ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை தினம் இன்று
ஈழத்தின் மா பெரும் ஊடகப் படு கொலை நிகழ்ந்த 11ஆம் நினைவு நாள் இன்றாகும். 2006 மே 2ஆம் நாள் ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் ஊழியர்கள் இருவரைக் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மேலும் மூவரைக் காயப்படுத்தினர். பெரும் தொகைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர். எனினும் இதுவரையில் இந்தக் குற்றங்களைச் செய்த எவரும் தண்டிக்கப்படவேயில்லை.