உங்கள் நினைப்பு தான் அப்படி . தமிழ் தேசியம் என்பது, ஒரு அமைப்பு, கட்சி, இயக்கம் சார்நத ஒற்றைப்போக்காக மாற்றி பரந்து பட்ட தமிழ்மக்களை புறந்தள்ளிவதே உங்களைப் போன்றவர்கள் தான். இலங்கைத் தீவில் பல் வேறு பிரதேசங்களிலும் வாழும் பல்வேறு திறமையுடைய எமது தமிழ் இளைய தலைமுறையினர் பரவலாக சகோதர இனத்துக்கு நிகராக தமது சாதனைகளை நிகழ்ததுவதும் தமிழ் தேசியத்தை அங்கு நிலைநிறுத்தும் செயல் தான். அதை சகித்து கொள்ள முடியாமல் வாழ்ததுவதற்கு பதிலாக, ஒரு பெண் என்பதால் பண்பற்ற கொச்சையான பாலியல் வசவு சொற்களை பாவித்ததும் இவ்வாறான தீவிர ஒற்றைத் தேசியம் பேசுபவரே. அது தான், அப்படியானவர்களிடம் இருந்து தப்பிவிட்டோம் என்று எதிர்மறையில் சம்பந்தப்பட்டவருக்கு உறைக்கும்படி பாவிக்கப்பட்டதே அந்த வசனம் என்பது, தமிழ் மொழி அறிவு உடையவர்களுக்கு புரியும். உங்களுக்கு அது புரியாததே இந்த விவாதம் இவ்வளவு நீண்டதற்கான காரணம்.
கருத்தாடலுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்ததுகள்.