“நடு” இணைய இதழின் ஆசிரியரும் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளரும், புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான கோமகன் இன்று காலை இலங்கையில் மாரடைப்பினால் காலமாகி விட்டார் என்று அறிய முடிகின்றது. ஊருக்கு சென்று மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக இலங்கை விமான நிலையத்தில் காத்திருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாக முகநூல் அஞ்சலி பதிவுகளில் இருந்து அறிய முடிகின்றது. அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலி.