செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை படுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர் குருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும்