தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி கேணல் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் கேணல் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்(