கு மட்டுமன்றி வல்லரசுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ள சீனக் கடற்படை வளர்ச்சி

-என். சிவேந்திரன்-

சீனாவின் கடற்படை வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கும் உலகின் பெருவல்லரசான அமெரிக்காவிற்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, இவ்வருட அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பாதுகாப்பு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவ்வறிக்கைகள் சீனாவுடன் சர்ச்சையை ஏற்படுத்த காரணமாகவும் அமைந்தன.

சீனாவின் பொருளாதாரம் துரித வளர்ச்சியடைந்து வருகின்றது. அது இவ்வாறே தொடர்ந்து வளர்ச்சியடையுமானால் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானிய பொருளாதாரத்தை மிஞ்சி விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கான எரிபொருள் மற்றும் உலோகங்கள் போன்ற மூலப் பொருட்களிற்கான தேவை அந்நாட்டிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

90களிலிருந்து அதன் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை விடவும் உள்நாட்டு நுகர்வானது அதிகரிக்க ஆரம்பித்தது. இதன் தேவையை ஈடு செய்வதற்கு சீனா பெருமளவிற்கு வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியின் முக்கிய மையமான மத்திய கிழக்கிலிருந்து எரிபொருட்களை இடையூறின்றிப் பெற்றுக் கொள்வதைப் பற்றிய சீனாவின் கவலை அதன் ஆழ்கடல் கடற்படையின் திட்டமிடலிற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன், தைவானுடனான முறுகல் நிலை அதிகரித்து யுத்தமாக வெடித்தால், வெல்வதற்கு கடற்படை முக்கியமான பங்கை ஆற்றும் என்பதையும் உணர்ந்துள்ளது.

ஆயினும், சீனாவின் கடற்படை வளர்ச்சியானது அதன் அண்டை நாடுகளாலும் உலகின் மற்றைய முக்கிய நாடுகளாலும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது.

இம்மாதம் இரண்டாம் திகதி வெளியான ஐப்பானிய பாதுகாப்பு அறிக்கை இதனைத் தெளிவாகக் காட்டியுள்ளது.

ஆழ்கடல் கடற்படைக்குரியதாகத் தோன்றும் திட்டங்கள் உட்பட சீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் அதன் சுய பாதுகாப்பிற்கான தேவைகளையும் விட அதிகமாகின்றதா என்பதைத் தீர்மானிப்பதற்கு நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் வெளியான அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கையை பிரதிபலிப்பதாக இவ் அறிக்கை அமைந்துள்ளது.

"அண்மைக்காலத்தில் சீனாவின் இராணுவ நவீனமயமாக்கலின் பிரதான குவிவுமையம் தைவான் நீரிணையில் ஏற்படச் சாத்தியமான மோதலிற்கு தயாராக இருப்பது போன்று தென்படுவதாக இருந்த போதிலும் தைவானிற்கு அப்பாலான தந்திரோபாய தோற்றப்பாடு குறித்தும் சீனாவில் சில இராணுவத் திட்டமிடலாளர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள்.

தைவான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படைக்கு அதன் கடற் பாதுகாப்பும் புற எல்லையை மேலும் கடலை நோக்கி நகர்த்துவதை சாத்தியமாக்குவதுடன் போக்குவரத்திற்கான பிராந்திய கடல்வழிகளில் செல்வாக்கு செலுத்தும் பீஜிங்கின் ஆற்றலை மேம்படுத்தும் என்ற கண்ணோட்டத்தை சில சீன இராணுவ ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்"என்று அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது அதன் இராணுவ நவீனமயமாக்கலினை சாத்தியமாக்குவதாக அமைந்துள்ளது.

"தொடரும் பொருளாதார வளர்ச்சியும் சீர்திருத்தமும் மக்கள் விடுதலை இராணுவத்தின் நவீன மயமாக்கலிற்கு அத்தியாவசியமானதாகும். தொழிற்துறை, தொழில்நுட்பம், மற்றும் மனித வளங்களில் சீனாவின் பொருளாதார திறன்களை பரந்த அடிப்படையிலான வளர்ச்சியும் நவீன மயமாக்கலும் விரிவுபடுத்துவதுடன் அதன் தலைவர்கள் இராணுவ நவீனமயமாக்கலை விரைவுபடுத்துவதையும் இயலுமானதாக்கியுள்ளது." என்று கூறும் அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை,

கடந்த காலப் போக்குகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டளவில் சீனாவின் பொருளாதாரம் 6.4 ரில்லியன் அளவிற்கு விரிவடைய முடியும். தொடரும் சகல வழிகளிலுமான பொருளாதார செயற்பாடுகளால் சீனாவின் பாதுகாப்பு பிரிவு அநேகமாக அனுகூலங்களைப் பெறும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சீனாவானது மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையான கடல்வழிகளில் தந்திரோபாயத் தொடர்புகளை கட்டியெழுப்பி வருகின்றது. சீனாவின் சக்தி வளத்திற்கான நலன்களினைப் பாதுகாப்பதற்கான நிலைப்படுத்தல்கள் என்று இதனை கருதினாலும் கூட, இது பரந்த பாதுகாப்பு விடயங்களிற்கும் பயன்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரிற்காக தயாரிக்கப்பட்ட " ஆசியாவில் சக்திவள எதிர்காலம்" என்ற தலைப்பிலான உள் அறிக்கை தெரிவிப்பதாக "வாஷிங்டன் டைம்ஸ்" இவ்வாண்டு ஜனவரியில் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானிலுள்ள குவாடாரில் அமைத்து வரும் கடற்படைத்தளம் உட்பட மத்திய கிழக்கிலிருந்து தென் சீன வரையும் நீண்ட தளங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளினுடைய "முத்துக்கள் கோர்க்கப்பட்ட இழை" (குœணூடிணஞ் ணிஞூ கஞுச்ணூடூண்) என்ற தந்திரோபாயத்தை சீனா திட்டமிட்டுப் பின்பற்றுவதாக அந்த உள் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானைத் தவிர, பங்களாதேஷுடனான உறவினை சீனா வலுப்படுத்தி வருகின்றதுடன் சிட்டாகொங்கில் கொள்கலன் துறைமுக வசதியை உருவாக்கி வருகின்றது. மாலைதீவுடனும் கடற்படை வசதிகளிற்கான தளம் ஒன்று குறித்து உடன்பாட்டை இது உருவாக்கியுள்ளது.

மலாக்கா நீரிணையை கண்காணிக்கக்கூடிய பூகோள வசதியுடைய மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர்களுடன் சீனா நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது. அதன் கொக்கோ தீவுகளில் கடற்படைக்கான தளத்தை ஏற்படுத்தி வருவதுடன் இலத்திரனியல் புலனாய்வு சேகரிப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

கம்போடியா, தாய்லாந்து போன்றவற்றுடனும் சீனா தனது கடல்சார் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது.

தனது சக்தி வளம் பாதுகாப்பிற்கு தேவை என்ற காரணத்தைப் பீஜிங் முன்னிறுத்தினாலும் இவற்றின் இராணுவ நோக்கிலான இதர பயன்பாடுகள் பாரியவையாகும். இதை எதிர்கொள்ள ஏனைய நாடுகள் தீவிரமாக முனையும். இதனால் எதிர்வரும் காலத்தில் பசுபிக் மற்றும் இந்து சமுத்திரத்தில் ஒரு கடற் பனிப் போரிற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளன.
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 08-05-2005, 06:48 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 06:49 AM
[No subject] - by Danklas - 08-05-2005, 06:56 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:24 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:32 AM
[No subject] - by Thala - 08-05-2005, 08:46 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:51 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:55 AM
[No subject] - by Thala - 08-05-2005, 09:16 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:58 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 12:23 PM
[No subject] - by narathar - 08-05-2005, 01:49 PM
[No subject] - by மின்னல் - 08-05-2005, 05:26 PM
[No subject] - by வினித் - 08-05-2005, 06:13 PM
[No subject] - by Thala - 08-05-2005, 10:06 PM
[No subject] - by narathar - 08-05-2005, 10:51 PM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:17 PM
[No subject] - by narathar - 08-06-2005, 08:59 AM
[No subject] - by Thala - 08-06-2005, 09:46 AM
[No subject] - by sinnakuddy - 08-06-2005, 04:16 PM
[No subject] - by adsharan - 08-07-2005, 12:43 PM
[No subject] - by happy - 08-07-2005, 03:30 PM
[No subject] - by narathar - 08-07-2005, 06:51 PM
[No subject] - by kurukaalapoovan - 08-08-2005, 11:05 PM
[No subject] - by narathar - 08-09-2005, 09:21 PM
[No subject] - by Thala - 08-09-2005, 09:44 PM
[No subject] - by narathar - 08-09-2005, 10:38 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:18 AM
[No subject] - by narathar - 08-10-2005, 10:01 AM
[No subject] - by Thala - 08-10-2005, 10:17 AM
[No subject] - by kurukaalapoovan - 08-11-2005, 08:46 PM
[No subject] - by விது - 08-12-2005, 03:56 AM
[No subject] - by Thala - 08-12-2005, 08:32 AM
[No subject] - by narathar - 08-20-2005, 02:58 PM
[No subject] - by Danklas - 08-21-2005, 10:05 AM
[No subject] - by Thala - 08-21-2005, 10:27 AM
[No subject] - by சிலந்தி - 08-21-2005, 06:36 PM
[No subject] - by kuruvikal - 08-22-2005, 06:59 AM
[No subject] - by விது - 08-25-2005, 05:09 AM
[No subject] - by வன்னியன் - 08-25-2005, 09:07 AM

Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)