Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கவிப்புயல் இனியவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2,063
 • Joined

 • Last visited

 • Days Won

  2

கவிப்புயல் இனியவன் last won the day on February 19 2017

கவிப்புயல் இனியவன் had the most liked content!

About கவிப்புயல் இனியவன்

 • Birthday செவ்வாய் 16 நவம்பர் 1965

Profile Information

 • Gender
  Male
 • Location
  இலங்கை யாழ்ப்பாணம்

Recent Profile Visitors

8,178 profile views

கவிப்புயல் இனியவன்'s Achievements

Proficient

Proficient (10/14)

 • Dedicated Rare
 • First Post
 • Collaborator
 • Posting Machine Rare
 • Conversation Starter

Recent Badges

243

Reputation

 1. மனம் நினைக்கும் வார்த்தைகள் ..... பேச உதடுகள் துடியாய்த்துடிக்கிறது .... தடுக்கிறது நீ குடியிருக்கும்... என் இதயம்.... உன் இதயம் வேதனைபட்டால் .. இறந்திடுவேன் என்கிறது.... என் இதயம் ..... @ இலக்கியக் கவிப்பேரரசு நானும் நீயும் பிரிந்துவிட்டோம் .... நீ என் நினைவுகளை மறந்து .... நான் உன் நினைவுகளை மறந்து ..... வாழவே முடியாது காதல் பிரிவை... ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!! + இலக்கியக் கவிப்பேரரசு இனியவன்
 2. என் அன்புள்ள ரசிகனுக்கு இலக்கியக் கவிப்பேரரசு எழுதும் கடிதக் கவிதை ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறியச் செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்குத் தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில் வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்குப் புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொள்ளாதே ரசிகனே .....! # என் காதலுக்கு காதலியின் முகவரி ... இன்னும் தெரியவில்லை ... அதனால்தான் இதுவரை ..... என்னவளில் பதில் வரவில்லை ... வெறுத்தவள் மறுத்தவளாகவே.... வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ... என் கவலையை சொல்லாமல் .... யாரிடம் சொல்வேன் .....? என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....! # வேதனையில் சாதனை செய்யப்போகிறேன் .... என்னை விட தாங்கும் இதயம் ... இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது .... வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் .... என்னையே சுற்றி சுற்றி வருகின்றன ..... அவ்வப்போது ஆறுதல் பெறுவது ..... என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....! # என்னை உசிப்பி விட்டு .... வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் .... என்னை காதல் பைத்தியம் .... வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ... இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்.... என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....! ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ... என்னை பைத்தியம் போல் .... அவர்களுக்கு காட்டுகிறது .... காதல்கிழியாமலே இருக்கிறது .....! # பள்ளி பருவத்தில் மாறு வேடப்போட்டியில் ..... பைத்தியக் காரன் வேஷத்தில் முதலிடம் .... காதலியால் வாழ் நாள் முழுவதும் .... முதலிடம் அருமையான வேஷம்.....! பிடித்தது கிடைக்கவில்லை என்றால் .... கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ... ரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா.... வலிகளில் இன்பம் காண்போம் .....! # என்னைப்போல் .... இப்போது மெழுகுதிரி உருகுகிறது ..... மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ... கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ... வாழ்கிறேன் அவ்வப்போது என் ... அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ... தருகிறான் ......! # என் கவிதைகள் பூத்துக்கொண்டே ..... இருக்கிறது பூ என்றால் வாடும் .... மீண்டும் மரத்தில் பூக்கும் .... பாவம் இதயம் முள் வேலிக்குள்... சிக்கித் தவிர்க்கிறது..... இலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ... துளிர்விடாமல் இருக்காது .... என்னவள் மீண்டும் வருவாள் என்று ... இந்த நிமிடம் வரை இருக்கிறேன் .... ரசிகனே நீதான் துணை ....! ^^^ என் அன்புள்ள ரசிகனுக்கு என்றும் உங்கள் அன்புடன் இலக்கிய கவிப்பேரரசு
 3. ஆறுவயதில்..... அயல் வீட்டில் - நீ பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்.... பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்... பாதி தூக்கம் உன் வீட்டில் - நான் மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!! அப்பப்போ சண்டை....... தடியெடுத்து அடிகும் மனதைரியம்..... எனக்கும் இல்லை உனக்கும்இல்லை. ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்.... மாவீரர் நாம்........... சற்று நேரம் கூட ஆகாது......... வீட்டில் கிடைத்த இனிப்போடு....... ஓடிவருவேன் உன் வீட்டுக்கு.......... பாதி கடித்த இனிப்பை....... உன்னிடம் தர பறந்து போகும்..... சண்டையின் பகை................!!! நட்பென்பது எப்போதும் இனிமை.....!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு @ இலக்கிய கவிப்பேரரசு இனியவன் @ தொடரும்..
 4. இது குழந்தைத் தொழில் இல்லையா..? ------------------------------------ பட்டாசுத் தொழிற்சாலையில்..... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! தீப்பெட்டித் தொழிற்சாலையில்....... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! செங்கல் சூளையில்.... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! சல்லி கல் உடைக்க...... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! குழந்தைத் தொழில் சட்டப்படிகுற்றம் ..... தேவையான சட்டம்...... வரவேற்கவேண்டிய சட்டம்.....!!! சினிமாவிலும் சின்னத் திரையிலும்..... பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்...... காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்.... குழந்தைத் தொழில் இல்லையா....? உடலில் காயம் வந்தால் தான்..... குழந்தைத் தொழில் குற்றமா.....? உளத்தில் காயம் வந்தால்........ குழந்தைத் தொழில் குற்றமில்லையா....? அளவுக்கு மீறிய.... வயதுக்கு மீறிய...... செயல்களும் வார்த்தைகளும்........ குழந்தை மனசை காயப்படுத்தும்.....! ஏன் இன்னும் புரியவில்லை....? புரியாமல் தெரியாமலில்லை..... பணம் பணம் பணம்.......!!! எல்லமே பணம் செய்யும் மாயை..... வயிற்றுப் பிழைப்புக்கு போராடும்..... மக்களுக்கு ஒரு நியாயம்...... வர்த்தகக் கவர்ச்சி மக்களுக்கு....... இன்னொரு நியாயமா..........? வேதனையோடு கவிதையை முடிவுக்கு கொண்டு வருகிறேன்..... // இலக்கியக் கவிப்பேரரசு
 5. முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..... மெதுவாக நடக்க .... கற்றுக்கொடுக்கும் ஆசான்......! கொரட்டைத்தான் ....... மூச்சு பயிற்சி........ இருமல் தான் செய்தி..... தொடர்பாளன்........! அனுபவத்தை மூலதனமாய்...... கொண்டு ஞானியாகும் நிலை..... அனுபவத்தை தவறாக கொண்டு...... பித்தனாகும் நிலை....... முதுமை.....................! @ இலக்கியக் கவிப்பேரரசு
 6. காதல்... உனக்கு கற்பூரம்.... எனக்கு தீபம்..../ யோசித்து..... வருவதில்லை..... காதல்..... யோசிக்காமல்.... உன்னை..... சந்தித்தேன்...... அனுபவிக்கிறேன்../ இளநீர் போல் உன்னை இதயத்தில் வைத்திருக்கிறேன் நீ கண்ணீராய்... வரத் துடிக்கிறாய்.. // இலக்கியக் கவிப்பேரரசு கஸல் கவிதை காதலில் பாத சுவடு ..... எதிரும் புதிருமாக .... காணப்படுவது .... நம்மில் தான் ....!!! உன்னை நினைக்கும் ... போதேல்லாம் ... என் எழுதுகருவி .... தீப்பந்தமாகிறது .....!!! உனக்காக .... கல்லறையில் .... காத்திருக்கிறேன் .... என்றோ ஒரு நாள் .... நீயும் அங்கு வருவாய் ....!!! @ இலக்கியக் கவிப்பேரரசு கஸல் காதல் கவிதை கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழக் கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இலக்கியக் கவிப்பேரரசு ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........!
 7. ஒரு சோடி அணுக்கவிதை உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தால் இறந்திருக்கும்.... நீ பிரிந்து விட்டாய்... என்று பலமுறை.... சொல்லிவிட்டேன்.... சொறனை.... கெட்ட என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்கிறது......! இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இலங்கை யாழ்ப்பணம்
 8. காதல் தன்முன்னைக் கவிதைகள் பயணத்தில் பார்த்த/ பருவ மங்கை அவள். கண் வரைந்த ஓவியம்/ இதயத்தில் குடியிருக்கிறாள் // @ இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் உன்னை கண்டது/ ஆலய தரிசனத்தில். கற்பூரம் போல் கரைகிறது/ என் இதயம்/ @ இலக்கிய கவிப்பேரரசு இனியவன்
 9. சிந்தடியில் கவிதை கொடுக்கப்பட்டுள்ள தலைப்பிற்கு ஏற்ப - ஒரு அடிக்கு மூன்று சொற்கள் வீதம் மூன்று (சிந்தடி) அடிகளில் கவிவடிக்கவும். எடுத்துக்காட்டு தலைப்பு : நேசம் அக்காள் மகளின் பாசம்...// அக்கரைக் கொண்ட நேசம்.../ அடிக்கடி வந்திங்கு பேசும் ! இவ்வாறு வெண்பாவின் சுவை வரும் வகை யில் கவிதை எழுதுங்கள்
 10. தன்முனைக் கவிதை இக்கவிதை எழுதுவதற்கான நிபந்தனைகள் # நான்கு வரிக் கவிதை # வரிக்கு அதிகபட்சம் மூன்று சொற்கள் குறைந்தபட்சம் இரண்டு சொற்கள் # இரண்டாம் வரியில் நிறுத்தம் வேண்டும் # மூன்றாம் நான்காம் வரிகள் முதல் இரண்டு வரிகளில் கூறப்பட்டதற்கு நேராக அல்லது எதிராக இருக்கவேண்டும் # கற்பனை உவமை மட்டும் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்பவற்றை பயன்படுத்தலாம் உதாரண கவிதை விடுமுறை முடிந்து // கல்லூரிக்கு திரும்புகிறேன் // மூக்கைத் துளைக்கிறது// அம்மா சமையல்.... // மேலே கூறப்பட்டது போல் நான்கு வரி கவிதை அமைய வேண்டும். முதலாவது வரி விடுமுறை முடிந்து இரண்டாவது வரி கல்லூரிக்கு திரும்புகிறேன். இங்கு வரி முற்றுப்பெறுகிறது மூன்றாம் நான்காம் வரிகள் முதலாம் இரண்டாம் வரிக்கு திருப்புமுனையாக அமைகிறது அந்தாதி குறுங்கவிதை ஒரு வரியில் முடியும் சொல் அடுத்த வரியின் ஆரம்பச் சொல்லாகக் கொண்டு கவிதை எழுதுங்கள். நம் எல்லோருக்கும் தெரிந்த சினிமா பாடல் ஒன்று அந்தாதியில் அமைந்துள்ளதை பாருங்கள் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள் பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள் தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள் புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
 11. என்றும் ஏழைக்கு இயன்றதைக் கொடு// இன்றே வாழ்க்கையில் இடர்களைத் தடுத்திடு // தோன்றும் ஊழ்வினை துன்பத்தை அழித்துவிடு// சொன்னதைக் கேட்டு சுகவாழ்வைத் தெரிந்தெடு // தீவினை அறுவதற்கு தியானம் நன்குசெய்// தவிக்கும் உயிர்களுக்கு தானம் ஒன்றேமெய் // செயல்வினை அறுப்பின் சித்தனாய்ப் போயிடுவாய்// பயவினை தீர்ப்பதற்கு பரமன் ஒருவனேதாய் //
 12. மரபுவழிக் கவிதை ப் போட்டி 02 மரபுவழிக்கவிதை பயிற்றுவிப்பாளர், அதில் சிறந்த தேர்ச்சி பெற்றவரும் நடுவராகபணியாற்றுகிறார் நீங்கள் அனைவரும் உங்களுடையசந்தேகங்களை தீர்த்து போட்டியில் கலந்து கொள்ளுங்கள். முதலெழுத்தில் மோனை இரண்டாமெழுத்தில் எதுகை முதல் சீரில் சந்தம் இறுதி சீரில் இயைபு வரிக்கு நான்கு சொற்கள் எட்டு வரிக்கு முப்பத்தியிரண்டு சொற்கள் இவ்வளவே மரபு வழியில் எழுத வேண்டிய போட்டிக்கான குறுங்கவிதை ! தலைப்பு : புரிதல் இல்லா நட்பு என்றும் புரிதல் இல்லா நட்பு// துன்பமே தரும் தோழனே அதுதப்பு// இன்றும் மெளனமேன் இதயத்தால் நீசெப்பு // என்னில் தவறிருப்பின் என்னைநீ காறித்துப்பு// தீண்டத்தகா வார்த்தைகளால் தெறித்தது வன்மை// தூண்டில் மீன்போல் துடிக்கிறது தனிமை// நீண்டநற் பயணத்தில் நினைவுகளே இனிமை// வேண்டுமுன் உறவேயென் வெற்றிக்கு மேன்மை// @ கவிப்புயல் இனியவன்
 13. ஆன்மீகக் கவிதை அ ன்புக்கு அடக்கமானவன் நீ ஆ சையை அழிப்பவன் நீ இ ன்பதத்தை தருபவன் நீ ஈ கையில் மகிழ்பவன் நீ உ லகை ஆழ்பவன் நீ ஊ ண் கொடுப்பவன் நீ எ ழுத்து தந்தவன் நீ ஏ ர் தந்தவன் நீ ஐ ந்துபொறியும் நீ ஒ ற்றுமையை கூறுபவன் நீ ஓ ங்காரம் ஆனவன் நீ ஔ டதமானவன் நீ என்னுள் இருக்கும் நீ உயிரே நீ..... !!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்
 14. என் துன்பத்துக்கும் இன்பத்துக்கும் யாரும் காரணம் இல்லை..... நானே காரணம்.... இதை.... மனப்பூர்வமாக ஏற்கும் பக்குவமே.... மனிதம்..... மனிதன் அல்ல... மனிதம்..... கவிப்புயல் இனியவன்
 15. இறந்த காலத்தில் வாழ்பவன் நிகழ்கால பிணம் ஆவான்.... எதிர்காலத்தில் வாழ்பவன் நிகழ்கால ஏமாளி ஆவான்.... நிகழ்காலத்தில் நிகழ் காலமாக வாழ்பவனே மனிதனாவான் @ கவிப்புயல் இனியவன் இறந்த காலத்தில்வாழ்பவன் நிகழ்கால பிணம் ஆவான்.... எதிர்காலத்தில் வாழ்பவன் நிகழ்கால ஏமாளி ஆவான்.... நிகழ்காலத்தில் நிகழ் காலமாக வாழ்பவனே மனிதனாவான் @ கவிப்புயல் இனியவன்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.