காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்களப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை போதையில் நின்ற காடையர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த முன்னாள் அதிபரொருவர்  உயிரிழந்துள்ளார். சி.விசுவாசம் (வயது 63) என்ற ஓய்வுநிலை அதிபரே உயிரிழந்தவராவார்.   சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகைதந்த ஒருவர் வைத்த மதுவிருந்தில் பங்கு பற்றியவர்கள், போதையின் உச்சத்தில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியால் பௌத்த மத குரு