அண்று முழுவதும் நல்ல மழை. இப்படி சொல்லத்தான் மன துடிக்குது. ஒருவேளை மழை பெய்திருந்தால் இந்த கதை வேற மாதிரி இருந்து இருக்கும்... என் குடும்பம் அப்ப கொழும்பு "சிலேவைலன்" பகுதியில் "பரக்ஸ் லேனிலை" வசித்து வந்தது. முன்னாலை பொலீஸ் குவாட்டஸ், பின்னாலை "வத்தை", இல்லை "தோட்டம்" எண்று சொல்லும் சேரி பகுதி. கொழும்பு-2 கொம்பனி தெருவின் ஒரு ஒழுங்கை எண்ட வகையில் சுறு சுறுப்புக்கும் வாகன நெரிசலுகும் பஞ்சமே இல்லை. அதிகமாய் தமிழர் வசிக்கும் பகுதி, அனேகமானோர் இந்திய வம்சாவளிகள். அங்கை வெட்டு குத்து குழுக்களுக்கும