பொட்டல் காட்டில் ஒரு கதை.
அது ஒரு பொட்டல் காடு.ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஒரு ஒற்றையடிப் பாதை. தினசரி ஆட்கள் நடந்து நடந்து, மிதிவண்டிகளும் பிரயாணப்பட்டு ஒரு பாம்பின் முதுகுபோல் நீண்டு கிடந்தது.எப்போதும் அந்த காட்டு வெளி ஆளரவமற்றே இருக்கும். விதம் விதமான பறவைகள் மற்றும் பாம்பு, கீரி, ஓநாய்,நாரி, முயல் என்று சிறுசிறு விலங்கினங்களும் உண்டு.
காவேரி தினமும் அந்தப் பாதையால்தான் பக்கத்து ஊருக்கு வேலைக்கு போய் வருவதுண்டு. அப்படி போய்வரும் நேரங்களில் ஒரு சிறு பையில் நொறுக்குத் தீ