முதல் வித்து 2ம் லெப். மாலதி
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்;த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.
அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திக