கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம்! வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான்.   இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்ப