ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 19ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் நாள் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த நாளாகும். எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ நகர்வுகள், என இடப்பெயர்வுகளை சந்தித்து வந்த யாழ் குடாநாட்டு மக்கள் ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.வேரோடும் வேரடி மண்ணோடும் நகர்ந்து சென்ற பெரும் துயரம் அன