ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தா